Home Blog Page 158

கார் குண்டு வெடிப்பில் ரஷ்ய உயர் இராணுவ அதிகாரி பலி: பின்னணியில் உக்ரைன்?

ரஷ்ய தலைநகர் மாஸ்கோவில் நேற்று நடந்த கார் குண்டு வெடிப்பில் ரஷ்ய ராணுவ உயர் அதிகாரி உயிரிழந்தார்.

ரஷ்ய ராணுவ பயிற்சி மையத்தின் இயக்குனராக இருப்பவர் லெப்டினன்ட் ஜெனரல் ஃபனில் சர்வாரோவ்.

இவரது காரில் வைக்கப்பட்ட குண்டு நேற்று வெடித்துச் சிதறியது. இதில் சர்வாரோவ் உயிரிழந்தார்.

இதுகுறித்து ரஷ்ய புலனாய்வு அதிகாரிகள் பல கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த சதியில் உக்ரைன் சிறப்புப் படையினர் ஈடுபட்டிருக்கலாம் என ரஷ்ய புலனாய்வு அதிகாரிகள் சந்தேகிக்கின்றனர்.

ரஷ்யா – உக்ரைன் இடையே போர் நிறுத்தத்தை ஏற்படுத்த அமெரிக்காவின் புளோரிடா நகரில் ரஷ்யா மற்றும் அமெரிக்க அதிகாரிகளிடையே பேச்சுவார்த்தை ஆக்கப்பூர்வமாக நடந்து கொண்டிருக்கிறது.

இந்நிலையில், ரஷ்யாவில் நடைபெற்ற கார் குண்டு வெடிப்பில் அந்நாட்டு ராணுவ உயர் அதிகாரி கொல்லப்பட்டுள்ளார். ரஷ்யாவும் உக்ரைன் மீதான தாக்குதலை நிறுத்தவில்லை.

உக்ரைனின் ஒடேஷா துறைமுகத்தை ரஷ்ய ஏவுகணை தாக்கியதில் 8 பேர் உயிரிழந்தனர் 27 பேர் காயம் அடைந்தனர்.

டித்வா புயலினால் கண்டி மாவட்டத்தில் மாத்திரம் 689 மில்லியன் டொலர்கள் நேரடி சேதம்!

இலங்கையை தாக்கிய தாக்கிய டித்வா புயல், 4.1 பில்லியன் அமெரிக்க டொலர்கள் நேரடி சேதத்தை ஏற்படுத்தியுள்ளதாக உலக வங்கி குழுமத்தின் உலகளாவிய துரித பேரிடர் சேத மதிப்பீட்டு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

இந்த சேதம் இலங்கையின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் சுமார் 4 சதவீதத்திற்கு சமம் என்றும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இலங்கையின் அண்மைய வரலாற்றில் மிகவும் தீவிரமான மற்றும் அழிவுகரமான சூறாவளிகளில் ஒன்றான இந்த சூறாவளி, 25 மாவட்டங்களிலும் கிட்டத்தட்ட 2 மில்லியன் மக்களையும் 5 லட்சம் குடும்பங்களையும் கடுமையாக பாதித்தது.

வாழ்வாதாரங்கள், அத்தியாவசிய சேவைகள் மற்றும் பரந்த பொருளாதாரத்தை சீர்குலைத்தது.

அவசரகால பதில், மீட்பு திட்டமிடல் மற்றும் நீண்டகால பேரிடர் அபாயக் குறைப்பு முயற்சிகளை வழிநடத்த சிறிலங்கா கிரேட் அறிக்கை சரியான நேரத்தில் மற்றும் முக்கியமான நுண்ணறிவுகளை வழங்குகிறது.

இந்த மதிப்பீடு உலக வங்கியின் விரைவான, தொலைதூர, மாதிரி அடிப்படையிலான GRADE முறையைப் பயன்படுத்துகிறது.

இது உடல் சொத்துக்களுக்கு நேரடி பொருளாதார சேதத்தை மதிப்பிடுகிறது.

