Home Blog Page 142

மாகாண சபைத் தேர்தல் முறை குறித்து ஆராய நாடாளுமன்ற தெரிவுக்குழு

மாகாண சபைத் தேர்தலை நடத்துவதற்கான தேர்தல் முறை குறித்து தீர்மானிப்பதற்கான தெரிவுக்குழு ஒன்றை நியமிக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

இதற்கான தீர்மானம் ஒன்றை நாடாளுமன்றத்தில் முன்மொழிவதற்கு, அரசாங்கம் நாடாளுமன்ற விவகாரக் குழுவின் அனுமதியைப் பெற்றுள்ளது.

சபாநாயகர் ஜகத் விக்ரமரத்ன தலைமையில் நாடாளுமன்ற வளாகத்தில் கூடிய, நாடாளுமன்ற விவகாரக் குழு ஜனவரி 6 ஆம் திகதி, இந்த நாடாளுமன்றத் தெரிவுக்குழுவை நியமிக்கும் தீர்மானித்தை அங்கீகரித்துள்ளது.

மாகாண சபைத் தேர்தல்கள் நடத்துவதற்கான தேர்தல் முறை குறித்து தெரிவுக்குழு ஆராய்ந்து நாடாளுமன்றத்திற்கு அறிக்கை சமர்ப்பிக்கும்.

மேலும் அது தொடர்பான அதன் முன்மொழிவுகள் மற்றும் பரிந்துரைகளையும் சமர்ப்பிக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மாகாண சபைத் தேர்தல்களை நடத்துவது தொடர்பான சட்ட சூழ்நிலைகளை மீளாய்வு செய்வதற்கும் தேர்தலை விரைவாக நடத்துவதற்கு தேவையான நடவடிக்கைகளை எடுப்பதற்கும் தெரிவுக்குழு ஒன்று நியமிக்கப்படும் என்று அமைச்சர் பிமல் ரத்நாயக்க கடந்த ஆண்டு நவம்பர் மாதம் நாடாளுமன்றத்தில் கூறியிருந்தார்.

சுவிட்சர்லாந்து விடுதி தீ விபத்து; பலி 47 ஆக அதிகரிப்பு: புலனாய்வாளர்கள் விசாரணை தீவிரம்

சுவிட்சர்லாந்தில் உள்ள தனியார் விடுதியின் மதுபான பாரில் ஏற்பட்ட தீ விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 47 ஆக அதிகரித்துள்ளது.

ஐரோப்பிய நாடான சுவிட்சர்லாந்தின் புகழ்பெற்ற சுற்றுலா தலம் கிரான்ஸ்- மோன்டானா.

இப்பகுதி பனிச்சறுக்கு விளையாட்டுகள் மற்றும் அது சார்ந்த சொகுசு விடுதிகளுக்கு பெயர் போனது. இங்கு உள்ள சொகுசு விடுதியில் நேற்று முன்தினம் புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதில் சுவிட்சர்லாந்து மட்டுமின்றி, பல்வேறு நாடுகளைச் சேர்ந்த நுாற்றுக்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.

மதுபான விருந்து, ஆடல், பாடல் என நிகழ்ச்சி களைகட்டியிருந்தது. அப்போது திடீரென சொகுசு விடுதியின் மதுபான பாரில் தீ பற்றியது. இந்த தீ சில நிமிடங்களில் விடுதி முழுதும் பரவியது. மக்கள் பலர் அலறியடித்து வெளியேறினர்.

இந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 47 ஆக அதிகரித்துள்ளது. நுாற்றுக்கும் மேற்பட்டோர் தீ காயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர் என சுவிட்சர்லாந்து சுகாதார துறை தெரிவித்தது.

பலரது நிலைமை கவலைக்கிடமாக இருப்பதால் பலி எண்ணிக்கை உயரக் கூடும் என அஞ்சப்படுகிறது. தீ பற்றிய போது அடுத்தடுத்து குண்டுவெடிக்கும் சத்தம் கேட்டதால், முதலில் இது பயங்கரவாத தாக்குதல் என்ற அச்சம் ஏற்பட்டது. பொலிஸார் விசாரணையில் பயங்கரவாத தாக்குதல் இல்லை என்பது உறுதியானது.

