Home Blog Page 153

இலங்கை நிச்சயம் மீண்டெழும்!

“ இலங்கையால் நிச்சயம் மீண்டெழ முடியும். அதற்கான தலைமைத்துவத்தை தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் வழங்கும்.” – என்று அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.

அரசாங்கம்மீது நம்பிக்கை இருப்பதாலேயே சர்வதேச உதவிகள் கிடைக்கப்பெறுகின்றன. இவ்வாறான உதவிகள்மூலம் இருந்த நிலையைவிடவும் சிறந்த நிலைக்கு வரமுடியும் எனவும் அவர் கூறினார்.

அதேவேளை, ஊடக அடக்குமுறை தொடர்பில் அரசாங்கத்துக்கு எதிராக முன்வைக்கப்பட்டுவரும் குற்றச்சாட்டுகளையும் அவர் நிராகரித்தார்.

17 வருடங்களுக்கு பிறகு பங்களாதேஷ் வந்த முக்கிய புள்ளி: பிரதமர் வேட்பாளராக களத்தில்!!

“பங்களாதேஷானது முஸ்லிம்கள், இந்துக்கள், பௌத்தர்கள் மற்றுமு; கிறிஸ்தவர்கள் என அனைவருக்கும் சொந்தமானது.”

இவ்வாறு பங்களாதேஷின் முன்னாள் பிரதமர் கலீதா ஜியாவின் மகனும், பங்களாதேஷ் தேசியவாத கட்சியின் (பிஎன்பி) செயல் தலைவருமான தாரிக் ரஹ்மான் தெரிவித்துள்ளார்.

17 ஆண்டுகளுக்குப் பிறகு தாரிக் ரஹ்மான் நேற்று நாடு திரும்பினார்.
டாக்கா விமான நிலையத்தில் லட்சக்கணக்கான பிஎன்பி தொண்டர்கள் திரண்டு வந்து, தாரிக் ரஹ்மானை வரவேற்றனர்.

அவரது மனைவி ஜூபைதா, மகள் ஜைமா ஆகியோரும் உடன் வந்தனர். குண்டு துளைக்காத பேருந்தில் தாரிக் ரஹ்மானும் குடும்பத்தினரும் டாக்காவில் உள்ள வீட்டுக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.

இந்நிலையில், பூர்பாச்சல் பகுதியில் நடைபெற்ற தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டத்தில் உரையாற்றிய தாரிக் ரஹ்மான்,

‘‘எனது நாட்டுக்காக என்னிடம் ஒரு திட்டம் உள்ளது. மக்கள் நீண்டகாலமாக விரும்பிய பாதுகாப்பான நாடாக பங்களாதேசை மாற்றுவதே அது. நாம் அனைவரும் ஒன்றிணைந்து நாட்டை உருவாக்க வேண்டிய நேரம் வந்துவிட்டது.

இந்த நாடு மலைகளில் வசிப்பவர்களுக்கும், சமவெளிப் பகுதிகளில் வசிப்பவர்களுக்கும், முஸ்லிம்களுக்கும், இந்துக்களுக்கும், பவுத்தர்களுக்கும் மற்றம் கிறிஸ்தவர்களுக்கும் சொந்தமானது.” -என்று குறிப்பிட்டார்.

பங்களாதேஷில் மாணவர்களின் போராட்டத்தால் பிரதமர் பதவியை ராஜினாமா செய்த ஷேக் ஹசீனா இந்தியாவில் தஞ்சமடைந்தார்.

பங்களாதேஷில் தற்போது முகமது யூனுஸ் தலைமையிலான இடைக்கால அரசு உள்ளது.

அங்கு பெப்ரவரி 12-ம் திகதி தேர்தல் நடைபெற உள்ளது. தற்போதைய சூழலில் பங்களாதேஷ் தேசியவாத கட்சி , மாணவர் சங்கங்கள் உருவாக்கிய தேசிய மக்கள் கட்சி , அடிப்படைவாத கட்சியான ஜமாத் – இ – இஸ்லாமி ஆகியவை தேர்தல் களத்தில் உள்ளன.