வருமானம் அல்லது உற்பத்தி தொடர்பான இழப்புகள் அல்லது மீட்பு மற்றும் மறுகட்டமைப்பிற்கான முழு செலவுகளும் அறிக்கையில் இல்லை.

4.1 பில்லியன் அமெரிக்க டொலர் நேரடி சேதம் ஒரு குறிப்பிடத்தக்க அதிர்ச்சியைக் குறிக்கிறது.

மிகவும் பாதிக்கப்பட்ட மத்திய மாகாணத்தில், கண்டி மாவட்டத்தில் 689 மில்லியன் டொலர் சேதங்கள் ஏற்பட்டுள்ளதாக மதிப்பிடப்பட்டுள்ளது.

இது பிரதானமாக வெள்ளம் மற்றும் நிலச்சரிவுகளால் ஏற்பட்டது.

வீதிகள், பாலங்கள், தொடருந்து மற்றும் நீர் வழங்கல் வலையமைப்புகள் உள்ளிட்ட உள்கட்டமைப்புகள் மிகப்பெரிய சேதத்தை சந்தித்துள்ளன. இது 1.735 பில்லியன் டொலர் என மதிப்பிடப்பட்டுள்ளது.

இது சந்தைகள் மற்றும் சேவைகளுக்கான இணைப்பு மற்றும் அணுகலை சீர்குலைக்கிறது.

குடியிருப்பு கட்டடங்கள் மற்றும் உள்ளடக்கங்களுக்கு மொத்தம் 985 மில்லியன் டொலர் சேதங்கள் ஏற்பட்டுள்ளன.

விவசாயத்துறை 814 மில்லியன் டொலர் சேதத்தை சந்தித்ததாக மதிப்பிடப்பட்டுள்ளது, இதில் நெல் மற்றும் காய்கறி பயிர்கள், வாழ்வாதார விவசாயம், சோளம், கால்நடைகள் மற்றும் விவசாய உள்கட்டமைப்பு, அத்துடன் உள்நாட்டு மீன்பிடித்தலுக்கு சேதம், என்பன அடங்குகின்றன.

பள்ளிகள், சுகாதார வசதிகள், வணிகங்கள் மற்றும் பெரிய தொழில்துறை வசதிகள் மற்றும் தொழிற்சாலைகள் போன்ற குடியிருப்பு அல்லாத கட்டடங்களுக்கு பெரிதும் 562 மில்லியன் டொலர் சேதம் ஏற்பட்டுள்ளது என்றும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

உகண்டாவில் பதுக்கப்பட்டதாக கூறப்படும் ராஜபக்சக்களின் பணத்தை கொண்டுவாருங்கள்!

ஆபிரிக்க நாடான உகண்டாவில் ராஜபக்சக்களால் பதுக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படும் டொலர்களை இலங்கைக்கு கொண்டுவருமாறு அரசாங்கத்திடம், நாமல் ராஜபக்ச வலியுறுத்தியுள்ளார்.

இதற்கு தேவையான அனைத்து ஒத்துழைப்புகளும் தமது தரப்பில் இருந்து வழங்கப்படும் எனவும் அவர் கூறியுள்ளார்.

இது தொடர்பில் நாமல் ராஜபக்ச மேலும் கூறியவை வருமாறு, .

“ ராஜபக்சக்கள் வெளிநாடுகளில் டொலர்களை பதுக்கியுள்ளனர் என தற்போதைய ஆட்சியாளர்களால் அன்று குற்றஞ்சாட்டப்பட்டது.
அந்த டொலர்களை நாட்டுக்கு கொண்டுவந்தால் நல்லது. அதற்கான சிறந்த காலம் தற்போதைய காலப்பகுதியாகும்.

அதற்கு அரசாங்கத்தக்கு தேவைப்படும் சகல ஒத்துழைப்பை வழங்குவதற்கு நாம் தயார். சத்திய கடசாதியைக்கூட வழங்க தயாராகவே உள்ளேன்.” – என்றார் நாமல்.

