Home Blog Page 149

டித்வா புயல்: சுகாதாரத்துறைக்கு 21 பில்லியன் ரூபா இழப்பு!

நாட்டில் சிறந்த ஆரம்ப சுகாதார சேவையை நிறுவுவதிலும், நாட்டை மீண்டும் கட்டியெழுப்பும் பணியிலும் பல் சத்திர சிகிச்சை நிபுணர்கள் முக்கிய பங்கு வகிப்பதாக சுகாதார மற்றும் ஊடக அமைச்சர் டாக்டர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.

சுகாதார சேவையில் ஆட்சேர்ப்பு செய்வதற்காக 62 பல் அறுவை சிகிச்சை நிபுணர்களுக்கான நியமனக் கடிதங்களை வழங்கும் விழாவில் பிரதம விருந்தினராக கலந்து கொண்டு அமைச்சர் இந்த விஷயங்களை தெரிவித்தார்.

நியமனக் கடிதங்கள் வழங்கும் நிகழ்வு நேற்று(29) காலை சுகாதார மற்றும் ஊடக அமைச்சின் பிரதான கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.

இந்த பல் அறுவை சிகிச்சை நிபுணர்கள் இலங்கை மற்றும் வெளிநாட்டு பல்கலைக்கழகங்களில் உள்ள மருத்துவ பீடங்களில் ஐந்து ஆண்டுகள் இளங்கலை பட்டபடிப்பை நிறைவு செய்து உள்ளனர். 

அதன் பிறகு நாடு முழுவதும் உள்ள முக்கிய அரசு மருத்துவமனைகளில் சிறப்பு மருத்துவர்கள் மற்றும் அனுபவம் வாய்ந்த மருத்துவர்களின் மேற்பார்வையின் கீழ் ஒரு வருட பயிற்சியைப் பெற்றுள்ளனர்.

இந்த நியமனங்கள் 01.01.2026 முதல் நடைமுறைக்கு வரும் வகையில் வழங்கப்பட்டன, மேலும் இந்த பல் அறுவை சிகிச்சை நிபுணர்களை வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்கள் உட்பட தொலைதூரப் பகுதிகளில் நிறுவப்பட்ட அரசு மருத்துவமனைகள் மற்றும் சுகாதார நிறுவனங்களின் சேவையில் இணைக்க சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சகம் நடவடிக்கை எடுத்துள்ளது.

உலக வங்கி நடத்திய மதிப்பீட்டு அறிக்கையின்படி, சூறாவளி டித்வா நாட்டின் பொருளாதாரத்திற்கு 4.1 பில்லியன் டாலர் சேதத்தை ஏற்படுத்தியுள்ளதாகக் கூறிய சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் டாக்டர் நளிந்த ஜயதிஸ்ஸ, நாட்டை மீண்டும் கட்டியெழுப்புவது நம் அனைவருக்கும் உள்ள சவால் என்றும், மீண்டும் கட்டியெழுப்புவது என்பது சேதமடைந்த ஒன்றை சரிசெய்வது மட்டுமல்ல, சேதத்தை சரிசெய்வதற்கு அப்பாற்பட்டது என்றும் தெரிவித்தார்.

கணக்கிடப்பட்டபடி நாட்டின் சுகாதார அமைப்பும் ரூ. 21 பில்லியன் இழப்பைச் சந்தித்துள்ளதாகவும், மருத்துவமனைகள் உட்பட 8 சுகாதார நிறுவனங்கள் மாற்றப்பட வேண்டியுள்ளதாகவும் அவர் கூறினார். சிலாபம் மாவட்ட பொது மருத்துவமனை மற்றும் மஹியங்கனை அடிப்படை மருத்துவமனை போன்ற பல மருத்துவமனைகள் மற்றும் நிறுவனங்களுக்கு கணிசமான அளவு உபகரணங்கள் வழங்கப்பட வேண்டும் என்று அமைச்சர் தெரிவித்தார்.

தெனியாய மருத்துவமனை முழுமையாக மாற்றப்பட வேண்டிய மருத்துவமனை என்றும், புத்தளம் மருத்துவமனையை மேம்படுத்த வேண்டும் என்றும், தம்புள்ளை ஆதார மருத்துவமனையை வேறொரு இடத்தில் நிறுவ திட்டமிடப்பட்டுள்ளது என்றும் அவர் தெரிவித்தார்.

