Home Blog Page 16

கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்களை விரைவாக அழிக்க புதிய பொறிமுறை

கைப்பற்றப்பட்ட போதைப்பொருள் இருப்புக்களை விரைவாக அழிக்கும் பணிகளுக்கு நிலவும் சட்டச் சிக்கல்களை நீக்குவதற்குத் தேவையான சட்டத் திருத்தங்களை மேற்கொள்வதற்காக நியமிக்கப்பட்ட குழுவிற்கும் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவிற்கும் இடையிலான சந்திப்பொன்று நேற்று (24) பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்றது.

போதைப்பொருள் அச்சுறுத்தலை ஒழிப்பதற்காக அரசாங்கம் முன்னெடுத்து வரும் வேலைத்திட்டம் குறித்த சமூக நம்பிக்கையை உறுதிப்படுத்துவதில், கைப்பற்றப்படும் போதைப்பொருட்களை எவ்வளவு விரைவாக அழிக்க முடியுமோ அவ்வளவு விரைவாக அழிப்பதன் அவசியத்தை ஜனாதிபதி இங்கு சுட்டிக்காட்டினார். இதற்காக முறையான பொறிமுறையொன்றை உடனடியாகத் தயாரிக்க வேண்டும் என்றும் ஜனாதிபதி வலியுறுத்தினார்.

இந்தச் செயல்முறையைத் துரிதப்படுத்துவதற்கான சட்டத் திருத்த வரைவு ஏற்கனவே தயாரிக்கப்பட்டுள்ளது. அந்த வரைவில் குறிப்பிடப்பட்டுள்ள ஏற்பாடுகளின்படி, கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்களை அழிப்பதற்கு எடுக்கும் காலத்தை மேலும் குறைப்பதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து இதன்போது விரிவாக ஆராயப்பட்டது.

இச்செயல்முறையின் போது நீதிமன்றம், பொலிஸ் மற்றும் அரச பகுப்பாய்வுத் திணைக்களம் எதிர்கொள்ளும் நடைமுறைச் சிக்கல்கள் குறித்தும் விரிவாகக் கலந்துரையாடப்பட்டது. இதன்போது, வழக்குகளை முன்னெடுக்கும் போது சட்டமா அதிபர் திணைக்களம் எதிர்கொள்ளும் சிக்கல்கள் குறித்து பிரதி சொலிசிட்டர் ஜெனரல் சுஹர்ஷி ஹேரத் ஜயவீர விளக்கமளித்தார்.

கடத்தல்காரர்கள் தப்பிச் செல்வதற்கும், வழக்குத் தடயப் பொருட்கள் மீண்டும் சமூகத்திற்குள் செல்வதற்குமான அனைத்து வழிகளையும் அடைக்கும் வகையில் இந்தச் சட்டத் திருத்தங்களைக் கொண்டுவர வேண்டியதன் அவசியம் இங்கு வலியுறுத்தப்பட்டது.

கைப்பற்றப்படும் போதைப்பொருட்கள் தொடர்பான நீதிமன்றச் செயல்முறைகளின் தற்போதைய நிலை மற்றும் அங்கு எழுந்துள்ள சிக்கல்களைத் தீர்ப்பதற்காக பொலிஸாரின் தலையீட்டுடன் தற்போது எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்து பொலிஸ் மா அதிபர் பிரியந்த வீரசூரிய விளக்கமளித்தார்.

அத்துடன், இச்செயல்முறையைத் துரிதப்படுத்துவதற்காக அரச பகுப்பாய்வுத் திணைக்களத்தின் வசதிகளை மேம்படுத்துவது குறித்தும் இதன்போது ஆலோசிக்கப்பட்டது.

கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்களை விரைவாக அழிப்பதற்கான சட்டத் தடைகளை நீக்குவது தொடர்பான முன்மொழியப்பட்ட சட்டமூலத்தை, திருத்தங்களுடன் விரைவில் அமைச்சரவையில் சமர்ப்பிக்கவும் இதன்போது இணக்கம் காணப்பட்டது.

மரக்கறி விலைப்பட்டியல் (25.03.2026)

நுவரெலியா பொருளாதார மத்திய நிலையத்தால் இன்று (25) வெளியிடப்பட்டுள்ள மரக்கறி வகைகளின் (ஒரு கிலோ) விலை பட்டியல்…

போரில் வென்றுவிட்டோம்: ட்ரம்ப் கொக்கரிப்பு!

ஈரானுக்கு எதிரான போரில் அமெரிக்காவும் இஸ்ரேலும் வெற்றி பெற்றுள்ளதாக ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் Donald Trump அறிவித்துள்ளார்.

ஈரானியத் தலைவர்கள் கொல்லப்பட்டுள்ளனர் எனவும், அந்நாடு அணு ஆயுதங்களை உருவாக்காது என உறுதியளிக்கப்பட்டுள்ளது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

எனினும், அமெரிக்காவுடன் பேச்சு நடத்துவதை மறுத்துள்ள ஈரான், தங்களுக்கு அணு ஆயுதக் கொள்கை ஏதும் இல்லை எனத் தெரிவித்துள்ளது.

