Home Blog Page 162

பேரிடரால் ஏற்பட்ட இழப்பு எவ்வளவு? உலக வங்கியின் அறிக்கை நாளை கையளிப்பு!

டித்வா புயல் தாக்கத்தையடுத்து ஏற்பட்ட பேரிடரால் இலங்கையின் பொருளாதாரத்துக்கு ஏற்பட்ட இழப்பு தொடர்பான உத்தேச மதிப்பீட்டு அறிக்கை நாளைதிங்கட்கிழமை ஜனாதிபதியிடம் கையளிக்கப்படவுள்ளது என தெரியவருகின்றது.

உலக வங்கியால் மேற்படி அறிக்கை கையளிக்கப்படும் .

இலங்கையில் ஏற்பட்ட பேரிடர் தொடர்பில் மதிப்பீடு செய்து ஏற்பட்ட இழப்பு தொடர்பான அறிக்கையை வழங்குமாறு உலக வங்கியிடம் இலங்கை கோரி இருந்தது.

இதற்கான உத்தேச மதிப்பீட்டு அறிக்கையே இவ்வாறு கையளிக்கப்படவுள்ளது.

அதேவேளை, முழுமையான சேதம் தொடர்பான துல்லியமான தகவல்களை பெறுவதற்குரிய மதிப்பீட்டு நடவடிக்கைக்கு 3 மாதங்கள்வரை செல்லும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

பேரிடலிருந்து இலங்கையை மீட்க பேருதவி வழங்க இந்தியா திட்டம்!

நெருக்கடியில் சிக்கிக் கொண்டிருக்கும் இலங்கையைப் பேரிடரின் பின் மீட்பதற்கான பெரும் உதவித் திட்டம் ஒன்றை இந்தியாவின் சார்பில் வழங்குவதற்குப் பிரதமர் நரேந்திர மோடி முடிவு செய்திருக்கின்றார் என்றும், அதனைக் கொழும்பில் வைத்து அறிவிக்கவே அவரின் விசேட பிரதிநிதியாக இந்திய வெளி விவகார அமைச்சர் கொழும்பு வருகின்றார் என்றும் தெரிவிக்கப்படுகின்றது.

இந்த விடயங்கள் பற்றிய உத்தியோகபூர்வ அறிவித்தல் எதையும் கொழும்பில் உள்ள இந்தியத் தூதரகம் இதுவரை வெளியிடவில்லை.

ஆயினும் தனிப்பட்ட சில செய்தி வட்டாரங்கள் இந்தச் செய்திகளைக் கோடி காட்டின.

ஒரு நாள் விஜயமாக கொழும்பு வரும் இந்திய வெளிவிவகார அமைச்சர் அடுத்த நாள் செவ்வாய்க்கிழமை கொழும்பில் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பிரதிநிதிகளையும், ஜனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டணியின் பிரதிநிதிகளையும் சேர்த்து ஒன்றாகச் சந்திக்க இருக்கின்றார் என்று தெரிகின்றது.

இலங்கை அரசின் தலைவர்களைத் தவிர, எதிர்க்கட்சிகள் தரப்பில் வேறு யார் யாரை இந்திய வெளிவிவகார அமைச்சர் கொழும்பில் சந்திப்பார் என்பது பெரும்பாலும் இன்று தெரியவரும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

இலங்கை அண்மைய பேரிடரில் சிக்கிய உடனேயே விரைந்து நிவாரண உதவிகளையும், மீட்பு நடவடிக்கை வசதிகளையும் இந்தியா அனுப்பத் தொடங்கியது. அந்த உதவியை அது தொடர்ந்து வழங்கி வருவதும் குறிப்பிடத்தக்கது. இந்தியாவின் உடனடி மீட்பு நடவடிக்கைகள் இப்போது வரை இலங்கையில் தொடர்ந்து கொண்டிருப்பதும் கவனத்துக்குரியது.

மக்களின் வாழ்க்கையை மீட்டெடுப்பது குறித்து ஜனாதிபதி தலைமையில் ஆராய்வு!

