Home Blog Page 132

ஆஸ்திரேலியாவில் வேகமாக பரவும் காட்டுத் தீ!

ஆஸ்திரேலியாவில் விக்டோரியா மற்றும் தெற்கு ஆஸ்திரேலியா ஆகிய மாநிலங்களில் காட்டுத் தீ கொளுந்து விட்டெரிகின்றது.

வெப்ப அலை மற்றும் கடும் காற்று காரணமாக பேரிழிவு ஏற்படுமென அதிகாரிகள், மக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

மத்திய மற்றும் வடகிழக்கு விக்டோரியாவிலுள்ள பல நகரங்களிலும் காட்டுத் தீ பரவிவருகின்றது.

விக்டோரியா மாநிலத்தில் மூவர் காணாமல்போயுள்ளனர். இவர்களில் தீயில் சிக்கி உயிரிழந்திருக்கக்கூடும் என அஞ்சப்படுகின்றது.

அதிகாரிகளின் அறிவுறுத்தல்களின் பிரகாரம் செயல்படுமாறு மக்களிடம் மாநில பிரீமியர் கோரிக்கை விடுத்துள்ளார். மாநிலம் முழவதும் 30 இற்கு மேற்பட்ட பகுதிகளில் காட்டுத் தீ பரவிவருகின்றது.

அதேவேளை, அத்தியாவசியமற்ற பயணங்களை தவிர்த்து கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

அதிகாரிகள் வெளியேற சொல்லும்பட்சத்தில் உடன் அதற்கமைய செயல்படுமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

வெனிசுலா எண்ணெய் ஏற்றுமதியைக் கட்டுப்படுத்த அமெரிக்கா திட்டம்

வெனிசுலா எண்ணெய் ஏற்றுமதியை காலவரையின்றி கட்டுப்படுத்தி, அதில் கிடைக்கும் வருவாயை தங்கள் நாட்டுக் கணக்குகளில் வரவு வைக்க ஜனாதிபதி டொனால்ட் டர்ம்ப் தலைமையிலான அமெரிக்க அரசு திட்டமிட்டுள்ளது.

இது குறித்து, மியாமியில் நடந்த கோல்ட்மேன் சாக்ஸ் மாநாட்டில் அந்த நாட்டு எரிசக்தித் துறை அமைச்சா் கிறிஸ் ரைட் பேசியதாவது:

வெனிசுலா எண்ணெய் ஏற்றுமதியை முழுமையாகக் கட்டுப்படுத்த திட்டமிட்டுள்ளோம். முதலில் வெனிசுலாவில் சேமித்து வைக்கப்பட்டுள்ள எண்ணெய்யை விற்பனை செய்வோம். அதன்பிறகு வெனிசுலாவில் உற்பத்தியாகும் எண்ணெய்யை அமெரிக்கா பிற நாடுகளுக்கு தொடா்ந்து ஏற்றுமதி செய்யும்.

இதனால் கிடைக்கும் வருவாய் வெனிசுலா பெயரில் அமெரிக்கக் கணக்குகளில் வரவு வைக்கப்படும். இது வெனிசுலா மக்களின் நலனுக்கு பயன்படுத்தப்படும் என்றாா் அவா்.

இதற்கிடையே, வெனிசுலா எண்ணெய் விற்பனையை அமெரிக்கா ஏற்கனவே தொடங்கிவிட்டதாக வெள்ளை மாளிகை செய்தித் தொடா்பாளா் கரோலின் லெவிட் தெரிவித்தாா்.

முன்னதாக, வெனிசுலா அமெரிக்காவுக்கு 3 முதல் 5 கோடி பேரல் எண்ணெய்யை வழங்கும் என்று அதிபா் டிரம்ப் செவ்வாய்க்கிழமை அறிவித்தாா். அதன் மதிப்பு சுமாா் 280 கோடி டாலா் (சுமாா் ரூ.25,172 கோடி) ஆகும். இதில் கிடைக்கும் வருவாய் தனது கட்டுப்பாட்டில் இருக்கும் என்று டிரம்ப் கூறினாா்.

