Home Blog Page 135

சாரா எங்கே? ஏன் பிடிவிராந்து பிறப்பிக்கப்படவில்லை?

சஹ்ரான் குழுவின் உறுப்பினரான புலஸ்தினி மகேந்திரன் எனப்படும் சாரா ஜஸ்மினை நாட்டுக்கு கொண்டுவருவதற்குரிய திறந்த பிடிவிராந்து ஏன் இன்னும் பெறப்படவில்லை என்று ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபூர் ரஹ்மான் கேள்வி எழுப்பினார்.

நாடாளுமன்றத்தில் நேற்று கருத்து வெளியிடுகையிலேயே அவர் இவ்வாறுகேள்வி எழுப்பினார்.

“ உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவத்துடன் தொடர்புடைய சஹ்ரான் குழவில் இருந்தவர்தான் சாரா ஜஸ்மின்.

கோட்டாபய ராஜபக்சவின் ஆட்சிகாலத்தல் மூன்றாவது முறையாக முன்னெடுக்கப்பட்ட டிஎன்ஏ பரிசோதனை மூலம்தான் அவர் உயிரிழந்துவிட்டார் எனக் கூறப்பட்டது.

சாரா ஜஸ்மின் உயிரிழக்கவில்லை என்றே நான் நம்புகின்றேன். அவர் தப்பி சென்றிருக்கக்கூடும் அல்லது அவர் தப்பிச்செயல்வதற்கு குழுவொன்று உதவி இருக்கக்கூடும்.

சாரா ஜஸ்மின் உயிரிழக்கவில்லை என்பதை உங்கள் அரசாங்கமும் ஏற்கின்றது. இந்தியாவில் இருக்கின்றார் எனவும் கூறப்பட்டது. எனவே, சாரா ஜஸ்மினை கொண்டுவருவதற்கு ஏன் இன்னும் திறந்த பிடிவிராந்து பெறப்படவில்லை?

இந்தியாவுடன் தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் நெருக்கமாக செயல்படுகின்றது. இந்தியாவின் முக்கிய பிரமுகர்கள் இலங்கை வந்திருந்தனர். இது பற்றி அவர்களுடன் பேசப்பட்டதா?” – எனவும் முஜிபூர் ரஹ்மான் கேள்வி எழுப்பினார்.

யாழ்ப்பாணத்தில் கொட்டித் தீர்க்கப்போகும் கன மழை: பேரழிவு ஏற்படுமென எச்சரிக்கை!

தற்போது உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வுமண்டலத்தால் யாழ்ப்பாணம் மாவட்டத்தில் 650 மில்லிமீற்றருக்கும் மேலான மழை பெய்யும் என எச்சரித்துள்ள யாழ். பல்கலைக்கழகத்தின் சிரேஷ்ட விரிவுரையாளர் பேராசிரியர் நாகமுத்து பிரதீபராஜா, இதன் தாக்கம் யாழ். மாவட்டம் இதுவரை எதிர்கொள்ளாத அளவு பாதிப்புக்களை எதிர்கொள்ள நேரிடும் என்றும் எச்சரித்துள்ளார்.

வங்காள விரிகுடாவில் நிலைகொண்டுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு வழங்கும் வகையில் யாழ். ஊடக அமையத்தில் இன்று ஊடக சந்திப்பை நடத்திய அவர், இது தொடர்பில் மேலும் கூறுகையில்,

“உருவாகியுள்ள தாழ்வுமண்டலமானது, நாட்டின் கிழக்கு கடற்கரையை நோக்கி நகரவுள்ளது. இது மணிக்கு 9 கிலோமீற்றர் வேகத்தில் நகரவுள்ளது என்று எதிர்பார்க்கப்படுகின்றது.

இதனால் 60 கிலோ மீற்றர் வேகத்தில் காற்றும் வீசும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

குறிப்பாக 1970 ஆம் ஆண்டுக்கு பின்னர் ஜனவரி மாதத்தில் உருவாகியுள்ள 21 ஆவது தாழ்வுமண்டலமாக அமைகின்றது.

