Home Blog Page 137

அடுத்த 5 வருடங்களுக்குள் சுதந்திரக்கட்சி மீண்டெழும்!

ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சிக்கு மீண்டெழும் இயலுமை உள்ளது. எனவே, அடுத்த நான்கு ஐந்து வருடங்களுக்குள் கட்சி நிச்சயம் கட்டியெழுப்படும் என்று நாடாளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் தஸநாயக்க தெரிவித்தார்.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தேசிய அமைப்பாளராக தெரிவுசெய்யப்பட்ட அவர், கட்சி தலைமையகத்தில் தமது கடமைகளை நேற்று பொறுப்பேற்றார்.

அதன்பின்னர் நடைபெற்ற ஊடக சந்திப்பின்போதே அவர் இவ்வாறு கூறினார்.

இது தொடர்பில் சாமர சம்பத் தஸநாயக்க கூறியவை வருமாறு,

“ ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் தலைமையகம் பக்கம் பல வருடங்களாக வராதவர்கள்கூட இன்று வந்துள்ளனர். கட்சி மீண்டெழும் என அவர்கள் நம்ப ஆரம்பித்துள்ளனர். நிச்சயம் அது நடக்கும். அதற்காக நாம் அனைவரும் அர்ப்பணிப்புடன் செயல்பட வேண்டும்.

தேசிய அமைப்பாளர் பதவியை ஒரு வருடகாலமாக நிராகரித்து வந்தேன். கட்சியில் அங்கம் வகித்தால் செயல்பட வேண்டும். அதனால் பதவியை ஏற்றேன்.

நான் வலிந்துசென்று பதவியை கேட்கவில்லை. கடந்த ஒரு வருட காலத்தில் எனது திறமையை வெளிப்படுத்தினேன் பதவி கிடைத்தது.

அடுத்த 5 வருடங்களுக்குள் சுதந்திரக்கட்சி மீண்டெழும்!ஜே.வி.பிகூட விழுந்துதான் மீண்டெழுந்தது. 3 உறுப்பினர்கள் 159 ஆவதற்கு பல வருடங்கள் எடுத்தன. எனினும், சுதந்திரக்கட்சியும் நிச்சயம் மீண்டெழும்.” – என்றார் சாமர சம்பத் தஸநாயக்க.

ஐதேகவில் நவீனுக்கு முக்கிய பதவி!

ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தவிசாளராக, முன்னாள் அமைச்சர் நவீன் திஸாநாயக்க நியமிக்கப்பட்டுள்ளார்.

இதற்குரிய நியமனக் கடிதம் கட்சி தலைவர் ரணில் விக்கிரமசிங்கவால், நவீன் திஸாநாயக்கவுக்கு வழங்கப்பட்டது.

ஐக்கிய தேசியக் கட்சியின் தேசிய அமைப்பாளர் பதவியை வகித்த நவீன் திஸாநாயக்க, பின்னர் அப்பதவியை ராஜினாமா செய்தார்.

இந்நிலையிலேயே அவருக்கு கட்சியில் தற்போது புதிய பதவி வழங்கப்பட்டுள்ளது.
காமினி திஸாநாயக்கவின் மகனே நவீன் திஸநாயக்க என்பது குறிப்பிடத்தக்கது.

 

வெனிசுலா விவகாரம் குறித்து அமைதியான தீர்வை வலிறுத்துகிறது இலங்கை!

வெனிசுலா நிலைவரம் தொடர்பில் இலங்கை அரசு ஆழ்ந்த கவலையை வெளியிட்டுள்ளதுடன், நிலைமையை உன்னிப்பாகக் கண்காணித்து வருவதாகவும் தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக இலங்கை வெளிவிவகார அமைச்சு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

அந்த அறிக்கையில், பலத்தைப் பயன்படுத்துவதைத் தடை செய்தல், தலையிடாமை, அனைத்துலக மோதல்களை அமைதியான முறையில் தீர்த்து வைப்பது மற்றும் நாடுகளின் இறையாண்மை மற்றும் பிராந்திய ஒருமைப்பாடு போன்ற, அனைத்துலக சட்டத்தின் கொள்கைகளையும், ஐ.நா. சாசனத்தையும் மதிக்க வேண்டியதன் அவசியத்தை இலங்கை வலியுறுத்துகிறது என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

வெனிசுலா மக்களின் பாதுகாப்பு மற்றும் நல்வாழ்வு மற்றும் பிராந்தியத்தின் உறுதித்தன்மைக்கு இலங்கை மிகுந்த முக்கியத்துவம் அளிக்கிறது.

