Home Blog Page 151

ஆப்கானிஸ்தானில் உணவுப் பஞ்சம் அதிகரிப்பு!

ஐக்கிய நாடுகள் சபையின் உலக உணவு திட்டத்துக்கான நிதி உதவியை அமெரிக்கா நிறுத்தியதை அடுத்து, ஆப்கானிஸ்தானில் லட்சக்கணக்கான மக்கள் பசி மற்றும் குளிரால் வாடும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

மத தீவிரவாதத்தாலும், பொருளாதார நெருக்கடியாலும் ஆப்கானிஸ்தான் கடுமையாக பாதிக்கப்பட்டு வந்த நிலையில், தலிபான்களின் ஆட்சிக்குப் பிறகு அமுலுக்கு வந்த சமூக கட்டுப்பாடுகளால் நிலைமை மேலும் சிக்கலாகி உள்ளது.

ஆப்கன் மக்களில் சுமார் 2.30 கோடி – அதாவது அந்த நாட்டின் மக்கள் தொகையில் பாதி – பேர் உதவி தேவைப்படும் நிலையில் உள்ளதாக கடந்த 22-ம் திகதி செஞ்சிலுவைச் சங்கத்தின் சர்வதேசக் குழு ஒரு கட்டுரை மூலம் தெரிவித்தது.

சர்வதேச நாடுகளின் உதவியுடன் உலக உணவுத் திட்டத்தின் மூலம் பாதிக்கப்பட்டுள்ள ஆப்கன் மக்களுக்கு ஐக்கிய நாடுகள் சபை உதவிகளை வழங்கி வந்தது.

இந்நிலையில், இந்த திட்டத்துக்கான நிதி உதவியை அமெரிக்கா தற்போது நிறுத்திவிட்டது.

இதையடுத்து மிகுந்த கவலையை வெளிப்படுத்தி உள்ள உலக உணவுத் திட்டம், ஆப்கானிஸ்தானில் 1.7 கோடிக்கும் அதிகமான மக்கள் தற்போதைய குளிர்காலத்தில் குளிரோடு பட்டினியையும் எதிர்கொண்டு வருவதாக கடந்த வாரம் எச்சரித்தது.

ஆபத்தான நிலையில் இருக்கும் மக்களின் எண்ணிக்கை கடந்த ஆண்டைவிட இந்த ஆண்டு 30 லட்சம் கூடி இருப்பதாகவும் அது தெரிவித்துள்ளது.

தலிபான்களின் ஆதிக்கம் காரணமாக நாட்டைவிட்டு வெளியேறி ஈரான், பாகிஸ்தான் போன்ற நாடுகளுக்குச் சென்ற ஆப்கன் அகதிகளில் பெரும்பாலானோர் அந்நாடுகளில் இருந்து வெளியேற்றப்பட்டுவிட்டனர். இதன் காரணமாக கடந்த நான்கு ஆண்டுகளில் 71 லட்சம் ஆப்கனியர்கள் நாடு திரும்பி உள்ளனர்.

தள்ளாடும் பொருளாதாரம், தொடர் வறட்சி, இரண்டு மிகப் பெரிய நிலநடுக்கங்கள், ஈரான், பாகிஸ்தான் நாடுகளில் இருந்து திரும்பிய மக்கள் ஆகியவற்றால் நிலைமை மிகவும் மோசமடைந்துள்ள நிலையில், உலக உணவு திட்டத்தின் உதவியும் பெருமளவில் குறைந்ததால் மக்களின் நிலை மேலும் மோசடைந்துள்ளது.

பெண்கள் வேலைக்குச் செல்வதற்கு தாலிபான் அரசாங்கம் விதித்துள்ள கடுமையான கட்டுப்பாடுகளால் ஏராளமான பெண்கள் வீடுகளுக்குள் முடங்கிக் கிடக்கிறார்கள்.

இந்த மாதத்தின் நடுப்பகுதியில் ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் பேசிய ஐ.நா. மனிதாபிமானத் தலைவர் டாம் பிளெட்சர், ‘‘நிலநடுக்கங்கள், மனிதாபிமான உதவிகளுக்கான அணுகல் குறைவு, வேலைக்குச் செல்வதில் விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகள் என ஒன்றோடு ஒன்று தொடர்புடைய அதிர்ச்சிகளால் ஆப்கனிஸ்தானில் நிலைமை மேலும் மோசமடைந்துள்ளது. பல ஆண்டுகளில், சர்வதேச உணவு விநியோகம் இல்லாத முதல் குளிர்காலம் இது.

