Home Blog Page 143

சோகத்தில் முடிந்த புத்தாண்டு கொண்டாட்டம்: சுவிட்சர்லாந்தில் 40 பேர் பலி!

சுவிட்சர்லாந்திலுள்ள தனியார் விடுதியின் மதுபான பாரில், நேற்று நடந்த புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது நிகழ்ந்த தீ விபத்தில், 40 பேர் பலியாகினர். 100க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.

ஐரோப்பிய நாடான சுவிட்சர்லாந்தின் புகழ்பெற்ற சுற்றுலா தலம் கிரான்ஸ்- மோன்டானா. இப்பகுதி பனிச்சறுக்கு விளையாட்டுகள் மற்றும் அது சார்ந்த சொகுசு விடுதிகளுக்கு பெயர் போனது.

இங்கு உள்ள சொகுசு விடுதியில் நேற்று முன்தினம் புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதில் சுவிட்சர்லாந்து மட்டுமின்றி, பல்வேறு நாடுகளைச் சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.

நேற்று நள்ளிரவு மதுபான விருந்து, ஆடல், பாடல் என நிகழ்ச்சி களைகட்டியிருந்தது. அப்போது திடீரென சொகுசு விடுதியின் மதுபான பாரில் தீ பற்றியது. இந்த தீ சில நிமிடங்களில் விடுதி முழுதும் பரவியது. மக்கள் பலர் அலறியடித்து வெளியேறினர்.

சம்பவம் தொடர்பாக பொலிஸ் மற்றும் தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் பல மணிநேர போராட்டத்துக்கு பின் தீயை கட்டுக்கு கொண்டு வந்தனர்.

இந்த விபத்தில் நேற்று வரை 40 பேர் உயிரிழந்ததாக சுவிட்சர்லாந்து சுகாதார துறை தெரிவித்தது. நூற்றுக்கும் மேற்பட்டோர் தீ காயங்களுடன் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

பலரது நிலைமை கவலைக்கிடமாக இருப்பதால் பலி எண்ணிக்கை உயரக் கூடும் என அஞ்சப்படுகிறது. தீ பற்றிய போது அடுத்தடுத்து குண்டுவெடிக்கும் சத்தம் கேட்டதால், முதலில் இது பயங்கரவாத தாக்குதல் என்ற அச்சம் ஏற்பட்டது.

பொலிஸ் விசாரணையில் பயங்கரவாத தாக்குதல் இல்லை என்பது உறுதியானது.

முதற்கட்ட விசாரணையில் தீ விபத்து என தெரியவந்துள்ளது என்று பொலிஸார் தெரிவித்தனர்.

மதுபான விடுதியில் விருந்தினர்களுக்கு மதுவை பரிமாறும் தட்டின் மீது ஸ்பார்க்ளர் எனப்படும் மத்தாப்புகளை வைத்து பணியாளர்கள் எடுத்துச் சென்றுள்ளனர்.

அவை அங்கிருந்த திரைச்சீலை ஒன்றின் மீது பட்டு தீ பிடித்துள்ளது. அந்த தீ உடனடியாக விடுதி முழுதும் பரவியது.

விடுதிக்குள் புத்தாண்டு கொண்டாட்டத்துக்காக தடையை மீறி பட்டாசுகளை வைத்திருந்தனர். தீ பரவிய உடன் அவை வெடித்ததால் குண்டு வெடிப்பு போன்று சத்தம் கேட்டுள்ளது.

மீட்புப் பணியில் 10 ஹெலிகாப்டர்கள் மற்றும் 40 ஆம்புலன்ஸ்கள் ஈடுபடுத்தப்பட்டன எனவும் பொலிஸார் கூறினார்.

பாடசாலை நேரம் நீடிக்கப்பமாட்டாது: கல்வி அமைச்சு தீர்மானம்!

பாடசாலைக் கட்டமைப்பு மற்றும் போக்குவரத்து கட்டமைப்பு என்பன வழமைக்கு திரும்பும்வரை 2026 ஆம் ஆண்டில் பாடசாலை நேரத்தை நீடிக்காதிருக்க கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளது.

இது தொடர்பில் குறித்த அமைச்சால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளவை வருமாறு,

2026 ஆம் ஆண்டில் 5-13 ஆம் வகுப்புகளுக்கான பாடசாலை நேரம் காலை 7.30 மணி முதல் பிற்பகல் 1.30 மணி வரை மாறாமல் இருக்கும்.