இருந்தாலும், வெனிசுலா இடைக்கால அதிபா் டெல்சி ரோட்ரிகஸ் இதற்கு ஒப்புக்கொண்டாரா என்பது குறித்து தெளிவான தகவல்கள் வெளியாகவில்லை. இது தொடா்பாக எந்த அறிக்கையையும் அவா் வெளியிடவில்லை.

இந்த நிலையிலும், வெனிசுலா எண்ணெய் துறையை அமெரிக்க நிறுவனங்கள் மறுகட்டமைப்பு செய்யும் என்று டிரம்ப் அரசு தெரிவித்துள்ளது. செவ்ரான், கானோகோபிலிப்ஸ், எக்ஸான் போன்ற நிறுவனங்களுடன் இதற்கான பேச்சுவாா்த்தை நடத்தப்பட்டு வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இது குறித்து ஆலோசிப்பதற்காக எரிசக்தி நிறுவனத் தலைவா்களை டிரம்ப் வெள்ளிக்கிழமை சந்திப்பாா் என்று வெள்ளை மாளிகை தெரிவித்தது.

பிரதமரை பாதுகாப்போம்: நம்பிக்கையில்லாப் பிரேரணை வெத்து வேட்டு!

பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரியவை நாம் பாதுகாப்போம். நம்பிக்கையில்லாப் பிரேரணையைக் கண்டு அஞ்சவில்லை. அது தோற்கடிக்கப்படும் என்று பிரதி அமைச்சர் மஹிந்த ஜயசிங்க அறிவித்தார்.

“ கல்வி மறுசீரமைப்பு இடம்பெற வேண்டும் என்பதே நாட்டு மக்களின் கோரிக்கை. அதற்கு எவரும் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. எனினும், ஒரு தவறை வைத்துக்கொண்டு ஒட்டுமொத்த கல்வி மறுசீரமைப்பையும் விமர்சிப்பது ஏற்புடையது அல்ல.

அரசியல் ரீதியில் எதிரணிகள் வங்குரோத்தடைந்துள்ளன. தமது இருப்புக்காகவே நம்பிக்கையில்லாப் பிரேரணையை முன்வைக்கின்றன. இதனை தோற்கடிப்பதற்குரிய இயலுமை அரசாங்கத்துக்கு உள்ளது. அது குறித்து நாம் அச்சம் கொள்ளவில்லை.

பிரதமரை நாம் பாதுகாப்போம். அவருக்கு ஆதரவாக அரசாங்கம் உள்ளது.” – என பிரதி அமைச்சர் மஹிந்த ஜயசிங்க மேலும் கூறினார்.

மரக்கறி விலைப்பட்டியல் (09.01.2026)

நுவரெலியா பொருளாதார மத்திய நிலையத்தால் இன்று (09) வெளியிடப்பட்டுள்ள மரக்கறி வகைகளின் (ஒரு கிலோ) விலை பட்டியல்…

அரசமைப்பு பேரவையிலிருந்து விலகும்படி சிறீதரனுக்கு கடிதம் மூலமும் அறிவிப்பு!

அரசமைப்பு பேரவை உறுப்பினர் பதவியில் இருந்து விலகும்படி இலங்கைத் தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்றக் குழுத் தலைவர் சிவஞானம் சிறீதரனுக்குப் பணிப்புரை விடுத்து, கட்சியின் அரசியல் குழு எடுத்த தீர்மானம் அவருக்கு எழுத்து மூலம் அறிவிக்கப்பட்டிருப்பதாகத் தெரியவருகின்றது.

சிறீதரனின் கிளிநொச்சி, வட்டக் கட்சி முகவரிக்கு இது தொடர்பான கடிதத்தைப் பதிவுத் தபாலில் அனுப்பி வைத்திருக்கின்றார் கட்சியின் பொதுச்செயலாளர் ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன்.

அரசமைப்பு கவுன்ஸிலில் சிறீதரனின் நடத்தை தொடர்பாக அரசியல் குழு ஆராய்ந்து கண்ட விடயங்களை இந்தக் கடிதத்தில் சுமந்திரன் விலாவாரியாக விவரித்திருக்கின்றார் எனத் தெரிகின்றது.