2026-ல் கிட்டத்தட்ட 2.2 கோடி ஆப்கனியர்களுக்கு ஐ.நாவின் உதவி தேவைப்படும். நன்கொடையாளர்களின் பங்களிப்பு குறைந்ததால், எங்கள் அமைப்பு உயிர் காக்கும் உதவி மிகவும் அவசரமாகத் தேவைப்படும் 39 லட்சம் மக்கள் மீது கவனம் செலுத்தும்.

கடந்த ஆண்டு பற்றாக்குறை காலத்தில் மிகவும் பாதிக்கப்படக்கூடிய மக்களின் எண்ணிக்கை 56 லட்சமாக இருந்தது. அதாவது 56 லட்சம் பேருக்கு உதவிகள் வழங்கப்பட்டன. ஆனால், இந்த ஆண்டு இத்தகைய உதவிகளை 10 லட்சம் மக்கள் மட்டுமே பெற்றுள்ளனர்.

ஆப்கானிஸ்தானுக்கு தொடர்ந்து ஆதரவு அளித்து வரும் அனைவருக்கும் நாங்கள் நன்றிக் கடன் பட்டவர்களாக இருக்கிறோம். ஆனால், 2026ம் ஆண்டு குறித்து யோசிக்கும்போது, உணவுப் பாதுகாப்பின்மை, சுகாதாரத் தேவைகள், அடிப்படை சேவைகள் கடுமையாக பாதிக்கப்படும் அபாயம் உள்ளது’’ என வேதனை தெரிவித்துள்ளார்.

450 மில்லியன் டொலர் நிதியை இந்திய- இலங்கை கூட்டுக் குழுவே கையாளும்!

பேரிடருக்குப் பிந்திய மீள்கட்டுமானப் பணிகளுக்கான இந்தியாவின் 450 மில்லியன் அமெரிக்க டொலர் உதவிப் பொதியை கையாளுவதற்காக, இலங்கை மற்றும் இந்திய அதிகாரிகளைக் கொண்ட கூட்டுக்குழு ஒன்று அமைக்கப்படவுள்ளது.

இந்த நிதியைக் கையாளும் பொறுப்பு இந்தக் குழுவிடமே ஒப்படைக்கப்படும் என்று இலங்கையின் மூத்த அரசாங்க அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

இந்திய கடன் திட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்பட வேண்டிய மறுசீரமைப்பு திட்டங்கள், இந்திய கடன் திட்டத்தின் கீழ் செய்ய வேண்டிய கொள்வனவுகள் மற்றும் திட்டங்களை விரைவுபடுத்த இந்தியாவிலிருந்து மனிதவளத்தை பயன்படுத்துதல் குறித்து இந்தக் கூட்டு குழு முடிவு செய்யும் என்றும் அந்த அதிகாரி கூறியுள்ளார்.

வீதிகள் மற்றும் தொடருந்து, சுகாதாரம் மற்றும் கல்வி, வீட்டுவசதி, விவசாயம் மற்றும் உடனடி பேரிடர் மீட்புக் குழுவை நிறுவுதல் ஆகிய ஐந்து பிரிவுகளின் கீழ், மூன்று மாதங்கள், ஆறு மாதங்கள் மற்றும் ஒன்பது மாதங்களில் திட்டங்களை முடிக்க கூட்டுக் குழு மூன்று காலக்கெடுக்களின் கீழ் செயற்படவுள்ளது.

வீட்டுவசதி, மருத்துவம், கல்வி, தொடருந்து மற்றும் வீதியமைப்பு தொடர்பான மறுசீரமைப்பு திட்டங்களுக்கு, தொழில்நுட்ப ஆதரவு உள்ளிட்ட உதவிகளுக்கு இந்திய குழுக்கள் இலங்கையில் தங்கியிருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்திய தூதரகம், கூட்டங்களை நடத்துவது, முன்னேற்றத்தை மதிப்பாய்வு செய்வது பற்றிய கூட்டங்களை அதிகாரிகளுடன் ஒருங்கிணைக்கும்.