‘Rebuilding Sri Lanka’ வேலைத் திட்டத்தின் கீழ் மக்களின் வாழ்க்கையை மீண்டும் கட்டியெழுப்ப மாவட்ட அளவில் திட்டமிடப்பட்டுள்ள வேலைத் திட்டங்கள் மற்றும் அதன்போது எழுந்துள்ள பிரச்சினைகள் குறித்து ஆராய்வதற்கான விசேட கலந்துரைாயாடல் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தலைமையில் ன்று (20) ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்றது.

பாதுகாப்பு, விவசாயம், நீர்ப்பாசனம், நீர் வழங்கல், மீன்பிடி, போக்குவரத்து, வீடமைப்பு மற்றும் நிர்மாணம் ஆகிய துறைகளைச் சேர்ந்த அமைச்சுகளின் செயலாளர்கள், சம்பந்தப்பட்ட நிறுவனங்களின் தலைவர்கள் மற்றும் அனைத்து மாவட்ட செயலாளர்களின் பங்கேற்புடன் இக்கூட்டம் நடைபெற்றது.

வீடுகளை சுத்தம் செய்வதற்கு அரசாங்கம் வழங்கும் 25,000 ரூபா, வீட்டு உபயோகப் பொருட்கள் வாங்குவதற்கு வழங்கும் 50,000 ரூபா ஆகிய உதவித்தொகைகளை டிசம்பர் 31 ஆம் திகதிக்கு முன் வழங்க நடவடிக்கை எடுக்குமாறு இங்கு ஜனாதிபதி அறிவுறுத்தினார்.

மேலும், வீடுகள் மற்றும் பயிர்களுக்கு ஏற்பட்ட சேதங்களுக்கான இழப்பீட்டுத் தொகை வழங்குதல், நாடு பூராகவும் பராமரிக்கப்படும் பாதுகாப்பு மையங்களின் செயல்பாடுகள்,மக்களை மீளக் குடியமர்த்தல்,வாழ்வாதாரங்களை மீண்டும் கட்டியெழுப்புதல் மற்றும் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த மாவட்ட அளவில் மேற்கொள்ளப்படும் வேலைத் திட்டங்கள் மற்றும் அதன் முன்னேற்றம் ஆகியவை இங்கு விரிவாக ஆராயப்பட்டன.

இழப்பீடு வழங்கும் செயல்பாட்டில் எழுந்துள்ள பிரச்சினைகள் குறித்து விசேட கவனம் செலுத்தப்பட்டதுடன், அந்தப் பணிகளை செயற்திறனுடன் முன்னெடுக்கவும் எவரையும் கைவிடாத வகையில் இழப்பீடு பெற உரிமை உள்ள அனைவருக்கும் அதனை வழங்க வேண்டியதன் அவசியத்தை ஜனாதிபதி வலியுறுத்தினார்.

மேலும், மக்களை மீள்குடியேற்றுவது மற்றும் அதற்குத் தேவையான காணிகளை அடையாளம் காண்பது குறித்தும் விரிவாகக் கலந்துரையாடப்பட்டதுடன், பிரதான மாவட்டங்களில் செயல்படுத்தப்பட வேண்டிய வீட்டுத் திட்டங்கள் தொடர்பில் தனியான திட்டத்தைத் தயாரிப்பதற்கும், அனைத்து தரப்பினரின் பங்களிப்புடன் இது தொடர்பாக மீண்டும் கலந்துரையாடல் நடத்துவதற்கும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஜனாதிபதி தெரிவித்தார்.

அதிக ஆபத்துள்ள பகுதிகளில் இருந்து மக்களை உடனடியாக வெளியேற்றி பாதுகாப்பான இடங்களில் மீள்குடியேற்ற வேண்டியதன் அவசியத்தையும் சுட்டிக்காட்டிய ஜனாதிபதி, வீட்டு சேதங்களுக்கு இழப்பீடு வழங்கும்போது அத்தகைய நடவடிக்கைகளை நியாயமானதாகவும் வெளிப்படைத்தன்மையுடனும் செயல்படுத்த வேண்டியதன் அவசியத்தையும் விளக்கினார்.

பெரும் போகத்திற்கு விவசாயிகளை தயார்படுத்துவதற்காக நீர்ப்பாசன கட்டமைப்புகளின் புனரமைப்பு, இழப்பீடு மற்றும் விதை நெல் உள்ளிட்ட வசதிகளை வழங்குவதற்கான வேலைத் திட்டங்களின் செயல்பாட்டையும் இதன்போது ஜனாதிபதி கேட்டறிந்தார்.

