Home Blog Page 147

கொழும்பு மாநகரசபை பட்ஜட் இன்று நிறைவேறுமென அரசு நம்பிக்கை!

அரசியல் ரீதியிலான கேம் எதுவும் இடம்பெறாவிட்டால் கொழும்பு மாநகரசபையின் வரவு- செலவுத் திட்டம் நிச்சயம் நிறைவேறும் என்று தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் நம்பிக்கை வெளியிட்டுள்ளது.

அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பு அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று நடைபெற்றது.

இதன்போது கொழும்பு மாநகரசபையின் வரவு- செலவுத் திட்டம் நிறைவேறுமா என கேள்வி எழுப்பட்டது.

இதற்கு பதிலளித்த அமைச்சரவைப் பேச்சாளரும், அமைச்சருமான நளிந்த ஜயதிஸ்ஸ கூறியவை வருமாறு,

“ மக்களின் நலன்களை முன்னிலைப்படுத்தியே வரவு- செலவுத் திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் கொழும்பு மக்களின் வாழ்க்கை மேம்படும். எனவே, மக்களுக்கு நன்மை பயக்க வேண்டுமெனில் பாதீடு நிறைவேற வேண்டும்.

அவ்வாறு பாதீடு நிறைவேறும் என்பதே அரசாங்கத்தின் நிலைப்பாடாகும்.

வரவு- செலவுத் திட்டத்தில் ஏதேனும் குறைப்பாடுகள் இருந்திருக்கும் பட்சத்தில் அது தொடர்பில் விவாதத்தின்போது உறுப்பினர்களால் தகவல்களை வெளியிட்டிருக்க முடியும்.

அவ்வாறு செய்யாமல், அரசியல் ரீதியில் தீர்மானம் எடுக்கப்பட்டே வரவு- செலவுத் திட்டம் தோற்கடிக்கப்பட்டுள்ளது என்றே நான் கருதுகின்றேன். எனவே, அன்று எதிராக வாக்களித்தவர்கள், நாளை ஆதரவாக வாக்களிப்பார்கள் என நம்புகின்றோம்.” – என்றார்.

மக்கள் எங்கள் பக்கம்: என்பிபி அரசை அசைக்க முடியாது!

ஆட்சி கவிழ்ப்புக்கு இடமே இல்லை. தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தை மக்கள் பாதுகாப்பார்கள் என்று பிரதி அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப் தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு.

“ தேசிய மக்கள் சக்தி ஆட்சிக்குவரும்போது, இரு மாதங்களில் ஆட்சியைப் பிடிப்போம் என சஜித் பிரேமதாச கூறினார். அதன் பின்னர் ஆறு மாதங்களில் ஆட்சி கவிழும் எனக் குறிப்பிட்டார்.

ஆனால் ஒருவருடம் கடந்துவிட்டது. எதுவும் நடக்கவில்லை. இந்நிலையில் அடுத்த இரண்டு பூரணை தினங்களுக்குள் ஆட்சி கவிழுமாம்.

இது மக்களின் அரசாங்கம், மக்களால் அரசாங்கம் பாதுகாக்கப்படும். எதிரணிகள் கூறுவதுபோல இந்த ஆட்சியைக் கவிழ்க்க முடியாது. மக்கள் அரசாங்கத்துடன் உள்ளனர். எனவே, எமக்கு எவ்வித அச்சமும் இல்லை.” – என்றார்.

ஊடக நிறுவனங்கள்மீது கடந்தகாலங்களில் தாக்குதல் நடத்தப்பட்டது. ஊடகவியலாளர்கள் தாக்கப்பட்டனர்.
இவ்வாறு ஊடக நிறுவனங்களை கொளுத்தியவர்கள்தான் இன்று ஊடக சுதந்திரம் பற்றி கதைக்கின்றனர். இது நகைப்புக்குரிய விடயமாகும்.

