Home Blog Page 136

தமிழர்களுக்கு நீதியையும், அரசியல் தீர்வையும் வழங்குமாறு வலிறுத்து!

தமிழ் மக்களுக்கு நீதியையும், நிலையான அரசியல் தீர்வையும் வழங்குவதற்கு தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் முன்வரவேண்டும் என்று இலங்கை தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்றக்குழு தலைவர் எஸ்.சிறிதரன் வலியுறுத்தினார்.

நாடாளுமன்றத்தில் நேற்று நடைபெற்ற விவாதத்தில் உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு வலியுறுத்தினார்.

“ யாழ். தையிட்டி காணி உரிமையாளர்கள் அறவழியிலேயே போராடினார்கள். ஆனால் அவர்கள்மீது பொலிஸார் அராஜகத்தை கட்டவிழ்த்துவிட்டனர்.

வேலன் சுவாமிகள் மிக மோசமாகக் கைது செய்யப்பட்டார். பொலிஸார் அராஜகத்தில் ஈடுபட்டனர். பௌத்த துறவியொருவரை இவ்வாறு கைது செய்ய முடியுமா?” எனவும் ஸ்ரீதரன் எம்.பி. கேள்வி எழுப்பினார்.

நீங்கள் இந்து ஆலயங்கள், கத்தோலிக்க தேவாலயங்களை இடித்து அழிக்கின்றீர்கள், அப்படியானால் வலுக்கட்டாயமாக கட்டப்பட்ட புத்த விகாரையை இடிக்க முடியாதா?

வடக்கு, கிழக்கில் இராணுவம் இன்றளவிலும் குவிக்கப்பட்டுள்ளது. இதனை மாற்றுங்கள். தமிழர்களுக்கு நீதியையும், நியாயமான தீர்வையும் வழங்க முன்வாருங்கள்.” – என சிறிதரன் எம்.பி. மேலும் குறிப்பிட்டார்.

ஆலய வளாகத்தில் பாம்பு தீண்டி இளைஞன் உயிரிழப்பு!

ஆலய வளாகத்தில் பாம்பு தீண்டி இளைஞன் உயிரிழப்பு!

ஆலய வளாகத்தில் சிரமதானப் பணியில் ஈடுபட்டிருந்த இளைஞர் ஒருவர் பாம்பு தீண்டி உயிரிழந்தார்.

இந்தச் சம்பவம் நேற்று செவ்வாய்க்கிழமை கிளிநொச்சி – கல்மடு நகரில் இடம்பெற்றுள்ளது.

இதில், அதே இடத்தைச் சேர்ந்த சிறீகாந்தன் கிருசிகன் (வயது 23) என்பவரே உயிரிழந்தார்.

பாம்பு தீண்டிய இளைஞரை அங்கிருந்தவர்கள் உடனடியாக தருமபுரம் வைத்தியசாலையில் சேர்ப்பித்தனர். எனினும், அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டார் என்று வைத்தியர்கள் தெரிவித்தனர்.

இளைஞரின் சடலம் உடற்கூராய்வுக்காக கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பான விசாரணைகளை இராமநாதபுரம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

மரக்கறி விலைப்பட்டியல் (07.01.2026)

நுவரெலியா பொருளாதார மத்திய நிலையத்தால் இன்று (07) வெளியிடப்பட்டுள்ள மரக்கறி வகைகளின் (ஒரு கிலோ) விலை பட்டியல்…

ஒரு வார்த்தைக்காக பதவி விலக கோருவது நெறிமுறையற்றது- நளிந்த ஜயதிஸ்ஸ

ஒரு பாடத்தொகுதியில் உள்ள ஒரு வார்த்தையில் உள்ள குறைபாட்டிற்காக, கல்வி அமைச்சர் ஹரிணி அமரசூரியவை, பதவி விலக நிர்பந்திப்பது நெறிமுறையற்றது என்று, அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.

கொழும்பில் நடந்த வாராந்திர அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடக மாநாட்டில், எழுப்பப்பட்ட கேள்வி ஒன்றுக்குப் பதிலளிக்கும் போதே அவர் இதனைக் கூறினார்.

