Home Blog Page 133

பிரதமருக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை நாளை கையளிப்பு!

கல்வி அமைச்சரான பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரியவுக்கு எதிராகக் கொண்டுவரப்படவுள்ள நம்பிக்கையில்லாப் பிரேரணையில், இதுவரை எதிர்க்கட்சியைச் சேர்ந்த சுமார் 50 நாடாளுமன்ற உறுப்பினர்கள் கையொப்பமிட்டுள்ளனர் என்று எதிர்க்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் கயந்த கருணாதிலக தெரிவித்தார்.

அதில் மேலும் பல உறுப்பினர்கள் கையொப்பமிடவுள்ளனர் என்றும் ஊடகங்களிடம் அவர் குறிப்பிட்டார்.

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தலைமையில் நேற்று நாடாளுமன்றத்திலுள்ள எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் இந்தக் கையொப்பமிடும் நடவடிக்கைகள் ஆரம்பமாகின.

இந்தப் பிரேரணை நாளை சபாநாயகர் ஜகத் விக்ரமரத்னவிடம் கையளிக்கத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

தற்போதைய அரசின் கல்விச் சீர்திருத்தங்கள் காரணமாக பிள்ளைகளின் கல்வியில் பாரிய பாதிப்புகள் ஏற்படுவதாகக் கூறி இந்த நம்பிக்கையில்லாப் பிரேரணை கொண்டுவரப்படுகின்றது.

தற்போதைய கல்விப் பாடத்திட்ட மாற்றங்கள் மற்றும் நிர்வாகக் குறைபாடுகளைச் சுட்டிக்காட்டியே எதிர்க்கட்சிகள் இந்த நடவடிக்கையை முன்னெடுத்துள்ளன என்று எதிர்க்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் கயந்த கருணாதிலக மேலும் கூறினார்.

பாதுகாப்பு உறவை வலுப்படுத்துவது குறித்து ஆராய்வு!

இந்திய இராணுவத் தளபதி ஜெனரல் உபேந்ர திவ்வெதி Upendra Dwivedi, பாதுகாப்புச் செயலாளர் எயார் வைஸ் மார்ஷல் சம்பத் தூயகொந்தாவை (ஓய்வு) நேற்று (ஜனவரி 7) பாதுகாப்பு அமைச்சில் மரியாதை நிமித்தம் சந்தித்தார்.

உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு இந்திய இராணுவத் தளபதி இலங்கைக்கு வந்தடைந்தார்.

ஜெனரல் திவ்வெதியை பாதுகாப்புச் செயலாளர் அன்புடன் வரவேற்றார். அதனைத் தொடர்ந்து இருவருக்கும் இடையே சந்திப்பு இடம்பெற்றது.

இந்த சந்திப்பின் போது, இரு தரப்பினரும் இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையிலான இருதரப்பு பாதுகாப்பு உறவுகள் மற்றும் ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்துவது குறித்தும் நல்லுறவு மற்றும் ஆக்கபூர்வமான கலந்துரையாடளில் ஈடுபட்டனர்.

சமீபத்திய அனர்த்தத்தின் போது இந்திய ஆயுதப்படைகள் வழங்கிய உதவிகளுக்கு பாதுகாப்புச் செயலாளர் தனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்தார். இந்த உதவி இலங்கையின் மீட்பு மற்றும் நிவாரண நடவடிக்கைகளுக்கு குறிப்பிடத்தக்க பங்களிப்பை வழங்கியது என்று குறிப்பிட்டார்.

இந்தியாவினால் இலங்கை பாதுகாப்புப் படையினருக்கு வழங்கப்பட்ட பயிற்சி வாய்ப்புகளுக்கு அவர் நன்றி தெரிவித்தார். மேலும் எதிர்காலத்தில் இதுபோன்ற பயிற்சி மற்றும் திறன் மேம்பாட்டுத் திட்டங்களை விரிவுபடுத்துவதில் இலங்கையின் ஆர்வத்தையும் அவர் வெளியிட்டார்.

