Home Blog Page 148

தோட்டப் பாடசாலைகளில் ஆசிரியர் விடுதிகளை அமைக்க அமைச்சரவை ஒப்புதல்!

மத்திய, ஊவா, சப்ரகமுவ, மேல், தெற்கு மற்றும் வடமேல் மாகாணங்களிலுள்ள தேயிலை மற்றும் இறப்பர் தோட்டங்களில் 864 பாடசாலைகள் இயங்குகின்றன.

அப்பாடசாலைகளில் அதிகமானவை நகரங்களிலிருந்து தூரப் பிரதேசங்களில் அமைந்துள்ளமையால், அதிபர்மார் மற்றும் ஆசிரியர்களுக்கு பாடசாலைகளுக்குச் செல்வதற்குச் சிரமங்கள் காணப்படுகின்றன.

அப்பாடசாலைகளில் இரண்டாம்நிலைக் கல்வி வகுப்புக்களில் நிலவுகின்ற ஆசிரியர் பற்றாக்குறையால் க.பொ.த சாதாரணதரப் பரீட்சை மற்றும் க.பொ.த உயர்தரப் பரீட்சை போன்ற தேசியப் பரீட்சைகளில் அப்பாடசாலைகளின் மொத்தத் தேர்ச்சி ஏனைய அரச பாடசாலைகளுடன் ஒப்பிடுகையில் குறைந்த மட்டத்தில் இருக்கின்றமை சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இந்நிலைமை பெரும்பாலும் இளைஞர் தலைமுறையினர் திறனற்ற தொழிலாளர்களாக உருவாவதற்கு காரணமாக அமைந்துள்ளது.
அதனால், தோட்டப் பாடசாலைகளில் மனிதவளம் மற்றும் பௌதீக வளங்களை அதிகரிக்க வேண்டிய கட்டாயத் தேவை காணப்படுகின்றது.

அதற்கமைய, ஆசிரியர் பற்றாக்குறையைக் குறைத்து இப்பாடசாலைகளில் மனித வளங்களை அதிகரிப்பதற்கு இயலுமை கிட்டும் வகையில், அந்தந்த மாகாணங்களில் ஆசிரியர் விடுதி தேவைகள் காணப்படுகின்ற 14 தேர்ந்தெடுக்கப்பட்ட பாடசாலைகளில் ஆசிரியர் விடுதிகளை நிர்மாணிப்பதற்கான கருத்திட்டங்களை அந்தந்த மாகாண சபைகள் மூலமாக அமுல்படுத்துவதற்கு கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சராக பிரதமர் சமர்ப்பித்துள்ள யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

 

வடக்கு மாகாண சுற்றுலா அபிவிருத்திப் பணியகத்துக்கு தலைவர் நியமனம்!

 

வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகனால் , வடக்கு மாகாண சுற்றுலா அபிவிருத்திப் பணியகத்தின் தலைவராக, சுற்றுலா அபிவிருத்தி ஆலோசகராகப் பணியாற்றும் கலாநிதி ஜெகநாதன் விவேகானந்தன் நியமிக்கப்பட்டுள்ளார்.

இவருக்கான நியமனக் கடிதத்தை ஆளுநர் செயலகத்தில் வைத்து இன்று திங்கட் கிழமை காலை (29.12.2025) ஆளுநர் கையளித்தார். இந்த நிகழ்வில் ஆளுநரின் செயலாளர் எஸ்.சத்தியசீலனும் கலந்துகொண்டார்.

ஈரான் அணுசக்தி திட்டத்தை மீள ஆரம்பித்தால் அழித்துவிடுவோம்: ட்ரம்ப் எச்சரிக்கை!

“ஈரான் தனது அணுசக்தித் திட்டத்தை மீண்டும் தொடங்கினால் அழித்துவிடுவோம். அவர்களை சின்னாபின்னமாக்குவோம்” என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

அமெரிக்காவின் புளோரிடாவில் உள்ள தனது இல்லத்தில், இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு உடன் அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் பேச்சுவார்த்தை நடத்தினார்.

ஈரானுக்கு எதிராக புதிய ராணுவ நடவடிக்கைகளை எடுப்பதன் அவசியம் குறித்து டிரம்ப் உடன் நெதன்யாகு ஆலோசனை நடத்தியதாக தெரிகிறது.

“ஜூன் மாதம் முக்கிய அணுசக்தி செறிவூட்டல் தளங்கள் மீது அமெரிக்கா நடத்திய தாக்குதல்களால் ஈரானின் அணுசக்தித் திறன்கள் முற்றிலும் முழுமையாக அழிக்கப்பட்டுவிட்டன.

