Home Blog Page 15

மத்திய கிழக்கு விவகாரத்தை கையாள சிறப்பு தூதுவரை நியமித்தது ஐ.நா.!

மத்திய கிழக்கில் நிலவும் போரை முடிவுக்கு கொண்டுவரும் முயற்சியின் ஓர் அங்கமாக ஐ.நா. பொதுச்செயலாளர் அந்தோனியோ குட்டரெஸ், பிரெஞ்சு தூதர் ஜீன் அர்னால்ட்டை Jean Arnault தனது தனிப்பட்ட தூதராக நியமித்துள்ளார்.

30 வருடங்களுக்கு மேலாக சர்வதேச அமைதிப் பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டுள்ள அர்னால்ட், போரினால் பாதிக்கப்பட்டுள்ள மக்களின் வாழ்வாதாரம் மற்றும் பொருளாதாரச் சீரழிவு குறித்து நேரடி ஆய்வுகளை மேற்கொள்வார்.

ஈரான் மீதான போர் உலகளாவிய எரிசக்தி மற்றும் உர விநியோகத்தைப் பாதித்துள்ளதால், இந்தப் பதற்றம் மேலும் தீவிரமடைவதைத் தடுக்க ஐ.நா முயற்சித்துவருகின்றது.

குறிப்பாக, ஹார்முஸ் நீரிணை மூடப்பட்டிருப்பதால் ஏற்பட்டுள்ள உணவுப் பாதுகாப்பு அச்சங்களுக்கு தீர்வு காண்பது இவரது முக்கிய பணியாக இருக்கும்.

பல்வேறு கண்டங்களில் அமைதிப் பணிகளை ஒருங்கிணைத்த இவரது அனுபவம், தற்போதைய சர்வதேச நெருக்கடியை தணிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மரக்கறி விலைப்பட்டியல் (26.03.2026)

நுவரெலியா பொருளாதார மத்திய நிலையத்தால் இன்று (26) வெளியிடப்பட்டுள்ள மரக்கறி வகைகளின் (ஒரு கிலோ) விலை பட்டியல்…

ஹேவாகம தோட்ட மாணவர்களின் கல்விப் பிரச்சினைக்கு விரைவில் தீர்வு!

ஹேவாகம தோட்ட மாணவர்கள் எதிர்நோக்கும் கல்வி ரீதியிலான பிரச்சினைக்கு விரைவில் தீர்வைப் பெற்றுக்கொடுப்பதாக பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு வசதிகள் பிரதி அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப் தெரிவித்துள்ளார்.

பாதுக்கை ஹேவாகம தோட்ட ஸ்ரீ முத்துமாரியம்மன் தேவஸ்தான கும்பாபிஷேம் நேற்று (25) இடம்பெற்றது. அந் நிகழ்வில் கலந்துகொண்டதன் பின்னர் மக்கள் மத்தியில் உரையாற்றும்போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.

அவர் அங்கு மேலும் கருத்து வெளியிடுகையில்,

மலையக மக்கள் இலங்கையின் 14 மாவட்டங்களில் வாழ்கிறார்கள். அதில் கொழும்பு மாவட்டமும் உள்ளடங்குகிறது.

கொழும்பு எனும்போது அது தலைநகர் என்றும் அங்குள்ள மக்களுக்கு பிரச்சினைகள் கிடையாது என்றும் ஒரு தோற்றப்பாடு உண்டு. ஆயினும் இங்கு வசிக்கின்ற மலையக மக்கள் பல்வேறு சவால்களை எதிர்நோக்கிவருகிறார்கள்.

ஹேவாகம தோட்டம் கொழும்பு மாவட்டத்தைச் சேர்ந்தது. இங்கு பாடசாலைக் கல்வியை தொடர்வதில் மாணவர்கள் பல்வேறு சிக்கல்களை எதிர்நோக்கி வருவதாக மக்கள் என்னிடம் கூறினார்கள். அவ்வாறான கல்வி ரீதியிலான பிரச்சினைக்கு விரைவில் தீர்வு பெற்றுத் தரப்படும்.

