Home Blog Page 157

‘Rebuilding Sri Lanka’ திட்டத்திற்கு சீனாவின் அனுபவத்தை இலங்கையுடன் பகிர்ந்து கொள்ள சீனா தயார்!

அனைத்து சந்தர்ப்பங்களிலும் இலங்கைக்கு தேவையான உதவிகளை வழங்க சீனா நடவடிக்கை எடுக்கும் எனவும் ‘Rebuilding Sri Lanka’ திட்டத்தில் சீனாவின் அனுபவத்தை இலங்கையுடன் பகிர்ந்து கொள்ளத் தயார் எனவும் சீன கம்யூனிஸ்ட் கட்சியின் 20 ஆவது மத்திய குழுவின் உறுப்பினரும், Xizang தன்னாட்சி பிராந்தியத்தின் கம்யூனிஸ்ட் கட்சி குழுவின் செயலாளருமான Wang Junzheng தெரிவித்தார்.

சீனத் தூதுக் குழுவுடன் இலங்கைக்கு வருகை தந்துள்ள Wang Junzheng, இன்று (23) ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவைச் சந்தித்தபோது மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அனர்த்த நிலைமையில் இலங்கைக்கு சீனா வழங்கிய அவசர மற்றும் மனிதாபிமான உதவிகளுக்கு இதன் போது ஜனாதிபதி நன்றி தெரிவித்தார். இந்த கடினமான நேரத்தில் இலங்கைக்கு தொடர்ச்சியாக வழங்கிய ஆதரவையும் அவர் பாராட்டினார்.

இது இரு நாடுகளுக்கும் இடையிலான நீண்டகால நெருங்கிய நட்பை மேலும் வலுப்படுத்தும் என்றும் ஜனாதிபதி மேலும் சுட்டிக்காட்டினார்.

மக்களின் அன்றாட வாழ்க்கையை மீளமைக்கவும் இலங்கையை மீண்டும் கட்டியெழுப்பவும் தொடங்கப்பட்டுள்ள ‘Rebuilding Sri Lanka’ திட்டம் குறித்து சீனக் குழுவிற்கு ஜனாதிபதி தெளிவுபடுத்தினார்.

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவின் அண்மைய சீன விஜயத்தின் போது இரு நாடுகளின் ஜனாதிபதிகளுக்கும் இடையே ஏற்படுத்திக் கொள்ளப்பட்ட புரிந்துணர்வு மற்றும் நட்புறவை மேலும் வலுப்படுத்தி, சீனா இலங்கையுடன் தொடர்ந்து பணியாற்றும் என்று தெரிவித்த Wang Junzheng, இலங்கையில் ஆரம்பிக்கப்பட்டுள்ள திட்டங்களைத் தொடர்ந்து முன்னெடுக்கவும், புதிய திட்டங்களைத் ஆரம்பிக்கவும் சீனா தொடர்ந்து ஒத்துழைக்கும் என்று குறிப்பிட்டார்.

கிளீன் ஸ்ரீலங்கா திட்டம் மற்றும் இலஞ்சம் மற்றும் ஊழல் எதிர்ப்புத் திட்டம் போன்ற அரசாங்கத்தின் முதன்மைத் திட்டங்களுக்கு சீனா ஆதரவளிக்கும் என்றும், குறிப்பாக கிராமிய வறுமையை ஒழிப்பதில் சீனாவின் அனுபவத்தை இலங்கையுடன் பகிர்ந்து கொள்ள தேவையான உதவிகளை வழங்கும் என்றும் அவர் தெரிவித்தார்.

இலங்கைக்கான சீனத் தூதுவர் Qi Zhenhong, சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்தியக் குழுவின் சர்வதேச திணைக்கள தென்கிழக்கு மற்றும் தெற்காசிய விவகாரப் பணியக பணிப்பாளர் நாயகம் Peng Xiubin பிராந்திய வெளியுறவு அலுவலக பணிப்பாளர் நாயகம் Bao Ting, சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்திய குழுவின் சர்வதேசத் துறையின் தென்கிழக்கு மற்றும் தெற்காசிய விவகாரப் பணியக பிரதிப் பணிப்பாளர் Wang Siqi மற்றும் இலங்கை அரசாங்கம் சார்பில் தொழில் அமைச்சரும் பொருளாதார அபிவிருத்தி பிரதி அமைச்சருமான கலாநிதிஅனில் ஜயந்த பெர்னாண்டோ, ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்க, ஜனாதிபதியின் சிரேஸ்ட மேலதிகச் செயலாளர் ரோஷன் கமகே உள்ளிட்டோர் இந்த நிகழ்வில் கலந்து கொண்டனர்.

4 கோரிக்கைகள் அடங்கிய ஆவணத்தை கையளித்தார் ஜீவன்!

இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ள இந்திய வெளிவிவகார அமைச்சர் சுப்ரமணியம் ஜெய்சங்கரை, இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் பொதுச்செயலாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான ஜீவன் தொண்டமான் இன்று (23) கொழும்பில் அமைந்துள்ள இந்திய இல்லத்தில் சந்தித்து விரிவான கலந்துரையாடலை மேற்கொண்டார்.

