Home Blog Page 134

புலம்பெயர்ந்தாலும் தமிழர் அடையாளம் மாறாது – அயலகத் தமிழர் தினம் 2026!

புலம்பெயர்ந்தாலும் தமிழர் அடையாளம் மாறாது – அயலகத் தமிழர் தினம் 2026!

“தூய தமிழின் பெருமை காத்து,
உலகம் எங்கும் பரப்பாகி வளர்க!
மாதா மொழி, பழமைச் சங்கீதம்,
ஒன்றுபட்டு கொண்டாடுவோம் நம் உறவை.”

“நீங்கள் எங்கு வாழ்ந்தாலும் எங்கள் பிள்ளைகள்தான்” – உலகத் தமிழர்களுக்கு தமிழ்நாடு அரசின் அழைப்பு.

உலகம் முழுவதும் வாழும் அயலகத் தமிழர்களை ஒரே குடும்பமாக இணைக்கும் நோக்கில், தமிழ்நாடு அரசு அயலகத் தமிழர் தினம் – 2026 விழாவை ஜனவரி 11 மற்றும் 12 ஆகிய தேதிகளில் சென்னை, நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் சிறப்பாக நடத்த உள்ளது.

இந்த விழாவின் முக்கிய நோக்கம்:

புலம்பெயர்ந்தாலும் தமிழர் அடையாளம் அழியக் கூடாது என்ற உறுதி வெளிப்படுத்துதல்.

தலைமுறை தலைமுறையாக தமிழின் மொழி, கலாச்சாரம், பாரம்பரியம் மற்றும் தமிழ்நாட்டுடனான உறவை வலுப்படுத்துதல்.

இரு நாள் விழாவில்:

பாரம்பரிய கலைகள், இசை, நடனம், கலாச்சாரம்
பாரம்பரிய உணவுகள் மற்றும் உடைகள்
உலகின் பல நாடுகளில் வாழும் தமிழர்களின் அனுபவங்கள் மற்றும் பெருமை இதனைப்போன்று உலகத் தமிழர்களை ஒரே மேடையில் இணைக்கும் ஒரு நிகழ்வாக அயலகத் தமிழர் தினம் – 2026 அமைய உள்ளது.

உலகின் எந்த மூலையில் வாழ்ந்தாலும், தமிழகம் தங்கள் தாய் மண்; தமிழ்நாடு அரசு தங்கள் சொந்த அரசு என்ற உணர்வை ஊக்குவிக்கும் வகையில், தமிழ்நாடு அரசு அனைவருக்கும் அன்புடன் அழைப்பு விடுக்கிறது.

தமிழால் இணைவோம் தமிழால் உயர்வோம்!

வாய்மையின் ஒளியில் வெற்றி!
தமிழ்மொழி நம் உயிர்!
தமிழ்நாடு நம் பெருமை!
உயர்ந்து வாழ்வோம் தமிழராய்!

தமிழின் பெருமையை உணர்ந்து பகிர்பவள் – நான் விஜயகுமாரன் தர்ஷிகா ✍️ இந்தியா மற்றும் இலங்கை இரு நாடுக்களுக்குமான தமிழ் கலாச்சார பண்பாடு தூதுவர்.

இந்திய இராணுவத் தளபதி – பிரதி பாதுகாப்பு அமைச்சர் சந்திப்பு: பாதுகாப்பு உறவு குறித்து ஆராய்வு!

இந்திய இராணுவத் தளபதி ஜெனரல் உபேந்ர திவ்வெதி (Upendra Dwivedi), பாதுகாப்பு பிரதி அமைச்சர் மேஜர் ஜெனரல் அருண ஜயசேகரவை (ஓய்வு) கொழும்பில் உள்ள அவரது அலுவலகத்தில்நேற்று(ஜனவரி 7) மரியாதை நிமித்தம் சந்தித்தார்.

இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு இந்திய இராணுவத் தளபதி நேற்று இலங்கை வந்தார். ஜெனரல் திவ்வெதியைபிரதி அமைச்சர், அன்புடன் வரவேற்றதுடன் சிநேகபூர்வ கலந்துரையாடளில் ஈடுபட்டார். இதன் போது, இந்தியாவிற்கும் இலங்கைக்கும் இடையிலான வரலாற்று, கலாச்சார மற்றும் நாகரிக உறவுகளை இரு தரப்பினரும் நினைவுபடுத்தினர்.

