Home Blog Page 144

குவாட் நாடுகளின் தூதுவர்கள் சீனாவில் மந்திராலோசனை!

சீனாவிலுள்ள குவாட் நாடுகளின் தூதுவர்களுக்கிடையில் பீஜிங்கில் முக்கியத்துவமிக்க சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.

பீஜிங்கில் உள்ள அமெரிக்க தூதரகத்தில் இச்சந்திப்பு நடைபெற்றுள்ளது.

குவாட் அமைப்பில் அமெரிக்கா, இந்தியா, ஆஸ்திரேலியா மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகள் அங்கம் வகிக்கின்றன. இக்கூட்டணியானது சீனாவுக்கு எதிரான அமைப்பாக கருதப்படுகின்றது.

குவாட் கூட்டணி தொடர்பில் சீனா தொடர்ச்சியாக அதிருப்தி வெளியிட்டுவருகின்றது.

அமெரிக்காவின் சமீபத்திய வர்த்தக வரிகள் காரணமாக, இந்த அமைப்பின் கூட்டங்கள் நடைபெறவில்லை.

இந்நிலையில், சீனாவுக்கான அமெரிக்கா, இந்தியா, ஜப்பான் மற்றும் ஆஸ்திரேலிய தூதுவர்கள், சீன தலைநகர் பீஜிங்கில் உள்ள அமெரிக்க தூதரகத்தில் பேச்சு நடத்தியுள்ளனர்.

வழக்கமாக இது போன்ற சந்திப்புகள் குறித்து வெளிப்படையான அறிக்கை எதுவும் வெளியிடப்படாது. ஆனால், சீனாவுக்கான அமெரிக்க தூதுவர் டேவிட் பெர்டியூ, சமூக வலைதள பக்கத்தில், இந்த சந்திப்பு தொடர்பான புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார்.

‘இந்தோ – பசிபிக் பகுதியை சுதந்திரமாக வைத்திருக்க குவாட் செயல்பாடு உதவும். நான்கு நாடுகளின் உறவு தொடர்ந்து உறுதியாகவும், வலுவாகவும் உள்ளது’ என்றும் அவர் பதிவிட்டுள்ளார்.

ஊழல், மோசடிகளுக்கு முடிவுகட்டுவதாலேயே என்பிபி அரசுக்கு எதிராக தீய சக்திகள் பிரச்சாரம்!

ஊழல், மோசடியற்ற வழியில் தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் பயணிப்பதாலேயே அதனை கவிழ்ப்பது தொடர்பில் தீய சக்திகள் கதை பரப்பி வருகின்றன என்று அமைச்சர் கேடி லால்காந்த தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,

“ ஆட்சி அதிகாரத்தை இழந்து தவிக்கும் தரப்பினர் தேசிய மக்கள் சக்தியின் பொருளாதார மேம்பாடு மற்றும் ஜனநாயக வழியிலான பயணம் தொடர்பில் கவலயடைந்துள்ளனர்.

அடுத்தவர்களின் ஊழைப்பை சுரண்டி சுகபோக வாழ்க்கை வாழ முடியாத நிலையும் காணப்படுகின்றது.

எனவே, எமது பயணத்தை குழப்புவதற்கு அத்தரப்பினர் முயற்சிக்கின்றனர். இந்த நாசகார செயலுக்கு நாசகார ஊடகங்களும் துணை நிற்கின்றன.

மக்கள் ஆணைக்கு எதிராக செயல்பட்ட அரசாங்கங்களுக்கு மக்கள் தக்க பாடம் புகட்டினர். அதேபோல மக்களை குழப்பும் வகையில் செயல்படும் ஊடகங்களுக்கும் மக்கள் சிறந்த பதிலை வழங்குவார்கள்.

மக்கள் சக்திக்கு முன்னால் வேறு சக்திகள் தாக்கு பிடித்து நிற்க முடியாது.

ஊழல், மோசடி அற்ற பயணம் காரணமாகவே தேசிய மக்கள் சக்திக்கு எதிராக சிலர் செயல்படுகின்றனர். அரசாங்கம் கவிழும் என்றெல்லாம் கதைகளை பரப்பி வருகின்றனர்.” – என்றார் அமைச்சர் லால்காந்த.