முதல் கூட்டம் அடுத்த வாரம் நடைபெற உள்ளது. அதன் போது, முன்னுரிமையளிக்கப்பட்ட மறுசீரமைப்பு திட்டங்களின் பட்டியல் அடையாளம் காணப்படும்.

இந்தியாவில் உள்ள தேசிய பேரிடர் மீட்புக் குழுவைப் போன்ற, ஒரு உடனடி பேரிடர் மீட்புக் குழுவை நிறுவுவதற்கும் இந்திய அரசாங்கம் உதவும். அதற்குத் தேவையான உபகரணங்கள் மற்றும் தொழில்நுட்ப உதவி வழங்கப்படும்.

வெளிநாட்டு உதவி போதாது: நன்கொடையாளர் மாநாட்டை உடன் நடத்துமாறு வலியுறுத்து!

பேரிடரால் பாதிக்கப்பட்டுள்ள இலங்கை மீண்டெழுவதற்கு இன்னும் போதுமான சர்வதேச உதவிகள் கிடைக்கப்பெறவில்லை. எனவே, சர்வதேச நன்கொடையாளர் மாநாட்டை விரைவில் நடத்துவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச மீண்டும் வலியுறுத்தினார்.

“பேரிடரால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு வழங்கப்படும் என உறுதியளிக்கப்பட்டுள்ள நிவாரணங்கள் விரைவில் வழங்கப்பட வேண்டும்.

முகாம்களில் உள்ள மக்களை பாதுகாப்பான இடங்களில் மீள குடியமர்த்துவதற்குரிய ஏற்பாடுகளும் இடம்பெறவேண்டும்.
பேரிடரால் பாதிக்கப்பட்டுள்ள இலங்கையை மீளக் கட்டியெழுப்புவதற்கு போதுமான உதவிகள் இன்னும் கிடைக்கப்பெறவில்லை. இனியும் காலம் தாழ்த்தாது, சர்வதேச கொடையாளர் மாநாட்டை நடத்த வேண்டும்.

சர்வதேச சமூகத்தின் கவனம் எமது நாடு பக்கம் திரும்பியுள்ள நிலையில் கூடிய விரைவில் இதற்குரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். எனினும், இது தொடர்பில் அரசாங்கம் அக்கறை செலுத்துவதாக தெரியவில்லை.

அதேவேளை, சர்வதேச நாணய நிதியம் மற்றும் கடன் வழங்குநர்களுடன் பேச்சு நடத்திய கடும் நிபந்தனைகளை தளர்த்திக்கொண்டு, புதிய ஒப்பந்தங்களை ஏற்படுத்திக்கொள்ள வேண்டும்.” – எனவும் சஜித் பிரேமதாச மேலும் குறிப்பிட்டார்.

மாகாணசபைத் தேர்தல் நடக்காது: அடித்து கூறுகிறார் ராஜித!

தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் வீழ்ச்சிப் பயணம் ஆரம்பித்துவிட்டது. எனவே, மாகாணசபைத் தேர்தல் நடத்தப்படமாட்டாது என்று முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,

“உள்ளாட்சிசபைத் தேர்தலில் வெல்லும்போது தேசிய மக்கள் சக்தி வலுவாக இருந்தது. அதனால்தான் உள்ளாட்சிசபைகளில் வரவு- செலவுத் திட்டத்தை நிறைவேற்றிக்கொள்வதற்கு எதிரணி உறுப்பினர்கள் ஆதரவு வழங்கினர்.

எனினும், இந்த அரசாங்கம் ஓடாது, நிச்சயம் விழும் என எதிரணி உறுப்பினர்கள் நம்புகின்றனர்.

ஓராண்டு கடந்தும் உள்ளாட்சிசபைகள் ஊடாக எவ்வித அபிவிருத்தி திட்டங்களும் முன்னெடுக்கப்படவில்லை. இதனால்தான் எதிரணி உறுப்பினர்கள் எதிர்த்து வாக்களிக்கின்றனர்.

மக்கள் மத்தியில் அரசாங்கம் நம்பிக்கை இழந்துவருகின்றது.

எனவே, மாகாணசபைத் தேர்தலை இந்த அரசாங்கம் நடந்தாது. ஏனெனில் ஒரு சபையைக்கூட வெல்ல முடியாத நிலையே உள்ளது.” – எனவும் ராஜித சேனாரத்ன குறிப்பிட்டார்.