”இந்தப் பின்புலத்தில் இந்தப் பதவியில் தொடர்வது உங்களுக்கும் சங்கடம். கட்சிக்கும் சங்கடமான விளைவுகளை ஏற்படுத்தும். ஆகையினால் மேற்படி பதவியில் இருந்து விலகுவதன் மூலம் தங்களுக்கும் கட்சிக்கும் ஏற்படும் சங்கடங்களைத் தவிர்த்துக்கொள்ளுங்கள்” – என்று கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.

இது தொடர்பில் அடுத்த ஒரு வாரத்துக்குள் நடவடிக்கை எடுத்து கட்சிக்கு அறிவுக்குமாறு கட்சியின் பொதுச்செயலாளர், சிறீதரன் எம்.பியை வேண்டியுள்ளார்.

‘பராசக்தி’ தமிழ் சினிமாவில் தனியிடம் பிடிக்கும் – சுதா கொங்கரா உறுதி!

சுதா கொங்கரா இயக்கத்தில் சிவகார்த்திகேயன், ரவி மோகன், அதர்வா முரளி, லீலா ஆகியோர் முதன்மை கதாபாத்திரங்களில் நடித்துள்ள படம், ‘பராசக்தி’. டான் பிக்சர்ஸ் சார்பில் ஆகாஷ் பாஸ்கரன் தயாரித்துள்ள இப்படம், ஜன.10-ல் வெளியாகிறது.

இப்படம் குறித்து இயக்குநர் சுதா கொங்கரா பகிர்ந்து கொண்டதாவது, “‘பராசக்தி’ கதை நான் எழுதிய பின்பு பாராட்டுகளை பெற்ற அதேசமயம் கதையை சுற்றி பல சந்தேகங்களும் எழுந்தது. திரைக்கதை உருவாக்கமே கடினமாக இருந்தது.

இந்தக் கதையை படமாக்குவது மிகவும் சவாலானது என்றும் படம் வெளியானதும் பல விமர்சனங்களை சந்திக்க நேரிடும் என்றும் பலர் எச்சரித்தனர். இருப்பினும், மணிரத்னம் பின்பற்றும் ‘சாத்தியமற்றதை சாத்தியமாக்க வேண்டும்’ என்பதின் அடிப்படையில் பல சவால்களை தாண்டி இதை படமாக்கினேன்.

இந்தப் படத்தின் முதுகெலும்பு நடிகர் சிவகார்த்திகேயன். அவரது அர்ப்பணிப்பும், கதாபாத்திரத்திற்காக அவர் கொடுத்திருக்கும் உழைப்பும் நிச்சயம் பார்வையாளர்கள் மத்தியில் பேசப்படும்.

ரவி மோகனின் திரை ஆளுமை ‘பராசக்தி’ படத்தின் அசைக்க முடியாத பெரும்பலம். இந்தப் படத்தில் நடிக்கவேண்டும் என அவர் முடிவெடுத்ததற்கு நன்றி. திரைக்கதை எழுதும் போதே அதர்வா முரளியின் கதாபாத்திரம் என்னை உற்சாகப்படுத்தியது. அதர்வாவின் அர்ப்பணிப்பால் நான் எதிர்பார்த்ததைவிட திரையில் அவர் கதாபாத்திரம் இன்னும் நன்றாக வந்துள்ளது. ஸ்ரீலீலாவை இந்தப் படத்தில் முற்றிலும் வேறொரு கோணத்தில் பார்ப்பீர்கள். அற்புதமான நடிப்பால் தனது கதாபாத்திரத்திற்கு உயிர் கொடுத்துள்ளார்.

எனது படங்களுக்கு ஜி.வி.பிரகாஷ் குமாரின் இசை பெரும் பலம். ’பராசக்தி’ படத்தில் அவரது இசையை நிச்சயம் ரசிப்பீர்கள். ‘பராசக்தி’ திரைப்படம் தமிழ் சினிமாவிலும் ரசிகர்களின் மனதிலும் நிச்சயம் தனியிடம் பிடிக்கும்” இவ்வாறு சுதா கொங்கரா தெரிவித்தார்.