கடந்த 2008-ம் ஆண்டு செப்டம்பரில் மனைவி, குழந்தையுடன் இங்கிலாந்து தலைநகர் லண்டனில் குடியேறிய தாரிக் ரஷ்மான், சுமார் 17 ஆண்டுகள் அரசியல் துறவறம் பூண்டிருந்தார்.
தற்போது நாடு திரும்பியுள்ள அவர், வரும் பொதுத்தேர்தலில் பிஎன்பி கட்சியின் பிரதமர் வேட்பாளராக களமிறங்குகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆழிப் பேரலையின் ஊழித்தாண்டம்: நினைவேந்தல் அனுஷ்டிப்பு!

சுனாமி ஆழிப் பேரலையின் 21ம் ஆண்டு நினைவு நாளான இன்று யாழ்.வடமராட்சி கிழக்கு – உடுத்துறை சுனாமி நினைவாலயத்தில் நினைவேந்தல் நிகழ்வுகள் உணர்வுபூர்வமாக இடம்பெற்றன.

சுனாமியால் உயிரிழந்தவர்களுக்காக அமைக்கப்பட்ட தூபிக்கு மாலை அணிவிக்கப்பட்டு 9.25 மணிக்கு பொதுச்சுடர் ஏற்றப்பட்டது.

அதனைத் தொடர்ந்து உயிரிழந்தவர்களின் படங்களுக்கு மாலையிட்டு தீபங்கள் ஏற்றி உணவுகளை படையலிட்டு உறவுகள் அஞ்சலித்தனர்.

கடந்த 2004 டிசம்பர் 26ம் திகதி ஏற்பட்ட சுனாமி ஆழிப்பேரலை பேரனர்த்தம் காரணமாக பல்லாயிரம் பொதுமக்கள் உயிரிழந்ததுடன் பல கோடி ரூபா பெறுமதியான சொத்துக்களும் அழிந்தமை குறிப்பிடத்தக்கது

அதேவேளை, வடக்க, கிழக்கு மற்றும் தெற்கு பகுதிகளிலும் நேற்று சுனாமி நினைவேந்தல் நிகழ்வுகள் இடம்பெற்றன.

வியட்நாம் எல்லையில் ரோந்து பணிக்கு ரோபோக்களை அனுப்புகிறது சீனா!

வியட்நாம் எல்​லை​யில் ரோந்து பணிக்கு மனித ரோபோக்​களை ஈடு​படுத்த சீனா முடிவு செய்துள்ளது.

சீனா​வின் சென்​ஜென் மாகாணத்​தில் உள்​ளது யுபிடெக் ரோபோட்​டிக்ஸ் நிறு​வனம். இது தொழில்​சாலைகள் மற்​றும் பொது சேவை​களுக்கு மனித ரேபோக்​களை உரு​வாக்கி தரு​கிறது.

இந்​நிலை​யில் இந்​நிறு​வனத்​திடம் எல்​லை​யில் ரோந்து பணியை மேற்​கொள்​ளும் வகை​யில் ‘வாக்​கர் எஸ்2’ என்ற மனித ரோபோக்​களை தயாரித்து கொடுக்க 37 மில்​லியன் டாலருக்கு சீன அரசு ஒப்​பந்​தம் செய்​தது.

இதையடுத்து செயற்கை நுண்​ணறிவு கட்​டுப்​பாட்​டில் இயங்​கும் வகையி​லான ரோபோக்​களை யுபிடெக் இன்​ஜினீயர்​கள் உரு​வாக்​கினர்.

இந்த ரோபோக்​களை வியட்நாம் எல்லை அருகே குவாங்சி பகு​தி​யில் உள்ள பேங்​செங்​காங் என்ற கடலோர பகு​தி​யில் ரோந்து பணி​யில் சீனா ஈடு​படுத்​தவுள்​ளது.