ஆனாலும், கடந்து சென்ற தாழ்வுமண்டலங்களை விட இது அதிக தாக்கத்தை ஏற்படுத்தும். அதாவது இதன் நகர்வும் பாதை கடல் பகுதியாக இருந்தாலு. வடக்கு நோக்கி நகரும் போது தரையையும் ஊடறுத்துச் செல்லவுள்ளது. அத்துடன் மிக குறைந்தளவு வேகத்தில் நகர்வதால் எதிர்வரும் 8, 9,10 ஆம் திகதிகளில் கிழக்கு மாகாணம் பாரியளவு மழைவீழ்ச்சியை எதிர்கொள்ள வாய்ப்புள்ளது.

அத்துடன் 9, 10 ஆம் திகதிகளில் யாழ். மாவட்டம் மிக அதிக மழைவீழ்ச்சியை எதிர்கொள்ளவுள்ளது. இதன் தாக்கம் டித்வா புயலால் தென்பகுதி எதிர்கொண்ட பேரழிவுகளை விட அதிகமாக இருக்கும் எனவும் எதிர்பார்க்க முடிகின்றது.

அத்துடன் இந்தப் பாதிப்பால் விவாசாயிகள் பாரிய பயிரழிவுகளை எதிர்கொள்ள நேரிடும். துறைசார் அதிகாரிகள் இது தொடர்பில் துரித முன்னேற்பாடுகளை முன்னெடுப்பது சிறந்தது.

பொதுமக்கள் இந்த விழிப்புணர்வு எச்சரிக்கையை அவதானத்தில் கொண்டு தங்களது பாதுகாப்பை உறுதி செய்வது அவசியமாகும்.

இதேநேரம் ஜனவரி 8 ஆம் திகதி முதல் நாடு முழுவதும், குறிப்பாக வடக்கு, வடமத்திய, கிழக்கு, ஊவா மற்றும் மத்திய மாகாணங்களில் மழையுடனான காலநிலை மேலும் அதிகரிக்கும்.” – என்றார்.

13 ஆம் திகதி இலங்கை வருகிறார் சீன வெளிவிவகார அமைச்சர்!

சீன வெளியுறவு அமைச்சர் வாங் யி, இலங்கைக்கு இரண்டு நாள்கள் அதிகாரபூர்வ பயணத்தை மேற்கொள்ளவுள்ளார்.
எதிர்வரும் 13 மற்றும் 14 ஆம் நாள்களில் அவர் இலங்கையில்தங்கியிருப்பார்.

இலங்கை வரும் சீன வெளியுறவு அமைச்சர் வாங் யி, முக்கிய கொள்கை அறிவிப்புகளை வெளியிடுவார் என்றும், முக்கிய பொருளாதார முயற்சிகள் குறித்து அறிவிப்பார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

சீன முதலீடுகள், புதிய பொருளாதார ஒத்துழைப்பு திட்டங்கள் மற்றும் முன்மொழியப்பட்ட இலங்கை-சீன சுதந்திர வர்த்தக உடன்பாட்டின் முன்னேற்றம் ஆகியன குறித்தும் அவர் முக்கிய அறிவிப்புகளை வெளியிடுவார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அம்பாந்தோட்டை எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் மற்றும் ஏனைய மூலோபாய உள்கட்டமைப்பு மற்றும் முதலீட்டு முயற்சிகள் போன்ற பெரியளவிலான அபிவிருத்தித் திட்டங்கள் குறித்த அறிவிப்புகளும் எதிர்பார்க்கப்படுகின்றன.

இந்தப் பயணத்தின் போது,ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கதிசாநாயக்க, பிரதமர் ஹரிணி அமரசூரிய மற்றும் மூத்த அரசாங்கத் தலைவர்களுடனும், ஜேவிபி பொதுச்செயலர் ரில்வின் சில்வாவுடனும், சீன வெளியுறவு அமைச்சர் இருதரப்பு கலந்துரையாடல்களை நடத்துவார்.

சீன வெளியுறவு அமைச்சர் வாங் யி, சீன- இலங்கை இராஜதந்திர உறவுகளின் 65வது ஆண்டு விழாவில் கலந்து கொள்ளவதற்காக, 2022 ஜனவரியில் கடைசியாக சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொண்டிருந்தார்.