மேலும்,பதற்றத்தைக் குறைத்தல் மற்றும் பேச்சுக்கள் மூலம் அமைதியான தீர்வுக்கு முன்னுரிமை அளிக்க அனைத்து தரப்பினரையும் அழைக்கிறது.

இந்த முக்கியமான கட்டத்தில், ஐக்கிய நாடுகள் சபையும் ஐ.நா. பாதுகாப்பு சபை போன்ற அதன் அமைப்புகளும் இந்த விடயத்தை கையிலெடுத்து, வெனிசுலா மக்களின் பாதுகாப்பு, நல்வாழ்வு மற்றும் இறையாண்மை உரிமைகளைக் கருத்தில் கொண்டு அமைதியான தீர்வை நோக்கிச் செயற்படுவது முக்கியம்,” என்றும் மேற்படி அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வெனிசுலா இடைக்கால அரசுக்கும் ட்ரம்ப் எச்சரிக்கை!

வெனிசுலா மீது திடீர் தாக்குதல் நடத்திய அமெரிக்கா, அங்கு அமையப்பெற்றுள்ள இடைக்கால அரசுக்கும் எச்சரிக்கை விடுத்துள்ளது.

வெனிசுலா எண்ணெய் இருப்பை இனி அமெரிக்க நிறுவனங்களே நிர்வகிக்கும் என்றும், அமெரிக்காவுக்கு சாதகமான அரசு அமையும் வரை அங்கு அமெரிக்க ராணுவம் தங்கியிருக்கும் என்றும் டிரம்ப் அறிவித்திருந்தார்.

இதற்கிடையே வெனிசுலா உச்சநீதிமன்ற உத்தரவுப்படி, துணை ஜனாதிபதி டெல்சி ரோட்ரிக்ஸ் அந்நாட்டின் இடைக்கால ஜனாதிபதியாக பொறுப்பேற்றுள்ளார்.

இந்நிலையில் வாஷிங்டனில் நேற்று செய்தியாளர்களிடம் பேசிய டிரம்ப், வெனிசுலா அரசு அமெரிக்காவிற்கு ஒத்துழைக்கவில்லை என்றால் அந்த நாடு கடுமையான விளைவுகளைச் சந்திக்க நேரிடும்.

வெனிசுலாவில் எண்ணெய் தொழிலைத் தொடங்குவதற்கும், போதைப்பொருள் கடத்தலைத் தடுப்பதற்கும் அமெரிக்கா மேற்கொள்ளும் முயற்சிகளுக்கு அந்நாட்டு அரசு முட்டுக்கட்டை போட்டால், மீண்டும் ஒருமுறை ராணுவத் தாக்குதலுக்கு உத்தரவிடத் தயங்கமாட்டேன்.

சிறைபிடிக்கப்பட்டுள்ள நிக்கோலஸ் மதுரோ மீதான குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டுள்ளதால், அவருக்கு நிச்சயம் தண்டனை கிடைக்கும் ” என்றும் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

மேலும், அமெரிக்காவுக்கு எதிராக செயல்பட்டால் கொலம்பியா மற்றும் மெக்சிகோ நாடுகள் மீதும் ராணுவ நடவடிக்கை எடுக்கப்படலாம் என்றும் கியூபாவின் கம்யூனிச ஆட்சி தானாகவே வீழும் நிலையில் தான் உள்ளது என்றும் டிரம்ப் குறிப்பிட்டுள்ளார்.

இதற்கிடையே இந்த எச்சரிக்கைகளுக்குப் பதிலளித்துள்ள இடைக்கால ஜனாதிபதி டெல்சி ரோட்ரிக்ஸ், வெனிசுலா தனது இயற்கை வளங்களைப் பாதுகாக்கும் என்று கூறியுள்ளார்.

