Home Blog Page 150

மெக்சிகோவில் ரயில் தடம் புரண்டதில் 13 பேர் பலி!

மெக்சிகோவில் ரயில் தடம் புரண்டு ஏற்பட்ட விபத்தில், 13 பேர் உயிரிழந்தனர். 98 பேர் காயம் அடைந்தனர்.

மெக்சிகோவின் தெற்கு மாகாணமான ஓக்சாகாவில் இன்டர்ஓசியானிக் ரயில் தடம்புரண்டு விபத்துக்குள்ளானது.

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு மீட்பு படையினர் விரைந்தனர். நீண்ட நேரம் மீட்பு பணிகள் முழுவீச்சில் நடந்தது. இந்த விபத்தில் 13 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிந்தனர். மேலும் 98 பேர் காயம் அடைந்தனர். இவர்களில் 36 பேர் பலத்த காயம் அடைந்து சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர்.

காயமடைந்தவர்களில் ஐந்து பேர் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாக, மெக்சிகோ ஜனாதிபதி கிளாடியா ஷெயின்பாம் சமூக வலைதளத்தில் பதிவிட்டு உள்ளார்.

மேலும், உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு உதவ அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு அனுப்பப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

மின்சாரம், எரிபொருள் விநியோகம் அத்தியாவசிய சேவைகளாக பிரகடனம்!

மின்சாரம், எரிபொருள் விநியோகம், துறைமுகங்கள் மற்றும் விமானப் போக்குவரத்து ஆகியவற்றை அத்தியாவசிய சேவைகளாக பிரகடனம் செய்யும் சிறப்பு வர்த்தமானி அறிவிப்பை, ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க வெளியிட்டுள்ளார்.

நாட்டைப் பாதிக்கும் பாதகமான வானிலை நிலைமைகளைக் கருத்தில் கொண்டு, 1979 ஆம் ஆண்டின் 61 ஆம் இலக்க அத்தியாவசிய பொது சேவைகள் சட்டத்தின் பிரிவு 2 இன் கீழ் இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

தற்போதைய சூழ்நிலையில் முக்கியமான சேவைகளை தடையின்றி வழங்குவதை உறுதி செய்வதையும், சாதாரண பொது வாழ்க்கையைப் பராமரிப்பதையும் நோக்கமாகக் கொண்டு இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

அவசரகாலச் சட்டம் நீடிப்பு!

இலங்கையில் அவசரகால நிலையை நீடிப்புச் செய்வதற்கான சிறப்பு வர்த்தமானி அறிவிப்பு நேற்று வெளியிடப்பட்டுள்ளது.

பொது பாதுகாப்பு கட்டளைச் சட்டத்தின் (அத்தியாயம் 40) பிரிவு 2 இன் கீழ், வழங்கப்பட்ட அதிகாரங்களின் அடிப்படையில் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவால் இந்த அறிவிப்பை வெளியிடப்பட்டுள்ளது.

இதன்படி பொது பாதுகாப்பு கட்டளைச் சட்டத்தின் இரண்டாவதுது பிரிவின் விதிகள் நாடு முழுவதும் தொடர்ந்து நடைமுறையில் இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அவசரகால நிலையை மேலும் நீடிக்கும் வர்த்தமானி அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ள நிலையில், ஜனவரி 6 ஆம் நாள், நாடாளுமன்றத்தில் ஒப்புதலுக்காக சமர்ப்பிக்கப்படும் என்று சிறிலங்கா பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.

இந்த விடயம் ஏற்கனவே நாடாளுமன்ற ஒழுங்குப் புத்தகத்தில் சேர்க்கப்பட்டுள்ளதாகவும், ஜனவரி 6 ஆம் திகதி நாடாளுமன்றம் கூடும்போது ஒப்புதலுக்காக எடுத்துக் கொள்ளப்படும் என்றும் பாதுகாப்பு பிரதி அமைச்சர் மேஜர் ஜெனரல் அருண ஜயசேகர தெரிவித்துள்ளார்.