பேரிடரால் வீடுகளை இழந்தோருக்கு இழப்பீடு தொடர்பான அறிவித்தல்!

அனர்த்தத்தால் முழுமையாக சேதமடைந்த வீடுகளுக்காக இழப்பீடு வழங்கும் மற்றும் புதிய வீடுகளை நிர்மாணிக்கும் திட்டம் ஜனவரி 9 ஆம் திகதி அநுராதபுரம் மற்றும் குருநாகலில் ஆரம்பிக்கப்படும் என்று ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்தார்.

10 ஆவது பாராளுமன்றத்தின் நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி பற்றிய அமைச்சுசார் ஆலோசனைக் குழுவின் இரண்டாவது கூட்டம் இன்று (07) பிற்பகல் பாராளுமன்ற வளாகத்தில் நடைபெற்றது. இதில் பங்கேற்று உரையாற்றும் போதே ஜனாதிபதி மேற்கண்டவாறு தெரிவித்தார்.

டித்வா சூறாவளியால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்கும் அரசின் செயற்திட்டத்தின் தற்போதைய நிலைமை மற்றும் மீள்குடியேற்றம் மற்றும் பயிற்செய்கைகளுக்கு ஏற்பட்ட சேதத்திற்கு இழப்பீடு வழங்கும் செயற்பாடு குறித்து இதன் போது விரிவாக ஆராயப்பட்டது. துல்லியமான தரவுகள் மற்றும் உண்மையான புள்ளிவிவரங்களின் அடிப்படையில் இதற்கான இழப்பீட்டுத் தொகையை வழங்கும் நடவடிக்கையை விரைவுபடுத்துமாறு விவசாயத் திணைக்களம் மற்றும் கமநல சேவைகள் திணைக்களம் என்பவற்றுக்கு அறிவுறுத்தியுள்ளதாகவும் ஜனாதிபதி குறிப்பிட்டார்.

அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட சிறு மற்றும் நடுத்தர அளவிலான வர்த்தகர்களுக்காக செயல்படுத்தப்படும் கடன் திட்டம் குறித்தும் இங்கு ஆராயப்பட்டது. வங்கிகளுடன் கலந்தாலோசித்து அந்தக் கடனைப் பெறுவது குறித்து வர்த்தக சமூகத்திற்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் திட்டத்தின் அவசியம் குறித்தும் ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.

அத்தோடு, நாட்டின் பொருளாதாரத்திற்கு பங்களிக்கும் ஒவ்வொரு வர்த்தகத்தையும் பதிவு செய்வதற்கான ஒரு பொறிமுறையின் அவசியத்தையும், அதன் நன்மைகள் குறித்து வர்த்தக சமூகத்திற்கு விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டியதன் அவசியத்தையும் ஜனாதிபதி எடுத்துரைத்தார்.

மேலும், அண்மையில் ஏற்பட்ட அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட பதிவு செய்யப்படாத சிறு மற்றும் நடுத்தர அளவிலான வர்த்தகர்களுக்கு நிவாரணம் வழங்குவதிலும் அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளது என்றும், இது தொடர்பாக அறிக்கைகளை சமர்ப்பிக்குமாறு மாவட்ட செயலாளர்களுக்கு அறிவுறுத்தியுள்ளதாகவும் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்தார்.

அபிவிருத்தித் திட்டங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிதியை செயற்திறனுடன் செலவிட வேண்டியதன் அவசியத்தையும், இல்லையெனில் உரிய காலப்பகுதிக்குள் எதிர்பார்க்கும் அபிவிருத்தி நோக்கங்களை அடைய முடியாது போகும் என்றும் ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.

அனர்த்தத்திற்குப் பிறகு மக்களின் அன்றாட வாழ்க்கையை மீளக் கட்டியெழுப்புகையில் முன்பிருந்த நிலையை விட, மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தும் வகையில் இந்த நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டியதன் அவசியத்தையும் ஜனாதிபதி தெளிவுபடுத்தினார்.

