Home Blog Page 138

ஜொன்ஸ்டன் பெர்னாண்டோ, அவரது இளைய மகனுக்கு விளக்கமறியல்!

முன்னாள் அமைச்சர் ஜொன்ஸ்டன் பெர்ணான்டோ மற்றும் அவரது இளைய மகன் ஆகியோர் எதிர்வரும் 9 ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

பொலிஸ் நிதி குற்ற விசாரணைப் பிரிவினரால் இன்று கைது செய்யப்பட்ட இருவரும், வத்தளை நீதவான் நீதிமன்றத்தில் முற்படுத்தப்பட்டபோதே விளக்கமறியல் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

சதொசவுக்குரிய லொறியொன்றை முறைகேடாக பயன்படுத்தி அரசாங்கத்துக்கு நிதி இழப்பை ஏற்படுத்தினர் என்ற குற்றச்சாட்டின் அடிப்படையிலேயே இவர்கள் கைது செய்யப்பட்டிருந்தனர்.

அத்துடன், இவ்விவகாரம் தொடர்பில் ஜொன்ஸ்டன் பெர்னாண்டோவின் மூத்த மகன் ஏற்கனவே கைது செய்யப்பட்டு, விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

பாதீட்டில் ஒதுக்கப்பட்ட நிதியை முறையாக பயன்படுத்துமாறு ஜனாதிபதி பணிப்பு!

2026 வரவுசெலவுத் திட்டத்தில் ஒதுக்கப்பட்ட நிதியை உகந்த முறையில் பயன்படுத்துமாறு அமைச்சுகளின் செயலாளர்களுக்கு ஜனாதிபதி அறிவுறுத்தல்

‘செலவிடக் கூடிய நிதி ஒதுக்கீடுகள் வரையறைக்குட்பட்டதாக இருந்தாலும், முறையாக முகாமைத்துவம் செய்து நாட்டின் அபிவிருத்தி நோக்கங்களை அடைய வேண்டும்’ – ஜனாதிபதி

தற்போதுள்ள நிதி வரையறைகளுக்குள், தேசிய முன்னுரிமைகளை அடையாளம் கண்டு, 2026 ஆம் ஆண்டிற்கான நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்றும், மக்களின் நலனுக்காக அதிகபட்ச செயல்திறனுடன் அந்த நிதி ஒதுக்கீடுகளைப் பயன்படுத்துவது, அனைத்து அமைச்சுகளின் செயலாளர்கள் மற்றும் அரச அதிகாரிகளின் பொறுப்பாகும் என்றும் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்தார்.

மூலதனச் செலவாக எவ்வளவு நிதி ஒதுக்கப்பட்டாலும், உகந்த முறையில் அவற்றை செலவழித்து தேவையான நிதி மற்றும் பௌதீக முன்னேற்றத்தை அடைய கடந்தகால அரச பொறிமுறை தவறியதால், இந்நாட்டு மக்கள் பல அபிவிருத்தி வாய்ப்புகளை இழந்துள்ளனர் என்று ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.

மேலும், சில சந்தர்ப்பங்களில், வரவு செலவுத் திட்டத்தைத் தயாரிக்கும் போது ‘செலவு செய்யப்படாத நிதி’ என்று கணிக்கப்படும் சூழ்நிலை நாட்டில் இருந்ததாக சுட்டிக்காட்டிய ஜனாதிபதி, இன்று எந்தவித தாமதமும் இன்றி தேவையான நிதியை உரிய முறையில் பெற்றுக் கொள்வதற்கு அவசியமான பின்னணி உருவாக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டார்.

அமைச்சுகளின் செயலாளர்களுடன் ஜனாதிபதி அலுவலகத்தில்இன்று (05) முற்பகல் நடைபெற்ற கலந்துரையாடலின் போதே ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க இதனைத் தெரிவித்தார்.

இங்கு உரையாற்றிய ஜனாதிபதி, சர்வதேச நாணய நிதியத்துடன் ஏற்படுத்திக்கொள்ளப்பட்ட நீடிக்கப்பட்ட கடன் வசதியின் (ECF) வரையறைகளின்படி, தேசிய உற்பத்தியில் 13% மாத்திரமே செலவிட முடியும் என்று சுட்டிக்காட்டினார்.