அதேபோல போர் நிறுத்தம் தொடர்பில் ஈரான் தரப்பில் இருந்து எதுவும் அறிவிக்கப்படவில்லை.

பிரதமர் மோடி, ஜனாதிபதி அநுர பேச்சு!

மத்திய கிழக்கில் நிலவி வரும் யுத்தச் சூழல் குறித்து ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க, இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியுடன் நேற்று (24) மாலை தொலைபேசி ஊடாகக் கலந்துரையாடினார்.

வளர்ந்து வரும் இந்த நிலைமைகள் பிராந்திய மற்றும் உலகளாவிய விநியோக வலையமைப்புகளில் ஏற்படுத்தும் பாதகமான தாக்கங்கள் குறித்து இரு நாட்டுத் தலைவர்களும் இங்கு மிகுந்த கவனம் செலுத்தியதுடன், இரு நாடுகளுக்கும் இடையிலான வலுசக்தி ஒத்துழைப்பு மற்றும் பிராந்திய பாதுகாப்பு குறித்தும் கலந்துரையாடப்பட்டது.

வடக்கு ஆளுநரைச் சந்தித்தார் ஐ.நா. பிரதிநிதி

இலங்கைக்கான ஐக்கிய நாடுகள் சபையின் வதிவிட ஒருங்கிணைப்பாளர் மார்க்-அண்ட்ரூ பிரஞ்ச் மற்றும் வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் ஆகியோருக்கிடையிலான விசேட உயர்மட்டக் கலந்துரையாடல் இடம்பெற்றுள்ளது.

ஆளுநர் செயலகத்தில் இன்று செவ்வாய்க்கிழமை காலை (24.03.2026) இச்சந்திப்பு நடைபெற்றது.

இக்கலந்துரையாடலின் ஆரம்பத்தில் ஆளுநரால் மாகாணத்தின் தற்போதைய நிலைமைகள் மற்றும் முன்னுரிமைத் தேவைகள் குறித்த விடயங்கள் முன்வைக்கப்பட்டன.

பொருளாதார அபிவிருத்தி, காணிப் பிரச்சினைகள், சுற்றாடல் மற்றும் காலநிலை மாற்றம், மீள்திறன் கொண்ட வாழ்வாதாரம் ஆகிய நான்கு பிரதான விடயங்களின் அடிப்படையில் ஆளுநர் தனது கருத்துக்களைப் பகிர்ந்துகொண்டார்.

முக்கியமாகக் காணிப் பிரச்சினைகள் தொடர்பில் சுட்டிக்காட்டிய ஆளுநர், கடந்த காலப் போர்ச் சூழல் காரணமாகப் பலரது காணி ஆவணங்கள் முற்றாக அழிவடைந்துள்ளன.

தற்போது மக்களிடமும் காணி ஆவணங்கள் இல்லை, அரச திணைக்களங்களிடமும் அதற்கான பதிவுகள் இல்லை. இதனால் தமது காணிகளுக்கான உரித்துகளை உறுதிப்படுத்த முடியாமல் மக்கள் சிக்கல்களை எதிர்கொண்டுள்ளனர்.

இப் பிரச்சினைகளுக்குத் தீர்வு கோரி மக்கள் தொடர்ச்சியாகப் பிரதேச செயலகங்கள், மாவட்டச் செயலகங்கள் மற்றும் ஆளுநர் செயலகத்துக்கும் அதிகளவில் வருகை தருகின்றனர்.

எனவே, அவர்களின் காணிப் பிணக்குகளைத் துரிதமாகத் தீர்த்து, உரிய காணி உரித்துகளை வழங்க வேண்டியது எமது மிக முக்கிய தேவையாகும். இதற்காக அரசாங்கம் ஏற்கனவே ‘ஹிமிகம’ (உரிமை) திட்டத்தையும் ஆரம்பித்துள்ளது,’ எனத் தெரிவித்தார்.

இதனைத் தொடர்ந்து உரையாற்றிய ஐ.நா. வதிவிட ஒருங்கிணைப்பாளர், வடக்கு மாகாணத்தின் தனித்துவமான உணர்திறன்களையும் சவால்களையும் ஆளுநர் மிகவும் நுட்பமாகக் கையாளுவதைப் பாராட்டினார்.

மலையக தமிழர்கள் குறித்து அவதூறு கருத்து: அர்ச்சுனாவுக்கு எதிராக சி.ஐ.டியில் முறைப்பாடு!