நம்பிக்கையில்லாப் பிரேரணைமூலம் நல்லதே நடக்கட்டும்: பிரதமர் கருத்து

கல்வி மறுசீரமைப்பு தொடர்பில் மேலும் விவாதிப்பதற்குரிய வாய்ப்பு நம்பிக்கையில்லாப் பிரேரணைமூலம் கிடைக்கப்பெறும் என்று பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்தார்.

அஸ்கிரிய மற்றும் மல்வத்த மகாநாயக்க தேரர்களை நேற்று சந்தித்தார் பிரதமர்.

தரம் 6 ஆங்கில பாடபுத்தகத்தில் ஏற்பட்டுள்ள சர்ச்சை மற்றும் கல்வி மறுசீரமைப்பு தொடர்பில் பிரதமருக்கு மகாநாயக்க தேரர் தெளிவுபடுத்தினார்.

மேற்படி சந்திப்புகளின் பின்னர், பிரதமருக்கு எதிராக எதிரணிகளால் முன்வைக்கப்படவுள்ள நம்பிக்கையில்லாப் பிரேரணை தொடர்பில் அவரிடம் ஊடகங்கள் கேள்வி எழுப்பின.
இதற்கு பதிலளித்த அவர் கூறியவை வருமாறு,

“ நம்பிக்கையில்லாப் பிரேரணையை கொண்டுவருவதற்குரிய பொறுப்பு அவர்களுக்கு உள்ளது. இதன்மூலம் கல்வி மறுசீரமைப்பு தொடர்பில் மேலும் இரு நாட்களுக்கு கதைப்பதற்குரிய சூழ்நிலை உருவாகும்.

நம்பிக்கையில்லாப் பிரேரணை எப்படியும் தோற்கும். எனினும், கல்வி பற்றி கருத்தாடல் உருவாகியுள்ளது வரவேற்கக்கூடிய விடயம்.” – என்றார்.

நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு ஆதரவு: நாமல் அறிவிப்பு!

பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரியவுக்கு எதிராக முன்வைக்கப்படும் நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு ஆதரவளிக்கப்படும் என்று ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ச தெரிவித்தார்.

பிரதமருக்கு எதிராக ஐக்கிய மக்கள் சக்தியால் முன்வைக்கப்படும் நம்பிக்கையில்லாப் பிரேரணை தொடர்பில் எழுப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.

நாட்டில் கல்வி கட்டமைப்பு சீர்குலைய இடமளிக்க முடியாது. நம்பிக்கையில்லாப் பிரேரணை தொடர்பில் பிரதமர் உள்ளிட்ட தரப்பினருடன் பேச்சு நடத்தப்படும் எனவும் அவர் குறிப்பிட்டார்.

பிரதமருக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை நாளை கையளிப்பு!

கல்வி அமைச்சரான பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரியவுக்கு எதிராகக் கொண்டுவரப்படவுள்ள நம்பிக்கையில்லாப் பிரேரணையில், இதுவரை எதிர்க்கட்சியைச் சேர்ந்த சுமார் 50 நாடாளுமன்ற உறுப்பினர்கள் கையொப்பமிட்டுள்ளனர் என்று எதிர்க்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் கயந்த கருணாதிலக தெரிவித்தார்.

அதில் மேலும் பல உறுப்பினர்கள் கையொப்பமிடவுள்ளனர் என்றும் ஊடகங்களிடம் அவர் குறிப்பிட்டார்.

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தலைமையில் நேற்று நாடாளுமன்றத்திலுள்ள எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் இந்தக் கையொப்பமிடும் நடவடிக்கைகள் ஆரம்பமாகின.