அரசு, அரசு அங்கீகாரம் பெற்ற தனியார் பாடசாலைகள் மற்றும் பிரிவேனாக்கள் 2026 ஆம் ஆண்டின் முதல் பருவத்திற்கு ஜனவரி 5 ஆம் திகதி தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது.

ஒவ்வொரு பாடவேளைக்காக 45 நிமிடங்கள் ஒதுக்கப்படும்.

தரம் 6 முதல் தரம் 13 வரை ஒரு நாளுக்கான பாடவேளைகளின் எண்ணிக்கை 7 ஆகும்.

– கல்வி சீர்திருத்த செயல்முறை 2026 ஆம் ஆண்டில் தரம் 1 மற்றும் தரம் 6 க்கு செயல்படுத்தப்படும்.

– கல்வி சீர்திருத்த செயல்முறையின் கீழ், தரம் 6 கல்வி நடவடிக்கைகள் ஜனவரி 21, 2026 அன்று முறையாகத் தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது.

– 2025 க.பொ.த உயர்தரப் பரீட்சையின் மீதமுள்ள பகுதி 2026 ஜனவரி 12 முதல் 20 வரை நடைபெற உள்ளது.

 

சிவைபி ராம் ராஜினாமா! பின்னணி என்ன?

ஐக்கிய மக்கள் சக்தியின் முக்கியஸ்தர்களில் ஒருவரான கலாநிதி சி.வை.பி. ராம் கட்சியில் வகித்த அனைத்து பதவிகளையும் இராஜினாமா செய்துள்ளார்.

வடகொழும்பு பிரதான அமைப்பாளர், ஐக்கிய மக்கள் சக்தியின் செயற்குழு உறுப்பினர் மற்றும் கட்சியின் உதவிச் செயலாளர் ஆகிய பதவிகளையே அவர் துறந்துள்ளார்.

இந்த தகவலை மலையக குருவியிடம் கலாநிதி சிவைபி ராம் உறுதிப்படுத்தினார்.

தனது இராஜினாமா கடிதம் கட்சிக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது எனவும் அவர் கூறினார்.

சிவைபி ராமின் மகன் டானியல் ராம், ஐக்கிய மக்கள் சக்தியின் கொழும்பு மாநகர சபை உறுப்பினரான பதவி வகிக்கின்றார்.

கொழும்பு மாநகரசபையன் வரவு- செலவுத் திட்ட வாக்கெடுப்பு நாளில் அவர் சபைக்கு சமூகமளிக்கவில்லை. இதனால் அவரை கட்சி இடைநிறுத்தியுள்ளது.

இந்நிலையிலேயே சிவைபி ராம் தனது ராஜினாமா கடிதத்தை கையளித்துள்ளார்.

தனிப்பட்ட காரணங்களுக்காகவே தான் பதவி விலகுவதாகவும், தவிர்க்க முடியாத காரணத்தாலேயே தனது மகன் சபைக்கு செல்லவில்லை எனவும் ராம் கூறினார்.

கொழும்பு மாவட்டத்தில் முக்கிய தமிழ் அரசியல்வாதிகளில் ராமும் ஒருவர். அவர் மேல்மாகாணசபை உறுப்பினராகவும் பதவி வகித்துள்ளார்.

புத்தாண்டில் மாகாணசபைத் தேர்தலை கோருகிறது சஜித் அணி!

மாகாணசபைத் தேர்தலை நடத்துவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளது, பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி.

எதிர்க்கட்சி தலைவர் அலுவலகத்தில் இன்று (01) நடைபெற்ற ஊடக சந்திப்பின்போதே ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச்செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார இவ்வாறு வேண்டுகோள் விடுத்தார்.

நாட்டு மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளை தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் நிறைவேற்றவில்லை எனவும் அவர் குற்றஞ்சாட்டினார்.

மாகாணசபைத் தேர்தலை நடத்துவதற்கு அரசாங்கத்துக்கு முழு ஆதரவு வழங்கப்படும் எனவும் ரஞ்சித் மத்தும பண்டார குறிப்பிட்டார்.

புத்தாண்டை முன்னிட்டு வரலாற்று சிறப்புமிக்க தலதா மாளிகையில் ஜனாதிபதி வழிபாடு!

புத்தாண்டை முன்னிட்டு வரலாற்று சிறப்புமிக்க தலதா மாளிகைக்கு இன்று (01) காலை விஜயம் செய்து வழிபாட்டில் ஈடுபட்ட ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க , மல்வத்து மற்றும் அஸ்கிரிய மகாநாயக்க தேரர்களை சந்தித்து ஆசி பெற்றார்.