அமைச்சர்கள், பிரதி அமைச்சர்கள் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்கள் , நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் செயலாளர் கலாநிதி ஹர்ஷன சூரியப்பெரும, அத்தியாவசிய சேவைகள் ஆணையாளர் நாயகம், பெருந்தோட்ட மற்றும் சமூக உள்கட்டமைப்பு வசதிகள் அமைச்சின் செயலாளர் பிரபாத் சந்திரகீர்த்தி மற்றும் நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் கீழ் உள்ள நிறுவனங்களின் அதிகாரிகள் ஆகியோர் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.

சம்பள உயர்வு தொழிலாளர்களுக்கு பாகுபாடின்றி வழங்கப்பட வேண்டும்

– மனோ, திகா எம்.பிக்கள் கூட்டாக வலியுறுத்து 

“தோட்டத் தொழிலாளருக்கான இந்த மாத சம்பள உயர்வு 400/= ரூபா அடுத்த மாதம் வழங்கப்படவுள்ளது. இதையிட்டு மகிழ்ச்சி. அப்படி அது வழங்கப்படும் போது, 3 அரசாங்க பெருந்தோட்ட நிறுவனங்கள், 22 தனியார் தோட்ட நிறுவனங்கள், சிறு தோட்ட உடைமையாளர் தோட்டங்கள், தனியார் சிறு தோட்டங்கள், ஆகிய நான்கு பிரிவு தோட்டங்களில் தொழில் புரியும் அனைத்து தொழிலாளர்களுக்கும் இந்த சம்பள உயர்வு கிடைக்க வேண்டும். கடந்த வரவு – செலவுத் திட்ட இரண்டாம் வாசிப்பின் போது, அரசுக்கு ஆதரவாக தமிழ் முற்போக்குக் கூட்டணி எம்பிக்கள் வாக்களித்தோம். அதன்போது இதைத்  சொல்லித்தான் நான் வாக்களித்தேன். இப்போதும் அதையே இங்கே தொழில் அமைச்சர் அணில் ஜயந்த பெர்னாண்டோ, பிரதி அமைச்சர் மஹிந்த ஜயசிங்க ஆகியோரின் கவனத்துக்கு கொண்டு வருகின்றேன்.”

– இவ்வாறு தமிழ் முற்போக்குக் கூட்டணியின் தலைவர் மனோ கணேசன் எம்.பி. தெரிவித்தார்.

நாடாளுமன்ற வளாகத்தில் தொழில் அமைச்சின் அமைச்சக ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில் தொழில் அமைச்சர் அணில் ஜயந்த பெர்னாண்டோ, பிரதி அமைச்சர் மஹிந்த ஜயசிங்க. மனோ கணேசன் எம்.பி., திகாம்பரம் எம்.பி., கலைச்செல்வி எம்.பி. உட்பட பலர் கலந்துகொண்டார்கள்.

இது தொடர்பில் தமிழ் முற்போக்குக் கூட்டணியின் ஊடக செயலகம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:-

“இந்தக் கலந்துரையாடலில் கலந்துகொண்ட திகாம்பரம் எம்.பி., “அரசின் 200/= ரூபா கிடைக்கும் என எண்ணுகின்றேன். ஆனால், கம்பனித் தோட்டங்களில் இப்போதே, தொழிலாளர் கொண்டு வர வேண்டிய கொழுந்து நிறை தொடர்பில் சர்ச்சை எழுந்துள்ளது. வழமையை விட அதிக நிறை கொண்டு வர வேண்டும். இல்லாவிட்டால், முழு நாள் சம்பளம் தர மாட்டோம் என்று இப்போதே கம்பனிகள் தொழிலாளரிடம் கூறத் தொடங்கி விட்டன. இதை அரசு கவனத்தில் எடுக்க வேண்டும். இல்லாவிட்டால், நீங்கள் சொன்ன சம்பள உயர்வு 400/= ரூபா கிடைக்காது.” – என்று கூறினார்.