அண்மையில் டிட்வா சூறாவளியால் ஏற்பட்ட அனர்த்தத்தின் போது இந்திய அரசு அளித்த கணிசமான மற்றும் பன்முக ஆதரவிற்காக இலங்கை ஜனாதிபதி மற்றும் மக்களின் சார்பாக பாதுகாப்பு பிரதி அமைச்சர் மனமார்ந்த நன்றியை தெரிவித்தார்.

அனர்த்த நிவாரணக் குழுக்கள் மற்றும் மனிதாபிமான உதவிகளை வழங்குதல் உள்ளிட்ட இந்தியாவின் உரிய நேரத்தினாலான ஆதரவு நாட்டின் மீட்பு மற்றும் நிவாரணம் முயற்சிகளில் முக்கிய பங்கு வகித்தது என்றும் அவர் மேலும் குறிப்பிட்டார்.

இந்த குழுக்கள் தொடர்ந்தும் நிவாரணம் மற்றும் மீள்கட்டமைப்பு நடவடிக்கைகளுக்கு ஆதரவளித்து வருகின்றன. கடல் பிராந்தியத்தில் போதைப்பொருள் மற்றும் பிற நாடுகடந்த குற்றங்களை வெற்றிகரமாகத் தடுத்து நிறுத்த வழிவகுத்த இந்திய பாதுகாப்புப் படைகளுடனான செயல்பாட்டு ஒத்துழைப்புக்கும் அவர் பாராட்டு தெரிவித்தார்.

மேம்பட்ட தொழில்நுட்பம், திறன் மேம்பாடு மற்றும் அறிவுசார் பகிர்வு முயற்சிகள் மற்றும் எதிர்கால பாதுகாப்பு ஒத்துழைப்பு முயற்சிகள் குறித்தும் இதன் போது கலந்துரையாடப்பட்டது.

அண்மையில் ஏற்பட்ட அனர்த்தத்தை எதிர்கொள்வதில் இலங்கை அரசாங்கமும் மக்களும் காட்டிய வலுவான தேசிய ஒற்றுமை மற்றும் மீள்தன்மையைப் ஜெனரல் திவ்வெதி பாராட்டினார்.

இராணுவம், கடற்படை மற்றும் விமானப்படை துறைகளில் இலங்கையுடன் பாதுகாப்பு ஒத்துழைப்பை விரிவுபடுத்துவதற்கான இந்தியாவின் வலுவான உறுதிப்பாட்டை ஜெனரல் திவ்வெதி மீண்டும் உறுதிப்படுத்தினார்.

மனிதாபிமான உதவி, அனர்த்த மீட்பு, பயிற்சி மற்றும் திறன் மேம்பாடு முயற்சிகளில் தொடர்ந்து ஆதரவை வழங்குவதற்கும், இருதரப்பு உறவுகளை மேலும் வலுப்படுத்துவதற்கும், பிராந்திய ஸ்திரத்தன்மை, மீள்தன்மை மற்றும் பாதுகாப்பை மேம்படுத்துவதற்கும் இந்தியாவின் தயார்நிலையை அவர் மீண்டும் வலியுறுத்தினார். மேலும், இரு நாடுகளுக்கும் இடையே நீடித்த நம்பிக்கை மற்றும் வெளிப்படைத்தன்மையை உருவாக்க இளைய, நடுத்தர மற்றும் சிரேஷ்ட தலைமைத்துவங்கள் மூலம் அனைத்து மட்டங்களிலும் மக்களுக்கிடையிலான பிணைப்புகளை வளர்ப்பதன் முக்கியத்துவத்தையும் அவர் வலியுறுத்தினார்.

மேலும், அவசர சூழ்நிலைகளின் போது பொதுவான புரிதலை வளர்ப்பதற்காக, தேசிய அளவில் இருந்து தந்திரோபாய நிலை வரை அனர்த்த முகாமைத்துவ பொறிமுறையை மேம்படுத்த கூட்டு பயிற்சி மற்றும் பரிமாற்ற திட்டங்களின் முக்கியத்துவத்தை அவர் வலியுறுத்தினார்.