இன்று காலை வரலாற்றுச் சிறப்பு மிக்க தலதா மாளிகைக்குச் சென்ற ஜனாதிபதி தலதா மாளிகை வளகாத்தில் நடைபெற்ற மத வழிபாடுகளில் பங்கேற்றதோடு , புத்தாண்டை முன்னிட்டு தலதா மாளிகையை தரிசிக்க வந்த மக்களுடன் சுமூகமான உரையாடலில் ஈடுபட்டார்.

அதனைத் தொடர்ந்து,மல்வத்து விகாரைக்குச் சென்ற ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க, மல்வத்து மகாநாயக்க தேரர் அதி வணக்கத்திற்குரிய திப்பெட்டுவாவே ஸ்ரீ சுமங்கல தேரரை சந்தித்து, அவரது நலம் விசாரித்ததோடு அவருடன் சிறு கலந்துரையாடலில் ஈடுபட்டார்.

மல்வத்து மகா விஹாரையின் பிரதிப் பதிவாளர், ராஜகீய பண்டித தர்ஷனபதி வணக்கத்திற்குரிய மகாவெல ரத்தனபால நாயக்க தேரரும் இந்த சந்திப்பில் இணைந்து கொண்டார். பிரித் பாராயணம் செய்த மகாசங்கத்தினர் ஜனாதிபதிக்கு ஆசி வழங்கினர்.

மல்வத்து மகா விஹாரையின் அனுநாயக்க தேரர் அதி வணக்கத்திற்குரிய திம்புல்கும்புரே விமலதம்ம தேரரையும் ஜனாதிபதி சந்தித்து நலம் விசாரித்தார்.

அதனை அடுத்து, அஸ்கிரி மகா விஹாரைக்கு சென்ற ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க, அஸ்கிரி மகா விஹாரையின் மகாநாயக்க தேரர் அதி வணக்கத்திற்குரிய வரகாகொட ஸ்ரீ ஞானரதன தேரரை சந்தித்து சிறு கலந்துரையாடலில் ஈடுபட்டார்.

உதயமான புத்தாண்டை முன்னிட்டு ஜனாதிபதிக்கு ஆசி தெரிவித்த அஸ்கிரி மகாநாயக்க தேரர், மக்களுக்கு சிறந்த நாட்டைக் கட்டியெழுப்ப ஜனாதிபதி தலைமையிலான புதிய அரசாங்கம் முன்னெடுக்கும் திட்டங்களை புத்தாண்டில் புதிய பலத்துடன் செயல்படுத்த வாழ்த்துத் தெரிவித்தார்.

தொடர்ந்து, ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க, அஸ்கிரி தரப்பு அனுநாயக்க தேரர் அதி வணக்கத்திற்குரிய நாரம்பனாவே ஆனந்த தேரரை சந்தித்து, அவருடன் சிறிது நேரம் கலந்துரையாடலை மேற்கொண்டார்.

கடந்த ஆண்டு ஏற்பட்ட வரலாற்றில் மிக மோசமான இயற்கை அனர்த்த சவாலை எதிர்கொள்ள அரசாங்கம் செயல்படுத்திய திட்டம் குறித்து ஜனாதிபதி மல்வத்து மற்றும் அஸ்கிரி மகாநாயக்க தேரர்கள் மற்றும் அனுநாயக்க தேரர்களுக்கு தெளிவுபடுத்தியதோடு இந்த திட்டத்தை வெற்றிகரமாக தொடர்வதற்கு மகாசங்கத்தினர் தமது ஆசிகளைத் தெரிவித்தனர்.

போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் பிரதி அமைச்சர் பிரசன்ன குணசேன, பாராளுமன்ற உறுப்பினர் தனுர திசாநாயக்க உள்ளிட்டோர் இந்த நிகழ்வில் கலந்து கொண்டனர்.

இலங்கை விமானப்படையை வலுப்படுத்த நடவடிக்கை!

இலங்கை விமானப்படை 2026 ஆம் ஆண்டில் விமானங்களில் பாரிய மேம்படுத்தல்கள் மற்றும் பழுதுபார்ப்புகளை மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளதாக விமானப்படை பேச்சாளர் குறூப் கப்டன் நளின் வெவகும்புர தெரிவித்துள்ளார்.

இந்த ஆண்டில் அமெரிக்கா பத்து TH-57 சீ ரேஞ்சர் (பெல் 206) உலங்குவானூர்திகளை அமெரிக்கா கொடையாக வழங்கவுள்ளது.

