Home Blog Page 17

யாழ்.கட்டளைத் தளபதி – வடக்கு ஆளுநர் சந்திப்பு!

யாழ்ப்பாண மாவட்ட பாதுகாப்புப் படைகளின் கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் கே.ரி.பீ.டி.சில்வா மற்றும் வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் ஆகியோருக்கு இடையிலான விசேட சந்திப்பொன்று நேற்று திங்கட்கிழமை (23.03.2026) மாலை பலாலியில் அமைந்துள்ள பாதுகாப்புப் படைத் தலைமையகத்தில் நடைபெற்றது.

இக்கலந்துரையாடலின்போது, யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சி மாவட்டங்களில் பாதுகாப்புத் தரப்பினரின் கட்டுப்பாட்டிலிருந்த காணிகள் பொதுமக்களின் பாவனைக்காகக் கட்டம்கட்டமாக விடுவிக்கப்பட்டமைக்காக ஆளுநர், தனது நன்றிகளைத் தெரிவித்துக்கொண்டார்.

அத்துடன், தொடர்ந்தும் விடுவிக்கப்படாதுள்ள ஏனைய காணிகளை விடுவிப்பதற்கான சாத்தியக்கூறுகள் குறித்தும் கட்டளைத் தளபதியுடன் விரிவாக ஆராய்ந்தார்.

மேலும், வடக்கு மாகாணப் பாடசாலை மாணவர்களிடையே தேசிய மாணவர் படையணியின் செயற்பாடுகளை ஊக்குவிப்பது தொடர்பில், ஆளுநரின் தலைமையில் மாகாணக் கல்விச் சமூகத்தினருடன் அண்மையில் முன்னெடுக்கப்பட்ட கலந்துரையாடல் குறித்து யாழ். மாவட்ட கட்டளைத் தளபதி தனது பாராட்டுக்களைத் தெரிவித்தார்.

தேசிய மாணவர் படையணியில் மாணவர்கள் இணைந்துகொள்வதன் ஊடாக, அவர்களிடையே சிறந்த நற்பழக்கவழக்கங்கள், ஒழுக்கம் மற்றும் ஆளுமைமிக்க தலைமைத்துவப் பண்புகள் என்பன சிறுவயதிலிருந்தே வளர்க்கப்படும் எனவும் அவர் இதன்போது சுட்டிக்காட்டினார்.

இந்த விசேட சந்திப்பில், யாழ். பாதுகாப்புப் படைத் தலைமையகத்தின் சிவில் விவகாரங்களுக்கான பிரதம ஒருங்கிணைப்பாளர் கேணல் டபிள்யூ.எம்.ஏ.எம்.நிஸ்ஸங்க, வடக்கு மாகாண ஆளுநரின் செயலாளர் எஸ்.சத்தியசீலன் மற்றும் ஆளுநரின் ஊடகச் செயலாளர் கு.டிலீப்அமுதன் ஆகியோரும் கலந்துகொண்டனர்.

நம்பிக்கையில்லாப் பிரேரணைமீது 10 ஆம் திகதி விவாதம்!

பாராளுமன்றம் ஏப்ரல் 7, 8 மற்றும் 9ஆம் திகதிகளில் கூடவிருப்பதாக பாராளுமன்ற செயலாளர் நாயகம் குஷானி ரோஹணதீர தெரிவித்தார்.

சபாநாயகர் (வைத்தியர்) ஜகத் விக்கிரமரத்ன தலைமையில் 2026.03.19ஆம் திகதி நடைபெற்ற பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய குழுக் கூட்டத்தில் இது தொடர்பான தீர்மானம் எடுக்கப்பட்டது.

பாராளுமன்றம் கூடும் இத்தினங்களில் மு.ப 9.30 மணி முதல் மு.ப 10.00 மணிவரை நிலையியற் கட்டளை 22 இல் குறிப்பிடப்பட்டுள்ள 1 முதல் 6 வரையான பாராளுமன்ற அலுவல்களுக்கு நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து மு.ப 10.00 மணி முதல் மு.ப 11.00 மணிவரை வாய்மூல விடைக்கான கேள்விகளுக்காகவும், மு.ப 11.00 மணி முதல் மு.ப 11.30 மணிவரையான நேரம் நிலையியற் கட்டளை 27(2)ன் கீழான கேள்விக்காக ஒதுக்கப்பட்டுள்ளது.