இந்த சந்திப்பு இலங்கைக்கும் இந்தியாவிற்கும் இடையிலான நீடித்த நட்பு மற்றும் கூட்டாண்மையை உறுதிப்படுத்துவதாக அமைந்தது என்பது குறிப்பிடத்தக்கது. இது பிராந்திய ஸ்திரத்தன்மை மற்றும் பாதுகாப்பிற்கான பகிரப்பட்ட உறுதிப்பாட்டை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது.

இந்திய இராணுவத்தின் சிரேஷ்ட அதிகாரிகள், கொழும்பிலுள்ள பாதுகாப்பு ஆலோசகர் உட்பட இந்திய உயர் ஸ்தானிகராலய அதிகாரிகளும் இந்த சந்திப்பில் கலந்து கொண்டனர்.

புதிய வீடுகளை நிர்மாணிக்கும் பணி நாளை ஆரம்பம்!

‘Rebuilding Sri Lanka’ வேலைத் திட்டத்தின் கீழ், டித்வா சூறாவளியால் முழுமையாக சேதமடைந்த வீடுகளுக்குப் பதிலாக புதிய வீடுகளை நிர்மாணித்தல் மற்றும் இழப்பீடு வழங்கும் ஆரம்ப நிகழ்வு நாளை (09) அனுராதபுரம் மற்றும் குருநாகல் மாவட்டங்களில் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தலைமையில் நடைபெறவுள்ளது.

அதன்படி, அனுராதபுரம் மாவட்டத்தில் கல்னேவ, ஹந்துன்கம, ராஜாங்கனய, சிறிமாபுர மற்றும் குருநாகல் மாவட்டத்தில் நிகவெரட்டிய, விதிகுலிய சந்தி மற்றும் ரிதீகம, தொடம்கஸ்லந்த ஆகிய பிரதேசங்களில் அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக புதிய வீடுகளை நிர்மாணிக்கும் பணியின் ஆரம்ப நிகழ்வு நடைபெறும்.

டித்வா சூறாவளியால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்கும் வேலைத்திட்டத்தின் கீழ் இந்தப் பணிகள் முன்னெடுக்கப்படுகின்றன.

பாதுகாப்பு தொடர்பான அமைச்சுசார் ஆலோசனைக் குழு ஜனாதிபதி தலைமையில் கூடியது !

பாதுகாப்பு தொடர்பான அமைச்சுசார் ஆலோசனைக் குழு நேற்று (07) பிற்பகல் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தலைமையில் கூடியது.

இதற்கு முன்னர் நடைபெற்ற கலந்துரையாடல்களின் முன்னேற்றம் இங்கு மீளாய்வு செய்யப்பட்டது.

வடக்கில் காணி விடுவிப்பு, வீதிகளைத் திறப்பது மற்றும் பாடசாலைகளை நடத்துவது தொடர்பாக பல்வேறு தரப்பினர்களால் முன்வைக்கப்பட்ட பல்வேறு முன்மொழிவுகளுக்கு சாதகமான தீர்வுகளை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கூட்டத்தில் சுட்டிக்காட்டப்பட்டது.

அத்தோடு, இதற்கான முன்னெடுப்புகளை மேற்கொள்கையில் ஏற்படும் தடைகள் மற்றும் அதற்காக மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் பற்றியும் இங்கு கலந்துரையாடப்பட்டது.

திருகோணமலை, மனையாவெளி பகுதியில் உள்ள ‘சாண்டி பே’ கடற்கரையை பொதுமக்கள் தடையின்றிப் பயன்படுத்துவதற்கான வாய்ப்பை வழங்கவும், மீன்பிடிப் பிரச்சினைகளுக்குத் தீர்வுகளை வழங்கவும் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து விரிவாக கலந்துரையாடப்பட்டன.

