Home Blog Page 145

பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் ஆஸ்திரேலியாவில் புத்தாண்டு கொண்டாட்டம்!

பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் ஆஸ்திரேலியாவில் புத்தாண்டு கொண்டாட்டம்!

ஆஸ்திரேலியாவில் பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் புத்தாண்டை வரவேற்கும் நிகழ்வுகள் இடம்பெற்றன.

சிட்னி,போண்டி கடற்கரையில் யூத சமூகத்தை இலக்கு வைத்து நடத்தப்பட்ட பயங்கரவாதத் தாக்குதலில் 15 பேர் கொல்லப்பட்டனர்.

இதனால் அச்சம், துயரத்துக்கு மத்தியிலேயே சிட்னி வாசிகள் புத்தாண்டை வரவேற்றனர்.

புத்தாண்டு பிறக்கும்வேளை சிட்னியின் புகழ்பெற்ற துறைமுகப் பாலம் வெண்மையாக மின்னியது.
பயங்கரவாதத் தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்கு ஒரு நிமிட அஞ்சலியும் செலுத்தப்பட்டது.

ஆஸ்திரேலியா முழுவதும் புத்தாண்டு நிகழ்வுகள் பொலிஸ் பிரசன்னத்திற்கு மத்தியில் நடந்தன. குறிப்பாக சிட்னியில் உச்சகட்ட பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

பிரதமர் அந்தோணி அல்பானீஸ் தனது புத்தாண்டு செய்தியில் இந்த நடவடிக்கைகள் பொதுமக்களின் பாதுகாப்பிற்காகவே என குறிப்பிட்டார்.

உலக மக்கள் அனைவரும் 2026 புத்தாண்டை வரவேற்க முழு உற்சாகத்துடன் தயாராகி வருகின்றனர்.

உலகம் முழுவதும் ஒரே திகதி முறை பயன்படுத்தப்பட்டாலும், புவியின் சுழற்சி காரணமாக உலக நாடுகளின் காலநிலை மற்றும் அங்குள்ள நேர முறை என்பது ஒவ்வொரு நாட்டின் இருப்பிடத்திற்கு ஏற்றவாறு மாறுபடும்.

அந்த வகையில் உலகிலேயே முதல் நாடாக 2026ஐ வரவேற்றது கிரிபாட்டி தீவு.

அதைத் தொடர்ந்து நியூசிலாந்து, ஆஸ்திரேலியா நாடுகளில் அடுத்த சில மணி நேரங்களில் புத்தாண்டு பிறந்தது.

கொழும்பு மாநகரசபையில் வென்றது மனசாட்சியா, அரசியல் டீலா?

கொழும்பு மாநகரசபையில் கூட்டு எதிரணி தமது பெரும்பான்மை பலத்தை இழக்கவில்லை. மக்களுக்காக கூட்டு எதிரணியாக தொடர்ந்து செயல்படுவோம் என்று ஐக்கிய மக்கள் சக்தியின் மாநகரசபை உறுப்பினர் ரிசா சாருக் தெரிவித்தார்.

வரவு- செலவுத் திட்டம் முதல் தடவை தோற்கடிக்கப்பட்டபோது மனசாட்சி பற்றி கருத்து வெளியிட்ட மேயர், இன்று ஆளுங்கட்சிக்கு எவ்வாறு பெரும்பான்மை பலம் கிடைத்தது என்பது பற்றி தனது மனசாட்சியிடம் கேட்க வேண்டும் எனவும் அவர் கூறினார்.

கொழும்பு மாநகரசபையின் வரவு- செலவுத் திட்டம் இன்று நிறைவேற்றப்பட்டது. இதன்பின்னர் ஊடகங்களிடம் கருத்து வெளியிடுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.

“ கூட்டு எதிரணியை பிரதிநிதித்துவப்படுத்திய உறுப்பினர் ஒருவர் பட்ஜட்டுக்கு ஆதரவாக வாக்களித்தார். முஸ்லிம் காங்கிரஸ் உறுப்பினர் ஒருவரே இவ்வாறு செயல்பட்டார்.

ஏனைய இரு உறுப்பினர்கள் காணாமல்போய் இருந்தனர். அவர்களது தொலைபேசிகூட இயங்கவில்லை. எனவே, என்ன நடந்திருக்கும் என்பது அனைவருக்கும் தெரியும்.” – எனவும் அவர் கூறினார்.