மேலதிகமாக, அமெரிக்கா இந்த ஆண்டிலும், அவுஸ்ரேலியா 2027 ஆம் ஆண்டிலும்,இலங்கை விமானப்படைக்கு இரண்டு C-130 போக்குவரத்து விமானங்களை வழங்கவுள்ளன.

இவற்றைப் பொறுப்பேற்பதற்கான செயல்முறைகள் துரிதப்படுத்தப்பட்டுள்ளன.

TH-57 சீ ரேஞ்சர் உலங்குவானூர்திகளின் முதல் தொகுதி வரும் பிப்ரவரி மாத நடுப்பகுதியில் விமானப்படைக்கு வழங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அதேவேளை இலங்கை விமானப்படை, பல Mi-17 உலங்குவானூர்திகளைப் பழுதுபார்க்கும் பணிகளையும் மேற்கொண்டு வருகிறது.

இவை, இந்த மாத இறுதிக்குள் பழுதுபார்ப்புக்காக அனுப்ப திட்டமிடப்பட்டுள்ளது.

முன்னதாக, நான்கு Mi-17 உலங்குவானூர்திகளை அவசரமாக பழுதுபார்ப்பதற்கான, பல மில்லியன் டொலர் உடன்பாட்டிற்கு சிறிலங்கா அமைச்சரவை ஒப்புதல் அளித்தது,

இதற்கான செலவு ஒரு உலங்குவானூர்திக்கு கிட்டத்தட்ட, 4.5 மில்லியன் அமெரிக்க டொலர் என மதிப்பிடப்பட்டுள்ளது.

இவற்றின் பழுதுபார்ப்பு மற்றும் சேவை ஆயுட்கால நீடிப்பு திட்டத்திற்காக மொத்த செலவு 18 மில்லியன் டொலர்கள் என மதிப்பிடப்பட்டுள்ளது.

இந்த ஒப்பந்தம் பொஸ்னியா மற்றும் ஹெர்சகோவினாவின் M/s வின்ஸ்லி டிபென்ஸ் குரூப் க்கு வழங்கப்பட்டது.

அதன் உள்ளூர் முகவரான M/s செகுராடெக் லங்கா நிறுவனம், மிகக் குறைந்த மதிப்பீடு செய்யப்பட்ட ஏலதாரராக அடையாளம் காணப்பட்ட பின்னர்., சிறிலங்கா விமானப்படை ஏல செயல்முறையைத் தொடங்கியது.

இருப்பினும் அதிகாரத்துவ தடைகள் காரணமாக முன்னேற்றம் தாமதமானது.

பழுதுபார்ப்புகள் முடிந்ததும், Mi-17 உலங்குவானூர்திகளில் ஒன்று சிறிலங்கா விமானப்படை பணியாளர்களை உள்ளடக்கிய, ஐ.நா அமைதிப்படை பணிகளுக்கு அனுப்பப்படும் என்று விமானப்படை பேச்சாளர் குறூப் கப்டன் வெவகும்புர தெரிவித்துள்ளார்.

அண்மைய இயற்கைப் பேரிடரின் போது, சிறிலங்கா விமானப்படையின் செயற்திறன் குறைபாடுகள் வெளிப்பட்டதை அடுத்து, சிறிலங்கா அரசாங்கம் அனைத்துலக உதவியை நாடியிருந்தது.

இதையடுத்தே, இலங்கை விமானப்படையை வலுப்படுத்தும் திட்டங்களை துரிதப்படுத்தியுள்ளது.

குர்ஆன் மீது சத்தியப் பிரமாணம் செய்து நியூயார்க் மேயராக பதவியேற்றார் ஜோஹ்ரான் மம்தானி

இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ஜனநாயகக் கட்சித் தலைவரான 34 வயது ஜோஹ்ரான் மம்தானி அமெரிக்காவின் முக்கிய நகரமான நியூயார்க்கின் மேயராக இன்று பதவியேற்றார்.

நியூயார்க் நகரின் முதல் முஸ்லிம் மேயர் என்ற பெருமையை மம்தானி பெற்றுள்ளார்.

புத்தாண்டு நாளான இன்று நியூயார்க் சிட்டி ஹால் கட்டிடத்திற்கு அடியில் நீண்ட காலமாகப் பயன்பாட்டில் இல்லாத வரலாற்றுச் சிறப்புமிக்க பழைய சப்வே ரெயில் நிலையத்தில் இந்த பதவியேற்பு விழா நடைபெற்றது.