அதேவேளை, தங்கள் குடும்பத்துக்கு எதிராக முன்வைக்கப்பட்டுள்ள மேற்படி குற்றச்சாட்டை நிரூபிக்க தவறும் பட்சத்தில் அரசாங்கம் மன்னிப்பு கோர வேண்டும் என இதற்கு முன்னர் நாமல் ராஜபக்ச வலியுறுத்தி இருந்தார்.

இலங்கை பௌத்த நாடென்பதை தமிழ் அரசியல்வாதிகள் புரிந்துகொள்ள வேண்டும்! மஹிந்த அணி உபதேசம்!

இலங்கை பௌத்த நாடென்பதை தமிழ் அரசியல்வாதிகள் ஏற்கவேண்டும். பௌத்தர்களின் பொறுமைக்கும் ஓர் எல்லையுண்டு என்று ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி உறுப்பினரான முன்னாள் அமைச்சர் சரத் வீரசேகர தெரிவித்தார்.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி தலைமையகத்தில் நேற்று நடைபெற்ற ஊடக சந்திப்பின்போது அவர் மேலும் கூறியவை வருமாறு,

“இலங்கை பௌத்த நாடென்பதை கஜேந்திரகுமார் பொன்னம்பலம், சிறிதரன் உள்ளிட்டோர்கள் புரிந்துகொள்ள வேண்டும்: இதனை அனைவரும் ஏற்றுக்கொள்ள வேண்டும்.

திஸ்ஸ விகாரையில் எமது பௌத்த மக்களுக்குரிய வழிபாட்டு உரிமை மறுக்கப்படுகின்றது. அதற்கு எதிராக கஜேந்திரகுமாரின் ஆட்கள் வந்து போராட்டம் நடத்துகின்றனர்.

ஆனால் இவர்கள் கொழும்புக்கு வந்து சுதந்திரமாக கோவிலுக்கு செல்லும் நிலை காணப்படுகின்றது. இலங்கை பௌத்த நாடென்பதால்தான் இது சாத்திப்படுகின்றது.

இலங்கையில் வேறொரு மதம் பெரும்பான்மையாக இருந்திருந்தால், அந்த மதத்துக்கு எதிராக செயல்பட்டுவிட்டு சுதந்திரமாக இருக்க முடியுமா?

பௌத்த தர்மம் ஊடாக வழங்கப்பட்ட போதனைகளால்தான் பொறுமை காக்கின்றோம். ஆனால் அந்த பொறுமைக்கும் ஓர் எல்லையுண்டு என்பதை புரிந்துகொள்ள வேண்டும்.

அரசமைப்பின் 9 ஆவது சரத்தில் பௌத்த சாசனத்தை காக்க வேண்டியது அரசாங்கத்தின் பொறுப்பாகும். எனினும், அரசமைப்பை மீறும் வகையிலேயே திஸ்ஸ விகாரை விடயத்தில் நடவடிக்கை இடம்பெறுகின்றது.” – என்றார் சரத்வீரசேகர.

மரக்கறி விலைப்பட்டியல் (23.12.2025)

நுவரெலியா பொருளாதார மத்திய நிலையத்தால் இன்று (23) வெளியிடப்பட்டுள்ள மரக்கறி வகைகளின் (ஒரு கிலோ) விலை பட்டியல்…

“புரட்சிகர மக்கள் சக்தி ” என பெயர் மாற்றம் செய்யப்படுகிறது சந்திரசேகரன் மக்கள் முன்னணி!

 

அனுஷா சந்திரசேகரன் தலைமையில் 2020ம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டது சந்திரசேகரன் மக்கள் முன்னணி என்ற கட்சியாகும்.

நுவரெலியா மாவட்டத்தில் அரசியல் ரீதியாக இன்றுவரை தொடர்ந்து சேவைகளை வழங்கி வந்த இந்த கட்சி இனி புரட்சிகர மக்கள் சக்தி (Revolutionary Peoples Power) என பெயர் மாற்றம் செய்யப்படுகிறது.