இப்போது ஈரான் மீண்டும் கட்டமைக்க முயற்சிக்கிறது என்று நான் கேள்விப்படுகிறேன். அவர்கள் அப்படிச் செய்தால், நாம் அவர்களைத் தடுத்து நிறுத்த வேண்டியிருக்கும். நாம் அவர்களைத் தடுத்து நிறுத்துவோம். அவர்களைச் சின்னாபின்னமாக்குவோம்.

அந்த திட்டத்தை முற்றிலுமாக அழித்துவிடுவோம். ஆனால், அப்படி அவர்கள் செய்ய மாட்டார்கள் என்று நம்புகிறேன்.” என்று அமெரிக்க ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.

இஸ்ரேல்-ஹமாஸ் போர்நிறுத்த ஒப்பந்தத்தின் இரண்டாம் கட்டத்தை எங்களால் முடிந்தவரை விரைவாக அடைய விரும்புகிறோம். ஆனால், ஹமாஸ் ஆயுதங்களைக் கைவிட வேண்டும்.

பேச்சுவார்த்தையில் நாங்கள் நிறைய முன்னேற்றம் அடைந்துள்ளோம். மூன்று பிரச்னைகளை ஏற்கனவே தீர்த்துவிட்டோம். தவறான பிரதமர் இருந்திருந்தால் இஸ்ரேல் என்ற நாடே இருந்திருக்காது எனவும் டிரம்ப் தெரிவித்தார்.

2025ஆம் ஆண்டில் பாராளுமன்றத்தில் 26 சட்டங்கள் நிறைவேற்றம்

2025ஆம் ஆண்டு ஜனவரி 01ஆம் திகதி முதல் 2025ஆம் ஆண்டு டிசம்பர் 31ஆம் திகதி வரையான ஒருவருட காலப்பகுதியில் பத்தாவது பாராளுமன்றத்தின் முதலாவது கூட்டத்தொடரில் அரசாங்கத்தினால் கொண்டுவரப்பட்ட 26 சட்டமூலங்கள் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளன.

நிறைவேற்றப்பட்ட சட்டங்கள் குறித்த விபரங்கள் வருமாறு,

யாழில் 4 கிலோ கஞ்சாவுடன் பிரதேச சபை உறுப்பினர் கைது!

கைது நடவடிக்கையில் ஈடுபட்ட பொலிஸார்
கைது நடவடிக்கையில் ஈடுபட்ட பொலிஸார்

யாழ்ப்பாணத்தில் நான்கு கிலோகிராம் கஞ்சாவுடன் பிரதேச சபை உறுப்பினர் ஒருவர் கைது செய்யப்பட்டார்.

யாழ்ப்பாண மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவு பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலுக்கமைய சங்கிலியன் பூங்கா அருகில் இன்றையதினம் அதிகாலை குறித்த நபர் கைது செய்யப்பட்டார்.

வரணி பகுதியைச் சேர்ந்த நல்லூர் பிரதேச சபை உறுப்பினர் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டார்.

சந்தேக நபரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் வெளிநாட்டில் இருந்து வரும் ஒப்பந்தத்துக்கமைய போதைப்பொருளை கையளிப்பதாக பொலிஸாரிடம் தெரிவித்துள்ளார்.

மேலதிக விசாரணைகளுக்கு பின்னர் சந்தேக நபரை யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றத்தில் முற்படுத்த பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

ரணிலின் ஆலோசனை தேவை: அவர் மீண்டும் நாடாளுமன்றம் வரவேண்டும்!

” தற்போதைய சூழ்நிலையில் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் ஆலோசனை எமது நாட்டுக்கு தேவை. எனவே, ரணில் விக்கிரமசிங்க நாடாளுமன்றம் வருவது நாட்டுக்கு நல்லது.” – என்று முன்னாள் இராஜாங்க அமைச்சர் டிலான் பெரேரா தெரிவித்தார்.

பதுளையில் நேற்று நடைபெற்ற ஊடக சந்திப்பின்போது, முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மீண்டும் நாடாளுமன்றம் வரவேண்டும் என சமூகவலைத்தளங்களில் விடுக்கப்பட்டுவரும் கோரிக்கைகள் தொடர்பில் அவரிடம் கேள்வி எழுப்பட்டது.

இதற்கு பதிலளிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

மரக்கறி விலைப்பட்டியல் (30.12.2025)

நுவரெலியா பொருளாதார மத்திய நிலையத்தால் இன்று (30) வெளியிடப்பட்டுள்ள மரக்கறி வகைகளின் (ஒரு கிலோ) விலை பட்டியல்…

பங்களாதேசின் முன்னாள் பிரதமர் கலீதா ஜியா காலமானார்!

