Home Blog Page 140

வெனிசுலாமீதான தாக்குதலுக்கு ஈரான், ரஷ்யா கண்டனம்!

வெனிசுலா மீது அமெரிக்கா நடத்திய தாக்குதலுக்கு ரஷ்யா மற்றும் ஈரான் உள்ளிட்ட நாடுகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன.

போதைப்பொருள் பயங்கரவாதத்தை வெனிசுலா அரசு ஊக்குவிக்கிறது என்று அமெரிக்கா நீண்ட நாட்களாக குற்றம் சாட்டி வருகிறது.

அதற்கு காரணமான, ஜனாதிபதி மதுரோ உள்ளிட்டோர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் ஜனாதிபதி டிரம்ப் கூறி வந்தார்.

இந்நிலையில், இன்று அதிகாலை வெனிசுலா தலைநகர் கராகஸ், மிரண்டா, அராகுவா உள்ளிட்ட பகுதிகளில் அமெரிக்க படைகள் வான்வழித் தாக்குதல் நடத்தின.

ஜனாதிபதி நிகோலஸ் மதுரோ மற்றும் அவரது மனைவியை சிறைப்பிடித்த தங்கள் படையினர், அவரை நாட்டை விட்டு வெளியேற்றியதாகவும், தங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருப்பதாகவும் அமெரிக்கா அறிவித்துள்ளது.

மதுரோ வெளியேற்றப்பட்ட நிலையிலும், வெனிசுலா மீதான தாக்குதலை அமெரிக்க ராணுவம் நிறுத்தவில்லை.

ராணுவ நிலைகள் மீது தொடர்ந்து அமெரிக்க விமானப்படை குண்டு வீசி வருகிறது, இதை எதிர்கொள்ளும் வகையில், வெனிசுலா அரசு அவசர நிலையை பிரகடனம் செய்துள்ளது. இதனிடையே, வெனிசுலா மீது அமெரிக்கா நடத்திய தாக்குதலுக்கு ரஷ்யா மற்றும் ஈரான் உள்ளிட்ட உலக நாடுகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன.

இது குறித்து ரஷ்யா கூறியதாவது; கடந்த சில தினங்களாக வெனிசுலாவுக்கு எதிராக எடுக்கப்பட்ட நடவடிக்கைகளைப் போலவே, இன்று அமெரிக்கா நடத்திய தாக்குதலுக்கு எந்தவொரு உறுதியான காரணமும் இல்லை.

இது சர்வதேச சட்டத்தை மீறும் செயல். அமெரிக்காவுக்கு வெனிசுலா எந்தவொரு அச்சுறுத்தலையும் ஏற்படுத்தவில்லை. இந்த தாக்குதல் மேலும் விரிவடையக் கூடாது, எனக் கூறியுள்ளது.

ஈரான் வெளியுறவுத்துறை அமைச்சகம் தரப்பில் கூறியதாவது; வெனிசுலா மீது அமெரிக்கா நடத்திய தாக்குதல், ஐநா அடிப்படைக் கோட்பாடுகளையும், சர்வதேச சட்டத்தின் அடிப்படை விதிகளையும் மீறும் செயலாகும். வெனிசுலா நாட்டின் இறையாண்மை மற்றும் பிராந்திய ஒருமைப்பாட்டை மீறும் இந்த செயலை வன்மையாகக் கண்டிக்கிறோம். சர்வதேச பாதுகாப்பை வலியுறுத்தும் அனைத்து நாடுகளும் அமெரிக்காவின் தாக்குதலுக்கு கண்டனத்தை தெரிவிக்க வேண்டும், இவ்வாறு கூறப்பட்டுள்ளது.

இதேபோல, கியூபா, ஸ்பெயின் உள்ளிட்ட நாடுகளும் அமெரிக்காவின் தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்துள்ளன.

