Home Blog Page 141

ரணிலுடன் சஜித் இணையமாட்டார்: அவருக்கு “டீம் வேர்க்” சரிவராது!

ரணில் விக்கிரமசிங்கவுடன் இணைந்து பயணிப்பதற்கு சஜித் பிரேமதாச முன்வரமாட்டார். ஏனெனில் சஜித் தனி வழி பயணத்தை விரும்புபவர் என்று முன்னாள் இராஜாங்க அமைச்சர் அஜித் மானப்பெரும தெரிவித்தார்

கடந்த பொதுத்தேர்தலில் ஐக்கிய மக்கள் சக்தியின் பட்டியலிலேயே அஜித் மானப்பெரும வேட்புமனு செய்தார்.

எனினும், கடைசி நேரத்தில் தேர்தலில் இருந்து ஒதுங்கினார். பின்னர் ஐக்கிய தேசியக் கட்சியில் இணைந்தார். அக்கட்சி ஊடாகவே தற்போது அரசியல் பயணத்தை தொடர்கின்றன.

இந்நிலையில் ஐக்கிய மக்கள் சக்தி மற்றும் ஐக்கிய தேசியக் கட்சி ஒன்றிணைவு தொடர்பில் எழுப்பட்ட கேள்விக்கு பதிலளித்த அவர், கூறியவை வருமாறு,

“ ரணில் விக்கிரமசிங்கவுடன் சஜித் பிரேமதாச இணைந்து செயல்படுவார் என நான் நம்பவில்லை. ஏனெனில் டீம் வேர்க் என்றால் என்னவென்பது சஜித்துக்கு தெரியாது. அதனால்தான் ஐக்கிய தேசியக் கட்சியுடனான பேச்சுக்குகூட அவர் தனித்து வந்தார்
.
ஜனாதிபதி தேர்தலின்போது இணைந்து செயல்பட வேண்டும் என சஜித்திடம் கூறினேன். இதனால்தான் என்னை அமைப்பாளர் பதவியில் இருந்து தூக்கினார்.

ஐக்கிய தேசியக் கட்சி மற்றும் ஐக்கிய மக்கள் சக்தி என்பன இணைந்தால்கூட டீம் வேர்க்கிற்கு சஜித் இடமளிப்பார் என நான் கருதவில்லை.

ஐக்கிய மக்கள் சக்தில் இருந்து வெளியேறிய நான் மீண்டும் அக்கட்சியில் இணையும் இல்லை.” – என்றார்.

ரணிலும், சஜித்தும் ஒன்றிணைவது ஜனநாயக அரசியலுக்கு நல்லது: நாமல்!

“ ஐக்கிய மக்கள் சக்தியும், ஐக்கிய தேசியக் கட்சியும் ஒன்றிணைவது நல்ல விடயமாகும்.” –என்று ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ச தெரிவித்தார்.

இரு தரப்பினரும் ஒருமித்த அரசியல் கொள்கையில் இருந்தவர்கள், தற்போதும் அதே கொள்கையுடன் பயணிப்பவர்கள். எனவே, அவர்கள் இணைவது ஜனநாயக அரசியலுக்கு நல்லது எனவும் நாமல் ராஜபக்ச கூறினார்.

அதேவேளை, அரசாங்கத்தின் காலை வாருவதற்கு நாம் முற்படவில்லை .மாறாக தமது காலை தாமே வாரிக்கொள்ளும் வகையிலேயே அரசாங்கத்தின் செயல்பாடு உள்ளது எனவும் நாமல் சுட்டிக்காட்டினார்.

தையிட்டி விகாரை பகுதியில் பிக்குகள் குழு ஆராய்வு!

 

நயினாதீவில் உள்ள நாகதீப ரஜ மகா விகாரை விகாராதிபதி நவதகல பதும கீர்த்தி திஸ்ஸ நாயக்க தேரர் தலைமையிலான பிக்குகள் இன்றையதினம் தையிட்டி விகாரை பகுதிக்கு விஜயம் செய்து காணி உரிமையாளர்களுடன் கலந்துரையாடலில் ஈடுபட்டனர்.

சட்டவிரோதமாக தனியார் காணி காணிகளில் அனுமதியின்றி இராணுவத்தினரால் தையிட்டி விகாரை அமைக்கப்பட்டதால் பாதிக்கப்பட்ட காணி உரிமையாளர்கள் நயினாதீவு விகாரதிபதியை அண்மையில் நேரில் சந்தித்து தமது காணிகளை விடுவிப்பது தொடர்பில் கலந்துரையாடினர்.

