Home Blog Page 139

மரக்கறி விலைப்பட்டியல் (05.01.2026)

நுவரெலியா பொருளாதார மத்திய நிலையத்தால் இன்று (05) வெளியிடப்பட்டுள்ள மரக்கறி வகைகளின் (ஒரு கிலோ) விலை பட்டியல்…

தமிழினம் விடுதலை பெற ஒன்றாகப் பயணிப்போம்!

தமிழினம் விடுதலை பெற அனைத்து தரப்பினரும் ஒன்றாகப் பயணிக்க வேண்டும் என்று இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவர் சி.வி.கே.சிவஞானம் வலியுறுத்தினார்.

யாழ்ப்பாணத்தில் தனது இல்லத்தில் ஊடகவியலாளர்களைச் சந்தித்த போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

“பிறந்துள்ள புத்தாண்டில் என்னுடைய பிரார்த்தனை என்னவெனில் தமிழினம் ஓர் இனமாக – விடுதலையை நோக்கி முழுமையாக – ஒன்றாகப் பயணிக்க வேண்டும்.

அதன் மூலம் எங்களுடைய இனம் விடுதலை பெற வேண்டும். சுயமாக சுயாட்சி பெற வேண்டும். தன்னாட்சி பெற வேண்டும். தமிழாட்சி பெற வேண்டும்.” – எனவும் அவர் குறிப்பிட்டார்.

சவாலை கண்டு ஓடும் தலைவர் அல்லர் ரணில்!ஐதேக உறுப்பினர் பெருமிதம்

நாடு விழும்பட்சத்தில் சவாலை ஏற்று அதனை நிர்வகிகக்கூடிய தலைவர் ரணில் விக்கிரமசிங்க மட்டுமே. எனவே, நாட்டுக்கு ஆபத்தெனில் அவர் பொறுப்பைவிட்டு ஓடும் நபர் கிடையாது என்று முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சமன் ரத்னபிரிய தெரிவித்தார்.

புத்தாண்டை முன்னிட்டு முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை சந்தித்து, எதிரணி அரசியல் பிரமுகர்கள் வாழ்த்துகூறி ஆசிபெற்றனர். அதன்பின்னர் ஊடகங்களிடம் கருத்து வெளியிட்ட சமன் ரத்ன பிரிய கூறியவை வருமாறு,

“ தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்திடம் முறையான முகாமைத்துவம்  இல்லை  எனவும், இவ்வாறு முன்னோக்கி செல்ல முடியாது எனவும் தலைவர் சுட்டிக்காட்டினார்.

நாடாளுமன்றத்துக்கு வரும் எண்ணம் ரணில் விக்கிரமசிங்கவுக்கு இல்லை. அவர் நாடாளுமன்றம் வரவேண்டும் என நாம் தான் வலியுறுத்திவருகின்றோம்.

நாடு விழும் பட்சத்தில், நாட்டை நிர்வகிக்ககூடிய ஒரே தலைவராக ரணில் விக்கிரமசிங்கவே இருக்கின்றார். எனவே, நாட்டுக்கு நெருக்கடி வந்தால் பொறுப்பை கைவிட்டு செல்லும் தலைவர் அல்லர் ரணில் விக்கிரமசிங்க.

அடுத்த தேர்தலில் ஐக்கிய மக்கள் சக்தியும், ஐக்கிய தேசியக் கட்சியும் ஒன்றிணைந்தே போட்டியிடக்கூடும்.” – என்றார்.

வெனிசுலாவின் இறைமை பாதுகாக்கப்பட வேண்டும்: போப் லியோ வலியுறுத்து

வெனிசுலா நாட்டின் இறையாண்மை, சுதந்திரம் பாதுகாக்கப்பட வேண்டும் என்று போப் லியோ வலிறுத்தியுள்ளார்.

வெனிசுலா ஜனாதிபதி நிக்கோலஸ் மதுரோ மற்றும் அவரது மனைவியை அமெரிக்க படைகள் கைது செய்துள்ளது சர்வதேச அளவில் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்நிலையில், ரோம் நகரின் செயின்ட் பீட்டர் சதுக்கத்தில் திரண்டிருந்த மக்களிடையே போப் லியோ உரையாற்றினார்.

“ இந்த இக்கட்டான சூழ்நிலையில் வெனிசுலாவில் அமைதி திரும்பவும், அந்நாட்டின் தன்னாட்சி அதிகாரம் பாதுகாக்கப்பட வேண்டும்.” என்று போப் லியோ வலியுறுத்தினார்.

“ புவிசார் அரசியல் நிலைகளைவிட வெனிசுலா மக்களின் நலன் அனைத்தையும் விட மேலானதாக இருக்க வேண்டும்.
வன்முறையை கைவிட்டு விட்டு நாடு அமைதி மற்றும் நீதியில் பயணிக்க வேண்டும்.” எனவும் அவர் கூறினார்.

