Home Blog Page 152

உக்ரைன் தலைநகர்மீது ரஸ்யா தாக்குதல்!

உக்ரைன் தலைநகர் கீவ் மீது இன்று (27) அதிகாலை ரஷ்யா பாரிய வான்வழித் தாக்குதலை நடத்தியுள்ளது.

தாக்குதல் இடம்பெற்றுள்ளதை நகர மேயர் உறுதிப்படுத்தியுள்ளார்.

ரஷ்யாவுக்கும், உக்ரைனுக்கும் இடையில் மூன்றாண்டுகளுக்கு மேலாக நீடிக்கும் போரை முடிவுக்கு கொண்டுவருவதற்குரிய தீவிர முயற்சியில் அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் இறங்கியுள்ளார்.

அவருக்கும், உக்ரைன் ஜனாதிபதிக்கும் இடையில் நாளை (28) சந்திப்பு நடைபெறவிருந்த நிலையிலேயே இன்று மேற்படி தாக்குதல் இடம்பெற்றுள்ளது.

தாக்குதலையடுத்து உக்ரைன் வான் பாதுகாப்பு நடவடிக்கையை தீவிரப்படுத்தியுள்ளது.

அமெரிக்க ஜனாதிபதியால் 20 அம்ச அமைதித் திட்டம் முன்வைக்கப்பட்டுள்ளது. இதற்கு ஆரம்பத்தில் எதிர்ப்பு வெளியிட்ட உக்ரைன் ஜனாதிபதி, பின்னர் இணக்கம் தெரிவித்தார்.

உக்ரைனுக்கான பாதுகாப்பு உத்தரவாதத்தை ஐரோப்பிய நாடுகள் வலியுறுத்தி இருந்தன. இது பற்றியே அமெரிக்க ஜனாதிபதியுடன், உக்ரைன் ஜனாதிபதி நாளை பேசுவதற்கு திட்டமிட்டிருந்தார்.

அவசரகால சட்டம் தவறாக பயன்படுத்தப்படவில்லை!

தேசிய மக்கள் சக்தி ஆட்சியின்கீழ் அவசரகால சட்டம் தவறான நோக்கங்களுக்காக பயன்படுத்தப்படவில்லை என்று அமைச்சர் கே.டி. லால்காந்த தெரிவித்தார்.

அத்துடன், ஊடகங்களை அடக்கி ஆளவும் முற்படவில்லை எனவும் கண்டியில் நடைபெற்ற நிகழ்வொன்றின் உரையாற்றுகையில் கூறினார்.

“ பேரிடருக்கு பின்னரே நாட்டில் அவசரகால சட்டம் அமுல்படுத்தப்பட்டது. மக்களுக்கு சேவையாற்றுவதற்கு தடையாக உள்ள காரணிகளை நிவர்த்தி செய்வதற்காகவே அச்சட்டம் வந்தது. எனவே, எந்தவொரு சந்தர்ப்பத்திலும் அதனை தவறாக எமது அரசாங்கம் பயன்படுத்தவில்லை.

கடந்த ஆட்சிகாலங்களில்தான் ஊடகங்களுக்கு எதிராக அடக்குமறை கட்டவிழ்த்துவிடப்பட்டன. எம்மீது ஊடகங்கள் விமர்சனங்களை முன்வைத்தால்கூட அவை பற்றி நாம் கவலை அடையமாட்டோம்;. ஊடக சுதந்திரம் பாதுகாக்கப்படும்.” எனவும் அமைச்சர் லால்காந்த குறிப்பிட்டார்.

போண்டி பயங்கரவாதத் தாக்குதல்: யூத சமூகத்திடம் மன்னிப்பு கோரினார் ஆஸ்திரேலிய வெளிவிவகார அமைச்சர்

சிட்னி, போண்டி கடற்கரையில் இடம்பெற்ற பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பில் ஆஸ்திரேலியாவில் வாழும் யூத சமூகத்திடம் வெளிவிவகார அமைச்சர் பெனி வோங் மன்னிப்பு கோரியுள்ளார்.

யூத சமூகத்தை இலக்கு வைத்து நடத்தப்பட்ட மேற்படி தாக்குதலை ஆஸ்திரேலிய வெளிவிவகார அமைச்சர் கண்டிக்கவில்லை என எதிரணிகள் விசனம் வெளியிட்டு வந்தன.

தாக்குதலில் உயிரிழந்தவர்களின் இறுதிச்சடங்கில் அவர் பங்கேற்காமை தொடர்பிலும் விமர்சனம் எழுந்தது.

இவ்வாறானதொரு பின்புலத்திலேயே யூத சமூகத்திடம் அவர் மன்னிப்பு கோரியுள்ளார்.

