Home Blog Page 18

ஈரான்மீதான தாக்குதல் 5 நாட்களுக்கு நிறுத்தம்: ட்ரம்ப் உத்தரவு!

அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே ஆக்கபூர்வமான பேச்சுகள் நடைபெறுவதால் ஈரான் மீதான தாக்குதலை 5 நாட்களுக்கு நிறுத்தி வைப்பதாக டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

அமெரிக்காவும் இஸ்ரேலும் இணைந்து கடந்த பெப்ரவரி 28ஆம் திகதி ஈரான் மீது ராணுவ நடவடிக்கையை தொடங்கின. இதையடுத்து, ஈரானும் பதில் தாக்குதல்களை நடத்தி வருகிறது.

மேலும், ஹார்முஸ் நீரிணையை ஈரான் முடக்கியுள்ளதால், அந்த பாதையில் கப்பல் போக்குவரத்து கட்டுப்படுத்தப்பட்டுள்ளது.

இதனால், சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் உள்ளிட்ட எரிபொருள் கிடைப்பதில் சிரமம் ஏற்பட்டுள்ளதால் அவற்றின் விலை உயர்ந்து வருகிறது.

இந்நிலையில், அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தனது ட்ரூத் சமூக ஊடக பதிவில்,

‘‘அமெரிக்காவுக்கும் ஈரானுக்கும் இடையே, மத்திய கிழக்குப் பிராந்தியத்தில் நிலவும் விரோதப் போக்குகளுக்கு ஒரு முழுமையான மற்றும் நிரந்தரமான தீர்வு காண்பது குறித்து, கடந்த இரண்டு நாட்களாக மிகச் சிறந்த மற்றும் ஆக்கபூர்வமான பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருவதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறேன்.

ஆழமான, விரிவான மற்றும் ஆக்கபூர்வமான இந்த பேச்சுகள் இந்த வாரம் முழுவதும் தொடர இருக்கிறது.

இந்த முயற்சி வெற்றி பெற வேண்டும் என்பதற்காக, ஈரானிய மின் நிலையங்கள் மற்றும் எரிசக்தி உள்கட்டமைப்புகள் மீது மேற்கொள்ள இருந்த அனைத்து ராணுவத் தாக்குதல்களையும் ஐந்து நாட்களுக்கு ஒத்திவைக்குமாறு போர் துறைக்கு நான் உத்தரவிட்டுள்ளேன்’’ என தெரிவித்துள்ளார்.

ட்ரம்ப்பின் இந்த அறிவிப்பால் சர்வதேச சந்தையில் இன்று (திங்கள்கிழமை) எண்ணெய் விலை 10 சதவீதத்துக்கு மேல் சரிந்துள்ளது.

 

ஹார்முஸ் நீரிணை விவகாரம்: ஈரான் விடுத்துள்ள அறிவிப்பு!

ஹார்முஸ் நீரிணை வழியாகச் செல்லும் நட்பு நாடுகள் தமது நாட்டுடன் முறையான ஒருங்கிணைப்பை மேற்கொள்ள வேண்டும் என்று ஈரான் பாதுகாப்பு கவுன்சில் அறிவித்துள்ளது.

அத்துடன், எதிரி நாடுகளால் ஈரானிய கடற்கரைகள் அல்லது தீவுகள் மீது ஏதேனும் தாக்குதல் நடத்தப்பட்டால், பாரசீக வளைகுடா பகுதி முழுவதும் முடக்கப்படும் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

அவ்வாறானதொரு நிலை ஏற்பட்டால் அனைத்து கடல்சார் போக்குவரத்து வழிகளும் துண்டிக்கப்பட்டு, பிராந்தியம் முழுவதும் போக்குவரத்து முடக்கம் ஏற்படும் அபாயம் உள்ளது என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இத்தகைய மோதல் சூழலுக்கு ஆக்கிரமிப்பு செய்யும் நாடுகளே முழுப் பொறுப்பேற்க வேண்டும் என்றும் ஈரான் குறிப்பிட்டுள்ளது.