இதனொரு கட்டமாக தையிட்டிக்கு இன்று நேரடி விஜயம் மேற்கொண்ட நயினாதீவு விகாரதிபதி காணி உரிமையாளர்களுடன் கலந்துரையாடியதுடன் திஸ்ஸ விகாரைக்கென ஏற்கனவே ஒதுக்கப்பட்டு பற்றை வளர்ந்திருந்த காணியை பார்வையிட்டுச் சென்றார்.

அமெரிக்கா தலையிடும்: ஈரானுக்கு ட்ரம்ப் எச்சரிக்கை!

அமைதியான போராட்டங்களை ஈரான் அரசு அடக்கினால் அமெரிக்கா தலையிடும் என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

ஈரானில் பணவீக்கத்தை கண்டித்து போராட்டங்கள் நடைபெற்று வரும் நிலையில், பாதுகாப்புப் படையினருக்கும் போராட்டக் காரர்களுக்கும் இடையிலான மோதல்களில் ஏழு பேர் கொல்லப்பட்டுள்ளனர் .

இது தொடர்பாக டொனால்ட் டிரம்ப்வெளியிட்டுள்ள பதிவில்,

” போராட்டக்காரர்களை ஈரான் சுட்டுக் கொன்றால், அமெரிக்கா நடவடிக்கை எடுக்கும். வன்முறையில் அமைதியான போராட்டங்களை அடக்கினால் அமெரிக்கா தலையிடும்.” – என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

ஈரானின் பாதுகாப்பு அமைப்பு செயலாளர் அலி லாரி ஜானி கூறியதாவது: ஈரான் எதிர்ப்புப் பிரச்னையில் அமெரிக்காவின் தலையீடு முழு பிராந்தியத்திலும் குழப்பத்திற்குச் சமம் என்பதை டிரம்ப் அறிந்து கொள்ள வேண்டும், என்றார்.

மின் கட்டணத்தை அதிகரிக்க அரசு முயற்சி: சஜித் கடும் எதிர்ப்பு!

” தற்போதைய அரசாங்கம் வளமான நாட்டையும் அழகான வாழ்க்கையையும் உருவாக்கித் தருவோம் என்ற வாக்குறுதிப் பத்திரத்தின் பேரிலேயே ஆட்சிக்கு வந்தது.

எனினும், வளமான நாட்டையும், அழகான வாழ்க்கையையும் உருவாக்குவதற்குப் பதிலாக, வரிய நாட்டையும் ஏழ்மையான வாழ்க்கையையும் உருவாக்கி வருகின்றது. அவசர அவசரமாக மின்சாரக் கட்டணங்களை அதிகரிப்பதற்கு அரசாங்கம் கடும் முயற்சிகளை எடுத்து வருகின்றது.”

இவ்வாறு எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.

” கடந்த தேர்தல்கள் பிரச்சார மேடைகள் ஒவ்வொன்றிலும் தற்போதைய ஆளும் தரப்பு உறுப்பினர்கள் ரூ.9000 மின்சாரக் கட்டணத்தை ரூ. 6000 ஆகவும் ரூ. 3000 மின்சாரக் கட்டணத்தை ரூ. 2000 ஆகவும், 33% ஆல் இவற்றைக் குறைப்போம் என முழங்கினர்.

ஆட்சிக்கு வந்த பிற்பாடு மேடைகளில் பிரஸ்தாபித்த வாக்குறுதி முழக்கங்களை மறந்துவிட்டு, இன்று நாளையே மின்சாரக் கட்டணத்தை 11.57% ஆல் அதிகரிக்க திட்டமிட்டுள்ளனர். இவர்கள் பெற்ற மக்கள் ஆணையை இன்று காட்டிக் கொடுத்து வருகின்றனர்.” எனவும் சஜித் பிரேமதாச குறிப்பிட்டார்.-

” மின்சாரக் கட்டணங்களை இவர்கள் குறைப்பதாகக் கூறியதால்தான் இந்நாட்டில் இலட்சக்கணக்கான மக்கள் தற்போதைய அரசாங்கத்தைத் தேர்ந்தெடுத்தனர்.

ஜனாதிபதி இதை பிரசித்தமாக வெளிப்படையாகக் கூறியிருந்தார். ஆனால் இன்று, மக்கள் ஆணையால் ஆட்சிக்கு வந்துவிட்டு மக்கள் வழங்கிய ஆணையை ஏன் இவ்வாறு காட்டிக் கொடுத்து வருகின்றீர்கள் என்று இன்று மக்கள் கேள்வி எழுப்புகின்றனர்.