மேலும், சேதமடைந்த கால்நடை பண்ணைகளுக்கு இழப்பீடு வழங்கி, அந்த மக்களின் வாழ்வாதாரத்தை மீண்டும் தொடங்குதல், அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட சிறு வர்த்தகங்களை மீண்டும் ஆரம்பிக்க உதவுதல், மீன்பிடித் தொழிலை மீட்டெடுப்பது மற்றும் பாடசாலை மாணவர்களுக்காக அரசாங்கம் வழங்கும் 15,000 ரூபா உதவித்தொகையை உடனடியாக வழங்கி நிறைவு செய்தல் போன்ற வேலைத் திட்டங்களின் முன்னேற்றம் குறித்தும் இங்கு கலந்துரையா்ப்பட்டது.

சேதமடைந்த கடவுச்சீட்டுகள் மற்றும் அடையாள அட்டைகளை மீண்டும் வழங்குவதற்கான வேலைத்திட்டம் குறித்தும் ஜனாதிபதி கேட்டறிந்தார்.

இலங்கை வருகிறார் இந்திய வெளிவிவகார அமைச்சர்: தமிழ்க் கட்சிகளுடன் பேச்சு!

இந்திய வெளிவிவகார அமைச்சர் சுப்பிரமணியம் ஜெய்சங்கர் எதிர்வரும் 23ஆம் திகதி செவ்வாயன்று ஒரு நாள் விஜயமாக கொழும்பு வருகின்றார்.

இலங்கைத் தலைவர்களைச் சந்தித்துப் பேசும் அவர் கொழும்பில் இலங்கைத் தமிழரசுக் கட்சி மற்றும் ஜனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டணி (சங்குக் கூட்டணி) ஆகிய தரப்பினரை ஒன்றாகச் சந்திக்கவிருக்கின்றார் எனத் தெரியவருகின்றது.

பேரிடரால் பெரிதும் பாதிக்கப்பட்ட இலங்கைக்கு உடனடி அயல்நாடு என்ற முறையில் பெருமளவில் விரைந்தும், தொடர்ந்தும் இந்தியா உதவி வரும் பின்னணியில் இந்திய வெளியுறவு அமைச்சர் ஒரு நாள் விஜயமாகக் கொழும்பு வருகின்றார்.

ஏற்கனவே கடந்த ஏப்ரலில் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி கொழும்பு வந்திருந்த சமயம் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் நான்கு தலைவர்களையும் ஜனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டணியின் இரண்டு தலைவர்களையும் சேர்த்து ஒன்றாகச் சந்தித்திருந்தார்.

அந்தச் சந்திப்பின் தொடர்ச்சி இப்போது இந்திய வெளிவிவகார அமைச்சரின் கொழும்பு விஜயத்தின் போதும் தொடர்ந்து இடம்பெறும் எனத் தெரிகின்றது.

பிரதமர் மோடியைச் சந்தித்த தமிழரசுக் கட்சி பிரமுகர்களான கட்சியின் தலைவர் சி.வி.கே.சிவஞானம், பொதுச்செயலாளர் எம்.ஏ.சுமந்திரன், நாடாளுமன்ற உறுப்பினர்களான சிவஞானம் சிறீதரன், இராசமாணிக்கம் சாணக்கியன் ஆகியோர் செவ்வாயன்று இந்திய வெளிவிவகார அமைச்சரைச் சந்திப்பர் என்று தெரிகின்றது.

சங்கு கூட்டணியின் சார்பில் இரண்டு தலைவர்கள் முன்னர் இந்தியப்  பிரதமர் நரேந்திர மோடியுடனான சந்திப்பில் பங்குபற்றியிருந்தனர். இந்தத் தடவையும் அவர்கள் சார்பில் இருவர் இந்தப் பேச்சுக்களில் பங்குபற்றுவர் என்று தெரிகின்றது.

ஏற்கனவே இதே 23ஆம் திகதி இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவரும், சங்கு கூட்டணியில் இடம்பெற்றுள்ள ஐந்து கட்சிகளின் தலைவர்களுமாகச் சேர்ந்து இலங்கைக்கான இந்தியத் தூதுவர் சந்தோஷ் ஜாவைச் சந்திப்பதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. ஆயினும் இந்திய வெளிவிவகார அமைச்சரின் வருகையையொட்டி அந்தச் சந்திப்பு தள்ளிப் போய் இருப்பதாகத் தெரியவருகின்றது.