தயார் நிலையில் கொலம்பியா

வெனிசுலா எல்லையில், தங்கள் நாட்டு ராணுவம் நிறுத்தப்படும் என்று அண்டை நாடான கொலம்பியா அறிவித்துள்ளது.
அமெரிக்காவின் தாக்குதலை தொடர்ந்து வெனிசுலா மக்கள், தங்கள் நாட்டுக்கு அகதிகளாக வர வாய்ப்புள்ளதாக கருதும் கொலம்பியா, அதற்கான முன்னேற்பாடுகளை செய்து வருகிறது. இந்த இரு நாடுகளும், 2 ஆயிரம் கிலோமீட்டர் நீள எல்லையை பகிர்ந்து கொள்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

மதுரோவிடம் விசாரணை

அமெரிக்க படைகளால் கைது செய்யப்பட்டுள்ள வெனிசுலா ஜனாதிபதி மதுரோ, 2020ம் ஆண்டில் நியூயார்க்கில் பதியப்பட்ட போதைப்பொருள் பயங்கரவாதம் தொடர்பான வழக்கில் குற்றவாளியாக விசாரிக்கப்படுவார் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.

அதிகாரத்தில் யார்?

ஜனாதிபதி நாட்டை விட்டு வெளியேற்றப்பட்ட நிலையில், வெனிசுலா யார் கட்டுப்பாட்டில் இருக்கிறது, ராணுவத்தினருக்கு உத்தரவு பிறப்பிப்பது யார் என்பது பற்றி குழப்பமான சூழல் நிலவுகிறது.

அரசமைப்பு பேரவையிருந்து சிறீதரனை விலகப் பணிப்பு

அரசமைப்பு கவுன்ஸில் உறுப்பினர் பதவியில் இருந்து விலகும்படி இலங்கைத் தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்றக் குழுத் தலைவர் சிவஞானம் சிறீதரனுக்குப் பணிபுரை விடுப்பது எனக் கட்சியின் அரசியல் குழு இன்று கூடி முடிவெடுத்திருக்கின்றது.

கட்சியின் தலைவர் சி.வி.கே.சிவஞானம் தலைமையில் இன்று பிற்பகலில் வவுனியாவில் கூடிய அரசியல் குழு இந்த முடிவை எடுத்திருக்கின்றது.

தமிழரசுக் கட்சியின் அரசியல் குழு இன்று இந்த முடிவை எடுத்த போது அந்தக் கூட்டத்தில் கட்சியின் நிர்வாகச் செயலாளர் குலநாயகம் மற்றும் நாடாளுமன்றக் குழுத் தலைவர் சிறீதரன் எம்.பி. ஆகியோர் பங்குபற்றவில்லை.

சி.வி.கே.சிவஞானம், கட்சியின் பொதுச்செயலாளர் எம்.ஏ.சுமந்திரன், நாடாளுமன்ற உறுப்பினர் சத்தியலிங்கம், நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியன், நாடாளுமன்ற உறுப்பினர் குகதாசன் மற்றும் கலையரசன், துரைராஜசிங்கம் ஆகியோர் கூட்டத்தில் கலந்துகொண்டனர்.

மட்டக்களப்பில் அண்மையில் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் வாலிபர் முன்னணி நடத்திய மாமனிதர் ஜோசப் பரராஜசிங்கத்தின் நினைவேந்தல் நிகழ்வின் போது முன்னர் கட்சியை விட்டு வெளியேற்றப்பட்ட அரியநேத்திரனை ஈகைச்சுடர் ஏற்ற அழைத்த செயல் தொடர்பில் கட்சியின் அரசியல் குழு இன்று விரிவாக ஆராய்ந்தது. அந்த விடயத்தில் அரியநேத்திரனை அந்த நிகழ்ச்சிக்குள் புகுத்தியமை முழுத் தவறு என்பதை மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிறீநேசனுக்கு எடுத்துரைக்கவும் இன்றைய கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது.

வெனிசுலா ஜனாதிபதியை சிறைபிடித்தது அமெரிக்க படை!

வெனிசுலா ஜனாதிபதி மதுரோ  மற்றும் அவரது மனைவி ஆகியோர் அமெரிக்க படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்த தகவலை அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் உறுதப்படுத்தியுள்ளார்.

“ வெனிசுலா நாட்டிற்கும் அதன் ஜனாதிபதி மதுரோவிற்கும் எதிராக அமெரிக்கா பெரிய அளவிலான தாக்குதலை வெற்றிகரமாக நடத்தியது.

வெனிசுலா ஜனாதிபதி மதுரோவும் அவரது மனைவியும் அமெரிக்க இராணுவத்தினரால் கைது செய்யப்பட்டு நாட்டை விட்டு வெளியேற்றப்பட்டனர். இந்த நடவடிக்கை அமெரிக்க சட்ட அமு லாக்கத்துடன் இணைந்து செய்யப்பட்டது.” – எனவும் ட்ரம்ப் குறிப்பிட்டுள்ளார்.