இதற்கு அமைய 2026 ஏப்ரல் 7ஆம் திகதி செவ்வாய்க்கிழமை மு.ப 11.30 மணி முதல் பி.ப 4.45 மணிவரை விளையாட்டில் பதார்த்தப் பயன்பாட்டிற்கெதிரான சமவாயச் சட்டத்தின் கீழ் ஒழுங்குவிதிகள், செயல்நுணுக்க அபிவிருத்திக் கருத்திட்டங்கள் சட்டத்தின் கீழ் ஒழுங்குவிதிகள் மற்றும் இலங்கை மத்திய வங்கிச் சட்டத்தின் கீழான ஒழுங்குவிதிகள் விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளன.

அத்துடன், 2026.03.17ஆம் திகதி பாராளுமன்றத்தில் முதலாவது வாசிப்புக்காக சமர்ப்பிக்கப்பட்ட உண்ணாட்டரசிறை (திருத்தச்) சட்டமூலம் மற்றும் சமூகப் பாதுகாப்பு உதவுதொகை சட்டமூலத்திற்கு அரசியலமைப்பின் உறுப்புரை 121 இன் பிரகாரம் உயர்நீதிமன்றத்தில் சவாலுக்குட்படுத்தப்படாவிட்டால் அன்றையதினம் விவாதத்திற்கு எடுக்கவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இதனைத் தொடர்ந்து பி.ப 4.45 மணி முதல் பி.ப 5.00 மணிவரை பாராளுமன்ற நிலையியற் கட்டளைகளைத் திருத்தங்கள் விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்பட்டு அங்கீகரிக்கப்படும். அத்துடன், பி.ப 5.30 மணிக்கு இலங்கை கடற்றொழில் கூட்டுத்தாபனத்தின் வருடாந்த அறிக்கை விவாதம் இன்றி அனுமதிக்கப்படும்.

ஏப்ரல் 8ஆம் திகதி புதன்கிழமை அரசாங்க விடுமுறை தினம் என்பதால் அன்று பாராளுமன்றம் கூடாது.

2026 ஏப்ரல் 9ஆம் திகதி வியாழக்கிழமை மு.ப 11.30 மணி முதல் பி.ப 2.00 மணிவரை (357ஆம் அத்தியாயம்) தரைப்படைச் சட்டத்தின் கீழான ஒழுங்குவிதி, (358ஆம் அத்தியாயமான) கடற்படைச் சட்டத்தின் கீழான ஒழுங்குவிதி, (359ஆம் அத்தியாயமான) வான்படைச் சட்டத்தின் கீழான ஒழுங்குவிதிகள் என்பன விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளன.

அத்துடன், பொதுமக்கள் பாதுகாப்புக் கட்டளைச் சட்டத்தின் கீழ் ஜனாதிபதியின் தீர்மானம் வெளியிடப்பட்டால் குறித்த விடயம் அன்றையதினம் விவாதம் இன்றி அங்கீகரிக்கப்படும்.

இதன் பின்னர் பி.ப 2.00 மணி முதல் பி.ப 5.30 மணி வரை 2019 ஏப்ரல் 21 அன்று இடம்பெற்ற உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான சபை ஒத்திவைப்பு பிரேரணை மீதான விவாதத்திற்கு நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது.

2026 ஏப்ரல் 10ஆம் திகதி வெள்ளிக்கிழமை மு.ப 11.30 மணி முதல் பி.ப 5.30 மணிவரை வலுசக்தி அமைச்சர்   குமார ஜயக்கொடிக்கு  எதிராக முன்வைக்கப்பட்டுள்ள நம்பிக்கையில்லா தீர்மானத்தை விவாதத்திற்கு எடுத்துக் கொள்வதற்கும் இங்கு தீர்மானிக்கப்பட்டது.

இலங்கை வருகிறது ரஷ்யாவின் உயர்மட்ட தூதுக்குழு!

ரஷ்யாவின் பிரதி எரிசக்தி அமைச்சர் ரோமன் மார்ஷவின் தலைமையிலான ரஷ்ய தூதுக்குழு, இலங்கைக்குப் பயணம் மேற்கொள்ளவுள்ளது.