இது தொடர்பில் பின்வருமாரு ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்டார் கட்சியின் செயலாளர் அனுஷா சந்திரசேகரன்

மலையக மக்கள் முன்னணியின் ஸ்தாபக தலைவர் அமரர் சந்திரசேகரன் அவர்களது கொள்கைகளை அரசியல் ரீதியாக கொண்டு செல்லும் நோக்குடனேயே நாம் ஆரம்பித்த புதிய கட்சிக்கு “சந்திரசேகரன் மக்கள் முன்னணி ” என பெயரிட்டிருந்தோம்.

ஆனாலும் காலப்போக்கில் நுவரெலியா மாவட்டத்தில் மாத்திரமன்றி அனைத்து பிரதேசங்களை உள்ளடக்கிய வகையிலும், இன மொழி பேதமின்றி அனைத்து மக்களின் அரசியல் அபிலாசைகளையும் பூர்த்தி செய்யும் ஓர் அமைப்பாக நாம் மாறவேண்டிய அவசியமும் ஏற்பட்டது.

இது தொடர்பில் நாம் அதீத கவனம் செலுத்தி கடந்த காலங்களில் எமது பொதுக்குழு கூட்டங்களிலும் கலந்தாலோசித்து மக்கள் நலனை முன்னிறுத்தி நாம் எமது கட்சியின் பெயரை “புரட்சிகர மக்கள் சக்தி என பெயர் மாற்றம் செய்கிறோம் என்பதனை பகிரங்கமாக அறிவிக்கிறோம் என தெரிவித்தார்.

தரமற்ற தடுப்பூசி: பக்கச்சார்பற்ற விசாரணை வேண்டும்!

” குமட்டல், வாந்தி, தலைச்சுற்று என்பனவற்றைக் குறைப்பதற்கும் தடுப்பதற்கும் கொடுக்கப்பட்ட தடுப்பூசிகளில் நச்சுத்தன்மை ஏற்பட்டதால், ஹபரகட மற்றும் மத்துகம பகுதிகளைச் சேர்ந்த இரண்டு பெண்கள் ஐ.டி.எச்.வைத்தியசாலையில் கடுமையாக சுகவீனமுற்று இறுதியில் உயிரிழந்தனர்.

எங்களுக்குத் தெரிந்தவரை, கண்டி வைத்தியசாலையில் நடத்தப்பட்ட முதற்கட்ட நுண்ணுயிரியல் பரிசோதனையில் இந்த தடுப்பூசிகளில் பாக்டீரியாக்கள் இருப்பது தெரியவந்துள்ளது. இந்தத் தகவலுடன், மருந்துகள் ஒழுங்குபடுத்தல் அதிகார சபை, வைத்தியசாலை கட்டமைப்பிலிருந்து 270,000 இறக்குமதி செய்யப்பட்ட தடுப்பூசிகளை திரும்பப் பெற்றுள்ளது.” என்று எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

இந்தத் தகவலின் உண்மைத்தன்மையை சுகாதார அமைச்சரும் அரசாங்கமும் நாட்டுக்கு வெளிப்படுத்த வேண்டும். இந்த தடுப்பூசி கொள்வனவு அவரச கொள்வனவா ? இங்கு இதன் தரம் பரிசோதிக்கப்பட்டதா? அவ்வாறு மேற்கொண்ட பரிசோதனைகளின் முடிவுகள் எத்தகையன என்பது தொடர்பில் நாம் தெரிந்து கொள்ள வேண்டியுள்ளன.

நமது நாட்டில் மருந்துகள் மற்றும் தடுப்பூசிகளின் தரத்தை பரிசோதிக்கும் வழிமுறைகளைத் தெரிந்து கொள்ள வேண்டியுள்ளது. இரண்டு உயிர்கள் பலியாகிய சம்பவங்கள் தொடர்பாக அரச வைத்திய அதிகாரிகள் முன்வைத்த கருத்துக்களுக்கு அரசாங்கத்தின் பதிலை அறிய விரும்புகிறோம் என்று எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

தரமற்ற மருந்துகள் தொடர்பில் (22) விசேட கூற்றை முன்வைத்து கருத்துத் தெரிவிக்கும் போதே எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இவ்வாறு தெரிவித்தார்.