Flashover எனப்படும் வெடித்துச் சிதறுதல் காரணமாக, முழு அறையுமே தீப்பிடித்து இருக்கலாம் என புலனாய்வாளர்கள் சந்தேகப்படுகின்றனர். அதிகாரிகள் தங்கள் விசாரணையை தீவிரப்படுத்தி உள்ளனர். தடயவியல் குழுக்கள் சம்பவ இடத்தையும் மீட்கப்பட்ட ஆதாரங்களையும் தொடர்ந்து ஆய்வு செய்து வருவதால், விரைவில் விபத்துக்கான காரணங்களை அதிகாரிகள் தெரிவிக்க வாய்ப்புள்ளதாக வட்டாரங்கள் தகவல் தெரிவிக்கின்றன.

ரணிலின் ஆட்டம் ஆரம்பம்: சஜித்துக்கு பறந்த அழைப்பு!

ரணில் விக்கிரமசிங்க மற்றும் சஜித் பிரேமதாசவுக்கிடையில்  முக்கியத்துவமிக்க கலந்துரையாடலொன்று இடம்பெற்றுள்ளது.

புத்தாண்டு வாழ்த்து தெரிவிப்பதற்காக சஜித் பிரேமதாசவை, நேற்று (01) தொலைபேசிமூலம் தொடர்பு கொண்டுள்ளார் ரணில் விக்கிரமசிங்க.

இருவரும் முதலில் வாழ்த்துகளை தெரிவித்துக்கொண்டுள்ளதுடன், அரசியல் பற்றியும் கலந்துரையாடியுள்ளனர் என தெரியவருகின்றது.

ஐக்கிய தேசியக் கட்சியில் இருந்து வெளியேறி ஐக்கிய மக்கள் சக்தியை சஜித் பிரேமதாச உருவாக்கியதில் இருந்து அவருக்கும், ரணில் விக்கிரமசிங்கவுக்கும் இடையிலான அரசியல் உறவில் முறிவு ஏற்பட்டது.

கடந்த ஜனாதிபதி தேர்தலின்போதுகூட இருவரும் இரு அணிகளில் வேட்பாளர்களாக களமிறங்கினர். விட்டுக்கெடுப்பு செய்யவில்லை.

ரணில் விக்கிரமசிங்க அண்மையில் கைதானபோதே அவரை சந்திப்பதற்கு சஜித் சென்றிருந்தார். இருவருக்கும் இடையில் மீண்டும் அரசியல் உறவு மலர்ந்தது.

இந்நிலையிலேயே புத்தாண்டு தினத்தில் இருவரும் தொலைபேசிமூலம் கலந்துரையாடியுள்ளனர்.

ஐக்கிய மக்கள் சக்தி மற்றும் ஐக்கிய தேசியக் கட்சி என்பவற்றை ஒன்றிணைப்பதற்குரிய முயற்சி வெற்றியை நோக்கி பயணிக்கும் நிலையில் இக்கலந்துரையாடல் முக்கியத்துவம் மிக்கதாக கருதப்படுகின்றது.

அதேவேளை, ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமைப் பதவியை சஜித் பிரேமதாசவுக்கு வழங்குவதற்கு ரணில் விக்கிரமசிங்க இணக்கத்தை ஏற்கனவே வெளிப்படுத்தியுள்ளார் எனவும் தகவல் வெளியாகியுள்ளது.

ரணில் விக்கிரமசிங்க மற்றும் சஜித் பிரேமதாச ஆகியோருக்கிடையிலான நேரடி சந்திப்பு விரைவில் நடைபெறவுள்ளது.

நாடாளுமன்றம் வருமாறு ரணிலுக்கு மீண்டும் அழைப்பு!

“நாடாளுமன்றத்துக்கு மீண்டும் வருமாறு நாம்தான் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு அழைப்பு விடுத்துள்ளோம்.

ஆனால் இதில் அவர் ஆர்வம் காட்டவில்லை. எனினும், நாட்டுக்கு தேவையேற்படும்பட்சத்தில் பொறுப்புகளில் இருந்து தப்பியோடும் தலைவர் அவர் அல்ல. பொறுப்பை ஏற்பார்.”

இவ்வாறு ஐக்கிய தேசியக் கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சமன் ரத்னபிரிய தெரிவித்தார்.

ஐக்கிய தேசியக் கட்சி மற்றும் ஐக்கிய மக்கள் சக்தியை ஒன்றிணைப்பதற்குரிய பேச்சு வெற்றியளித்துள்ளது எனவும் அவர் கூறினார்.

போரை முடிக்க உதவிய தலைவரே டக்ளஸ்: மஹிந்த அணி புகழாரம்!