அரசியல் மயமாகிறது பொலிஸ்துறை: நாமல் குற்றச்சாட்டு!

பொலிஸ் துறையை முழுமையாக அரசியல் மயப்படுத்தும் முயற்சியில் தற்போதைய பொலிஸ்மா அதிபர் ஈடுபட்டுள்ளார் என்று ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ச எம்.பி.குற்றஞ்சாட்டியுள்ளார்.

விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் ஜொன்ஸ்டன் பெர்ணான்டோவின் மகனை பார்வையிட்ட பின்னர் ஊடகங்களிடம் கருத்து வெளியிடுகையிலேயே நாமல் ராஜபக்ச இவ்வாறு கூறினார்.

“ பொலிஸாரைக் கண்டு எமது தரப்பினர் ஓடி ஒளியமாட்டார்கள். உரிய வகையில் அறிவித்தல் வந்தால், பொலிஸ் நிலையம் சென்று வாக்குமூலம் வழங்குவோம். அதன்பின்னர் சட்டத்தை அமுல்படுத்தலாம். இதனைவிடுத்து மக்களின் பணத்தை வீண்விரயம் செய்து, குழுக்களை அனுப்பி எதற்காக தேடுதல் நடத்த முற்பட வேண்டும்?எனவும் அவர் கேள்வி எழுப்பினார்.

நாட்டில் பொலிஸை அரசியல் மயப்படுத்துவதற்கு பொலிஸ்மா அதிபர் முற்படுகின்றார். இதனால் பொலிஸ்துறைக்குள்ள நன்மதிப்புக்கு களங்கம் ஏற்படக்கூடும்.” – என நாமல் ராஜபக்ச மேலும் குறிப்பிட்டார்.

மரக்கறி விலைப்பட்டியல் (01.01.2026)

நுவரெலியா பொருளாதார மத்திய நிலையத்தால் இன்று (01) வெளியிடப்பட்டுள்ள மரக்கறி வகைகளின் (ஒரு கிலோ) விலை பட்டியல்…

சஜித் தலைமையில் ரணிலின் ஆலோசனையுடன் இணைந்து பயணிப்போம்!

ஐக்கிய மக்கள் சக்தி மற்றும் ஐக்கிய தேசியக் கட்சி என்பன ஒன்றிணைவது உறுதியாகியுள்ளது. சஜித் பிரேமதாசவின் தலைமையின்கீழ், ரணில் விக்கிரமசிங்கவின் ஆலோசனையுடன் இணைந்து பயணிக்க வேண்டும் என்று முன்னாள் அமைச்சர் ஹரின் பெர்ணான்டோ தெரிவித்தார்.

ஐக்கிய தேசியக் கட்சியின் சிரேஸ்ட தலைவர்கள் மற்றும் ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாச ஆகியோருக்கிடையில் சந்திப்பு நடைபெற்றது.

இச்சந்திப்பு தொடர்பில் ஊடகங்களிடம் கருத்து வெளியிடுகையிலேயே ஹரின் பெர்ணான்டோ மேற்கண்டவாறு கூறினார்.

“எதிர்க்கட்சி தலைவருடன் நடைபெற்ற சந்திப்பு தொடர்பில் கட்சி தலைவர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு தெரியப்படுத்தப்பட்டிருக்கும். இது பற்றி கட்சியின் மத்திய செயற்குழுவுக்கு அவர் தெரியப்படுத்துவார்.

ஐக்கிய மக்கள் சக்தி மற்றும் ஐக்கிய தேசியக் கட்சி என்பன ஒன்றிணைந்தாலும் பொதுவிடயங்களின்போது ஏனைய கட்சிகளையும் இணைத்துக்கொண்டு கூட்டு பயணம் இடம்பெறும்.

மீண்டும் நாடாளுமன்றம் வருவதில் ரணில் விக்கிரமசிங்க ஆர்வம் காட்டவில்லை. வலுவானதொரு கூட்டு எதிரணியை உருவாக்கவே அவர் முற்படுகின்றார்.