இந்நாட்டில் மின்சார நுகர்வோரின் மனித மற்றும் அடிப்படை உரிமைகளை இந்த அரசாங்கம் மீறியுள்ளன. ஆளும் தரப்பினர் மின்சார நுகர்வோருக்கு வழங்கிய எதிர்பார்ப்புகளையும், அவர்கள் மூலம் பெற்றுக் கொண்ட மக்கள் ஆணையும் முற்றிலுமாக மீறியுள்ளனர்.

பொய்கள், ஏமாற்றுக்கள், மற்றும் வாக்குறுதிகளை மீறல் என இந்த அரசாங்கம் மின்சாரத்தை நுகரும் இந்நாட்டு மக்களை ஏமாற்றி, இன்று அவர்களை உதவியற்றோர் நிலைக்கு தள்ளிவிட்டுள்ளது என்று எதிர்க்கட்சித் தலைவர் மேலும் தெரிவித்தார்.

அனர்த்த நிவாரணங்களை வெளிப்படைத்தன்மையுடன் வழங்க புதிய டிஜிட்டல் கட்டமைப்பு!

 

டித்வா சூறாவளியால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு விரைவான நிவாரண சேவைகளை முழுமையான வெளிப்படைத்தன்மையுடன் வழங்கப்படுவதை உறுதி செய்வதற்காக, நவீன தொழில்நுட்பத்துடன் கூடிய Inventory Control System ஒன்றை செயல்படுத்த அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.

இந்த கட்டமைப்பின் எதிர்கால செயற்பாடுகள் குறித்த விசேட கலந்துரையாடல் நேற்று (01) ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்றதுடன், ஜனாதிபதி அலுவலகம், பாதுகாப்பு அமைச்சு, தேசிய அனர்த்த நிவாரண சேவைகள் மையம் (NDRSC), டிஜிட்டல் பொருளாதார அமைச்சு மற்றும் சயன்டர் டெக்னொலஜீஸ் (Scienter technologies) தனியார் நிறுவனம் ஆகியவற்றின் அதிகாரிகள் இதில் கலந்து கொண்டனர்.

ஜனாதிபதி அலுவலகத்தின் பங்களிப்பின் கீழ் தேசிய அனர்த்த நிவாரண சேவை மையத்திற்கு (NDRSC) அறிமுகப்படுத்தப்பட்ட இந்தப் புதிய மென்பொருள் கட்டமைப்பின் மூலம் அனர்த்த நிவாரணங்களை விநியோகிக்கும் செயல்முறை நெறிப்படுத்தப்படும்.

வெளிநாட்டு அரசாங்கங்கள், சர்வதேச நிறுவனங்கள், வெளிநாட்டில் வசிக்கும் இலங்கையர்கள் மற்றும் உள்நாட்டு, வெளிநாட்டு நன்கொடையாளர்களிடமிருந்து கிடைக்கும் அனைத்து பொருள் உதவிகளையும் சேகரிப்பு முதல் இறுதிப் பயனாளிக்கான விநியோகம் வரை மிகச் சரியாக அறிக்கையிட்டு, நிர்வகிக்கும் திறனை இந்தக் கட்டமைப்பு
கொண்டுள்ளது.

இந்தக் கணனிக் கட்டமைப்பு மூலம் வெளிநாடுகளிலிருந்து கிடைக்கும் நிதி அல்லாத வெளிநாட்டு உதவிகள் முழுமையாக கணனி மயப்படுத்தப்படுவதுடன், அந்தப் பொருட்களின் விநியோக செயல்முறை, விமானம் அல்லது கப்பல் மூலம் பொருட்களைப் பெறுவதிலிருந்து உதவி தேவைப்படும் இறுதி நுகர்வோர் வரை கட்டமைப்பு ஊடாக கண்காணிக்கப்படுகிறது.

புதிய செயல்முறையின்படி, தேசிய அனர்த்த நிவாரண சேவைகள் மையத்திற்குச் சொந்தமான ஒருகொடவத்தை பிரதான களஞ்சியத்தில் உதவிப் பொருட்கள் சேமித்து வைக்கப்படுவதுடன், கிராம அலுவலர் பிரிவு மட்டத்தில் தேவைகளைக் கண்டறிந்த பின்னர், பிரதேச செயலாளர்களால் இந்த கட்டமைப்பின் மூலம் உதவிக்கான கோரிக்கைகள் சமர்ப்பிக்கப்படும்.