உலகிலேயே முதல் நாடாக 2026ஐ வரவேற்றது கிரிபாட்டி தீவு!

உலக மக்கள் அனைவரும் 2026 புத்தாண்டை வரவேற்க முழு உற்சாகத்துடன் தயாராகி வருகின்றனர். உலகம் முழுவதும் ஒரே திகதி முறை பயன்படுத்தப்பட்டாலும், புவியின் சுழற்சி காரணமாக உலக நாடுகளின் காலநிலை மற்றும் அங்குள்ள நேர முறை என்பது ஒவ்வொரு நாட்டின் இருப்பிடத்திற்கு ஏற்றவாறு மாறுபடும்.

அந்த வகையில் உலகிலேயே முதல் நாடாக 2026ஐ வரவேற்றது கிரிபாட்டி தீவு.

உலகிலேயே முதல் நாடாக, பசிபிக் தீவு நாடான கிரிபாட்டி தீவில் 2026-ம் ஆண்டு பிறந்தது. பூமிப்பந்தின் கிழக்கு கோடியில் உள்ள கிரிபாட்டி தீவு உள்ளது.

புத்தாண்டு, கிரிபாட்டி தீவின் கிரிட்டிமதி நகரம் 2026-ம் ஆண்டுக்குள் அடியெடுத்து வைத்துள்ளது. இலங்கை நேரப்படி மாலை 3.38 மணிக்கு கிரிபாட்டி தீவில் 2026 புத்தாண்டு பிறந்ததையொட்டி, அந்நாட்டு மக்கள் புத்தாண்டை உற்சாமாக வரவேற்றனர்.

அதைத் தொடர்ந்து நியூசிலாந்து, ஆஸ்திரேலியா நாடுகளில் அடுத்த சில மணி நேரங்களில் புத்தாண்டு பிறந்தது.. ஆஸ்திரேலியாவை தொடர்ந்து ஜப்பான், தென் கொரியா, வடகொரியா, சீனா, பிலிப்பைன்ஸ், சிங்கப்பூர், வங்கதேசம் மற்றும் நேபாளம் ஆகிய நாடுகள், இந்தியாவிற்கு முன்னதாக அடுத்தடுத்து புத்தாண்டை கொண்டாட உள்ளன.

தையிட்டி விகாரைக்காகக் கையகப்படுத்தப்பட்ட காணிகள் நான்கு கட்டடங்களாக விடுவிக்கப்படும்!

“தையிட்டியில் திஸ்ஸ விகாரைக்காகக் கையகப்படுத்தப்பட்ட காணிகளில் விகாரை அமைந்துள்ள காணியைத் தவிர ஏனைய காணிகளில் பிற கட்டுமானங்கள் அகற்றப்பட்டு அவற்றை விடுவிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று எமக்கு யாழ்ப்பாணம் மாவட்ட செயலர் ம.பிரதீபன் உறுதியளித்துள்ளார்.”

– இவ்வாறு காணி உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர்.

தையிட்டி விகாரைக்காகக் காணிகளை இழந்தவர்களுக்கும் யாழ். மாவட்ட செயலருக்கு இடையில் இன்று புதன்கிழமை சந்திப்பு நடைபெற்றது.

இந்தச் சந்திப்பு தொடர்பில் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும்போதே கணை உரிமையாளர்கள் மேற்கண்டவாறு கூறியுள்ளனர்.

அவர்கள் மேலும் தெரிவிக்கையில்,

“யாழ். மாவட்ட செயலருடனான சந்திப்பின் போது, எமது காணிகளை விடுவிப்பது தொடர்பில் ஆராயப்பட்டு யோசனைகள் முன்வைக்கப்பட்டன.

அதன்போது, தையிட்டி திஸ்ஸ விகாரைக்காகக்  கையகப்படுத்தப்பட்டுள்ள காணிகளில் மேற்கு பக்கமாக உள்ள காணிகளை முதல் கட்டமாக விடுவிப்பதாகவும், ஏனைய காணிகளில் விகாரை தவிர்ந்த ஏனைய கட்டுமானங்களை அகற்றி அந்தக் காணிகளையும் உரிமையாளர்களிடம் கையளிக்க இணக்கம் காணப்பட்டது. அதற்காகக் காணி விடுவிப்பானது 4 கட்டங்களாக முன்னெடுக்கப்படும் எனத்  தெரிவிக்கப்பட்டது

விகாரை உள்ள காணி மூன்று தரப்பினருக்குச் சொந்தமானதாகக்  காணப்படுகின்றது. அவர்களுக்கான தீர்வு குறித்து முடிவு எடுக்கப்படவில்லை. மாற்றுக் காணி வழங்குவதா அல்லது நட்டஈடு வழங்குவதா என்று எந்தத் தீர்மானமும் எடுக்கப்படவில்லை.

