Home Blog Page 146

கொழும்பு மாநகரசபை பட்ஜட்: பலப்பரீட்சையில் என்பிபி வெற்றி!

கொழும்பு மாநகரசபையின் 2026 ஆம் ஆண்டுக்கான வரவு- செலவுத் திட்டம் மேலதிக இரு வாக்குகளால் இன்று நிறைவேற்றப்பட்டது.

வரவு- செலவுத் திட்டத்துக்கு ஆதரவாக 58 வாக்குகளும், எதிராக 56 வாக்குகளும் அளிக்கப்பட்டன.

கொழும்பு மாநகரசபையின் முதலாவது வரவு- செலவுத் திட்டம் கடந்த 22 ஆம் திகதி முன்வைக்கப்பட்டது.

இதன்போது வரவு- செலவுத் திட்டத்துக்கு ஆதரவாக 57 வாக்குகளும், எதிராக 60 வாக்குகளும் அளிக்கப்பட்டன.
இதனால் மேலதிக 3 வாக்குகளால் பாதீடு தோற்கடிக்கப்பட்டது.

இந்நிலையிலேயே வரவு- செலவுத் திட்டம் 2ஆவது தடவையாக இன்று முன்வைக்கப்பட்டு நிறைவேற்றப்பட்டுள்ளது.

காலி மாநகரசபை உறுப்பினர்கள் ஐவர் கைது!

தேசிய மக்கள் சக்தியின் ஆளுகையின் கீழுள்ள காலி மாநகரசபை உறுப்பினர்கள் ஐவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கூட்டு எதிரணியை பிரதநிதித்துவப்படுத்தும் ஐக்கிய மக்கள் சக்தியின் இரு உறுப்பினர்களும், ஐக்கிய தேசியக் கட்சியின் இரு உறுப்பினர்கள் மற்றும் மொட்டு கட்சியின் பெண் உறுப்பினர் ஒருவர் என ஐவர் இவ்வாறு கைதாகியுள்ளனர்.

காலி மாநகரசபையின் விசேட அமர்வு நேற்று நடைபெற்றது.

இதன்போது சபையின் நடவடிக்கைக்கு கூட்டு எதிரணியால் குழப்பம் விளைவிக்கப்பட்டது.

அத்துடன், காலி மாநகரசபை செயலாளர் உட்பட அரச அதிகாரிகள்மீது தண்ணீர் வீசியும் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

காலி மாநகரசபையின் வரவு- செலவுத் திட்டம் சட்டவிரோதமாக நிறைவேற்றப்பட்டுள்ளது என குறிப்பிட்டே எதிரணி உறுப்பினர்கள் குழப்பத்தில் ஈடுபட்டனர்.

மீண்டும் சிறிகொத்த செல்வாரா சஜித்? ரணிலின் வியூகம் என்ன?

ஐக்கிய மக்கள் சக்தி மற்றும் ஐக்கிய தேசியக் கட்சி என்பவற்றை ஒன்றிணைப்பதற்குரிய முயற்சி வெற்றிகரமான திசையை நோக்கி பயணிக்கின்றது.இதனை உறுதிப்படுத்தும் வகையில் கொழும்பில் நேற்று (30) முக்கியத்துவமிக்க சந்திப்பொன்று நடந்துள்ளது.

ரணில் விக்கிரமசிங்கவின் சகாக்களான ருவான் விஜேவர்தன, அகில விராஜ்காரியவசம் மற்றும் நவீன் திஸாநாயக்க ஆகியோர் எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாசவை சந்தித்து பேச்சு நடத்தியுள்ளனர்.

ருவான் விஜேவர்தன ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவராகவும், அகிலவிராஜ் காரியவசம் மற்றும் நவீன் திஸாநாயக்க ஆகியோர் உப தலைவர்களாகவும் பதவி வகிக்கின்றனர்.

இரு தரப்பு இணைப்புக்கு சஜித் பிரேமதாச ஏற்கனவே பச்சைக்கொடி காட்டியுள்ளார். இந்நிலையில் ரணிலின் விருப்பத்தையும் இவர்கள் இச்சந்திப்பின்போது வெளிப்படுத்தி இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.

இரு கட்சிகளும் தனிக்கட்சியாக மாறுவதா அல்லது கூட்டணியாக செயல்படுவதா என்பது பற்றி இறுதி முடிவு விரைவில் எட்டப்படவுள்ளது.

ரணில் விக்கிரமசிங்க மற்றும் சஜித் பிரேமதாசவுக்கிடையில் எதிர்வரும் ஜனவரி மாதமளவில் நடைபெறும் என எதிர்பார்க்கப்படும் நேரடி சந்திப்பின்போது இது தொடர்பில் இறுதி முடிவு எடுக்கப்படவுள்ளது.

ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமைப்பதவியை விட்டுக்கொடுப்பதற்குரிய விருப்பத்தை ரணில் விக்கிரமசிங்க ஏற்கனவே வெளியிட்டுள்ளார்.

சஜித் பிரேமதாசவுக்கு தலைமைப்பதவி வழங்கப்படும்பட்சத்தில் சில நிபந்தனைகளை ரணில் விக்கிரமசிங்க முன்வைக்கக்கூடும் என தெரியவருகின்றது.

குறிப்பாக கடந்த ஜனாதிபதி தேர்தலின்போது ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஆதரவளித்த – தற்போது அரசியல் ரீதியில் அநாதரவாக்கப்பட்டுள்ளவர்களை ஐதேகவில் இணைத்துக்கொள்ள வேண்டும் என கோரப்படலாம்.

பிரமித்த பண்டார தென்னகோன, செயான் சேமிசிங்க மற்றும் மேலும் சிலரின் பெயர்கள் முன்வைக்கப்பட்டுள்ளது.

ட்ரம்புக்கு உயரிய விருதை வழங்குகிறது இஸ்ரேல்!

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்​புக்கு இஸ்​ரேலின் உயரிய குடிமகன் விரு​தான இஸ்​ரேல் அமை​தி விருது வழங்​கப்​படும் என்று இஸ்​ரேல் பிரதமர் பெஞ்​சமின் நெதன்​யாகு அறி​வித்​துள்​ளார்.

புளோரி​டா​வில் இரு நாடு​களின் தலை​வர்​களுக்​கும் இடையே நடை​பெற்ற சந்​திப்பை தொடர்ந்து இந்த அறி​விப்பு வெளி​யிடப்​பட்​டுள்​ளது.

“இஸ்​ரேல் அமை​தி விருதை அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்​புக்கு வழங்க முடிவு செய்​யப்​பட்​டுள்​ளது. இஸ்​ரேலிய மற்​றும் யூத மக்​களுக்கு அவர் ஆற்​றிய மகத்​தான பங்​களிப்​பிற்​காக இந்த விருது அவருக்கு வழங்​கப்பட உள்​ளது.

80 ஆண்​டு​களில் முதல் முறை​யாக இந்த விருது இஸ்​ரேலியர் அல்​லாத ஒரு குடிமக​னுக்கு வழங்​கப்​படு​கிறது. மேலும், அமை​திப் பிரி​வில் இந்த விருது வழங்​கப்​படு​வது இதுவே முதல்​முறையாகும்.” எனவும் இஸ்ரேல் பிரதமர் குறிப்பிட்டார்.

பேரிடர் நிவாரணமாக 142,930 டொலர்களை வழங்குகிறது சீன கம்யூனிஸ்ட் கட்சி

இலங்கையில் பேரிடரால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்காக ஒரு மில்லியன் ரென்மின்பி (RMB)யை நிவாரண உதவியை சீன கம்யூனிஸ்ட் கட்சி வழங்கவுள்ளது.

கொழும்பில் உள்ள சீனத் தூதரகம் இதனை அறிவித்துள்ளது.

இந்த உதவியை சீன கம்யூனிஸ்ட் கட்சியின் மத்திய குழுவின் சர்வதேச பிரிவு வழங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிவாரண உதவியின் அமெரிக்க டொலர் மதிப்பு சுமார் 142,930 டொலர்கள் ஆகும்.

மதுவரித் திணைக்களமும் எதிர்பார்க்கப்பட்ட வருமான இலக்குகளைத் தாண்டியது!

அரசாங்கத்திற்கு கிடைக்க வேண்டிய வருமானத்தை வசூலிக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்றும், நாட்டின் பொருளாதார மற்றும் சமூக ஸ்திரத்தன்மையைக் கட்டியெழுப்புவதில் அரச வருமானம் ஈட்டும் முக்கிய துறைகளுக்கு பெரும் பொறுப்பு உள்ளதாகவும் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்தார்.

2025 ஆம் ஆண்டில் மதுவரித் திணைக்களத்தின் முன்னேற்றம் மற்றும் 2026 ஆம் ஆண்டில் எதிர்பார்க்கப்படும் இலக்குகள் குறித்து மீளாய்வு செய்வதற்காகநேற்று (30) பிற்பகல் அதன் சிரேஷ்ட அதிகாரிகளுடன் மதுவரித் திணைக்கள கேட்போர் கூடத்தில் நடைபெற்ற கூட்டத்தில் கலந்து கொண்ட போதே ஜனாதிபதி இதனைத் தெரிவித்தார்.

2025 ஆம் ஆண்டிற்கான வருமான இலக்கான 227.4 பில்லியன் ரூபாவைத் தாண்டி 231.3 பில்லியன் ரூபா வருமான இலக்கை மதுவரித் திணைக்களம் எட்டவுள்ளதுடன், இது வரலாற்றில் முதல் முறையாக 102% வருமான இலக்காக அமைகின்றது.