இலங்கையுடன் நெருக்கமான மற்றும் நீடித்த பாதுகாப்பு உறவுகளைப் பேணுவதில் இந்தியாவின் வலுவான உறுதிப்பாட்டை ஜெனரல் Dwivedi மீண்டும் உறுதிப்படுத்தினார்.

இலங்கை இராணுவத்துடன் பாதுகாப்பு ஒத்துழைப்பைத் தொடர்ந்து வலுப்படுத்தவும், நீடித்த ஈடுபாடு, விரிவாக்கப்பட்ட பயிற்சி வாய்ப்புகள் மற்றும் இரு நாட்டு இராணுவங்களுக்கிடையிலான ஒத்துழைப்பை மேம்படுத்துவதன் மூலம் அதை மேலும் வலுப்படுத்தவும் ஆவலுடன் இருப்பதாக அவர் கூறினார்.

பாதுகாப்பு ஒத்துழைப்பை விரிவுபடுத்துவதற்கும், பிராந்திய ஸ்திரத்தன்மை மற்றும் பாதுகாப்பை மேம்படுத்துவதற்கு ஒன்றிணைந்து செயல்படுவதற்கும் இரு நாடுகளும் பகிர்ந்து கொள்ளும் உறுதிப்பாட்டை இந்த சந்திப்பு அடிக்கோடிட்டுக் காட்டுகிறது.

கொழும்பிலுள்ள இந்திய உயர்ஸ்தானிகராலயத்தின் பாதுகாப்பு ஆலோசகர் உட்பட இந்திய உயர் ஸ்தானிகராலய அதிகாரிகளும் இந்த கலந்துரையாடலில் கலந்து கொண்டனர்.

பாலகிருஷ்ணா படத்தில் இருந்து நயன்தாரா நீக்கம்?

பாலகிருஷ்ணா நடிப்பில் வெளியான ‘அகண்டா 2’ மெகா பட்​ஜெட்​டில் உரு​வாகி எதிர்​பார்த்த வெற்​றியை பெற​வில்​லை. இதையடுத்து பால​கிருஷ்ணா​வின் 111-வது படத்தை கோபிசந்த் மலினேனி இயக்​கு​கிறார். இரு​வரும் ஏற்​கெனவே ‘வீரசிம்ஹா ரெட்​டி’ படத்​தில் இணைந்​திருந்​தனர்.

வரலாற்​றுப் பின்​னணி​யில் உரு​வாகும் இப்​படத்​தில் பால​கிருஷ்ணா 2 வேடங்​களில் நடிக்​கிறார். அதில் ஒரு வேடம், அரசர் என்று கூறப்​பட்​டது. இதில், நயன்​தாரா மகா​ராணி​யாக நடிக்க ஒப்​பந்​த​மா​னார். அவருடைய முதல் தோற்​றம் வெளி​யாகி வரவேற்​பைப் பெற்​றது. ‘சிம்​ஹா’, ‘ஜெய் சிம்​ஹா’, ‘ ராம ராஜ்ஜி​யம்’ ஆகிய படங்​களுக்​குப் பிறகு இதில் இரு​வரும் மீண்​டும் இணைந்து நடிக்​கின்​றனர்.

இந்​தப் படத்தை முதலில் ரூ.150 கோடி பட்​ஜெட்​டில் உரு​வாக்​கத் திட்டமிட்​டனர். ‘அகண்டா 2’ எதிர்​பார்த்த வசூலை பெறாத​தால், பட்​ஜெட்டை குறைத்​து​விட்​ட​தாக​வும் இதனால், ரூ.10 கோடி சம்​பளம் வாங்​கிய நயன்தாரா மாற்​றப்​பட்​டு, அவருக்​குப் பதிலாக வேறு நடிகையை நாயகி​யாக ஒப்​பந்​தம் செய்ய திட்​ட​மிட்​டுள்​ள​தாகச் செய்​தி​கள் வெளி​யா​யின.

இந்​நிலை​யில் “அது வதந்​தி​தான், படத்​தின் கதை தற்​போதைய மார்க்​கெட் நில​வரப்​படி மாற்​றியமைக்​கப்​பட்​டுள்​ளது. ஆனால், நயன்​தாரா படத்​தில் இருந்து நீக்​கப்​பட​வில்​லை” என்​று படக்குழு தரப்பில் கூறப்​படுகிறது.