மலையகத் தமிழர்களை இழிவுபடுத்தும் வகையில் கருத்து வெளியிட்ட நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா ராமநாதனுக்கு எதிராக குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் இன்று (24) முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

அவரின் கருத்து தொடர்பில் விசாரணை நடத்தி சட்ட நடவடிக்கை எடுக்குமாறுகோரி மலையக சிவில் அமைப்பு பிரதிநிதிகளால் ICCPR சட்டம் (2007, இல. 56) கீழ் இந்த முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.

அர்ச்சுனா ராமநாதன் வெளியிட்ட பொதுக் கருத்துக்கள் மலையகத் தமிழர் சமூகத்தை இழிவுபடுத்தும் வகையிலும், பிரதேச வாதத்தையும் சமூக அமைதியையும் சீர்குலைக்கும் விதத்திலும், வெறுப்புப் பேச்சாகவும் அமைந்துள்ளதாக முறைப்பாட்டில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

ஜீவரத்தினம் சுரேஷ் (iPEN அமைப்பு ), அந்தனி ஜெசுதாசன் (VOPP அமைப்பு), செல்வராஜா ராஜசேகர் (மாற்றம்அமைப்பு ),
அழகர் செல்வராஜா (சுய சக்தி நிறுவனம்), மற்றும் கே. யோகா சுஜி போன்ற சமூக செயற்பாட்டாளர்களும் இணைந்து முறைப்பாட்டை முன்வைத்துள்ளனர்.

செய்தி .K.சுரேஸ்குமார்

நுவரெலியாவில் வேகப்பந்து வீச்சாளர்கள் தேர்வு!

இலங்கை கிரிக்கெட் சபையின் ஆலோசனைக்கு அமைவாக, நுவரெலியா கிரிக்கெட் சங்கமும் மத்திய மாகாண கிரிக்கெட் சங்கமும் இணைந்து ஏற்பாடு செய்த மாவட்ட மட்ட வேகப்பந்து வீச்சாளர்களைத் தேர்வு செய்யும் நடவடிக்கை இன்று (24.03.2026) நுவரெலியா மாநகர சபையின் பொது மைதானத்தில் காலை 11.00 மணிக்கு நடைபெற்றது.

இந்தத் தேர்வில் மொத்தம் 280 வீரர்கள் கலந்து கொண்டது குறிப்பிடத்தக்க விடயமாகும். வயது அடிப்படையில் 13, 15, 17, 19 மற்றும் 25 வயதிற்குட்பட்டோர் என பல்வேறு பிரிவுகளில் தேர்வுகள் நடத்தப்பட்டன.

மேலும், பயிற்சியாளர்களுக்கான தேர்வும் இதனுடன் இணைந்து நடைபெற்றது என்பது குறிப்பிடத்தக்கது. இத்தேர்வுகளின் மூலம் தெரிவு செய்யப்படும் வீரர்களுக்கு மாவட்ட மட்டத்தில் பயிற்சிகள் வழங்கப்பட்டு, அதன் பின்னர் திறமையை வெளிப்படுத்தும் வீரர்கள் எதிர்காலத்தில் தேசிய அணிக்குத் தேர்வு செய்யப்படும் வாய்ப்பு பெறுவார்கள்.

இந்நிகழ்வு இரண்டு நாட்கள் கொண்டதாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. முதல் நாள் நேற்று நுவரெலியாவின் நோவுட் மைதானத்தில் நடைபெற்றதுடன், இரண்டாம் நாள் இன்றைய தினம் மாநகர சபை பொது மைதானத்தில் சிறப்பாக நடைபெற்றது.

இந்த நிகழ்வு, எதிர்கால இலங்கை கிரிக்கெட்டிற்கான திறமையான வேகப்பந்து வீச்சாளர்களை கண்டறியும் ஆரம்ப கட்டமாக பார்க்கப்படுகிறது.

– கஜரூபன் திவ்யா

இலங்கைக்கான நிதி ஒதுக்கீட்டை அதிகரித்தது ஆசிய அபிவிருத்தி வங்கி!

ஆசிய அபிவிருத்தி வங்கியினால் இந்த ஆண்டிற்காக இலங்கைக்கு அங்கீகரிக்கப்பட்டிருந்த 380 மில்லியன் அமெரிக்க டொலர் நிதியை 480 மில்லியன் டொலர் வரை அதிகரிப்பதற்கும், நிலவும் சூழ்நிலையைக் கருத்திற்கொண்டு அதில் 200 மில்லியன் டொலர்களை உடனடியாக இலங்கைக்கு வழங்குவதற்கும் ஆசிய அபிவிருத்தி வங்கி இணக்கம் தெரிவித்துள்ளது.

இலங்கைக்கு வருகை தந்துள்ள ஆசிய அபிவிருத்தி வங்கியின் தலைவர் மசாட்டோ கண்டா (Masato Kanda) உள்ளிட்ட பிரதிநிதிகள் குழுவினர், இன்று (24) பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவை சந்தித்த போதே இவ்விடயம் தெரிவிக்கப்பட்டது.