இவ்வேளையில் மீண்டும் கருத்துக் கூறிய மனோ கணேசன் எம்.பி., “எல்லா காலத்திலும், எல்லாப் பிராந்தியங்களிலும் ஒரே மாதிரியான, கொழுந்து கிடைப்பதில்லை. ஆகவே அதை வைத்துக்கொண்டு நிறுவனங்கள் சம்பளத்தைக் குறைத்து வழங்கி விளையாடாமல், கண்காணிப்பது அரசின் பணியாகும். அதை இந்தத் தொழில் அமைச்சு, குறிப்பாக  அமைச்சர் அணில் ஜயந்த பெர்னாண்டோ, பிரதி அமைச்சர் மஹிந்த ஜயசிங்க ஆகியோர் கவனத்தில் எடுப்பார்கள் என நான் நம்புகின்றேன்.” – என்று தெரிவித்தார்.

வெனிசுலா ஒருபோதும் சரணடையாது: இடைக்கால ஜனாதிபதி திட்டவட்டம்!

வெனிசுலா ஆட்சியில் வெளிநாடுகளின் ஆதிக்கம் ஏதுமில்லை என்று அந்நாட்டின் இடைக்கால ஜஜனாதிபதி டெல்சி ரோட்ரிக்ஸ் தெரிவித்துள்ளார்.

போதை பொருட்களை கடத்தி உள்நாட்டு பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தியதாக குற்றஞ்சாட்டி, வெனிசுலா ஜனாதிபதி மதுரோ மற்றும் அவரது மனைவியை சிறைபிடித்த அமெரிக்க படையினர், அவர்களை புரூக்ளின் சிறையில் அடைத்தனர்.

இதையடுத்து, வெனிசுலாவின் தற்போது இருக்கும் துணை ஜனாதிபதி டெல்சி ரோட்ரிக்ஸை இடைக்கால ஜனாதிபதியாக அந்நாட்டு உச்சநீதிமன்றம் நியமித்தது.

இதனிடையே, புதிய ஆட்சி அமையும் வரை, வெனிசுலா அரசு நிர்வாகத்தை அமெரிக்காவே நிர்வகிக்கும் என்று ; டிரம்ப் அறிவித்தார்.

மேலும், ‘நாங்கள் சொல்வதை கேட்காவிட்டால் மதுரோ எதிர்கொண்டதை விட கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்” என்று ரோட்ரிக்ஸை ஜனாதிபதி டிரம்ப் பகிரங்கமாக மிரட்டியிருந்தார்.

தொடர்ந்து, அமெரிக்காவுக்கு அதிக எண்ணெய் பீப்பாய்களை ஏற்றுமதி செய்யும் நாடாக வெனிசுலா மாறிவிட்டதாக டிரம்ப் கூறியிருந்தார்.

இந்த நிலையில், வெனிசுலா ஆட்சியில் வெளிநாட்டு சக்திகளின் ஆதிக்கம் ஏதுமில்லை என்று அந்நாட்டின் இடைக்கால ஜனாதபதி தெரிவித்துள்ளார்.

“ வெனிசுலா அரசை சொந்த மண்ணை சேர்ந்தவர்களே நடத்தி வருகின்றனர். வேறு யாரும் இல்லை. நாங்கள் சரணடையவில்லை. ஒருபோதும் சரணடைய மாட்டோம். அமெரிக்க தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்கு 7 நாட்கள் துக்கம் அனுசரிக்கப்படும்.” எனவும் அவர் குறிப்பிட்டார்.

 

 

அடுத்து என்ன? ரணில் தலைமையில் இன்று கூடுகிறது ஐ.தே.க.!

ஐக்கிய தேசியக் கட்சியின் மத்திய செயற்குழு கூட்டம் கட்சி தலைவர் ரணில் விக்கிரமசிங்க தலைமையில் இன்று (07) மாலை கட்சி தலைமையகமான சிறிகொத்தவில் நடைபெறவுள்ளது.

கட்சியின் புதிய பதவி நிலைக்காக தெரிவுசெய்யப்பட்டவர்களின் பெயர் விவரம் இதன்போது அறிவிக்கப்பட்டு, அங்கீகரிக்கப்படவுள்ளது.

புதிய சில நியமனங்களும் வழங்கிவைக்கப்படவுள்ளது.
ஐக்கிய மக்கள் சக்தி மற்றும் ஐக்கிய தேசியக் கட்சி என்பவற்றை ஒன்றிணைப்பதற்கு முன்னெடுக்கப்பட்டுவரும் நடவடிக்கை சம்பந்தமாகவும் இதன்போது கவனம் செலுத்தப்படவுள்ளது.