அதேவேளை, வெனிசுலா தலைநகரில் சில இடங்களில் அமெரிக்க படையினர் இன்று காலை தாக்குதல் நடத்தியுள்ளனர்.

வெனிசுலாமீது அமெரிக்கா தாக்குதல்!

வெனிசுலா தலைநகர் கராகஸ்சில் அமெரிக்க விமானப்படை விமானங்களும், ஹெலிகாப்டர்களும் குண்டு வீசி தாக்குதல் நடத்தி வருகின்றன.

அமெரிக்காவுக்கும், வெனிசுலாவுக்கும் இடையே நீண்ட கால பகை இருந்து வருகிறது. அந்நாடு மீது அமெரிக்கா கடுமையான பொருளாதார தடைகளை விதித்துள்ளது. வெனிசுலா ஆட்சியாளர்கள் மீது, டிரம்ப் கடும் குற்றச்சாட்டுகளை கூறி வருகிறார்.

இந்நிலையில், சில மாதம் முன், போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கை என்ற பெயரில் பசிபிக் மற்றும் கரீபியன் கடல் பகுதிகளில், கப்பல்கள் மீது அமெரிக்க ராணுவம் தாக்குதல் நடத்தி வருகிறது.

அதன் ஒரு பகுதியாக, வெனிசுலா கப்பல்களும் தாக்குதலுக்கு ஆளாகின. வெனிசுலா போதை கடத்தல் மையமாக இருப்பதாக டிரம்ப் கூறிய குற்றச்சாட்டை அந்த நாடு திட்டவட்டமாக மறுத்தது.

இந்த சூழலில் இன்று திடீரென வெனிசுலா தலைநகர் கராகஸ்சில் அமெரிக்க விமானப்படை விமானங்கள், ஹெலிகாப்டர்கள், டிரோன்கள் குண்டு வீசி தாக்குதலை தொடங்கின. ராணுவ தளங்கள், பாதுகாப்புத்துறை அமைச்சகம் உள்ளிட்ட முக்கியத்துவம் வாய்ந்த இடங்கள் தாக்குதலுக்கு இலக்காகின.

வெனிசுலா மீதான தாக்குதலை, அமெரிக்க ராணுவம் வெளிப்படையாக ஒப்புக்கொண்டுள்ளது. ஜனாதிபதி டிரம்ப், கிறிஸ்துமஸ் தினத்தன்றே தாக்குதலுக்கு ஒப்புதல் அளித்து விட்டதாகவும் அந்நாட்டு செய்தி நிறுவனங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

வெனிசுலா மீதான அமெரிக்க ராணுவத்தின் தாக்குதல், ஐநா விதிமுறைகளுக்கு எதிரானது. சர்வதேச அமைதியை குலைக்கும் செயல் என்று வெனிசுலா வெளியுறவு அமைச்சர் தெரிவித்துள்ளார்.

2026இல் 3 மில்லியன் சுற்றுலாப் பயணிகளை இலக்கு வைக்கும் இலங்கை!

2026 ஆம் ஆண்டில் 3 மில்லியன் சுற்றுலாப் பயணிகளை இலக்காகக் கொண்டிருப்பதாக, இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகாரசபையின் தலைவர் புத்திக ஹேவாவசம் தெரிவித்துள்ளார்.

2025 ஆம் ஆண்டில் 2.4 மில்லியன் சுற்றுலாப் பயணிகள் என்ற இலக்கை எட்டியுள்ளோம்.

இந்த ஆண்டில் நாங்கள் 3 மில்லியன் சுற்றுலாப் பயணிகளை அடைய இலக்கு வைத்துள்ளோம்.

மேலும் 5 பில்லியன் டொலர் வருவாயை எட்ட இலக்கு வைத்துள்ளோம். அது ஒரு சவாலான எண்ணிக்கையாக இருக்கலாம்.

ஆரம்பத்தில் 2025 ஆம் ஆண்டில் 3 மில்லியன் சுற்றுலாப் பயணிகளை இலக்காக வைத்த போதும், பின்னர் அது 2.4 மில்லியனாகக் குறைக்கப்பட்டது.