ஊழியர்களை நியமிக்காததோடு மட்டுமல்லாமல், கடந்த பத்து முதல் பன்னிரண்டு ஆண்டுகளில் மருத்துவமனைகளுக்கு அவசியமான பல கட்டுமானத் திட்டங்கள் தொடங்கப்பட்டு நிறுத்தப்பட்டுள்ளன என்றும், இந்த நடவடிக்கைகள் ஏற்கனவே தொடங்கப்பட்டுள்ளன என்றும் அமைச்சர் டாக்டர் நளிந்த ஜயதிஸ்ஸ நினைவு கூர்ந்தார். 58 பில்லியன் ரூபாய் செலவில் இதுபோன்ற 17 திட்டங்களை முடிக்க அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளதாகவும், கடந்த வாரம் மேலும் 08 திட்டங்களுக்கு அமைச்சரவை ஒப்புதல் பெறப்பட்டதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.

தற்போது, சேவையில் சுமார் 1400 பல் அறுவை சிகிச்சை நிபுணர்களும், தனியார் சேவையில் சுமார் 1100 பேரும், சுமார் 2500 பல் அறுவை சிகிச்சை நிபுணர்களும் பணியாற்றி வருவதாகவும், மக்கள் தொகையில் ஒன்பதாயிரம் முதல் பத்தாயிரம் பேருக்கு ஒரு மருத்துவர் இருப்பதாகவும் அமைச்சர் நினைவுபடுத்தினார். இது போதாது என்றும், படிப்படியாக உயர்த்தப்பட வேண்டும் என்றும் அமைச்சர் தெரிவித்தார்.

தற்போது, ஆண்டுதோறும், உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் சுமார் நூறு பல் அறுவை சிகிச்சை நிபுணர்கள் உருவாக்கபடுகிறார்கள், மேலும் இது எதிர்காலத்தில் நூற்று இருபத்தைந்து முதல் நூற்று முப்பது வரை அதிகரிக்கும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.

இந்த நிகழ்வில் சுகாதார மற்றும் ஊடக அமைச்சின் மேலதிக செயலாளர் மருத்துவர் குமார விக்ரமசிங்க, சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் மருத்துவர் அசேல குணவர்தன, துணைப் பணிப்பாளர் மருத்துவர் ஆனந்த ஜெயலால், மருத்துவர் சந்தன கஜநாயக்க, மருத்துவர் சமித்தி சமரக்கோன் மற்றும் அமைச்சின் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

 

 

தையிட்டி விகாரைக்கு எதிராக தமிழர்கள் போராடவில்லை!

“தையிட்டி விகாரைக்கு எதிராக தமிழ் மக்கள் போராடவில்லை. சாராயமும், கொத்து ரொட்டியும் பெறுவதற்காகவே சிலர் அங்கு சென்று போராடுகின்றனர். இது தொடர்பில் சிங்கள மக்கள் அலட்டிக்கொள்ள தேவையில்லை.”

இவ்வாறு நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா தெரிவித்தார்.

கொழும்பில் நேற்று நடத்திய ஊடக சந்திப்பின்போதே அவர் இவ்வாறு கூறினார்.

“ தையிட்டி விகாரையை ஜனவரி 3 ஆம் திகதி உடைக்க வேண்டும் என்ற பிரச்சாரம் முன்னெடுக்கப்படுகின்றது. இந்த பிரச்சாரத்தை முன்னெடுக்கும் தரப்புகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.

தமிழ் மக்கள் விகாரைக்கு எதிராக போராடவில்லை. அரசியல் பின்புலம் உள்ளவர்களே போராட செல்கின்றனர். சாராயத்துக்கும், கொத்து ரொட்டிக்காகவும் செல்லும் கூட்டமொன்றும் உள்ளது. ஏனைய சமூகங்களிலும் இப்படியான கூட்டம் உள்ளது.