கல்வி சீர்திருத்தங்களில் குறைபாடுகள் இருந்தாலோ அல்லது முன்மொழியப்பட்ட சீர்திருத்தங்கள் நாட்டிற்கும் மாணவர்களுக்கும் எதிரானதாக இருந்தாலோ, சம்பந்தப் பட்ட அமைச்சர் பதவி விலக வேண்டும்.

பாடத் தொகுதியில் உள்ள ஒரு வார்த்தையின் அடிப்படையில், பதவி விலகுமாறு கோருவது நியாயமற்றது என்றும் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.

பிரதமருக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணை?

பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரியவுக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணையொன்றை முன்வைப்பதற்கு பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி திட்டமிட்டுள்ளது.

ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்றக்குழுக் கூட்டம் நேற்று முன்தினம் கட்சி தலைவர் சஜித் பிரேமதாச தலைமையில் நடைபெற்றது.

இதன்போதே மேற்படி முடிவு எடுக்கப்பட்டது என இணைய ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.

நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு நாடாளுமன்ற உறுப்பினர்களிடம் கையொப்பம் பெறும் நடவடிக்கை இன்று முதல் ஆரம்பமாகும் எனவும் கூறப்பட்டுள்ளது.

தரம் ஆறு மாணவர்களுக்கான ஆங்கிலப் பாடத்திட்டத்தில், வயது வந்தோருக்கான இணையத்தளம் ஒன்றின் முகவரி அச்சிடப்பட்டிருந்த விவகாரம் தொடர்பில் கல்வி அமைச்சு பதவியை வகிக்கும் பிரதமருக்கு எதிராக கடும் விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டுவருகின்றன.

பிரதமர் பதவி விலகவேண்டும் என பல கட்சிகளும் வலியுறுத்தியுள்ளன. எனினும், பிரதமர் பதவி விலகவேண்டியதில்லை, விசாரணை நடக்கின்றது என அரச தரப்பில் தெரியப்படுத்தப்பட்டுள்ளது.

இந்நிலையிலேயே பிரதமருக்கு எதிராக ஐக்கிய மக்கள் சக்தியும் அரசியல் போரை ஆரம்பித்துள்ளது.

அதேவேளை, நம்பிக்கையில்லாப் பிரேரணை கொண்டுவரப்பட்டாலும் அதனை நிறைவேற்றுவதற்குரிய பெரும்பான்மை எதிரணி வசம் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

ரணில் மீண்டும் நாடாளுமன்றம் வருவாரா? ரவி வெளியிட்டுள்ள தகவல்

“அரசியலில் இருந்து தான் ஒதுங்கிவிட்டதாக ரணில் விக்கிரமசிங்க எம்மிடம் தெரிவித்துள்ளார்.” – என்று முன்னாள் அமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்தார்.

ரணில் விக்கிரமசிங்க மீண்டும் நாடாளுமன்றம் வரவேண்டும் என எதிரணி உறுப்பினர்கள் சிலர் கோரிக்கை விடுத்துள்ளனர். எனவே, ரணில் நாடாளுமன்றம் வருவதற்காக தேசிய பட்டியல் எம்.பி. பதவியை துறப்பதற்கு நீங்கள் தயாரா என ரவி கருணாநாயக்கவிடம் வினவப்பட்டது.

இதற்கு பதிலளித்த அவர்,

“ ஜனாதிபதி பதவியை வகித்த ஒருவர் மீண்டும் நாடாளுமன்ற உறுப்பினராகக் கூடாது என்பதே ஐக்கிய தேசியக் கட்சியின் கொள்கையாகும்.” -என்றார்.

பங்களாதேஸில் ஐ.பி.எல். தொடரை ஒளிபரப்ப தடை!