இந்த நெருக்கடியால் வெனிசுலாவில் ஏற்பட்டுள்ள மனிதாபிமான மற்றும் சட்ட ரீதியான பாதிப்புகள் போப் லியோ கவலை தெரிவித்தார்.

 

இந்திய இராணுவ தளபதி இன்று இலங்கை விஜயம்!

இந்திய இராணுவத் தளபதி ஜெனரல் உபேந்திர திவேதி மூன்று நாட்கள் பயணமாக இன்று (05) இலங்கை வருகின்றார்.

ஐக்கிய அரபு எமிரேட்சுக்கான பயணத்தை நேற்று ஆரம்பித்த அவர், இன்று கொழும்பு வருவார் என இந்திய இராணுவத் தலைமையகம் அறிவித்துள்ளது.

அவர், இலங்கை  இராணுவத்தால் மரியாதை அணிவகுப்புடன் வரவேற்கப்படுவார்.

இந்தப் பயணத்தின் போது, இலங்கை  இராணுவத் தளபதி, பாதுகாப்பு பிரதி அமைச்சர் மற்றும் பாதுகாப்புச் செயலாளர் போன்ற மூத்த இராணுவ பிரமுகர்கள் மற்றும் சிவில் தலைவர்களுடன் இந்திய இராணுவத் தளபதி முக்கியமான சந்திப்புகளை மேற்கொள்ளவுள்ளார்.

இலங்கையில்  நடைபெறும் கலந்துரையாடல்கள் பயிற்சி ஒத்துழைப்பு, திறன் மேம்பாடு மற்றும் பிராந்திய பாதுகாப்பு ஆகியவற்றை மையப்படுத்தியதாக இருக்கும்.

இந்தியப் பெருங்கடல் பிராந்தியத்திற்குள் உறுதித்தன்மையைப் பேணுவதில் பகிரப்பட்ட முன்னுரிமைகளை வலியுறுத்தும்.

தனது செயல்பாடுகளின் ஒரு பகுதியாக, ஜெனரல் திவேதி புத்தலவில் உள்ள பாதுகாப்பு சேவைகள் கட்டளை மற்றும் பணியாளர் கல்லூரியில்  உரை நிகழ்த்துவார்.

இந்த பயணத்தின் ஒரு கட்டமாக, ஜெனரல் திவேதி இலங்கையில் உயிரிழந்த இந்தியப்படையினரின்  நினைவுச்சின்னத்தில் அஞ்சலி செலுத்துவார்.

மேற்கு ஆசியா மற்றும் இந்தியப் பெருங்கடல் பிராந்தியத்தில் உள்ள நட்பு நாடுகளுடன் பாதுகாப்பு ஒத்துழைப்பை வலுப்படுத்துதல், பரஸ்பர நம்பிக்கையை மேம்படுத்துதல் மற்றும் இயங்குதன்மையை மேம்படுத்துதல் ஆகியவற்றில் இந்தியாவின் உறுதிப்பாட்டை மீண்டும் உறுதிப்படுத்தும் விதமாக இந்தப் பயணம் அமைந்துள்ளது என்றும் இந்தியா தெரிவித்துள்ளது.

‘மாயபிம்பம்’ திரைப்படம் ஜனவரி 23 ரிலீஸ்

செல்ஃப் ஸ்டார்ட் புரொடக்சன்ஸ் சார்பில், கே.ஜே சுரேந்தர் தயாரித்து, இயக்கியிருக்கும் படம் ‘மாயபிம்பம்’.‌ புதுமுகங்கள் ஜானகி, ஆகாஷ் பிரபு, ஹரி கிருஷ்ணன், ராஜேஷ், அருண் குமார் ஆகியோர் நடித்திருக்கிறார்கள்.

நடிகர், நடிகைகள் மட்டுமில்லாமல் இசையமைப்பாளர் நந்தா, படத்தொகுப்பாளர் வினோத், ஒளிப்பதிவாளர் எட்வின் என தொழில்நுட்ப கலைஞர்களும் முழுக்க முழுக்க புதுமுகங்கள் இப்படத்தில் பணிபுரிந்துள்ளனர்.

படத்தின் பாடல்களை பாடலாசிரியர்கள் விவேகா மற்றும் பத்மாவதி ஆகியோர் எழுதியுள்ளனர். இப்படத்தின் “எனக்குள்ளே” பாடலை இசையமைப்பாளர் ஜி.வி. பிரகாஷ் குமார் மற்றும் நடிகை வாணி போஜன் வெளியிட்டனர். இந்த படத்தின் போஸ்டரை இயக்குநர் சுந்தர்.சி வெளியிட்டார். இப்படம் வரும் ஜனவரி 23 அன்று திரையரங்குகளில் வெளியாகிறது.