ஊடகங்களுக்கு உண்மையை வெளிப்படுத்துவதற்குரிய முழு உரிமையும் உள்ளது. அதில் நாம் தலையிடமாட்டோம். கடந்த காலங்களின்போது செய்திகளில் தணிக்கையும் இடம்பெறாது எனவும் அவர் கூறினார்.

புடினின் வீடு இலக்கு வைப்பு: பிரதமர் மோடி கவலை!

ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடினின் இல்லம் மீது உக்ரைன் படைகள் ட்ரோன் தாக்குதல் நடத்தியதாக கூறப்படும் நிலையில், அது குறித்து பிரதமர் மோடி ஆழ்ந்த கவலை தெரிவித்துள்ளார்.

போரை முடிவுக்குக் கொண்டு வர தூதரக முயற்சிகளை தொடருமாறு அவர் அழைப்பு விடுத்துள்ளார்.

இது தொடர்பாக பிரதமர் மோடி வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில்,

‘‘ரஷ்ய ஜனாதிபதியின் இல்லம் குறிவைக்கப்பட்டதாக வரும் செய்திகள் குறித்து நான் ஆழ்ந்த கவலை கொண்டுள்ளேன். பகைமையை முடிவுக்குக் கொண்டு வந்து அமைதியை அடைய தற்போதைய தூதரக முயற்சிகளே மிகவும் சாத்தியமான வழி.

எனவே, சம்பந்தப்பட்ட அனைவரும் இந்த முயற்சிகளில் கவனம் செலுத்துமாறும் அவற்றை பலவீனப்படுத்தும் எந்த ஒரு நடவடிக்கையையும் தவிர்க்குமாறும் நாங்கள் கேட்டுக்கொள்கிறோம்’’ என தெரிவித்துள்ளார்.

கொழும்பு மாநகரசபையில் நாளை பலப்பரீட்சை!

கொழும்பு மாநகரசபையின் 2026 ஆம் நிதியாண்டுக்கான வரவு- செலவுத் திட்டம் நாளை 31 ஆம் திகதி மீண்டும் முன்வைக்கப்படவுள்ளது.

தேசிய மக்கள் சக்தியின் ஆளுகையின்கீழுள்ள கொழும்பு மாநகரசபையின் முதலாவது வரவு- செலவுத் திட்டம் கடந்த 22 ஆம் திகதி முன்வைக்கப்பட்டது.

இதன்போது வரவு- செலவுத் திட்டத்துக்கு ஆதரவாக 57 வாக்குகளும், எதிராக 60 வாக்குகளும் அளிக்கப்பட்டன.

இதற்கமைய மேலதிக 3 வாக்குகளால் பாதீடு தோற்கடிக்கப்பட்டது. இது தேசிய மக்கள் சக்திக்கு அரசியல் ரீதியிலான பின்னடைவு என கருதப்படுகின்றது.

இந்நிலையிலேயே வரவு- செலவுத் திட்டம் 2ஆவது தடவையாக நாளை முன்வைக்கப்படுகின்றது.

வாக்கெடுப்பின்போது வரவு- செலவுத் திட்டம் நிறைவேறும் எனவும், எதிரணி உறுப்பினர்கள் மனசாட்சியின் பிரகாரம் வாக்களிப்பார்கள் எனவும் கொழும்பு மேயர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

அதேவேளை, வரவு- செலவுத் திட்டம் வெல்லும் அரச அரசாங்கம் நம்பிக்கை வெளியிட்டுள்ளது.

தேசிய அமைப்பாளர் பதவியை ஏற்கமாட்டேன்!

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தேசிய அமைப்பாளர் பதவியை ஏற்கப்போவதில்லை என்று நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர தெரிவித்தார்.

நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை இருப்பதால் நீதிமன்றம் ஊடாக தனக்கு நீதி கிடைக்கும் என்ற நம்பிக்கை உள்ளதாகவும் அவர் கூறினார்.