சில தமிழ்க் கட்சிகளின் செயற்பாடுகளை வைத்துக்கொண்டு சிங்கள மக்கள், தமிழர்களை தவறான கண்ணோட்டத்தில் பார்க்ககூடாது.
சிங்கள மக்களுக்கு எதிராக செயல்பட வேண்டும் என்ற எண்ணம் தமிழ் மக்களுக்கு இல்லை. அவர்கள் விகாரையை உடைக்க முற்படவும் இல்லை.

ஜனவரி 03 ஆம் திகதி விகாரை உடைக்கப்படும் என முகநூல் நேரலையில்கூட குறிப்பிடுகின்றனர். இப்படியானவர்களுக்கு எதிராக இன்னும் நடவடிக்கை இல்லை எனவும் அர்ச்சுனா எம்.பி. குறிப்பிட்டார்.

அதேவேளை, புலிகள் அமைப்பை மீள கட்டியெழுப்புவதாக இருந்தால் அதனை நான் தான் செய்வேன். சொல்லிவிட்டு தான் நான் அதை செய்வேன். எவருக்கும் அச்சம் ஏற்படாத வகையிலேயே அதனை நான் செய்வேன்.

சிறிதரன், கஜேந்திரகுமார் பொன்னம்பலம் உள்ளிட்டவர்களே இப்படி செயல்படுகின்றனர். “ – என அவர் மேலும் கூறினார்.

ரஷ்ய ஜனாதிபதியை இலக்கு வைத்து ட்ரோன் தாக்குதல்: உக்ரைன் மறுப்பு!

ஜனாதிபதி புடினின் வீட்டை இலக்கு வைத்து உக்ரைன் ட்ரோன் தாக்குதல்களை நடத்தியுள்ளதாக ரஷ்யா குற்றஞ்சாட்டியுள்ளது. எனினும், அவ்வாறு எதுவும் நடக்கவில்லை என உக்ரைன் தெரிவித்துள்ளது.

உக்ரைன் ரஷ்யா இடையிலான போர் கடந்த 4 ஆண்டுகளுக்கும் மேலாக நீடித்து வருகிறது. இந்த போரை நிறுத்த டிரம்ப் அரும்பாடுபட்டு வருகிறார்.

கடந்த சில வாரங்களாக அமெரிக்காவின் தலையீட்டுடன் ரஷ்யா – உக்ரைன் இடையே போர் நிறுத்தம் தொடர்பான பேச்சுவார்த்தைகள் முன்னெடுக்கப்பட்டு வந்தன.

இந்நிலையில் ரஸ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடினின் அதிகாரப்பூர்வ இல்லத்தைக் குறிவைத்து உக்ரைன் டிரோன் தாக்குதல் நடத்தியுள்ளதாக ரஷ்யா குற்றம் சாட்டியுள்ளது.

இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து, உக்ரைனுடனான அமைதிப் பேச்சுவார்த்தையில் தனது நிலைப்பாட்டை மாற்றிக்கொள்ளப்போவதாக ரஷ்யா அறிவித்துள்ளது.

இது தொடர்பில் கருத்து வெளியிட்டுள்ள ரஷ்யா வெளிவிவகார அமைச்சர் செர்ஜி லாவ்ரோவ்,

” டிசம்பர் 28 மற்றும் 29 ஆகிய திகதிகளில் நோவ்கோரோட் பகுதியில் உள்ள ஜனாதிபதி புடினின் அரசு இல்லத்தை நோக்கி உக்ரைன் சுமார் 91 நீண்ட தூர டிரோன்களை ஏவியுள்ளது.
இருப்பினும், ரஷ்யா வான் பாதுகாப்புப் படையினர் அந்த டிரோன்கள் அனைத்தையும் சுட்டு வீழ்த்தியதாகத் தெரிவித்தார்.

இது அரச பயங்கரவாதம் என்றும் இதற்கு பதிலடி கொடுக்கப்படும் என்றும் கூறிய லாவ்ரோவ், இந்தத் தாக்குதலால், தற்போது நடைபெற்று வரும் அமைதிப் பேச்சுவார்த்தையில் ரஷியாவின் கோரிக்கைகள் மற்றும் நிபந்தனைகள் தீவிரமாக மறுபரிசீலனை செய்யப்படும் என்று தெரிவித்துள்ளார்.