உலக சுகாதார ஸ்தாபனத்தால் ஏற்றுக்கொள்ளப்பட்ட வழிமுறைகளைக் கொண்ட ஆய்வக வசதிகள் நமது நாட்டில் காணப்படுகின்றனவா என்பதையும், உலக சுகாதார ஸ்தாபனத்தால் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஆய்வக வசதிகளை நிறுவுவதற்கு அரசாங்கம் இரண்டு வரவு செலவுத் திட்டங்கள் ஊடாக எடுத்த நடவடிக்கைகளை முன்வைக்குமாறும், இந்தக் கேள்விகளுக்கு அரசாங்கம் பதிலளிக்க வேண்டும் என்றும் எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

சேனக பிபிலே மருந்துக் கொள்கையை ஐக்கிய மக்கள் சக்தியும் ஐக்கிய மக்கள் கூட்டணியும் முழுமையாக ஏற்றுக்கொள்கின்றன. தரமற்ற மருந்துப் பொருட்கள் இறக்குமதி மற்றும் ஊழலை நாட்டிற்கு வெளிக்கொணர்ந்து நம்பிக்கையில்லாத் தீர்மானங்களைக் கூட நாம் முன்வைத்துள்ளோம். இதற்காக வைத்தியர் சமல் சஞ்சீவவும் காவிந்த ஜயவர்தனவும் பாரிய போராட்டத்தை நடத்தி வந்தனர்.
அவ்வாறு போதிலும் அண்மையில், தவறான செய்திகளைப் பரப்பி, மருந்துகள் தொடர்பில் அவர்கள் முன்வைத்த கருத்துக்கள், ஐக்கிய மக்கள் சக்தியின் கருத்து அல்ல என சுட்டிக்காட்டப்பட்டன. இந்நாட்டில் தரமற்ற மருத்துவ மோசடி நடைபெற்று வரும் வேளையில், சேனக பிபிலேவின் கொள்கையை பெயரளவில் மட்டுமே ஏற்றுக்கொண்டவர்கள் போலிச் செய்திகளை உருவாக்கி வருகின்றனர்.

இந்த தடுப்பூசிகளால் ஏற்பட்ட இரண்டு மரணங்கள் தொடர்பில் பக்கசார்பற்ற விசாரணை நடத்தப்பட்டு, நாட்டில் தரமற்ற தடுப்பூசி மாபியாவின் தொடர்ச்சியான செயல்பாட்டிற்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும். அவ்வாறு நடவடிக்கை எடுக்காத பட்சத்தில், சுகாதார அமைச்சர் என்ற முறையில் தனது பொறுப்புகளை அவர் புறக்கணித்தவராக கருதப்படுவார்.

220 இலட்சம் மக்களின் சுகாதாரத்தை மனித உரிமையாகும் அடிப்படை உரிமையாகவும் கருதும் ஐக்கிய மக்கள் சக்தி இந்த தரமற்ற தடுப்பூசி விவகாரத்துக்காக இன்றும் குரல் கொடுக்கும் என்று எதிர்க்கட்சித் தலைவர் இங்கு மேலும் தெரிவித்தார்.

கொழும்பு மாநகரசபை பட்ஜட் தோற்கடிப்பு!

கொழும்பு மாநகரசபையின் 2026 ஆம் ஆண்டுக்கான வரவு- செலவுத் திட்டம் தோற்கடிக்கப்பட்டுள்ளது.
கொழும்பு மாநகரசபை தேசிய மக்கள் சக்தியின் ஆளுகையின் கீழ் உள்ளது.
இந்நிலையில் வரவு- செலவுத் திட்டத்தை முன்வைக்கும் கூட்டத்தொடர் இன்று நடைபெற்றது. இதன்போது வரவு- செலவுத் திட்டத்துக்கு ஆதரவாக 57 வாக்குகள் அளிக்கப்பட்டன. 60 வாக்குகள் எதிராக அளிக்கப்பட்டன.

இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் உட்பட 29 தூதுவர்களை திருப்பி அழைக்கிறார் ட்ரம்ப்!

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் அரசாங்கம் இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ஜூலி சங் உள்ளிட்ட தூதுவர்கள் மற்றும் மூத்த தூதரக அதிகாரிகளை, திருப்பி அழைக்கத் தொடங்கியுள்ளது.

ட்ரம்பின் “அமெரிக்காவுக்கு முதலிடம் ” நிகழ்ச்சி நிரலுடன் ஒத்துப்போகும் வகையில், அமெரிக்க இராஜதந்திர பிரதிநிதித்துவத்தை பரந்தளவில் மீளமைக்கும் செயற்பாட்டின் ஒரு பகுதியாக, இந்த நடவடிக்கை அமைந்துள்ளது.

இதற்கமைய, குறைந்தது 29 நாடுகளில் உள்ள தூதுவர்களின் பதவிக்காலம் ஜனவரியில் முடிவடையும் என்று இராஜாங்கத் திணைக்கள அதிகாரிகள் தெரிவித்தனர்.

திருப்பி அழைக்கப்படுபவர்களில் பெரும்பாலோர் ஜோ பைடன் நிர்வாகத்தின் போது நியமிக்கப்பட்டனர் என்று, ட்ரம்பின் இரண்டாவது பதவிக்காலத்தில் அரசியல் நியமனங்கள் நீக்கப்பட்ட பின்னர் அவர்கள் பதவிகளில் அமர்த்தப்பட்டவர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அவர்களை வெளியேறுமாறு முறைப்படியான அறிவிப்பு புதன்கிழமை வழங்கப்பட்டது.

திரும்ப அழைக்கப்பட்டவர்கள் தங்கள் வெளிநாட்டு சேவை அந்தஸ்தை இழக்க மாட்டார்கள் என்றும், அதற்கு பதிலாக வேறு நியமனங்களுக்காக வொஷிங்டனுக்குத் திரும்புவார்கள் என்றும் அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.

திருப்பி அழைக்கப்படும் இராஜதந்திரிகளின் சரியான எண்ணிக்கை அல்லது அடையாளங்களை உறுதிப்படுத்த இராஜாங்கத் திணைக்களம் மறுத்துவிட்டது.ஆனால் இந்த நடவடிக்கையை ஒரு வழக்கமான செயல்முறை என்று விவரித்துள்ளது.

ஆபிரிக்காவில் இருந்து அதிகளவாக, நைஜீரியா, ருவாண்டா, செனகல் மற்றும் உகண்டா உள்ளிட்ட 13 நாடுகளைச் சேர்ந்த தூதுவர்கள் திரும்ப அழைக்கப்பட்டுள்ளனர்.

அதைத் தொடர்ந்து ஆசிய-பசிபிக் பிராந்தியத்தில், பிஜி, லாவோஸ், பிலிப்பைன்ஸ் மற்றும் வியட்நாம் உள்ளிட்ட ஆறு நாடுகளில் இருந்தும், ஐரோப்பாவில், ஆர்மேனியா, வடக்கு மசிடோனியா, மொண்டினீக்ரோ மற்றும் ஸ்லோவாக்கியாவிற்கான தூதுவர்களும் திருப்பி அழைக்கப்பட்டுள்ளனர்.

மத்திய கிழக்கில் அல்ஜீரியா மற்றும் எகிப்தில் இருந்தும், தெற்காசியாவில், நேபாளம் மற்றும் சிறிலங்காவில் இருந்தும், மேற்கு அரைக்கோளத்தில் குவாட்டமாலா மற்றும் சுரினாமில் இருந்தும் தூதுவர்கள் திரும்ப அழைக்கப்பட்டுள்ளனர்.