இலங்கையின் எதிர்கால அபிவிருத்தி இலக்குகளை அடைவதற்கு ஆசிய அபிவிருத்தி வங்கி எவ்வாறு ஒத்துழைக்க முடியும் என்பது குறித்து இச்சந்திப்பில் விரிவாகக் கலந்துரையாடப்பட்டது.

அத்துடன், ‘டித்வா’ அனர்த்த நிலைக்குப் பின்னர் நாட்டை மீண்டும் கட்டியெழுப்பும் அரசாங்கத்தின் வேலைத்திட்டத்திற்கு ஆசிய அபிவிருத்தி வங்கியின் ஆதரவை எதிர்பார்ப்பதாக ஜனாதிபதி தெரிவித்தார்.

பேரிடருக்குப் பிந்தைய நிலைமை மற்றும் தற்போதைய மத்திய கிழக்கு போர்ச் சூழலுக்கு மத்தியிலும் பொருளாதார ஸ்திரத்தன்மையைப் பேணுவதற்காக அரசாங்கம் முன்னெடுத்து வரும் வேலைத்திட்டங்களுக்கு ஆசிய அபிவிருத்தி வங்கித் தலைவர் இதன்போது பாராட்டுத் தெரிவித்தார்.

மேலும், ‘டித்வா’ சூறாவளியினால் சேதமடைந்த உட்கட்டமைப்பு வசதிகளைச் சீரமைக்கத் தேவையான எந்தவொரு உதவியையும் வழங்கத் தயாராக இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.

‘டித்வா’ சூறாவளி அனர்த்த நிலைமையின் போது ஆசிய அபிவிருத்தி வங்கி இதுவரை வழங்கிய உதவிகளையும், இலங்கையுடன் பேணிவரும் விரிவான அபிவிருத்தி ஒத்துழைப்பையும் பாராட்டிய ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க, இலங்கையின் பொருளாதாரத்தை ஸ்திரமாகப் பேணி பொருளாதார அபிவிருத்தியை எட்டுவதே தற்போதைய அரசாங்கத்தின் எதிர்பார்ப்பு எனத் தெரிவித்தார்.

‘டித்வா’ சூறாவளியினால் ஏற்பட்ட சேதங்களை நேரில் கண்டு கொள்ள தமக்கு வாய்ப்புக் கிடைத்ததாக இதன்போது குறிப்பிட்ட ஆசிய அபிவிருத்தி வங்கியின் தலைவர்,
மத்திய மலைநாட்டின் நீர் கட்டமைப்புகளைப் பாதுகாத்து, மீண்டும் இத்தகையதொரு நிலைமை ஏற்படாதிருக்கத் தேவையான திட்டங்களுக்கு ஒத்துழைப்பு வழங்கத் தயாராக இருப்பதாகவும் மேலும் குறிப்பிட்டார்.

ஆசிய அபிவிருத்தி வங்கியின் சார்பில் அதன் தெற்காசிய பிராந்திய திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் சோனா சிரேஸ்தா (Sona Shrestha), தலைவர் அலுவலகத்தின் பிரதம ஆலோசகர் கெயிச்சிரோ இனுய் (Keiichiro Inui), தலைவர் அலுவலகத்தின் சிரேஷ்ட ஆலோசகர் மனிஷா பிரதானாங்கா (Manisha Pradhananga) உள்ளிட்ட சிரேஷ்ட அதிகாரிகள் இந்த சந்திப்பில் கலந்துகொண்டனர்.

இலங்கை அரசாங்கத்தின் சார்பில் தொழில் அமைச்சரும் பொருளாதார அபிவிருத்தி பிரதி அமைச்சருமான அனில் ஜயந்த பெர்னாண்டோ, ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்க, நிதி அமைச்சின் செயலாளர் கலாநிதி ஹர்ஷன சூரியப்பெரும உள்ளிட்ட அதிகாரிகள் கலந்துகொண்டனர்.

‘உரக் கையிருப்பு குறித்து ஜனாதிபதி பிறப்பித்துள்ள உத்தரவு’

 

நாட்டினதும் மக்களினதும் உணவுப் பாதுகாப்பிற்கு அரசாங்கம் அதிக முக்கியத்துவத்தை அளித்துள்ளதாகவும், அதற்கமைய, சிறு போகத்தில் விவசாயிகளுக்குத் தேவையான உரங்களை எவ்விதத் தடையுமின்றி வழங்குவதை உறுதிசெய்யும் வகையில், சந்தையில் போதுமான உரக் கையிருப்புகளைப் பேணுவதற்கு விவசாய அமைச்சு மற்றும் தனியார் நிறுவனங்கள் இணைந்து வேலைத்திட்டமொன்றைத் தயாரிக்குமாறு ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க அறிவுறுத்தினார்.