குறிப்பாக தமது அடுத்தக்கட்ட நகர்வுகள் தொடர்பில் ரணில் விக்கிரமசிங்க கட்சிக்கு தெரியப்படுத்துவார் என எதிர்பார்க்கப்படுகின்றது.

நம்பிக்கையில்லாப் பிரேரணை குறித்து ஆராய்வு: மனோ, திகா, ராதா பங்கேற்பு!

கல்வி அமைச்சராகவும் செயல்படும் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரியவுக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணையை முன்வைப்பது தொடர்பில் விசேட கலந்துரையாடலொன்று எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச தலைமையில் இன்று நடைபெற்றது.

நாடாளுமன்ற வளாகத்திலுள்ள எதிர்க்கட்சி தலைவர் அலுவலகத்தில் மேற்படி கலந்துரையாடல் இடம்பெற்றுள்ளது.

தற்போதைய அரசாங்கத்தின் கல்விச் சீர்திருத்தங்கள் மாணவர்களின் மனதிற்கு பொருத்தமற்ற பல விடயங்களையும், பாட அலகுத் தொகுதிகளில் பல்வேறு பிழைகளைக் கொண்டு காணப்படுவது மற்றும் இது தொடர்பாக சரியான நடவடிக்கை எடுக்காமை உள்ளிட்ட விடயங்களை அடிப்படையாகக் கொண்டே நம்பிக்கையில்லாப் பிரேரணை முன்வைக்கப்படவுள்ளது.

மேற்படி சந்திப்பில் எதிர்க்கட்சியைப் பிரதிநிதித்துவப்படுத்தி நாடாளுமன்ற உறுப்பினர்களான கயந்த கருணாதிலக, கலாநிதி ஹர்ஷ டி சில்வா, மனோ கணேசன், பழனி திகாம்பரம், ராதாகிருஷ்ணன் உட்பட பல நாடாளுமன்ற உறுபினர்கள் கலந்துகொண்டனர்.

அதேவேளை, குறித்த நம்பிக்கையில்லாப் பிரேரணையில் முதலாவது கையொப்பத்தை எதிர்க்கட்சி தலைவர் இட்டுள்ளார். அதன் பின்னர் ஏனைய நாடாளுமன்ற உறுப்பினர்கள் கைச்சாத்திட்டுள்ளனர்.

தமிழர்களுக்கு எதிராக பொலிஸ் அராஜகமா? அமைச்சர் மறுப்பு!

“ தையிட்டி திஸ்ஸ விகாரை சம்பந்தமாக நாம் மிகவும் நேர்மையாக செயல்பட்டு, பிரச்சினையை தீர்ப்பதற்கு முற்படுகின்றோம். எனினும், தமிழ் மக்களை குழப்புவதற்கு சில அரசியல்வாதிகள் முற்படுகின்றனர்.” – என்று அமைச்சர் சந்திரசேகரன் தெரிவித்தார்.

நாடாளுமன்றத்தில் நேற்று நடைபெற்ற விவாதத்தில் உரையாற்றிய அவர் மேலும் கூறியவை வருமாறு,

“ பேரிடர் நிலைமையை முகாமை செய்வதற்காகவே அவசர கால சட்டம் பயன்படுத்தப்படுகின்றது. இதன்மூலம் மக்கள் நலன்சார்ந்த நடவடிக்கைகள் மட்டுமே முன்னெடுக்கப்பட்டது. மாறாக மக்களுக்கு எதிரான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவில்லை.

கடந்த காலங்களிலேயே பயங்கரவாத தடைச்சட்டம் மற்றும் அவசரகார சட்டம் என்பன முறைகேடாக பயன்படுத்தப்பட்டன.

தமிழ் மக்கள்மீது பொலிஸ் அராஜகம் கட்டவிழ்த்துவிடப்பட்டது என சிறிதரன் எம்.பி. குற்றஞ்சாட்டினார். அவ்வாறு எவ்வித அராஜகமும் கிடையாது.

