இயற்கை சீற்றம்: நுவரெலியா மாவட்டத்தில் 584 குடும்பங்கள் பாதிப்பு: நால்வர் பலி – இருவர் மாயம்!

அடை மழையுடன்கூடிய சீரற்ற காலநிலையால் நுவரெலியா மாவட்டத்தில் 584 குடும்பங்களைச் சேர்ந்த 2,334 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

வெள்ளம், மண்சரிவால் நால்வர் உயிரிழந்துள்ளனர். மேலும் இருவர் காணாமல் போயுள்ளனர். மூவர் காயமடைந்துள்ளனர் என்று அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் இன்று காலை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

27 வீடுகள் பகுதியளவு சேதமடைந்துள்ளன.

435 குடும்பங்களைச் சேர்ந்த 1744 பேர் 08 இடைத்தங்கள் முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.

 

Related Articles

Latest Articles