அந்தக் கோரிக்கைகள் மாவட்டச் செயலாளரால் நேரடியாக அனர்த்த நிவாரண சேவைகள் மையத்திற்கு அனுப்பப்படுவதோடு, பின்னர் குறித்த பொருட்கள் மாவட்டச் செயலாளர்கள் மற்றும் பிரதேசச் செயலாளர்கள் ஊடாக சம்பந்தப்பட்ட கிராம அலுவலர் பிரிவில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு விநியோகிக்கப்படும்.

இந்த அனைத்து நடவடிக்கைகளையும் பற்றிய தகவல்கள் கட்டமைப்பில் பதிவு செய்யப்படுவதால், இந்தப் பணிகளுக்கு இடையிலான தாமதங்களைத் தவிர்த்து, அனர்த்தத்தினால் உண்மையிலேயே பாதிக்கப்பட்ட மக்களை நிவாரணம் சென்றடைவதை உறுதி செய்யவும், பெறப்பட்ட உதவிகள் குறித்து முழுமையான வெளிப்படைத்தன்மையைப் பேணவும் முடியும்.

இந்த மென்பொருள் கட்டமைப்பை சயன்டர் டெக்னொலஜீஸ் (Scienter Technologies) தனியார் நிறுவனம் முற்றிலும் இலவசமாக வழங்கியுள்ளது. இதற்கான தொழில்நுட்ப ஆதரவை ஓரெல் கிளவுட் (Orel Cloud) மற்றும் மைக்ரோசொப்ட் (Microsoft) நிறுவனம் இலவசமாக வழங்க ஒப்புக்கொண்டுள்ளன.

அதன்படி, அடுத்த வாரம் குறித்த புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கைச்சாத்திட அனைத்து தரப்பினரும் இந்த கூட்டத்தில் ஒப்புக்கொண்டதுடன், கட்டமைப்பின் எதிர்கால மேம்படுத்தல் நடவடிக்கையாக, கிராம அலுவலர்கள் அனர்த்த நிலைமைகளை உடனடியாகத் தெரிவிக்க உதவும் தொலைபேசி செயலியை (Mobile App) இலவசமாக உருவாக்கவும் சயன்டர் டெக்னொலஜீஸ் நிறுவனம் இணக்கம் தெரிவித்தது.

மாகாண சபைத் தேர்தல் முறை குறித்து ஆராய நாடாளுமன்ற தெரிவுக்குழு

மாகாண சபைத் தேர்தலை நடத்துவதற்கான தேர்தல் முறை குறித்து தீர்மானிப்பதற்கான தெரிவுக்குழு ஒன்றை நியமிக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

இதற்கான தீர்மானம் ஒன்றை நாடாளுமன்றத்தில் முன்மொழிவதற்கு, அரசாங்கம் நாடாளுமன்ற விவகாரக் குழுவின் அனுமதியைப் பெற்றுள்ளது.

சபாநாயகர் ஜகத் விக்ரமரத்ன தலைமையில் நாடாளுமன்ற வளாகத்தில் கூடிய, நாடாளுமன்ற விவகாரக் குழு ஜனவரி 6 ஆம் திகதி, இந்த நாடாளுமன்றத் தெரிவுக்குழுவை நியமிக்கும் தீர்மானித்தை அங்கீகரித்துள்ளது.

மாகாண சபைத் தேர்தல்கள் நடத்துவதற்கான தேர்தல் முறை குறித்து தெரிவுக்குழு ஆராய்ந்து நாடாளுமன்றத்திற்கு அறிக்கை சமர்ப்பிக்கும்.

மேலும் அது தொடர்பான அதன் முன்மொழிவுகள் மற்றும் பரிந்துரைகளையும் சமர்ப்பிக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மாகாண சபைத் தேர்தல்களை நடத்துவது தொடர்பான சட்ட சூழ்நிலைகளை மீளாய்வு செய்வதற்கும் தேர்தலை விரைவாக நடத்துவதற்கு தேவையான நடவடிக்கைகளை எடுப்பதற்கும் தெரிவுக்குழு ஒன்று நியமிக்கப்படும் என்று அமைச்சர் பிமல் ரத்நாயக்க கடந்த ஆண்டு நவம்பர் மாதம் நாடாளுமன்றத்தில் கூறியிருந்தார்.