இந்த மனித ரோபோக்​கள் பயணி​களை வரிசை​யாக நிற்​கவைக்​க​வும், எளிமை​யான கேள்வி​களுக்கு பதில் அளிக்​கும் வகை​யிலும், வாக​னங்​களை ஒழுங்​குபடுத்​த​வும், எல்லை பணி​யாளர்​களுக்கு உதவி​யாகவும் செயல்​படும்.

சரக்கு முனை​யத்​தில் பணி​யாளர்​களுக்கு உதவுவது, கன்​டெய்​னர்​களின் ஐ.டி.க்​களை சரி​பார்ப்​பது, சீல்​களை உறுதி செய்து தவகல் அனுப்​புவது போன்ற பணி​களில் இந்த மனித ரோபோக்​கள் ஈடு​படுத்​தப்​படும். இவை நம்​பக​மான முறை​யில் செய​லாற்​றி​னால், இவை விமான நிலை​யம், துறை​முகம், ரயில் நிலை​யங்​களில் பயன்​படுத்​தப்​படலாம்​ என கூறப்படுகிறது.

பயங்கரவாதத்திலிருந்து அரசைப் பாதுகாக்கும் சட்டவரைவை சவாலுக்குட்படுத்துவேன்

பயங்கரவாதத்திலிருந்து அரசைப் பாதுகாக்கும் சட்டவரைவை உயர்நீதிமன்றத்தில் சவாலுக்குட்படுத்தப் போவதாக முன்னாள் நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

ஜே.ஆர். ஜயவர்தனவின் ஆட்சிக் காலத்தில் பயங்கரவாத தடைச்சட்டம் தற்காலிக ஏற்பாடாகவே இயற்றப்பட்டது.

2009 ஆம் ஆண்டு போர் முடிவடைந்ததன் பின்னர் பயங்கரவாத தடைச்சட்டம் அரசியல் தேவைகளுக்காக பயன்படுத்தப்பட்டது.

ஆட்சியாளர்கள் தமது அரசியல் இருப்பை தக்க வைத்துக் கொள்வதற்கும், எதிர்கால அரசியலுக்காகவும் பயங்கரவாத தடைச்சட்டத்தை தவறாக பயன்படுத்தினார்கள்.

இதன் பின்னரே, பயங்கரவாத தடைச்சட்டம் முழுமையாக ரத்துச் செய்யப்பட வேண்டும் என்று தேசிய மற்றும் சர்வதேச மட்டத்தில் எதிர்ப்புக்கள் எழுந்தன.

பயங்கரவாத தடைச்சட்டத்தை ரத்துச் செய்வதாக நாங்கள் மக்களுக்கு வாக்குறுதி வழங்கினோம்.அதற்குரிய நடவடிக்கைகளை வெளிப்படையாக முன்னெடுத்தோம்.

2015 முதல் 2019ஆம் ஆண்டு வரை ஈஸ்டர் ஞாயிறு குண்டுத்தாக்குதல்கள் சம்பவம் இடம்பெறும் வரை பயங்கரவாத தடைச்சட்டம் நடைமுறைப்படுத்தப்படவில்லை.

2022 ஆம் ஆண்டு இடைக்கால அரசாங்கத்தில் நீதியமைச்சராக பதவியேற்ற பின்னர், நெரின்புள்ளே, நளின் இந்திரதிஸ்ஸ தலைமையில் குழு ஒன்றை நியமித்து பயங்கரவாத தடைச்சட்டத்தை நீக்குவதற்குரிய நடவடிக்கைகளை மேற்கொண்டேன்.

அதற்கமைய நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படட பயங்கரவாத எதிர்ப்புச் சட்ட வரைவுக்கு எதிராக தேசிய மக்கள் சக்தி உயர்நீதிமன்றம் சென்றது.