அதில் குறைந்தபட்சம் 4% மூலதனச் செலவாக ஒதுக்கப்பட வேண்டும் என்றும் அதன்படி, ‘நாட்டின் அத்தியாவசியத் தேவைகளுக்கு முன்னுரிமை அளித்தல்’ என்ற அடிப்படையில் அமைச்சுகளுக்கு நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.

நாட்டின் பிரதான முதலீட்டாளர் அரசாங்கம் என்ற வகையில், மூலதனச் செலவினங்களுக்காக இந்த ஆண்டு வரவு செலவுத்திட்டத்தில் 1400 பில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளதாகவும், அதற்கு மேலதிகமாக, டித்வா சூறாவளியால் ஏற்பட்ட சேதங்களை சீர்செய்வதற்காக கூடுதலாக 500 பில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் சுட்டிக்காட்டினார்.

ஒதுக்கப்பட்ட நிதியை முறையாக நிர்வகிப்பதன் மூலம் எதிர்பார்க்கும் பௌதீக முன்னேற்றத்தை அடைவதே அமைச்சுகளின் செயலாளர்களுக்கு உள்ள முதன்மைப் பொறுப்பு என்றும், முன்மொழியப்பட்ட திட்டங்களைச் செயல்படுத்தத் தவறினால் மக்களுக்குக் கிடைக்க வேண்டிய நன்மைகள் அதன் ஊடாக இழக்கப்படும் என்றும் ஜனாதிபதி வலியுறுத்தினார்.

2026 ஆம் ஆண்டில் அமைச்சு மட்டத்தில் செயல்படுத்த திட்டமிடப்பட்டுள்ள வேலைத்திட்டங்கள் மற்றும் ஒதுக்கப்பட்டுள்ள நிதிகளை பயன்படுத்தல் குறித்தும் இதன்போது தனித்தனியாக விடயங்கள் முன்வைக்கப்பட்டன.

ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்க, மற்றும் அனைத்து அமைச்சுகளின் செயலாளர்கள் உட்பட நிதி அமைச்சின் சிரேஷ்ட அதிகாரிகள் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.

முன்னாள் அமைச்சர் ஜொன்ஸ்டன் பெர்னாண்டோ கைது!

முன்னாள் அமைச்சர் ஜொன்ஸ்டன் பெர்னாண்டோ , பொலிஸ் நிதி குற்ற விசாரணைப் பிரிவினரால் இன்று கைது செய்யப்பட்டுள்ளார்.

அரச வளங்களை முறைகேடாக பயன்படுத்தினார் என்ற குற்றச்சாட்டின் அடிப்படையிலேயே அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இவ்விவகாரம் தொடர்பில் வாக்குமூலம் வழங்குவதற்காக நிதி குற்ற விசாரணைப் பிரிவில் ஜொன்ஸ்டன் பெர்ணான்டோ இன்று முன்னிலையானார்.

அவரிடம் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்ட பின்னரே கைது இடம்பெற்றுள்ளது. அவரை நீதிமன்றத்தில் முற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுவருகின்றது.

சதொசவுக்கு லொறி உள்ளிட்ட வாகனங்களை முறைகேடாக பயன்படுத்தினார் என்ற குற்றச்சாட்டின் அடிப்படையில் ஜொன்ஸ்டர் பெர்னாண்டோவின் மகன் ஜொஹான் பெர்னாண்டோ வும் கைது செய்யப்பட்டுள்ளார்.

எப்.சி.ஐ.டியினரால் கடந்த 30 ஆம் திகதி கைது செய்யப்பட்ட அவர், ஜனவரி 9 ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

ட்ரம்பின் நடவடிக்கைக்கு எதிராக போராடுவோம்: வாசு!