66 சர்வதேச அமைப்புகளில் இருந்து அமெரிக்கா விலகல்!

66 சர்வதேச அமைப்புகளில் இருந்து அமெரிக்கா விலகுவதாக அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் அறிவித்து உள்ளார்.

இது தொடர்பில் வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளதாவது,

” அமெரிக்க நலன்களுக்கு எதிராக செயல்படுவதாக கருதப்படும் 35 ஐ.நா அல்லாத குழுக்கள் மற்றும் 31 ஐ.நா அமைப்புகளுக்கு நிதி வழங்குவதையும், அவற்றுடன் தொடர்பு கொள்வதையும் நிறுத்தும் படி அனைத்து அரசு நிறுவனங்களுக்கும் இந்த உத்தரவிடப்பட்டுள்ளது.

ஐ.நா. பருவநிலை ஒப்பந்தம் உள்பட 66 சர்வதேச அமைப்புகளிலிருந்து அமெரிக்கா விலகும் உத்தரவில் டிரம்ப் கையெழுத்திட்டு உள்ளார். இந்த நடவடிக்கை அமெரிக்காவின் தேசிய நலன்களுக்கு இனி சேவை செய்யாத அமைப்புகளை இலக்காகக் கொண்டுள்ளது என்று தெரிவித்தது.

ஐ.நா. பருவநிலை ஒப்பந்தம், இந்தியாவும் பிரான்சும் இணைந்து வழிநடத்தும் தூய்மையான எரிசக்தி முன்னெடுப்பான சர்வதேச சூரிய சக்தி கூட்டமைப்பு, இயற்கை பாதுகாப்புக்கான சர்வதேச ஒன்றியம், பருவ நிலை மாற்றம் குறித்த அரசுகளுக்கிடையேயான குழு உள்பட 66 அமைப்புகளில் இருந்து அமெரிக்கா விலகி உள்ளது.

சீரற்ற காலநிலையால் இந்திய இராணுவத் தளபதியின் நுவரெலியா விஜயம் ரத்து!

இந்திய இராணுவத் தளபதி ஜெனரல் உபேந்திர திவேதி மற்றும் அவருடைய பாரியார் திருமதி சுனிதா திவேதி ஆகியோர் சீதையம்மன் ஆலயத்திற்கு இன்று 08.01.2025) விஜயம் செய்து விசேட பூஜை வழிபாடுகளில் கலந்து கொள்ள இருந்த நிலையில், நுவரெலியாவில் இன்று நிலவிய சீரற்ற காலநிலை காரணமாக குறித்த விஜயம் இரத்து செய்யப்பட்டது.

இந்திய இராணுவத் தளபதி உலங்கு வானூர்தி மூலமாக நுவரெலியா நகர சபை மைதானத்திற்கு வருகை தந்து அங்கிருந்து விசேட வாகனம் ஊடாக சீத்தாஎலிய செல்வதற்கான ஏற்பாடுகள்; செய்யப்பட்டிருந்தன.

எனினும், காலநிலை சீர்கேடு காரணமாகவும் குறிப்பாக முகில் கூட்டங்கள் அதிகமாக காணப்பட்டதால் உலங்கு வானூர்தி தரை இறங்குவதற்கான அனுமதியை இலங்கையின் விமானப்படை தரப்பினர் வழங்க மறுத்தமை காரணமாக இந்த விஜயம் இரத்து செய்யப்பட்டது.

இந்திய இராணுவ தளபதி சார்பாக வருகை தந்திருந்து ஏ.வி. குரு மூர்த்தி இந்த பூஜை வழிபாடுகளில் பங்கேற்றார்.

இந்தியாவில் இருந்து கொண்டு வரப்பட்ட உற்சவ மூர்த்தி திருவுருவச் சிலையும் மற்றும் இந்தியாவின் அயோத்தி நகரின் சரயு நிதியில் பெறப்பட்ட புனித நீரும் ஆலய நிர்வாக சபை தலைவரும் நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான வேலுசாமி இராதாகிருஸ்ணன் தலைமையிலான நிர்வாக சபையினரிடம் கொழும்பு இந்திய தூதவராலயத்தின் அதிகாரி ஏ.வி.குருமூர்த்தனால் கையளிக்கப்பட்டது.