மார்ச் 26 ஆம் நாள் முதல் 28 ஆம் நாள் வரை இந்தக் குழு இலங்கைக்கு பயணம் மேற்கொள்ளவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளதது.

மேற்காசியாவில் நிலவும் மோதல்களுக்கு மத்தியில், எரிபொருளைப் பெற்றுக் கொள்வதற்கான இலங்கை அரசாங்கம் மேற்கொண்டுள்ள முயற்சிகளின் பின்னணியில் ரஷ்ய குழுவின் இந்தப் பயணம் இடம்பெறவுள்ளது.

மேற்காசிய மோதல்களை அடுத்து, அனைத்துலகச் சந்தையில் ஒரு பீப்பாய் எண்ணெய் விலை 100 அமெரிக்க டொலருக்கும் மேல் உயர்ந்துள்ள நிலையில், கியூஆர் குறியீடு (QR code) மூலம் எரிபொருளை மட்டுப்படுத்தி விநியோகிக்கும் முறையை இலங்கை அரசாங்கம் மீண்டும் நடைமுறைப்படுத்தியுள்ளது.

ரஷ்ய எண்ணெய் மீதான விற்பனைத் தடைகளை அமெரிக்கா தளர்த்திய பின்னர், ரஷ்யாவிலிருந்து எரிசக்தி விநியோகத்தைப் பெறுவதற்கான சாத்தியங்கள் குறித்து வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத், கொழும்பில் உள்ள ரஷ்யத் தூதுவர் எல். ஜகரியனைச் சந்தித்துப் பேச்சு நடத்தியிருந்தார்.

ட்ரம்பின் போர் நிறுத்த யோசனை: இஸ்ரேல் கூறுவது என்ன?

“ஈரானுடனான புதிய உடன்படிக்கை மூலம் போரின் நோக்கங்களை அடைவதற்கும், பிராந்தியத்தில் தமது முக்கிய நலன்களைப் பாதுகாக்கவும் வாய்ப்புள்ளதாக டிரம்ப் கருதுகின்றார்.”

இவ்வாறு இஸ்ரேல் பிரதமர் தெரிவித்தார்.

ஈரான்மீதான தாக்குதல்கள் ஐந்து நாட்களுக்கு நிறுத்தப்படும் என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் நேற்று அறிவித்தார்.

தமது நாட்டுடன் ஈரான் பேச்சு நடத்திவருகின்றது எனவும் அவர் கூறினார்.

எனினும், ஈரான் மற்றும் லெபனான் மீது இஸ்ரேலிய ராணுவம் தொடர்ந்து கடுமையான தாக்குதல்களை நடத்தி வருகின்றது.

குறிப்பாக ஈரானின் அணுசக்தித் திட்டத்தை சிதைத்து வருவதாக இஸ்ரேல் பிரதமர் தெரிவித்துள்ளார்.

அதேவேளை, அமெரிக்காவுடன் தாம் பேச்சு நடத்தவில்லை என ஈரான் தெரிவித்துள்ளது.

எண்ணெய் சந்தையைக் கையாளவே இத்தகைய போலி செய்திகள் பரப்பப்படுவதாக ஈரான் சுட்டிக்காட்டியுள்ளது.

மரக்கறி விலைப்பட்டியல் (24.03.2026)

மரக்கறி விலைப்பட்டியல் (24.03.2026)

நுவரெலியா பொருளாதார மத்திய நிலையத்தால் இன்று (24) வெளியிடப்பட்டுள்ள மரக்கறி வகைகளின் (ஒரு கிலோ) விலை பட்டியல்…

கிண்ணம் யாருக்கு? நாளை தீர்க்கமான போட்டி!

நியூசிலாந்து மற்றும் தென்னாபிரிக்கா அணிகளுக்கிடையிலான T20 தொடரில் வெற்றிவாகை எந்த அணிக்கு என்பதை தீர்மானிக்கும் இறுதி போட்டி நாளை (25) நடைபெறவுள்ளது.

தென்னாபிரிக்கா அணி நியூஸிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து 5 T20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகின்றது.