30 வருடகால போரை முடிவுக்கு கொண்டுவருவதற்கு உதவிய பிள்ளையான், டக்ளஸ் ஆகியோர் தற்போது சிறைதண்டனை எதிர்கொள்வது கவலையளிக்கின்றது. புலி டயஸ்போராக்களின் தேவைக்காகவே அவர்கள் இலக்கு வைக்கப்பட்டுள்ளனர் என்று ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி தெரிவித்துள்ளது.

மொட்டு கட்சி தலைமையகத்தில் நேற்று (01) நடைபெற்ற ஊடக சந்திப்பின்போதே அக்கட்சியின் செயலாளர் சாகர காரியவசம் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,

“இலங்கையில் நிலவிய 30 வருடகால போரை முடிவுக்கு கொண்டுவந்த தலைவர்கள் இன்று மறக்கப்பட்டுள்ளனர். உயிரை பணயம் வைத்து போராடிய படைவீரர்களுக்குரிய கௌரவம் வழங்கப்படுவதில்லை.

புலிகளின் அச்சுறுத்தலையும் கருத்திற்கொள்ளாது போரை முடிப்பதற்கு இரு தமிழ்த் தலைவர்கள் உதவினார்கள். பிள்ளையான் மற்றும் டக்ளஸ் தேவானந்தா ஆகிய இருவரும் புலிகளுக்கு எதிராக முன்னின்றவர்கள்.

எனினும், புலி டயஸ்போராக்களின் தேவைக்காக இவர்கள் இருவரும் சிறையில் உள்ளனர்.

பயங்கரவாதத்திலிருந்து நாட்டை பாதுகாப்பதற்காக மஹிந்த ராஜபக்சவால் முன்னெடுக்கப்பட்ட சமருக்கு ஒத்துழைப்பு வழங்கிய இரு தமிழ் தலைவர்களும் சிறை வைக்கப்பட்டுள்ளமை கவலைக்குரிய விடயமாகும்.” – என்றார்.

மரக்கறி விலைப்பட்டியல் (02.01.2026)

நுவரெலியா பொருளாதார மத்திய நிலையத்தால் இன்று (02) வெளியிடப்பட்டுள்ள மரக்கறி வகைகளின் (ஒரு கிலோ) விலை பட்டியல்…

பிரதமர் பதவி விலக வேண்டும்: மொட்டு கட்சி வலியுறுத்து!

மாகாணசபைத் தேர்தலை நடத்துமாறு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி வலியுறுத்தியுள்ளது

புத்தாண்டை முன்னிட்டு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி தலைமையகத்தில் நேற்று (01) விசேட ஊடகவியலாளர் மாநாடு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

இதில் பங்கேற்று கருத்து வெளியிடுகையிலேயே கட்சி செயலாளர் சாகர காரியவசம் மேற்கண்டவாறு வலியுறுத்தினார்.

“நாட்டு மக்களுக்கு வழங்கியுள்ள வாக்குறுதியின் பிரகாரம் மாகாணசபைத் தேர்தலை இவ்வருடம் நடத்துவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

எனினும், தேர்தலை நடத்துவதற்கு தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் அஞ்சுகின்றது என்பது புலனாகின்றது. இதனால் தேர்தலை பிற்போடுவதற்குரிய சகல முயற்சிகளும் முன்னெடுக்கப்படக்கூடும்.” – எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.

எமது கட்சி உறுப்பினர்களுக்கு எதிராக அரசாங்கம் குற்றச்சாட்டுகளை முன்வைத்தாலும், சட்ட ரீதியாக அவற்றை எதிர்கொண்டு நாம் குற்றமற்றவர்கள் என்பதை நிரூபிப்போம் என அவர் மேலும் கூறினார்.

அதேவேளை, தரம் 6 மாணவர்களுக்கான ஆங்கிலப் பாடத்திட்டத்தில், வயது வந்தோருக்கான இணையத்தளம் ஒன்றின் முகவரி அச்சிடப்பட்டிருந்த விவகாரம் தொடர்பில் கல்வி அமைச்சரான பிரதமர் பதவி விலக வேண்டும் எனவும் மொட்டு கட்சி வலியுறுத்தியுள்ளது.

அத்துடன், இவ்விவகாரம் தொடர்பில் பிரதமர் பதவி விலகவேண்டும் என முன்னாள் அமைச்சர் விமல்வீரவன்சவும் வலியுறுத்தியுள்ளார்.