“ இறுதிச் சடங்குகள் மிகவும் தனிப்பட்டவை, பொதுவாக குடும்பத்தினரால் நடத்தப்படும் என்பதால், பாதிக்கப்பட்டவர்களின் இறுதிச் சடங்குகளில் பங்கேற்கவில்லை.” எனவும் அவர் கூறினார்.

அதேவேளை, சிட்னியில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் 15 பேர் பலியானார்கள். 42 பேர் காயமடைந்தனர்.

கொழும்பு மாநகரசபையின் பாதீடு 31 ஆம் திகதி மீண்டும் சமர்ப்பிப்பு!

கொழும்பு மாநகரசபையின் 2026 ஆம் நிதியாண்டுக்கான வரவு- செலவுத் திட்டம் (budget) எதிர்வரும் 31 ஆம் திகதி மீண்டும் முன்வைக்கப்படவுள்ளது.

தேசிய மக்கள் சக்தியின் ஆளுகையின்கீழுள்ள கொழும்பு மாநகரசபையின் முதலாவது வரவு- செலவுத் திட்டம் கடந்த 22 ஆம் திகதி முன்வைக்கப்பட்டது.

இதன்போது வரவு- செலவுத் திட்டத்துக்கு ஆதரவாக 57 வாக்குகளும், எதிராக 60 வாக்குகளும் அளிக்கப்பட்டன.

இதற்கமைய மேலதிக 3 வாக்குகளால் பாதீடு தோற்கடிக்கப்பட்டது. இது தேசிய மக்கள் சக்திக்கு அரசியல் ரீதியிலான பின்னடைவு என கருதப்படுகின்றது.

இந்நிலையிலேயே சில திருத்தங்களுடன் வரவு- செலவுத் திட்டம் 2ஆவது தடவையாக 31 ஆம் திகதி முன்வைக்கப்படுகின்றது.

வாக்கெடுப்பின்போது வரவு- செலவுத் திட்டம் நிறைவேறும் எனவும், எதிரணி உறுப்பினர்கள் மனசாட்சியின் பிரகாரம் வாக்களிப்பார்கள் எனவும் கொழும்பு மேயர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

ஜப்பானில் கத்திக்குத்து தாக்குதல்: 15 பேர் காயம்!

ஜப்பானிலுள்ள தொழிற்சாலையொன்றில் நடந்த கத்திக்குத்து தாக்குதலில் 15 பேர் காயமடைந்துள்ளனர்.

ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் மிஷிமா நகரம் உள்ளது.

இந்நகரத்தில் வாகன டயர் உற்பத்தி செய்யும் தொழிற்சாலை உள்ளது. இந்த தொழிற்சாலையில் 100க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர்.

இந்நிலையில், இந்தத் தொழிற்சாலையில் வேலை செய்து வந்த ஊழியர் நேற்று மாலை தொழிற்சாலையில் கத்திக்குத்து தாக்குதலில் ஈடுபட்டார்.

அங்கு வேலை செய்துகொண்டிருந்த சக ஊழியர்களை கத்தியால் சரமாரியாக குத்தினார். இந்த தாக்குதலில் 15 பேர் படுகாயம் அடைந்தனர்.

தகவலறிந்து விரைந்து சென்ற பொலிஸார் காயமடைந்தவர்களை மீட்டு அருகிலுள்ள வைத்தியசாலையில் அனுமதித்தனர். தாக்குதல் நடத்திய ஊழியரை கைதுசெய்த பொலிஸார் அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மரக்கறி விலைப்பட்டியல் (27.12.2025)

நுவரெலியா பொருளாதார மத்திய நிலையத்தால் இன்று (27) வெளியிடப்பட்டுள்ள மரக்கறி வகைகளின் (ஒரு கிலோ) விலை பட்டியல்…

உறுதிமொழி அரசியல் கலாசாரத்தாலேயே பொருளாதாரம் சீரழிந்தது!

“ உறுதிமொழி அரசியல் வந்த பின்னரே இலங்கையின் பொருளாதாரம் வீழ்ச்சியடைய ஆரம்பித்தது. எனவே, இனி எவரும் பொய்கூறி ஆட்சியை பிடிக்க முடியாது.”

இவ்வாறு முன்னாள் அமைச்சர் லக்ஷ்மன் கிரியல்ல தெரிவித்தார்.
எதிர்க்கட்சி தலைவர் அலுவலகத்தில் நேற்று நடைபெற்ற ஊடக சந்திப்பின்போதே அவர் இவ்வாறு கூறினார். இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,

“ மன்னர் ஆட்சிகாலத்தில் இலங்கையானது தன்னிறைவடைந்த நாடாகவே இருந்தது. 1815 இல் கடைசி மன்னனின் ஆட்சிகாலத்தில்கூட நாடு சிறப்பாகவே இருந்தது. வெளிநாடுகளில் தங்கி இருக்க வேண்டிய நிலை இருக்கவில்லை.