எனவே, சஜித்தின் தலைமையின்கீழ் ரணிலின் ஆலோசனையுடன் இணைந்து பயணித்தால் தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்துக்கு அரசியல் ரீதியில் சவால் விடுக்ககூடியதாக இருக்கும்.” – எனவும் ஹரின் பெர்ணான்டோ குறிப்பிட்டார்.

புதிய உத்வேகத்துடன் 2026ஆம் ஆண்டிற்குள் அடியெடுத்து வைப்போம்!

 

பிரதமரின் புத்தாண்டு வாழ்த்துச்செய்தி

2026 ஆம் ஆண்டின் விடியலில் நாம் நின்றுகொண்டிருக்கும் இவ்வேளையில், கடந்து வந்த 2025ஆம் ஆண்டினை மீளாய்வு செய்வது காலத்தின் தேவையென நான் கருதுகிறேன்.

ஒரு மக்கள் நல அரசாங்கமாக, பல தீர்க்கமான மற்றும் முன்னோடியான நடவடிக்கைகளை முன்னெடுக்க முடிந்த ஓர் ஆண்டாக 2025ஆம் ஆண்டினை எண்ணி ஒருபுறம் நாம் மகிழ்ச்சியடைய முடியும். புதிய அரசியல் கலாசாரமொன்றின் அடிப்படையில், அரச நிர்வாகத்தில் வெளிப்படைத்தன்மையை உறுதிப்படுத்தவும், ஊழலற்ற வினைத்திறன் மிக்க அரச சேவைக்கான அடித்தளத்தை அமைக்கவும் எம்மால் முடிந்துள்ளதென நான் நம்புகிறேன்.

பொருளாதார ஸ்திரத்தன்மை, சர்வதேச ரீதியாக எமது நாட்டின் மீது கட்டியெழுப்பப்பட்டு வரும் நேர்மறையான கண்ணோட்டம், வெளிப்படைத்தன்மை மிக்க ஆட்சி முறைமை மற்றும் சட்டத்தின் மேலாதிக்கத்தை உறுதிப்படுத்தியமை போன்ற பல பிரதான துறைகளின் ஊடாக 2025ஆம் ஆண்டைப் பற்றி நாம் திருப்தியடையலாம்.

எவ்வாறாயினும், 2025ஆம் ஆண்டின் இறுதிப் பகுதியில் எதிர்கொள்ள நேர்ந்த துரதிர்ஷ்டவசமான இயற்கை அனர்த்தம், எமது நாட்டிற்குச் சவாலானதொரு காலப்பகுதியாக அமைந்தது. அது நம் அனைவரது மனங்களையும் கவலையில் ஆழ்த்திய போதிலும், அத்தகைய இக்கட்டான தருணத்திலும் இலங்கையர்களாக நாட்டு மக்கள் வெளிப்படுத்திய சகோதரத்துவம், மனிதாபிமானம் மற்றும் ஒருவருக்கொருவர் உதவிக்கரம் நீட்டிய விதம் குறித்து இன்று உலகளவில் பேசப்பட்டு வருகின்றது.

அந்தச் சவால்களை வெற்றிகொண்டு, அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களின் மனங்களை ஆற்றி, சீர்குலைந்த அவர்களின் வாழ்வாதாரத்தை மீளக் கட்டியெழுப்பும் உறுதியான அர்ப்பணிப்புடனேயே 2026ஆம் ஆண்டிற்குள் நாம் கால்பதிக்கின்றோம்.