விவசாய அமைச்சின் அதிகாரிகள் மற்றும் உர இறக்குமதி நிறுவனங்களின் பிரதம நிறைவேற்று அதிகாரிகளுடன் இன்று (24) முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்ற கலந்துரையாடலின் போதே ஜனாதிபதி இந்த அறிவுறுத்தல்களை வழங்கினார்.

மத்திய கிழக்கில் நிலவும் போர்ச் சூழல் காரணமாக விநியோகச் சங்கிலிகளுக்கு ஏற்பட்டுள்ள தடைகளுக்கு மத்தியில், இம்முறை சிறு போகத்தில் நெற்செய்கை மற்றும் ஏனைய பயிர்களுக்குத் தேவையான உரங்களைச் சந்தையில் போதுமான அளவு கையிருப்பில் வைத்திருப்பதற்கும், அதற்காக எடுக்கப்பட வேண்டிய அவசர நடவடிக்கைகள் குறித்தும் இதன்போது விரிவாகக் கலந்துரையாடப்பட்டது.

2026 சிறு போகத்தில் 5.5 இலட்சம் ஹெக்டெயார் நிலப்பரப்பில் நெற்பயிர்ச் செய்கையை மேற்கொள்ளத் திட்டமிடப்பட்டுள்ளது. நெற்செய்கைக்கு 83,000 மெட்ரிக் தொன் யூரியாவும், ஏனைய பயிர்களுக்கு 42,000 மெட்ரிக் தொன் யூரியாவும் என மொத்தம் 125,000 மெட்ரிக் தொன் யூரியா தேவை என மதிப்பிடப்பட்டுள்ளது.

சிறு போகம் ஆரம்பிக்கப்பட்ட மார்ச் 1ஆம் திகதி நிலவரப்படி நிறுவனங்களிடம் 95,000 மெட்ரிக் தொன் யூரியாவும் விநியோகஸ்தர்களிடம் 7 000 மெட்ரிக் தொன் யூரியாவும் என மொத்தமாக 102 000 மெட்ரிக் தொன் கையிருப்பில் இருந்தது. எனினும், கடந்த இரு வாரங்களில் மட்டும் 27,000 மெட்ரிக் தொன் உரம் விநியோகம் செய்யப்பட்டுள்ளது. இதனால் மார்ச் 17ஆம் திகதி நிலவரப்படி நிறுவனங்களிடம் 68,000 மெட்ரிக் தொன் யூரியா மட்டுமே கையிருப்பில் உள்ளதாக இதன் போது சுட்டிக்காட்டப்பட்டது.

கடந்த மார்ச் மாதத்துடன் ஒப்பிடுகையில் இந்த மார்ச் மாதத்தில் சுமார்11 00 மெட்ரிக் தொன் யூரியா விநியோகிக்கப்பட இருந்தாலும் உரத் தட்டுப்பாடு ஏற்படும் என்ற கருத்தின் காரணமாக உரம் சேமித்து வைக்கப்பட்டதால் 27 000 மெட்ரிக் தொன் விற்பனை செய்யப்பட்டுள்ளது.

மேலும் 77,000 மெட்ரிக் தொன் யூரியா கொள்வனவு செய்வதற்கு முன்பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் அதில் 37 000 மெட்ரிக் தொன் மத்திய கிழக்கு நாடுகளிலிருந்து வர வேண்டியிருந்ததால் அது தொடர்பில் நிச்சயமற்ற தன்மை நிலவினாலும், எஞ்சிய 40 000 மெட்ரிக் தொன்னில் 21,000 மெட்ரிக் தொன் உரம் மார்ச் மாத இறுதியில் அல்லது ஏப்ரல் தொடக்கத்தில் இலங்கைக்கு வரவுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டது.

தேவையான எஞ்சிய உரங்களை இறக்குமதி செய்வதற்கான திட்டங்கள் மற்றும் அடுத்த 03 மாதங்களுக்குப் போதுமான உரக் கையிருப்புகளை முறையான முகாமைத்துவத்துடன் பேணுவது குறித்து விரிவாகக் கலந்துரையாடப்பட்டது. இதன்போது உர நிறுவனங்களிடமிருந்து பெற்றுக்கொள்ளக்கூடிய பங்களிப்பு குறித்தும் ஜனாதிபதி ஆராய்ந்தார்.

விவசாயத்திற்குத் தேவையான உரங்களைத் தடையின்றி வழங்குவது உணவுப் பாதுகாப்பிற்கு அவசியமானது எனச் சுட்டிக்காட்டிய ஜனாதிபதி, நெல் மற்றும் மரக்கறிகள் போன்ற குறுகிய காலப் பயிர்களுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தினார்.