வடக்குக்கு சென்று மக்களிடம் கேட்டால், அராஜக நிலைமையை ஏற்படுத்துவது யாரென்பது தெரியவரும்.

தையிட்டி     திஸ்ஸ விகாரை சம்பந்தமாக நாம் மிகவும் நேர்மையாக செயல்பட்டு, பிரச்சினையை தீர்ப்பதற்கு முற்படுகின்றோம்.

வடக்கில் கடந்த காலங்களில் மோசடிகள் இடம்பெற்றன. அவை தொடர்பில் விசாரணைகள் ஆரம்பமாகியுள்ளன. இதனால் சில அரசியல் வாதிகளுக்கு அச்சம் ஏற்பட்டுள்ளது. தமிழ் மக்கள் மத்தியில் தமது இருப்பு இல்லாமல் ஆகிவிடும் என்ற அச்சத்தாலேயே தமிழர்களை குழப்புகின்றனர்.

சினிமா

பிரபல இந்திய பாடகி ஆஷா போஸ்லே காலமானார்!

0
  பிரபல இந்திய பின்னணி பாடகி ஆஷா போஸ்லே தமது 92ஆவது வயதில் இன்று(12) காலமானார். இந்திய திரையுலகில் 10,000-இற்கும் அதிக பாடல்களை பாடியுள்ள மூத்த பாடகி ஆஷா போஸ்லே நேற்று(11) மாரடைப்பு ஏற்பட்டதையடுத்து மும்பையிலுள்ள...

சின்னத்திரை நடிகை தற்#கொ#லை!

0
  இலங்கையை பூர்வீகமாகக்கொண்ட பிரபல சின்னத்திரை நடிகையான சுபாஷினி (வயது 36) தற்#கொ#லை செய்துகொண்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. "கயல்" சின்னத்திரை தொலைக்காட்சி தொடரில் நடித்து வருபவர் சுபாஷிணி (வயது36). இலங்கையை பூர்வீகமாகக்கொண்ட இவர் கடந்த...

“தனுஷின் நட்பை இழந்தது மிகப்பெரிய அவமானம்” – விக்னேஷ் சிவன் வருத்தம்

0
தனுஷ் உடனான நட்பை இழந்தது மிகப்பெரிய அவமானம் என்று விக்னேஷ் சிவன் பகிர்ந்துள்ளார். விக்னேஷ் சிவன் இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன் நடித்துள்ள ‘எல்.ஐ.கே’ திரைப்படம் ஏப்ரல் 10-ம் திகதி திரைக்கு வரவுள்ளது. நீண்ட பிரச்சினைகளுக்கு...

செய்தி

நுவரெலியாவில் அடை மழை: மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு!

0
நுவரெலியா மாவட்டத்தில் இன்று (ஏப்ரல் 20) பெய்த கனமழை மற்றும் பலத்த காற்று காரணமாக பல பிரதேசங்களில் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. கடும் காற்றின் காரணமாக மரங்கள் முறிந்து வீழ்ந்ததில், நோர்வூட் பகுதியில் போக்குவரத்து...

மாற்றம் வரும்: ஆட்சிக்கு வருவதற்கு பாரிய திட்டங்கள் உள்ளன

0
“மீண்டும் ஆட்சிக்கு வருவதற்குரிய  பாரிய திட்டங்களை ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன முன்னெடுத்துள்ளது” என்று அக்கட்சியின் தலைவரும் முன்னாள் ஜனாதிபதியுமான மஹிந்த ராஜபக்ச தெரிவித்தார். பத்தரமுல்லையில் உள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில் இன்று நடைபெற்ற புத்தாண்டு...

பொருளாதார ஆய்வறிக்கை ஜனாதிபதியிடம் கையளிப்பு!

0
இலங்கை மத்திய வங்கியின் மிக முக்கியமான வெளியீடுகளான 'வருடாந்த பொருளாதார ஆய்வு 2025' மற்றும் 'நிதி மற்றும் செயற்பாட்டு அறிக்கை 2025' ஆகிய இரு அறிக்கைகளும் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவிடம் இன்று திங்கட்கிழமை...