இருப்பினும், அமெரிக்காவுடன் இணைந்து வளர்ச்சித் திட்டங்களில் பணியாற்றத் தயாராக இருப்பதாகவும், இரு நாடுகளுக்கும் இடையே கண்ணியமான உறவை ஏற்படுத்த முன்னுரிமை அளிக்கப்படும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

‘ஜனநாயகன்’ ட்ரெய்லரை பின்னுக்குத் தள்ளிய ‘பராசக்தி’ ட்ரெய்லர் – யூடியூபில் புதிய சாதனை!

விஜய் நடித்த ‘ஜனநாயகன்’ ட்ரெய்லரை பின்னுக்குத் தள்ளி சிவகார்த்திகேயனின் ‘பராசக்தி’ ட்ரெய்லர் சாதனை படைத்துள்ளது.

சுதா கொங்கரா இயக்கத்தில் ரவி மோகன், அதர்வா, ஸ்ரீலீலா, பாசில் ஜோசப் உள்ளிட்ட பலர் சிவகார்த்திகேயன் உடன் நடித்துள்ள படம் ‘பராசக்தி’. டான் பிக்சர்ஸ் தயாரித்துள்ள இப்படத்துக்கு ஒளிப்பதிவாளராக ரவி கே.சந்திரன், இசையமைப்பாளராக ஜி.வி.பிரகாஷ் ஆகியோர் பணிபுரிந்துள்ளனர். தமிழகத்தில் இப்படத்தினை ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் வெளியிடவுள்ளது. வரும் ஜன.10 அன்று வெளியாகும் இப்படத்தின் ட்ரெய்லரை படக்குழு நேற்று வெளியிட்டது.

வெளியான 24 மணி நேரங்களில் ‘பராசக்தி’ ட்ரெய்லர் 40 மில்லியன் பார்வைகளை கடந்துள்ளது. இதன் மூலம் தமிழில் 24 மணி நேரத்தில் அதிக பார்வைகளை பெற்ற ட்ரெய்லர் என்ற சாதனையை ’பராசக்தி’ ட்ரெய்லர் படைத்துள்ளது. விறுவிறுப்பான ட்ரெய்லர் கட், இந்தி திணிப்புக்கு எதிரான வசனங்கள் என நேற்றிலிருந்து இந்த ட்ரெய்லர் வைரலாகி வருகிறது.

விஜய் நடித்துள்ள ‘ஜனநாயகன்’ படத்தின் ட்ரெய்லர் கடந்த சனிக்கிழமை அன்று வெளியானது. இதுவும் வெளியான சில மணி நேரங்களிலேயே சமூக வலைதளங்களில் பெரும் வரவேற்பை பெற்றது. விஜய்யின் கடைசிப் படம் என்பதால் இப்படத்துக்கு நிலவும் பெரும் எதிர்பார்ப்பு காரணமாக இந்த ட்ரெய்லர் வைரல் ஆனது. இந்த நிலையில் ‘ஜனநாயகன்’ ட்ரெய்லர் வெளியான 24 மணி நேரத்தில் 34 மில்லியன் பார்வைகள் பெற்றிருந்த நிலையில் தற்போது இதனை ‘பராசக்தி’ ட்ரெய்லர் முறியடித்துள்ளது.

மரக்கறி விலைப்பட்டியல் (06.01.2026)

நுவரெலியா பொருளாதார மத்திய நிலையத்தால் இன்று (06) வெளியிடப்பட்டுள்ள மரக்கறி வகைகளின் (ஒரு கிலோ) விலை பட்டியல்…

பிரதமர் பதவி விலக வேண்டியதில்லை: ஆளுங்கட்சி திட்டவட்டம்!

பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய பதவி விலகப்போவதில்லை. அதற்குரிய எந்தவொரு தேவையும் எழவில்லை என்று ஆளுங்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் தேவானந்த சுரவீர தெரிவித்தார்.

கல்வி கட்டமைப்பை சீர்குலைத்துள்ள பிரதமர் பதவி விலக வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பில் எழுப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கையிலேயே ஆளுங்கட்சி எம்.பியான தேவானந்த சுரவீர மேற்கண்டவாறு கூறினார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,

“நாட்டுக்கு, மாணவர் சமூகத்துக்கு தீங்கு விளைவிக்ககூடிய வகையில் எந்தவொரு கல்வி மறுசீரமைப்பும் இடம்பெறமாட்டாது. நாட்டு மக்கள் எமக்கு வழங்கிய ஆணை என்னவென்பது எமக்கு புரிகின்றது.