மரக்கறி விலைப்பட்டியல் (04.01.2026)

நுவரெலியா பொருளாதார மத்திய நிலையத்தால் இன்று (04) வெளியிடப்பட்டுள்ள மரக்கறி வகைகளின் (ஒரு கிலோ) விலை பட்டியல்…

இது சுதந்திரத்துக்கான நேரம்: வெனிசுலா எதிர்க்கட்சி தலைவர் அறிவிப்பு!

வெனிசுலாமீதான அமெரிக்காவின் அடாவடி நடவடிக்கையால் சர்வதேச அரசியலில் பதற்றம் ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில், வெனிசுலா எதிர்க்கட்சித் தலைவர் மரியா கொரினா மச்சாடோ வெளியிட்டுள்ள அறிக்கையில், இது சுதந்திரத்திற்கான நேரம் எனக் கூறப்பட்டுள்ளது.

ஜனாதிபதிநிக்கோலஸ் மதுரோ, வெனிசுலா மக்களுக்கு எதிராக இழைக்கப்பட்ட கொடூரமான குற்றங்களுக்கு சர்வதேச நீதியை எதிர்கொள்வார்.

பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண அவர் மறுத்ததால் அமெரிக்கா அரசு சட்டத்தை அமுல்படுத்துவதற்கான தனது வாக்குறுதியை நிறைவேற்றி உள்ளது.

நமது நாட்டில் இறையாண்மை கொண்ட அரசு ஆட்சி செய்ய வேண்டிய நேரம் வந்துவிட்டது.நாங்கள் ஒழுங்கைக் கொண்டுவரப் போகிறோம்.

அரசியல் கைதிகளை விடுவிப்போம். ஒரு விதிவிலக்கான நாட்டைக் கட்டியெழுப்புவோம், எங்கள் குழந்தைகளை மீண்டும் வீட்டிற்கு அழைத்து வருவோம். நாங்கள் பல ஆண்டுகளாகப் போராடி வருகிறோம், எங்களால் முடிந்த அனைத்தையும் செய்து இருக்கிறோம்.

நாம் அனைவரும் விழிப்புடனும் இருப்போம். வெனிசுலா சுதந்திரமாகிவிடும்.” – எனவும் வெனிசுலா எதிர்க்கட்சி தலைவர் அறிவித்துள்ளார்.

வெனிசுலாவை அமெரிக்காவே ஆளும்!

வெனிசுலாவில் புதிய அரசு அமையும் வரை அமெரிக்காவே அந்த நாட்டை நிர்வகிக்கும் என்று ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார்.

போதைப்பொருள் பயங்கரவாதத்தை எதிர்ப்பதாகக் கூறி, வெனிசுலா மீது அமெரிக்கா தாக்குதல் நடத்தியது.

மேலும், வெனிசுலா ஜனாதிபதி நிக்கோலஸ் மதுரோ மற்றும் அவரது மனைவியை சிறைப்பிடித்து, அவர்களை அமெரிக்கப் படைகள் நாடு கடத்தியது.

மதுரோவை சிறைபிடிக்கும் காட்சியை ஜனாதிபதி டிரம்ப் நேரலையில் பார்த்ததாக அவர் கூறினார்.

இந்த நிலையில், வெனிசுலா மீதான தாக்குதல் குறித்து அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் விளக்கம் அளித்துள்ளார்.

“ வெனிசுலாவில் புதிய அரசு அமையும் வரை வெனிசுலா அரசு நிர்வாகத்தை அமெரிக்காவே கவனிக்கும்.
வெனிசுலாவில் எண்ணெய் வர்த்தகம் சீரழிந்து விட்டது என்பது அனைவருக்கும் தெரியும்.

அமெரிக்க எண்ணெய் நிறுவனங்களுக்கு வெனிசுலாவில் கதவுகள் திறக்கப்படுகின்றன. அங்கு எண்ணெய் உற்பத்தி கட்டமைப்பை மேம்படுத்துவோம். இதன்மூலம், வருமானத்தை பெருக்கி, நாட்டை வளமாக்குவோம்.” எனவும் ட்ரம்ப் குறிப்பிட்டுள்ளார்.

நிக்கோலஸ் மதுரோ குற்றம் செய்ததற்கான ஆதாரங்கள் அமெரிக்க நீதிமன்றத்தில் உள்ளன. அமெரிக்க ராணுவத்தின் முதல் ஆப்பரேஷன் வெற்றியடைந்து விட்டது.

தேவைப்பட்டால், மற்றொரு மிகப்பெரிய தாக்குதலையும் நடத்துவோம். இரண்டாம் உலகப்போருக்குப் பிறகு மக்கள் பார்த்திடாத தாக்குதலை இன்று பார்த்துள்ளனர். சர்வாதிகாரி மதுரோவை நீதிக்குட்படுத்துவதே இதன் நோக்கம் என ட்ரம்ப் மேலும் கூறினார்.