கல்வித் துறையில் தரமான, அதேநேரம் நிலையான மாற்றத்தை ஏற்படுத்துகின்ற,கல்வித்துறையின் மாற்றம், அரச சேவை உட்பட அனைத்துத் துறைகளையும் டிஜிட்டல் மயமாக்கல், சாத்தியமான புதிய எண்ணக்கருக்களைக் கொண்ட முயற்சியாளர்களுக்கும் படைப்பாளர்களுக்கும் உலகளாவிய ரீதியில் முன்னேறுவதற்கான சூழலை உருவாக்குதல், போதைப்பொருள் அற்ற – சுற்றாடலை நேசிக்கும் – மனிதாபிமானம் மிக்க சமூகத்தைக் கட்டியெழுப்புதல் போன்ற பல சிறப்பான நோக்கங்களுடன், இன, மத மற்றும் கட்சிப் பேதங்களற்ற பலமான இலங்கை என்ற அடையாளத்துடன் இந்நாட்டைக் கட்டியெழுப்பும் பொறுப்பு அரசாங்கம் உட்பட ஒட்டுமொத்த நாட்டு மக்களுக்கும் இருக்கின்றது என்பதை இவ்வேளையில் நினைவூட்ட விரும்புகிறேன்.

கடந்த ஆண்டில் நாம் எதிர்கொண்ட சகலவிதமான சவால்களையும் சக்தியாக மாற்றிக்கொண்டு, புதிய உத்வேகத்துடனும் எதிர்பார்ப்புகளுடனும் 2026ஆம் ஆண்டிற்குள் அடியெடுத்து வைக்குமாறு உங்களை அழைக்கின்றேன்.

உங்கள் அனைவருக்கும் அமைதியும், மகிழ்ச்சியும், சுபீட்சமும் நிறைந்த வெற்றிகரமான இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள்!

மீளக் கட்டியெழுப்பும் பாரிய பணியை தோள்மேல் சுமந்த நாடென்ற வகையில் கால்பதிக்கிறோம்!

ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவின் புத்தாண்டு வாழ்த்து செய்தி!

மிகப்பெரிய மறுசீரமைப்புச் செயல்முறையையும், மீளக் கட்டியெழுப்பும் பாரிய பணியையும் தோள்மேல் சுமந்த நாடென்ற வகையில் நாம் 2026 ஆம் ஆண்டு புத்தாண்டில் கால்பதிக்கிறோம்.

பல்வேறு சவால்களுக்கு மத்தியிலும், கடந்த 2025 ஆம் ஆண்டு தேசிய அபிலாஷைகளை அடிப்படையாகக் கொண்ட நிலையான அபிவிருத்திக்காக அடித்தளமிடப்பட்ட ஆண்டாக அமைந்தது.

1977 ஆம் ஆண்டுக்குப் பிறகு மிகக் குறைந்த வரவு செலவுத்திட்ட பற்றாக்குறையைப் பதிவு செய்தல், 2007 ஆம் ஆண்டுக்குப் பிறகு நாட்டின் கூடுதலான அரச வருவாயை ஈட்டுதல், வரலாற்றில் முதல் முறையாக முதன்மை கணக்கு மிகையை பெற்றமை , பொருட்கள் மற்றும் சேவைகளின் ஏற்றுமதி வருவாயை சுமார் 17 பில்லியன் டொலர்களாக அதிகரித்தமை ,

எமது நாட்டு வரலாற்றில் அரச வருவாய் இலக்குகளை விஞ்சும் ஒரே ஆண்டாக 2025 ஆம் ஆண்டை மாற்றியமை மற்றும் அண்மைக் காலத்தில் சுற்றுலா பயணிகள் அதிகளவில் நாட்டிற்கு வருகை தந்த வருடமாக பதிவானமை போன்றன 2025 ஆம் ஆண்டில் அடையப்பட்ட குறிப்பிடத்தக்க பொருளாதார சாதனைகளாகும்.

இலங்கை மக்களின் நீண்டகால எதிர்பார்ப்பாக இருந்த ஊழல் நிறைந்த அரசியல் முறைமைக்கு பதிலாக பொதுமக்களுக்கு நேர்மையாக சேவை செய்யும் ஒரு சிறந்த அரசியல் கலாச்சாரத்தை நாட்டில் உருவாக்கவும் எதிர்கால சந்ததியினரை போதைப்பொருள் அச்சுறுத்தலில் இருந்து விடுவிப்பதற்கான ‘ முழு நாடுமே ஒன்றாக ‘ தேசிய செயற்பாட்டைப் போன்ற திட்டங்களை செயல்படுத்தவும் நடவடிக்கை எடுக்கப்பட்டதோடு இவை 2025 ஆம் ஆண்டு நாட்டின் அரசியல் மற்றும் சமூக மாற்றத்தில் ஒரு திருப்புமுனையான ஆண்டாக பதியப்படுகிறது.