இந்தச் சந்திப்பின் போது, இந்திய வம்சாவளி தமிழ் (IOT) சமூகத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் தலைவர்கள் தொடர்பான விடயங்கள், டிட்வா சூறாவளியின் பின்னரான அனர்த்த நிலைமைகள் மற்றும் குறிப்பாக மலையகப் பகுதிகளில் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்து வெளிவிவகார அமைச்சர் டாக்டர் சுப்ரமணியம் ஜெய்சங்கரிடம் விரிவாக எடுத்துரைக்கப்பட்டதாக ஜீவன் தொண்டமான் தெரிவித்தார்.

மேலும், இக்கட்டான காலகட்டத்தில் இலங்கைக்கு இந்தியா வழங்கிய தொடர்ச்சியான ஆதரவுகளுக்கு தனது நன்றியையும் அவர் தெரிவித்தார். குறிப்பாக, 450 மில்லியன் அமெரிக்க டாலர்கள் அடங்கிய உதவிகளுக்கும், அவற்றைச் செயல்படுத்திய இந்திய உயர்ஸ்தானிகர் மேன்மைதாங்கிய சந்தோஷ் ஜா அவர்களுக்கும் அவரது குழுவினருக்கும் நன்றிகளைத் தெரிவித்துக்கொண்டார்.

இந்த விசேட சந்திப்பின் போது, இந்தியாவின் ஒத்துழைப்பை மையமாகக் கொண்ட நான்கு முன்னுரிமை அம்சங்களை உள்ளடக்கிய ஆவணமும் டாக்டர் சுப்ரமணியம் ஜெய்சங்கர் அவர்களிடம் கையளிக்கப்பட்டது.

01•இந்தியா–இலங்கை கொள்கை மற்றும் சிந்தனை வழித்தடத்தை நிறுவனமயமாக்குதல்.

02•இந்திய வம்சாவளி தமிழ் சமூகத்திற்கான நடைமுறை பொருளாதார வாய்ப்புகள் மற்றும் சந்தை வாய்ப்புகள்.

03•மலையகப் பகுதிகளுக்கான வெள்ளம் மற்றும் காலநிலை அனர்த்த முகாமைத்துவ உட்கட்டமைப்புகள் மூலம் அனர்த்த மீள்தன்மை.

04•சிறுவர் அபிவிருத்தி நிலையங்களை அடிப்படையாகக் கொண்ட இளைஞர் ஈடுபாட்டுத் திட்டங்கள். போன்ற முன்னுரிமை அம்சங்களாகுகம்.

இந்தச் சந்திப்பு, இரு நாடுகளுக்கிடையிலான நட்புறவையும், மலையக மக்களின் நலன் மற்றும் நிலையான எதிர்காலத்திற்கான கூட்டு முயற்சிகளையும் மேலும் வலுப்படுத்தும் முக்கிய அடித்தளமாக அமைந்துள்ளதாக ஜீவன் தொண்டமான் மேலும் தெரிவித்தார்.

மலையக மக்களுக்கு பாதுகாப்பான இடங்களில் காணி வேண்டும்! நட்புறவை பயன்படுத்தி அநுர அரசிடம் இந்தியா வலியுறுத்த வேண்டும்!!

இலங்கைக்கு பயணம் மேற்கொண்டுள்ள இந்திய வெளிவிவகார அமைச்சருக்கும், மலையக பிரதிநிதிகளுக்கும் இடையிலான சந்திப்பு இன்று (23) கொழும்பில் நடைபெற்றது.

இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் மற்றும் தமிழ் முற்போக்கு கூட்டணியின் பிரதிநிதிகள் இச்சந்திப்பில் பங்கேற்றிருந்தனர். இலங்கைக்கான இந்திய தூதுவரும் கலந்துகொண்டிருந்தார்.

இச்சந்திப்பில் முக்கிய பல விடயங்கள் தொடர்பில் கலந்துரையாடப்பட்டுள்ளன.

மலையக மக்களின் காணி உரிமை தொடர்பில் பேசப்பட்ட விடங்கள் தொடர்பில் மனோ கணேசன் கூறியவை வருமாறு,

“ பேரிடரில் மலையக மக்களே பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
மலையக மக்களுக்கு பாதுகாப்பான காணி வேண்டும். மலை உச்சியில் இருந்து அவர்களை பாதுகாப்பான இடங்களில் குடியேற்ற வேண்டும். இது தொடர்பில் இலங்கை அரசாங்கத்திடம் கோரியுள்ளோம்.

இந்திய அரசாங்கத்திடமும் விடுத்துள்ளோம். தமது நட்புறவை பயன்படுத்தி இது தொடர்பில் இலங்கையிடம் பேசுமாறு கோரினோம்.

ஜனாதிபதி அநுர பாதுகாப்பான காணியை தருவார் என நம்புகின்றோம். தரவேண்டும்.”