தனது கடல்சார் எல்லைகளைப் பாதுகாக்க ஈரான் எத்தகைய கடுமையான பாதுகாப்பு நடவடிக்கைகளையும் எடுக்கத் தயாராக இருக்கின்றது என்பதை அந்நாட்டின் பாதுகாப்பு கவுன்சில் வெளிப்படுத்தியுள்ளது.

ஐ.பி.எல். தொடரில் இணைந்தார் தசுன் ஷானக்க!

இலங்கை கிரிக்கெட் அணி வீரர் தசுன் ஷானக்க 2026 ஐ.பி.எஸ். IPL தொடருக்காக ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் இணையவுள்ளார்.

காயம் காரணமாக விலகிய சாம் கரனுக்கு பதிலாகவே இவர் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.

இதற்காக தற்போதைய பாகிஸ்தான் சூப்பர் லீக் தொடரில் இருந்து தசுன் ஷானக்க விலகியுள்ளார்.

இதனால் அவருக்கு பதிலீடாக லாகூர் காலண்டர்ஸ் அணி டேனியல் சாம்ஸை இணைத்துள்ளது.

உலகக்கிண்ண தொடரின்போது அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்திய தசுன் ஷானக்க, தற்போது வலுவான வெளிநாட்டு வீரர்களைக் கொண்டுள்ள ராஜஸ்தான் அணியில் இணைவது அவ்வணிக்கு பலமாக அமைந்துள்ளது.

எரிசக்தி பாதுகாப்பு குறித்து ஆஸ்திரேலியா, சிங்கப்பூர் இணக்கப்பாடு!

ஆஸ்திரேலியா மற்றும் சிங்கப்பூர் ஆகிய இரு நாடுகளும் தங்களின் எரிசக்தி பாதுகாப்பை உறுதிப்படுத்தும் நோக்கில் ஒரு முக்கிய ஒப்பந்தத்தை மேற்கொண்டுள்ளன.

மத்திய கிழக்கில் நிலவும் பதற்றமான சூழலால் எண்ணெய் மற்றும் எரிவாயு விநியோகத்தில் பாதிப்பு ஏற்படக்கூடும் என்ற அச்சத்தில், இரு நாடுகளும் தங்களுக்குள் தடையற்ற வர்த்தகத்தை தொடர உறுதிபூண்டுள்ளன.

இந்த உடன்படிக்கையின்படி, பெட்ரோலியப் பொருட்கள் மற்றும் திரவ இயற்கை எரிவாயு போன்ற அத்தியாவசியத் தேவைகள் எவ்விதத் தடையுமின்றி பகிர்ந்துகொள்ளப்படும்.

மேலும், விநியோகச் சங்கிலியில் ஏதேனும் சிக்கல்கள் ஏற்பட்டால், அதுகுறித்து பரஸ்பரம் ஆலோசித்து திறந்த சந்தை கொள்கையைப் பின்பற்றுவதாக இரு பிரதமர்களும் தெரிவித்துள்ளனர்.

புதுப்பிக்கத்தக்க எரிசக்தி மாற்றத்தை விரைவுபடுத்தவும், தேவையற்ற ஏற்றுமதி கட்டுப்பாடுகளை தவிர்க்கவும் இந்த இரு நாடுகளும் ஒப்புக்கொண்டுள்ளன.

ஒட்டுமொத்த பிராந்தியத்தின் பொருளாதார செழிப்புக்காக மற்ற நாடுகளும் இத்தகைய வெளிப்படையான வர்த்தக முறையைப் பின்பற்ற வேண்டும் என்று இந்த அறிக்கை வலியுறுத்துகிறது.

அரசுப் பதவியில் 8,931 நாட்களைக் கடந்து பிரதமர் மோடி சாதனை!

இந்தியாவில் மிக நீண்ட காலம் தொடர்ந்து அரச பதவியில் இருந்தவர் என்ற சாதனையை பிரதமர் நரேந்திர மோடி படைத்துள்ளார்.

பிரதமர் மோடி நேற்றுடன் அரசுப் பதவியில் 8,931 நாட்களை பூர்த்தி செய்துள்ளார்.