உகண்டாவில் பதுக்கப்பட்டதாகக் கூறப்படும் டொலர்களை கொண்டு வாருங்கள்: நாமல் மீண்டும் வலியுறுத்து!

ராஜபக்சக்களின் பணம் உகண்டாவில் பதுக்கப்பட்டுள்ளதாக குற்றச்சாட்டு உள்ள நிலையில், அவற்றை நாட்டுக்கு கொண்டுவருமாறு மீண்டும் வலியுறுத்தியுள்ளார் நாமல் ராஜபகச்.

“ அரசாங்கத்துடன் எமக்கு டீல் கிடையாது. ஆனால் தேசிய மக்கள் சக்தியினர் அன்று கூறிய விடயங்கள், பொய்யென தற்போது நிரூபனமாகிவருகின்றது. எனவே, இனியாவது பொய் சொல்லுவதை நிறுத்துங்கள்.

நாமல் ராஜபக்சவின் 18 டொலர் பில்லியன் வெளிநாட்டில் இருப்பதாகக் கூறினர். அதனை நாட்டுக்கு எடுத்துவரவும். வாகனங்கள் பதுக்கப்பட்டிருந்தால் அவற்றையும் கொண்டுவாருங்கள்.

நாட்டுக்கு தற்போது டொலர் தேவை, எனவே, உகண்டாவில் உள்ளது எனக் கூறப்படும் எனது 18 பில்லியன் டொலர்களை உடன் கொண்டுவரவும்” – எனவும் நாமல் ராஜபக்ச குறிப்பிட்டார்.

 

சினிமா

பிரபல இந்திய பாடகி ஆஷா போஸ்லே காலமானார்!

0
  பிரபல இந்திய பின்னணி பாடகி ஆஷா போஸ்லே தமது 92ஆவது வயதில் இன்று(12) காலமானார். இந்திய திரையுலகில் 10,000-இற்கும் அதிக பாடல்களை பாடியுள்ள மூத்த பாடகி ஆஷா போஸ்லே நேற்று(11) மாரடைப்பு ஏற்பட்டதையடுத்து மும்பையிலுள்ள...

சின்னத்திரை நடிகை தற்#கொ#லை!

0
  இலங்கையை பூர்வீகமாகக்கொண்ட பிரபல சின்னத்திரை நடிகையான சுபாஷினி (வயது 36) தற்#கொ#லை செய்துகொண்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. "கயல்" சின்னத்திரை தொலைக்காட்சி தொடரில் நடித்து வருபவர் சுபாஷிணி (வயது36). இலங்கையை பூர்வீகமாகக்கொண்ட இவர் கடந்த...

“தனுஷின் நட்பை இழந்தது மிகப்பெரிய அவமானம்” – விக்னேஷ் சிவன் வருத்தம்

0
தனுஷ் உடனான நட்பை இழந்தது மிகப்பெரிய அவமானம் என்று விக்னேஷ் சிவன் பகிர்ந்துள்ளார். விக்னேஷ் சிவன் இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன் நடித்துள்ள ‘எல்.ஐ.கே’ திரைப்படம் ஏப்ரல் 10-ம் திகதி திரைக்கு வரவுள்ளது. நீண்ட பிரச்சினைகளுக்கு...

செய்தி

நுவரெலியாவில் அடை மழை: மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு!

0
நுவரெலியா மாவட்டத்தில் இன்று (ஏப்ரல் 20) பெய்த கனமழை மற்றும் பலத்த காற்று காரணமாக பல பிரதேசங்களில் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. கடும் காற்றின் காரணமாக மரங்கள் முறிந்து வீழ்ந்ததில், நோர்வூட் பகுதியில் போக்குவரத்து...

மாற்றம் வரும்: ஆட்சிக்கு வருவதற்கு பாரிய திட்டங்கள் உள்ளன

0
“மீண்டும் ஆட்சிக்கு வருவதற்குரிய  பாரிய திட்டங்களை ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன முன்னெடுத்துள்ளது” என்று அக்கட்சியின் தலைவரும் முன்னாள் ஜனாதிபதியுமான மஹிந்த ராஜபக்ச தெரிவித்தார். பத்தரமுல்லையில் உள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில் இன்று நடைபெற்ற புத்தாண்டு...

பொருளாதார ஆய்வறிக்கை ஜனாதிபதியிடம் கையளிப்பு!

0
இலங்கை மத்திய வங்கியின் மிக முக்கியமான வெளியீடுகளான 'வருடாந்த பொருளாதார ஆய்வு 2025' மற்றும் 'நிதி மற்றும் செயற்பாட்டு அறிக்கை 2025' ஆகிய இரு அறிக்கைகளும் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவிடம் இன்று திங்கட்கிழமை...