2025 ஆம் ஆண்டில் முதல் வாரத்தில் சூறாவளி தாக்கம் இருந்தபோதிலும், டிசம்பர் மாதத்தின் பிற்பகுதியில் வருகை அதிகரித்தது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

ஜனநாயக வழியிலேயே நாமல் அரியணையேறுவார்: மொட்டு கட்சி அறிவிப்பு

தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் வீட்டுக்கு அனுப்படும். மாகாணசபைத் தேர்தலில் அதற்குரிய ஆரம்ப புள்ளி வைக்கப்படும். ஜனநாயக வழியில் நாட்டை பொறுப்பேற்பதற்கு நாமல் ராஜபக்ச தயாராகவே இருக்கின்றார் என்று ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி அறிவித்துள்ளது.

மொட்டு கட்சி தலைமையகத்தில் நேற்று நடைபெற்ற ஊடக சந்திப்பின்போதே முன்னாள் இராஜாங்க அமைச்சர் சானக வக்கும்புர மேற்கண்டவாறு அறிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,

“ ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி வலுவடைந்துவருகின்றது. முடிந்தால் மாகாணசபைத் தேர்தலை நடத்தி தமது பலத்தை காட்டுமாறு தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்துக்கு சவால் விடுக்கின்றோம்.

மாகாணசபைத் தேர்தல் உட்பட அடுத்து நடக்கும் தேர்தல்களில் நாமல் ராஜபக்ச தலைமையில் மொட்டு கட்சி வெற்றிநடைபோடும்.
தேசிய மக்கள் சக்தியை வீட்டுக்கு அனுப்புவதற்குரிய அரசியல் தலைமைத்துவத்தை நாம் வழங்குவோம். கிடைக்கும் முதல் சந்தர்ப்பத்திலேயே அரசாங்கம் வீட்டுக்கு அனுப்படும்.

ஜனநாயக வழியிலேயே ஆட்சியை பிடிப்போம். சதி நடவடிக்கையில் ஈடுபடமாட்டோம். ஆட்சி அதிகாரத்தை பொறுப்பேற்பதற்கு நாமல் ராஜபக்ச தயாராகவே உள்ளார். மக்களுக்கு செய்ய வேண்டிய அனைத்தையும் செய்வார்.” – என்றார்.

மரக்கறி விலைப்பட்டியல் (03.01.2026)

நுவரெலியா பொருளாதார மத்திய நிலையத்தால் இன்று (03) வெளியிடப்பட்டுள்ள மரக்கறி வகைகளின் (ஒரு கிலோ) விலை பட்டியல்…

எச்சரிக்கை விடுத்த அமெரிக்காவுக்கு ஈரான் பதிலடி!

“அமெரிக்காவின் அனைத்து ராணுவ தளங்களும் எங்கள் இலக்குகளாக மாறும்” – என்று ஈரான் தலைவர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

ஈரான் நாட்டில் விலைவாசி உயர்வு மற்றும் பொருளாதார நெருக்கடிக்கு எதிராக மக்கள் தொடர் போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.

சில இடங்களில் போராட்டக்காரர்களுக்கும், பாதுகாப்பு படையினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டு வன்முறை சம்பவங்கள் அரங்கேறி வருகின்றன.

போராட்டக்காரர்கள் பொலிஸாருடன் மோதியதாகவும், கற்களை வீசியதாகவும், வாகனங்களை எரித்ததாகவும் உள்ளூர் ஊடங்களில் செய்தி வெளியாகி வருகிறது.

சிலர் ஆயுதமேந்தி தாக்குதலில் ஈடுபட்டதாகவும், பல்வேறு நபர்களிடமிருந்து துப்பாக்கிகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

இந்த நிலையில், அமைதியான போராட்டங்களுக்கு எதிராக ஈரான் அரசு வன்முறையை பயன்படுத்தினால், அமெரிக்க அரசு களத்தில் இறங்கி பதிலடி கொடுக்க தயாராக உள்ளது என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் எச்சரித்திருந்தார்.

இது தொடர்பாக அவர் தனது சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “ஈரான் தனது வழக்கமான பாணியில் அமைதியான போராட்டங்களுக்கு எதிராக வன்முறையை பயன்படுத்தி போராட்டக்காரர்களை கொடூரமாக சுட்டுக் கொன்றால், போராட்டக்காரர்களின் பாதுகாப்பிற்காக அமெரிக்கா களத்தில் இறங்கி பதிலடி கொடுப்பதற்கு தயாராக உள்ளது” என்று தெரிவித்திருந்தார்.