பொதுச்செயலாளர் பதவியில் இருந்தே என்னை நீக்கியுள்ளனர்.
முதலில் அப்பிரச்சினை தீர்க்கப்பட வேண்டும். கட்சியின் தலைமைப் பதவி வழங்கப்படுமானால் அதனை ஏற்பேன் எனவும் தயாசிறி ஜயசேகர குறிப்பிட்டார்.

சஜித்துடன் ரணிலின் அரசியல் தளபதிகள் மந்திராலோசனை!

ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாசவுக்கும், ஐக்கிய தேசியக் கட்சியின் முக்கியஸ்தர்களுக்கும் இடையிலான சந்திப்பு இன்று (30) இடம்பெற்றுள்ளது.

ஐ.தேகவின் பிரதித் தலைவர் ருவன் விஜேவர்தன, உப தலைவர் அகில விராஜ் காரியவசம், முன்னாள் தேசிய அமைப்பாளர் நவீன் திசாநாயக்க ஆகியோர் இச்சந்திப்பில் பங்கேற்றிருந்தனர்.

இச்சந்திப்பு குறித்து தனது x தளத்தில் ஒரு பதிவையிட்டிருந்த எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச,

“ எமது தாய்நாடு எதிர்கொள்ளும் சவால்கள் மற்றும் தேசிய இலக்குகளை பயனுள்ள மற்றும் திறமையான முறையில் நிறைவேற்ற புதுமையான கொள்கை நடவடிக்கைகளை வகுப்பதன் முக்கியத்துவம் குறித்து பயனுள்ள மற்றும் நேர்மறையான கலந்துரையாடல்கள் நடைபெற்றன.” என தெரிவித்தார்.
ஐக்கிய தேசியக் கட்சி மற்றும் ஐக்கிய மக்கள் சக்தியை ஒன்றிணைப்பதற்குரிய முயற்சிகள் இடம்பெற்றுவரும் நிலையில், இச்சந்திப்பு முக்கிய திருப்பு முனையாக பார்க்கப்படுகின்றது.

300 பில்லியன் ரூபா மேலதிக வருமானத்துடன் சுங்கத் திணைக்களம் சாதனை பயணம்!

” 2025 ஆம் ஆண்டு , இலங்கை சுங்கத் திணைக்களம் வரலாற்றில் அதிக வருமானத்தை ஈட்டிய வருடமாக பதிவாகியுள்ளது என்றும், எதிர்பார்த்த வருமான இலக்கான 2115 பில்லியன் ரூபா வருமானத்தை தாண்டி, 300 பில்லியன் ரூபா மேலதிக வருமானத்துடன் 2026 ஆம் ஆண்டை ஆரம்பிக்க முடிந்துள்ளதாகவும் இலங்கை சுங்கப் பணிப்பாளர் நாயகம் எஸ்.பீ அருக்கொட தெரிவித்தார்.

ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தலைமையில் இன்று (30) முற்பகல் சுங்கத் திணைக்கள கேட்போர் கூடத்தில் நடைபெற்ற கலந்துரையாடலிலேயே இலங்கை சுங்கப் பணிப்பாளர் நாயகம் இவ்வாறு தெரிவித்தார்.

இலங்கை சுங்கத் திணைக்களம் 2025 ஆம் ஆண்டு பெற்றுக்கொண்ட முன்னேற்றம் மற்றும் 2026 ஆம் ஆண்டிற்கான புதிய திட்டம் தொடர்பில் ஆராய்வதற்காக இன்று காலை இலங்கை சுங்கத்திணைக்களத்திற்கு விஜயம் சென்ற ஜனாதிபதி, சுங்கப் பணிப்பாளர்கள் உள்ளிட்ட சிரேஷ்ட அதிகாரிகளுடன் கலந்துரையாடல் நடத்தினார்.