சுவிட்சர்லாந்து விடுதி தீ விபத்து; பலி 47 ஆக அதிகரிப்பு: புலனாய்வாளர்கள் விசாரணை தீவிரம்

சுவிட்சர்லாந்தில் உள்ள தனியார் விடுதியின் மதுபான பாரில் ஏற்பட்ட தீ விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 47 ஆக அதிகரித்துள்ளது.

ஐரோப்பிய நாடான சுவிட்சர்லாந்தின் புகழ்பெற்ற சுற்றுலா தலம் கிரான்ஸ்- மோன்டானா.

இப்பகுதி பனிச்சறுக்கு விளையாட்டுகள் மற்றும் அது சார்ந்த சொகுசு விடுதிகளுக்கு பெயர் போனது. இங்கு உள்ள சொகுசு விடுதியில் நேற்று முன்தினம் புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதில் சுவிட்சர்லாந்து மட்டுமின்றி, பல்வேறு நாடுகளைச் சேர்ந்த நுாற்றுக்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.

மதுபான விருந்து, ஆடல், பாடல் என நிகழ்ச்சி களைகட்டியிருந்தது. அப்போது திடீரென சொகுசு விடுதியின் மதுபான பாரில் தீ பற்றியது. இந்த தீ சில நிமிடங்களில் விடுதி முழுதும் பரவியது. மக்கள் பலர் அலறியடித்து வெளியேறினர்.

இந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 47 ஆக அதிகரித்துள்ளது. நுாற்றுக்கும் மேற்பட்டோர் தீ காயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர் என சுவிட்சர்லாந்து சுகாதார துறை தெரிவித்தது.

பலரது நிலைமை கவலைக்கிடமாக இருப்பதால் பலி எண்ணிக்கை உயரக் கூடும் என அஞ்சப்படுகிறது. தீ பற்றிய போது அடுத்தடுத்து குண்டுவெடிக்கும் சத்தம் கேட்டதால், முதலில் இது பயங்கரவாத தாக்குதல் என்ற அச்சம் ஏற்பட்டது. பொலிஸார் விசாரணையில் பயங்கரவாத தாக்குதல் இல்லை என்பது உறுதியானது.

Flashover எனப்படும் வெடித்துச் சிதறுதல் காரணமாக, முழு அறையுமே தீப்பிடித்து இருக்கலாம் என புலனாய்வாளர்கள் சந்தேகப்படுகின்றனர். அதிகாரிகள் தங்கள் விசாரணையை தீவிரப்படுத்தி உள்ளனர். தடயவியல் குழுக்கள் சம்பவ இடத்தையும் மீட்கப்பட்ட ஆதாரங்களையும் தொடர்ந்து ஆய்வு செய்து வருவதால், விரைவில் விபத்துக்கான காரணங்களை அதிகாரிகள் தெரிவிக்க வாய்ப்புள்ளதாக வட்டாரங்கள் தகவல் தெரிவிக்கின்றன.

ரணிலின் ஆட்டம் ஆரம்பம்: சஜித்துக்கு பறந்த அழைப்பு!

ரணில் விக்கிரமசிங்க மற்றும் சஜித் பிரேமதாசவுக்கிடையில்  முக்கியத்துவமிக்க கலந்துரையாடலொன்று இடம்பெற்றுள்ளது.

புத்தாண்டு வாழ்த்து தெரிவிப்பதற்காக சஜித் பிரேமதாசவை, நேற்று (01) தொலைபேசிமூலம் தொடர்பு கொண்டுள்ளார் ரணில் விக்கிரமசிங்க.

இருவரும் முதலில் வாழ்த்துகளை தெரிவித்துக்கொண்டுள்ளதுடன், அரசியல் பற்றியும் கலந்துரையாடியுள்ளனர் என தெரியவருகின்றது.

ஐக்கிய தேசியக் கட்சியில் இருந்து வெளியேறி ஐக்கிய மக்கள் சக்தியை சஜித் பிரேமதாச உருவாக்கியதில் இருந்து அவருக்கும், ரணில் விக்கிரமசிங்கவுக்கும் இடையிலான அரசியல் உறவில் முறிவு ஏற்பட்டது.

கடந்த ஜனாதிபதி தேர்தலின்போதுகூட இருவரும் இரு அணிகளில் வேட்பாளர்களாக களமிறங்கினர். விட்டுக்கெடுப்பு செய்யவில்லை.

ரணில் விக்கிரமசிங்க அண்மையில் கைதானபோதே அவரை சந்திப்பதற்கு சஜித் சென்றிருந்தார். இருவருக்கும் இடையில் மீண்டும் அரசியல் உறவு மலர்ந்தது.