அண்மைக் காலங்களில் நாடு எதிர்கொண்ட மிகப்பெரிய இயற்கை பேரழிவின் சவாலை கடந்த ஆண்டு நாங்கள் ஒன்றாக எதிர்கொண்டோம். நமது மக்களிடையே உள்ள மனிதநேயப் பண்பானது எந்த பேரழிவினாலும் பறிக்க முடியாத ஒரு சிறந்த குணம் என்பதை தெளிவாக நிரூபித்ததோடு நாடு முழுவதும் உள்ள மக்கள் பாதிக்கப்பட்ட சகோதர மக்களின் துயரத்தில் கைகோர்த்தார்கள்.

இந்தச் சவாலை எதிர்கொள்வதில் எங்களுக்கு ஆதரவளித்த வெளிநாடுகளில் உள்ள இலங்கையர்களுக்கும், மீளெழுச்சிக்கு நட்புறவின் பலத்தை வழங்கிய உலகெங்கிலும் உள்ள அனைத்து நட்பு நாடுகளுக்கும், அனர்த்த நிலையில் அயராது உழைத்த பொலிஸார் மற்றும் முப்படைகளுக்கும், இந்த நாட்டின் அரச உத்தியோகஸ்தர் களுக்கும் எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். நாம் ஒன்றாக, இன்னும் நீண்ட தூரம் பயணிக்க வேண்டியுள்ளது.

உலக வரலாற்றில் வீழ்ச்சியடைந்த ஒவ்வொரு நாட்டையும் கட்டியெழுப்புவதில் அந்த மக்களின் இலட்சியமும் தைரியமும் பக்கபலமாக இருந்தது. நமது அன்பான பிரஜைகளின் அசைக்க முடியாத தைரியத்தின் பலனால், நாம் முன்பு இருந்ததை விட சிறந்த நாட்டை மீண்டும் கட்டியெழுப்ப முடியும் என்று உறுதியாக நம்புகிறோம்.

புத்தாண்டு வருகை கடந்த ஆண்டின் அனுபவங்களை மீள்பரிசீலனை செய்வதற்கு வாய்ப்பு அளிப்பதோடு, புத்தாண்டு தொடர்பில் சாதகமான மனப்பாங்குகளுடன் மீள திட்டமிடுவதற்கும் ஒரு சந்தர்ப்பத்தை வழங்குகிறது.

நாட்டை மீண்டும் கட்டியெழுப்புவதற்கான திட்டத்தில் அசைக்க முடியாத உறுதியுடனும் நம்பிக்கையுடனும் சகோதரத்துவத்துடன் கைகோர்க்க அனைவரையும் நான் அழைப்பு விடுகிறேன். மலர்ந்த 2026 புத்தாண்டு உங்கள் அனைவரினதும் எதிர்பார்ப்புகள் நிறைவேறும் வெற்றிகரமான புத்தாண்டாக அமைய வாழ்த்துகிறேன்.

அநுர குமார திசாநாயக்க
ஜனாதிபதி
இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசு

சிறிகொத்ததான் எங்கள் தாய்வீடு: ரணில், சஜித் இணைவது உறுதி!

ஐக்கிய மக்கள் சக்தியும், ஐக்கிய தேசியக் கட்சியும் நிச்சயம் ஒன்றிணைந்து செயல்படும் என்பதை என்னால் உறுதியாக கூற முடியும் – என்று நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.எம். மரிக்கார் தெரிவித்தார்.

எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச மற்றும் ஐக்கிய தேசியக் கட்சியின் முக்கியஸ்தர்களுக்கிடையில் நேற்று நடைபெற்ற சந்திப்பு குறித்து இன்று கருத்து வெளியிடுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.