இதற்கு முன்னர் சிக்கிம் மாநில முதல்வராக 24 ஆண்டுகளுக்கும் மேலாக (8,930 நாட்கள்) பதவி வகித்த பவன் குமார் சாம்லிங்கின் சாதனையை பிரதமர் மோடி இதன்மூலம் முறியடித்துள்ளார்.

2001 ஒக்டோபர் 7 ஆம் திகதி முதல் 2014 மே 21 ஆம் திகதிவரை பிரதமர் மோடி குஜராத் மாநில முதல்வராக பதவி வகித்தார்.

2014 மக்களவைத் தேர்தலில் போட்டியிட்டு வென்ற அவர், இந்தியாவின் பிரதமராகப் பொறுப்பேற்றார்.

பின்னர், 2019 மற்றும் 2024 மக்களவைத் தேர்தல்களிலும் வெற்றி பெற்று தற்போது மூன்றாவது முறையாகப் பிரதமர் பதவியில் நீடிக்கின்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேற்படி மைல்கல் சாதனையைத் தவிர, பிரதமர் மோடியின் உலகளாவிய டிஜிட்டல் செல்வாக்கும் அதிகரித்து வருகிறது.

இன்ஸ்டாகிராமில் 10 கோடி பின்தொடர்பாளர்களைக் கடந்த முதல் உலகத் தலைவர் என்ற பெருமையை அவர் சமீபத்தில் பெற்றார்.

ஆசிய அபிவிருத்தி வங்கி தலைவர் இலங்கை விஜயம்!

ஆசிய அபிவிருத்தி வங்கியின் தலைவர் இலங்கைக்கு வருகை!

ஆசிய அபிவிருத்தி வங்கியின் (ADB) தலைவர் Masato Kanda மூன்று நாள் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு இன்று (23) காலை இலங்கை வந்தடைந்தார்.

பொருளாதார ஒத்துழைப்பை வலுப்படுத்துதல், முக்கிய பங்குதாரர்களுடன் கலந்துரையாடல்களை நடத்துதல் மற்றும் ‘டித்வா’ சூறாவளியினால் பாதிக்கப்பட்ட பகுதிகளின் சேதங்களை நேரில் ஆராய்தல் ஆகிய நோக்கங்களுக்காகவே அவரது விஜயம் இடம்பெறுகின்றது.

அவரை, தொழில் அமைச்சரும் நிதி மற்றும் திட்டமிடல் பிரதி அமைச்சருமான அனில் ஜயந்த பெர்னாண்டோ கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வைத்து வரவேற்றார்.

ஆசிய அபிவிருத்தி வங்கித் தலைவர் இன்று (23) முற்பகல் கொழும்பு துறைமுக வளாகத்திற்கு கண்காணிப்பு விஜயமொன்றை மேற்கொள்ளவுள்ளதுடன், கொழும்பில் தனியார் துறை பிரதிநிதிகளுடன் கலந்துரையாடலிலும் ஈடுபடவுள்ளார்.

மேலும், அவர் ஆசிய அபிவிருத்தி வங்கியின் இலங்கைக்கான வதிவிட அலுவலகத்திற்கும் (SLRM) விஜயம் செய்யவுள்ளார்.

நாளை (24) தலைவர் உள்ளிட்ட தூதுக்குழுவினர் ‘டித்வா’ சூறாவளியினால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் கண்காணிப்பு விஜயத்தை மேற்கொள்ளவுள்ளனர்.

அத்துடன், சூறாவளியினால் பாதிக்கப்பட்ட அம்பலங்கந்த பகுதிக்கும் சென்று, அங்கிருக்கும் மக்களுடன் கலந்துரையாடி ஏற்பட்ட சேதங்களை நேரடியாகக் கண்டறியவும் திட்டமிடப்பட்டுள்ளது.

இதனைத் தொடர்ந்து, ஆசிய அபிவிருத்தி வங்கித் தலைவர் ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவை சந்திக்கவுள்ளார்.