இந்திய பிரிமியர் லீக் கிரிக்கெட் போட்டி தொடரில் இருந்து பங்களாதேஸ் வீரர் முஸ்தபிஜுர் ரஹ்மான் விடுவிக்கப்பட்டார். இதனால் பங்களாதேஸில் பிரிமியர் லீக் தொடரை ஒளிபரப்பு செய்ய அந்நாட்டு அரசு தடை விதித்துள்ளது.

இந்தியாவில், பிரிமியர் லீக் ‘டி-20’ தொடரின் 19வது தொடர் எதிர்வரும் மார்ச் 26 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளது.
இதில் 10 அணிகள் பங்கேற்கின்றன. இதற்கான வீரர்கள் ஏலம் சமீபத்தில் நடந்தது.

பங்களாதேஸ் வேகப்பந்து வீச்சாளர் முஸ்தபிஜுர் ரஹ்மானை, 9.20 கோடிக்கு கொல்கத்தா அணி வாங்கியது.

பங்களாதேஸில் இந்தியாவுக்கு எதிரான மனநிலை காணப்படுகிறது. இதனால், முஸ்தபிஜுரை வாங்கிய கொல்கத்தா அணிக்கு எதிர்ப்பு கிளம்பியது. ‘பி.சி.சி.ஐ., அறிவுறுத்தலின்படி முஸ்தபிஜுர் விடுவிக்கப்பட்டார்.

பிரிமியர் தொடர் வரலாற்றில் முதன் முறையாக, இதுபோன்ற சம்பவம் நடந்தது.

பங்களாதேஸ் வீரருக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டது, அந்நாட்டு மக்கள் மத்தியில் கடும் கோபத்தை ஏற்படுத்தியது.
பங்களாதேஸ் இடைக்கால அரசின் விளையாட்டுத்துறைக்கான இடைக்கால ஆலோசகர் ஆசிப் நஸ்ருல் கடும் கண்டனத்தை பதிவிட்டார்.

அவர் சமூக வலைதளத்தில் வெளியிட்ட பதிவில், ”எந்த சூழ்நிலையிலும் பங்களாதேஸ், கிரிக்கெட் வீரர்களும் அவமானம் அடைவதை ஏற்க மாட்டோம். அடிமைத்தனத்துக்கான காலம் முடிந்துவிட்டது” என கூறியிருந்தார்.

இந்நிலையில் பொதுமக்களின் உணர்வுகள் புண்படுத்தப்பட்டதைக் காரணம் காட்டி, மார்ச் 26ம் திகதி தொடங்கவிருக்கும் வரவிருக்கும் பிரிமியர் லீக் தொடரை ஒளிபரப்பு செய்ய பங்களாதேஸ் இடைக்கால அரசு தடை விதித்துள்ளது.

 

 

குடும்பத் தகராறு முற்றியதில் வீட்டிற்குத் தீ; தந்தை, தாய், மகள் பலி!

குடும்பத் தகராறு முற்றியதில் வீட்டிற்குத் தீ; தந்தை, தாய், மகள் பலி!

அநுராதபுரம், கலென்பிந்துனுவெவ, படிகாரமடுவ பகுதியில் இன்று (06) அதிகாலை இடம்பெற்ற மிகத் துயரமான சம்பவமொன்றில் தந்தை மற்றும் மகள் ஆகிய இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர்.

குடும்பத் தகராறு முற்றிய நிலையில், கணவனால் மேற்கொள்ளப்பட்ட இந்தத் தீ வைப்புச் சம்பவத்தில் 43 வயதுடைய சமன் அநுருத்த பிரதீப்பிரிய (தீ வைத்தவர்) மற்றும் அவரது 13 வயதுடைய மகள் டிமல்கா ஜயஷானி பிரதீப்பிரிய ஆகியோரே உயிரிழந்துள்ளனர்.

பொலிஸ் விசாரணைகளின்படி, உயிரிழந்த நபர் அடிக்கடி மது அருந்திவிட்டு தனது மனைவிக்குத் துன்புறுத்தல் கொடுத்து வந்துள்ளார். இது தொடர்பாக ஏற்கனவே பலமுறை பொலிஸில் முறைப்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

இந்தத் தகராறுகள் காரணமாக, குறித்த மனைவி தனது மூன்று பிள்ளைகளுடன் படிகாரமடுவ பகுதியில் உள்ள அவரது தாயாரின் வீட்டில் வசித்து வந்துள்ளார்.