“ஐக்கிய தேசியக் கட்சிதான் எமது தாய்க்கட்சி, எமது தாய்வீடுதான் சிறிகொத்த. சிற்சில காரணங்களுக்காக நாம் பிரிந்தோம். எனினும், மீள இணைவதில் எவ்வித சிக்கலும் இல்லை.எனவே, இரு கட்சிகளின் இணைவு என்பது உறுதி.” எனவும் மரிக்கார் குறிப்பிட்டார்.

 

பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் ஆஸ்திரேலியாவில் புத்தாண்டு கொண்டாட்டம்!

பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் ஆஸ்திரேலியாவில் புத்தாண்டு கொண்டாட்டம்!

ஆஸ்திரேலியாவில் பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் புத்தாண்டை வரவேற்கும் நிகழ்வுகள் இடம்பெற்றன.

சிட்னி,போண்டி கடற்கரையில் யூத சமூகத்தை இலக்கு வைத்து நடத்தப்பட்ட பயங்கரவாதத் தாக்குதலில் 15 பேர் கொல்லப்பட்டனர்.

இதனால் அச்சம், துயரத்துக்கு மத்தியிலேயே சிட்னி வாசிகள் புத்தாண்டை வரவேற்றனர்.

புத்தாண்டு பிறக்கும்வேளை சிட்னியின் புகழ்பெற்ற துறைமுகப் பாலம் வெண்மையாக மின்னியது.
பயங்கரவாதத் தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்கு ஒரு நிமிட அஞ்சலியும் செலுத்தப்பட்டது.

ஆஸ்திரேலியா முழுவதும் புத்தாண்டு நிகழ்வுகள் பொலிஸ் பிரசன்னத்திற்கு மத்தியில் நடந்தன. குறிப்பாக சிட்னியில் உச்சகட்ட பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

பிரதமர் அந்தோணி அல்பானீஸ் தனது புத்தாண்டு செய்தியில் இந்த நடவடிக்கைகள் பொதுமக்களின் பாதுகாப்பிற்காகவே என குறிப்பிட்டார்.

உலக மக்கள் அனைவரும் 2026 புத்தாண்டை வரவேற்க முழு உற்சாகத்துடன் தயாராகி வருகின்றனர்.

உலகம் முழுவதும் ஒரே திகதி முறை பயன்படுத்தப்பட்டாலும், புவியின் சுழற்சி காரணமாக உலக நாடுகளின் காலநிலை மற்றும் அங்குள்ள நேர முறை என்பது ஒவ்வொரு நாட்டின் இருப்பிடத்திற்கு ஏற்றவாறு மாறுபடும்.

அந்த வகையில் உலகிலேயே முதல் நாடாக 2026ஐ வரவேற்றது கிரிபாட்டி தீவு.

அதைத் தொடர்ந்து நியூசிலாந்து, ஆஸ்திரேலியா நாடுகளில் அடுத்த சில மணி நேரங்களில் புத்தாண்டு பிறந்தது.

கொழும்பு மாநகரசபையில் வென்றது மனசாட்சியா, அரசியல் டீலா?

கொழும்பு மாநகரசபையில் கூட்டு எதிரணி தமது பெரும்பான்மை பலத்தை இழக்கவில்லை. மக்களுக்காக கூட்டு எதிரணியாக தொடர்ந்து செயல்படுவோம் என்று ஐக்கிய மக்கள் சக்தியின் மாநகரசபை உறுப்பினர் ரிசா சாருக் தெரிவித்தார்.

வரவு- செலவுத் திட்டம் முதல் தடவை தோற்கடிக்கப்பட்டபோது மனசாட்சி பற்றி கருத்து வெளியிட்ட மேயர், இன்று ஆளுங்கட்சிக்கு எவ்வாறு பெரும்பான்மை பலம் கிடைத்தது என்பது பற்றி தனது மனசாட்சியிடம் கேட்க வேண்டும் எனவும் அவர் கூறினார்.

கொழும்பு மாநகரசபையின் வரவு- செலவுத் திட்டம் இன்று நிறைவேற்றப்பட்டது. இதன்பின்னர் ஊடகங்களிடம் கருத்து வெளியிடுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.