பங்களாதேசின் முதல் பெண் பிரதமரும், அந்நாட்டின் எதிர்க்கட்சியான வங்கதேச தேசியக் கட்சியின் தலைவருமான கலீதா ஜியா (80) இன்று அதிகாலை காலமானார்.

நீண்டகாலமாக உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டு டாக்காவிலுள்ள வைத்தியசாலையொன்றில் சிகிச்சை பெற்று வந்த அவர், உயிரிழந்ததாக அவரது கட்சி அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.

கலீதா ஜியா, கல்லீரல் பாதிப்பு, நீரிழிவு மற்றும் இதயம் தொடர்பான பல்வேறு உடல்நலப் பிரச்சனைகளால் அவதிப்பட்டு வந்தார்.

கடந்த நவம்பர் 23-ம் திகதி நுரையீரல் தொற்று காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. எனினும் அவரது உடல்நிலை சீராகவில்லை.

கடந்த டிசம்பர் 11-ம் திகதி முதல் அவர் தீவிர சிகிச்சை பிரிவில் செயற்கை சுவாசக் கருவி உதவியுடன் சிகிச்சை பெற்று வந்தார்.

வெளிநாட்டு மருத்துவர்கள் அடங்கிய குழுவினர் அவருக்குத் தீவிர சிகிச்சை அளித்து வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி இன்று அவர் உயிரிழந்தார்.

பங்களாதேசின் முன்னாள் ஜனாதிபதி ஜியாவுர் ரஹ்மானின் மனைவியான கலீதா ஜியா, 1981-ல் தனது கணவர் படுகொலை செய்யப்பட்ட பிறகு அரசியலில் நுழைந்தார்.

1984-ம் ஆண்டு முதல் பிஎன்பி கட்சியின் தலைவராகப் பொறுப்பு வகித்த அவர், 1991 முதல் 1996 வரையிலும், மீண்டும் 2001 முதல் 2006 வரையிலும் என மூன்று முறை பிரதமராக பதவி வகித்தார்.
17 ஆண்டுகளாக லண்டனில் வாழ்ந்து வந்த அவரது மூத்த மகன் தாரிக் ரஹ்மான், சில நாட்களுக்கு முன்புதான் பங்களாதேஸ் திரும்பியிருந்தார்.

பங்களாதேஸ் அரசியலில் ஷேக் ஹசீனாவுக்குப் பெரும் சவாலாகத் திகழ்ந்த கலீதா ஜியாவின் மறைவு அந்நாட்டின் அரசியல் வட்டாரத்தில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

பூரண அரச அனுசரணையுடன் லதா வல்பொலவின் இறுதிச் சடங்கு

காலஞ் சென்ற இலங்கையின் கானக் குயில் லதா வல்பொலவின் இறுதிச் சடங்குகள்,நாளை 31ஆம் திகதி, புதன்கிழமை, கொழும்பு சுதந்திர சதுக்கத்தில், பூரண அரச அனுசரணையில் இடம்பெறவுள்ளது.

இவ்வறிவித்தலை பொதுநிர்வாகம், உள்ளூராட்சி மன்றங்கள், மாகாண சபைகள் அமைச்சு மற்றும் புத்தசாசன, மத மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சு ஆகியன இணைந்து அறிவித்துள்ளன.

பழம்பெரும் பாடகியான திருமதி லதா வல்பொல (26) தனது 91ஆவது வயதில் காலமானார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

டித்வா புயல்: சுகாதாரத்துறைக்கு 21 பில்லியன் ரூபா இழப்பு!

நாட்டில் சிறந்த ஆரம்ப சுகாதார சேவையை நிறுவுவதிலும், நாட்டை மீண்டும் கட்டியெழுப்பும் பணியிலும் பல் சத்திர சிகிச்சை நிபுணர்கள் முக்கிய பங்கு வகிப்பதாக சுகாதார மற்றும் ஊடக அமைச்சர் டாக்டர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.

சுகாதார சேவையில் ஆட்சேர்ப்பு செய்வதற்காக 62 பல் அறுவை சிகிச்சை நிபுணர்களுக்கான நியமனக் கடிதங்களை வழங்கும் விழாவில் பிரதம விருந்தினராக கலந்து கொண்டு அமைச்சர் இந்த விஷயங்களை தெரிவித்தார்.

நியமனக் கடிதங்கள் வழங்கும் நிகழ்வு நேற்று(29) காலை சுகாதார மற்றும் ஊடக அமைச்சின் பிரதான கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.