இந்தப் பிரேரணை நாளை சபாநாயகர் ஜகத் விக்ரமரத்னவிடம் கையளிக்கத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

தற்போதைய அரசின் கல்விச் சீர்திருத்தங்கள் காரணமாக பிள்ளைகளின் கல்வியில் பாரிய பாதிப்புகள் ஏற்படுவதாகக் கூறி இந்த நம்பிக்கையில்லாப் பிரேரணை கொண்டுவரப்படுகின்றது.

தற்போதைய கல்விப் பாடத்திட்ட மாற்றங்கள் மற்றும் நிர்வாகக் குறைபாடுகளைச் சுட்டிக்காட்டியே எதிர்க்கட்சிகள் இந்த நடவடிக்கையை முன்னெடுத்துள்ளன என்று எதிர்க்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் கயந்த கருணாதிலக மேலும் கூறினார்.

பாதுகாப்பு உறவை வலுப்படுத்துவது குறித்து ஆராய்வு!

இந்திய இராணுவத் தளபதி ஜெனரல் உபேந்ர திவ்வெதி Upendra Dwivedi, பாதுகாப்புச் செயலாளர் எயார் வைஸ் மார்ஷல் சம்பத் தூயகொந்தாவை (ஓய்வு) நேற்று (ஜனவரி 7) பாதுகாப்பு அமைச்சில் மரியாதை நிமித்தம் சந்தித்தார்.

உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு இந்திய இராணுவத் தளபதி இலங்கைக்கு வந்தடைந்தார்.

ஜெனரல் திவ்வெதியை பாதுகாப்புச் செயலாளர் அன்புடன் வரவேற்றார். அதனைத் தொடர்ந்து இருவருக்கும் இடையே சந்திப்பு இடம்பெற்றது.

இந்த சந்திப்பின் போது, இரு தரப்பினரும் இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையிலான இருதரப்பு பாதுகாப்பு உறவுகள் மற்றும் ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்துவது குறித்தும் நல்லுறவு மற்றும் ஆக்கபூர்வமான கலந்துரையாடளில் ஈடுபட்டனர்.

சமீபத்திய அனர்த்தத்தின் போது இந்திய ஆயுதப்படைகள் வழங்கிய உதவிகளுக்கு பாதுகாப்புச் செயலாளர் தனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்தார். இந்த உதவி இலங்கையின் மீட்பு மற்றும் நிவாரண நடவடிக்கைகளுக்கு குறிப்பிடத்தக்க பங்களிப்பை வழங்கியது என்று குறிப்பிட்டார்.

இந்தியாவினால் இலங்கை பாதுகாப்புப் படையினருக்கு வழங்கப்பட்ட பயிற்சி வாய்ப்புகளுக்கு அவர் நன்றி தெரிவித்தார். மேலும் எதிர்காலத்தில் இதுபோன்ற பயிற்சி மற்றும் திறன் மேம்பாட்டுத் திட்டங்களை விரிவுபடுத்துவதில் இலங்கையின் ஆர்வத்தையும் அவர் வெளியிட்டார்.

இலங்கையுடன் நெருக்கமான மற்றும் நீடித்த பாதுகாப்பு உறவுகளைப் பேணுவதில் இந்தியாவின் வலுவான உறுதிப்பாட்டை ஜெனரல் Dwivedi மீண்டும் உறுதிப்படுத்தினார்.

இலங்கை இராணுவத்துடன் பாதுகாப்பு ஒத்துழைப்பைத் தொடர்ந்து வலுப்படுத்தவும், நீடித்த ஈடுபாடு, விரிவாக்கப்பட்ட பயிற்சி வாய்ப்புகள் மற்றும் இரு நாட்டு இராணுவங்களுக்கிடையிலான ஒத்துழைப்பை மேம்படுத்துவதன் மூலம் அதை மேலும் வலுப்படுத்தவும் ஆவலுடன் இருப்பதாக அவர் கூறினார்.

பாதுகாப்பு ஒத்துழைப்பை விரிவுபடுத்துவதற்கும், பிராந்திய ஸ்திரத்தன்மை மற்றும் பாதுகாப்பை மேம்படுத்துவதற்கு ஒன்றிணைந்து செயல்படுவதற்கும் இரு நாடுகளும் பகிர்ந்து கொள்ளும் உறுதிப்பாட்டை இந்த சந்திப்பு அடிக்கோடிட்டுக் காட்டுகிறது.