அரசியலமைப்பு விதிகளின் கீழ், ஜனாதிபதி ஒரு மாத காலத்திற்கு மட்டுமே அவசரகால நிலையை அறிவிக்க முடியும்.

அதனை நீடிப்புச் செய்வதற்கான பிரகடனம் வெளியிடப்பட்டு, ஒரு வாரத்திற்குள் நாடாளுமன்றத்தால் அங்கீகரிக்கப்பட வேண்டும். இல்லாவிட்டால், அவசரகால சட்டம் அது தானாகவே காலாவதியாகி விடும்.

அண்மைய இயற்கை பேரிடரை அடுத்து, ஜனாதிபதி நவம்பர் 28 ஆம் நாள், அவசரநிலையை பிரகடனம் செய்திருந்தார்.

என்.பி.பி. ஆட்சியில் ஊடக சுதந்திரத்துக்கு அச்சுறுத்தலா?

தேசிய மக்கள் சக்தி ஆட்சியின்கீழ் ஊடக சுதந்திரம் பாதுகாக்கப்படுகின்றது. நாம் ஊடக தணிக்கையை செய்யவில்லை. ஊடகவியலாளர்கள் சுயாதீனமான இயங்க முடியும் என்று பிரதி அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப் தெரிவித்தார்.

ஊடக அடக்குமுறை தொடர்பில் எதிரணிகளால் முன்வைக்கப்பட்டுவரும் குற்றச்சாட்டுகளையும் அவர் நிராகரித்தார்.

தைவானை சுற்றி சீனா கூட்டு ராணுவ பயிற்சி: கிழக்காசியாவில் போர் பதற்றம்!

தைவானைச் சுற்றி கூட்டு ராணுவப் பயிற்சிகளை நடத்துவதற்காக விமானப்படை, கடற்படை மற்றும் ஏவுகணைப் படைகள் அனுப்பப்பட்டு உள்ளது என சீன ராணுவம் தெரிவித்துள்ளது.

கிழக்காசியாவில் தென் சீன கடல், கிழக்கு சீன கடல், பிலிப்பைன்ஸ் கடல் ஆகியவற்றுக்கு மத்தியில் இருக்கும் தீவு தான் தைவான்.

பல ஆண்டுகளாக சீனாவுக்கும் தைவானுக்கும் இடையே மோதல் நிலவி வருகிறது. தைவான் தனி நாடு அல்ல, அது சீனாவின் ஒரு பகுதி என்று தொடர்ந்து சீனா கூறி வருகிறது. இதனை தைவான் ஏற்க மறுக்கிறது.

எங்களுக்கென்று தனி இறையாண்மை உள்ளது. நாங்கள் தனி நாடு தான் என தைவான் திட்டவட்டமாக தெரிவித்து உள்ளது.

இந்நிலையில் இன்று (டிசம்பர் 29) பிரிவினைவாத மற்றும் வெளிநாட்டுத் தலையீடுகளுக்கு எச்சரிக்கை விடுக்கும் வகையில், தைவானைச் சுற்றி கூட்டு ராணுவப் பயிற்சிகளை நடத்துவதற்காக விமானப்படை, கடற்படை மற்றும் ஏவுகணைப் படைகள் அனுப்பப்பட்டு உள்ளதாக சீன ராணுவம் தெரிவித்துள்ளது.

சீனாவின் இத்தகைய அறிவிப்பால் கிழக்கு ஆசியப் பகுதியில் போர் பதற்றம் நிலவி வருகிறது.

அண்மையில், தைவானுக்கு எதிராக சீனா நடவடிக்கை எடுத்தால், ஜப்பானிய ராணுவம் தலையிடக்கூடும் என்று ஜப்பான் பிரதமர் சனே டகாய்ச்சி கூறியிருந்தார். இதற்கு சீன ராணுவம் கடும் எதிர்ப்பு தெரிவித்து இருந்தது.

தற்போது சீன ராணுவம் கூட்டு ராணுவ பயிற்சி குறித்து வெளியிட்டுள்ள அறிவிப்பில் ஜப்பானைப் பற்றி ஏதும் குறிப்பிடவில்லை.