3 போட்டிகள் முடிந்த நிலையில் நியூஸிலாந்து அணி 2-1 என்ற கணக்கில் முன்னிலையில் இருந்தது.

இந்நிலையில் நேற்று முன்தினம் 4-வது T20 போட்டி வெலிங்டனில் நடைபெற்றது.

இதில் முதலில் துடுப்பெடுத்தாடிய தென்னாபிரிக்கா அணி 20 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை இழந்து 164 ஓட்டங்களைப் பெற்றது.

இதையடுத்து 165 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்கை நோக்கி களமிறங்கிய நியூஸிலாந்து அணி 18.5 ஓவர்களில் 145 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுகளையும் இழந்து.

இதன் அடிப்படையில் தென்னாபிரிக்கா அணி 19 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இதனால் டி20 தொடர் தற்போது 2-2 என்ற கணக்கில் சமநிலையில் உள்ளது.

இவ்விரு அணிகளுக்கு இடையிலான 5-வது மற்றும் கடைசி T20 போட்டி நாளை 25-ம் திகதி கிறைஸ்ட்சர்ச் மைதானத்தில் நடைபெறவுள்ளது.

‘போர்ச் சூழல்’ – இலங்கை, இந்திய வெளிவிவகார அமைச்சர்கள் ஆராய்வு!

மேற்காசிய மோதலின் பின்விளைவுகள் குறித்து இந்திய வெளியுறவு அமைச்சர் எஸ். ஜெய்சங்கர், வெளிவிவகார அமைச்சர் விஜித `ஹேரத்துடன் கலந்துரையாடியுள்ளார்.

தொலைபேசி மூலம் நடத்தப்பட்ட இந்த உரையாடல் குறித்து, இந்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.

“இலங்கை வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத்துடன் ஒரு நல்ல உரையாடல் நடைபெற்றது.

மேற்காசிய மோதலின் பின்விளைவுகள் குறித்து கலந்துரையாடினோம்.

அண்டை நாடுகளுக்கு முன்னுரிமை கொள்கை மற்றும் மகாசாகர் தொலைநோக்குப் பார்வை முயற்சியில் இந்தியா உறுதியுடன் இருக்கிறது“ என்று அந்தப் பதிவில் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.

வலுசக்தி பாதுகாப்பை உறுதிப்படுத்த அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்குமாறு ஜனாதிபதி அறிவுறுத்தல்!

 

நாட்டின் நாளாந்த வலுசக்தி நுகர்வு அதிகமுள்ள மாலை 6 மணி முதல் இரவு 10 மணி வரையிலான காலப்பகுதியில், வலுசக்தியை மிகச்சிறந்த முகாமைத்துவத்துடன் பயன்படுத்துவது குறித்து மக்களுக்குத் தெளிவுபடுத்தி, அவர்களின் பங்களிப்புடன் நாட்டின் வலுசக்தி பாதுகாப்பை உறுதிப்படுத்தத் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்குமாறு ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.

மத்திய கிழக்கில் நிலவும் போர்ச் சூழல் காரணமாக உலக நாடுகள் அனைத்தும் எதிர்நோக்கியுள்ள வலுசக்தி விநியோகத்திலான சவால்களுக்கு மத்தியில், வலுசக்தியைச் சரியான முகாமைத்துவத்துடன் பயன்படுத்தி நாடு எதிர்கொண்டுள்ள சவால்களை வெற்றிகொள்ள அதிகபட்ச பங்களிப்பை வழங்குவது, நிறுவன ரீதியாகவும் தனிநபர் ரீதியாகவும் தற்போது அனைவர் மீதும் சுமத்தப்பட்டுள்ள பொறுப்பாகும் என ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.

வலுசக்தி பாதுகாப்பைப் பேணுவதற்காக தொடர்ச்சியாக எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து ஆராயும் பொருட்டு இன்று (23) முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்ற கலந்துரையாடலில் கலந்துகொண்டபோதே ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க மேற்கண்டவாறு தெரிவித்தார்.

கடந்த சில வாரங்களாக வலுசக்தி முகாமைத்துவம் தொடர்பாக அரசாங்கத்தினால் எடுக்கப்பட்ட நடவடிக்கைகளை மேலும் நடைமுறைச் சாத்தியமான நிலைக்குக் கொண்டு வருவது குறித்தும், குறிப்பாக அரச சேவைக்கு வழங்கப்பட வேண்டிய வழிகாட்டல்கள் குறித்தும் இதன்போது அவதானம் செலுத்தப்பட்டது.