டித்வா புயலால் ஏற்பட்ட சேதம் எவ்வளவு தெரியுமா? வெளியானது உலக வங்கி அறிக்கை!

இலங்கையை தாக்கிய தாக்கிய டித்வா புயல், 4.1 பில்லியன் அமெரிக்க டொலர்கள் நேரடி சேதத்தை ஏற்படுத்தியுள்ளதாக உலக வங்கி குழுமத்தின் உலகளாவிய துரித பேரிடர் சேத மதிப்பீட்டு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

இந்த சேதம் இலங்கையின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் சுமார் 4 சதவீதத்திற்கு சமம் என்றும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இலங்கையின் அண்மைய வரலாற்றில் மிகவும் தீவிரமான மற்றும் அழிவுகரமான சூறாவளிகளில் ஒன்றான இந்த சூறாவளி, 25 மாவட்டங்களிலும் கிட்டத்தட்ட 2 மில்லியன் மக்களையும் 5 லட்சம் குடும்பங்களையும் கடுமையாக பாதித்தது.

வாழ்வாதாரங்கள், அத்தியாவசிய சேவைகள் மற்றும் பரந்த பொருளாதாரத்தை சீர்குலைத்தது.

அவசரகால பதில், மீட்பு திட்டமிடல் மற்றும் நீண்டகால பேரிடர் அபாயக் குறைப்பு முயற்சிகளை வழிநடத்த சிறிலங்கா கிரேட் அறிக்கை சரியான நேரத்தில் மற்றும் முக்கியமான நுண்ணறிவுகளை வழங்குகிறது.

இந்த மதிப்பீடு உலக வங்கியின் விரைவான, தொலைதூர, மாதிரி அடிப்படையிலான GRADE முறையைப் பயன்படுத்துகிறது.

இது உடல் சொத்துக்களுக்கு நேரடி பொருளாதார சேதத்தை மதிப்பிடுகிறது.

வருமானம் அல்லது உற்பத்தி தொடர்பான இழப்புகள் அல்லது மீட்பு மற்றும் மறுகட்டமைப்பிற்கான முழு செலவுகளும் அறிக்கையில் இல்லை.

4.1 பில்லியன் அமெரிக்க டொலர் நேரடி சேதம் ஒரு குறிப்பிடத்தக்க அதிர்ச்சியைக் குறிக்கிறது.

மிகவும் பாதிக்கப்பட்ட மத்திய மாகாணத்தில், கண்டி மாவட்டத்தில் 689 மில்லியன் டொலர் சேதங்கள் ஏற்பட்டுள்ளதாக மதிப்பிடப்பட்டுள்ளது.

இது பிரதானமாக வெள்ளம் மற்றும் நிலச்சரிவுகளால் ஏற்பட்டது.

வீதிகள், பாலங்கள், தொடருந்து மற்றும் நீர் வழங்கல் வலையமைப்புகள் உள்ளிட்ட உள்கட்டமைப்புகள் மிகப்பெரிய சேதத்தை சந்தித்துள்ளன. இது 1.735 பில்லியன் டொலர் என மதிப்பிடப்பட்டுள்ளது.

இது சந்தைகள் மற்றும் சேவைகளுக்கான இணைப்பு மற்றும் அணுகலை சீர்குலைக்கிறது.

குடியிருப்பு கட்டடங்கள் மற்றும் உள்ளடக்கங்களுக்கு மொத்தம் 985 மில்லியன் டொலர் சேதங்கள் ஏற்பட்டுள்ளன.

விவசாயத்துறை 814 மில்லியன் டொலர் சேதத்தை சந்தித்ததாக மதிப்பிடப்பட்டுள்ளது, இதில் நெல் மற்றும் காய்கறி பயிர்கள், வாழ்வாதார விவசாயம், சோளம், கால்நடைகள் மற்றும் விவசாய உள்கட்டமைப்பு, அத்துடன் உள்நாட்டு மீன்பிடித்தலுக்கு சேதம், என்பன அடங்குகின்றன.