இன்று (06) அதிகாலை 2.00 மணியளவில் குறித்த வீட்டிற்குள் நுழைந்த கணவர், அங்கிருந்தவர்கள் மீது பெற்றோல் ஊற்றித் தீ வைத்துள்ளார்.

தீ பரவிய வேளையில் வீட்டினுள் மனைவி, அவரது தாயார் மற்றும் இரு மகள்கள் இருந்துள்ளனர். அந்த நேரத்தில் வீட்டிற்கு வெளியே இருந்த 20 வயதுடைய மகன், தீப்பிழம்புகளுக்கு மத்தியில் தனது தாய் மற்றும் சகோதரிகளைக் காப்பாற்றப் போராடியபோது அவரும் தீக்காயங்களுக்கு உள்ளாகியுள்ளார்.

படுகாயமடைந்த நிலையில் அவரது மனைவி பிரபாஷா சந்தமாலி (36), மனைவியின் தாயார் கமலாவதி (66)(ஓய்வுபெற்ற ஆசிரியை), 15 வயதுடைய மூத்த மகள், 20 வயதுடைய மகன் ஆகியோர் அநுராதபுரம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

எனினும், மனைவி சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

இச்சம்பவம் குறித்த மேலதிக விசாரணைகளை கலென்பிந்துனுவெவ பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர். இது தொடர்பான நீதவான் விசாரணைகள் இன்று இடம்பெறவுள்ளன.

 

 

அமெரிக்கா சட்டவிரோத ஆக்கிரமிப்பு: வெனிசுலா இடைக்கால ஜனாதிபதி காட்டம்!

வெனிசுலாவின் இடைக்கால ஜனாதிபதியாக பொறுப்பேற்றுள்ள டெல்சி ரோட்ரிக்ஸ், அமெரிக்காவின் சட்ட விரோத ஆக்கிரமிப்பால் மக்கள் அடைந்துள்ள துன்பங்களுக்காக துக்கத்தில் இருப்பதாக தெரிவித்துள்ளார்.

வெனிசுலா ஜனாதிபதி நிக்கோலஸ் மதுரோ மற்றும் அவரது மனைவி சிலியா புளோரஸ் ஆகியோர் நியூயார்க் சிறையில் அடைக்கப்பட்டனர்.

இதனால் துணை ஜனாதிபதியாக இருந்த டெல்சி ரோட்ரிக்ஸ் இடைக்கால ஜனாதிபதியாக நியமனம் செய்யப்பட்டார்.
இதனையடுத்து கருத்து வெளியிட்ட அவர்,

“ நான் துக்கத்துடன் இருக்கிறேன். எங்கள் நாட்டின் மீதான சட்டவிரோத ராணுவ ஆக்கிரமிப்பைத் தொடர்ந்து வெனிசுலா மக்கள் அனுபவித்த துன்பங்களுக்கு நான் வருத்தம் அடை கிறேன். இரண்டு ஹீரோக்கள் கடத்தப்பட்டு இருக்கின்றனர்.” – என்றார்.

டெல்சி ரோட்ரிக்ஸ், 56, வெனிசுலாவின் துணை ஜனாதிபதியாக இருந்தவர்.

இவர் 1970களில் புரட்சிகர லிகா சோஷலிச கட்சியை நிறுவிய ஜார்ஜ் அன்டோனியோ ரோட்ரிக்சின் மகள்.

வெனிசுலா மக்களிடையே இவருக்கு என்று தனி செல்வாக்கு உள்ளது. ஜனாதபதி மதுரோவின் தீவிர விசுவாசி.

துணை ஜனாதிபதியாக டெல்சி ரோட்ரிக்ஸ் இடைக்கால அதிபராகப் பதவியேற்ற சில மணி நேரங்களுக்குப் பிறகு, வெனிசுலாவின் கராகஸில் துப்பாக்கிச்சூடு நடந்துள்ளது.