“வெனிசுலாமீது தாக்குதல் நடத்தி அந்நாட்டு ஜனாதிபதியை கடத்தி சென்றுள்ள ட்ரம்பின் நடவடிக்கையை நாம் வன்மையாகக் கண்டிக்கின்றோம். தேசப்பற்றுள்ள வெனிசுவா மக்கள் அந்நாட்டு ஜனாதிபதிக்காக வீதியில் இறங்குவார்கள்.” – என்று ஜனநாயக இடதுசாரி முன்னணியின் தலைவர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்தார்.

வெனிசுலாவிலுள்ள எண்ணெய் வளத்துக்கு ஆசைப்பட்டே ட்ரம்ப் கல் யுகத்தில் செயல்படுவதுபோல் செயற்பட்டுள்ளார்.

ட்ரம்பின் நடவடிக்கைக்கு எதிராக நாம் போராட்டம் நடத்துவோம் . இடதுசாரி சக்திகளுடன் இணைந்து இதற்குரிய நடவடிக்கை முன்னெடுக்கப்படும்.” எனவும் வாசுதேவ நாணயக்கார குறிப்பிட்டார்.

அதேவேளை, வெனிசுலாவில் அமெரிக்காவின் இராணுவத் தலையீட்டை கண்டித்து, கொழும்பிலுள்ள அமெரிக்க தூதரகத்துக்கு முன்பாக இன்று மாலை 4 மணிக்கு, முன்னிலை சோசலிசக் கட்சி ஆர்ப்பாட்டமொன்றை ஏற்பாடு செய்துள்ளது.

வெனிசுலா ஜனாதிபதி கைது: ஐநா சபை இன்று கூடுகிறது

வெனிசுலா ஜனாதிபதி நிக்கோலஸ் மதுரோவை அமெரிக்கா கைது செய்துள்ள நிலையில், ஐநா பாதுகாப்பு கவுன்சிலின் அவசர கூட்டம் இன்று நடக்கிறது.

போதைப்பொருள் கடத்தல், போதை பயங்கரவாதம் உள்ளிட்ட செயல்களில் ஈடுபட்டதாக, வெனிசுலா ஜனாதிபதி நிக்கோலஸ் மதுரோவை அமெரிக்கப்படை அதிரடியாக கைது செய்தது.

மதுரோவும், அவருடைய மனைவியும் அமெரிக்க சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இந்த கைது சம்பவத்திற்கு ரஷ்யா,சீனா, ஈரான், கியூபா உள்ளிட்ட உலக நாடுகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன.

அதேபோல, ஐநா பொதுச்செயலாளர் அண்டானியோ குட்டரெஸூம் தனது கவலையை வெளிப்படுத்தியிருந்தார்.

அவரது தரப்பில் வெளியிடப்பட்ட அறிக்கையில், ‘ இந்த நிகழ்வுகள் ஒரு ஆபத்தான முன்னுதாரணத்தை ஏற்படுத்தியுள்ளன. ஐநா விதிமுறைகள் மற்றும் சர்வதேச சட்டங்களுக்கு முழுமையான மரியாதை அளிக்கப்பட வேண்டியது அவசியம்,’ எனக் குறிப்பிடப்பட்டிருந்தது.

இந்நிலையில், வெனிசுலா மீது அமெரிக்கா தாக்குதல் நடத்திய சம்பவம் தொடர்பாக ஆலோசனை நடத்த, 15 உறுப்பினர்களைக் கொண்ட ஐநா பாதுகாப்பு கவுன்சிலின் அவசரக் கூட்டம் இன்று நடக்கிறது.

கொலம்பியா விடுத்த வேண்டுகோளுக்கு சீனா, ரஷ்யா போன்ற நாடுகள் ஆதரவு அளித்ததன் பேரில், இந்தக் கூட்டத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இந்தக் கூட்டத்தில் அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து ஆலோசனை நடத்தப்படுகிறது.அமெரிக்கா – வெனிசுலா இடையே பதற்றமான சூழல் நிலவி வந்த போது, கடந்த அக்டோபர் மற்றும் டிசம்பர் மாதங்களில் ஐநா பாதுகாப்பு கவுன்சில் கூட்டம் இருமுறை நடந்தது குறிப்பிடத்தக்கது.

சுதந்திரக் கட்சியின் தேசிய அமைப்பாளராக சாமர சம்பத் கடமையேற்பு!

ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் புதிய தேசிய அமைப்பாளராக பதுளை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் தசநாயக்க நியமிக்கப்பட்டுள்ளார்.

கட்சியின் பொதுச்செயலாளர் நிமால் ஸ்ரீபாலடி சில்வா அவர்களிடம் நியமணக் கடிதத்தினை பெற்றுக்கொண்ட பின்னர் அவர் இன்று (05) தேசிய அமைப்பாளராக உத்தியோகபூர்வமாக பதவிப்பிரமாணம் செய்து கொண்டார்.

கொழும்பில் அமைந்துள்ள ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் தலைமைக் காரியாலயத்தில் ஒன்றுகூடிய கட்சியின் உயர்பீட உறுப்பினர்கள், கட்சியின் எதிர்கால அரசியல் நலனை கருத்தில் கொண்டும் மற்றும் எதிர்வரும் மாகாண சபைத் தேர்தலை கவனத்திற்கொண்டே இந்த தீர்மானத்தை மேற்கொண்டதாக தெரிவித்தனர்.

இந்த நியமனம் மூலம் கட்சியின் அமைப்பு பலப்படுத்தப்படும் என்றும், மாகாண மட்டத்திலும் தேசிய மட்டத்திலும் கட்சியின் செயற்பாடுகள் மேலும் வலுப்பெறும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

இதில் பல கட்சிகளின் உயர்பீட உறுப்பினர்களும் , முன்னால் நாடாளுமன்ற உறுப்பினர்களும் கலந்துக் கொண்டிருந்தார்கள் .

இந்நிகழ்வில், பல கட்சிகளின் முக்கியஸ்த்தர்கள், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்கள் என பலர் கலந்துக்கொண்டனர்.

பிரதமர் பதவி விலக வேண்டும்: நாமல் வலியுறுத்து!

பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசுரிய பதவி விலகவேண்டும் என்று நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச வலியுறுத்தியுள்ளார்.

கல்விக்கு ஏற்பட்டுள்ள சீரழிவு தொடர்பிலேயே அவர் இவ்வாறு பதவி விலகவேண்டும் என நாமல் ராஜபக்ச குறிப்பிட்டார்.

அதேவேளை, புலி டயஸ்போராக்களின் தேவைக்காகவே டக்ளஸ் தேவானந்தா மற்றும் பிள்ளையான் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர் எனவும் நாமல் கூறினார்.

அஞ்சி அடிபணியமாட்டேன்: சவாலை சட்ட ரீதியாக எதிர்கொள்வேன்!

“நான் எதற்கும் அஞ்சமாட்டேன். எனக்கு எதிராக அரசியல் பழிவாங்கலே இடம்பெறுகின்றது. பிரச்சினையை சட்டரீதியாக எதிர்கொள்வேன். நீதி கிடைக்குமென நம்புகின்றேன்.”

இவ்வாறு மொட்டு கட்சி முக்கியஸ்தரான முன்னாள் அமைச்சர் ஜொன்ஸ்டன் பெர்ணான்டோ தெரிவித்தார்.

இதற்கு முன்னர் எனக்கு அறிவித்தல் எதுவும் வழங்கவில்லை. நான் ஒளியவும் இல்லை. நேற்று அறிவித்தல் வந்தது, இன்று வாக்குமூலம் வழங்க வந்தேன் எனவும் அவர் கூறினார்.

எப்.சி.ஐ.டியில் வாக்குமூலம் வழங்குவதற்காக இன்று வந்தவேளை ஊடகங்களிடம் கருத்து வெளியிடுகையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

எப்.சி.ஐ.டி. விசாரணைக்கு முகங்கொடுக்க முடியாமல், ஜொன்ஸ்டன் பெர்ணான்டோ தலைமறைவாகியுள்ளார் என விமர்சனங்கள் எழுந்திருந்தன.

சுதொசவில் இடம்பெற்றதாகக் கூறப்படும் மோசடி தொடர்பில் ஜொன்ஸ்டன் பெர்னாண்டோவின் மகன் ஏற்கனவே கைது செய்யப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

வெனிசுலாவை ஆளும் உரிமை அமெரிக்காவுக்கு கிடையாது!