இந்நிலையிலேயே புத்தாண்டு தினத்தில் இருவரும் தொலைபேசிமூலம் கலந்துரையாடியுள்ளனர்.

ஐக்கிய மக்கள் சக்தி மற்றும் ஐக்கிய தேசியக் கட்சி என்பவற்றை ஒன்றிணைப்பதற்குரிய முயற்சி வெற்றியை நோக்கி பயணிக்கும் நிலையில் இக்கலந்துரையாடல் முக்கியத்துவம் மிக்கதாக கருதப்படுகின்றது.

அதேவேளை, ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமைப் பதவியை சஜித் பிரேமதாசவுக்கு வழங்குவதற்கு ரணில் விக்கிரமசிங்க இணக்கத்தை ஏற்கனவே வெளிப்படுத்தியுள்ளார் எனவும் தகவல் வெளியாகியுள்ளது.

ரணில் விக்கிரமசிங்க மற்றும் சஜித் பிரேமதாச ஆகியோருக்கிடையிலான நேரடி சந்திப்பு விரைவில் நடைபெறவுள்ளது.

சினிமா

பிரபல இந்திய பாடகி ஆஷா போஸ்லே காலமானார்!

0
  பிரபல இந்திய பின்னணி பாடகி ஆஷா போஸ்லே தமது 92ஆவது வயதில் இன்று(12) காலமானார். இந்திய திரையுலகில் 10,000-இற்கும் அதிக பாடல்களை பாடியுள்ள மூத்த பாடகி ஆஷா போஸ்லே நேற்று(11) மாரடைப்பு ஏற்பட்டதையடுத்து மும்பையிலுள்ள...

சின்னத்திரை நடிகை தற்#கொ#லை!

0
  இலங்கையை பூர்வீகமாகக்கொண்ட பிரபல சின்னத்திரை நடிகையான சுபாஷினி (வயது 36) தற்#கொ#லை செய்துகொண்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. "கயல்" சின்னத்திரை தொலைக்காட்சி தொடரில் நடித்து வருபவர் சுபாஷிணி (வயது36). இலங்கையை பூர்வீகமாகக்கொண்ட இவர் கடந்த...

“தனுஷின் நட்பை இழந்தது மிகப்பெரிய அவமானம்” – விக்னேஷ் சிவன் வருத்தம்

0
தனுஷ் உடனான நட்பை இழந்தது மிகப்பெரிய அவமானம் என்று விக்னேஷ் சிவன் பகிர்ந்துள்ளார். விக்னேஷ் சிவன் இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன் நடித்துள்ள ‘எல்.ஐ.கே’ திரைப்படம் ஏப்ரல் 10-ம் திகதி திரைக்கு வரவுள்ளது. நீண்ட பிரச்சினைகளுக்கு...

செய்தி

மரம் முறிந்து விழுந்ததால் குடியிருப்புகளுக்கு சேதம்!

0
புளியாவத்தை ஹென்சி தோட்டத்தில் நேற்று கடும் காற்றுடன் அடை மழை பெய்ததால் பாரிய மரமொன்று முறிந்து விழுந்துள்ளது. இதனால் சில குடியிருப்புகள் சேதமடைந்துள்ளன. இந்த அனர்த்தத்தில் எவருக்கும் காயம் ஏற்படவில்லை. மஸ்கெலியா நிருபர் செ.தி.பெருமாள் ...

நுவரெலியாவில் அடை மழை: மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு!

0
நுவரெலியா மாவட்டத்தில் இன்று (ஏப்ரல் 20) பெய்த கனமழை மற்றும் பலத்த காற்று காரணமாக பல பிரதேசங்களில் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. கடும் காற்றின் காரணமாக மரங்கள் முறிந்து வீழ்ந்ததில், நோர்வூட் பகுதியில் போக்குவரத்து...

மாற்றம் வரும்: ஆட்சிக்கு வருவதற்கு பாரிய திட்டங்கள் உள்ளன

0
“மீண்டும் ஆட்சிக்கு வருவதற்குரிய  பாரிய திட்டங்களை ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன முன்னெடுத்துள்ளது” என்று அக்கட்சியின் தலைவரும் முன்னாள் ஜனாதிபதியுமான மஹிந்த ராஜபக்ச தெரிவித்தார். பத்தரமுல்லையில் உள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில் இன்று நடைபெற்ற புத்தாண்டு...