மேல் மாகாண பாடசாலைகள் பற்றிய கூட்டம் பிரதமர் ஹரிணி அமரசூரிய தலைமையில் இடம்பெறவுள்ளது. அந்தக் கூட்டத்தில் ஹேவாகம தோட்ட மாணவர்களுக்குரிய கல்வி வசதிகளைப் பெற்றுக்கொடுப்பது தொடர்பில் ஆலோசனை நடத்தவுள்ளோம்.

அதேவேளை, இங்கு இயங்கிவந்த அறநெறிப்பாடசாலையை மீண்டும் இயக்குவதற்கான நடவடிக்கை எடுக்கப்படும். அதற்காக தோட்டத்தில் உள்ள கட்டடம் ஒன்றைப் பெற்றுத்தருவதற்கு நாம் அமைச்சு என்ற வகையில் நடவடிக்கை எடுப்போம்.

நாட்டில் போதைப்பொருளை கட்டுப்படுத்துவதற்கு அரசாங்கம் அர்ப்பணிப்புடன் செயற்பட்டு வருகிறது.

அறநெறிக் கல்வியை மேம்படுத்துவதன் ஊடாக மாணவர்கள் தவறான வழிசெல்வதிலிருந்து தவிர்த்துக்கொள்ள முடியும். ஆதலால் இங்கு அறநெறிப்பாடசாலையை மீள ஆரம்பிக்க தோட்ட நிர்வாகமும் ஒத்துழைக்க வேண்டும்.

மேலும், அரசாங்கத்தினால் கட்டப்படும் வீடுகளில் ஹேவாக தோட்டத்துக்கு மேலதிக வீடுகளைப் பெற்றுக்கொடுக்க நான் பரிந்துரை செய்யவுள்ளேன்.

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தலைமையிலான அரசாங்கம் பல்வேறு மக்கள் நலத் திட்டங்களை முன்னெடுத்து வருகிறது. நாம் விமர்சனங்களை ஏற்றுக்கொள்கிறோம். ஆயினும் விமர்சனம் செய்பவர்கள் அரசாங்கத்தின் நன்மை பயக்கும் திட்டங்கள் பற்றியும் பேச வேண்டும்.

‘எரிபொருள் தட்டுப்பாடு’ – ஆஸ்திரேலியாவில் தேசிய அமைச்சரவைக் கூட்டம்!

மத்திய கிழக்கு போர்ச்சூழலால் ஏற்பட்டுள்ள எரிபொருள் தட்டுப்பாடு மற்றும் விலை உயர்வை எதிர்கொள்ள ஆஸ்திரேலிய பிரதமர் அந்தோணி அல்பானீஸ் அவசர கால தேசிய அமைச்சரவைக் கூட்டத்துக்கு அழைப்பு விடுத்துள்ளார்.

சுமார் 470 எரிபொருள் நிலையங்கள் தட்டுப்பாட்டைச் சந்தித்துள்ள நிலையில், தேசிய அளவிலான ஒருங்கிணைந்த நடவடிக்கைகளை மேற்கொள்ள மாநிலத் தலைவர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

உலகளாவிய விநியோகச் சங்கிலி பாதிப்பால் பணவீக்கம் அதிகரிக்கும் என அஞ்சப்படுவதால், அரசாங்கம் தனது அவசரக்கால இருப்பிலிருந்து எரிபொருளை விடுவிப்பதோடு புதிய சரக்குக் கப்பல்களையும் ஏற்பாடு செய்துள்ளது.

நிலைமையைக் கட்டுப்படுத்த எரிபொருள் பங்கீடு மற்றும் வரிச் சலுகைகள் போன்ற பல்வேறு தீர்வுகளைத் தொழில்துறை அமைப்புகள் முன்மொழிந்துள்ளன.

பொதுமக்களிடையே ஏற்பட்டுள்ள பீதியைக் குறைக்கவும், அத்தியாவசியத் தேவைகளுக்கான விநியோகத்தைச் சீராக வைத்திருக்கவும் அரசாங்கம் தீவிர முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.

இந்த நெருக்கடி ஆஸ்திரேலியாவின் பொருளாதாரம் மற்றும் போக்குவரத்துத் துறையில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அமெரிக்காவின் போர் நிறுத்த முன்மொழிவை நிராகரித்தது ஈரான்!