பயங்கரவாத தடைச்சட்டத்துக்கு மாற்றீடாக பிறிதொரு சட்டத்தை உருவாக்க கூடாது என்று கடும் எதிர்ப்பை வெளிப்படுத்தினார்கள்.

நாங்கள் முன்வைத்த பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலத்தை கொழும்பில் உள்ள வெளிநாட்டு இராஜதந்திரிகளும் சிவில் அமைப்பினரும் ஏற்றுக்கொண்ட போதும், தேசிய மக்கள் சக்தியும்,இலங்கைத் தமிழரசுக் கட்சியும் ஏற்றுக்கொள்ளவில்லை.

இந்த சட்டவரைவு தேசிய பாதுகாப்பு தொடர்பான நாடாளுமன்ற துறைசார் மேற்பார்வைக்குழுவில் ஆராயப்பட்ட போது தேசிய மக்கள் சக்தியினரும், இலங்கைத் தமிழரசுக் கட்சியின் உறுப்பினர்களும் எதிராகவே வாக்களித்தார்கள்.

அனுரகுமார திசாநாயக்க தனது தேர்தல் அறிக்கையில் பயங்கரவாத தடைச்சட்டத்தை முழுமையாக ரத்துச் செய்வதாக குறிப்பிட்டிருந்தார்.

நாங்கள் தயாரித்த பயங்கரவாத எதிர்ப்புச் சட்டமூலத்தின் உள்ளடக்கத்துக்கு அப்பாற்பட்ட வகையில், பயங்கரவாதத்திலிருந்து அரசைப் பாதுகாக்கும் சட்ட வரைவில் பல விடயங்கள் உள்ளடக்கப்பட்டுள்ளன.

இது சட்டமானால் அரசியலமைப்பால் உரித்தாக்கப்பட்டுள்ள தனிமனித சுதந்திரம் பாரிய அச்சுறுத்தலை எதிர்கொள்ளும்.

இந்த சட்டவரைவை உயர்நீதிமன்றத்தில் சவாலுக்குட்படுத்துவேன் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ – வியட்நாம் தூதுவர் சந்திப்பு!

சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் டாக்டர் நளிந்தா ஜெயதிஸ்ஸ மற்றும் இலங்கைக்கான வியட்நாம் தூதர் திருமதி டிரின் தி டாம் (Trinh Thi Tam) ஆகியோருக்கு இடையேயான சந்திப்பு நேற்று பிற்பகல் சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சில் நடைபெற்றது.

இலங்கைக்கும் வியட்நாமுக்கும் இடையிலான தற்போதைய இராஜதந்திர உறவுகள் மற்றும் எதிர்காலத்தில் அந்த உறவுகளை வலுப்படுத்துவது குறித்து கலந்துரையாடப்பட்டது.

மேலும் வியட்நாமின் உதவியுடன் இலங்கையில் தற்போது நடைபெற்று வரும் அபிவிருத்தி திட்டங்கள் மற்றும் எதிர்காலத்தில் செயல்படுத்தப்பட வேண்டிய திட்டங்கள் குறித்தும் கலந்துரையாடப்பட்டது.

நாட்டின் சுகாதார சேவையின் தற்போதைய செயல்பாடு, மருந்துகள் மற்றும் மருத்துவ உபகரணங்களுக்கான தேவைகள், விவசாயம் மற்றும் சுற்றுலாத் துறை, பெண்கள் மற்றும் குழந்தைகள் விவகாரங்கள் மற்றும் முதலீட்டு ஊக்குவிப்புத் திட்டங்கள் குறித்தும் கலந்துரையாடப்பட்டது.

இலங்கைக்கும் வியட்நாமுக்கும் இடையிலான இருதரப்பு வர்த்தகம் மற்றும் ஊடகம் மற்றும் தகவல் தொடர்புத் துறைகளில் இலங்கையுடனான வியட்நாமின் அனுபவங்களைப் பகிர்ந்து கொள்வது குறித்தும் தூதர் தனது கருத்துக்களை தெரிவித்தார்.