கடந்த காலங்களில் நிறுவனங்களுக்குச் சேர வேண்டிய நிலுவைப் பணம் முறையாகக் கிடைக்காததால் ஏற்பட்டுள்ள சிக்கல்கள் குறித்து உர நிறுவனப் பிரதிநிதிகள் ஜனாதிபதியிடம் முறையிட்டனர். அந்த நிலுவைகளை துரிதமாக செலுத்தத் தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு ஜனாதிபதி அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

அடுத்த 3 மாதங்களுக்குத் தேவையான உரக் கையிருப்புகளைச் சந்தையில் பேணுவதற்கு விவசாய அமைச்சிற்கு முழுமையான ஒத்துழைப்பை வழங்க உர நிறுவனங்கள் ஜனாதிபதியிடம் இணக்கம் தெரிவித்தன.

மேலும், எதிர்காலத்தில் இத்தகைய நெருக்கடி நிலைமைகளை எதிர்கொள்ளும் வகையில் திட்டங்களைத் தயாரிப்பதற்கும், அதில் அரசாங்கம், உர நிறுவனங்கள் மற்றும் விவசாயிகள் ஆகிய முத்தரப்பினரும் சில அர்ப்பணிப்புகளைச் செய்ய வேண்டியதன் அவசியத்தையும் ஜனாதிபதி வலியுறுத்தினார்.அதற்காக உர நிறுவனங்கள் வழங்கும் ஒத்துழைப்பிற்கு ஜனாதிபதி பாராட்டுத் தெரிவித்தார்.

பாதுகாப்பு உரக் கையிருப்புகளைப் பேணுவதற்கு கொழும்பு நகரை அண்மித்த களஞ்சிய வசதிகளை மேம்படுத்துதல் மற்றும் உர இறக்குமதிக்கான கடன் வசதிகளை வழங்குதல் போன்ற உணவு பாதுகாப்பு குழுவின் கடந்த கூட்டத்தில் முன்வைக்கப்பட்ட முன்மொழிவுகள் குறித்தும் இதன்போது கவனம் செலுத்தப்பட்டது.

விவசாய, கால்நடை, காணி மற்றும் நீர்ப்பாசன அமைச்சர் கே.டி. லால் காந்த மற்றும் விவசாய, கால்நடை, காணி மற்றும் நீர்ப்பாசன அமைச்சின் செயலாளர் டீ.பீ. விக்ரமசிங்க, பெருந்தோட்ட அமைச்சின் செயலாளர் குணதாச சமரசிங்க, இலங்கை தேயிலை சபையின் தலைவர் ஆர்கே. ஒபேசேகர, சிறு தேயிலை தோட்ட அபிவிருத்தி அதிகார சபையின் தலைவர் நிமல் உடவத்த உள்ளிட்ட அதிகாரிகள் விவசாய அமைச்சின் அதிகாரிகள். உர நிறுவனங்களின் பிரதம நிறைவேற்று அதிகாரிகள் உள்ளிட்ட பிரதிநிதிகள் இந்தக் கலந்துரையாடலில் பங்கேற்றனர்.

போரை காட்டி நிலக்கரி மோசடியை மறைக்க முடியாது: சஜித்!

எரிபொருள் விலை ஏற்றத்தால் மக்களுக்கு எண்ணற்ற அழுத்தமும் அமைதியின்மையும் உருவாகி வாழ்க்கை சிக்கலுக்கு ஆளாகி காணப்படுகின்றன. மக்கள் பன்முக நெருக்கடிக்கு முகம் கொடுத்துள்ளனர். மக்கள் சமூகம் கஷ்டப்பட்டு வாழும் இந்த தருணத்தில் நாட்டில் நடப்பவை குறித்து மக்கள் விழிப்புடன் இருக்க வேண்டும் என்று எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.

அநுர Fail மக்களை தெளிவூட்டும் கருத்தமர்வு தொடரில் நேற்று (23) மாலை பொரல்லை மேகசின் வீதி விழா மண்டபத்தில் நடைபெற்ற நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச இவ்வாறு தெரிவித்தார்.

மின் கட்டணத்தை மூன்றில் ஒரு பகுதியாக குறைத்து, 9000 மின் கட்டணத்தை 6000 ஆக 33% ஆல் குறைப்பேன் என கூறியதால் தான் அநுர குமார திசாநாயக்க ஜனாதிபதி தேர்தலில் வெற்றியையும் பாராளுமன்றத்தில் பெரும்பான்மை ஆசனங்களையும் பெற்றார். இப்போது 33% குறைப்பது ஒருபுறமிருக்க மின் கட்டணத்தை அதிகரிப்பதற்கான முயற்சிகள் தற்சமயம் நடந்து வருகின்றது என்று எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

துறைமுகத்தில் இறக்கும் விலைக்கு எரிபொருட்களைத் தருவதாக கூறிய அநுர குமார திசாநாயக்க ஜனாதிபதி இப்போது எண்ணெய் மீது வரி மீது வரி சுமத்தி நான்கு வகையான வரிகளை விதித்துள்ளார்.