மரக்கறி விலைப்பட்டியல் (28.12.2025)

நுவரெலியா பொருளாதார மத்திய நிலையத்தால் இன்று (28) வெளியிடப்பட்டுள்ள மரக்கறி வகைகளின் (ஒரு கிலோ) விலை பட்டியல்…

உக்ரைன், ரஸ்யா போர் முடிவுக்கு வருமா? நாளை தீர்க்கமான சந்திப்பு!

அமெரிக்கா மற்றும் உக்ரைன் ஜனாதிபதிகளுக்கிடையில் நாளை (28) சந்திப்பு நடைபெறவுள்ளது. இதற்காக உக்ரைன் ஜனாதிபதி அமெரிக்கா செல்கின்றார்.

உக்ரைன் -ரஷியா இடையே போர் நீடித்து வருகிறது. இந்த போரில் ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்துள்ளனர். இந்த போரில் உக்ரைனுக்கு அமெரிக்க, ஐரோப்பிய நாடுகள் ஆதரவு அளித்து வருகின்றன.

அதேவேளையில், போரை முடிவுக்கு கொண்டு வர அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் முயற்சித்து வருகிறார்.

அதன்படி, போர் நிறுத்தம் தொடர்பாக 20 நிபந்தனைகள் கொண்ட உடன்படிக்கையை டிரம்ப் முன்மொழிந்துள்ளார். இந்த நிபந்தனைகளை ஏற்றுக்கொள்வது தொடர்பாக உக்ரைன்-அமெரிக்க அதிகாரிகளுக்கு இடையே பேச்சுவார்த்தை நடந்தது.

நீண்ட இழுபறிக்கு பின் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி பெரும்பாலான நிபந்தனைகளை ஏற்றுக்கொண்டுள்ளதாக தெரிகிறது.

நேற்று நிருபர்களிடம் பேசிய ஜெலன்ஸ்கி, இதனை உறுதி செய்துள்ளார். அவர் நிருபர்களிடம் கூறும்போது, ‘28-ந் திகதி(நாளை) அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் டிரம்பை சந்திக்கிறேன்.

20 நிபந்தனைகளில் 90 சதவீத நிபந்தனைகளை ஏற்றுக்கொண்டுள்ளோம். இந்த சந்திப்பின் போது பொருளாதார ஒப்பந்தம் குறித்து விவாதிக்கப்படும். பிராந்திய பிரச்சினைகளையும் எழுப்ப உள்ளோம்.

முக்கியமான பிரச்சினைகளைப் பொறுத்தவரை, டான்பாஸ் மற்றும் சபோரிஜியா அணுமின் நிலையம் குறித்து நாங்கள் விவாதிப்போம், மேலும் பிற பிரச்சினைகளையும் நாங்கள் நிச்சயமாக விவாதிப்போம்” என்றார். இந்த பேச்சுவார்த்தை மூலம் போர் விரைவில் முடிவுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மீண்டும் நாடாளுமன்றம் வருவாரா ரணில்? ராஜித வெளியிட்டுள்ள தகவல்

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிமரசிங்கவுக்கு மீண்டும் பாராளுமன்றம் செல்லும் எண்ணம் இல்லை. இது பற்றி அவர் என்னிடமும் கூறியுள்ளார் – என்று முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்தார்.

நாட்டுக்கு அவரின் சேவை தேவையெனில் , நாட்டுக்காக அதனை செய்வார் எனவும் குறிப்பிட்டார்.

அத்துடன், தேசிய மக்கள் சக்தி ஆட்சியின்கீழ் ஊடக அடக்குமுறை இடம்பெறுவதாகவும் குற்றஞ்சாட்டினார்.

 

மஹிந்த மீண்டும் கொழும்பு வந்தது ஏன்?

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச கொழும்பில் ஏன் மீண்டும் குடியேறினார் என்பது தொடர்பான விளக்கத்தை அவரது மகன் நாமல் ராஜபக்ச வெளியிட்டுள்ளார்.

முன்னாள் ஜனாதிபதிகளுக்குரிய சிறப்புரிமைகளை நீக்குவதற்குரிய சட்டமூலம் நிறைவேற்றப்பட்ட பின்னர், அரச மாளிகையில் இருந்து மஹிந்த ராஜபக்ச வெளியேறினார்.