இலங்கைக்கும் வியட்நாமுக்கும் இடையிலான நீண்டகால உறவுகளின் முக்கிய அம்சங்களை நினைவு கூர்ந்த சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் டாக்டர் நளிந்த ஜெயதிஸ்ஸ, எதிர்காலத்தில் வியட்நாமுக்கும் இலங்கைக்கும் இடையில் வலுவான அரசியல், இராஜதந்திர மற்றும் பொருளாதார உறவுகளை கட்டியெழுப்ப விரும்புவதாகவும் இதன்போது தெரிவித்தார்.

இரு நாடுகளுக்கும் இடையிலான உறவுகளை மேலும் வலுப்படுத்துவதன் முக்கியத்துவத்தையும் தூதர் சுட்டிக்காட்டினார்,

மேலும் அரசியல், கலாச்சாரம் மற்றும் பொருளாதாரம் உட்பட அனைத்து துறைகளிலும் இலங்கை அடைந்துள்ள முன்னேற்றம் குறித்து தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்.

1970 இல் இருந்து 55 ஆண்டுகளாக வியட்நாமும் இலங்கையும் வலுவான உறவுகளைப் பேணி வருகின்றன என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.

சுகாதார செயலாளர் நிபுணர் டாக்டர் அனில் ஜாசிங்கே, வியட்நாம் தூதரகத்தின் துணைத் தலைவர் லு வான் ஹுவோங், தூதரின் செயலாளர் ரம்யா நிலாங்கனி ஆகியோர் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.

வடமேற்கு நைஜீரியாவில் ஐ.எஸ். இலக்குகள்மீது அமெரிக்கா தாக்குதல்!

U.S. President Donald Trump takes part in a Christmas Eve dinner in the ballroom of his Mar-a-Lago club in Palm Beach, Florida, U.S., December 24, 2025. REUTERS/Jessica Koscielniak

வடமேற்கு நைஜீரியாவில் உள்ள ஐஎஸ் பயங்கரவாதிகளுக்கு எதிராக அமெரிக்கா வான்வழித் தாக்குதல்களை நடத்தியதாக ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அறிவித்துள்ளது.

வடமேற்கு நைஜீரியாவில் ஐ.எஸ் பயங்கரவாதிகளுக்கு எதிராக ஒரு சக்திவாய்ந்த தாக்குதலை அமெரிக்கா தொடங்கியது.

அவர்கள் பல ஆண்டுகளாக, அப்பாவி கிறிஸ்தவர்களைக் குறிவைத்து கொடூரமாகக் கொன்று வருகின்றனர்.

கிறிஸ்தவர்களைப் படுகொலை செய்வதை நிறுத்தாவிட்டால், நரகத்திற்குச் செல்ல வேண்டியிருக்கும் என்று நான் முன்பு இந்த பயங்கரவாதிகளை எச்சரித்தேன், இன்றிரவு, அது நடந்தது.

அமெரிக்கா மட்டுமே செய்யக்கூடியது போல, போர்த் துறை ஏராளமான சரியான தாக்குதல்களை நடத்தியது. தீவிர இஸ்லாமிய பயங்கரவாதம் செழிக்க அமெரிக்கா ஒருபோதும் அனுமதிக்காது.” எனவும் ட்ரம்ப் குறிப்பிட்டுள்ளார்.

கடவுள் நமது ராணுவத்தை ஆசீர்வதிப்பார். இறந்த பயங்கரவாதிகள் உட்பட அனைவருக்கும் கிறிஸ்துமஸ் வாழ்த்துக்கள், அவர்கள் கிறிஸ்தவர்களைப் படுகொலை செய்வது தொடர்ந்தால் இன்னும் பல கடும் விளைவுகளை சந்திக்க வேண்டி இருக்கும்.”எனவும் ட்ரம்ப் குறிப்பிட்டுள்ளார்.