மத்திய கிழக்கில் நிலவி வரும் போர்ச் சூழலைத் தணிக்க அமெரிக்கா முன்மொழிந்த 15 அம்சங்களை உள்ளடக்கிய தற்காலிக போர்நிறுத்த ஒப்பந்தத்தை ஈரான் நிராகரித்துள்ளது என தெரியவருகின்றது.

பாகிஸ்தான் வழியாகத் தெரிவிக்கப்பட்ட இந்தத் திட்டத்தை ஏற்க மறுத்த ஈரான், குவைத் விமான நிலையம் மற்றும் இஸ்ரேல் மீது தனது தாக்குதல்களைத் தீவிரப்படுத்தியுள்ளது.

இதற்குப் பதிலடியாக இஸ்ரேல் ஈரானின் தலைநகர் மீது வான்வழித் தாக்குதல்களை நடத்தியதுடன், அமெரிக்கா தனது கூடுதல் ராணுவப் படைகளை அப்பகுதிக்கு அனுப்பியுள்ளது.

ஈரானின் அணுசக்தி திட்டம் மற்றும் பொருளாதாரத் தடைகள் தொடர்பான தீர்வுகளை உள்ளடக்கிய இந்த அமெரிக்கத் திட்டத்தை விடுத்து, தங்கள் நிபந்தனைகள் நிறைவேறும் வரை போரைத் தொடரப் போவதாக ஈரான் அறிவித்துள்ளது.

இதன் காரணமாக உலக நாடுகளின் எரிசக்தி விநியோகப் பாதையான ஹார்முஸ் நீரிணைப் பகுதியில் பெரும் பதற்றம் ஏற்பட்டுள்ளது.

போர் ஆரம்பம் முதல் 15,000 மேற்பட்ட குண்டுகளை பயன்படுத்தியுள்ள இஸ்ரேல்!

ஈரான் மீது கடந்தபெப்ரவரி மாதம் முதல் இஸ்ரேல் மேற்கொண்டு வரும் போர் நடவடிக்கைகளில் 15,000-க்கும் அதிகமான குண்டுகள் வீசப்பட்டுள்ளதாக இஸ்ரேலிய பாதுகாப்பு அமைச்சர் தெரிவித்துள்ளார்.

இது கடந்த ஆண்டு நடைபெற்ற மோதல்களை விட நான்கு மடங்கு அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.

தற்போதைய சூழலில், ஈரான் மற்றும் லெபனான் ஆகிய நாடுகளில் உள்ள புதிய இலக்குகளைத் தாக்குவதற்கு இஸ்ரேலிய இராணுவம் முறையான ஒப்புதலைப் பெற்றுள்ளது.

இரு நாட்டு இராணுவத் தலைவர்களும் இணைந்து நடத்திய ஆலோசனையில் இந்தத் தீவிரத் தாக்குதல் குறித்த விவரங்கள் உறுதிப்படுத்தப்பட்டன.

இந்தத் தகவல்கள் பிராந்தியத்தில் நிலவும் கடுமையான போர்ச் சூழலை வெளிச்சம் போட்டுக் காட்டுகின்றன.

அதேவேளை, இஸ்ரேல்மீது ஈரானும் தீவிர தாக்குதல்களை நடத்திவருகின்றது.

போர் நிறுத்த முயற்சிக்கு மத்தியில் விசேட படைப்பிரிவை மத்திய கிழக்கில் அமெரிக்கா களமிறக்குவது ஏன்?

ஈரானுடன் சமரசப் பேச்சு நடக்கின்றது என டொனால்ட் ட்ரம்ப் கூறிவரும் நிலையில், அமெரிக்கா தனது வான் படையின் 82வது படைப்பரிவைச் சேர்ந்த சுமார் 1,000 வீரர்களை மத்திய கிழக்கு நாடுகளுக்கு அனுப்ப தயாராகிவருகின்றது.

மத்திய கிழக்கில் ஏற்கனவே ஆயிரக்கணக்கான கடற்படை வீரர்கள் அனுப்பப்பட்டுள்ள நிலையில், இந்த புதிய நகர்வு அமெரிக்காவின் ராணுவ இருப்பை மேலும் வலுப்படுத்துகிறது.