இந்தச் சந்திப்பின் போது பொருளாதார மறுமலர்ச்சி, அபிவிருத்தி நிதியளிப்பு மற்றும் இலங்கைக்கும் ஆசிய அபிவிருத்தி வங்கிக்கும் இடையிலான இருதரப்பு ஒத்துழைப்பை வலுப்படுத்துவது குறித்து கவனம் செலுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஆசிய அபிவிருத்தி வங்கியின் தெற்காசிய பிராந்திய திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் சோனா ஸ்ரேஸ்தா (Sona Shrestha), தலைவர் அலுவலக பிரதம ஆலோசகர் கெயிச்சிரோ இனுய் (Keiichiro Inui), சிரேஷ்ட ஆலோசகர் மனிஷா பிரதானாங்கா (Manisha Pradhananga) உள்ளிட்ட உயர் அதிகாரிகளும் இவ்விஜயத்தில் கலந்துகொண்டுள்ளனர்.

ஈரானின் ஏவுகணை பலம் குறித்து நேட்டோ அவதானம்!

ஐரோப்பிய நாடுகளை தாக்கக்கூடிய ஏவுகணை திறன் ஈரான் வசமுள்ளதாக இஸ்ரேல் முன்வைத்துள்ள குற்றச்சாட்டு தொடர்பில் நேட்டோ அமைப்பு கழுகுப் பார்வை செலுத்தியுள்ளது.

லண்டன், பாரிஸ் மற்றும் பெர்லின் போன்ற நகரங்களை இலக்கு வைக்கும் தொழில்நுட்பம் ஈரானிடம் உள்ளதாக இஸ்ரேலிய பாதுகாப்புப் படை எச்சரிக்கை விடுத்துள்ளது.

எனினும், இது தொடர்பில் நேட்டோவின் பொதுச்செயலாளர் மார்க் ரூட்டே Mark Rutte இதுவரை உறுதிப்படுத்தவில்லை, எனினும், ஈரான் அத்தகைய ஆற்றலை அடைவதற்கு மிக நெருக்கமான நிலையில் உள்ளதை அவர் ஒப்புக்கொண்டுள்ளார்.

இந்த விவகாரம் உண்மையாக இருக்கும் பட்சத்தில், அது சர்வதேச பாதுகாப்பிற்குப் பெரும் அச்சுறுத்தலாக அமையும் என்பதால் இதுகுறித்த மேலதிக ஆய்வுகள் தற்போது மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

சுமார் 4 ஆயிரம் கிலோ மீற்றர் தூரம்வரை சென்று தாக்கக்கூடிய ஏவுகணை ஈரான் வசம் இருப்பது ஐரோப்பிய நாடுகள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது என ஏற்கனவே தகவல் வெளியானது.

இன்று கூடுகிறது அமைச்சரவை: பஸ் கட்டணத்தை அதிகரிக்க அனுமதி?

அமைச்சரவைக் கூட்டம் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தலைமையில் இன்று (23) நடைபெறவுள்ளது.

இதன்போது முக்கிய சில முடிவுகள் எடுக்கப்படவுள்ளன.
குறிப்பாக பஸ் கட்டணத்தை 10 சதவீதத்துக்கு மேல் அதிகரிப்பதற்குரிய யோசனைக்கு அனுமதி வழங்கப்படலாம் என தெரியவருகின்றது.

எரிபொருள் விலை அதிகரிக்கப்பட்டுள்ள நிலையிலேயே இதற்குரிய யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது.

போர் பதற்றம் தீவிரம்! நடக்கபோவது என்ன?

ஈரானின் மின் உற்பத்தி நிலையங்கள் மீது தாக்குதல் நடத்தப்படும் என்ற அமெரிக ஜனாதிபதி ட்ரம்பின் எச்சரிக்கையைத் தொடர்ந்து, இரு நாடுகளுக்கும் இடையே போர் பதற்றம் உச்சம் தொட்டுள்ளது.

ட்ரம்பி கூறியதுபோல நடந்தால் மத்திய கிழக்கு பிராந்தியம் முழுவதும் உள்ள முக்கிய உள்கட்டமைப்புகளை இலக்கு வைக்கப்படும் என ஈரான் பதிலடி கொடுத்துள்ளது.