‘Rebuilding Sri Lanka’ திட்டத்திற்கு இந்தியாவிடமிருந்து 450 மில்லியன் டொலர் சலுகைப் பொதி

இலங்கையின் முன்னுரிமைகளை அடையாளம் கண்டு, மீளக் கட்டியெழுப்பும் அவசர தேவைகளை நிவர்த்தி செய்வதில் இந்தியா தொடர்ந்து அர்ப்பணிப்புடன் செயற்பட உள்ளதாவும் அதன்படி, இலங்கைக்கு 450 மில்லியன் டொலர் சலுகைப் பொதியொன்றை வழங்க நடவடிக்கை எடுப்பதாக இந்திய வெளிவிவகார அமைச்சர் கலாநிதி எஸ். ஜெய்சங்கர் தெரிவித்தார்.

இதில், 100 மில்லியன் டொலர் இந்திய உதவி என்பதோடு மீதமுள்ள தொகை சலுகை வட்டி விகிதத்தின் அடிப்படையிலான கடனாகும்.

ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவின் தலைமையின் கீழ் இலங்கை மிக விரைவில் மீண்டு வரும் என்று பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான இந்திய அரசாங்கம் நம்பிக்கை கொண்டுள்ளதாகத் தெரிவித்த இந்திய வெளிவிவகார அமைச்சர், இலங்கையின் மீளக்கட்டியெழுப்பும் திட்டத்துடன் இந்தியா முன்னெப்போதையும் விட அதிக அர்ப்பணிப்புடன் கைகோர்த்துள்ளதாகவும் தெரிவித்தார்.

இலங்கைக்கு விஜயம் செய்துள்ள இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ். ஜெய்சங்கருக்கும் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவிற்கும் இடையிலான சந்திப்பு இன்று (23) காலை ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்றது. இதன்போதே இந்திய வெளிவிவகார அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியினால் ஜனாதிபதிக்கு அனுப்பப்பட்ட விசேட கடிதத்தையும் இந்திய வெளிவிவகார அமைச்சர் ஜனாதிபதியிடம் கையளித்தார்.

டித்வா சூறாவளியால் பாதிக்கப்பட்ட இலங்கை மக்களின் நிவாரணம் மற்றும் புனர்வாழ்வு முயற்சிகளுக்கும், இயல்பு வாழ்க்கையை மீளக் கட்டியெழுப்புவதற்கும் இந்தியப் பிரதமரும் அரசாங்கமும் அளித்த மனப்பூர்வமான ஆதரவை ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க நன்றியுடன் பாராட்டினார்.

மீட்புப் பணிகளுக்கு ஹெலிகொப்டர்கள்,மருந்துகள், உணவுப் பொருட்கள் உள்ளிட்ட மனிதாபிமான உதவிகளை வழங்குவதிலும், சேதமடைந்த வீதிகளை மீளமைப்பதிலும், மகியங்கனை வைத்தியசாலை உள்ளிட்ட வைத்தியசாலை கட்டமைப்பை மறுசீரமைப்பதிலும் இந்திய அரசாங்கம் அளித்த விசேட ஆதரவையும் ஜனாதிபதி நன்றியுடன் நினைவு கூர்ந்தார்.

ஒவ்வொரு கடினமான சமயத்திலும் இந்தியா இலங்கைக்கு வழங்கி வரும் தொடர்ச்சியான ஆதரவை ஜனாதிபதி ஞாபகமூட்டியதோடு பேரழிவுக்குப் பிறகு இலங்கையின் மீளமைப்பு செயற்பாட்டிற்கு வழங்கும் ஒத்துழைப்பு இந்திய-இலங்கை உறவுகளில் ஒரு புதிய அத்தியாயத்தைக் குறிக்கும் என்றும் சுட்டிக்காட்டினார்.

இந்த கடினமான சமயத்தில் இலங்கையுடன் பலமாக இணைந்திருக்கவும், இலங்கையை மீளக்கட்டியெழுப்பும் பணிகளுக்கு சாத்தியமான அனைத்து உதவிகளை வழங்கவும் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி தனக்கு அறிவுறுத்தியதாகவும், அந்த முயற்சிகளை ஆராய்வதற்காக இந்தியப் பிரதமரின் விசேட பிரதிநிதியாக இலங்கைக்கு தான் விஜயம் மேற்கொண்டதாகவும் இந்திய வெளிவிவகார அமைச்சர் குறிப்பிட்டார்.

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவிற்கும் இந்திய வெளிவிவகார அமைச்சருக்கும் இடையிலான உத்தியோகபூர்வ சந்திப்பைத் தொடர்ந்து, இரு நாடுகளுக்கும் இடையிலான இருதரப்பு பேச்சுவார்த்தைகள் ஆரம்பமானதோடு , இரு நாடுகளுக்கும் இடையிலான உறவுகளை மேலும் விரிவுபடுத்துவதில் விசேட கவனம் செலுத்தப்பட்டது. குறிப்பாக இலங்கையின் சுற்றுலாத் துறையை மேம்படுத்துவதற்கு தொடர்ந்து ஆதரவு வழங்கப்படும் என்று இந்திய வெளிவிவகார அமைச்சர் தெரிவித்தார்.