கொழும்பிலுள்ள இந்திய உயர்ஸ்தானிகராலயத்தின் பாதுகாப்பு ஆலோசகர் உட்பட இந்திய உயர் ஸ்தானிகராலய அதிகாரிகளும் இந்த கலந்துரையாடலில் கலந்து கொண்டனர்.

சினிமா

பிரபல இந்திய பாடகி ஆஷா போஸ்லே காலமானார்!

0
  பிரபல இந்திய பின்னணி பாடகி ஆஷா போஸ்லே தமது 92ஆவது வயதில் இன்று(12) காலமானார். இந்திய திரையுலகில் 10,000-இற்கும் அதிக பாடல்களை பாடியுள்ள மூத்த பாடகி ஆஷா போஸ்லே நேற்று(11) மாரடைப்பு ஏற்பட்டதையடுத்து மும்பையிலுள்ள...

சின்னத்திரை நடிகை தற்#கொ#லை!

0
  இலங்கையை பூர்வீகமாகக்கொண்ட பிரபல சின்னத்திரை நடிகையான சுபாஷினி (வயது 36) தற்#கொ#லை செய்துகொண்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. "கயல்" சின்னத்திரை தொலைக்காட்சி தொடரில் நடித்து வருபவர் சுபாஷிணி (வயது36). இலங்கையை பூர்வீகமாகக்கொண்ட இவர் கடந்த...

“தனுஷின் நட்பை இழந்தது மிகப்பெரிய அவமானம்” – விக்னேஷ் சிவன் வருத்தம்

0
தனுஷ் உடனான நட்பை இழந்தது மிகப்பெரிய அவமானம் என்று விக்னேஷ் சிவன் பகிர்ந்துள்ளார். விக்னேஷ் சிவன் இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன் நடித்துள்ள ‘எல்.ஐ.கே’ திரைப்படம் ஏப்ரல் 10-ம் திகதி திரைக்கு வரவுள்ளது. நீண்ட பிரச்சினைகளுக்கு...

செய்தி

பொருளாதார ஆய்வறிக்கை ஜனாதிபதியிடம் கையளிப்பு!

0
இலங்கை மத்திய வங்கியின் மிக முக்கியமான வெளியீடுகளான 'வருடாந்த பொருளாதார ஆய்வு 2025' மற்றும் 'நிதி மற்றும் செயற்பாட்டு அறிக்கை 2025' ஆகிய இரு அறிக்கைகளும் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவிடம் இன்று திங்கட்கிழமை...

அமைதி பேச்சு இப்போதைக்கு இல்லை: ஈரான் தெரிவிப்பு!

0
அமெரிக்காவுடன் இரண்டாம் கட்ட அமைதிப் பேச்சுவார்த்தை நடத்தும் திட்டம் இப்போதைக்கு இல்லை என்று ஈரான் தெரிவித்துள்ளது. தெஹ்ரானில் இன்று (திங்கள்கிழமை) செய்தியாளர்களிடம் கருத்து வெளியிட்ட ஈரான் வெளிவிவகார அமைச்சின் செய்தித் தொடர்பாளர் இஸ்மாயில் பாகாயி, “பேச்சுவார்த்தையை,...

மாகாணசபைத் தேர்தல் குறித்த கூட்டம் ஒத்திவைப்பு: மனோ காட்டம்!

0
மாகாண சபைத் தேர்தல் தொடர்பாக ஆராய்வதற்காக நாளை 21ஆம் திகதி நடைபெறவிருந்த நாடாளுமன்றத் தெரிவுக்குழுத் கூட்டம், திகதி குறிப்பிடப்படாமல் திடீரென ஒத்திவைக்கப்பட்டுள்ளது. எல்லை மீள்நிர்ணய ஆணைக்குழு மற்றும் சட்டமா அதிபர் திணைக்கள அதிகாரிகள் முக்கிய...