அதற்கமையவே எமது செயல்பாடு இடம்பெறும். மக்களுக்கு துளியளவும் துரோகம் இழைக்காத வகையில் அரசாங்கத்தின் பயணம் தொடரும்.

கல்வி மறுசீரமைப்பென்பது காலத்தின் கட்டாய தேவையாகும். எனவே, இது விடயத்தில் குறுகிய நோக்கில் அரசியல் நடத்துவதற்கு எவரும் முற்படக்கூடாது.

நாட்டுக்கு பொருத்தமான கல்வி முறைமையை உருவாக்குவதற்கு அனைத்து தரப்பினரும் ஒத்துழைப்பு நல்க வேண்டும்.

கல்வி மறுசீரமைப்பு விடயத்தில் பிரதமரை இலக்கு வைத்து போலி தகவல்களை பரப்புவதற்கு சிலர் முற்படுகின்றனர். ஆளுங்கட்சிக்குள் குழப்பத்தை ஏற்படுத்தவும் முற்படுகின்றனர். ஆனால் எதிரணியின் கனவு பழிக்காது.

பிரதமர் பதவி விலகவேண்டிய தேவை எழவில்லை. அவர் பதவி விலகவும் மாட்டார்.” – என்றார்.

வெனிசுலாவை ஆக்கிரமித்த ட்ரம்புக்கு எதிராக கொழும்பில் போராட்டம்!

வெனிசுலாமீதான அமெரிக்காவின் ஆக்கிரமிப்பைக் கண்டித்து கொழும்பில் நேற்று முன்னெடுக்கப்பட்ட போராட்டத்தின்போது இலங்கை அரசாங்கத்தின் அணுகுமுறை தொடர்பிலும் கடும் விமர்சனம் முன்வைக்கப்பட்டது.

வெனிசுலாமீதான தாக்குதலை வெளிப்படையாகக் கண்டிக்க முடியாத நிலையில் இடதுசாரி எனக் கூறிக்கொள்ளும் தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் உள்ளதென விமர்சனம் முன்வைக்கப்பட்டது.

முன்னிலை சோசலிசக் கட்சியினர் உள்ளடங்கலாக மக்கள் போராட்ட இயக்கத்தினரால் கொழும்பிலுள்ள அமெரிக்க தூதுரகத்துக்கு முன்னால் நேற்று மாலை இப்போராட்டத்தை ஏற்பாடு செய்திருந்தனர்.

அரசியல் பிரமுகர்கள், மனித உரிமை செயற்பாட்டாளர்கள் மற்றும் தொழிற்சங்க தலைவர்கள் இதில் பங்கேற்றிருந்தனர். அமெரிக்க தூதரகத்துக்கு பலத்த பொலிஸ் பாதுகாப்பும் வழங்கப்பட்டிருந்தது.

எண்ணெய் வளம்மீதான பேராசையாலேயே அமெரிக்கா இவ்வாறு செயல்படுகின்றது. ட்ரம்பின் அடாவடிக்கு உடன் முடிவு கட்ட வேண்டும் எனவும் கோசம் எழுப்பட்டது.

ஈராக், ஈரான், லிபியா, காசா என எல்லா இடங்களிலும் ஆக்கிரமிப்பு நடக்கின்றது. ஆனால் ஐநா சபை மௌனம் காக்கின்றது.

வெனிசுலாமீதான தாக்குதலை கண்டிக்க முடியாத நிலையில் இலங்கை அரசாங்கம் உள்ளது. அமெரிக்காவுடன் கைச்சாத்திடப்பட்ட பாதுகாப்பு ஒப்பந்தம் இதற்கு காரணமா? எனவும் முன்னிலை சோசலிசக் கட்சியின் சந்தேகம் வெளியிட்டனர்.

கியூபாவும் விரைவில் விழும் என்கிறார் ட்ரம்ப்!