மரக்கறி விலைப்பட்டியல் (29.12.2025)

நுவரெலியா பொருளாதார மத்திய நிலையத்தால் இன்று (29) வெளியிடப்பட்டுள்ள மரக்கறி வகைகளின் (ஒரு கிலோ) விலை பட்டியல்…

அனர்த்த நிவாரணம்: பெருந்தோட்ட மக்கள் புறக்கணிப்பு! ராதா குற்றச்சாட்டு!

“ மலையக பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு சம்பள உயர்வு அவசியம். பெப்ரவரி 10 ஆம் திகதிக்காக காத்திருக்கின்றோம். அப்போது சம்பளம் கிடைக்கும் என நம்புகின்றோம்.”

இவ்வாறு மலையக மக்கள் முன்ணியின் தலைவர் இராதாகிருஸ்ணன் எம்.பி. தெரிவித்தார்.

பேரிடரால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்கப்படுகின்ற நிவாரணம் மலையக பெருந்தோட்ட மக்களுக்கு வழங்கப்படுவதில்லை, அவர்கள் புறக்கணிக்கப்படுகின்றனர் எனவும் அவர் கூறினார்.

மலையக மக்கள் இந்த அரசாங்கத்தை நம்புகின்றேன் எனவும் அவர் குறிப்பிட்டார்.

அமைதி பேச்சில் முன்னேற்றம்: முடிவுக்கு வருகிறது உக்ரைன், ரஸ்யா போர்!

உக்ரைன் மற்றும் ரஸ்யாவுக்கிடையிலான போர் முடிவுக்கு வரும் சாத்தியம் ஏற்பட்டுள்ளது. உக்ரைன் மற்றும் அமெரிக்க ஜனாதிபதிகளுக்கிடையிலான சந்திப்பு சாதகமாக முடிந்துள்ளது.

உக்ரைன், ரஸ்யா இடையே போர் நீடித்து வருகிறது. இந்த போரில் ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்துள்ளனர். இந்த போரில் உக்ரைனுக்கு அமெரிக்க, ஐரோப்பிய நாடுகள் ஆதரவு அளித்து வருகின்றன.

அதேவேளையில், போரை முடிவுக்கு கொண்டு வர அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் முயற்சித்து வருகிறார். அதன்படி, போர் நிறுத்தம் தொடர்பாக 20 நிபந்தனைகள் கொண்ட உடன்படிக்கையை டிரம்ப் முன்மொழிந்துள்ளார்.

இந்த நிபந்தனைகளை ஏற்றுக்கொள்வது தொடர்பாக உக்ரைன்-அமெரிக்க அதிகாரிகளுக்கு இடையே பேச்சு நடந்தது.
நீண்ட இழுபறிக்கு பின் உக்ரைன் ஜனாதிபதி ஜெலன்ஸ்கி பெரும்பாலான நிபந்தனைகளை ஏற்றுக்கொண்டார்.

இந்த சூழலில் அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் அமெரிக்க ஜனாதிபதி டிரம்பை இன்று ஜெலென்ஸ்கி சந்தித்தார்.

அந்த சந்திப்பின் போது பொருளாதார ஒப்பந்தம் குறித்து விவாதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இதனிடையே ஜெலென்ஸ்கி உடனான சந்திப்புக்கு முன் ரஸ்ய ஜனாதிபதி புடினுடனும் டிரம்ப் தொலைபேசியில் பேசி இருந்தார்.

இதனைத்தொடர்ந்து செய்தியாளர்கள் சந்திப்பில் கருத்து வெளியிட்ட அமெரிக்க ஜனாதிபதி,

“ உக்ரைன் ஜனாதிபதியுடன் ஒரு சிறந்த சந்திப்பை நடத்தினோம். நாங்கள் நிறைய விடயங்ள் பற்றி விவாதித்தோம்.

அதேபோல புடினுடனான தொலைபேசி அழைப்பு சிறந்ததாக இருந்தது. அது இரண்டு மணி நேரத்திற்கும் மேலாக நீடித்தது.