 

 

 

சோகத்தில் முடிந்த புத்தாண்டு கொண்டாட்டம்: சுவிட்சர்லாந்தில் 40 பேர் பலி!

சுவிட்சர்லாந்திலுள்ள தனியார் விடுதியின் மதுபான பாரில், நேற்று நடந்த புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது நிகழ்ந்த தீ விபத்தில், 40 பேர் பலியாகினர். 100க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.

ஐரோப்பிய நாடான சுவிட்சர்லாந்தின் புகழ்பெற்ற சுற்றுலா தலம் கிரான்ஸ்- மோன்டானா. இப்பகுதி பனிச்சறுக்கு விளையாட்டுகள் மற்றும் அது சார்ந்த சொகுசு விடுதிகளுக்கு பெயர் போனது.

இங்கு உள்ள சொகுசு விடுதியில் நேற்று முன்தினம் புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதில் சுவிட்சர்லாந்து மட்டுமின்றி, பல்வேறு நாடுகளைச் சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.

நேற்று நள்ளிரவு மதுபான விருந்து, ஆடல், பாடல் என நிகழ்ச்சி களைகட்டியிருந்தது. அப்போது திடீரென சொகுசு விடுதியின் மதுபான பாரில் தீ பற்றியது. இந்த தீ சில நிமிடங்களில் விடுதி முழுதும் பரவியது. மக்கள் பலர் அலறியடித்து வெளியேறினர்.

சம்பவம் தொடர்பாக பொலிஸ் மற்றும் தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் பல மணிநேர போராட்டத்துக்கு பின் தீயை கட்டுக்கு கொண்டு வந்தனர்.

இந்த விபத்தில் நேற்று வரை 40 பேர் உயிரிழந்ததாக சுவிட்சர்லாந்து சுகாதார துறை தெரிவித்தது. நூற்றுக்கும் மேற்பட்டோர் தீ காயங்களுடன் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

பலரது நிலைமை கவலைக்கிடமாக இருப்பதால் பலி எண்ணிக்கை உயரக் கூடும் என அஞ்சப்படுகிறது. தீ பற்றிய போது அடுத்தடுத்து குண்டுவெடிக்கும் சத்தம் கேட்டதால், முதலில் இது பயங்கரவாத தாக்குதல் என்ற அச்சம் ஏற்பட்டது.

பொலிஸ் விசாரணையில் பயங்கரவாத தாக்குதல் இல்லை என்பது உறுதியானது.

முதற்கட்ட விசாரணையில் தீ விபத்து என தெரியவந்துள்ளது என்று பொலிஸார் தெரிவித்தனர்.

மதுபான விடுதியில் விருந்தினர்களுக்கு மதுவை பரிமாறும் தட்டின் மீது ஸ்பார்க்ளர் எனப்படும் மத்தாப்புகளை வைத்து பணியாளர்கள் எடுத்துச் சென்றுள்ளனர்.

அவை அங்கிருந்த திரைச்சீலை ஒன்றின் மீது பட்டு தீ பிடித்துள்ளது. அந்த தீ உடனடியாக விடுதி முழுதும் பரவியது.

விடுதிக்குள் புத்தாண்டு கொண்டாட்டத்துக்காக தடையை மீறி பட்டாசுகளை வைத்திருந்தனர். தீ பரவிய உடன் அவை வெடித்ததால் குண்டு வெடிப்பு போன்று சத்தம் கேட்டுள்ளது.

மீட்புப் பணியில் 10 ஹெலிகாப்டர்கள் மற்றும் 40 ஆம்புலன்ஸ்கள் ஈடுபடுத்தப்பட்டன எனவும் பொலிஸார் கூறினார்.

பாடசாலை நேரம் நீடிக்கப்பமாட்டாது: கல்வி அமைச்சு தீர்மானம்!

பாடசாலைக் கட்டமைப்பு மற்றும் போக்குவரத்து கட்டமைப்பு என்பன வழமைக்கு திரும்பும்வரை 2026 ஆம் ஆண்டில் பாடசாலை நேரத்தை நீடிக்காதிருக்க கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளது.

இது தொடர்பில் குறித்த அமைச்சால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளவை வருமாறு,

2026 ஆம் ஆண்டில் 5-13 ஆம் வகுப்புகளுக்கான பாடசாலை நேரம் காலை 7.30 மணி முதல் பிற்பகல் 1.30 மணி வரை மாறாமல் இருக்கும்.