கொழும்பு விஜேராம மாவத்தையில் இருந்து அவர் தங்காலை கால்டன் இல்லத்துக்கு சென்றார். இதுவிடயத்தில் அரசியல் பிரசாரத்தையும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி முன்னெடுத்தது.

இந்நிலையில் கொழும்பு நுகேகொடை பகுதியில் மஹிந்த ராஜபக்ச தற்போது மீண்டும் குடியேறியுள்ளார். இது தொடர்பில் நாமல் ராஜபக்சவிடம் வினவியபோது, அவர் கூறியவை வருமாறு,

“ முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச மீண்டும் கொழும்பு வந்துவிட்டார். எமது கட்சிக்கு அவர் தொடர்ந்து ஆலோசனை வழங்கிவருகின்றார். கட்சியை வழிநடத்தியும் வருகின்றார். கொழும்பில் இருந்து அந்த பணியை செய்வார்.

எனது தந்தை தனியாகவே வாழ்கின்றார். அவர் சுதந்திரமாக இருக்கவே விரும்புகின்றார். அதற்கு நாம் இடமளிக்க வேண்டும்.

எமது நண்பர் ஒருவரே மஹிந்த ராஜபக்சவுக்கு வீட்டை வழங்கியுள்ளார். அங்கிருந்தே அரசியல் நடவடிக்கையிலும் மஹிந்த ராஜபக்ச ஈடுபடுவார்.” – என்றார் நாமல் ராஜபக்ச.

டக்ளஸ் தேவானந்தாவை 72 மணிநேரம் தடுத்து வைத்து விசாரிக்க உத்தரவு!

முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிடம் மேலதிக விசாரணைகளை நடத்துவதற்காக, குற்றப் புலனாய்வுப் பிரிவினர் 72 மணி நேர தடுப்புக் காவல் உத்தரவைப் பெற்றுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளி ஒருவருக்கு கைத்துப்பாக்கியை வழங்கியதாக கூறப்படும் விசாரணை தொடர்பாக, குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் நேற்று விசாரணைக்கு அழைக்கப்பட்ட டக்ளஸ் தேவானந்தா நேற்றுமாலை கைது செய்யப்பட்டார்.

உடனடி போர் நிறுத்தத்துக்கு தாய்லாந்து – கம்போடியா ஒப்புதல்!

உடனடி போர் நிறுத்தத்துக்கு தாய்லாந்தும் கம்போடியாவும் ஒப்புக்கொண்டுள்ளன. இது தொடர்பாக இரு நாடுகளின் பாதுகாப்பு அமைச்சர்களும் கூட்டறிக்கை வெளியிட்டுள்ளனர்.

தென் கிழக்கு ஆசிய நாடுகளான தாய்லாந்துக்கும் கம்போடியாவுக்கும் இடையே நிலவிய எல்லைப் பிரச்சினை காரணமாக போர் மூண்டது.

போர் விமானங்கள், ராக்கெட்டுகள், பீரங்கிகள் உள்ளிட்டவற்றைக் கொண்டு இரு நாடுகளும் தாக்குதலில் ஈடுபட்டன. இந்த தாக்குதல் காரணமாக 100-க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர். 50 லட்சத்துக்கும் மேற்பட்டோர் இரு தரப்பிலும் இடம் பெயர்ந்து சென்றனர்.

இந்நிலையில், உடனடியாக போர் நிறுத்தத்தை அமல்படுத்த இவ்விரு நாடுகளும் ஒப்புக்கொண்டுள்ளன. இது தொடர்பான கூட்டறிக்கையில், தாய்லாந்து பாதுகாப்பு அமைச்சர் நத்தபோன் நக்ரபனிட்-டும், கம்போடிய பாதுகாப்பு அமைச்சர் சகா டீ சாய்ஹா-வும் கையெழுத்திட்டுள்ளனர்.

இந்த போர் நிறுத்தம் நண்பகல் 12 மணிக்கு நடைமுறைக்கு வரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஒப்பந்தத்தை கம்போடிய பாதுகாப்பு அமைச்சர் சமூக ஊடக பக்கங்களில் வெளியிட்டுள்ளார்.