“ கூட்டு எதிரணியை பிரதிநிதித்துவப்படுத்திய உறுப்பினர் ஒருவர் பட்ஜட்டுக்கு ஆதரவாக வாக்களித்தார். முஸ்லிம் காங்கிரஸ் உறுப்பினர் ஒருவரே இவ்வாறு செயல்பட்டார்.

ஏனைய இரு உறுப்பினர்கள் காணாமல்போய் இருந்தனர். அவர்களது தொலைபேசிகூட இயங்கவில்லை. எனவே, என்ன நடந்திருக்கும் என்பது அனைவருக்கும் தெரியும்.” – எனவும் அவர் கூறினார்.

சினிமா

பிரபல இந்திய பாடகி ஆஷா போஸ்லே காலமானார்!

0
  பிரபல இந்திய பின்னணி பாடகி ஆஷா போஸ்லே தமது 92ஆவது வயதில் இன்று(12) காலமானார். இந்திய திரையுலகில் 10,000-இற்கும் அதிக பாடல்களை பாடியுள்ள மூத்த பாடகி ஆஷா போஸ்லே நேற்று(11) மாரடைப்பு ஏற்பட்டதையடுத்து மும்பையிலுள்ள...

சின்னத்திரை நடிகை தற்#கொ#லை!

0
  இலங்கையை பூர்வீகமாகக்கொண்ட பிரபல சின்னத்திரை நடிகையான சுபாஷினி (வயது 36) தற்#கொ#லை செய்துகொண்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. "கயல்" சின்னத்திரை தொலைக்காட்சி தொடரில் நடித்து வருபவர் சுபாஷிணி (வயது36). இலங்கையை பூர்வீகமாகக்கொண்ட இவர் கடந்த...

“தனுஷின் நட்பை இழந்தது மிகப்பெரிய அவமானம்” – விக்னேஷ் சிவன் வருத்தம்

0
தனுஷ் உடனான நட்பை இழந்தது மிகப்பெரிய அவமானம் என்று விக்னேஷ் சிவன் பகிர்ந்துள்ளார். விக்னேஷ் சிவன் இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன் நடித்துள்ள ‘எல்.ஐ.கே’ திரைப்படம் ஏப்ரல் 10-ம் திகதி திரைக்கு வரவுள்ளது. நீண்ட பிரச்சினைகளுக்கு...

செய்தி

தோட்ட முகாமையாளருக்கு எதிராக தொழிலாளர்கள் போராட்டம்!

0
திம்புள்ள, பத்தன பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மேபீல்ட் தோட்ட தொழிலாளர்கள் இன்று (21) பணி புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். தோட்ட முகாமையாளர் மற்றும் உதவி முகாமையாளர் ஆகியோரை உடனடியாக இடமாற்றுமாறு வலியுறுத்தியே இப்போராட்டம் முன்னெடுக்கப்படுகின்றது. தோட்டத் தொழிலாளர்களை...

போர் நிறுத்தம் நாளையுடன் நிறைவு: பாகிஸ்தான் பறக்கிறார் அமெரிக்க துணை ஜனாதிபதி!

0
அமெரிக்க துணை ஜனாதிபதி ஜே.டி. வான்ஸ் இன்று (21) பாகிஸ்தான் செல்லவுள்ளார் என அமெரிக்க ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. ஈரான் மற்றும் அமெரிக்காவுக்கிடையிலான 2ஆம் கட்ட அமைதி பேச்சு இஸ்லாமாபாத்தில் நாளை (22) நடைபெறவுள்ளது...

ஹைதராபாத், டெல்லி அணிகள் இன்று மோதல்!

0
ஐ.பி.எல். தொடரில் இன்று நடைபெறும் 31 ஆவது லீக் போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் , டெல்லி கேப்பிடல்ஸ் ஆகிய அணிகள் இன்று மோதுகின்றன. ஹைதராபாத் ராஜீவ் காந்தி மைதானத்தில் இன்றிரவு 7.30 மணிக்கு போட்டி...