ஒலுவில் துறைமுகத்தைச் சுற்றியுள்ள மண்ணரிப்பு பிரச்சினை குறித்தும் விசேட கவனம் செலுத்தப்பட்டதுடன், ஒலுவில் துறைமுகத்தை எவ்வாறு பயன்படுத்தலாம் என்பது குறித்து நாரா நிறுவனத்தின் உதவியுடன் புதிய சாத்தியக்கூறு ஆய்வை மேற்கொள்ளுமாறு கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சிற்கு அறிவுறுத்தியுள்ளதாக ஜனாதிபதி இதன்போது தெரிவித்தார்.

பாதுகாப்புப் படை உறுப்பினர்களின் நலன்புரி நடவடிக்கைகள், ஐ.நா. அமைதிப் படைகளுக்கு அதிகமானவர்களை அனுப்புதல் மற்றும் ஹெலிகொப்டர்களின் எண்ணிக்கையை வலுப்படுத்த எடுக்கப்பட்ட துரித நடவடிக்கைகள் குறித்தும் இங்கு கலந்துரையாடப்பட்டன.

அமைச்சர்கள், பிரதி அமைச்சர்கள் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்கள், பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ஓய்வுபெற்ற எயார் வைஸ் மார்ஷல் சம்பத் துய்யகொந்தா மற்றும் பாதுகாப்புத் பிரிவுகளின் சிரேஷ்ட அதிகாரிகள் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.

டித்வா சூறாவளியால் சொத்துக்கள் சேதமடைந்த மக்களுக்காக 10 ஏக்கர் காணியை வழங்கிய தேரர்!

டித்வா சூறாவளியால் சொத்துக்கள் சேதமடைந்த மக்களுக்காக அரசாங்கம் முன்னெடுக்கும் வேலைத்திட்டத்திற்கு இணைந்த வகையில், சியம்பலாபிட்டிய, யட்டோகொட, யடஹலென ரஜமஹா விகாராதிபதி, சமாதான நீதவான், தேசிய மனித உரிமைகள் பணிப்பாளர், சாசன கீர்த்தி ஸ்ரீ சத்தர்ம விசாரத வண, மாவீகந்தே ரதனபால தேரரினால் காணி நன்கொடையாக வழங்கப்பட்டது.

அதன்படி, தேரருக்குச் சொந்தமான கலிகமுவ பிரதேச செயலகப் பிரிவின் சியம்பலாபிட்டிய பகுதியில் அமைந்துள்ள பத்து ஏக்கர் தனியார் காணி இவ்வாறு நன்கொடையாக வழங்கப்பட்டதுடன், அதற்கான ஆவணங்கள் நேற்று (07) பிற்பகல் ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்கவிடம் கையளிக்கப்பட்டன.

டித்வா சூறாவளியால் வீடுகளை இழந்த மக்களுக்கு புதிய வீடுகளை நிர்மாணிக்கும் திட்டத்தை அரசாங்கம் ஆரம்பித்துள்ளதாகவும், அதன்படி, காணிகளை நன்கொடையாக வழங்க விரும்புவோர் www.rebuldingsrilanka.gov.lk என்ற இணையதளத்தில் தேவையான தகவல்களைப் பெற்றுக்கொள்ள முடியும் என்றும் ஜனாதிபதியின் செயலாளர் தெரிவித்தார்.

கலிகமுவ பிரதேச செயலக அதிகாரிகளும் இந்த நிகழ்வில் கலந்து கொண்டனர்.

எம்.பிக்களுக்குரிய ஓய்வூதியம் ரத்து: சட்டமூலம் சபையில் முன்வைப்பு!

நாடாளுமன்ற உறுப்பினர்களுக்குரிய ஓய்வூதியத்தை இரத்து செய்வதற்குரிய சட்டமூலம் நாடாளுமன்றத்தில் நேற்று சமர்ப்பிக்கப்பட்டது.

1977 ஆம் ஆண்டின் 1 ஆம் இலக்க, நாடாளுமன்ற ஓய்வூதியச் சட்டத்தை நீக்குவதற்குரிய சட்டமூலம் என பெயரிடப்பட்டுள்ள மேற்படி சட்டமூலத்தை நீதி அமைச்சர் சட்டத்தரணி ஹர்ஷன நாணயக்கார முன்வைத்தார்.