வெனிசுலாவில் ஜனாதிபதி மாளிகை மீது அடையாளம் தெரியாத ட்ரோன்கள் பறந்ததை அடுத்து பாதுகாப்புப் படையினர் துப்பாக்கிச் சூடு நடத்தியதாக தகவல் வெளியாகியுள்ளது.

 

கராகஸில் பலத்த துப்பாக்கிச் சத்தங்கள் கேட்டன. ட்ரோன் அல்லது விமான சத்தங்களும் இருக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. சில பகுதிகளில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது. தற்போது நிலைமை கட்டுக்குள் உள்ளது.துப்பாக்கிச் சூட்டில் அமெரிக்கா ஈடுபடவில்லை என்று வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது.

சினிமா

பிரபல இந்திய பாடகி ஆஷா போஸ்லே காலமானார்!

0
  பிரபல இந்திய பின்னணி பாடகி ஆஷா போஸ்லே தமது 92ஆவது வயதில் இன்று(12) காலமானார். இந்திய திரையுலகில் 10,000-இற்கும் அதிக பாடல்களை பாடியுள்ள மூத்த பாடகி ஆஷா போஸ்லே நேற்று(11) மாரடைப்பு ஏற்பட்டதையடுத்து மும்பையிலுள்ள...

சின்னத்திரை நடிகை தற்#கொ#லை!

0
  இலங்கையை பூர்வீகமாகக்கொண்ட பிரபல சின்னத்திரை நடிகையான சுபாஷினி (வயது 36) தற்#கொ#லை செய்துகொண்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. "கயல்" சின்னத்திரை தொலைக்காட்சி தொடரில் நடித்து வருபவர் சுபாஷிணி (வயது36). இலங்கையை பூர்வீகமாகக்கொண்ட இவர் கடந்த...

“தனுஷின் நட்பை இழந்தது மிகப்பெரிய அவமானம்” – விக்னேஷ் சிவன் வருத்தம்

0
தனுஷ் உடனான நட்பை இழந்தது மிகப்பெரிய அவமானம் என்று விக்னேஷ் சிவன் பகிர்ந்துள்ளார். விக்னேஷ் சிவன் இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன் நடித்துள்ள ‘எல்.ஐ.கே’ திரைப்படம் ஏப்ரல் 10-ம் திகதி திரைக்கு வரவுள்ளது. நீண்ட பிரச்சினைகளுக்கு...

செய்தி

நுவரெலியாவில் அடை மழை: மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு!

0
நுவரெலியா மாவட்டத்தில் இன்று (ஏப்ரல் 20) பெய்த கனமழை மற்றும் பலத்த காற்று காரணமாக பல பிரதேசங்களில் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. கடும் காற்றின் காரணமாக மரங்கள் முறிந்து வீழ்ந்ததில், நோர்வூட் பகுதியில் போக்குவரத்து...

மாற்றம் வரும்: ஆட்சிக்கு வருவதற்கு பாரிய திட்டங்கள் உள்ளன

0
“மீண்டும் ஆட்சிக்கு வருவதற்குரிய  பாரிய திட்டங்களை ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன முன்னெடுத்துள்ளது” என்று அக்கட்சியின் தலைவரும் முன்னாள் ஜனாதிபதியுமான மஹிந்த ராஜபக்ச தெரிவித்தார். பத்தரமுல்லையில் உள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில் இன்று நடைபெற்ற புத்தாண்டு...

பொருளாதார ஆய்வறிக்கை ஜனாதிபதியிடம் கையளிப்பு!

0
இலங்கை மத்திய வங்கியின் மிக முக்கியமான வெளியீடுகளான 'வருடாந்த பொருளாதார ஆய்வு 2025' மற்றும் 'நிதி மற்றும் செயற்பாட்டு அறிக்கை 2025' ஆகிய இரு அறிக்கைகளும் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவிடம் இன்று திங்கட்கிழமை...