எதிர்க்கட்சியாக ஐக்கிய மக்கள் சக்தி பொய் கூறி வாக்கு பெற விரும்பாததால் பொய் சொல்லவில்லை என்பதால் மக்கள் எமக்கு வாக்களிக்கவில்லை. ஆனால் துறைமுகத்தில் இறக்கும் விலைக்கு எண்ணெய் உட்பட எரிபொருட்களைப் பெற்றுத் தருவதாக பொய்க்கு மேல் பொய் கூறிய தற்போதைய அரசுக்கு மக்கள் வாக்களித்தனர்.

அவர்களை ஆட்சியில் அமர்த்தினர். தற்சமயம் மக்களே பன்முக நெருக்கடிக்கு முகம் கொடுத்துள்ளனர் என்று எதிர்க்கட்சி தலைவர் தெரிவித்தார்.

இப்போதாவது துறைமுகத்தில் இறக்கும் விலைக்கு எரிபொருட்களை வழங்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும். மத்திய கிழக்கு யுத்தத்தை எம்மால் கட்டுப்படுத்த முடியாவிட்டாலும், எண்ணெய் விலையை கட்டுப்படுத்த எம்மால் நடவடிக்கை எடுக்க முடியும்.

இறக்குமதி செய்யப்பட்ட எண்ணைய்க்கு ஏன் VAT மற்றும் ஏனைய வரிகளை விதிக்கிறீர்கள் என்று கேள்வி எழுப்புகிறோம். இப்போதாவது தேர்தல் காலத்தில் கூறியதை செயலுருப்படுத்துங்கள். களத்தில் யதார்த்தமாக்க நடவடிக்கை எடுங்கள். எண்ணெய் விலை உயர்வால் பாதிக்கப்பட்டிருக்கும் மக்களுக்கு ஆறுதலைப் பெற்றுக் கொடுக்க நடவடிக்கை எடுங்கள் என்று எதிர்க்கட்சித் தலைவர் மேலும் தெரிவித்தார்.

விலை சூத்திரத்தை ஏற்கோம் என்று கூறிய தற்போதைய ஆளும் தரப்பினர் தற்சமயம் அதே விலை சூத்திரத்தை பயன்படுத்தி வருகின்றனர். உலகில் எண்ணெய் விலை குறைந்தாலும் நமது நாட்டில் எண்ணெய் விலை குறையாது. விலை சூத்திரம் ஊழல் நிறைந்தது என்று கூறிய திசைகாட்டி அரசே இப்போது அந்த விலை சூத்திரத்தின் அடிமையாகி காணப்படுகின்றன.

வரி மற்றும் கமிஷனை நீக்கி சமூக நீதியை நிலை நாட்டுவதாக எதிர்க்கட்சியில் இருந்த சமயம் முழங்கியவர்கள், ஆட்சியைப் பெற்ற பின்னர் அனைத்தையும் மறந்துவிட்டனர் என்று எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

மின்சார சபையை தனியார்மயமாக்கி நாசமாக்கியுள்ளனர். 23,000 மின்சார சபை ஊழியர்களை வீதியில் இறக்கிவிட்டு அரசியல் அதிகாரத்தைப் பெற்று அரசியல் பதவிகளுக்கு வந்த பிற்பாடு இந்த ஊழியர்களை மறந்துவிட்டு செயற்பட்டுக் கொண்டிருக்கின்றனர். தமது தேவைக்காகவே இவர்களும் இந்த ஊழியர்களை பயன்படுத்திக் கொண்டனர் என்று எதிர்க்கட்சி தலைவர் தெரிவித்தார்.

மக்கள் இப்போதாவது தங்களுக்காக உண்மையாகவே சேவை செய்வது யார் என்ற விடயத்தில் விழிப்புடன் இருக்க வேண்டும். மக்களை ஏமாற்றுபவர்கள் யார் என்று தெரிந்துகொள்ள வேண்டும். இந்தளவு மட்டத்தில் பொய் சொன்ன அரசாங்கமொன்று இலங்கை வரலாற்றிலேயே இதற்கு முன்னர் இருந்ததில்லை என்று எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

தற்போது அரசாங்கம் தரமற்ற நிலக்கரியை இறக்குமதி செய்து நுரச்சோலை நிலையத்தை செயலற்றதாக்கி, இந்த ஊழல் நடவடிக்கையை யுத்தத்தை கவசமாக பயன்படுத்தி மூடி மறைக்க முயற்சித்து வருகின்றது. இந்த தரமற்ற நிலக்கரியால் நுரச்சோலை நிலையத்தின் மின் உற்பத்தி மட்டம் குறைந்துள்ளது.

வரலாற்றில் எந்த நாளிலும் நிகழாத வகையில் குறிப்பிட்ட மின் உற்பத்தியை செய்ய இந்த நிலையத்தால் முடியாத நிலை ஏற்பட்டுள்ளன என்று பொது பயன்பாட்டு ஆணைக்குழு சுட்டிக்காட்டியுள்ளது. இந்த போக்கில் தொடர்ந்தால் எதிர்வரும் மாதங்களில் நிலையம் பராமரிப்பு காரணமாக மின் வெட்டுக்கு செல்ல நேரிடும் என்று எதிர்க்கட்சி தலைவர் தெரிவித்தார்.