இந்தச் சம்பவம் தொடர்பாக ஜனாதிபதி புடின் அமெரிக்கா ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் உடன் தொலைபேசியில் உரையாடினார்.

அப்போது, அமைதிப் பேச்சுவார்த்தைகள் நடந்து கொண்டிருக்கும் வேளையில் இத்தகைய தாக்குதல்கள் நடப்பது பேச்சுவார்த்தையை வலுவிழக்கச் செய்யும் என்று புதின் சுட்டிக்காட்டியுள்ளார் என்று கூறப்படுகிறது.

இதற்கிடையே ரஷ்யாவின் இந்தக் குற்றச்சாட்டுகளை உக்ரைன் ஜனாதிபதிஜெலென்ஸ்கி முற்றிலுமாக மறுத்துள்ளார். இது ஒரு அப்பட்டமான பொய் என்றும், உக்ரைன் தலைநகர் கீவ் மீது தாக்குதல் நடத்துவதற்குத் தகுந்த காரணத்தை உருவாக்கவே ரஷியா இதுபோன்ற நாடகங்களை ஆடுவதாகவும் அவர் பதிலடி கொடுத்துள்ளார்.

டினோஜாவுக்கு நீதி கோரி முல்லைத்தீவில் போராட்டம்

முல்லைத்தீவு மாவட்ட மருத்துவமனையில் சிகிச்சையின்போது உயிரிழந்த சிறுமி டினோஜாவுக்கு நீதி கோரி இன்று ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது.

முல்லைத்தீவு – சிலாவத்தை பகுதியைச் சேர்ந்த குகநேசன் டினோஜா எனும் 12 வயது  சிறுமி அண்மையில் சிகிச்சைக்காக முல்லைத்தீவு மாவட்ட மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருந்த நிலையில் சந்தேகத்துக்கிடமான முறையில் உயிரிழந்திருந்தார்.

அந்தச் சிறுமியின் மரணத்துக்கு நீதி கோரி இன்று முல்லைத்தீவு மாவட்ட மருத்துவமனை நுழைவாயிலை முற்றுகையிட்டு பெருந்திரளான மக்கள் கவனவீர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதன்போது வைத்தியசாலைப் பணிப்பாளரை குறித்த இடத்துக்கு வரவழைத்த  ஆர்ப்பாட்டக்காரர்கள் சிறுமியின் மரணம் தொடர்பில் கேள்வி எழுப்பியமையுடன்,  டினோஜாவின் மரணத்துக்கு நீதி கிடைக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினர்.

தொடர்ந்து சிறுமியின் சந்தேகத்துக்கிடமான மரணத்துக்கு நீதியைப் பெற்றுத் தருமாறும் இதன்போது மக்களால் மகஜர்களும் கைளிக்கப்பட்டன.

அதேநேரம் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களான துரைராசா ரவிகரன், செல்வம் அடைக்கலநாதன் ஆகியோரிடமும் மகஜர்கள் கையளிக்கப்பட்டன.

வீதி விபத்துகளில் 12 மாதங்களுக்குள் 2, 692 பேர் பலி!

இலங்கையில் 2025 ஜனவரி முதல் இதுவரையில் வீதி விபத்துகளால் 2 ஆயிரத்து 692 பேர் உயிரிழந்துள்ளனர் என்று பொலிஸார் தெரிவித்தார்.

2024 ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 317 ஆல் அதிகரித்துள்ளது எனவும் கூறினார்.

பொலிஸ் போக்குவரத்து கட்டுப்பாடு மற்றும் வீதி பாதுகாப்பு பிரிவின் பிரதி பொலிஸ் மா அதிபர் டபிள்யு. ஜி. ஜே. சேனாதீர கொழும்பில் நேற்று நடைபெற்ற ஊடக சந்திப்பின்போது மேற்படி தகவலை வெளியிட்டார்.

“ 2025 ஆம் ஆண்டில் 2 ஆயிரத்து 545 வீதி விபத்துகள் இடம்பெற்றுள்ளன. 2024 ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் விபத்துகளின் எண்ணிக்கை 272 ஆக அதிகரித்துள்ளது. எனவும் அவர் கூறினார்.