நாட்டுக்கு அவசியமான வருமானத்தை ஈட்டித்தந்து, பொருளாதார மற்றும் சமூக நிலைபேற்றை உருவாக்க இலங்கை சுங்கத் திணைக்களம் வழங்கிய பங்களிப்பை இதன்போது பாராட்டிய ஜனாதிபதி, அதற்காக அனைத்து உத்தியோகஸ்தர்களுக்கும் நன்றி தெரிவித்தார்.

மேலும், நாட்டுக்கு வருமானம் ஈட்டித்தரும் பிரதான நிறுவனமான இலங்கை சுங்கத் திணைக்களத்தின் செயற்பாடுகளை செயற்திறனாகவும் வெளிப்படைத் தன்மையுடனும் முன்னோக்கிக் கொண்டு செல்ல வேண்டியதன் அவசியத்தை சுட்டிக்காட்டிய ஜனாதிபதி, புதிய திட்டங்களுடன் ஒன்றிணைந்து பணியாற்றி 2026 ஆம் ஆண்டில் நாட்டை பொருளாதார ரீதியில் வெற்றிக்கு இட்டுச்செல்ல அர்ப்பணிப்போம் என்று அனைவருக்கும் அழைப்பு விடுத்தார்.

2022 ஆம் ஆண்டில் இடம்பெற்ற பொருளாதார வீழ்ச்சிக்கு நாட்டுக்கு தேவையான வருமானம் கிடைக்காமை மற்றும் நாட்டுக்கு அவசியமான டொலர்கள் கிடைக்காமை ஆகியவையே காரணமானது என்று இங்கு குறிப்பிட்ட ஜனாதிபதி, எதிர்பார்த்த வருமான இலக்கை அடைந்து, நாட்டில் பொருளாதார நிலைபேற்றுத் தன்மையை உருவாக்க தற்போது அரசாங்கத்தால் முடிந்துள்ளதாகவும், கடந்த அனர்த்த நிலைமையை எதிர்கொள்ள அது ஒரு பலமாக அமைந்ததாகவும் தெரிவித்தார்.

இலங்கை சுங்கத்திணைக்களத்தின் 2025 ஆம் ஆண்டுக்கான செயலாற்றுகை மற்றும் முன்னேற்றம், 2026 ஆம் ஆண்டுக்கான திட்டங்கள் தொடர்பிலும் இங்கு விரிவாக கலந்துரையாடப்பட்டதுடன், அது குறித்த புதிய ஆலோசனைகள் மற்றும் பரிந்துரைகளும் முன்வைக்கப்பட்டன.

வருமானம் சேகரிப்பு, வர்த்தகத்தை இலகுபடுத்தல், சமூக பாதுகாப்பு மற்றும் நிறுவன அபிவிருத்தி ஆகிய 04 பிரிவுகளின் கீழ் இலங்கை சுங்கத் திணைக்களம் செயற்படுவதோடு, அந்தந்த பிரிவுகளின் முன்னேற்றம் குறித்து இதன் போது ஜனாதிபதி கேட்டறிந்தார்.

நிறுவனத்தில் நேர்மையான கலாசாரத்தை மேம்படுத்துவதற்காகவும் நிறுவப்பட்ட உள் விவகாரப் பிரிவு வெற்றிகரமாக செயல்பட்டு வருவதாகவும் இங்கு குறிப்பிடப்பட்டது.

சுங்க நடவடிக்கைகளில் பெரும்பாலும் குற்றம் சாட்டப்படும் நெரிசல், தாமதம் மற்றும் ஊழல்களைத் தடுக்க எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்தும் ஜனாதிபதி கேட்டறிந்ததுடன், பொருட்கள் சோதனை செய்யும் கட்டமைப்பை நவீனமயபடுத்தும் திட்டம் குறித்தும் கலந்துரையாடப்பட்டது.