குறிப்பிட்ட மெகாவாட் அளவு உற்பத்தி ஆகாமையினால் எரிசக்தி நிலையங்கள் மூலம் அதிக செலவில் மின்சாரம் பெற நேரிடும். இதன் செலவை மின் நுகர்வோர்கள் தான் சுமக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. எரிசக்தி தட்டுப்பாடு ஏற்பட்டு பொருளாதாரம் சுருங்கும் அபாயம் எழுந்துள்ளது. இதனால் குடும்ப வருமானம் குறைந்து சேமிப்பு, முதலீடு, நுகர்வு குறைந்து வறுமை அதிகரிக்கும் நிலை நம்முன்னால் காணப்படுகின்றது என்று எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

ஊழல்காரர்களை பிடிப்பதாக கூறிய அரசு இப்போது தரமற்ற நிலக்கரியை இறக்குமதி செய்து கடுமையான ஊழல் மோசடியை செய்துள்ளது. எண்ணெய் விலையை குறைக்க முடியாத இந்த அரசுக்கு குறைந்தது நாட்டில் வறுமை பற்றியதான தரவுகள் கூட இல்லை. நாட்டில் தற்சமயம் மூன்றில் ஒரு பங்கினர் வறியவராக மாறியுள்ள தருணத்தில் இதை பாராளுமன்றத்தில் கேள்வி கேட்கும்போது அரசுக்கு பதில் இல்லை என்றும் எதிர்க்கட்சி தலைவர் தெரிவித்தார்.

சினிமா

இந்​தி​யில் மீண்​டும் நயன்தாரா

0
கார்த்​தி, நாகார்​ஜுனா நடித்த ‘தோழா’, விஜய் நடித்த ‘வாரிசு’ படங்​களை இயக்​கிய​வர் தெலுங்கு இயக்​குநர் வம்சி பைடிபள்​ளி. இவர் அடுத்து இயக்​கும் இந்தி படத்​தில் சல்​மான் கான் நடிக்கிறார். இந்​தப் படத்தை ஸ்ரீ வெங்​கடேஸ்​வரா...

ரூ.50 கோடி வசூலை கடந்த ‘யூத்’

0
உலகளவில் ரூ.50 கோடி வசூலை கடந்து பெரும் சாதனையை படைத்திருக்கிறது ‘யூத்’ திரைப்படம். கென் கருணாஸ் இயக்கி நாயகனாக நடித்துள்ள படம் ‘யூத்’. மார்ச் 19-ம் திகதி வெளியான இப்படம் மக்களிடையே பெரும் வரவேற்பை...

ஜூலையில் ரிலீஸ் ஆகிறது ‘ஜனநாயகன்’?

0
தவெக தலை​வரும், நடிகரு​மான விஜய்​யின் ‘ஜன​நாயகன்’ படத்தில் மத நல்​லிணக்​கத்​துக்கு ஊறு விளைவிக்​கும் காட்​சிகள் இருப்​ப​தாகக் ​கூறி, படத்தை மறு ஆய்​வுக்கு அனுப்பி மத்​திய தணிக்கை வாரி​யம் உத்​தர​விட்​டது. இதை எதிர்த்து படக்​குழு...

செய்தி

சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு ஹாட்​ரிக் தோல்வி

0
ஐபிஎல் தொடரில் நேற்று பெங்களூரு​வில் உள்ள சின்​ன​சாமி மைதானத்​தில் நடை​பெற்ற ஆட்​டத்​தில் நடப்பு சாம்​பிய​னான ராயல் சாலஞ்​சர்ஸ் பெங்களூரு (ஆர்சிபி), 5 முறை சாம்​பிய​னான சிஎஸ்​கேவுடன் மோதியது. டாஸ் வென்ற சிஎஸ்கே கேப்​டன்...

மரக்கறி விலைப்பட்டியல் (06.04.2026)

0
நுவரெலியா பொருளாதார மத்திய நிலையத்தால் இன்று (06) வெளியிடப்பட்டுள்ள மரக்கறி வகைகளின் (ஒரு கிலோ) விலை பட்டியல்...

விஜித ஹேரதஅடுத்த மாதம் ரஷ்யா பயணம்

0
இலங்கை வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் அடுத்த மாதம் ரஷ்யாவுக்குப் பயணம் மேற்கொள்ளவுள்ளார் என இராஜதந்திர வட்டாரங்களில் இருந்து அறியமுடிகின்றது. எரிபொருள், நிலக்கரி மற்றும் உரம் ஆகியவற்றைப் பெற்றுக்கொள்வது குறித்து பேச்சு நடத்துவதற்காகவே அவர்...