ஒருபுறம் அமைதிப் பேச்சுவார்த்தைகள் நடப்பதாக ட்ரம்ப் கூறினாலும், ஈரான் தரப்பு அதனைத் தொடர்ந்து மறுத்து வருகிறது.

முக்கியமான நிலப்பரப்புகளைக் கைப்பற்றும் திறன் கொண்ட இந்த சிறப்புப் படைப்பிரிவு, அவசரகால நடவடிக்கைகளுக்காக எந்நேரமும் களமிறங்கத் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது.

பென்டகன் அதிகாரிகள் இது குறித்த ரகசிய விளக்கங்களை நாடாளுமன்றக் குழுவிடம் வழங்க உள்ளனர்.

போர்ச் சூழலைத் தணிக்க ஒருபுறம் தூதரக முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டாலும், மறுபுறம் ராணுவ ரீதியாக அமெரிக்கா தனது தற்காப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியுள்ளது.

ஈரான் இரகசிய பேச்சுகளில் ஈடுபடவில்லை!

ஈரான் மற்றும் அமெரிக்காவுக்கு இடையில் எவ்வித நேரடி அல்லது மறைமுகப் பேச்சுவார்த்தைகளும் இடம்பெறவில்லை என்று பாகிஸ்தானுக்கான ஈரான் தூதுவர் Reza Amiri Moghadam இன்று (25) அறிவித்தார்.

ஈரானுடன் பேச்சு நடத்தப்பட்டுவருகின்றது என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ள நிலையிலேயே ஈரான் தூதவர் இவ்வாறு கூறியுள்ளார்.

தற்போதைய போர்ச் சூழலை முடிவுக்குக் கொண்டுவர நட்பு நாடுகள் சமரச முயற்சியில் ஈடுபட்டாலும், ஈரானிய அதிகாரிகள் அமெரிக்கத் தரப்புடன் நேரடியாகப் பேசவில்லை என்று அவர் விளக்கமளித்துள்ளார்.

ஈரான் மற்றும் அமெரிக்காவுக்கிடையிலான போரை முடிவுக்கு கொண்டுவருவதற்கு மத்தியஸ்தம் வகிப்பதற்கு தயார் என பாகிஸ்தான் அறிவித்திருந்தது.

இந்நிலையிலேயே பாகிஸ்தானில் உள்ள ஈரான் தூதுவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

அதேவேளை சமரச பேச்சுக்குரிய 15 அம்ச திட்டத்தை பாகிஸ்தானுக்கு அமெரிக்கா அனுப்பியுள்ளது என சில சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

திட்டமிட்டபடி பரீட்சைகளை நடத்த முடிவு!

அரச சேவையை சீரான முறையில் முன்னெடுத்துச் செல்வதற்காக நியமிக்கப்பட்ட அமைச்சரவை உபகுழுவின் இரண்டாவது கூட்டம், பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரியவின் தலைமையில் ஜனாதிபதி அலுவலகத்தில் நேற்று (24) பிற்பகல் நடைபெற்றது.

பொதுமக்களுக்கு அரசாங்கத்தின் சேவைகளைத் தடையின்றி வழங்குவது குறித்தும், அரச ஊழியர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளைத் தவிர்ப்பதற்கு எடுக்கப்பட வேண்டிய அவசர நடவடிக்கைகள் குறித்தும் இதன்போது விரிவாகக் கலந்துரையாடப்பட்டது.

அத்துடன் பொதுநிர்வாகம் , மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி, சுகாதாரம், கல்வி, நீதி ஆகிய அமைச்சுகளின் சேவைகளைத் தொடர்ச்சியாக முன்னெடுத்துச் செல்வது குறித்து இங்கு ஆலோசிக்கப்பட்டது. அதன்படி, திட்டமிட்டபடி பரீட்சைகளை நடத்துவதற்கும், வைத்தியசாலைகளுக்குத் தேவையான மருந்துகளைத் தடையின்றி வழங்குவதை உறுதி செய்வதற்கும் தீர்மானிக்கப்பட்டது.