புடினும், நானும் இப்போதுதான் ஐரோப்பிய தலைவர்களிடம் பேசினோம்… அந்தப் போரை முடிவுக்குக் கொண்டுவருவதில் நாங்கள் நிறைய முன்னேற்றம் அடைந்துள்ளோம், இது இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு நடந்த மிகக் கொடிய போராக இருக்கலாம்” என்று ட்ரம்ப் தெரிவித்தார்.

உக்ரைன் ஜனாதிபதி கருத்து வெளியிடுகையில், “அனைத்து தலைப்புகளிலும் நாங்கள் சிறந்த விவாதங்களை நடத்தினோம்,

மேலும் இந்த சமீபத்திய வாரங்களில் அமெரிக்கர்களும் உக்ரைன் குழுக்களும் செய்த முன்னேற்றத்தை நாங்கள் பாராட்டுகிறோம். அமைதி கட்டமைப்பின் அனைத்து அம்சங்களையும் நாங்கள் விவாதித்தோம்.

20-அம்ச அமைதித் திட்டத்தில் 90 சதவீத ஒப்பந்தம், அமெரிக்க-உக்ரைன் பாதுகாப்பு உத்தரவாதங்களில் 100 சதவீத ஒப்பந்தம் மற்றும் அமெரிக்க-ஐரோப்பா-உக்ரைன் பாதுகாப்பு உத்தரவாதங்கள் கிட்டத்தட்ட ஒப்புக் கொள்ளப்பட்டுள்ளன.

ராணுவ பரிமாணம் 100 சதவீதம் ஒப்புக் கொள்ளப்பட்டது. செழிப்புத் திட்டம் இறுதி செய்யப்பட்டு வருகிறது.” -என்று குறிப்பிட்டார்.

சமஷ்டிதான் இறுதி இலக்கு : தமிழரசுக் கட்சி திட்டவட்டம்!

” இலங்கைத் தமிழரசுக் கட்சி சமஷ்டி கட்சி. ஆகவே, சமஷ்டியைப் பற்றி நாங்கள் பேசாமல் விடுவோமா?”

– இவ்வாறு இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவர் சி.வி.கே.சிவஞானம் கேள்வி எழுப்பியமையுடன், இந்திய வெளியுறவு அமைச்சருடனான சந்திப்பின் போது தாமே அதனை வலியுறுத்தினார் எனவும் தெரிவித்தார்.

சமகால நிலைமைகள் தொடர்பாக சி.வி.கே.சிவஞானம் ஊடகங்களுக்குக் கருத்துரைக்கும்போதே மேற்கண்டவாறு கூறினார்.

“இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருடனான சந்திப்பில் அமைச்சரிடம் மகஜர் கையளிக்கப்படவில்லை எனவும், உயர்ஸ்தானிகரிடமே மகஜர் கையளிக்கப்பட்டது எனவும் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்திருந்தார்.

இவ்வாறான சந்திப்புக்களில் அமைச்சர் மகஜரைக் கையேற்பதில்லை என்ற இந்திய உயர்ஸ்தானிகரகத்தின் அறிவுத்தலுக்கமைய இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜாவிடம் மகஜர் கையளிக்கப்பட்டது.

இந்தச் சந்திப்பின் அடிப்படை நோக்கம், தேவையற்ற கால தமாதமாகியுள்ள மாகாண சபைத் தேர்தலை நடத்த இலங்கை அரசுக்கு இந்தியா வலியுறுத்த வேண்டும் என்பதே ஆகும்.

மாகாண சபைத் தேர்தலை நடத்த நானும் ஏனையவர்களும் வலியுறுத்தினோம்.

சமஷ்டியைப் பற்றி நாங்கள் பேசவில்லை என்று கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்தமை ஆச்சரியமளிக்கின்றது எனவும் சிவிகே சிவஞானம் குறிப்பிட்டார்.

கலந்துரையாடலை ஆரம்பித்தவன் நானே. கலந்துரையாடலின் இறுதியில் சமஷ்டியைப் பற்றி பேசினோம். பல விடயங்களைப் பேசினோம். சந்திப்பு முடிவுறும் தருணத்தில் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவுக்கு நாம் முன்வைத்த கடிதத்தின் நோக்கத்தை மீண்டும் ஜெய்சங்கருக்குத் தெளிவுபடுத்தினோம்.