இந்தியா இலங்கைக்கு வழங்கிய சலுகைப் பொதியை அடையாளப்படுத்தும் வகையில் கிளிநொச்சி ஏ-35 வீதியில் உள்ள பேல் பாலத்தை திறந்து வைக்கும் நிகழ்வு, ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க மற்றும் இந்திய மற்றும் இலங்கை வெளிவிவகார அமைச்சர்களின் பங்கேற்புடன் ஒன்லைனின் ஊடாக நடைபெற்றது.

ஜனாதிபதிக்கும் இந்திய வெளிவிவகார அமைச்சருக்கும் இடையிலான பேச்சுவார்த்தைகளில் வெளிநாட்டலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் விஜித ஹேரத், தொழில் அமைச்சரும் பொருளாதார அபிவிருத்தி பிரதி அமைச்சருமான அனில் ஜயந்த பெர்னாண்டோ மற்றும் இலங்கைக்கான இந்திய உயர் ஸ்தானிகர் சந்தோஷ் ஜா ஆகியோர் கலந்து கொண்டனர்.

அதனைத் தொடர்ந்து நடைபெற்ற இருதரப்பு பேச்சுவார்த்தைகளில், இந்திய அரசாங்கத்தை பிரதிநிதித்துவப்படுத்தி இந்திய வெளிவிவகார அமைச்சின் மேலதிக செயலாளர் புனித் அக்ரவால், இந்திய பிரதி உயர் ஸ்தானிகர் சத்யஞ்சல் பாண்டே மற்றும் இலங்கை அரசாங்கத்தின் சார்பாக ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்க, வெளிநாட்டலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சின் செயலாளர் அருணி ரணராஜா, ஜனாதிபதியின் சிரேஸ்ட மேலதிகச் செயலாளர் ரோஷன் கமகே ஆகியோர் கலந்து கொண்டனர்.

முக்கிய துறைகளுக்கு ஆதரவளிப்பதாக இந்தியா உறுதி!

முக்கிய துறைகளுக்கு ஆதரவளிப்பதாக இந்தியா உறுதி!

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின், சிறப்புப் பிரதிநிதியாக இலங்கைக்கு வருகை தந்துள்ள இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் கலாநிதி எஸ். ஜெய்சங்கர், பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசுரியடவுன் பேச்சு நடத்தினார்.

குறித்த சந்திப்பு அலரிமாளிகையில் இன்று நடைபெற்றது.

இலங்கை முகங்கொடுத்த இயற்கை அனர்த்தத்தின் பின்னரான மீள்நிர்மாணப் பணிகளின் தற்போதைய நிலை குறித்து இச்சந்திப்பின்போது முக்கிய கவனம் செலுத்தப்பட்டது.

புகையிரதப் பாதைகள் மற்றும் பாலங்களைப் புனரமைத்தல், விவசாயத் துறையைப் பலப்படுத்துதல் உள்ளிட்ட முக்கியமான துறைகளுக்கு ஆதரவளிக்க இந்தியா தயாராக இருப்பதாக அமைச்சர் ஜெய்சங்கர், பிரதமரிடம் உறுதியளித்துள்ளார்.

ஸ்டார்லிங்க் செயற்கைக் கோள்களை தாக்க புதிய ஆயுதம் தயாரிக்கிறது ரஷ்யா

ரஷ்யாவின் தாக்குதலில் உக்ரைனின் தகவல் தொடர்பு கட்டமைப்புகள் சேதம் அடைந்து விட்டன. அதனால் போர்க்கள தகவல் தொடர்புகளுக்கு உக்ரைன் ராணுவம் தொழிலதிபர் எலான் மஸ்கின் ஸ்டா்ர்லிங்க் அதிவேக இணைய சேவையைப் பயன்படுத்துகிறது.

இதனால் உக்ரைன் ராணுவத்துக்கு வர்த்தக ரீதியில் தகவல் தொடர்பு சேவைகள் வழங்கும் செயற்கைகோள்களை தாக்குவோம் என ரஷ்ய அதிகாரிகள் தொடர்ந்து எச்சரிக்கை விடுத்து வந்தனர்.

கீழடுக்கு சுற்று வட்டப் பாதையில் உள்ள செயற்கைக்கோள்கள் மீது தாக்குல் நடத்த எஸ்-500 ஏவுகணைகள் தயார் நிலையில் உள்ளதாக ரஷ்யா சமீபத்தில் கூறியது.

விண்ணில் செயல் இழந்த செயற்கைக்கோள் மீது ஏவுகணையை வீசி தகர்க்கும் சோதனையை கடந்த 2021-ம் ஆண்டு ரஷ்யா செய்தது.

இந்நிலையில் ஸ்டார் லிங்க் செயற்கைக் கோள்கள் மீது தாக்குதல் நடத்த வெடிகுண்டு தயாரிப்பில் பயன்படுத்தப்படும் கூரான இரும்பு துண்டுகளை ஆயுதமாக பயன்படுத்த ரஷ்யா திட்டமிட்டுள்ளதாக நேட்டோ உளவுப் பிரிவினர் சந்தேகிக்கின்றனர்.