டிரம்பின் இந்த கருத்துக்கு ஈரான் தலைவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

ஈரானின் பாதுகாப்பு கவுன்சில் செயலாளர் அலி லாரிஜானி கூறுகையில், “ஈரானின் உள்நாட்டு விவகாரங்களில் அமெரிக்கா தலையிட்டால், அது பிராந்திய அளவில் குழப்பத்தை விளைவிக்கும். அமெரிக்க நலன்கள் சிதைக்கப்படும். டிரம்ப் ஆபத்தான விளையாட்டை தொடங்கியுள்ளார். அமெரிக்க மக்கள் தங்கள் வீரர்களைக் காப்பாற்றிக்கொள்ள வேண்டும்” என சாடினார்.

ஈரான் நாடாளுமன்ற சபாநாயகர் முகமது பாகர் கலிபாப் கூறுகையில், “அமெரிக்காவின் அனைத்து ராணுவ தளங்களும் எங்கள் இலக்குகளாக மாறும்” என்று மிரட்டல் விடுத்துள்ளார்

இதனால் இருநாடுகளுக்கும் இடையே போர்பதற்றம் உருவாகியுள்ளது. கடந்த 2025 ஜூனில், ஈரானின் அணு மின்சக்தி நிலையங்கள் மீது அமெரிக்கா குண்டு வீசியது. இதற்கு பதிலடியாக கத்தாரில் உள்ள அமெரிக்க விமான தளத்தின் மீது ஈரான் தாக்குதல் நடத்தியது குறிப்பிடத்தக்கது.

மொட்டு கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் யார்? நாமல் வெளியிட்டுள்ள தகவல்

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் யாரென்பது உரிய நேரத்தில் அறிவிக்கப்படும் என்று அக்கட்சியின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ச தெரிவித்தார்.

மொட்டு கட்சியின் அடுத்த ஜனாதிபதி வேட்பாளர் நாமல் ராஜபக்சவா என்று அவரிடம் வினவப்பட்டது.

இதற்கு பதிலளித்த நாமல் ராஜபக்ச,

“ இது தொடர்பான அறிவிப்பை உரிய நேரத்தில், தலதாமாளிகையில் வழிபட்ட பின்னர் அறிவிக்கப்படும்.” – என்றார் நாமல் ராஜபக்ச.

“ அம்பாந்தோட்டையில் இருந்தாலும், கொழும்பில் இருந்தாலும் எமது கட்சிக்குரிய ஆலோனை வழங்கி கட்சியை மஹிந்த ராஜபக்ச வழிநடத்துவார்.

அரசாங்கத்தின் காலை வாருவதற்கு நாம் முற்படவில்லை. தமது காலை தாமே வாரிக்கொள்ளும் வகையில்தான் அரசாங்கம் செயல்பட்டுவருகின்றது.

தரம் 6 மாணவர்களுக்கான ஆங்கிலப் பாடத்திட்டத்தில், வயது வந்தோருக்கான இணையத்தளம் ஒன்றின் முகவரி அச்சிடப்பட்டிருந்த விவகாரம் தொடர்பில் தெளிவான விசாரணை அவசியம்.” – என்றார்.

ரணிலுடன் சஜித் இணையமாட்டார்: அவருக்கு “டீம் வேர்க்” சரிவராது!

ரணில் விக்கிரமசிங்கவுடன் இணைந்து பயணிப்பதற்கு சஜித் பிரேமதாச முன்வரமாட்டார். ஏனெனில் சஜித் தனி வழி பயணத்தை விரும்புபவர் என்று முன்னாள் இராஜாங்க அமைச்சர் அஜித் மானப்பெரும தெரிவித்தார்

கடந்த பொதுத்தேர்தலில் ஐக்கிய மக்கள் சக்தியின் பட்டியலிலேயே அஜித் மானப்பெரும வேட்புமனு செய்தார்.

எனினும், கடைசி நேரத்தில் தேர்தலில் இருந்து ஒதுங்கினார். பின்னர் ஐக்கிய தேசியக் கட்சியில் இணைந்தார். அக்கட்சி ஊடாகவே தற்போது அரசியல் பயணத்தை தொடர்கின்றன.

