தம்புள்ள – பத்தன பகுதியில் பொறியில் சிக்கிய சிறுத்தை மீட்பு

திம்புல-பத்தனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஸ்டோனி கிளிப் (Stoneycliff) தேயிலைத் தோட்டத்தின் தொழிற்சாலைப் பகுதியில், சுமார் 8 அடி நீளமுள்ள சிறுத்தை (Panthera pardus) ஒன்று வேட்டைக்காரர்களின் பொறியில் சிக்கியிருந்த நிலையில் வனவிலங்கு அதிகாரிகளால் மீட்கப்பட்டுள்ளது.

நேற்று (05) அதிகாலை 05:00 மணியளவில் தேயிலைத் தோட்டத் தொழிலாளர்கள் புதர் நிறைந்த பகுதியில் பொறியில் சிக்கியிருந்த சிறுத்தையைக் கண்டு, உடனடியாக நுவரெலியா வனவிலங்கு அலுவலக அதிகாரிகளுக்குத் தகவல் தெரிவித்தனர்.

இதனைத் தொடர்ந்து, வனவிலங்கு அதிகாரிகள் ரந்தெனிகல கால்நடை மருத்துவமனை மருத்துவர்களுக்குத் தகவல் வழங்கினர். அதன் பின்னர், இன்று (06) அதிகாலை 01:00 மணியளவில் விரைந்து வந்த மருத்துவக் குழுவினர் மற்றும் வனவிலங்கு அதிகாரிகள் சிறுத்தையைப் பொறியிலிருந்து பாதுகாப்பாக விடுவித்து,

சிகிச்சைக்காக ரந்தெனிகல கால்நடை மருத்துவமனைக்குக் கொண்டு சென்றதாகத் திம்புல-பத்தனை பொலிஸ் நிலைய அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

மஸ்கெலியா நிருபர்

Related Articles

Latest Articles