அதேவேளை, அமெரிக்காவின் இந்த தாக்குதலுக்கு ஆஸ்திரேலியா ஆதரவு வெளியிட்டுள்ளது.
உலகம் முழுவதும் மக்களை ஐ.எஸ் . அச்சுறுத்துகிறது.

அதன் தீவிரவாத, வன்முறை சித்தாந்தம் நிறுத்தப்பட வேண்டும் என்று ஆஸ்திரேலிய வெளிவிவகார அமைச்சர் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.

மாமனிதர் ஜோசப் பரராஜசிங்கம் படுகொலைக்கு நீதி கோரி பேரணி

படுகொலை செய்யப்பட்ட, முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் மாமனிதர் ஜோசப் பரராஜசிங்கத்தின் நினைவேந்தல் நிகழ்வு மற்றும் படுகொலைக்கு நீதி கோரும் பேரணி என்பன மட்டக்களப்பில் நேற்று இடம்பெற்றுள்ளன.

2005ஆம் ஆண்டு மட்டக்களப்பு புனித மரியாள் தேவாலயத்தில், நத்தார் வழிபாட்டில் ஈடுபட்டிருந்த போது, முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கம், துணை ஆயுதக் குழுவினரால் படுகொலை செய்யப்பட்டார்.

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் மாமனிதர் ஜோசப் பரராஜசிங்கத்தின் 20 ஆம் ஆண்டு நினைவேந்தலை முன்னிட்டு, மட்டக்களப்பு காந்தி பூங்காவில் இருந்து மாநகரசபை மண்டபம் வரை படுகொலைக்கு நீதி வேண்டி ஆர்ப்பாட்டப் பேரணி இடம்பெற்றது.

இதையடுத்து நினைவேந்தல் நிகழ்வு இடம்பெற்றது.

இந்த நிகழ்வில், தமிழ் அரசு கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள், மட்டக்களப்பு மாநகரசபை முதல்வர், பிரதேச சபை தவிசாளர்கள், உறுப்பினர்கள், கட்சி ஆதரவாளர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

ரணில், சஜித் ஒன்றிணைந்தால் தமிழ்க் கட்சிகளும் கூட்டணிக்குள் வரும்!

ரணில் விக்கிரமசிங்க, சஜித் பிரேமதாச ஆகியோர் ஒன்றிணைந்த பின்னர் தமிழ், முஸ்லிம் கட்சிகளும் அந்த அணியில் இணையும் என்று நாடாளுமன்ற உறுப்பினர் ரவி கருணாநாயக்க நம்பிக்கை வெளியிட்டார்.

ஐக்கிய தேசியக் கட்சி மற்றும் ஐக்கிய மக்கள் சக்தி என்பவற்றை ஒன்றிணைப்பது தொடர்பில் முன்னெடுக்கப்படும் முயற்சி தொடர்பில் எழுப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.

ரவி கருணாநாயக்க மேலும் கூறியவை வருமாறு,

“ ரணில் விக்கிரமசிங்க பதவி விலகுகின்றாரா, நாடாளுமன்றம் வருவாரா என்பது முக்கியம் அல்ல. அவரும், சஜித்தும் இணைந்து செயல்பட வேண்டியதுதான் முக்கியம்.

அந்த ஒன்றிணைவுக்காகவே நானும் செயல்பட்டுவருகின்றேன். எனினும், அதனை நான் வெளிக்காட்டிக்கொள்ளவில்லை.
அதேபோல சிறு கட்சிகளையும் இணைக்கும் முயற்சியில் இறங்கியுள்ளேன்.