இந்த இரும்பு துண்டுகளை சிறிய செயற்கைக் கோளில் எடுத்துச் சென்று பூமியிலிருந்து 550 கி.மீ தொலைவில் உள்ள சுற்றுவட்டப்பாதையில் ஆங்காங்கே தூவப்படும்.

இந்த கூர்மையான இரும்புத் துண்டுகள் விண்ணில் சுற்றிக் கொண்டிருக்கு் ஸ்டார்லிங்க் செயற்கைக் கோள்கள் மீது மோதி அவற்றை சேதப்படுத்தும். இந்த தாக்குதலில் செயற்கைக்கோளின் சோலார் பேனல்கள் எளிதில் சேதம் அடைந்து விடும்.

இந்த ஆயுதம் அனைத்து நாடுகளின் செயற்கைக்கோள்களுக்கும் பாதிப்பை ஏற்படுத்தும். கீழடுக்கு சுற்றுவட்டப்பாதையின் சுற்றிக் கொண்டிருக்கும் சர்வதேச விண்வெளி மையம், சீனாவின் டியாங்காங் விண்வெளி மையம் ஆகியவையும் சேதம் அடையும் அபாயம் உள்ளது.

பெருந்தோட்டத் துறையில் டித்வா புயலின் தாக்கம்: முதலாளிமார் சம்மேளனம் கூறுவது என்ன?

டித்வா சூறாவளியினால் ஏற்பட்டுள்ள கடுமையான சீரற்ற காலநிலை காரணமாக பாதிக்கப்பட்டுள்ள தோட்டத் தொழிலாளர்கள், அவர்களது குடும்பங்கள் மற்றும் அதனைச் சூழவுள்ள சமூகங்கள் குறித்து இலங்கை பெருந்தோட்ட முதலாளிமார் சம்மேளனம் (PA) தனது ஆழ்ந்த கவலையைத் தெரிவித்துள்ளது.

நாட்டின் மிகவும் சூழல் உணர்திறன் மிக்க மற்றும் இயற்கை அனர்த்தங்களுக்கு உள்ளாகக்கூடிய சில பிரதேசங்களிலேயே பெருந்தோட்டத்துறை செயற்பட்டு வருகின்றது. இச்சவாலான காலப்பகுதியில், தோட்டங்களில் வசிக்கும் மற்றும் பணிபுரியும் மக்களின் பாதுகாப்பு, நலன் மற்றும் கண்ணியம் ஆகியவற்றுக்கே நாம் முதன்மையான முன்னுரிமையை வழங்குகின்றோம்.

சூறாவளி மற்றும் அதனைத் தொடர்ந்து ஏற்பட்ட வெள்ளம் மற்றும் மண்சரிவுகளைத் தொடர்ந்து, பிராந்திய தோட்ட நிறுவனங்கள் (RPCs) பாதிக்கப்பட்ட தோட்டங்களில் தங்களது அவசரகால மற்றும் பாதுகாப்பு நடைமுறைகளை உடனடியாக செயற்படுத்தின.

தோட்ட நிர்வாகக் குழுக்கள் உள்ளூர் அதிகாரிகளுடன் இணைந்து, குறிப்பாக மண்சரிவு மற்றும் வெள்ள அபாயம் உள்ள இடங்களைக் கண்டறிய நெருக்கமாகப் பணியாற்றின.

உயிராபத்துக்களைக் குறைப்பதற்கும் உடனடி பாதுகாப்பை உறுதி செய்வதற்கும், அத்தகைய அபாயகரமான இடங்களில் வசிக்கும் குடும்பங்கள் பாடசாலைகள், வழிபாட்டுத் தலங்கள் மற்றும் ஏனைய பொது நிலையங்கள் உள்ளிட்ட பாதுகாப்பான இடங்களுக்கு உடனடியாக மாற்றப்பட்டனர்.

இதற்கு இணையாக, தோட்டச் செயல்பாடுகள் மற்றும் வாழ்வாதாரச் சூழலை வழமைக்குக் கொண்டுவருவதற்கான நடவடிக்கைகளை பிராந்திய தோட்ட நிறுவனங்கள் (RPCs) மேற்கொண்டன.

இதில் சிதைவுகளை அகற்றுதல், வீடுகள் மற்றும் தோட்ட உட்கட்டமைப்புகளுக்கு ஏற்பட்டுள்ள சேதங்களை மதிப்பீடு செய்தல் மற்றும் இயலுமான இடங்களில் அடிப்படை போக்குவரத்துப் பாதைகளை மீண்டும் சீரமைத்தல் ஆகிய பணிகள் உள்ளடங்கியிருந்தன.

தரைமட்டத்தில் சுகாதார நிலைகளைக் கண்காணிப்பதற்காக தோட்ட மருத்துவப் பணியாளர்கள் மற்றும் நலன்புரி அதிகாரிகள் ஈடுபடுத்தப்பட்டதோடு, சூறாவளியைத் தொடர்ந்த உடனடி காலப்பகுதியில் தொழிலாளர்களுக்குத் தேவையான தகவல்களை வழங்கவும், அவர்களுக்கு நம்பிக்கையூட்டவும் தோட்ட மட்டத்திலான தகவல் தொடர்பு வழிமுறைகள் பயன்படுத்தப்பட்டன.