இதன்போது கருத்து தெரிவித்த பாராளுமன்ற உறுப்பினர் பாராளுமன்ற உறுப்பினர் வேலுசாமி இராதாகிருஸ்ணன்.

இந்திய இராணுவத்தளபதியின் வருகை காலநிலை காரணமாக சாத்தியப்படாமல் போய்விட்டது. ஆனாலும் நாங்கள் திட்டமிட்ட அடிப்படையில் விசேட பூஜை வழிபாடுகளை முன்னெடுத்தோம்.
அதே போல இந்திய அரசாங்கம் , இலங்கைக்கு இலங்கை வழங்கி வருகின்ற ஒத்துழைப்பிற்கு இந்திய பிரதமர் நரேந்திர மோடி உட்பட்ட இந்திய அரசாங்கத்திற்கும் இந்திய நாட்டு மக்களுக்கும் நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கின்றோம்.” – என்றார்.

ஆலய நிர்வாக சபையினரால் இந்திய இராணுவ தளபதிக்கு அவருடைய வருகையை முன்னிட்டு வழங்கப்படவிருந்த விசேட நினைவுச் சின்னத்தை இந்திய தூதரக அதிகாரியிடம் கையளித்தனர்.

புதிய அரசமைப்பு தயாரிப்பில் தமிழரின் பங்கேற்பு அவசியம்

புதிய அரசமைப்பு உருவாக்கத் தயாரிப்பில் தமிழ்த் தரப்புகளையும் இணைத்துக்கொள்ள வேண்டும் என்று ஜனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டணியின் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் வலியுறுத்தினார்.

நாடாளுமன்றத்தில் நேற்று புதன்கிழமை நடைபெற்ற கொழும்பு துறைமுக நகரப் பொருளாதார ஆணைக்குழு (திருத்தச்) சட்டமூலம் மீதான விவாதத்தில் உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் உரையாற்றுயில்,

”மாகாண சபைத் தேர்தலை எந்த முறையில் நடத்துவது என்பது தொடர்பில் ஆராயும் குழுவை நியமிக்கும் யோசனையை அரசு முன்வைத்துள்ளது. ஒவ்வொரு அரசுகளும் ஒவ்வொரு பிரச்சினைகளுக்கும் இதுபோன்ற குழுவை அமைப்பது வழக்கமானது. இவ்வாறான குழுக்களின் ஊடாக அறிக்கைகளை சமர்ப்பிக்கப்படுவதானது காலத்தை கடத்தும் செயற்பாடாகவே இருக்கும். கடந்த கால வரலாறுகளில் இதனைப் பார்த்துள்ளோம்.

அரசு மாகாண சபைத் தேர்தலை நடத்தும் முறை தொடர்பில் ஆராய்வதற்காக குழுவை நியமிக்க அனுமதியளித்துள்ளது. இது எங்களுக்குச் சந்தேகங்களை ஏற்படுத்தியுள்ளது. அதாவது மாகாண சபைத் தேர்தலை காலம் கடத்துகின்ற நிலைப்பாட்டை அரசு கொண்டுள்ளதா என்ற சந்தேகத்தையே ஏற்படுத்துகின்றது.

அமைச்சர்களும் அரசும் மாகாண சபைத் தேர்தலை நடத்துவோம் என்று கூறிவந்த நிலையில் தற்போது அமைக்கப்படும் குழுவானது அந்தத் தேர்தலை காலம் கடத்துவதற்கானதா என்ற கேள்விகள் எழுகின்றன.

எவ்வாறாயினும் உடனடியாகப் பழைய முறையில் தேர்தலை நடத்தி அதன் பின்னர் என்ன செய்ய வேண்டும் என்று ஆராய வேண்டுமே தவிர, தேர்தலைப் பிற்போடுவதற்கான யுக்தியாக இவ்வாறான குழுக்களை அமைக்கும் செயற்பாடுகளை முன்னெடுத்து காலம் கடத்தும் வகையில் செயற்பட வேண்டாம் என்று கோருகின்றேன்.