மாகாண சபையைப் பொறுத்தவரை இந்தியா இலங்கையுடன் செய்த ஒப்பந்தம் மூலமே அது உருவானது. வயிற்றில் பிறந்த பிள்ளை எனச் சொல்லவில்லை. இந்தியாவின் சிந்தனையில் வந்த பிள்ளை என்றேன். அதை வலியுறுத்தவே மகஜரும் கையளித்தோம்.

அதேபோல் அந்தச் சந்திப்பில் எமது இறுதி இலக்கும் நோக்கும் கூட்டாட்சி – சமஷ்டிதான் என்பதைத் தெரிவித்தோம். மகஜரில் இந்த விடயம் இருக்கின்றது.

நாங்கள் பொய் சொன்னோம் எனக் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் சொல்கின்றார். நான் உண்மையைத்தான் கூறுகின்றேன். சந்திப்பில் பங்கேற்ற ஏனைய கட்சித் தலைவர்கள் இதைத் தெளிவுபடுத்துமாறு வலியுறுத்தினார்கள்.

சர்வதேச ரீதியில் எமது இலக்கை அடைவதற்கான ஆதரவு தேவை. இந்தியா இதற்கு உதவ வேண்டும் எனச் சந்திப்பில் சொன்னோம். நான் சொன்னது பொய் என்றால் இந்தியா மறுதலிக்கும். இராஜதந்திரிகள் எல்லாவற்றுக்கும் பதில் சொல்ல மாட்டார்கள். செயலிலேயே அதைச் செய்வார்கள்.

நாங்கள் சமஷ்டி கட்சி. ஆகவே சமஷ்டியைப் பற்றி பேசாமல் விடுவோமா? நாங்கள் சந்திப்பின் பின்பகுதியில் அதனை வலியுறுத்தினேன்.

13 ஆம் திருத்தம் ஒற்றையாட்சிக்குள் முடங்கிப் போகும் எனச் சொல்லி விட்டு கஜேந்திரகுமார் மாகாண சபைத் தேர்தலில் போட்டியிடுவார் எனச் சொல்கின்றார். இது சுய முரண்பாடு.

மாகாண சபை முறைமை தீர்வு என்றோ முழுமையாக ஏற்கின்றோம் என்றோ ஒரு காலத்திலும் தமிழரசுக் கட்சி சொன்னதில்லை. உண்மைக்குப் புறம்பான முறையில் பேசுவது அரசியல் ஜனநாயகத்துக்கு முரண்.

மன்னாரில் இருக்கக்கூடிய சூரிய சக்தி அமைப்பதில் பாகிஸ்தானைச் சேர்ந்த 40 பேர் பணியில் ஈடுபடுகின்றமை என்பதையும் நாங்கள் சந்திப்பின்போது தெரிவித்தோம்.” – என சிவிகே சிவஞானம் மேலும் கூறினார்.

ஜனவரி 9 வரை டக்ளஸ் தேவானந்தாவுக்கு விளக்கமறியல்!

ஈபிடிபி செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தாவை எதிர்வரும் ஜனவரி 9ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க நீதிவான் கட்டளையிட்டுள்ளார்.

2001ஆம் ஆண்டு தனிப்பட்ட பாதுகாப்பிற்காக டக்ளஸ் தேவானந்தாவுக்கு சிறிலங்கா இராணுவத்தினர் வழங்கிய துப்பாக்கி ஒன்று மாகந்துர மதுஸ் என்ற பாதாள உலக குழு தலைவரிடம் இருந்து கைப்பற்றப்பட்டது.

இது குறித்து நடத்தப்பட்ட விசாரணைகளை அடுத்து, டக்ளஸ் தேவானந்தா கடந்த வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்டு 72 மணித்தியாலங்கள் தடுத்து வைக்கப்பட்டிருந்தார்.

இந்த நிலையில் இன்று அவரை கம்பஹா நீதிமன்ற நீதிவான் முன்பாக முன்னிலைப்படுத்திய போது எதிர்வரும் 9ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க நீதிவான் உத்தரவிட்டுள்ளார்.