வெனிசுலா ஜனாதிபதி நிகோலஸ் மதுரோ கைது செய்யப்பட்டுள்ள நிலையில், கியூபாவும் வீழ்ச்சி அடைய தயாராக இருப்பதாக அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய ட்ரம்ப்,

‘‘வெனிசுலா ஜனாதிபதி நிகோலஸ் மதுரோ அமெரிக்கப் படைகளால் கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து, கியூபா வீழ்ச்சியடைய தயாராக உள்ளது.

ஏனெனில், பாதுகாப்பு எண்ணெய்க்காக கியூபா இனி வெனிசுலாவை நம்பியிருக்க முடியாது. மதுரோ பதவி நீக்கப்பட்டிருப்பதாலும், நட்பு நாடுகளுக்கு நிதி உதவி வழங்கும் வெனிசுலாவின் திறன் சரிந்துள்ளதாலும் கியூபா கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

கியூபாவுக்கு எதிராக அமெரிக்கா நடவடிக்கை எதையும் எடுக்கத் தேவையில்லை. அது தானாகவே வீழ்ந்துவிடும் என்று நினைக்கிறேன். அது வீழ்ச்சி அடைந்து கொண்டிருப்பதுபோல் தெரிகிறது. அது முழுமையாக வீழ்ச்சி அடையும்’’ என தெரிவித்தார்.

நிகோலஸ் மதுரோ அதிகாரத்தில் தொடர்வதற்கும், அவரது பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்கும் கியூபா முக்கிய பங்கினை வகித்ததாக அமெரிக்க வெளியுறவு அமைச்சர் மார்கோ ரூபியோ தெரிவித்துள்ளார்.

‘‘மதுரோவை அதிகாரத்தில் வைத்திருக்க கியூப பாதுகாப்புப் படைகள் முக்கிய பங்கு வகித்தன. கியூப உளவாளிகள் இதற்கான பணிகளை திறம்பட நடத்தினர். மதுரோவுக்கு தனிப்பட்ட பாதுகாப்பை வழங்கியதும், அரசாங்கத்துக்குள் இருப்பவர்களின் விசுவாசத்தை கண்காணித்ததும் கியூபர்கள்தான்.

மதுரோவுக்கு வெனிசுலா மெய்க்காப்பாளர்கள் பாதுகாப்பை அளிக்கவில்லை. கியூப மெய்க்காப்பாளர்கள்தான் இருந்தனர்’’ என மார்கோ ரூபியோ தெரிவித்தார்.

வெனிசுலாவில் நடந்த அமெரிக்க நடவடிக்கையின்போது 32 கியூப ராணுவ மற்றும் காவல் துறை அதிகாரிகள் கொல்லப்பட்டதை கியூப அரசாங்கம் ஒப்புக்கொண்டுள்ளது.

வெனிசுலாவின் கோரிக்கையின் பேரிலேயே இந்த அதிகாரிகள் பணியமர்த்தப்பட்டதாக கியூப அரசு ஊடகங்கள் தெரிவித்தன. மேலும், இரண்டு நாட்கள் தேசிய துக்க தினமும் அறிவிக்கப்பட்டுள்ளது.

வெனிசுலாவில் கியூபர்கள் கொல்லப்பட்டதை டொனால்டு ட்ரம்ப்பும் உறுதிப்படுத்தினார். அதேநேரத்தில், அமெரிக்க தரப்பில் எந்த உயிரிழப்பும் இல்லை என்றும் அவர் கூறினார்.

கொலம்பியாவும் மிகவும் மோசமான நிலையில் இருப்பதாகத் தெரிவித்த ட்ரம்ப், கொகைன் போதைப் பொருளைத் தயாரித்து அமெரிக்காவுக்கு விற்க விரும்பும் ஒரு மோசமான மனிதரால் அந்த நாடு ஆளப்படுவதாக விமர்சித்தார்.

அதோடு, இனி நீண்ட காலத்துக்கு அந்த நாடு இதைச் செய்ய முடியாது என்றும் ட்ரம்ப் கூறினார். போதைப் பொருள் கடத்தல் வலையமைப்புகளுக்கு எதிராக அமெரிக்கா கடுமையான நடவடிக்கைகளை எடுக்கத் தயாராக இருப்பதாகவும் ட்ரம்ப் தெரிவித்தார்.