இந்த பல் அறுவை சிகிச்சை நிபுணர்கள் இலங்கை மற்றும் வெளிநாட்டு பல்கலைக்கழகங்களில் உள்ள மருத்துவ பீடங்களில் ஐந்து ஆண்டுகள் இளங்கலை பட்டபடிப்பை நிறைவு செய்து உள்ளனர். 

அதன் பிறகு நாடு முழுவதும் உள்ள முக்கிய அரசு மருத்துவமனைகளில் சிறப்பு மருத்துவர்கள் மற்றும் அனுபவம் வாய்ந்த மருத்துவர்களின் மேற்பார்வையின் கீழ் ஒரு வருட பயிற்சியைப் பெற்றுள்ளனர்.

இந்த நியமனங்கள் 01.01.2026 முதல் நடைமுறைக்கு வரும் வகையில் வழங்கப்பட்டன, மேலும் இந்த பல் அறுவை சிகிச்சை நிபுணர்களை வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்கள் உட்பட தொலைதூரப் பகுதிகளில் நிறுவப்பட்ட அரசு மருத்துவமனைகள் மற்றும் சுகாதார நிறுவனங்களின் சேவையில் இணைக்க சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சகம் நடவடிக்கை எடுத்துள்ளது.

உலக வங்கி நடத்திய மதிப்பீட்டு அறிக்கையின்படி, சூறாவளி டித்வா நாட்டின் பொருளாதாரத்திற்கு 4.1 பில்லியன் டாலர் சேதத்தை ஏற்படுத்தியுள்ளதாகக் கூறிய சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் டாக்டர் நளிந்த ஜயதிஸ்ஸ, நாட்டை மீண்டும் கட்டியெழுப்புவது நம் அனைவருக்கும் உள்ள சவால் என்றும், மீண்டும் கட்டியெழுப்புவது என்பது சேதமடைந்த ஒன்றை சரிசெய்வது மட்டுமல்ல, சேதத்தை சரிசெய்வதற்கு அப்பாற்பட்டது என்றும் தெரிவித்தார்.

கணக்கிடப்பட்டபடி நாட்டின் சுகாதார அமைப்பும் ரூ. 21 பில்லியன் இழப்பைச் சந்தித்துள்ளதாகவும், மருத்துவமனைகள் உட்பட 8 சுகாதார நிறுவனங்கள் மாற்றப்பட வேண்டியுள்ளதாகவும் அவர் கூறினார். சிலாபம் மாவட்ட பொது மருத்துவமனை மற்றும் மஹியங்கனை அடிப்படை மருத்துவமனை போன்ற பல மருத்துவமனைகள் மற்றும் நிறுவனங்களுக்கு கணிசமான அளவு உபகரணங்கள் வழங்கப்பட வேண்டும் என்று அமைச்சர் தெரிவித்தார்.

தெனியாய மருத்துவமனை முழுமையாக மாற்றப்பட வேண்டிய மருத்துவமனை என்றும், புத்தளம் மருத்துவமனையை மேம்படுத்த வேண்டும் என்றும், தம்புள்ளை ஆதார மருத்துவமனையை வேறொரு இடத்தில் நிறுவ திட்டமிடப்பட்டுள்ளது என்றும் அவர் தெரிவித்தார்.

ஊழியர்களை நியமிக்காததோடு மட்டுமல்லாமல், கடந்த பத்து முதல் பன்னிரண்டு ஆண்டுகளில் மருத்துவமனைகளுக்கு அவசியமான பல கட்டுமானத் திட்டங்கள் தொடங்கப்பட்டு நிறுத்தப்பட்டுள்ளன என்றும், இந்த நடவடிக்கைகள் ஏற்கனவே தொடங்கப்பட்டுள்ளன என்றும் அமைச்சர் டாக்டர் நளிந்த ஜயதிஸ்ஸ நினைவு கூர்ந்தார். 58 பில்லியன் ரூபாய் செலவில் இதுபோன்ற 17 திட்டங்களை முடிக்க அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளதாகவும், கடந்த வாரம் மேலும் 08 திட்டங்களுக்கு அமைச்சரவை ஒப்புதல் பெறப்பட்டதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.

தற்போது, சேவையில் சுமார் 1400 பல் அறுவை சிகிச்சை நிபுணர்களும், தனியார் சேவையில் சுமார் 1100 பேரும், சுமார் 2500 பல் அறுவை சிகிச்சை நிபுணர்களும் பணியாற்றி வருவதாகவும், மக்கள் தொகையில் ஒன்பதாயிரம் முதல் பத்தாயிரம் பேருக்கு ஒரு மருத்துவர் இருப்பதாகவும் அமைச்சர் நினைவுபடுத்தினார். இது போதாது என்றும், படிப்படியாக உயர்த்தப்பட வேண்டும் என்றும் அமைச்சர் தெரிவித்தார்.