மேற்படி சட்டமூலத்துக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. நாடாளுமன்றத்தில் தற்போது முன்வைக்கப்பட்டுள்ள நிலையில் அது தொடர்பில் உயர்நீதிமன்றத்தை நாடுவதற்குரிய வாய்ப்பு வழங்கப்படும்.

உயர்நீதிமன்றத்தின் சட்டவியாக்கியானம் வழங்கப்பட்ட பின்னர், அந்த வழிகாட்டலுக்கமைய சட்டமூலத்தை நிறைவேற்ற முடியும்.
முன்னாள் எம்.பிக்களுக்கு வழங்கப்படும் ஓய்வூதியம் இரத்து செய்யப்படும் என்பதுடன், தற்போதுள்ள எம்.பிக்களுக்கு எதிர்காலத்தில் ஓய்வூதியம் பெறாத வகையில் ஏற்பாடு இடம்பெற்றுள்ளது.

அதேவேளை முன்னாள் ஜனாதிபதிகளுக்குரிய சிறப்புரிமைகளும் தேசிய மக்கள் சக்தி ஆட்சியின்கீழ் அண்மையில் இல்லாது செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

நுவரெலியாவில் சீ பிளேன் விபத்து: விசாரணை முன்னெடுப்பு!

நுவரெலியா, கிரெகரி வாவியில் தரையிரங்க முயன்ற சீ பிளேன் வீழ்ந்து விபத்திற்குள்ளானமை தொடர்பில் சிவில் விமான சேவைகள் அதிகார சபை முறையான விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.

இதற்கென உயர்மட்ட அதிகாரிகள் குழு நுவரெலியாவிற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக சிவில் விமான சேவைகள் அதிகார சபையின் பணிப்பாளர் நாயகம் விமானி தமிந்த ரம்புக்வெல்ல தெரிவித்தார்.

குறித்த விமானம் நேற்று(07) கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து நுவரெலியா நோக்கி பயணித்துள்ளது.

விமானத்திலிருந்த 02 விமானிகளையும் கடற்படையினர் மற்றும் பொலிஸார் மீட்டுள்ளனர்.

நுவரெலியாவிற்கு வருகை தந்த சுற்றுலா பயணிகள் குழுவை ஏற்றிச்செல்வதற்காக சென்ற Sea plane இவ்வாறு விபத்திற்குள்ளானதாக பொலிஸார் தெரிவித்தனர்.

கிரீன்லாந்துமீது அமெரிக்கா ராணுவ நடவடிக்கை?

கிரீன்லாந்தை கையகப்படுத்திக்கொள்ள அந்தத் தீவின் மீது படையெடுப்பது உள்ளிட்ட அனைத்து நடவடிக்கைகளும் பரிசீலனையில் உள்ளதாக அமெரிக்க வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது.

கிரீன்லாந்தை அமெரிக்காவுடன் இணைப்பது குறித்து ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் தொடர்ந்து ஆலோசனை நடத்தி வருகின்றார்.

அது அமெரிக்காவின் பாதுகாப்பு, பொருளாதார நலன்களுக்கு முக்கியமானது.

அமைதியான வழியில் அந்தத் தீவை சொந்தமாக்கிக் கொள்வது முதல் ராணுவத்தை அனுப்பி அந்தத் தீவைக் கைப்பற்றுவது வரை அனைத்து நடவடிக்கைகளும் பரிசீலனையில் உள்ளன என்று வெள்ளை மாளிகை பேச்சாளர் தெரிவித்தார்.

இந்த விவகாரம் குறித்து டென்மார்க் அரசுடன் அமெரிக்கா பேச்சு நடத்தும். அமெரிக்காவின் நலன்களைப் பாதுகாக்க அனைத்து விதமான நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படும் எனவும் குறிப்பிட்டார்.

பிரிட்டன், பிரான்ஸ், ஜேர்மனி, டென்மார்க், ஸ்வீடன் உள்ளிட்ட நாடுகளின் தலைவர்கள் இவ்விவகாரம் தொடர்பில் கழுகுப்பார்வை செலுத்தியுள்ளனர்.