இந்தச் சந்திப்பில் எமக்கு உறுதிமொழிகள் வழங்கப்பட்டனவே தவிர தீர்வுகளாக எமது காணிகளை எம்மிடம் ஒப்படைக்காதமையால், நாம் திட்டமிட்டவாறு  எதிர்வரும் 3ஆம் திகதி போராட்டத்தை முன்னெடுப்போம்.” – என்றனர்.

‘Rebuilding Sri Lanka’ நிதியத்திற்கு இலங்கை வங்கி 500 மில்லியன் ரூபா நன்கொடை !

டித்வா சூறாவளியால் பாதிக்கப்பட்ட மக்களின் அன்றாட வாழ்க்கையையும், பேரழிவால் பாதிக்கப்பட்ட நாட்டையும் மீண்டும் கட்டியெழுப்ப உதவும் வகையில் ஆரம்பிக்கப்பட்ட ‘Rebuilding Sri Lanka’ நிதியத்திற்கு இலங்கை வங்கி 500 மில்லியன் ரூபா நன்கொடையாக வழங்கியுள்ளது.

இதற்கான காசோலையை இலங்கை வங்கியின் தலைவர் காவிந்த டி சொய்சா ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்கவிடம் கையளித்தார்.

இலங்கை வங்கியைப் பிரதிநிதித்துவப்படுத்தி ருவன் குமார, சமீர லியனகே மற்றும் கே. ஜெயதிலக ஆகியோர் இந்த நிகழ்வில் கலந்து கொண்டனர்.

மஹிந்த வசம் உள்ள மக்கள் செல்வாக்கு நாமலுக்கு இல்லை!

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவுக்கு உள்ள செல்வாக்கு அவரது மகன் நாமல் ராஜபக்சவுக்கு இல்லை என்று முன்னாள் அமைச்சர் டிலான் பெரேரா தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு.

“மஹிந்த ராஜபக்சவுக்கு மக்கள் மத்தியில் உள்ள செல்வாக்கு அவ்வாறே உள்ளது. ஆனால் அவருக்கு உள்ள செல்வாக்கு அவரின் மகன் நாமல் ராஜபக்சவுக்கு இல்லை.ஏனைய அரசியல்வாதிகளுக்கும் இல்லை.

நாமல் ராஜபக்ச வேகமாக வளர்ந்துவரும் அரசியல்வாதியாக இருந்தாலும் தனித்து சென்று சாதிக்க முடியாது. அடுத்த தேர்தலில் எதிரணிகள் ஒன்றுபடாவிட்டால் அடுத்த தேர்தலிலும் தேசிய மக்கள் சக்தியே வெற்றிபெறும்.

அடுத்த ஜனாதிபதி என்ற சிந்தனைக்கு அப்பால் அடுத்து அமையும் அரசாங்கத்தின் தலைவர் என்ற எண்ணத்துடன் நாமல் செயல்பட்டால் நல்லது.

ஒபரேஷன் சிந்தூரின்போது மத்தியஸ்தம் செய்ததாக சீனா தெரிவிப்பு: இந்தியா மறுப்பு!

பாகிஸ்தானுக்கு எதிராக இந்தியா ஒபரேஷன் சிந்தூர் ராணுவ நடவடிக்கையை எடுத்ததை அடுத்து இரு நாடுகளுக்கும் இடையே மத்தியஸ்தம் செய்ததாக சீனா கூறி உள்ள நிலையில் இந்தியா அதனை திட்டவட்டமாக மறுத்துள்ளது.

கடந்த ஏப்ரல் 22ம் திகதி ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் பயங்கரவாதிகள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் சுற்றுலாப் பயணிகள் 26 பேர் உயிரிழந்தனர்.

இந்த பயங்கரவாத தாக்குதலின் பின்னணியில் பாகிஸ்தான் இருந்தது உறுதிப்படுத்தப்பட்டதை அடுத்து, இந்தியா அந்த நாட்டுக்கு எதிராக ஒபரேஷன் சிந்தூர் ராணுவ நடவடிக்கையை தொடங்கியது.

பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாத முகாம்கள் குறிவைக்கப்பட்டு தாக்கி அழிக்கப்பட்டன.

இதையடுத்து, இந்தியா மீது பாகிஸ்தான் ராணுவம் தாக்குதல் நடத்தியது.

இந்நிலையில் பாகிஸ்தான் ராணுவ நடவடிக்கைகளின் தலைமை இயக்குநர் , இந்திய தரப்பினரை தொடர்பு கொண்டு போரை முடிவுக்குக் கொண்டு வர வேண்டுகோள் விடுத்தார்.

இதை இந்தியா ஏற்றது. இதையடுத்து, போர் முடிவுக்கு வந்தது. இதை இந்திய ராணுவம் அப்போதே செய்தியாளர்களிடம் விளக்கியது.

எனினும், இந்தியா – பாகிஸ்தான் போரை தான் முடிவுக்குக் கொண்டு வந்ததாக அமெரிக்க ஜனாதபதி டொனால்ட் ட்ரம்ப் பலமுறை கூறினார். எனினும், இந்திய வெளியுறவுத் துறை அதனை தொடர்ந்து மறுத்து வருகிறது.

இந்நிலையில், இந்தியா – பாகிஸ்தான் போரை முடிவுக்குக் கொண்டு வர தாங்கள் மத்தியஸ்தம் செய்ததாக சீனா கூறி உள்ளது.

இது தொடர்பில் கருத்து வெளியிட்ட சீன வெளியுறவுத்துறை அமைச்சர் வாங் யி,

‘‘இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு முன் எப்போதும் இல்லாத அளவாக இந்த ஆண்டு உள்ளூர் போர்களும் எல்லை தாண்டிய மோதல்களும் அடிக்கடி வெடித்தன.

நீடித்த அமைதியை ஏற்படுத்துவதற்கான முயற்சியில் சீனா தொடர்ந்து ஈடுபட்டது.

வடக்கு மியன்மர், ஈரான் அணுசக்திப் பிரச்சினை, இந்தியா-பாகிஸ்தான் இடையேயான பதட்டம், இஸ்ரேல்-பாலஸ்தீனம் பிரச்சினை, கம்போடியா-தாய்லாந்து பிரச்சினை ஆகியவற்றில் நாங்கள் மத்தியஸ்தம் செய்தோம்’’ என்று கூறி இருந்தார்.

சீன வெளவிவகார அமைச்சர் வாங் யி-யின் கூற்றை இந்தியா திட்டவட்டமாக மறுத்துள்ளது.

‘‘இதுபோன்ற கூற்றுக்களை நாங்கள் ஏற்கனவே மறுத்துள்ளோம். இந்தியா-பாகிஸ்தான் இடையிலான இருதரப்பு பிரச்சினைகளில் மூன்றாம் தரப்புக்கு எந்த பங்கும் இல்லை.

இந்தியா-பாகிஸ்தான் போர் நிறுத்தம் என்பது இரு நாடுகளின் டிஜிஎம்ஓ-க்களுக்கு இடையே நேரடியாக ஒப்புக்கொள்ளப்பட்டது. இது குறித்து எங்கள் நிலைப்பாட்டை நாங்கள் பலமுறை தெளிவுபடுத்திவிட்டோம்’’ என்று இந்திய தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொழும்பு மாநகரசபை பட்ஜட்: பலப்பரீட்சையில் என்பிபி வெற்றி!

கொழும்பு மாநகரசபையின் 2026 ஆம் ஆண்டுக்கான வரவு- செலவுத் திட்டம் மேலதிக இரு வாக்குகளால் இன்று நிறைவேற்றப்பட்டது.

வரவு- செலவுத் திட்டத்துக்கு ஆதரவாக 58 வாக்குகளும், எதிராக 56 வாக்குகளும் அளிக்கப்பட்டன.

கொழும்பு மாநகரசபையின் முதலாவது வரவு- செலவுத் திட்டம் கடந்த 22 ஆம் திகதி முன்வைக்கப்பட்டது.

இதன்போது வரவு- செலவுத் திட்டத்துக்கு ஆதரவாக 57 வாக்குகளும், எதிராக 60 வாக்குகளும் அளிக்கப்பட்டன.
இதனால் மேலதிக 3 வாக்குகளால் பாதீடு தோற்கடிக்கப்பட்டது.