இந்திய வெளிவிவகார அமைச்சரின் ஒரு நாள் கொழும்பு விஜய விவரங்கள் நாளை அளவில் உறுதியாக வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

எனினும், இந்த விஜயத்தின்போது அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸ் அல்லது தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி அல்லது தமிழ் மக்கள் பேரவை ஆகியவற்றின் பிரதிநிதிகளை இந்திய வெளிவிவகார அமைச்சர் சந்திப்பதற்கான வாய்ப்புகள் இல்லை எனத் தெரியவந்தது.

இலங்கையில் ஆட்சி அமைத்திருக்கும் தேசிய மக்கள் சக்தி அரசின் பிரதான பங்காளிகளான ஜே.வி.பியின் பொதுச்செயலாளர் மாத இறுதியில் புதுடில்லி செல்கின்றார் என்று கூறப்படும் பின்னணியில் அதற்கு முன்னதாக இந்திய வெளிவிவகார அமைச்சர் சுப்பிரமணியம் ஜெய்சங்கர் கொழும்பு வருகை தந்து இலங்கைத் தலைவர்களைச் சந்தித்துப் பேசவிருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

இலங்கைக்கு 206 மில்லியன் அமெரிக்க டொலர் அவசர நிதி உதவியை வழங்க IMF அங்கீகாரம்

டித்வா சூறாவளி காரணமாக ஏற்படும் பொருளாதார பாதிப்புகளை நிவர்த்தி செய்வதற்காக இலங்கைக்கு 206 மில்லியன் அமெரிக்க டொலர் அவசர நிதி உதவியை வழங்க சர்வதேச நாணய நிதியத்தின் அங்கீகாரம் கிடைத்துள்ளது.

நவம்பர் 28 ஆம் திகதி தாக்கிய சூறாவளியினால் 600க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்ததுடன், 100,000க்கும் மேற்பட்டவர்கள் இடம்பெயர்ந்தனர்.

மேலும், அனர்த்தம் ஏற்பட்ட பகுதிகளில் உட்கட்டமைப்பு வசதிகள் மற்றும் மக்களின் வாழ்வாதாரங்கள் பெருமளவில் சேதமடைந்ததுடன், இதன் விளைவாக நாட்டின் வருமானம் மற்றும் கொடுப்பனவுகளில் பாதிப்பு ஏற்பட்டது.

இந்த அவசரகாலத்தின் போது சர்வதேச நாணய நிதியம் அளித்த உதவிக்கு அரசாங்கம் நன்றி தெரிவித்துள்ளது. இந்த உதவி அவசர மனிதாபிமானத் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்கும், மீள்கட்டமைப்பு மற்றும் புனர்நிர்மாணப் பணிகளுக்கு பெரிதும் உதவும்.

நிதி ஒழுக்கம், கடன் நிலைபேற்றுத்தன்மை மற்றும் இந்த நிதிகளைப் பயன்படுத்தும்போது வெளிப்படைத்தன்மை, பொறுப்புக்கூறலைப் பேணி, அரச நிதி முகாமைத்துவ சட்டங்களுக்கு இணங்க செயற்படுவதை உறுதி செய்வதற்கான அர்ப்பணிப்பை அரசாங்கம் மீண்டும் உறுதிப்படுத்தியது.

இந்தப் பேரழிவின் பொருளாதார தாக்கத்தை முழுமையாக மதிப்பிடுவதற்கு எடுக்கும் காலம் காரணமாக, சர்வதேச நாணய நிதியம் இலங்கையின் நீடிக்கப்பட்ட கடன் வசதி நிகழ்ச்சித் திட்டத்தின் ஐந்தாவது மீளாய்வை ஒத்திவைத்துள்ளதுடன், அந்த கலந்துரையாடல்களை 2026 ஆம் ஆண்டின் ஆரம்பத்தில் மீண்டும் தொடங்க திட்டமிடப்பட்டுள்ளன.