இப்போது மாகாண சபைத் தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்ற கால கட்டத்திலேயே இருக்கின்றோம். இதனால் உடனடியாகத் தேர்தலை நடத்த முயற்சிகளை எடுக்க வேண்டும். இதனை விடுத்து குழுக்களை அமைத்து காலத்தை கடத்தி, அதனை அப்படியே கைவிடக்கூடாது.

புதிய அரசமைப்பு உருவாக்கப்படவுள்ள நிலையில் இந்த மாகாண சபைகள் முறைமைகள் இல்லாமல் செய்யப்படப் போகின்றதா? என்ற கேள்வியையும் எழுப்புகின்றேன்.

புதிய அரசமைப்பு உருவாக்கப்படும் போது தமிழ்த் தரப்புகளையும் இணைத்து, தமிழ் மக்கள் விரும்புகின்ற வகையில் அதனை உருவாக்க வாய்ப்பை அரசு செய்ய வேண்டும். இதுவே ஜனநாயக மற்றும் நேர்மைத் தன்மையாக இருக்கும். அத்துடன் மாகாண சபைத் தேர்தலைப் பிற்போடும் யுக்திகளை அரசு கையாளக்கூடாது என்று கேட்டுக்கொள்கின்றேன்.” – என்றார்.

ஐதேக தலைவர் பதவியில் இருந்து ரணில் விலகவேண்டியதில்லை!

” ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் பதவியில் இருந்து ரணில் விக்கிரமசிங்க விலக வேண்டியதில்லை. அது பற்றி கலந்துரையாடப்படவும் இல்லை. ரணில் விக்கிரமசிங்க பதவி விலக வேண்டியதும் இல்லை.”

இவ்வாறு ஐக்கிய தேசியக் கட்சியின் சிரேஸ்ட உப தலவைர் நவீன் திஸாநாயக்க தெரிவித்தார்.

ஐக்கிய தேசியக்கட்சியின் செயற்குழுக் கூட்டம் நேற்று கட்சி தலைவர் ரணில் விக்கிரமசிங்க தலைமையில் நடைபெற்றது.

இதன்போது கலந்துரையாடப்பட்ட விடயங்கள் தொடர்பில் கருத்து வெளியிடுகையிலேயே நவீன் திஸாநாயக்க

மேற்கண்டவாறு கூறினார். அவர் மேலும் கூறியவை வருமாறு,

ஜன நாயகனுக்கு காங்கிரஸ் ஆதரவு!

 

தவெக தலைவர் விஜய்யின் ஜன நாயகன் படத்துக்கு தணிக்கைச் சான்றிதழ் வழங்காமல் இருப்பதை காங்கிரஸ் எம்பி மாணிக்கம் தாகூர் விமர்சித்துள்ளார்.

ஜன நாயகன் திரைப்படம் நாளை வெளியாகவிருந்த நிலையில், இன்னும் தணிச்சைச் சான்றிதழ் வழங்கப்படாததால் படத்தின் வெளியீட்டைத் தயாரிப்பு நிறுவனம் ஒத்திவைப்பதாக அறிவித்துள்ளது.

இதுதொடர்பான வழக்கு சென்னை உயர் நீதிமன்றத்தில் நேற்று விசாரிக்கப்பட்ட நிலையில், பொதுவாக பரிசீலனைக்கு அனுப்பப்பட்டு ஒரு வாரத்தில் தணிக்கைச் சான்றிதழ் வழங்கப்படும், ஆனால், ஜன நாயகனுக்கு தாமதம் செய்வதாக குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டது.

தணிக்கை வாரியம் 4 வாரங்கள் அவகாசம் கேட்டிருக்கும் நிலையில், ஜன. 9 காலை தீர்ப்பு வழங்கப்படும் என்று சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

இந்த நிலையில், ஜன நாயகனுக்கு ஆதரவாக மாணிக்கம் தாகூர் வெளியிட்டிருக்கும் பதிவில் தெரிவித்திருப்பதாவது:

“ஆர்எஸ்எஸ் பிரசார திரைப்படங்கள் எந்தவித வரவேற்பும், நம்பகத்தன்மையும், மக்கள் ஆர்வமும் பெறாதபோது, மோடி – ஷா ஆட்சி நம்பிக்கையுடன் அல்லாமல் கட்டுப்பாட்டுடனேயே பதிலளிக்கிறது.