ரூ. 50 ஆயிரம் கொடுப்பனவையும் 31 ஆம் திகதிக்குள் வழங்கி முடிக்க எதிர்பார்க்கின்றோம்!

பேரிடரால் பாதிக்கப்பட்ட வீடுகளை சுத்தப்படுத்துவதற்குரிய 25 ஆயிரம் ரூபா கொடுப்பனவு 90 சதவீதம் வழங்கப்பட்டுள்ளது என்று பிரதி அமைச்சர் மஹிந்த ஜயசிங்க தெரிவித்தார்.

“ மேற்படி கொடுப்பனவு சில மாவட்டங்களில் 99 சதவீதம் வழங்கப்பட்டுள்ளது. எது எப்படி இருந்தாலும் டிசம்பர் 31 ஆம் திகதிக்குள் வழங்கி முடிக்கப்படும்.

வீட்டு உபகரணம் வாங்குவதற்குரிய 50 ஆயிரம் கொடுப்பனவு, உலர் உணவு பொருட்களுக்கான கொடுப்பனவு, பாடசாலை மாணவர்களுக்குரிய கொடுப்பனவு என்பவற்றையும் டிசம்பர் 31 ஆம் திகதிக்குள் வழங்கி முடிப்பதற்கு எதிர்பார்க்கின்றோம்.” எனவும் பிரதி அமைச்சர் குறிப்பிட்டார்.

சுற்றுலாத்துறையில் சாதனை படைத்த இலங்கை!

2025 ஜனவரி முதல் டிசம்பர் 29 ஆம் திகதிவரை இலங்கைக்கு வருகை தந்துள்ள சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 23 லட்சத்து 33 ஆயிரத்து 797 ஆகும்.

சுற்றுலாத்துறை அமைச்சு விடுத்துள்ள அறிக்கையில் இவ்விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனை முன்னிட்டு கட்டுநாயக்க விமான நிலையத்தில் விசேட நிகழ்வு இன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. பயணிகளுக்கு அமோக வரவேற்பளிக்கப்பட்டது.

2018 ஆம் ஆண்டில் 23 லட்சத்து 33 ஆயிரத்து 796 சுற்றுலாப் பயணிகள் இலங்கை வருகை தந்திருந்தனர். அதன்பின்னர் 7 ஆண்டுகளுக்கு பிறகு இம்முறையே வருடமொன்றில் அதிகளவான சுற்றுலாப் பயணிகள் நாட்டுக்கு வருகை தந்துள்ளனர்.

மெக்சிகோவில் ரயில் தடம் புரண்டதில் 13 பேர் பலி!

மெக்சிகோவில் ரயில் தடம் புரண்டு ஏற்பட்ட விபத்தில், 13 பேர் உயிரிழந்தனர். 98 பேர் காயம் அடைந்தனர்.

மெக்சிகோவின் தெற்கு மாகாணமான ஓக்சாகாவில் இன்டர்ஓசியானிக் ரயில் தடம்புரண்டு விபத்துக்குள்ளானது.

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு மீட்பு படையினர் விரைந்தனர். நீண்ட நேரம் மீட்பு பணிகள் முழுவீச்சில் நடந்தது. இந்த விபத்தில் 13 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிந்தனர். மேலும் 98 பேர் காயம் அடைந்தனர். இவர்களில் 36 பேர் பலத்த காயம் அடைந்து சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர்.

காயமடைந்தவர்களில் ஐந்து பேர் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாக, மெக்சிகோ ஜனாதிபதி கிளாடியா ஷெயின்பாம் சமூக வலைதளத்தில் பதிவிட்டு உள்ளார்.

மேலும், உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு உதவ அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு அனுப்பப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

மின்சாரம், எரிபொருள் விநியோகம் அத்தியாவசிய சேவைகளாக பிரகடனம்!

மின்சாரம், எரிபொருள் விநியோகம், துறைமுகங்கள் மற்றும் விமானப் போக்குவரத்து ஆகியவற்றை அத்தியாவசிய சேவைகளாக பிரகடனம் செய்யும் சிறப்பு வர்த்தமானி அறிவிப்பை, ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க வெளியிட்டுள்ளார்.