இந்நிலையில் ஐக்கிய மக்கள் சக்தி மற்றும் ஐக்கிய தேசியக் கட்சி ஒன்றிணைவு தொடர்பில் எழுப்பட்ட கேள்விக்கு பதிலளித்த அவர், கூறியவை வருமாறு,

“ ரணில் விக்கிரமசிங்கவுடன் சஜித் பிரேமதாச இணைந்து செயல்படுவார் என நான் நம்பவில்லை. ஏனெனில் டீம் வேர்க் என்றால் என்னவென்பது சஜித்துக்கு தெரியாது. அதனால்தான் ஐக்கிய தேசியக் கட்சியுடனான பேச்சுக்குகூட அவர் தனித்து வந்தார்
.
ஜனாதிபதி தேர்தலின்போது இணைந்து செயல்பட வேண்டும் என சஜித்திடம் கூறினேன். இதனால்தான் என்னை அமைப்பாளர் பதவியில் இருந்து தூக்கினார்.

ஐக்கிய தேசியக் கட்சி மற்றும் ஐக்கிய மக்கள் சக்தி என்பன இணைந்தால்கூட டீம் வேர்க்கிற்கு சஜித் இடமளிப்பார் என நான் கருதவில்லை.

ஐக்கிய மக்கள் சக்தில் இருந்து வெளியேறிய நான் மீண்டும் அக்கட்சியில் இணையும் இல்லை.” – என்றார்.

சினிமா

பிரபல இந்திய பாடகி ஆஷா போஸ்லே காலமானார்!

0
  பிரபல இந்திய பின்னணி பாடகி ஆஷா போஸ்லே தமது 92ஆவது வயதில் இன்று(12) காலமானார். இந்திய திரையுலகில் 10,000-இற்கும் அதிக பாடல்களை பாடியுள்ள மூத்த பாடகி ஆஷா போஸ்லே நேற்று(11) மாரடைப்பு ஏற்பட்டதையடுத்து மும்பையிலுள்ள...

சின்னத்திரை நடிகை தற்#கொ#லை!

0
  இலங்கையை பூர்வீகமாகக்கொண்ட பிரபல சின்னத்திரை நடிகையான சுபாஷினி (வயது 36) தற்#கொ#லை செய்துகொண்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. "கயல்" சின்னத்திரை தொலைக்காட்சி தொடரில் நடித்து வருபவர் சுபாஷிணி (வயது36). இலங்கையை பூர்வீகமாகக்கொண்ட இவர் கடந்த...

“தனுஷின் நட்பை இழந்தது மிகப்பெரிய அவமானம்” – விக்னேஷ் சிவன் வருத்தம்

0
தனுஷ் உடனான நட்பை இழந்தது மிகப்பெரிய அவமானம் என்று விக்னேஷ் சிவன் பகிர்ந்துள்ளார். விக்னேஷ் சிவன் இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன் நடித்துள்ள ‘எல்.ஐ.கே’ திரைப்படம் ஏப்ரல் 10-ம் திகதி திரைக்கு வரவுள்ளது. நீண்ட பிரச்சினைகளுக்கு...

செய்தி

நுவரெலியாவில் அடை மழை: மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு!

0
நுவரெலியா மாவட்டத்தில் இன்று (ஏப்ரல் 20) பெய்த கனமழை மற்றும் பலத்த காற்று காரணமாக பல பிரதேசங்களில் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. கடும் காற்றின் காரணமாக மரங்கள் முறிந்து வீழ்ந்ததில், நோர்வூட் பகுதியில் போக்குவரத்து...

மாற்றம் வரும்: ஆட்சிக்கு வருவதற்கு பாரிய திட்டங்கள் உள்ளன

0
“மீண்டும் ஆட்சிக்கு வருவதற்குரிய  பாரிய திட்டங்களை ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன முன்னெடுத்துள்ளது” என்று அக்கட்சியின் தலைவரும் முன்னாள் ஜனாதிபதியுமான மஹிந்த ராஜபக்ச தெரிவித்தார். பத்தரமுல்லையில் உள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில் இன்று நடைபெற்ற புத்தாண்டு...

பொருளாதார ஆய்வறிக்கை ஜனாதிபதியிடம் கையளிப்பு!

0
இலங்கை மத்திய வங்கியின் மிக முக்கியமான வெளியீடுகளான 'வருடாந்த பொருளாதார ஆய்வு 2025' மற்றும் 'நிதி மற்றும் செயற்பாட்டு அறிக்கை 2025' ஆகிய இரு அறிக்கைகளும் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவிடம் இன்று திங்கட்கிழமை...