அரச வருமானம் எவ்வளவு ஈட்டப்படுகிறது என்பதிலே நாட்டின் பொருளாதாரம் தங்கியுள்ளது என்று குறிப்பிட்ட ஜனாதிபதி, அரச வருமானம் குறைந்தால், நாட்டின் பொருளாதாரம் வீழ்ச்சியடையும் என்றும், 2020-2021 ஆம் ஆண்டில் அரச வருமானம் பெருமளவில் குறைந்ததன் விளைவுகளை நாடு எதிர்கொள்ள வேண்டியிருந்தது என்றும் குறிப்பிட்டார்.

வாகனங்கள் மற்றும் கட்டிட வசதிகள் பிரச்சினைகள் உள்ளிட்ட மதுவரித் திணைக்களத்தின் செயற்பாடுகளில் எழுந்துள்ள பிரச்சினைகள் குறித்து ஜனாதிபதி கவனம் செலுத்தியதுடன், குறிப்பாக நிறைவேற்றுப் பதவிகளில் உள்ள வெற்றிடங்கள் மற்றும் நியமனங்கள் தொடர்பாக எழுந்துள்ள பிரச்சினைகளை உள்ளக இணக்கப்பாட்டுடன், விரைவாக தீர்க்க வேண்டியதன் அவசியத்தையும் ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.

மேலும், மதுவரி கட்டளைச் சட்டத்தின் திருத்தம் மற்றும் 2025 ஆம் ஆண்டில் மேற்கொள்ளப்பட்ட சட்டவிரோத போதைப்பொருள் சோதனைகள் மற்றும் அந்த நடவடிக்கைகளின் முன்னேற்றம் ஆகியவை பற்றியும் இதன்போது மீளாய்வு செய்யப்பட்டன.

தொழில் அமைச்சர், நிதி மற்றும் திட்டமிடல் பிரதி அமைச்சர் கலாநிதி அனில் ஜயந்த பெர்னாண்டோ, பொருளாதார அபிவிருத்தி பிரதி அமைச்சர் நிஷாந்த ஜயவீர, மதுவரித் திணைக்கள ஆணையாளர் நாயகம் எம்.பீ.என்.ஏ. பேமரத்ன மற்றும் சிரேஷ்ட அதிகாரிகள் உட்பட பணிக்குழாமினர் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.

மலையாள நடிகர் மோகன்லால் தாயார் காலமானார்

நடிகர் மோகன்லாலின் தாயார் சாந்தகுமாரி (90) உடல்நலக்குறைவால் கொச்சியில் உள்ள தனது வீட்டில் நேற்று காலமானார்.

அவர் காலமானபோது நடிகர் மோகன்லால் வீட்டில் இல்லை என்று கூறப்படுகிறது. சூப்பர் ஸ்டார் மம்மூட்டி உள்ளிட்ட அவரது நெருங்கிய நண்பர்களும், திரையுலகை சேர்ந்த பலரும் அவரது வீட்டுக்குச் சென்று அஞ்சலி செலுத்தினர். மோகன்லாலின் தந்தையும், கேரள அரசின் முன்னாள் உயரதிகாரியுமான விஸ்வநாதன் நாயர் பல ஆண்டுகளுக்கு முன் காலமானார்.

சாந்தகுமாரி மறைவுக்கு கேரள முதல்வர் பினராயி விஜயன், சபாநாயகர் ஏ.என்.ஷம்சீர் உள்ளிட்ட பலர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

கொழும்பு மாநகரசபையில் இடம்பெற்ற ஊழல், மோசடிகளை விசாரிக்க ஜனாதிபதி ஆணைக்குழு!

கொழும்பு மாநகரசபையில் இடம்பெற்றதாகக் கூறப்படும் ஊழல், மோசடிகள் தொடர்பில் விசாரணை செய்வதற்காக ஜனாதிபதி ஆணைக்குழு நியமிக்கப்பட்டுள்ளது.

2010 முதல் 2025 வரையான காலப்பகுதியில் இடம்பெற்ற ஊழல், மோசடிகள் தொடர்பிலேயே இவ்வாறு விசாரணை நடத்தி, அறிக்கை பெறுவதற்காக மூவரடங்கிய குழு அமைக்கப்பட்டுள்ளது.

மேல் நீதிமன்றத்தின் முன்னாள் நீதிபதி பியசேன ரணசிஹ்க தலைமையிலான ஜனாதிபதி ஆணைக்குழுவில் முன்னாள் சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் டி.எஸ். விக்கிரமசிங்ஹ, கணக்காய்வாளர் சேவை அதிகாரி ஏக்க நாயக்க ஆகியோரும் இடம்பிடித்துள்ளனர்.