சுதந்திரத்தின் பின்னர்கூட 1950வரை இலங்கை வெளிநாட்டு கடன் பெறவே இல்லை. 2ஆம் உலகப்போரின்போது பிரிட்டனுக்கே கடன் கொடுத்தது எமது நாடு. ஆனால் இன்று வெளிநாடுகளை தங்கி இருக்க வேண்டிய நிலை உள்ளது.

உறுதிமொழி அரசியல் கலாசாரம் வந்த பின்னரே இந்நிலை ஏற்பட்டது. இனி பொய்கூறி ஆட்சிக்கு வருவது சாத்தியமற்ற விடயமாகவே இருக்கும்.” – என்றார் கிரியல்ல.

ஊடக அடக்குமுறை: குற்றச்சாட்டை நிராகரிக்கிறது அரசு!

தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் ஊடக அடக்குமுறையை கட்டவிழ்த்துவிட்டுள்ளதாக முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுகளை அமைச்சரவைப் பேச்சாளரும், ஊடகத்துறை அமைச்சருமான நளிந்த ஜயதிஸ்ஸ முற்றாக நிராகரித்தார்.

ஊடக அடக்குமுறை தொடர்பில் எதிரணிகளால் முன்வைக்கப்பட்டுவரும் கருத்துகள் தொடர்பில் எழுப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கையிலேயே அவர் இவ்வாறு நிராகரித்தார்.

“ ஊடகங்களுக்கு எதிராக எவ்வித அடக்குமுறையையும் கையாளப்படவில்லை. ஊடக சுதந்திரம் பாதுகாக்கப்படுகின்றது. சமூகவலைத்தளங்களில் அரசாங்கம்மீது விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டுவருகின்றன.

எனினும், சில ஊடகங்கள் மற்றும் சமூகவலைத்தளங்கள் திரிவுபடுத்தப்பட்ட செய்திகளை வெளியிடுகின்றன.
நாட்டின் சுகாதாரத்துறைமீதுள்ள நம்பிக்கையை சீர்குலைக்கின்றன. தேசிய பாதுகாப்பு அச்சுறுத்தல் ஏற்படும் விதத்திலான செய்திகளை வெளியிடுகின்றன.

இது தொடர்பில் சாதாரண சட்டத்தின்கீழ் நடவடிக்கை எடுக்க முடியும். மக்களும் அதைத்தான் கோரி நிக்கின்றனர். அரசாங்கத்துக்கு மூன்றிலிரண்டு பெரும்பான்மைபலத்தை வழங்கிவிட்டோம், அப்படி இருந்தும் ஏன் போலி தகவல்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படவில்லை என மக்கள் கேட்கின்றனர்.” எனவும் நளிந்த ஜயதிஸ்ஸ குறிப்பிட்டார்.

ஊடக சுதந்திரத்துக்கு அச்சுறுத்தல்: ஐதேக கண்டனம்

ஊடகங்களுக்கு எதிராக அடக்குமுறையை கட்டவிழ்த்துவிடுவதற்கு ஐக்கிய தேசியக் கட்சி ஒருபோதும் இடமளிக்காது என்று அக்கட்சியின் தவிசாளர் வஜிர அபேவர்தன தெரிவித்தார்.

“ ஊடகங்களுக்கு சுதந்திரமளிக்கும் வகையில் ஐக்கிய தேசியக் கட்சி ஆட்சியில்தான் தேவையான சட்டங்கள் கொண்டுவரப்பட்டன. தகவல் அறியும் உரிமை சட்டத்தைக்கூட ரணில் விக்கிரமசிங்கவே கொண்டுவந்தார்.

மக்கள், அரசியல் பிரமுகர்கள் தவறிழைப்பது இயல்பு. ஆனால் அதனை ஊடகங்கள் சுட்டிக்காட்டும்போது திருத்திக்கொள்ள முற்பட வேண்டும். மாறாக ஊடகங்களை ஒடுக்குவதற்கு முற்படக்கூடாது.

எனவே, ஊடகங்களை அச்சுறுத்துவது பாரதூரமான விடயமாகும். இதற்கு ஐக்கிய தேசியக் கட்சி இடமளிக்காது.” – எனவும் வஜிர அபேவர்தன குறிப்பிட்டார்.

டக்ளஸ் தேவானந்தா கைது: பின்னணி என்ன?

ஈ.பி.டிபியின் செயலாளர் நாயகம், முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவாநன்தா  இன்று (26) கைது செய்யப்பட்டுள்ளார்.