அதில், ‘‘இரு நாடுகளும் தற்போது நிறுத்தியுள்ள படைகளை எந்த அசைவுகளும் இன்றி பராமரிக்க ஒப்புக்கொள்ளப்படுகிறது. போர் நிறுத்தம் நண்பகல் 12 மணிக்கு நடைமுறைக்கு வரும். படைகளை வலுப்படுத்தும் எந்த ஒரு முயற்சியையும் யாரும் மேற்கொள்ளக்கூடாது. அவ்வாறு முயல்வது, இயல்பு நிலைக்கான நீண்ட கால முயற்சிகளுக்கு பாதிப்பை ஏற்படுத்தும்’’ என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஒப்பந்தத்தின் மூலம் 20 நாட்கள் நீடித்த சண்டை முடிவுக்கு வந்துள்ளது.

சினிமா

பிரபல இந்திய பாடகி ஆஷா போஸ்லே காலமானார்!

0
  பிரபல இந்திய பின்னணி பாடகி ஆஷா போஸ்லே தமது 92ஆவது வயதில் இன்று(12) காலமானார். இந்திய திரையுலகில் 10,000-இற்கும் அதிக பாடல்களை பாடியுள்ள மூத்த பாடகி ஆஷா போஸ்லே நேற்று(11) மாரடைப்பு ஏற்பட்டதையடுத்து மும்பையிலுள்ள...

சின்னத்திரை நடிகை தற்#கொ#லை!

0
  இலங்கையை பூர்வீகமாகக்கொண்ட பிரபல சின்னத்திரை நடிகையான சுபாஷினி (வயது 36) தற்#கொ#லை செய்துகொண்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. "கயல்" சின்னத்திரை தொலைக்காட்சி தொடரில் நடித்து வருபவர் சுபாஷிணி (வயது36). இலங்கையை பூர்வீகமாகக்கொண்ட இவர் கடந்த...

“தனுஷின் நட்பை இழந்தது மிகப்பெரிய அவமானம்” – விக்னேஷ் சிவன் வருத்தம்

0
தனுஷ் உடனான நட்பை இழந்தது மிகப்பெரிய அவமானம் என்று விக்னேஷ் சிவன் பகிர்ந்துள்ளார். விக்னேஷ் சிவன் இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன் நடித்துள்ள ‘எல்.ஐ.கே’ திரைப்படம் ஏப்ரல் 10-ம் திகதி திரைக்கு வரவுள்ளது. நீண்ட பிரச்சினைகளுக்கு...

செய்தி

ஐரோப்பிய ஒன்றியப் பிரதிநிதிகளின் செம்மணிக்கான வருகை ஒத்திவைப்பு

0
செம்மணி மனிதப் புதைகுழிப் பகுதியை இன்று செவ்வாய்க்கிழமை பார்வையிடவிருந்த ஐரோப்பிய ஒன்றியப் பிரதிநிதிகள், தமது விஜயத்தை அகழ்வுப் பணிகள் ஆரம்பமாகும் திகதி வரை ஒத்திவைத்துள்ளனர். செம்மணி புதைகுழிப் பகுதியை நேரில் பார்வையிட ஐரோப்பிய ஒன்றியக்...

போர் நிறுத்தம் நீடிக்கப்படாது: தாக்குதல் நடத்த தயங்கமாட்டோம்!

0
அமெரிக்காவுடன் அமைதி ஒப்பந்தம் மேற்கொள்ளாவிட்டால் ஈரானில் குண்டு மழை பொழியும் என்றும், அந்நாட்டின் மீது தாக்குதல் நடத்த துளியும் தயங்க மாட்டோம் என்றும் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் மீண்டும் எச்சரிக்கை விடுத்துள்ளார். இது குறித்து...

செம்மணி மனிதப் புதைகுழி அகழ்வு மீண்டும் ஏப்ரல் 27ஆம் திகதி ஆரம்பம்

0
நீண்டகாலமாக எதிர்பார்க்கப்பட்ட செம்மணி மனிதப் புதைகுழியின் மூன்றாம் கட்ட அகழ்வுப் பணிகள் எதிர்வரும் 27ஆம் திகதி திங்கட்கிழமை ஆரம்பமாகவுள்ளன. யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றில் நீதி வான் எஸ். லெனின்குமார் முன்னிலையில் இவ்வழக்கு இன்று விசாரணைக்கு...