அவசர புனரமைப்பு மற்றும் மனிதாபிமான தேவைகளைப் பூர்த்தி செய்ய இந்த அவசர நிதியுதவி பயன்படும் என்று குறிப்பிட்ட சர்வதேச நாணய நிதியத்தின் பிரதி முகாமைத்துவப் பணிப்பாளர் கென்ஜி ஒகமுரா, சூறாவளி மற்றும் அதன் பொருளாதார தாக்கத்திலிருந்து மீண்டு வரும்போது இந்நாட்டுத் தலைவர்கள், நிதி முகாமைத்துவம், வெளிப்படைத்தன்மை மற்றும் தொடர்ச்சியான பொருளாதார மறுசீரமைப்பு செயல்முறைக்கு அர்ப்பணிப்புடன் இருப்பார்கள் என்றும் நம்பிக்கை தெரிவித்தார்.

Rebuilding Sri Lanka நிதியத்திற்கு பிரதேச அபிவிருத்தி வங்கியினால் 25 மில்லியன் ரூபா நன்கொடை!

Rebuilding Sri Lanka நிதியத்திற்கு பிரதேச அபிவிருத்தி வங்கியினால் 25 மில்லியன் ரூபா நன்கொடை!

டித்வா சூறாவளியால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்குவதற்கான அரசாங்கத்தின் ‘Rebuilding Sri Lanka’ நிதியத்திற்கு நாளாந்தம் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு வர்த்தக நிறுவனங்கள், அமைப்புகள் மற்றும் தனிப்பட்ட உதவிகளாக நன்கொடைகள் கிடைத்து வருகின்றன.

அதன்படி, பிரதேச அபிவிருத்தி வங்கி, 25 மில்லியன் ரூபா நன்கொடையை வழங்கியது.

இதற்கான காசோலையை பிரதேச அபிவிருத்தி வங்கியின் தலைவர் லசந்த பெர்னாண்டோ, ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்கவிடம் நேற்று (19) ஜனாதிபதி அலுவலகத்தில் கையளித்தார்.

பிரதேச அபிவிருத்தி வங்கியின் பொது முகாமையாளர்/பிரதம நிறைவேற்று அதிகாரி கலாநிதி அசந்த தென்னகோனும் இந்நிகழ்வில் கலந்துகொண்டார்.

யாழில் விபத்தில் சிக்கி குடும்பப் பெண் உயிரிழப்பு!

யாழ், பொம்மைவெளி பகுதியில் இன்று (20) இடம்பெற்ற விபத்தில் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

தாயும் மகளும் மோட்டார் சைக்கிளில் யாழ்ப்பாணம் நோக்கி சென்றுகொண்டிருந்த நிலையில் எதிர்த் திசையில் மற்றொரு மோட்டார் சைக்கிள் வந்துள்ளது.

இதனையடுத்து தாயும் மகளும் நிலை தடுமாறி கீழே விழுந்த நிலையில், எதிர்த்திசையில் இருந்து வந்த பவுசர் ஒன்று மோதுண்டதில் தாய் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.

மோட்டார் சைக்கிளில் பயணித்த மகளும் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

உயிரிழந்தவரின் சடலம் யாழ். போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

மேலதிக விசாரணைகளை யாழ்ப்பாணம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

சிரியாவில் ஐ.எஸ். இலக்குகள்மீது அமெரிக்கா தாக்குதல்!

சிரியாவில் இரு அமெரிக்க படையினர் கொல்லப்பட்டதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக, சிரியாவில் உள்ள ஐ.எஸ். ஆமைப்பின் இலக்குகள் மீது அமெரிக்கா நேற்று வான்வழித் தாக்குதல்களை நடத்தியது.

“Operation Hawkeye என பெயரிடப்பட்ட இந்த நடவடிக்கையை, அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் “கொலைக்கு காரணமான பயங்கரவாதிகளுக்கு எதிரான மிகவும் கடுமையான பழிவாங்கல்ஷ” என்று விவரித்தார்

மேலும் “ ஐ.ஐஸ். சிரியாவில் துணிச்சலான அமெரிக்க தேசபக்தர்களைக் கொன்றது, அவர்களின் புனித ஆன்மாக்களை இந்த வாரம் மிகவும் மரியாதைக்குரிய விழாவுடன் அமெரிக்க மண்ணுக்கு வரவேற்றேன்.