அதேபோல், உள்ளூராட்சி மன்ற மட்டத்தில் வலுசக்தி நுகர்வை முறையான முகாமைத்துவத்திற்கு உட்படுத்துவதற்கு எடுக்கக்கூடிய நடவடிக்கைகள் குறித்து அந்தந்த நிறுவனங்களுடன் கலந்துரையாடுமாறும் ஜனாதிபதி அறிவுறுத்தினார்.

விளம்பரங்களுக்காகப் பயன்படுத்தப்படும் மின்சாரப் பெயர்ப்பலகைகள் மற்றும் ஏனைய அலங்கார மின் கட்டமைப்புகளுக்கு அதிகளவிலான மின்சாரம் செலவிடப்படுவதாகவும், அதனைக் மட்டுப்படுத்துவதன் மூலம் நாட்டின் மின்சார நுகர்வில் குறிப்பிடத்தக்க அளவைச் சேமிக்க முடியும் என்றும் இதன்போது குறிப்பிடப்பட்டது.

நகர்ப்புறங்களில் அவசியமற்ற வீதி விளக்குகளின் பயன்பாட்டைக் குறைத்தல் மற்றும் வலுசக்தி முகாமைத்துவத்திற்காக போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சினால் முன்வைக்கப்பட்ட யோசனைகள் குறித்தும் இதன்போது கலந்துரையாடப்பட்டது. அது தொடர்பாகப் பின்பற்றக்கூடிய மாற்று வழிமுறைகள் குறித்து சம்பந்தப்பட்ட அனைத்துத் தரப்பினரும் இணைந்து கலந்துரையாடி, விரைவான நடவடிக்கைகளை எடுக்க வேண்டியதன் அவசியத்தை ஜனாதிபதி மேலும் சுட்டிக்காட்டினார்.

வலுசக்தி அமைச்சர் குமார ஜயகொடி, பொது நிர்வாகம், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் சந்தன அபேரத்ன, ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்க, பொது நிர்வாகம், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் செயலாளர் ஆலோக பண்டார, போக்குவரத்து நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அதிபிவிருத்தி அமைச்சின் செயலாளர் சிரேஷ்ட பேராசிரியர் கபில சி.கே. பெரேரா, ஜனாதிபதி பணிக்குழாம் பிரதானி பிரபாத் சந்திரகீர்த்தி, வீதி அபிவிருத்தி அதிகார சபையின் தலைவர் டி. பாஸ்கரன் உள்ளிட்ட அரச அதிகாரிகள் பலரும் இந்த கலந்துரையாடலில் பங்கேற்றனர்.

ஜனாதிபதி ஊடகப் பிரிவு
2026-03-23

பஸ் கட்டணங்கள் அதிகரிப்பு!

நாட்டில் இன்று (23) நள்ளிரவு முதல் அமுலுக்குவரும் வகையில் பேருந்து கட்டணங்கள் அதிகரிக்கப்படவுள்ளது.

பேருந்து கட்டணங்களை 12.19 சதவீதம் உயர்த்த அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.

அமைச்சரவைப் பேச்சாளரும், அமைச்சருமான நளிந்த ஜயதிஸ்ஸ மேற்படி தகவலை வெளியிட்டுள்ளார்.

குறைந்தபட்ச பஸ் கட்டணம் ரூ. 27 இலிருந்து ரூ. 30 ஆக அதிகரிக்கப்படவுள்ளது.

மத்திய கிழக்கில் நிலவும் போர்ச்சூழலால் எரிபொருள் விலை அதிகரிக்கப்பட்டுள்ளது. இந்நிலையிலேயே பேருந்து கட்டணங்களும் அதிகரிக்கப்பட்டுள்ளது.

 

ட்ரம்பின் கூற்றை நிராகரித்தது ஈரான்!

அமெரிக்க ஜனாதிபதி கூறுவதுபோல இரு நாடுகளுக்கும் இடையில் எவ்விதமான கலந்துரையாடலும் இடம்பெறவில்லை என்று ஈரான் தெரிவித்துள்ளது.