மேலும், இலங்கை சுங்கத்தை டிஜிட்டல் மயமாக்குவதற்காக 2026 ஆம் ஆண்டு செயல்படுத்தப்படும் திட்டம் குறித்து ஜனாதிபதிக்கு விளக்கமளிக்கப்பட்டதுடன், பணியாளர் ஆட்சேர்ப்பு, பதவி உயர்வு, பயிற்சி மற்றும் சம்பளம் மற்றும் கொடுப்பனவுகள் தொடர்பாக எழுந்துள்ள பிரச்சினைகள் குறித்தும் கலந்துரையாடப்பட்டது.

நாட்டில் ஸ்திரமின்மையை உருவாக்கும் முயற்சிகள் மற்றும் திட்டங்கள் தொடர்ந்து செயல்படுத்தப்படுவதால், அதற்கான வாய்ப்புகள் உருவாக்கப்படுவதைத் தடுப்பதில் விமான நிலையம் மிக முக்கிய இடம் என்று சுட்டிக்காட்டிய ஜனாதிபதி, எதிர்கால சவால்களை எதிர்கொள்ளக்கூடிய வகையிலும் அரசின் இருப்பு தொடர்பான பொறுப்பை இணங்கண்டு அதன் செயல்பாடுகளைப் பேண வேண்டியதன் அவசியத்தையும் வலியுறுத்தினார்.

தொழில் அமைச்சர் மற்றும் நிதி, திட்டமிடல் பிரதி அமைச்சர் கலாநிதி அனில் ஜயந்த பெர்னாண்டோ, பொருளாதார அபிவிருத்தி பிரதி அமைச்சர் நிசாந்த ஜயவீர, ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்க, திறைசேரியின் பிரதி செயலாளர் ஏ.என் ஹபுகல, இலங்கை சுங்கத் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் எஸ்.பீ அருக்கொட, பணிப்பாளர்கள் உள்ளிட்ட சிரேஷ்ட அதிகாரிகள் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.

தோட்டப் பாடசாலைகளில் ஆசிரியர் விடுதிகளை அமைக்க அமைச்சரவை ஒப்புதல்!

மத்திய, ஊவா, சப்ரகமுவ, மேல், தெற்கு மற்றும் வடமேல் மாகாணங்களிலுள்ள தேயிலை மற்றும் இறப்பர் தோட்டங்களில் 864 பாடசாலைகள் இயங்குகின்றன.

அப்பாடசாலைகளில் அதிகமானவை நகரங்களிலிருந்து தூரப் பிரதேசங்களில் அமைந்துள்ளமையால், அதிபர்மார் மற்றும் ஆசிரியர்களுக்கு பாடசாலைகளுக்குச் செல்வதற்குச் சிரமங்கள் காணப்படுகின்றன.

அப்பாடசாலைகளில் இரண்டாம்நிலைக் கல்வி வகுப்புக்களில் நிலவுகின்ற ஆசிரியர் பற்றாக்குறையால் க.பொ.த சாதாரணதரப் பரீட்சை மற்றும் க.பொ.த உயர்தரப் பரீட்சை போன்ற தேசியப் பரீட்சைகளில் அப்பாடசாலைகளின் மொத்தத் தேர்ச்சி ஏனைய அரச பாடசாலைகளுடன் ஒப்பிடுகையில் குறைந்த மட்டத்தில் இருக்கின்றமை சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இந்நிலைமை பெரும்பாலும் இளைஞர் தலைமுறையினர் திறனற்ற தொழிலாளர்களாக உருவாவதற்கு காரணமாக அமைந்துள்ளது.
அதனால், தோட்டப் பாடசாலைகளில் மனிதவளம் மற்றும் பௌதீக வளங்களை அதிகரிக்க வேண்டிய கட்டாயத் தேவை காணப்படுகின்றது.