 

மரக்கறி விலைப்பட்டியல் (31.12.2025)

நுவரெலியா பொருளாதார மத்திய நிலையத்தால் இன்று (31) வெளியிடப்பட்டுள்ள மரக்கறி வகைகளின் (ஒரு கிலோ) விலை பட்டியல்…

அரசமைப்பு பேரவை சுயாதீனமாக இயங்க இடமளிக்க வேண்டும்!

அரசியலமைப்பு பேரவையின் சுயாதீனத்தன்மைக்கு தேசிய மக்கள் சக்தி ஆட்சியில் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது. இவ்வாறான நடவடிக்கைக்கு இடமளிக்க முடியாது என்று நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,

“ அரசியலமைப்பு பேரவையென்பது ஜனாதிபதியின்கீழ் இயங்கும் நிறுவனம் அல்ல. அது சுயாதீன சபையாகும்.
எனவே, ஜனாதிபதியால் அனுப்படும் பெயருக்கு அச்சபை அங்கீகாரம் வழங்க வேண்டும் என்ற தொனியில் கருத்து வெளியிடும் ஆளுங்கட்சியினர் இதனை புரிந்துகொள்ள வேண்டும்.

ஊழல், மோசடிகளுக்கு எதிராக அதிகளவில் குரல் கொடுத்த கட்சிதான் ஜே.வி.பி. ,அக்கட்சியின் ஆட்சியின்கீழ் கணக்காய்வாளர் நாயகம் இல்லாத நாடாக இலங்கை இன்று மாறியுள்ளது.

கணக்காய்வாளர் நாயகம் இன்றி நாடாளுமன்றத்தில் கோப் மற்றும் கோபா குழு கூட்டங்களை நடத்த முடியாது. எனவே, எதிர்வரும் 6 ஆம் திகதிக்குள் கணக்காய்வாளர் நாயகம் நியமிக்கப்பட வேண்டும்.” – என்றார்.

கணக்காய்வாளர் நாயகம் பதவிக்கு ஜனாதிபதியால் பரிந்துரைக்கப்பட்டவரின் பெயரை அரசமைப்பு பேரவை நிராகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

சினிமா

பிரபல இந்திய பாடகி ஆஷா போஸ்லே காலமானார்!

0
  பிரபல இந்திய பின்னணி பாடகி ஆஷா போஸ்லே தமது 92ஆவது வயதில் இன்று(12) காலமானார். இந்திய திரையுலகில் 10,000-இற்கும் அதிக பாடல்களை பாடியுள்ள மூத்த பாடகி ஆஷா போஸ்லே நேற்று(11) மாரடைப்பு ஏற்பட்டதையடுத்து மும்பையிலுள்ள...

சின்னத்திரை நடிகை தற்#கொ#லை!

0
  இலங்கையை பூர்வீகமாகக்கொண்ட பிரபல சின்னத்திரை நடிகையான சுபாஷினி (வயது 36) தற்#கொ#லை செய்துகொண்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. "கயல்" சின்னத்திரை தொலைக்காட்சி தொடரில் நடித்து வருபவர் சுபாஷிணி (வயது36). இலங்கையை பூர்வீகமாகக்கொண்ட இவர் கடந்த...

“தனுஷின் நட்பை இழந்தது மிகப்பெரிய அவமானம்” – விக்னேஷ் சிவன் வருத்தம்

0
தனுஷ் உடனான நட்பை இழந்தது மிகப்பெரிய அவமானம் என்று விக்னேஷ் சிவன் பகிர்ந்துள்ளார். விக்னேஷ் சிவன் இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன் நடித்துள்ள ‘எல்.ஐ.கே’ திரைப்படம் ஏப்ரல் 10-ம் திகதி திரைக்கு வரவுள்ளது. நீண்ட பிரச்சினைகளுக்கு...

செய்தி

சுயநல நோக்கில் கோரிக்கைகளை முன்வைக்கும் அமெரிக்கா: ஈரான் குற்றச்சாட்டு

0
அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடத்துவது சாத்தியமற்றது என்று ஈரான் நாடாளுமன்ற உறுப்பினர் முகமது ரெசா மொஹ்செனி சானி Mohammad Reza Mohseni Sani தெரிவித்துள்ளார். அமெரிக்கா தனது சுயநல நோக்கங்களுக்காகவும் தேவையற்ற கோரிக்கைகளை முன்வைப்பதாலுமே குழப்பம்...

அமைதிக்கான நடை பயணம்…..!

0
‘Walk for Peace Program in Sri Lanka’ அமைதிக்கான நடைப்பயணத்திற்காக அமெரிக்காவில் அமைதிக்கான நடைபயணத்திற்குத் தலைமை தாங்கிய வண. பஞ்ஞாகர தேரர் உள்ளிட்ட நான்கு தேரர்கள், இன்று (21) முற்பகல் இந்நாட்டை...