சாதாரணதரப் பரீட்சைக்கு தோற்றிய மாணவியிடம் பாலியல் சேட்டை புரிந்த பரீட்சை மேற்பார்வையாளரை, ஜூன் 2 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு, நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
வரலாறுபாட பரிட்சை நடைபெற்ற கடந்த 25ஆம் திகதி இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.
மாணவி இச்சம்பவம் தொடர்பாக அன்றைய தினமே ஆசிரியை ஒருவரிடம் முறைப்பாடு செய்துள்ளார். பின்னர் தனது வீட்டிலுள்ள பெரியவர்களுடன் சென்று 26 ஆம் திகதி ஹிதோகம பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.
இதையடுத்து பொலிஸார், பரீட்சை மேற்பார்வையாளரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர் செய்தபோது நீதவான் சந்தேகநபரை எதிர்வரும் 2ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கும்படி உத்தரவிட்டார்.
நாச்சதுவ புதிய நகரிலுள்ள ஆசிரியர் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
எப்படியாவது பணம் கொடுத்து சம்பவத்தை மூடிமறைக்க ஆசிரியரின் தரப்பினர் முயற்சி மேற்கொண்டுள்ளனர் எனவும் தெரியவந்துள்ளது.
குறித்த மாணவி உயர்தரத்தில் கல்வி பயில்பவர் எனவும் சாதாரண தரத்தில் தேர்ச்சி பெறாத பாடங்களில் சித்தி பெறுவதற்காக பரீட்சைக்குத் தோற்றி யுள்ளார் எனவும் விசாரணை மேற்கொண்ட ஹிதோகம பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