சுதந்திரக்கட்சிக்கு இனி  எல்லாமே நல்லம்!

“ ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியை மீள ஒன்றிணைக்க முடியாது என்றார்கள், அதனை நாம் இன்று செய்து காட்டியுள்ளோம். பல வருடங்களாக கட்சி பக்கம் வராதவர்கள்கூட இன்று அழைப்பையேற்று வந்தார்கள்.

எனவே, அடுத்த நான்கு, ஐந்து வருடங்களுக்குள் சுதந்திரக்கட்சி மீள கட்யெழுப்படும். அதற்காக அனைவரும் அர்ப்பணிப்புடன் செயல்படுவோம்.”

இவ்வாறு ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் புதிய தேசிய அமைப்பாளர் சாமர சம்பத் தஸநாயக்க எம்.பி. தெரிவித்தார்.

மருதானை டார்லி வீதியிலுள்ள சுதந்திரக்கட்சியின் தலைமையகத்தில் இன்று கடமையேற்ற பின்னர் ஊடகங்களிடம் கருத்து வெளியிடுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.

சினிமா

பிரபல இந்திய பாடகி ஆஷா போஸ்லே காலமானார்!

0
  பிரபல இந்திய பின்னணி பாடகி ஆஷா போஸ்லே தமது 92ஆவது வயதில் இன்று(12) காலமானார். இந்திய திரையுலகில் 10,000-இற்கும் அதிக பாடல்களை பாடியுள்ள மூத்த பாடகி ஆஷா போஸ்லே நேற்று(11) மாரடைப்பு ஏற்பட்டதையடுத்து மும்பையிலுள்ள...

சின்னத்திரை நடிகை தற்#கொ#லை!

0
  இலங்கையை பூர்வீகமாகக்கொண்ட பிரபல சின்னத்திரை நடிகையான சுபாஷினி (வயது 36) தற்#கொ#லை செய்துகொண்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. "கயல்" சின்னத்திரை தொலைக்காட்சி தொடரில் நடித்து வருபவர் சுபாஷிணி (வயது36). இலங்கையை பூர்வீகமாகக்கொண்ட இவர் கடந்த...

“தனுஷின் நட்பை இழந்தது மிகப்பெரிய அவமானம்” – விக்னேஷ் சிவன் வருத்தம்

0
தனுஷ் உடனான நட்பை இழந்தது மிகப்பெரிய அவமானம் என்று விக்னேஷ் சிவன் பகிர்ந்துள்ளார். விக்னேஷ் சிவன் இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன் நடித்துள்ள ‘எல்.ஐ.கே’ திரைப்படம் ஏப்ரல் 10-ம் திகதி திரைக்கு வரவுள்ளது. நீண்ட பிரச்சினைகளுக்கு...

செய்தி

நுவரெலியாவில் அடை மழை: மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு!

0
நுவரெலியா மாவட்டத்தில் இன்று (ஏப்ரல் 20) பெய்த கனமழை மற்றும் பலத்த காற்று காரணமாக பல பிரதேசங்களில் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. கடும் காற்றின் காரணமாக மரங்கள் முறிந்து வீழ்ந்ததில், நோர்வூட் பகுதியில் போக்குவரத்து...

மாற்றம் வரும்: ஆட்சிக்கு வருவதற்கு பாரிய திட்டங்கள் உள்ளன

0
“மீண்டும் ஆட்சிக்கு வருவதற்குரிய  பாரிய திட்டங்களை ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன முன்னெடுத்துள்ளது” என்று அக்கட்சியின் தலைவரும் முன்னாள் ஜனாதிபதியுமான மஹிந்த ராஜபக்ச தெரிவித்தார். பத்தரமுல்லையில் உள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில் இன்று நடைபெற்ற புத்தாண்டு...

பொருளாதார ஆய்வறிக்கை ஜனாதிபதியிடம் கையளிப்பு!

0
இலங்கை மத்திய வங்கியின் மிக முக்கியமான வெளியீடுகளான 'வருடாந்த பொருளாதார ஆய்வு 2025' மற்றும் 'நிதி மற்றும் செயற்பாட்டு அறிக்கை 2025' ஆகிய இரு அறிக்கைகளும் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவிடம் இன்று திங்கட்கிழமை...