போரின் மூலம் தான் அடைய நினைக்கும் இலக்குகளை எட்டும் வரை அமெரிக்காவுடன் பேச்சு நடத்தப்போவதில்லை என்பதில் ஈரான் உறுதியாக உள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே ஆக்கபூர்வமான பேச்சுகள் நடைபெறுவதால் ஈரான் மீதான தாக்குதலை 5 நாட்களுக்கு நிறுத்தி வைப்பதாக டொனால்ட் ட்ரம்ப் இன்று அறிவித்தார்.

இந்நிலையிலேயே ஈரான் வெளிவிவகார அமைச்சு மேற்கண்டவாறு தெரிவித்துள்ளது என சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

சினிமா

இந்​தி​யில் மீண்​டும் நயன்தாரா

0
கார்த்​தி, நாகார்​ஜுனா நடித்த ‘தோழா’, விஜய் நடித்த ‘வாரிசு’ படங்​களை இயக்​கிய​வர் தெலுங்கு இயக்​குநர் வம்சி பைடிபள்​ளி. இவர் அடுத்து இயக்​கும் இந்தி படத்​தில் சல்​மான் கான் நடிக்கிறார். இந்​தப் படத்தை ஸ்ரீ வெங்​கடேஸ்​வரா...

ரூ.50 கோடி வசூலை கடந்த ‘யூத்’

0
உலகளவில் ரூ.50 கோடி வசூலை கடந்து பெரும் சாதனையை படைத்திருக்கிறது ‘யூத்’ திரைப்படம். கென் கருணாஸ் இயக்கி நாயகனாக நடித்துள்ள படம் ‘யூத்’. மார்ச் 19-ம் திகதி வெளியான இப்படம் மக்களிடையே பெரும் வரவேற்பை...

ஜூலையில் ரிலீஸ் ஆகிறது ‘ஜனநாயகன்’?

0
தவெக தலை​வரும், நடிகரு​மான விஜய்​யின் ‘ஜன​நாயகன்’ படத்தில் மத நல்​லிணக்​கத்​துக்கு ஊறு விளைவிக்​கும் காட்​சிகள் இருப்​ப​தாகக் ​கூறி, படத்தை மறு ஆய்​வுக்கு அனுப்பி மத்​திய தணிக்கை வாரி​யம் உத்​தர​விட்​டது. இதை எதிர்த்து படக்​குழு...

செய்தி

வாழ்க்கைச்சுமை அதிகரிப்பு: எரிவாயு விலையும் எகிறியது!!

0
இலங்கையில் நேற்று (06) நள்ளிரவு முதல் அமுலாகும் வகையில் சமையல் எரிவாயு விலைகள் அதிகரிக்கப்பட்டுள்ளன. இதற்கமைய லிற்றோ மற்றும் லாப்ஸ் LAUGFS கேஸ் நிறுவனங்கள் புதிய விலை பட்டியலை வெளியிட்டுள்ளன. இதற்கமைய 12.5 கிலோ எடையுடைய...

ஈரான் வான்வெளியில் அமெரிக்க ஆதிக்கம்!

0
அமெரிக்க போர் விமானம் ஈரானால் சுட்டு வீழ்த்தப்பட்டபோது காணாமல் போயிருந்த விமானி, பரபரப்பான துப்பாக்கிச் சண்டைக்குப் பிறகு பாதுகாப்பாக மீட்கப்பட்டதாக டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்தார். ஈரான் வான் பரப்​பில் பறந்த அமெரிக்க விமானப் படை​யின்...

‘’தேசிய QR கொடுப்பனவு ஊக்குவிப்புத் திட்டம்” நாளை ஆரம்பம்!

0
- நாளை முதல் நடைமுறைக்கு வரும் வகையில், 5,000 ரூபாய் வரையிலான அனைத்து LankaQR கொடுக்கல் வாங்கல்களுக்காகவும் வர்த்தகர்களிடமிருந்து அறவிடப்படும் சேவைக்கட்டணம் முழுமையாக நீக்கம். இலங்கையின் டிஜிட்டல் பொருளாதாரத்தில் ஒரு புதிய மைல்கல்லைக் குறிக்கும்...