பள்ளிகள், சுகாதார வசதிகள், வணிகங்கள் மற்றும் பெரிய தொழில்துறை வசதிகள் மற்றும் தொழிற்சாலைகள் போன்ற குடியிருப்பு அல்லாத கட்டடங்களுக்கு பெரிதும் 562 மில்லியன் டொலர் சேதம் ஏற்பட்டுள்ளது என்றும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

சினிமா

பிரபல இந்திய பாடகி ஆஷா போஸ்லே காலமானார்!

0
  பிரபல இந்திய பின்னணி பாடகி ஆஷா போஸ்லே தமது 92ஆவது வயதில் இன்று(12) காலமானார். இந்திய திரையுலகில் 10,000-இற்கும் அதிக பாடல்களை பாடியுள்ள மூத்த பாடகி ஆஷா போஸ்லே நேற்று(11) மாரடைப்பு ஏற்பட்டதையடுத்து மும்பையிலுள்ள...

சின்னத்திரை நடிகை தற்#கொ#லை!

0
  இலங்கையை பூர்வீகமாகக்கொண்ட பிரபல சின்னத்திரை நடிகையான சுபாஷினி (வயது 36) தற்#கொ#லை செய்துகொண்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. "கயல்" சின்னத்திரை தொலைக்காட்சி தொடரில் நடித்து வருபவர் சுபாஷிணி (வயது36). இலங்கையை பூர்வீகமாகக்கொண்ட இவர் கடந்த...

“தனுஷின் நட்பை இழந்தது மிகப்பெரிய அவமானம்” – விக்னேஷ் சிவன் வருத்தம்

0
தனுஷ் உடனான நட்பை இழந்தது மிகப்பெரிய அவமானம் என்று விக்னேஷ் சிவன் பகிர்ந்துள்ளார். விக்னேஷ் சிவன் இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன் நடித்துள்ள ‘எல்.ஐ.கே’ திரைப்படம் ஏப்ரல் 10-ம் திகதி திரைக்கு வரவுள்ளது. நீண்ட பிரச்சினைகளுக்கு...

செய்தி

ஐரோப்பிய ஒன்றியப் பிரதிநிதிகளின் செம்மணிக்கான வருகை ஒத்திவைப்பு

0
செம்மணி மனிதப் புதைகுழிப் பகுதியை இன்று செவ்வாய்க்கிழமை பார்வையிடவிருந்த ஐரோப்பிய ஒன்றியப் பிரதிநிதிகள், தமது விஜயத்தை அகழ்வுப் பணிகள் ஆரம்பமாகும் திகதி வரை ஒத்திவைத்துள்ளனர். செம்மணி புதைகுழிப் பகுதியை நேரில் பார்வையிட ஐரோப்பிய ஒன்றியக்...

போர் நிறுத்தம் நீடிக்கப்படாது: தாக்குதல் நடத்த தயங்கமாட்டோம்!

0
அமெரிக்காவுடன் அமைதி ஒப்பந்தம் மேற்கொள்ளாவிட்டால் ஈரானில் குண்டு மழை பொழியும் என்றும், அந்நாட்டின் மீது தாக்குதல் நடத்த துளியும் தயங்க மாட்டோம் என்றும் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் மீண்டும் எச்சரிக்கை விடுத்துள்ளார். இது குறித்து...

செம்மணி மனிதப் புதைகுழி அகழ்வு மீண்டும் ஏப்ரல் 27ஆம் திகதி ஆரம்பம்

0
நீண்டகாலமாக எதிர்பார்க்கப்பட்ட செம்மணி மனிதப் புதைகுழியின் மூன்றாம் கட்ட அகழ்வுப் பணிகள் எதிர்வரும் 27ஆம் திகதி திங்கட்கிழமை ஆரம்பமாகவுள்ளன. யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றில் நீதி வான் எஸ். லெனின்குமார் முன்னிலையில் இவ்வழக்கு இன்று விசாரணைக்கு...