இப்போது திரைப்படத் துறை குறிவைக்கப்பட்டுள்ளது.

அரசியலமைப்புச் சட்டத்தின் 19(1)(அ) பிரிவு, பேச்சு மற்றும் கருத்துச் சுதந்திரத்த்துக்கு உத்தரவாதம் அளிக்கிறது. ஆனால் தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சர் அஸ்வினி வைஸ்ணவ் கீழ், இந்த உரிமை சட்டத்தின் மூலம் அல்லாமல், அச்சத்தின் மூலம் திட்டமிட்டு பலவீனப்படுத்தப்படுகிறது.

அமலாக்கத்துறை, சிபிஐ, வருமான வரித்துறை ஆகியவை எதிர்ப்புக் குரல்களை அடக்குவதற்கான முன்னணி அமைப்புகளாக மாற்றப்பட்டுள்ளன.

இப்போது தணிக்கை வாரியம்கூட சினிமா மற்றும் கருத்துக்களைக் கட்டுப்படுத்த ஒரு ஆயுதமாகப் பயன்படுத்தப்படுகிறது.

ஜனநாயகத்தைப் பாதுகாக்க வேண்டிய நிறுவனங்கள் மிரட்டல் கருவிகளாகச் சுருக்கப்பட்டுள்ளன, அதே நேரத்தில் பாஜக-ஆர்எஸ்எஸ் பிரசாரம் “பண்பாடு” என்று சித்தரிக்கப்படுகிறது.

சினிமாவுக்கு அரசியல் அனுமதி தேவையில்லை. அதற்கு அரசியலமைப்புப் பாதுகாப்புதான் தேவை.

அதிகாரத்தின் முன் கலையை மண்டியிட நிர்பந்திக்கப்படும்போது ஜனநாயகம் உயிர்வாழ முடியாது.” என்று குறிப்பிட்டுள்ளார்.

ரஷ்ய கொடியேற்றப்பட்ட கப்பலை கைப்பற்றியது அமெரிக்கா!

வெனிசுலாவுக்கு எண்ணெய் கொண்டு சென்றதாகக் கூறப்படும் ரஷ்ய கொடியேற்றப்பட்ட எண்ணெய்க் கப்பல் ஒன்றை வட அட்லாண்டிக் பெருங்கடலில் அமெரிக்கா புதன்கிழமை கைப்பற்றியது.

இது குறித்து அமெரிக்க ராணுவத்தின் ஐரோப்பிய கட்டளையகம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

” அமெரிக்க தேசிய நீதிமன்றம் வழங்கிய உத்தரவின்படி வட அட்லாண்டிக் பகுதியில் வெனிசுலா தொடா்புடைய எண்ணெய்க் கப்பல் கைப்பற்றப்பட்டது.

அந்தக் கப்பல் வெனிசுலா, ரஷ்யா, ஈரான் போன்ற நாடுகளுக்கு அமெரிக்க தடைகளை மீறி எண்ணெய் கொண்டு செல்லும் ‘நிழல் கப்பல் குழு’வைச் சோ்ந்தது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்காவால் கைப்பற்றப்பட்ட வெனிசுலா தொடா்பான இரண்டாவது எண்ணெய்க் கப்பல் இதுவாகும்.

இந்தக் கப்பலில் ரஷ்ய கொடி ஏற்றுவதற்கு முன்னா் பெல்லா-1 என்று அது அழைக்கப்பட்டது. பின்னா் ரஷியாவில் பதிவு செய்யப்பட்டு மரினேரா என்று பெயா் மாற்றப்பட்டது. கப்பல் ஊழியா்கள் ரஷியக் கொடியின் வண்ணத்தை கப்பலில் பூசியதாகத் தெரிகிறது.