குறிப்பாக, ஈரான் மீது தாக்குதல் நடத்தப்பட்டால் பிராந்தியத்தின் எரிசக்தி வசதிகள் நிரந்தரமாக அழிக்கப்படும் என்றும், இதன் விளைவாக உலகளவில் எண்ணெய் விலை கடுமையாக உயரும் என்றும் ஈரான் நாடாளுமன்றத் தலைவர் தெரிவித்துள்ளார்.

ஈரான் தனது ராணுவக் கொள்கையைத் தற்காப்பு நிலையிலிருந்து தாக்குதல் நிலைக்கு மாற்றியுள்ளதாக அறிவித்துள்ளதுடன், அமெரிக்காவின் இந்த மிரட்டல் அதன் பலவீனத்தையே காட்டுவதாக ஈரான் ஊடகங்கள் விமர்சித்துள்ளன.

சினிமா

இந்​தி​யில் மீண்​டும் நயன்தாரா

0
கார்த்​தி, நாகார்​ஜுனா நடித்த ‘தோழா’, விஜய் நடித்த ‘வாரிசு’ படங்​களை இயக்​கிய​வர் தெலுங்கு இயக்​குநர் வம்சி பைடிபள்​ளி. இவர் அடுத்து இயக்​கும் இந்தி படத்​தில் சல்​மான் கான் நடிக்கிறார். இந்​தப் படத்தை ஸ்ரீ வெங்​கடேஸ்​வரா...

ரூ.50 கோடி வசூலை கடந்த ‘யூத்’

0
உலகளவில் ரூ.50 கோடி வசூலை கடந்து பெரும் சாதனையை படைத்திருக்கிறது ‘யூத்’ திரைப்படம். கென் கருணாஸ் இயக்கி நாயகனாக நடித்துள்ள படம் ‘யூத்’. மார்ச் 19-ம் திகதி வெளியான இப்படம் மக்களிடையே பெரும் வரவேற்பை...

ஜூலையில் ரிலீஸ் ஆகிறது ‘ஜனநாயகன்’?

0
தவெக தலை​வரும், நடிகரு​மான விஜய்​யின் ‘ஜன​நாயகன்’ படத்தில் மத நல்​லிணக்​கத்​துக்கு ஊறு விளைவிக்​கும் காட்​சிகள் இருப்​ப​தாகக் ​கூறி, படத்தை மறு ஆய்​வுக்கு அனுப்பி மத்​திய தணிக்கை வாரி​யம் உத்​தர​விட்​டது. இதை எதிர்த்து படக்​குழு...

செய்தி

ஈரான் வான்வெளியில் அமெரிக்க ஆதிக்கம்!

0
அமெரிக்க போர் விமானம் ஈரானால் சுட்டு வீழ்த்தப்பட்டபோது காணாமல் போயிருந்த விமானி, பரபரப்பான துப்பாக்கிச் சண்டைக்குப் பிறகு பாதுகாப்பாக மீட்கப்பட்டதாக டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்தார். ஈரான் வான் பரப்​பில் பறந்த அமெரிக்க விமானப் படை​யின்...

‘’தேசிய QR கொடுப்பனவு ஊக்குவிப்புத் திட்டம்” நாளை ஆரம்பம்!

0
- நாளை முதல் நடைமுறைக்கு வரும் வகையில், 5,000 ரூபாய் வரையிலான அனைத்து LankaQR கொடுக்கல் வாங்கல்களுக்காகவும் வர்த்தகர்களிடமிருந்து அறவிடப்படும் சேவைக்கட்டணம் முழுமையாக நீக்கம். இலங்கையின் டிஜிட்டல் பொருளாதாரத்தில் ஒரு புதிய மைல்கல்லைக் குறிக்கும்...

முதல் வெற்றியை பதிவு செய்யுமா சி.எஸ்.கே?

0
மாலை 3.30 இற்கு ஆரம்பமாகும் 10 ஆவது லீக் ஆட்டத்தில் ஐதராபாத் , லக்னோ ஆகிய அணிகள் மோத உள்ளன. இன்றிரவு இரவு 7.30 மணிக்கு நடைபெறும் நடைபெறும் 11வது லீக் ஆட்டத்தில் சென்னை...