“ வெனிசுலாமீதான அமெரிக்காவின் தாக்குதலை வன்மையாகக் கண்டிக்கின்றோம். வெனிசுலாவை யார் ஆள வேண்டும் என்பதை அந்நாட்டு மக்களே தீர்மானிக்க வேண்டும். மாறாக அமெரிக்கா அல்ல.” என்று ராஜித சேனாரத்ன தெரிவித்தார்.

அமெரிக்காவின் நடவடிக்கை முற்றிலும் தவறு. மற்மொரு நாட்டை ஆக்கிரமிக்கும் உரிமை கிடையாது. ட்ரம்பின் நடவடிக்கை முழு உலகுக்கும் அச்சுறுத்தல் எனவும் ராஜித குறிப்பிட்டார்.

சினிமா

பிரபல இந்திய பாடகி ஆஷா போஸ்லே காலமானார்!

0
  பிரபல இந்திய பின்னணி பாடகி ஆஷா போஸ்லே தமது 92ஆவது வயதில் இன்று(12) காலமானார். இந்திய திரையுலகில் 10,000-இற்கும் அதிக பாடல்களை பாடியுள்ள மூத்த பாடகி ஆஷா போஸ்லே நேற்று(11) மாரடைப்பு ஏற்பட்டதையடுத்து மும்பையிலுள்ள...

சின்னத்திரை நடிகை தற்#கொ#லை!

0
  இலங்கையை பூர்வீகமாகக்கொண்ட பிரபல சின்னத்திரை நடிகையான சுபாஷினி (வயது 36) தற்#கொ#லை செய்துகொண்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. "கயல்" சின்னத்திரை தொலைக்காட்சி தொடரில் நடித்து வருபவர் சுபாஷிணி (வயது36). இலங்கையை பூர்வீகமாகக்கொண்ட இவர் கடந்த...

“தனுஷின் நட்பை இழந்தது மிகப்பெரிய அவமானம்” – விக்னேஷ் சிவன் வருத்தம்

0
தனுஷ் உடனான நட்பை இழந்தது மிகப்பெரிய அவமானம் என்று விக்னேஷ் சிவன் பகிர்ந்துள்ளார். விக்னேஷ் சிவன் இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன் நடித்துள்ள ‘எல்.ஐ.கே’ திரைப்படம் ஏப்ரல் 10-ம் திகதி திரைக்கு வரவுள்ளது. நீண்ட பிரச்சினைகளுக்கு...

செய்தி

நுவரெலியாவில் அடை மழை: மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு!

0
நுவரெலியா மாவட்டத்தில் இன்று (ஏப்ரல் 20) பெய்த கனமழை மற்றும் பலத்த காற்று காரணமாக பல பிரதேசங்களில் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. கடும் காற்றின் காரணமாக மரங்கள் முறிந்து வீழ்ந்ததில், நோர்வூட் பகுதியில் போக்குவரத்து...

மாற்றம் வரும்: ஆட்சிக்கு வருவதற்கு பாரிய திட்டங்கள் உள்ளன

0
“மீண்டும் ஆட்சிக்கு வருவதற்குரிய  பாரிய திட்டங்களை ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன முன்னெடுத்துள்ளது” என்று அக்கட்சியின் தலைவரும் முன்னாள் ஜனாதிபதியுமான மஹிந்த ராஜபக்ச தெரிவித்தார். பத்தரமுல்லையில் உள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில் இன்று நடைபெற்ற புத்தாண்டு...

பொருளாதார ஆய்வறிக்கை ஜனாதிபதியிடம் கையளிப்பு!

0
இலங்கை மத்திய வங்கியின் மிக முக்கியமான வெளியீடுகளான 'வருடாந்த பொருளாதார ஆய்வு 2025' மற்றும் 'நிதி மற்றும் செயற்பாட்டு அறிக்கை 2025' ஆகிய இரு அறிக்கைகளும் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவிடம் இன்று திங்கட்கிழமை...