அதற்கமைய, ஆசிரியர் பற்றாக்குறையைக் குறைத்து இப்பாடசாலைகளில் மனித வளங்களை அதிகரிப்பதற்கு இயலுமை கிட்டும் வகையில், அந்தந்த மாகாணங்களில் ஆசிரியர் விடுதி தேவைகள் காணப்படுகின்ற 14 தேர்ந்தெடுக்கப்பட்ட பாடசாலைகளில் ஆசிரியர் விடுதிகளை நிர்மாணிப்பதற்கான கருத்திட்டங்களை அந்தந்த மாகாண சபைகள் மூலமாக அமுல்படுத்துவதற்கு கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சராக பிரதமர் சமர்ப்பித்துள்ள யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

 

வடக்கு மாகாண சுற்றுலா அபிவிருத்திப் பணியகத்துக்கு தலைவர் நியமனம்!

 

வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகனால் , வடக்கு மாகாண சுற்றுலா அபிவிருத்திப் பணியகத்தின் தலைவராக, சுற்றுலா அபிவிருத்தி ஆலோசகராகப் பணியாற்றும் கலாநிதி ஜெகநாதன் விவேகானந்தன் நியமிக்கப்பட்டுள்ளார்.

இவருக்கான நியமனக் கடிதத்தை ஆளுநர் செயலகத்தில் வைத்து இன்று திங்கட் கிழமை காலை (29.12.2025) ஆளுநர் கையளித்தார். இந்த நிகழ்வில் ஆளுநரின் செயலாளர் எஸ்.சத்தியசீலனும் கலந்துகொண்டார்.

சினிமா

பிரபல இந்திய பாடகி ஆஷா போஸ்லே காலமானார்!

0
  பிரபல இந்திய பின்னணி பாடகி ஆஷா போஸ்லே தமது 92ஆவது வயதில் இன்று(12) காலமானார். இந்திய திரையுலகில் 10,000-இற்கும் அதிக பாடல்களை பாடியுள்ள மூத்த பாடகி ஆஷா போஸ்லே நேற்று(11) மாரடைப்பு ஏற்பட்டதையடுத்து மும்பையிலுள்ள...

சின்னத்திரை நடிகை தற்#கொ#லை!

0
  இலங்கையை பூர்வீகமாகக்கொண்ட பிரபல சின்னத்திரை நடிகையான சுபாஷினி (வயது 36) தற்#கொ#லை செய்துகொண்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. "கயல்" சின்னத்திரை தொலைக்காட்சி தொடரில் நடித்து வருபவர் சுபாஷிணி (வயது36). இலங்கையை பூர்வீகமாகக்கொண்ட இவர் கடந்த...

“தனுஷின் நட்பை இழந்தது மிகப்பெரிய அவமானம்” – விக்னேஷ் சிவன் வருத்தம்

0
தனுஷ் உடனான நட்பை இழந்தது மிகப்பெரிய அவமானம் என்று விக்னேஷ் சிவன் பகிர்ந்துள்ளார். விக்னேஷ் சிவன் இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன் நடித்துள்ள ‘எல்.ஐ.கே’ திரைப்படம் ஏப்ரல் 10-ம் திகதி திரைக்கு வரவுள்ளது. நீண்ட பிரச்சினைகளுக்கு...

செய்தி

சுயநல நோக்கில் கோரிக்கைகளை முன்வைக்கும் அமெரிக்கா: ஈரான் குற்றச்சாட்டு

0
அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடத்துவது சாத்தியமற்றது என்று ஈரான் நாடாளுமன்ற உறுப்பினர் முகமது ரெசா மொஹ்செனி சானி Mohammad Reza Mohseni Sani தெரிவித்துள்ளார். அமெரிக்கா தனது சுயநல நோக்கங்களுக்காகவும் தேவையற்ற கோரிக்கைகளை முன்வைப்பதாலுமே குழப்பம்...

அமைதிக்கான நடை பயணம்…..!

0
‘Walk for Peace Program in Sri Lanka’ அமைதிக்கான நடைப்பயணத்திற்காக அமெரிக்காவில் அமைதிக்கான நடைபயணத்திற்குத் தலைமை தாங்கிய வண. பஞ்ஞாகர தேரர் உள்ளிட்ட நான்கு தேரர்கள், இன்று (21) முற்பகல் இந்நாட்டை...