அதேவேளை, டக்ளஸ் தேவானந்தாவுக்கு இலங்கை இராணுவத்தினரால் வழங்கப்பட்ட 20 துப்பாக்கிகள் காணாமல் போயுள்ளது குறித்தும் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் விசாரணைகளை நடத்தி வருகின்றனர்.

15 ரி-56 ரக துப்பாக்கிகளும், ஐந்து 9 மில்லி மீற்றர் கைத்துப்பாக்கிகளும் காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சினிமா

பிரபல இந்திய பாடகி ஆஷா போஸ்லே காலமானார்!

0
  பிரபல இந்திய பின்னணி பாடகி ஆஷா போஸ்லே தமது 92ஆவது வயதில் இன்று(12) காலமானார். இந்திய திரையுலகில் 10,000-இற்கும் அதிக பாடல்களை பாடியுள்ள மூத்த பாடகி ஆஷா போஸ்லே நேற்று(11) மாரடைப்பு ஏற்பட்டதையடுத்து மும்பையிலுள்ள...

சின்னத்திரை நடிகை தற்#கொ#லை!

0
  இலங்கையை பூர்வீகமாகக்கொண்ட பிரபல சின்னத்திரை நடிகையான சுபாஷினி (வயது 36) தற்#கொ#லை செய்துகொண்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. "கயல்" சின்னத்திரை தொலைக்காட்சி தொடரில் நடித்து வருபவர் சுபாஷிணி (வயது36). இலங்கையை பூர்வீகமாகக்கொண்ட இவர் கடந்த...

“தனுஷின் நட்பை இழந்தது மிகப்பெரிய அவமானம்” – விக்னேஷ் சிவன் வருத்தம்

0
தனுஷ் உடனான நட்பை இழந்தது மிகப்பெரிய அவமானம் என்று விக்னேஷ் சிவன் பகிர்ந்துள்ளார். விக்னேஷ் சிவன் இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன் நடித்துள்ள ‘எல்.ஐ.கே’ திரைப்படம் ஏப்ரல் 10-ம் திகதி திரைக்கு வரவுள்ளது. நீண்ட பிரச்சினைகளுக்கு...

செய்தி

ஐரோப்பிய ஒன்றியப் பிரதிநிதிகளின் செம்மணிக்கான வருகை ஒத்திவைப்பு

0
செம்மணி மனிதப் புதைகுழிப் பகுதியை இன்று செவ்வாய்க்கிழமை பார்வையிடவிருந்த ஐரோப்பிய ஒன்றியப் பிரதிநிதிகள், தமது விஜயத்தை அகழ்வுப் பணிகள் ஆரம்பமாகும் திகதி வரை ஒத்திவைத்துள்ளனர். செம்மணி புதைகுழிப் பகுதியை நேரில் பார்வையிட ஐரோப்பிய ஒன்றியக்...

போர் நிறுத்தம் நீடிக்கப்படாது: தாக்குதல் நடத்த தயங்கமாட்டோம்!

0
அமெரிக்காவுடன் அமைதி ஒப்பந்தம் மேற்கொள்ளாவிட்டால் ஈரானில் குண்டு மழை பொழியும் என்றும், அந்நாட்டின் மீது தாக்குதல் நடத்த துளியும் தயங்க மாட்டோம் என்றும் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் மீண்டும் எச்சரிக்கை விடுத்துள்ளார். இது குறித்து...

செம்மணி மனிதப் புதைகுழி அகழ்வு மீண்டும் ஏப்ரல் 27ஆம் திகதி ஆரம்பம்

0
நீண்டகாலமாக எதிர்பார்க்கப்பட்ட செம்மணி மனிதப் புதைகுழியின் மூன்றாம் கட்ட அகழ்வுப் பணிகள் எதிர்வரும் 27ஆம் திகதி திங்கட்கிழமை ஆரம்பமாகவுள்ளன. யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றில் நீதி வான் எஸ். லெனின்குமார் முன்னிலையில் இவ்வழக்கு இன்று விசாரணைக்கு...