நாட்டைப் பாதிக்கும் பாதகமான வானிலை நிலைமைகளைக் கருத்தில் கொண்டு, 1979 ஆம் ஆண்டின் 61 ஆம் இலக்க அத்தியாவசிய பொது சேவைகள் சட்டத்தின் பிரிவு 2 இன் கீழ் இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

தற்போதைய சூழ்நிலையில் முக்கியமான சேவைகளை தடையின்றி வழங்குவதை உறுதி செய்வதையும், சாதாரண பொது வாழ்க்கையைப் பராமரிப்பதையும் நோக்கமாகக் கொண்டு இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

சினிமா

பிரபல இந்திய பாடகி ஆஷா போஸ்லே காலமானார்!

0
  பிரபல இந்திய பின்னணி பாடகி ஆஷா போஸ்லே தமது 92ஆவது வயதில் இன்று(12) காலமானார். இந்திய திரையுலகில் 10,000-இற்கும் அதிக பாடல்களை பாடியுள்ள மூத்த பாடகி ஆஷா போஸ்லே நேற்று(11) மாரடைப்பு ஏற்பட்டதையடுத்து மும்பையிலுள்ள...

சின்னத்திரை நடிகை தற்#கொ#லை!

0
  இலங்கையை பூர்வீகமாகக்கொண்ட பிரபல சின்னத்திரை நடிகையான சுபாஷினி (வயது 36) தற்#கொ#லை செய்துகொண்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. "கயல்" சின்னத்திரை தொலைக்காட்சி தொடரில் நடித்து வருபவர் சுபாஷிணி (வயது36). இலங்கையை பூர்வீகமாகக்கொண்ட இவர் கடந்த...

“தனுஷின் நட்பை இழந்தது மிகப்பெரிய அவமானம்” – விக்னேஷ் சிவன் வருத்தம்

0
தனுஷ் உடனான நட்பை இழந்தது மிகப்பெரிய அவமானம் என்று விக்னேஷ் சிவன் பகிர்ந்துள்ளார். விக்னேஷ் சிவன் இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன் நடித்துள்ள ‘எல்.ஐ.கே’ திரைப்படம் ஏப்ரல் 10-ம் திகதி திரைக்கு வரவுள்ளது. நீண்ட பிரச்சினைகளுக்கு...

செய்தி

செம்மணி மனிதப் புதைகுழி அகழ்வு மீண்டும் ஏப்ரல் 27ஆம் திகதி ஆரம்பம்

0
நீண்டகாலமாக எதிர்பார்க்கப்பட்ட செம்மணி மனிதப் புதைகுழியின் மூன்றாம் கட்ட அகழ்வுப் பணிகள் எதிர்வரும் 27ஆம் திகதி திங்கட்கிழமை ஆரம்பமாகவுள்ளன. யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றில் நீதி வான் எஸ். லெனின்குமார் முன்னிலையில் இவ்வழக்கு இன்று விசாரணைக்கு...

“கிளீன் ஸ்ரீலங்கா”: மாற்றுத்திறனாளிகளுக்கான விசேட பஸ் சேவை ஆரம்பம்!

0
"கிளீன் ஸ்ரீலங்கா" தேசிய திட்டம் மற்றும் போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சு இணைந்து முன்னெடுக்கும் மாற்றுத்திறனாளிகள் மற்றும் விசேட தேவையுடையோருக்காக வடிவமைக்கப்பட்ட "தாழ்தள" (Low Floor) பஸ் சேவை இன்று...

ஈஸ்டர் தாக்குதலுக்கு நீதி வேண்டிப் பிரார்த்தனை

0
2019ஆம் ஆண்டு உயிர்த்த ஞாயிறு தினத்தன்று இடம்பெற்ற தொடர் குண்டுத்தாக்குதல்களில் உயிரிழந்தவர்களை நினைவுகூரும் 7ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வுகள் இன்று யாழ்ப்பாணத்தில் உணர்வுபூர்வமாக நடைபெற்றன. யாழ். மறைமாவட்ட குருமுதல்வர் அருட்தந்தை ஜெபரட்ணத்தின் ஒழுங்குபடுத்தலில், யாழ்ப்பாணம்...