இந்தப் பதவியேற்பு விழாவின் போது அவர் அமெரிக்க வரலாற்றில் முதல்முறையாக திருக்குர்ஆன் மீது கை வைத்து சத்தியப் பிரமாணம் எடுத்துக் கொண்டார்.

நியூயார்க் மாநில அட்டர்னி ஜெனரல் லெட்டிட்டியா ஜேம்ஸ் இவருக்குப் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.

“இது எனது வாழ்நாளில் கிடைத்த மிகப்பெரிய கௌரவம்” என்று பதவியேற்ற பிறகு மம்தானி நெகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.

அடுத்த நான்கு ஆண்டுகளுக்கு மம்தானி நியூயார்க் மேயராகப் பணியாற்றுவார்.

தேர்தலின்போது டிரம்ப் இவரை ‘கம்யூனிஸ்ட் பைத்தியக்காரன்’ என்றும் இவருக்கு வாக்களித்தால் நியூ யார்க் நகருக்கான நிதியை நிறுத்துவேன் எனவும் மக்களை மிரட்டி இருந்தார். ஆனால் டிரம்ப் உடைய மிரட்டலை புறக்கணித்து நியூ யார்க் மக்கள் மம்தானியை தங்கள் தலைவராக தேர்வு செய்தனர்.

குவாட் நாடுகளின் தூதுவர்கள் சீனாவில் மந்திராலோசனை!

சீனாவிலுள்ள குவாட் நாடுகளின் தூதுவர்களுக்கிடையில் பீஜிங்கில் முக்கியத்துவமிக்க சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.

பீஜிங்கில் உள்ள அமெரிக்க தூதரகத்தில் இச்சந்திப்பு நடைபெற்றுள்ளது.

குவாட் அமைப்பில் அமெரிக்கா, இந்தியா, ஆஸ்திரேலியா மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகள் அங்கம் வகிக்கின்றன. இக்கூட்டணியானது சீனாவுக்கு எதிரான அமைப்பாக கருதப்படுகின்றது.

குவாட் கூட்டணி தொடர்பில் சீனா தொடர்ச்சியாக அதிருப்தி வெளியிட்டுவருகின்றது.

அமெரிக்காவின் சமீபத்திய வர்த்தக வரிகள் காரணமாக, இந்த அமைப்பின் கூட்டங்கள் நடைபெறவில்லை.

இந்நிலையில், சீனாவுக்கான அமெரிக்கா, இந்தியா, ஜப்பான் மற்றும் ஆஸ்திரேலிய தூதுவர்கள், சீன தலைநகர் பீஜிங்கில் உள்ள அமெரிக்க தூதரகத்தில் பேச்சு நடத்தியுள்ளனர்.

வழக்கமாக இது போன்ற சந்திப்புகள் குறித்து வெளிப்படையான அறிக்கை எதுவும் வெளியிடப்படாது. ஆனால், சீனாவுக்கான அமெரிக்க தூதுவர் டேவிட் பெர்டியூ, சமூக வலைதள பக்கத்தில், இந்த சந்திப்பு தொடர்பான புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார்.

‘இந்தோ – பசிபிக் பகுதியை சுதந்திரமாக வைத்திருக்க குவாட் செயல்பாடு உதவும். நான்கு நாடுகளின் உறவு தொடர்ந்து உறுதியாகவும், வலுவாகவும் உள்ளது’ என்றும் அவர் பதிவிட்டுள்ளார்.

ஊழல், மோசடிகளுக்கு முடிவுகட்டுவதாலேயே என்பிபி அரசுக்கு எதிராக தீய சக்திகள் பிரச்சாரம்!

ஊழல், மோசடியற்ற வழியில் தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் பயணிப்பதாலேயே அதனை கவிழ்ப்பது தொடர்பில் தீய சக்திகள் கதை பரப்பி வருகின்றன என்று அமைச்சர் கேடி லால்காந்த தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,

“ ஆட்சி அதிகாரத்தை இழந்து தவிக்கும் தரப்பினர் தேசிய மக்கள் சக்தியின் பொருளாதார மேம்பாடு மற்றும் ஜனநாயக வழியிலான பயணம் தொடர்பில் கவலயடைந்துள்ளனர்.

அடுத்தவர்களின் ஊழைப்பை சுரண்டி சுகபோக வாழ்க்கை வாழ முடியாத நிலையும் காணப்படுகின்றது.