குற்றப் புலனாய்வு திணைக்களத்தின் மனித  கொலை தொடர்பான விசாரணைப் பிரிவு அதிகாரிகளால் முன்னெடுக்கப்பட்டுவந்த விசாரணையொன்று தொடர்பிலேயே இக்கைது இடம்பெற்றுள்ளது.

இராணுவத்தினரால் டக்ளஸ் தேவானந்தாவுக்கு “பிஸ்டல்” ரக துப்பாக்கியொன்று சட்டப்பூர்வமாக வழங்கப்பட்டுள்ளது.

பாதாள குழு உறுப்பினர் வெளியிட்ட தகவலுக்கமைய 2019 ஆம் ஆண்டு வெலிவேரிய பகுதியில் மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் குறித்த துப்பாக்கி கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பில் முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளின் அடிப்படையிலேயே டக்ளஸ் தேவானந்த கைது செய்யப்பட்டுள்ளார். அவரை கம்பஹா நீதிமன்றத்தில் முற்படுத்துவதற்கு சிஐடியினர் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

சினிமா

பிரபல இந்திய பாடகி ஆஷா போஸ்லே காலமானார்!

0
  பிரபல இந்திய பின்னணி பாடகி ஆஷா போஸ்லே தமது 92ஆவது வயதில் இன்று(12) காலமானார். இந்திய திரையுலகில் 10,000-இற்கும் அதிக பாடல்களை பாடியுள்ள மூத்த பாடகி ஆஷா போஸ்லே நேற்று(11) மாரடைப்பு ஏற்பட்டதையடுத்து மும்பையிலுள்ள...

சின்னத்திரை நடிகை தற்#கொ#லை!

0
  இலங்கையை பூர்வீகமாகக்கொண்ட பிரபல சின்னத்திரை நடிகையான சுபாஷினி (வயது 36) தற்#கொ#லை செய்துகொண்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. "கயல்" சின்னத்திரை தொலைக்காட்சி தொடரில் நடித்து வருபவர் சுபாஷிணி (வயது36). இலங்கையை பூர்வீகமாகக்கொண்ட இவர் கடந்த...

“தனுஷின் நட்பை இழந்தது மிகப்பெரிய அவமானம்” – விக்னேஷ் சிவன் வருத்தம்

0
தனுஷ் உடனான நட்பை இழந்தது மிகப்பெரிய அவமானம் என்று விக்னேஷ் சிவன் பகிர்ந்துள்ளார். விக்னேஷ் சிவன் இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன் நடித்துள்ள ‘எல்.ஐ.கே’ திரைப்படம் ஏப்ரல் 10-ம் திகதி திரைக்கு வரவுள்ளது. நீண்ட பிரச்சினைகளுக்கு...

செய்தி

ஐரோப்பிய ஒன்றியப் பிரதிநிதிகளின் செம்மணிக்கான வருகை ஒத்திவைப்பு

0
செம்மணி மனிதப் புதைகுழிப் பகுதியை இன்று செவ்வாய்க்கிழமை பார்வையிடவிருந்த ஐரோப்பிய ஒன்றியப் பிரதிநிதிகள், தமது விஜயத்தை அகழ்வுப் பணிகள் ஆரம்பமாகும் திகதி வரை ஒத்திவைத்துள்ளனர். செம்மணி புதைகுழிப் பகுதியை நேரில் பார்வையிட ஐரோப்பிய ஒன்றியக்...

போர் நிறுத்தம் நீடிக்கப்படாது: தாக்குதல் நடத்த தயங்கமாட்டோம்!

0
அமெரிக்காவுடன் அமைதி ஒப்பந்தம் மேற்கொள்ளாவிட்டால் ஈரானில் குண்டு மழை பொழியும் என்றும், அந்நாட்டின் மீது தாக்குதல் நடத்த துளியும் தயங்க மாட்டோம் என்றும் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் மீண்டும் எச்சரிக்கை விடுத்துள்ளார். இது குறித்து...

செம்மணி மனிதப் புதைகுழி அகழ்வு மீண்டும் ஏப்ரல் 27ஆம் திகதி ஆரம்பம்

0
நீண்டகாலமாக எதிர்பார்க்கப்பட்ட செம்மணி மனிதப் புதைகுழியின் மூன்றாம் கட்ட அகழ்வுப் பணிகள் எதிர்வரும் 27ஆம் திகதி திங்கட்கிழமை ஆரம்பமாகவுள்ளன. யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றில் நீதி வான் எஸ். லெனின்குமார் முன்னிலையில் இவ்வழக்கு இன்று விசாரணைக்கு...