பயணிகள் போக்குவரத்துச் சேவைகள் மற்றும் புகையிரத போக்குவரத்துக் கட்டமைப்பில் உள்ள சவால்கள் மற்றும் எதிர்கால நடவடிக்கைகள் குறித்தும் இங்கு விரிவாகக் கலந்துரையாடப்பட்டதுடன், அத்தியாவசியப் பொருட்களின் போக்குவரத்து தொடர்பாக எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் கவனம் செலுத்தப்பட்டது.

மேலதிகமாக, வீட்டிலிருந்து பணியாற்றும் முறைமையை மேம்படுத்துவதற்கும், தற்போதுள்ள சேவைகளை விரைவுபடுத்துவதற்காக டிஜிட்டல் சேவை அமைப்புகளை அறிமுகப்படுத்துவதற்கும் தீர்மானிக்கப்பட்டது. டிஜிட்டல் பொருளாதார அமைச்சின் கீழ் இந்த நடவடிக்கைகள் கண்காணிக்கவும் இதன் போது கவனம் செலுத்தப்பட்டது.

அனைத்து அமைச்சுகள் மற்றும் திணைக்களங்களின் தற்போதைய வலுசக்தி முகாமைத்துவ நடவடிக்கைகள் குறித்து ஆராய்ந்து, தேவையான கொள்கை மாற்றங்களை மேற்கொள்ளுமாறும் இதன்போது அறிவுறுத்தப்பட்டது.

பொதுநிர்வாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் ஏ.எச்.எம்.எம்.எச். அபேரத்ன, பிரதமரின் செயலாளர் பிரதீப் சபுதந்திரி, ஜனாதிபதியின் பணிக்குழாம் பிரதானி பிரபாத் சந்திரகீர்த்தி, பொதுநிர்வாக அமைச்சின் செயலாளர் எஸ். ஆலோக பண்டார, சுகாதார மற்றும் ஊடக அமைச்சின் செயலாளர் வைத்தியர் அனில் ஜாசிங்க, வலுசக்தி அமைச்சின் செயலாளர் பேராசிரியர் டி.எம். உதயங்க ஹேமபால, டிஜிட்டல் பொருளாதார அமைச்சின் செயலாளர் டி.ஆர்.டபிள்யூ.எஸ். தனபால, நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சின் செயலாளர் அயேஷா ஜினசேன, ஜனாதிபதியின் சிரேஷ்ட மேலதிக செயலாளர் ரோஷன் கமகே, இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் தலைவர் டி.ஜே.ஏ.எஸ்.எஸ். ராஜகருணா உள்ளிட்ட குழு உறுப்பினர்கள் இந்த சந்திப்பில் பங்கேற்றனர்.

மலையக அரசியல் அரங்கத்துடன் கூட்டிணைந்து செயற்பட மலையக ஊழியர் சங்கம் தீர்மானம்!

மலையக அரசியல் அரங்கம் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியாக பதிவு செய்யப்பட்டதை அடுத்து அதனோடு அரசியல் ரீதியாக கூட்டிணைந்து செயற்படுவதற்கு மலையக ஊழியர் சங்கம் தீர்மானித்துள்ளதாக மலையக அரசியல் அரங்கமும் மலையக ஊழியர் சங்கமும் இணைந்து வெளியிட்டுள்ள கூட்டு ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த ஞாயிறு [22/03] மலையக அரசியல் அரங்கத்தின் மத்திய குழு கூட்டம் ஹட்டனில் இடம் பெற்றது.

இதன்போது இடம் பெற்ற பேச்சுவார்த்தையில் இதற்கான தீர்மானம் எடுக்கப்பட்டதாக மலையக அரசியல் அரங்கத்தின் செயலாளர் நாயகம் மயில்வாகனம் திலகராஜா, மலையக ஊழியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் கண்மணி சிவனேசன் ஆகியோர் இந்த கூட்டறிக்கையை வெளியிட்டுள்ளனர்.

இந்த புரிந்துணர்வுடன் மலையக அரசியல் அரங்கத்தின் தலைவி அருளப்பட்ட முன்னிலையில் மலையக ஊழியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் கண்மணி சிவநேசனுக்கு மலையக அரசியல் அரங்கத்தின் ஊவா மாகாண அமைப்பாளர் பதவியும் சங்கத்தின் தலைவர் என். விஸ்வநாதன், அமைப்பாளர் எஸ். ராஜாராம், அமைப்பாளர் எஸ்.தியாகராஜா செயற்பாட்டாளர் அ. சுந்தரேசன் ஆகியோருக்கு அரங்கத்தின் மத்திய குழு உறுப்பினர் பொறுப்பும் வழங்கப்பட்டுள்ளது.