தற்போதைய நிலையில், பாதிக்கப்பட்ட தோட்டத் தொழிலாளர்கள் மற்றும் அண்டை சமூகத்தினருக்குத் தேவையான அத்தியாவசிய உணவுப் பொருட்கள், தற்காலிக தங்குமிடங்கள் மற்றும் மருந்துப் பொருட்களைப் பெற்றுக்கொடுப்பதன் மூலம் பிராந்திய தோட்ட நிறுவனங்கள் (RPCs) தொடர்ந்து ஒத்துழைத்து வருகின்றன.

சிறுவர்கள், முதியவர்கள் மற்றும் ஏற்கனவே நோயுற்ற நிலையில் இருப்பவர்கள் உள்ளிட்ட பாதிப்புக்குள்ளாகக்கூடிய குழுவினர் குறித்து விசேட கவனம் செலுத்தப்பட்டு வருகின்றது.

தோட்ட வசதிகள் பாதிக்கப்பட்ட இடங்களில், நீண்டகால சீரமைப்புத் திட்டங்கள் வகுக்கப்படும் அதேவேளை, அடிப்படைச் சேவைகளைத் தடையின்றி வழங்குவதை உறுதி செய்வதற்காக இடைக்கால ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

பாதிக்கப்பட்ட நபர்கள் மற்றும் குடும்பங்களை அடையாளம் காணும் பணிகள், தோட்ட நிர்வாகம், பிரதேச செயலாளர்கள் மற்றும் சம்பந்தப்பட்ட அரச நிறுவனங்களுக்கு இடையிலான நெருக்கமான ஒருங்கிணைப்புடன் முன்னெடுக்கப்படுகின்றன.

அன்றாட சமூகத் தேவைகளை ஆதரிக்கவும், நிவாரணப் பகிர்ந்தளிப்புக்கு உதவவும், அத்துடன் போக்குவரத்து துண்டிக்கப்பட்ட பகுதிகளுக்கான வீதித் தொடர்புகளை மீண்டும் சீரமைக்கும் பணிகளுக்கு வழிகாட்டவும் பிரதேச செயலகங்கள் தோட்ட அதிகாரிகளுடன் தொடர்ச்சியான தொடர்பைப் பேணி வருகின்றன.

நிவாரண மற்றும் மீட்புப் பணிகள் சீராகவும் வினைத்திறனாகவும் அமைவதை உறுதிப்படுத்துவதற்காக, பிராந்திய தோட்ட நிறுவனங்கள் (RPCs) அரச நிறுவனங்கள் மற்றும் ஏனைய சம்பந்தப்பட்ட அமைப்புகளுடன் இணைந்து செயற்பட்டு வருகின்றன.

முழுமையான மதிப்பீடுகள் இன்னும் நடைபெற்று வரும் நிலையில், தோட்ட உட்கட்டமைப்பு, வீடமைப்பு மற்றும் பயிர்ச்செய்கைகளுக்கு ஏற்பட்டுள்ள சேதங்கள் குறித்த ஆரம்பகட்ட மதிப்பீடுகள், பெருந்தோட்ட மனிதவள அபிவிருத்தி அறக்கட்டளை (PHDT) மற்றும் ஏனைய அரச அதிகார சபைகளின் ஆதரவுடன் முன்னெடுக்கப்படுகின்றன.

இந்த மதிப்பீடுகள் உடனடி மீட்சித் தலையீடுகள் மற்றும் நீண்டகால புனர்வாழ்வுத் திட்டமிடல் ஆகிய இரண்டையும் கண்டறிய உதவும். இக்கட்டத்தில், சேதங்களின் முழு அளவு மற்றும் மிக மோசமாகப் பாதிக்கப்பட்ட தோட்டங்கள் குறித்த விரிவான மதிப்பீடுகள் இன்னும் இறுதி செய்யப்படவில்லை.

தோட்ட மருத்துவக் குழுக்கள், நீரினால் பரவக்கூடிய நோய்கள் உட்பட அனர்த்தத்திற்குப் பிந்தைய சாத்தியமான சுகாதாரப் பிரச்சினைகள் குறித்து விழிப்புடன் இருப்பதோடு, தேவையான இடங்களில் பொதுச் சுகாதார அதிகாரிகளுடன் ஒருங்கிணைந்து செயற்பட்டு வருகின்றன.

பாதிக்கப்பட்ட பெரும்பாலான பகுதிகளுக்கான போக்குவரத்து வசதிகள் படிப்படியாக சீரமைக்கப்பட்டு வருவதுடன், தற்போது பெரும்பாலான தோட்டங்களை சென்றடையக்கூடியதாக உள்ளது. குறிப்பிட்ட சில இடங்களில் மின்சாரம், நீர் விநியோகம் அல்லது தொடர்பாடல் வசதிகளில் தற்காலிகத் தடைகள் ஏற்பட்ட போதிலும், நிலவும் காலநிலை நிலைமைகளுக்கு உட்பட்டு, அவ்வசதிகள் தற்போது படிப்படியாக வழமைக்குத் திரும்பி வருகின்றன.