இந்நிலையிலேயே வரவு- செலவுத் திட்டம் 2ஆவது தடவையாக இன்று முன்வைக்கப்பட்டு நிறைவேற்றப்பட்டுள்ளது.

காலி மாநகரசபை உறுப்பினர்கள் ஐவர் கைது!

தேசிய மக்கள் சக்தியின் ஆளுகையின் கீழுள்ள காலி மாநகரசபை உறுப்பினர்கள் ஐவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கூட்டு எதிரணியை பிரதநிதித்துவப்படுத்தும் ஐக்கிய மக்கள் சக்தியின் இரு உறுப்பினர்களும், ஐக்கிய தேசியக் கட்சியின் இரு உறுப்பினர்கள் மற்றும் மொட்டு கட்சியின் பெண் உறுப்பினர் ஒருவர் என ஐவர் இவ்வாறு கைதாகியுள்ளனர்.

காலி மாநகரசபையின் விசேட அமர்வு நேற்று நடைபெற்றது.

இதன்போது சபையின் நடவடிக்கைக்கு கூட்டு எதிரணியால் குழப்பம் விளைவிக்கப்பட்டது.

அத்துடன், காலி மாநகரசபை செயலாளர் உட்பட அரச அதிகாரிகள்மீது தண்ணீர் வீசியும் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

காலி மாநகரசபையின் வரவு- செலவுத் திட்டம் சட்டவிரோதமாக நிறைவேற்றப்பட்டுள்ளது என குறிப்பிட்டே எதிரணி உறுப்பினர்கள் குழப்பத்தில் ஈடுபட்டனர்.

சினிமா

பிரபல இந்திய பாடகி ஆஷா போஸ்லே காலமானார்!

0
  பிரபல இந்திய பின்னணி பாடகி ஆஷா போஸ்லே தமது 92ஆவது வயதில் இன்று(12) காலமானார். இந்திய திரையுலகில் 10,000-இற்கும் அதிக பாடல்களை பாடியுள்ள மூத்த பாடகி ஆஷா போஸ்லே நேற்று(11) மாரடைப்பு ஏற்பட்டதையடுத்து மும்பையிலுள்ள...

சின்னத்திரை நடிகை தற்#கொ#லை!

0
  இலங்கையை பூர்வீகமாகக்கொண்ட பிரபல சின்னத்திரை நடிகையான சுபாஷினி (வயது 36) தற்#கொ#லை செய்துகொண்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. "கயல்" சின்னத்திரை தொலைக்காட்சி தொடரில் நடித்து வருபவர் சுபாஷிணி (வயது36). இலங்கையை பூர்வீகமாகக்கொண்ட இவர் கடந்த...

“தனுஷின் நட்பை இழந்தது மிகப்பெரிய அவமானம்” – விக்னேஷ் சிவன் வருத்தம்

0
தனுஷ் உடனான நட்பை இழந்தது மிகப்பெரிய அவமானம் என்று விக்னேஷ் சிவன் பகிர்ந்துள்ளார். விக்னேஷ் சிவன் இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன் நடித்துள்ள ‘எல்.ஐ.கே’ திரைப்படம் ஏப்ரல் 10-ம் திகதி திரைக்கு வரவுள்ளது. நீண்ட பிரச்சினைகளுக்கு...

செய்தி

முன்னாள் எம்.பி. பிரேமலால் ஜயசேகர துப்பாக்கியுடன் நுவரெலியாவில் கைது!

0
“ சொக்கா மல்லி” என்றழைக்கப்படும் இரத்தினபுரி மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பிரேமலால் ஜயசேகர, நுவரெலியா பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். அனுமதிப்பத்திரமற்ற கைத்துப்பாக்கி ஒன்றை வைத்திருந்த குற்றச்சாட்டின் அடிப்படையிலேயே அவர் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார். முன்னாள்...

தோட்ட முகாமையாளருக்கு எதிராக தொழிலாளர்கள் போராட்டம்!

0
திம்புள்ள, பத்தன பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மேபீல்ட் தோட்ட தொழிலாளர்கள் இன்று (21) பணி புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். தோட்ட முகாமையாளர் மற்றும் உதவி முகாமையாளர் ஆகியோரை உடனடியாக இடமாற்றுமாறு வலியுறுத்தியே இப்போராட்டம் முன்னெடுக்கப்படுகின்றது. தோட்டத் தொழிலாளர்களை...