நான் ஏற்கனவே உறுதியளித்தபடி, ஐஎஸ் இன் கோட்டையாக இருக்கும் சிரியா மீது நாங்கள் ஒரு சக்திவாய்ந்த தாக்குதலைத் தொடங்குகிறோம்.

சிரியாவிற்கு மீண்டும் மகத்துவத்தை கொண்டு வர கடுமையாக உழைத்த ஒரு மனிதரின் தலைமையிலான சிரிய அரசாங்கத்தை நாங்கள் முழுமையாக ஆதரிக்கிறோம்.

அமெரிக்காவைத் தாக்கும் அனைத்து பயங்கரவாதிகளுக்கும், அவர்கள் நாட்டைத் தாக்கினால் அல்லது அச்சுறுத்தினால், நாங்கள் இதுவரை கண்டிராத வலிமையான தாக்குதலை நடத்துவோம் என்று இதன் மூலம் நான் எச்சரிக்கிறேன் ” எனவும் ட்ரம்ப் குறிப்பிட்டுள்ளார்.

புதிய அரசமைப்பு குறித்து பிரதமர் விடுத்துள்ள அறிவிப்பு!

தேசிய மக்கள் சக்தியின் தேர்தல் கொள்கை பிரகடனத்தில் உறுதியளித்தபடி, நிறைவேற்று அதிகார ஜனாதிபதி ஆட்சிமுறை நிச்சயமாக ஒழிக்கப்படும் என பிரதமர் ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச எழுப்பிய கேள்விக்குப் பதிலளிக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

நிறைவேற்று அதிகார ஜனாதிபதி ஆட்சி முறை புதிய அரசியலமைப்பின் ஊடாகவே ஒழிக்கப்படும்.

புதிய அரசியலமைப்பினால் தான் இதனை செய்ய முடியும் என்பதால், அதற்கான ஆய்வுப் பணிகள் தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

புதிய அரசியலமைப்பை வரைவதற்கான ஆரம்பக்கட்ட வேலைகள் ஏற்கனவே தொடங்கப்பட்டுள்ளன.

இதற்காக, முன்னர் சமர்ப்பிக்கப்பட்ட குழு அறிக்கைகள் மற்றும் ஏனைய முன்மொழிவுகள் தற்போது விரிவாக ஆராயப்பட்டு வருகின்றன.

இது தொடர்பான வரைவு பற்றிய ‘கருத்துரு ஆவணம்’ விரைவில் அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்படும் .

தேர்தல் காலத்தில் வழங்கிய வாக்குறுதியை நிறைவேற்றுவதில் அரசாங்கம் உறுதியாக இருக்கிறது.

முறையான அரசியலமைப்பு மாற்றத்தின் ஊடாகவே இது சாத்தியமாகும் என்றும் சிறிலங்கா பிரதமர் தெரிவித்துள்ளார்.

ஆஸ்திரேலிய கதாநாயகனின் சிகிச்சைக்காக குவிந்த நன்கொடை!

போண்டி பயங்கரவாதத் தாக்குதலின்போது துப்பாக்கிதாரியிடமிருந்து துப்பாக்கியை பிடுங்கிய – நபருக்காக திரட்டப்பட்ட நன்கொடை அவரிடம் கையளிக்கப்பட்டுள்ளது.

ஆஸ்திரேலியாவின் கதாநாயகனாக தற்போது கருதப்படும் அவரின் சிகிச்சைக்கு 2.5. மில்லியன் ஆஸ்திரேலிய டொலர்கள் நன்கொடமையாகக் கிடைக்கப்பெற்றுள்ளன.

இரண்டு பிள்ளைகளின் தந்தையான அவருக்கு உலகளவில் 43 ஆயிரத்துக்கு மேற்பட்டோர் நிதி பங்களிப்பு செய்துள்ளனர்.

போண்டி கடற்கரையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை யூதர்கள் நிகழ்ச்சி நடந்து கொண்டிருந்தது அப்போது அங்கு வந்த 2 மர்ம நபர்கள் கண்மூடித்தனமாக துப்பாக்கிச்சூடு நடத்தினர்.
இதில் 15 பேர் பலியாகினர்.