நாடு மற்றொரு மழையுடன் கூடிய காலநிலையை சந்திக்கவுள்ள நிலையில், பெருந்தோட்டத் துறை தனது தயார் நிலைப்பாட்டை வலுப்படுத்துவதற்கான செயலூக்கமான நடவடிக்கைகளை எடுத்து வருகின்றது. பிரதேச செயலாளர்கள் மற்றும் பெருந்தோட்ட மனிதவள அபிவிருத்தி அறக்கட்டளையின் (PHDT) வழிகாட்டல்களுடன், பிராந்திய தோட்ட நிறுவனங்கள் (RPCs) அபாயகரமான இடங்களை மீளாய்வு செய்தல், முன்கூட்டிய எச்சரிக்கை மற்றும் வெளியேற்றும் நடைமுறைகளை வலுப்படுத்துதல் ஆகியவற்றை மேற்கொண்டு வருகின்றன.

அத்துடன், பாதிப்புக்குள்ளாகக்கூடிய இடங்களில் வசிக்கும் சமூகங்கள் தேவையேற்படின் இடமாற்றப்படுவதை உறுதி செய்யும் நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்படுகின்றன. பாதுகாப்புக் காரணிகள் அவசியப்படும் இடங்களில், தற்காலிக மூடல் நடவடிக்கைகள் மற்றும் முன்னெச்சரிக்கை ஏற்பாடுகள் நடைமுறைப்படுத்தப்படுகின்றன.

கோவிட்-19 பெருந்தொற்று உள்ளிட்ட கடந்த கால நெருக்கடிகளை எதிர்கொண்ட போது பெருந்தோட்டத் துறை வெளிப்படுத்திய நெகிழ்ச்சித்தன்மையை இலங்கை பெருந்தோட்ட முதலாளிமார் சம்மேளனம் (PA) அங்கீகரிக்கின்றது.

அத்துடன், தற்போதைய சூழ்நிலையை பொறுப்புணர்வுடன் கையாள்வதற்கு பிராந்திய தோட்ட நிறுவனங்கள் (RPCs), தொழிலாளர்கள் மற்றும் பங்காளர் நிறுவனங்கள் கொண்டுள்ள கூட்டுத் திறன் மீது சம்மேளனம் நம்பிக்கை கொண்டுள்ளது. தோட்டச் சமூகங்களைப் பாதுகாப்பதற்கும், மீட்சிப் பணிகள் தொடரும் வேளையில் இயல்பு நிலையை மீட்டெடுப்பதற்காக அனைத்து பங்குதாரர்களுடன் இணைந்து செயற்படுவதற்கும் சங்கம் தனது உறுதிப்பாட்டை மீண்டும் உறுதிப்படுத்துகின்றமை குறிப்பிடத்தக்கது.

உலகின் மிகப்பெரிய அணுமின் நிலையம் மீண்டும் இயக்க ஜப்பான் அரசு திட்டம்!

உலகின் மிகப்பெரிய அணுமின் நிலையமான ஜப்பானின் காஷிவாஸாகி – கரிவா அணுமின் நிலையத்தை மீண்டும் இயக்குவதற்கான இறுதி ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.

கிழக்கு ஆசிய நாடான ஜப்பானின் நிகாட்டா மாகாணத்தில் உள்ள காஷிவாஸாகி – கரிவா அணுமின் நிலையம் 8,212 மெகா வாட் உற்பத்தி திறன் கொண்ட உலகின் மிகப்பெரிய அணுமின் நிலையமாகும்.

கடந்த, 2011ம் ஆண்டு ஏற்பட்ட சுனாமி தாக்குதலால், புகுஷிமா அணுமின் நிலையத்தில் உள்ள அணு உலை விபத்துக்குப் பின், பாதுகாப்பு காரணங்களுக்காக ஜப்பானில் உள்ள அனைத்து அணு உலைகளும் மூடப்பட்டன. இதன்படி, 2012ல் காஷிவாஸாகி – கரிவா அணுமின் நிலையமும் மூடப்பட்டது.

இந்நிலையில், இந்த அணு மின் நிலையத்தை மீண்டும் இயக்குவது தொடர்பான தீர்மானத்துக்கு, நிகாட்டா மாகாண சட்டசபை நேற்று ஒப்புதல் அளித்துள்ளது. இந்த அணு உலை இயக்கத்திற்கு, அம்மாகாண கவர்னர் ஹிடேயோ ஹனசுமி ஏற்கனவே ஆதரவு தெரிவித்து வந்த நிலையில், தற்போது சட்டசபையும் ஒப்புதல் அளித்திருப்பது, ஒரு மைல்கல்லாக பார்க்கப்படுகிறது.

புகுஷிமா அணுமின் நிலையத்தை இயக்கிய, ‘டெப்கோ’ எனப்படும், ‘டோக்கியோ எலக்ட்ரிக் பவர்’ நிறுவனம் தான் இந்த அணுமின் நிலையத்தையும் இயக்குகிறது.