தற்போது, ஆண்டுதோறும், உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் சுமார் நூறு பல் அறுவை சிகிச்சை நிபுணர்கள் உருவாக்கபடுகிறார்கள், மேலும் இது எதிர்காலத்தில் நூற்று இருபத்தைந்து முதல் நூற்று முப்பது வரை அதிகரிக்கும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.

இந்த நிகழ்வில் சுகாதார மற்றும் ஊடக அமைச்சின் மேலதிக செயலாளர் மருத்துவர் குமார விக்ரமசிங்க, சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் மருத்துவர் அசேல குணவர்தன, துணைப் பணிப்பாளர் மருத்துவர் ஆனந்த ஜெயலால், மருத்துவர் சந்தன கஜநாயக்க, மருத்துவர் சமித்தி சமரக்கோன் மற்றும் அமைச்சின் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

 

 

சினிமா

பிரபல இந்திய பாடகி ஆஷா போஸ்லே காலமானார்!

0
  பிரபல இந்திய பின்னணி பாடகி ஆஷா போஸ்லே தமது 92ஆவது வயதில் இன்று(12) காலமானார். இந்திய திரையுலகில் 10,000-இற்கும் அதிக பாடல்களை பாடியுள்ள மூத்த பாடகி ஆஷா போஸ்லே நேற்று(11) மாரடைப்பு ஏற்பட்டதையடுத்து மும்பையிலுள்ள...

சின்னத்திரை நடிகை தற்#கொ#லை!

0
  இலங்கையை பூர்வீகமாகக்கொண்ட பிரபல சின்னத்திரை நடிகையான சுபாஷினி (வயது 36) தற்#கொ#லை செய்துகொண்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. "கயல்" சின்னத்திரை தொலைக்காட்சி தொடரில் நடித்து வருபவர் சுபாஷிணி (வயது36). இலங்கையை பூர்வீகமாகக்கொண்ட இவர் கடந்த...

“தனுஷின் நட்பை இழந்தது மிகப்பெரிய அவமானம்” – விக்னேஷ் சிவன் வருத்தம்

0
தனுஷ் உடனான நட்பை இழந்தது மிகப்பெரிய அவமானம் என்று விக்னேஷ் சிவன் பகிர்ந்துள்ளார். விக்னேஷ் சிவன் இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன் நடித்துள்ள ‘எல்.ஐ.கே’ திரைப்படம் ஏப்ரல் 10-ம் திகதி திரைக்கு வரவுள்ளது. நீண்ட பிரச்சினைகளுக்கு...

செய்தி

“கிளீன் ஸ்ரீலங்கா”: மாற்றுத்திறனாளிகளுக்கான விசேட பஸ் சேவை ஆரம்பம்!

0
"கிளீன் ஸ்ரீலங்கா" தேசிய திட்டம் மற்றும் போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சு இணைந்து முன்னெடுக்கும் மாற்றுத்திறனாளிகள் மற்றும் விசேட தேவையுடையோருக்காக வடிவமைக்கப்பட்ட "தாழ்தள" (Low Floor) பஸ் சேவை இன்று...

ஈஸ்டர் தாக்குதலுக்கு நீதி வேண்டிப் பிரார்த்தனை

0
2019ஆம் ஆண்டு உயிர்த்த ஞாயிறு தினத்தன்று இடம்பெற்ற தொடர் குண்டுத்தாக்குதல்களில் உயிரிழந்தவர்களை நினைவுகூரும் 7ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வுகள் இன்று யாழ்ப்பாணத்தில் உணர்வுபூர்வமாக நடைபெற்றன. யாழ். மறைமாவட்ட குருமுதல்வர் அருட்தந்தை ஜெபரட்ணத்தின் ஒழுங்குபடுத்தலில், யாழ்ப்பாணம்...

சுயநல நோக்கில் கோரிக்கைகளை முன்வைக்கும் அமெரிக்கா: ஈரான் குற்றச்சாட்டு

0
அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடத்துவது சாத்தியமற்றது என்று ஈரான் நாடாளுமன்ற உறுப்பினர் முகமது ரெசா மொஹ்செனி சானி Mohammad Reza Mohseni Sani தெரிவித்துள்ளார். அமெரிக்கா தனது சுயநல நோக்கங்களுக்காகவும் தேவையற்ற கோரிக்கைகளை முன்வைப்பதாலுமே குழப்பம்...