எனவே, எமது பயணத்தை குழப்புவதற்கு அத்தரப்பினர் முயற்சிக்கின்றனர். இந்த நாசகார செயலுக்கு நாசகார ஊடகங்களும் துணை நிற்கின்றன.

மக்கள் ஆணைக்கு எதிராக செயல்பட்ட அரசாங்கங்களுக்கு மக்கள் தக்க பாடம் புகட்டினர். அதேபோல மக்களை குழப்பும் வகையில் செயல்படும் ஊடகங்களுக்கும் மக்கள் சிறந்த பதிலை வழங்குவார்கள்.

மக்கள் சக்திக்கு முன்னால் வேறு சக்திகள் தாக்கு பிடித்து நிற்க முடியாது.

ஊழல், மோசடி அற்ற பயணம் காரணமாகவே தேசிய மக்கள் சக்திக்கு எதிராக சிலர் செயல்படுகின்றனர். அரசாங்கம் கவிழும் என்றெல்லாம் கதைகளை பரப்பி வருகின்றனர்.” – என்றார் அமைச்சர் லால்காந்த.

சினிமா

பிரபல இந்திய பாடகி ஆஷா போஸ்லே காலமானார்!

0
  பிரபல இந்திய பின்னணி பாடகி ஆஷா போஸ்லே தமது 92ஆவது வயதில் இன்று(12) காலமானார். இந்திய திரையுலகில் 10,000-இற்கும் அதிக பாடல்களை பாடியுள்ள மூத்த பாடகி ஆஷா போஸ்லே நேற்று(11) மாரடைப்பு ஏற்பட்டதையடுத்து மும்பையிலுள்ள...

சின்னத்திரை நடிகை தற்#கொ#லை!

0
  இலங்கையை பூர்வீகமாகக்கொண்ட பிரபல சின்னத்திரை நடிகையான சுபாஷினி (வயது 36) தற்#கொ#லை செய்துகொண்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. "கயல்" சின்னத்திரை தொலைக்காட்சி தொடரில் நடித்து வருபவர் சுபாஷிணி (வயது36). இலங்கையை பூர்வீகமாகக்கொண்ட இவர் கடந்த...

“தனுஷின் நட்பை இழந்தது மிகப்பெரிய அவமானம்” – விக்னேஷ் சிவன் வருத்தம்

0
தனுஷ் உடனான நட்பை இழந்தது மிகப்பெரிய அவமானம் என்று விக்னேஷ் சிவன் பகிர்ந்துள்ளார். விக்னேஷ் சிவன் இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன் நடித்துள்ள ‘எல்.ஐ.கே’ திரைப்படம் ஏப்ரல் 10-ம் திகதி திரைக்கு வரவுள்ளது. நீண்ட பிரச்சினைகளுக்கு...

செய்தி

ஹைதராபாத், டெல்லி அணிகள் இன்று மோதல்!

0
ஐ.பி.எல். தொடரில் இன்று நடைபெறும் 31 ஆவது லீக் போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் , டெல்லி கேப்பிடல்ஸ் ஆகிய அணிகள் இன்று மோதுகின்றன. ஹைதராபாத் ராஜீவ் காந்தி மைதானத்தில் இன்றிரவு 7.30 மணிக்கு போட்டி...

மும்பை இந்தியன்ஸ் அணி அபார வெற்றி!

0
ஐ.பி.எல்.2026 தொடரில் தொடர் தோல்விகளுக்கு பிறகு முதல் வெற்றியை நேற்று பதிவு செய்தது மும்பை இந்தியன்ஸ் அணி . ஐபிஎல் 2026 தொடரின் 30-வது லீக் ஆட்டத்தில் குஜராத் டைடன்ஸ், மும்பை இந்தியன்ஸ் ஆகிய...

ஈஸ்டர் குண்டுத் தாக்குதல் – சூத்திரதாரிகளை தப்பவிடாமல் பின்னப்படும் சட்ட வலை

0
கட்டுரையாளர் - சதீஸ் செல்வராஜ் நன்றி - தினகரன் மிகக் கொடிய ஈஸ்டர் தற்கொலை குண்டுத்தாக்குதல் நடத்தப்பட்டு இன்றுடன் ஏழு வருடங்கள் பூர்த்தியாகிறது. உயிரிழந்தவர்களுக்கும் பாதிக்கப்பட்டவர்களுக்கும் நியாயம் கிடைக்க வேண்டுமென்பதே எமது எதிர்பார்ப்பாகவிருக்கிறது. கடந்த...