தூக்குதல் நடத்திய சாஜித் அக்ரம் (50), நவீத் அக்ரம் (24) ஆகிய இருவரும் ஐ.எஸ். பயங்கரவாத அமைப்பைச் சேர்ந்தவர்கள் என்பது ஆரம்பக்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

இதற்கிடையில் துப்பாக்கிச்சூடு நடத்தியவர் மீது பாய்ந்து துப்பாக்கியை பிடுங்கிய அல் அகமதுக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன. சம்பவத்தில் அவரும் காயமடைந்தார்.

வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வரும் அல் அகமதுவை ஆஸ்திரேலியா பிரதமர் அந்தோனி அல்பானீஸி, எதிர்க்கட்சி தலைவர் உட்பட பலரும் வைத்தியசாலைக்கு சென்று பார்வையிட்டனர்.

இந்நிலையிலேயே துணிச்சலாக செயல்பட்ட பல உயிர்களைக் காப்பாற்றிய கதாநாயகன் அல் அகமதுவின் சிகிச்சைக்காக பல்வேறு தன்னார்வ அமைப்புகள் வசூலித்த நன்கொடை கையளிக்கப்பட்டுள்ளது.

சினிமா

பிரபல இந்திய பாடகி ஆஷா போஸ்லே காலமானார்!

0
  பிரபல இந்திய பின்னணி பாடகி ஆஷா போஸ்லே தமது 92ஆவது வயதில் இன்று(12) காலமானார். இந்திய திரையுலகில் 10,000-இற்கும் அதிக பாடல்களை பாடியுள்ள மூத்த பாடகி ஆஷா போஸ்லே நேற்று(11) மாரடைப்பு ஏற்பட்டதையடுத்து மும்பையிலுள்ள...

சின்னத்திரை நடிகை தற்#கொ#லை!

0
  இலங்கையை பூர்வீகமாகக்கொண்ட பிரபல சின்னத்திரை நடிகையான சுபாஷினி (வயது 36) தற்#கொ#லை செய்துகொண்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. "கயல்" சின்னத்திரை தொலைக்காட்சி தொடரில் நடித்து வருபவர் சுபாஷிணி (வயது36). இலங்கையை பூர்வீகமாகக்கொண்ட இவர் கடந்த...

“தனுஷின் நட்பை இழந்தது மிகப்பெரிய அவமானம்” – விக்னேஷ் சிவன் வருத்தம்

0
தனுஷ் உடனான நட்பை இழந்தது மிகப்பெரிய அவமானம் என்று விக்னேஷ் சிவன் பகிர்ந்துள்ளார். விக்னேஷ் சிவன் இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன் நடித்துள்ள ‘எல்.ஐ.கே’ திரைப்படம் ஏப்ரல் 10-ம் திகதி திரைக்கு வரவுள்ளது. நீண்ட பிரச்சினைகளுக்கு...

செய்தி

நிரந்தர தீர்வுக்கான பாகிஸ்தானின் மத்தியஸ்தம் தொடரும்!

0
ஈரான் உடனான போர்நிறுத்தத்தை காலவரையின்றி நீட்டித்ததற்காக அமெரிக்கஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பிற்கு , பாகிஸ்தான் பிரதமர் ஷேபாஸ் ஷெரீப் நன்றி தெரிவித்துள்ளார். தற்போதைய ராஜதந்திர முயற்சிகள் தொடர இந்த முடிவு உதவும் என்று அவர் அறிக்கையில்...

டொரிங்டன் ஆறு பெருக்கெடுப்பு: ஆட்லோ தோட்டத்தில் 75 பேர் இடம்பெயர்வு

0
நுவரெலியா மாவட்டத்தில் நேற்று (21) மாலை பெய்த இடியுடன் கூடிய கடும் மழையினால் ஆறுகள் பெருக்கெடுத்து, பல பகுதிகளில் வெள்ள அனர்த்தம் ஏற்பட்டுள்ளது. இதனால் பல குடும்பங்கள் பாதிக்கப்பட்டு பெரும் துயரத்திற்கு உள்ளாகியுள்ளனர். அக்கரப்பத்தனை...

லக்னோ, ராஜஸ்தான் அணிகள் இன்று மோதல்!

0
ஐபிஎல் தொடரில் இன்று நடைபெறும் 32 ஆவது லீக் ஆட்டத்தில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் , ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதுகின்றன. இன்று இரவு 7.30 மணிக்கு லக்னோவில் உள்ள Ekana கிரிக்கெட் மைதானத்தில்...