ஐக்கிய மக்கள் சக்தி மற்றும் ஐக்கிய தேசியக் கட்சி என்பன இணைந்த பின்னர் ஏனைய சிறு கட்சிகளையும் இணைத்துக்கொள்ள வேண்டும்.
தமிழ், முஸ்லிம் கட்சிகளும் எம்முடன் இணையும். அதற்கான சிறப்பான ஆரம்பம் கொழும்பில் வழங்கப்பட்டுள்ளது.” – என்றார் ரவி கருணாநாயக்க.

சினிமா

பிரபல இந்திய பாடகி ஆஷா போஸ்லே காலமானார்!

0
  பிரபல இந்திய பின்னணி பாடகி ஆஷா போஸ்லே தமது 92ஆவது வயதில் இன்று(12) காலமானார். இந்திய திரையுலகில் 10,000-இற்கும் அதிக பாடல்களை பாடியுள்ள மூத்த பாடகி ஆஷா போஸ்லே நேற்று(11) மாரடைப்பு ஏற்பட்டதையடுத்து மும்பையிலுள்ள...

சின்னத்திரை நடிகை தற்#கொ#லை!

0
  இலங்கையை பூர்வீகமாகக்கொண்ட பிரபல சின்னத்திரை நடிகையான சுபாஷினி (வயது 36) தற்#கொ#லை செய்துகொண்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. "கயல்" சின்னத்திரை தொலைக்காட்சி தொடரில் நடித்து வருபவர் சுபாஷிணி (வயது36). இலங்கையை பூர்வீகமாகக்கொண்ட இவர் கடந்த...

“தனுஷின் நட்பை இழந்தது மிகப்பெரிய அவமானம்” – விக்னேஷ் சிவன் வருத்தம்

0
தனுஷ் உடனான நட்பை இழந்தது மிகப்பெரிய அவமானம் என்று விக்னேஷ் சிவன் பகிர்ந்துள்ளார். விக்னேஷ் சிவன் இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன் நடித்துள்ள ‘எல்.ஐ.கே’ திரைப்படம் ஏப்ரல் 10-ம் திகதி திரைக்கு வரவுள்ளது. நீண்ட பிரச்சினைகளுக்கு...

செய்தி

ஐரோப்பிய ஒன்றியப் பிரதிநிதிகளின் செம்மணிக்கான வருகை ஒத்திவைப்பு

0
செம்மணி மனிதப் புதைகுழிப் பகுதியை இன்று செவ்வாய்க்கிழமை பார்வையிடவிருந்த ஐரோப்பிய ஒன்றியப் பிரதிநிதிகள், தமது விஜயத்தை அகழ்வுப் பணிகள் ஆரம்பமாகும் திகதி வரை ஒத்திவைத்துள்ளனர். செம்மணி புதைகுழிப் பகுதியை நேரில் பார்வையிட ஐரோப்பிய ஒன்றியக்...

போர் நிறுத்தம் நீடிக்கப்படாது: தாக்குதல் நடத்த தயங்கமாட்டோம்!

0
அமெரிக்காவுடன் அமைதி ஒப்பந்தம் மேற்கொள்ளாவிட்டால் ஈரானில் குண்டு மழை பொழியும் என்றும், அந்நாட்டின் மீது தாக்குதல் நடத்த துளியும் தயங்க மாட்டோம் என்றும் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் மீண்டும் எச்சரிக்கை விடுத்துள்ளார். இது குறித்து...

செம்மணி மனிதப் புதைகுழி அகழ்வு மீண்டும் ஏப்ரல் 27ஆம் திகதி ஆரம்பம்

0
நீண்டகாலமாக எதிர்பார்க்கப்பட்ட செம்மணி மனிதப் புதைகுழியின் மூன்றாம் கட்ட அகழ்வுப் பணிகள் எதிர்வரும் 27ஆம் திகதி திங்கட்கிழமை ஆரம்பமாகவுள்ளன. யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றில் நீதி வான் எஸ். லெனின்குமார் முன்னிலையில் இவ்வழக்கு இன்று விசாரணைக்கு...