அமெரிக்காவின் நடவடிக்கை ஐரோப்பிய இறையாண்மைக்கு சவால் விடுவதாகக் குற்றஞ்சாட்டும் அவர்கள், இதை நேட்டோவின் உறுப்பு நாடுகள் ஒன்றிணைந்து எதிர்கொள்ள வேண்டும் என்று உறுதிபூண்டுள்ளனர்.

டென்மார்க் நேட்டோ உறுப்பு நாடு என்பதால் அந்த ராணுவக் கூட்டமைப்பின் 5-ஆம் விதியை செயல்படுத்த வேண்டியிருக்கும்.

அந்த விதியின் கீழ், நேட்டோ உறுப்பு நாட்டுக்கு எதிராக எந்த நாடு தாக்குதல் நடத்தினாலும், அது அனைத்து உறுப்பு நாடுகளின் மீதான தாக்குதலாகக் கருதப்பட்டு அந்த நாட்டுக்கு பதிலடி கொடுக்க வேண்டும்.

எனவே, கிரீன்லாந்து மீது படையெடுத்தால் அமெரிக்காவுக்கு எதிராகவே பிற நேட்டோ உறுப்பு நாடுகள் ராணுவ நடவடிக்கை மேற்கொள்ள வேண்டிய சூழல் ஏற்படும். இது நேட்டோ நாடுகளுக்கு இடையிலான உறவை சிக்கலாக்கி, அமைப்பையே சீர்குலைக்கும் என நிபுணர்கள் கருதுகின்றனர்.

அமெரிக்க ஜனாதிபதியாக இரண்டாவது முறையாக பதவியேற்றதில் இருந்தே கிரீன்லாந்தை சொந்தமாக்கிக் கொள்வது தொடர்பில் ட்ரம்ப் கருத்து வெளியிட்டுவருகின்றார்.

இதற்கு, ‘கிரீன்லாந்து விற்பனைக்கு இல்லை’ என்று டென்மார்க் திட்டவட்டமாக மறுப்பு தெரிவித்துவிட்டது.
கிரீன்லாந்து அரசும், ‘நாங்கள் சுதந்திரமான மக்கள்.

அமெரிக்காவுக்கு விற்கப்பட மாட்டோம்’ என்று உறுதியாகக் கூறியது. ஐரோப்பிய நாடுகளும் டிரம்ப்பின் இந்தக் கருத்தை மிகவும் ஆபத்தானது என்று நிராகரித்தன.

இந்தச் சூழலில், வெனிசுலாவுக்குள் அதிரடியாக நுழைந்து தாக்குதல் நடத்தி, அந்த நாட்டு ஜனாதிபதி நிக்கோலஸ் மடூரோவையும் அவரின் மனைவியையும் அமெரிக்க சிறப்புப் படையினர் சிறைப்பிடித்ததைத் தொடர்ந்து, கிரீன்லாந்து விவகாரத்திலும் இதுபோன்ற துணிகர நடவடிக்கையை டிரம்ப் மேற்கொள்ளலாம் என்ற அச்சம் எழுந்தது.

அந்த அச்சத்தை உறுதிப்படுத்துவதுபோல் டிரம்ப்பும், வெள்ளை மாளிகையும் தற்போது பேசியுள்ளது புதிய பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

மரக்கறி விலைப்பட்டியல் (08.01.2026)

நுவரெலியா பொருளாதார மத்திய நிலையத்தால் இன்று (08) வெளியிடப்பட்டுள்ள மரக்கறி வகைகளின் (ஒரு கிலோ) விலை பட்டியல்…

சாரா ஜஸ்மின் உயிருடன் இருப்பதாக தகவல்: இந்தியாவில் இல்லை!

“சாரா ஜஸ்மின் உயிரிழக்கவில்லை என்பது தொடர்பில் சில தகவல்கள் கிடைக்கப்பெற்றுள்ளன. எனினும், அவர் இந்தியாவில் இருக்கின்றார் என்பது தொடர்பில் எவ்வித தகவல்களும் கிடைக்கப்பெறவில்லை.”

இவ்வாறு பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்தார்.

நாடாளுமன்றத்தில் முஜிபூர் ரஹ்மான் எம்.பி. எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.

“ உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவம் தொடர்பில் விசாரணைகள் இடம்பெற்றுவருகின்றன.

சாரா ஜஸ்மின் உயிரிழக்கவில்லை என்பதற்கான சில தகவல்கள் விசாரணைகள் மூலம் கிடைக்கப்பெற்றுள்ளன. அவர் இந்தியாவில்தான் இருக்கின்றார் என எவ்வித தகவலும் கிடைக்கப்பெறவில்லை.

விசாரணைகள் தொடர்ந்து இடம்பெற்றுவருகின்றன. உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பின்னணியில் சூழ்ச்சி உள்ளதா என்பது பற்றியும் விசாரிக்கப்படுகின்றது. சில தகவல்களை வெளியிடுவது விசாரணைக்கு இடையூறு விளைவிக்கக்கூடும்.

தேவையேற்படின் எதிர்காலத்தில் அந்த பிடிவிராந்து பெறப்படும்.” – என அமைச்சர் மேலும் கூறினார்.

சினிமா

பிரபல இந்திய பாடகி ஆஷா போஸ்லே காலமானார்!

0
  பிரபல இந்திய பின்னணி பாடகி ஆஷா போஸ்லே தமது 92ஆவது வயதில் இன்று(12) காலமானார். இந்திய திரையுலகில் 10,000-இற்கும் அதிக பாடல்களை பாடியுள்ள மூத்த பாடகி ஆஷா போஸ்லே நேற்று(11) மாரடைப்பு ஏற்பட்டதையடுத்து மும்பையிலுள்ள...

சின்னத்திரை நடிகை தற்#கொ#லை!

0
  இலங்கையை பூர்வீகமாகக்கொண்ட பிரபல சின்னத்திரை நடிகையான சுபாஷினி (வயது 36) தற்#கொ#லை செய்துகொண்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. "கயல்" சின்னத்திரை தொலைக்காட்சி தொடரில் நடித்து வருபவர் சுபாஷிணி (வயது36). இலங்கையை பூர்வீகமாகக்கொண்ட இவர் கடந்த...

“தனுஷின் நட்பை இழந்தது மிகப்பெரிய அவமானம்” – விக்னேஷ் சிவன் வருத்தம்

0
தனுஷ் உடனான நட்பை இழந்தது மிகப்பெரிய அவமானம் என்று விக்னேஷ் சிவன் பகிர்ந்துள்ளார். விக்னேஷ் சிவன் இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன் நடித்துள்ள ‘எல்.ஐ.கே’ திரைப்படம் ஏப்ரல் 10-ம் திகதி திரைக்கு வரவுள்ளது. நீண்ட பிரச்சினைகளுக்கு...

செய்தி

நுவரெலியாவில் அடை மழை: மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு!

0
நுவரெலியா மாவட்டத்தில் இன்று (ஏப்ரல் 20) பெய்த கனமழை மற்றும் பலத்த காற்று காரணமாக பல பிரதேசங்களில் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. கடும் காற்றின் காரணமாக மரங்கள் முறிந்து வீழ்ந்ததில், நோர்வூட் பகுதியில் போக்குவரத்து...

மாற்றம் வரும்: ஆட்சிக்கு வருவதற்கு பாரிய திட்டங்கள் உள்ளன

0
“மீண்டும் ஆட்சிக்கு வருவதற்குரிய  பாரிய திட்டங்களை ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன முன்னெடுத்துள்ளது” என்று அக்கட்சியின் தலைவரும் முன்னாள் ஜனாதிபதியுமான மஹிந்த ராஜபக்ச தெரிவித்தார். பத்தரமுல்லையில் உள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில் இன்று நடைபெற்ற புத்தாண்டு...

பொருளாதார ஆய்வறிக்கை ஜனாதிபதியிடம் கையளிப்பு!

0
இலங்கை மத்திய வங்கியின் மிக முக்கியமான வெளியீடுகளான 'வருடாந்த பொருளாதார ஆய்வு 2025' மற்றும் 'நிதி மற்றும் செயற்பாட்டு அறிக்கை 2025' ஆகிய இரு அறிக்கைகளும் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவிடம் இன்று திங்கட்கிழமை...