புகுஷிமா விபத்துக்குப்பின் இந்நிறுவனம் அணு உலைகளை மீண்டும் இயக்குவது இதுவே முதல் முறையாகும். முதற்கட்டமாக அணுமின் நிலையத்தின் 6வது அணு உலை, அடுத்தாண்டு, ஜனவரி 20 ஆம் திகதி முதல் மீண்டும் இயக்கப்பட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

450 மில்லியன் டொலர் பேரிடர் உதவிப் பொதியை அறிவித்தார் ஜெய்சங்கர்

இலங்கைக்கு 450 மில்லியன் டொலர் பேரிடர் மீளமைப்பு நிதியை வழங்குவதாக இந்தியா அறிவித்துள்ளது.

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் சிறப்பு தூதுவராக கொழும்பு வந்துள்ள இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் சற்று முன்னர் இதனை அறிவித்துள்ளார்.

இலங்கை வெளிவிவகார அமைச்சில், வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத்தைச் சந்தித்துப் பேச்சு நடத்திய பின்னர், தற்போது நடந்து வரும் கூட்டு செய்தியாளர் சந்திப்பில் ஜெய்சங்கர் இந்த உதவிப் பொதியை அறிவித்துள்ளார்.

இந்தியப் பிரதமரின் உத்தரவின் பேரில் வழங்கப்படும் இந்த உதவிப் பொதியில் 350 மில்லியன் டொலர் சலுகைகடனாகவும், 100 மில்லியன் டொலர் கொடையாகவும் வழங்கப்படும் என்றும், இலங்கைஅரசாங்கத்துடன் கலந்து பேசி இந்த உதவிப் பொதி இறுதி செய்யப்படும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

சினிமா

பிரபல இந்திய பாடகி ஆஷா போஸ்லே காலமானார்!

0
  பிரபல இந்திய பின்னணி பாடகி ஆஷா போஸ்லே தமது 92ஆவது வயதில் இன்று(12) காலமானார். இந்திய திரையுலகில் 10,000-இற்கும் அதிக பாடல்களை பாடியுள்ள மூத்த பாடகி ஆஷா போஸ்லே நேற்று(11) மாரடைப்பு ஏற்பட்டதையடுத்து மும்பையிலுள்ள...

சின்னத்திரை நடிகை தற்#கொ#லை!

0
  இலங்கையை பூர்வீகமாகக்கொண்ட பிரபல சின்னத்திரை நடிகையான சுபாஷினி (வயது 36) தற்#கொ#லை செய்துகொண்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. "கயல்" சின்னத்திரை தொலைக்காட்சி தொடரில் நடித்து வருபவர் சுபாஷிணி (வயது36). இலங்கையை பூர்வீகமாகக்கொண்ட இவர் கடந்த...

“தனுஷின் நட்பை இழந்தது மிகப்பெரிய அவமானம்” – விக்னேஷ் சிவன் வருத்தம்

0
தனுஷ் உடனான நட்பை இழந்தது மிகப்பெரிய அவமானம் என்று விக்னேஷ் சிவன் பகிர்ந்துள்ளார். விக்னேஷ் சிவன் இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன் நடித்துள்ள ‘எல்.ஐ.கே’ திரைப்படம் ஏப்ரல் 10-ம் திகதி திரைக்கு வரவுள்ளது. நீண்ட பிரச்சினைகளுக்கு...

செய்தி

ஐரோப்பிய ஒன்றியப் பிரதிநிதிகளின் செம்மணிக்கான வருகை ஒத்திவைப்பு

0
செம்மணி மனிதப் புதைகுழிப் பகுதியை இன்று செவ்வாய்க்கிழமை பார்வையிடவிருந்த ஐரோப்பிய ஒன்றியப் பிரதிநிதிகள், தமது விஜயத்தை அகழ்வுப் பணிகள் ஆரம்பமாகும் திகதி வரை ஒத்திவைத்துள்ளனர். செம்மணி புதைகுழிப் பகுதியை நேரில் பார்வையிட ஐரோப்பிய ஒன்றியக்...

போர் நிறுத்தம் நீடிக்கப்படாது: தாக்குதல் நடத்த தயங்கமாட்டோம்!

0
அமெரிக்காவுடன் அமைதி ஒப்பந்தம் மேற்கொள்ளாவிட்டால் ஈரானில் குண்டு மழை பொழியும் என்றும், அந்நாட்டின் மீது தாக்குதல் நடத்த துளியும் தயங்க மாட்டோம் என்றும் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் மீண்டும் எச்சரிக்கை விடுத்துள்ளார். இது குறித்து...

செம்மணி மனிதப் புதைகுழி அகழ்வு மீண்டும் ஏப்ரல் 27ஆம் திகதி ஆரம்பம்

0
நீண்டகாலமாக எதிர்பார்க்கப்பட்ட செம்மணி மனிதப் புதைகுழியின் மூன்றாம் கட்ட அகழ்வுப் பணிகள் எதிர்வரும் 27ஆம் திகதி திங்கட்கிழமை ஆரம்பமாகவுள்ளன. யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றில் நீதி வான் எஸ். லெனின்குமார் முன்னிலையில் இவ்வழக்கு இன்று விசாரணைக்கு...