அந்தக் கப்பல் வெனிசுலாவை நோக்கிச் சென்றாலும் அதில் சரக்கு ஏற்றப்படாமல் இருந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஈரான் மற்றும் ஹிஸ்புல்லாவுடனான தொடா்பு காரணமாக அந்தக் கப்பலுக்கு 2024 முதல் தடை விதிக்கப்பட்டிருந்தது.

முன்னதாக, 3 முதல் 5 கோடி பேரல் உயா்தர எண்ணெயை அமெரிக்காவுக்கு வெனிசுலா அனுப்பும் என்று டிரம்ப் அறிவித்தாா். இதற்கு வெனிசுலா இடைக்கால ஜனாதிபதி டெல்சி ரோட்ரிகஸ் ஒப்புக்கொண்டாரா என்பது தெளிவாகவில்லை. இதற்கான சட்ட அடிப்படை என்ன என்பதும் தெரியவில்லை.

இருந்தாலும், இந்த அறிவிப்பைத் தொடா்ந்து சா்வதேச் சந்தையில் எண்ணெய் விலை வீழ்ச்சியடைந்தது.

சினிமா

பிரபல இந்திய பாடகி ஆஷா போஸ்லே காலமானார்!

0
  பிரபல இந்திய பின்னணி பாடகி ஆஷா போஸ்லே தமது 92ஆவது வயதில் இன்று(12) காலமானார். இந்திய திரையுலகில் 10,000-இற்கும் அதிக பாடல்களை பாடியுள்ள மூத்த பாடகி ஆஷா போஸ்லே நேற்று(11) மாரடைப்பு ஏற்பட்டதையடுத்து மும்பையிலுள்ள...

சின்னத்திரை நடிகை தற்#கொ#லை!

0
  இலங்கையை பூர்வீகமாகக்கொண்ட பிரபல சின்னத்திரை நடிகையான சுபாஷினி (வயது 36) தற்#கொ#லை செய்துகொண்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. "கயல்" சின்னத்திரை தொலைக்காட்சி தொடரில் நடித்து வருபவர் சுபாஷிணி (வயது36). இலங்கையை பூர்வீகமாகக்கொண்ட இவர் கடந்த...

“தனுஷின் நட்பை இழந்தது மிகப்பெரிய அவமானம்” – விக்னேஷ் சிவன் வருத்தம்

0
தனுஷ் உடனான நட்பை இழந்தது மிகப்பெரிய அவமானம் என்று விக்னேஷ் சிவன் பகிர்ந்துள்ளார். விக்னேஷ் சிவன் இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன் நடித்துள்ள ‘எல்.ஐ.கே’ திரைப்படம் ஏப்ரல் 10-ம் திகதி திரைக்கு வரவுள்ளது. நீண்ட பிரச்சினைகளுக்கு...

செய்தி

நுவரெலியாவில் அடை மழை: மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு!

0
நுவரெலியா மாவட்டத்தில் இன்று (ஏப்ரல் 20) பெய்த கனமழை மற்றும் பலத்த காற்று காரணமாக பல பிரதேசங்களில் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. கடும் காற்றின் காரணமாக மரங்கள் முறிந்து வீழ்ந்ததில், நோர்வூட் பகுதியில் போக்குவரத்து...

மாற்றம் வரும்: ஆட்சிக்கு வருவதற்கு பாரிய திட்டங்கள் உள்ளன

0
“மீண்டும் ஆட்சிக்கு வருவதற்குரிய  பாரிய திட்டங்களை ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன முன்னெடுத்துள்ளது” என்று அக்கட்சியின் தலைவரும் முன்னாள் ஜனாதிபதியுமான மஹிந்த ராஜபக்ச தெரிவித்தார். பத்தரமுல்லையில் உள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில் இன்று நடைபெற்ற புத்தாண்டு...

பொருளாதார ஆய்வறிக்கை ஜனாதிபதியிடம் கையளிப்பு!

0
இலங்கை மத்திய வங்கியின் மிக முக்கியமான வெளியீடுகளான 'வருடாந்த பொருளாதார ஆய்வு 2025' மற்றும் 'நிதி மற்றும் செயற்பாட்டு அறிக்கை 2025' ஆகிய இரு அறிக்கைகளும் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவிடம் இன்று திங்கட்கிழமை...