எதிர்வரும் காலங்களில் அரசியல், தொழிற்சங்க ரீதியாக இரண்டு அமைப்புகளும் புரிந்துணர்வுடன் செயற்பட உள்ளதாகவும் மலையகம் தழுவிய அரசியல் கூட்டணி ஒன்றுக்கான அத்திவாரமாக இந்தக் கூட்டிணைவைக் கொள்ள முடியும் எனவும் மலையக அரசியல் அரங்கத்தின் செயலாளர் நாயகமும் முன்னாள் நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான மயில்வாகனம் திலகராஜா தெரிவித்துள்ளார்.

சினிமா

“தனுஷின் நட்பை இழந்தது மிகப்பெரிய அவமானம்” – விக்னேஷ் சிவன் வருத்தம்

0
தனுஷ் உடனான நட்பை இழந்தது மிகப்பெரிய அவமானம் என்று விக்னேஷ் சிவன் பகிர்ந்துள்ளார். விக்னேஷ் சிவன் இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன் நடித்துள்ள ‘எல்.ஐ.கே’ திரைப்படம் ஏப்ரல் 10-ம் திகதி திரைக்கு வரவுள்ளது. நீண்ட பிரச்சினைகளுக்கு...

இந்​தி​யில் மீண்​டும் நயன்தாரா

0
கார்த்​தி, நாகார்​ஜுனா நடித்த ‘தோழா’, விஜய் நடித்த ‘வாரிசு’ படங்​களை இயக்​கிய​வர் தெலுங்கு இயக்​குநர் வம்சி பைடிபள்​ளி. இவர் அடுத்து இயக்​கும் இந்தி படத்​தில் சல்​மான் கான் நடிக்கிறார். இந்​தப் படத்தை ஸ்ரீ வெங்​கடேஸ்​வரா...

ரூ.50 கோடி வசூலை கடந்த ‘யூத்’

0
உலகளவில் ரூ.50 கோடி வசூலை கடந்து பெரும் சாதனையை படைத்திருக்கிறது ‘யூத்’ திரைப்படம். கென் கருணாஸ் இயக்கி நாயகனாக நடித்துள்ள படம் ‘யூத்’. மார்ச் 19-ம் திகதி வெளியான இப்படம் மக்களிடையே பெரும் வரவேற்பை...

செய்தி

ஏப்ரலில் 9 எரிபொருள் கப்பல்கள் வரும்: கட்டுப்பாடுகள் விரைவில் நீங்கும்

0
இலங்கைக்கு இம்மாதம் 9 எரிபொருள் கப்பல்கள் வரவுள்ளன என்று வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்தார். மாத்தறையில் நேற்று நடைபெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார். “மத்திய கிழக்கு போர் வெடித்ததைத் தொடர்ந்து ஏற்பட்ட...

மத்திய கிழக்குக்கு சிறப்பு தூதுவர்களை அனுப்பும் தென்கொரியா!

0
எரிசக்தி தேவைகளுக்காக வெளிநாடுகளை பெரிதும் நம்பியிருக்கும் தென் கொரியா, தமக்கான கச்சா எண்ணெய் விநியோகத்தை உறுதிப்படுத்த மத்திய கிழக்கு நாடுகளுக்கு சிறப்புத் தூதுவர்களை அனுப்பத் திட்டமிட்டுள்ளது. சவுதி அரேபியா, ஓமான் மற்றும் அல்ஜீரியா ஆகிய...

இஸ்ரேல், அமெரிக்க தாக்குதலில் ஈரானில் 6 சிறார்கள் பலி!

0
ஈரான் தெஹ்ரான் மாகாணத்தில் அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் படைகள் இணைந்து நடத்திய தாக்குதலில் பெரும் உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. இந்த வான்வழித் தாக்குதலில் பத்துக்கும் குறைவான வயதுடைய ஆறு சிறுவர்கள் கொல்லப்பட்டதாக Fars news நிறுவனம்...