அரசு, அரசு அங்கீகாரம் பெற்ற தனியார் பாடசாலைகள் மற்றும் பிரிவேனாக்கள் 2026 ஆம் ஆண்டின் முதல் பருவத்திற்கு ஜனவரி 5 ஆம் திகதி தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது.

ஒவ்வொரு பாடவேளைக்காக 45 நிமிடங்கள் ஒதுக்கப்படும்.

தரம் 6 முதல் தரம் 13 வரை ஒரு நாளுக்கான பாடவேளைகளின் எண்ணிக்கை 7 ஆகும்.

– கல்வி சீர்திருத்த செயல்முறை 2026 ஆம் ஆண்டில் தரம் 1 மற்றும் தரம் 6 க்கு செயல்படுத்தப்படும்.

– கல்வி சீர்திருத்த செயல்முறையின் கீழ், தரம் 6 கல்வி நடவடிக்கைகள் ஜனவரி 21, 2026 அன்று முறையாகத் தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது.

– 2025 க.பொ.த உயர்தரப் பரீட்சையின் மீதமுள்ள பகுதி 2026 ஜனவரி 12 முதல் 20 வரை நடைபெற உள்ளது.

 

சினிமா

பிரபல இந்திய பாடகி ஆஷா போஸ்லே காலமானார்!

0
  பிரபல இந்திய பின்னணி பாடகி ஆஷா போஸ்லே தமது 92ஆவது வயதில் இன்று(12) காலமானார். இந்திய திரையுலகில் 10,000-இற்கும் அதிக பாடல்களை பாடியுள்ள மூத்த பாடகி ஆஷா போஸ்லே நேற்று(11) மாரடைப்பு ஏற்பட்டதையடுத்து மும்பையிலுள்ள...

சின்னத்திரை நடிகை தற்#கொ#லை!

0
  இலங்கையை பூர்வீகமாகக்கொண்ட பிரபல சின்னத்திரை நடிகையான சுபாஷினி (வயது 36) தற்#கொ#லை செய்துகொண்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. "கயல்" சின்னத்திரை தொலைக்காட்சி தொடரில் நடித்து வருபவர் சுபாஷிணி (வயது36). இலங்கையை பூர்வீகமாகக்கொண்ட இவர் கடந்த...

“தனுஷின் நட்பை இழந்தது மிகப்பெரிய அவமானம்” – விக்னேஷ் சிவன் வருத்தம்

0
தனுஷ் உடனான நட்பை இழந்தது மிகப்பெரிய அவமானம் என்று விக்னேஷ் சிவன் பகிர்ந்துள்ளார். விக்னேஷ் சிவன் இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன் நடித்துள்ள ‘எல்.ஐ.கே’ திரைப்படம் ஏப்ரல் 10-ம் திகதி திரைக்கு வரவுள்ளது. நீண்ட பிரச்சினைகளுக்கு...

செய்தி

ஈஸ்டர் குண்டுத் தாக்குதல் – சூத்திரதாரிகளை தப்பவிடாமல் பின்னப்படும் சட்ட வலை

0
கட்டுரையாளர் - சதீஸ் செல்வராஜ் நன்றி - தினகரன் மிகக் கொடிய ஈஸ்டர் தற்கொலை குண்டுத்தாக்குதல் நடத்தப்பட்டு இன்றுடன் ஏழு வருடங்கள் பூர்த்தியாகிறது. உயிரிழந்தவர்களுக்கும் பாதிக்கப்பட்டவர்களுக்கும் நியாயம் கிடைக்க வேண்டுமென்பதே எமது எதிர்பார்ப்பாகவிருக்கிறது. கடந்த...

இன்று மதியமும் அடை மழை!

0
நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் பி.ப. 1.00 மணிக்குப் பின்னர் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. மேல், சப்ரகமுவ, மத்திய, தென் மற்றும் வடமேல் மாகாணங்களிலும் அநுராதபுரம் மாவட்டத்திலும்...

நோர்வூட் பகுதியில் மின்னல் தாக்கி வயோதிபர் பலி!

0
நோர்வூட் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ரொக்வூட் தோட்டத்தில் மின்னல் தாக்கி ஒருவர் உயிரிழந்துள்ளார். நேற்று இரவு 7 மணியளவிலேயே அவ்வனர்த்தம் இடம்பெற்றுள்ளது. 86 வயதான வயோதிபர் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். அவர் கிளங்கன் ஆதார வைத்திய சாலைக்கு கொண்டு...