Home Blog Page 169

நாளை கூடுகிறது நாடாளுமன்றம்: ரூ. 500 பில்லியனுக்குரிய குறைநிரப்பு பிரேரணை முன்வைப்பு!

2025.12.18ஆம் திகதி கூட்டப்பட்டுள்ள பாராளுமன்றம் 2025.12.19ஆம் திகதியும் கூடவிருப்பதாக பாராளுமன்ற செயலாளர் நாயகம் குஷானி ரோஹணதீர தெரிவித்தார்.

சபாநாயகர் (வைத்தியர்) ஜகத் விக்கிரமரத்ன தலைமையில் இன்று (17) நடைபெற்ற பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய குழுக் கூட்டத்தில் இது பற்றிய தீர்மானம் எடுக்கப்பட்டது.

டிசம்பர் 18ஆம் திகதி வியாழக்கிழமை மு.ப 9.30 மணிக்கு பாராளுமன்றம் கூடவிருப்பதுடன், திடீர் அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்க்கையை மீண்டும் கட்டியெழுப்புவதற்கான ரூ. 500 பில்லியனுக்கான குறைநிரப்பு மதிப்பீடு அன்றையதினம் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டு, அரசாங்க நிதி பற்றிய குழுவுக்கு ஆற்றுப்படுத்தப்படும்.

இதனைத் தொடர்ந்து மோசமான காலநிலையின் தாக்கத்தால் அனர்த்தம் ஏற்பட்ட பின்னர் நாட்டின் தற்போதைய நிலைமைகள் குறித்து ஆளும் தரப்பினரால் கொண்டுவரப்படும் சபை ஒத்திவைப்பு விவாதம் பி.ப 5.30 மணி வரை இடம்பெறவுள்ளது.

டிசம்பர் 19ஆம் திகதி வெள்ளிக்கிழமை மு.ப 9.30 மணி முதல் பி.ப 5.30 மணிவரை பாராளுமன்ற அமர்வு இடம்பெறவிருப்பதுடன், அன்றையதினம் ரூ. 500 பில்லியனுக்கான குறைநிரப்பு மதிப்பீடு விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்பட்டு, அங்கீகரிக்கப்படவுள்ளது.

இலங்கையின் பொருளாதார மற்றும் சமூக முன்னேற்றத்திற்கு சீன அரசாங்கம் பூரண ஒத்துழைப்பு வழங்கும்

இலங்கையின் பொருளாதார மற்றும் சமூக முன்னேற்றத்திற்கு சீன அரசாங்கம் பூரண ஒத்துழைப்பு வழங்கும்

ஜனாதிபதி தலைமையின் கீழ் இலங்கை மிக விரைவில் வழமை நிலைக்கு திரும்பும் என சீனா எதிர்பார்க்கிறது

– சீன மக்கள் குடியரசின் தேசிய மக்கள் காங்கிரஸ் உப தலைவர் WANG DONGMING

சேதமடைந்த ரயில் கட்டமைப்பை மீளமைப்பதற்கும் புனரமைப்பதற்கும் சீனாவிடமிருந்து தொழில்நுட்ப உதவியை எதிர்பார்க்கிறேன் – ஜனாதிபதி

டித்வா சூறாவளியால் எதிர்கொண்டுள்ள சவால்களைத் தோற்கடித்து இலங்கை மக்களின் அன்றாட வாழ்க்கையை மீண்டும் கட்டியெழுப்புவதற்கான அரசாங்கத்தின் திட்டத்திற்கு அதிகபட்ச ஆதரவை வழங்குவதாகவும், ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவின் தலைமையில் இலங்கை மிக விரைவில் மீண்டெழும் என்றும் சீன மக்கள் குடியரசின் தேசிய மக்கள் காங்கிரஸ் உப தலைவர் WANG DONGMING தெரிவித்தார்.

இலங்கைக்கு விஜயம் செய்துள்ள சீன மக்கள் குடியரசின் தேசிய மக்கள் காங்கிரஸ் உப தலைவர் WANG DONGMING உள்ளிட்ட தூதுக்குழுவினர் இன்று (17) காலை ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவை சந்தித்த போது அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இலங்கை எதிர்கொண்ட மிக மோசமான பேரழிவு குறித்து தனது ஆழ்ந்த வருத்தத்தை தெரிவித்த உப தலைவர் , பாதிக்கப்பட்ட இலங்கை மக்களுக்கு நிவாரணம் வழங்க சீன அரசாங்கம் துரித நடவடிக்கை மேற்கொண்டதாகவும் குறிப்பிட்டார்.

அத்தோடு இலங்கைக்கும் சீனாவிற்கும் இடையிலான நீண்டகால பொருளாதார, கலாச்சார மற்றும் இராஜதந்திர உறவுகளை மேலும் வலுப்படுத்துவதே இந்த விஜயத்தின் நோக்கம் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

இந்த அனர்த்த சமயத்தில் இலங்கைக்கு வருகை தந்தமை தொடர்பில் உப தலைவர் உள்ளிட்ட தூதுக் குழுவினருக்கு ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க நன்றி தெரிவித்தார். பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்க சீனா இலங்கைக்கு வழங்கிய பொருள் மற்றும் நிதி உதவியையும் அவர் மனப்பூர்வமாக பாராட்டினார்.

குறிப்பாக சேதமடைந்த ரயில் கட்டமைப்பை மீளமைப்பதற்கும் புனரமைப்பதற்கும் தேவையான தொழில்நுட்ப உதவியை வழங்குமாறு ஜனாதிபதி ஜி ஜின்பிங் உள்ளிட்ட சீன அரசாங்கத்திடம் வேண்டுகோள் விடுப்பதாக ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்தார்.

அத்தோடு இலங்கை எதிர்கொண்ட அனர்த்த நிலைமை மற்றும் மறுசீரமைப்பு முன்னெடுப்புகள் குறித்து சீன பிரதிநிதிகளுக்கு ஜனாதிபதி தெளிவுபடுத்தினார்.

பாதிக்கப்பட்ட மக்களை மீட்பதே அரசாங்கத்தின் பிரதான பிரயத்தனமாக இருந்தாகவும் பின்னர் அவர்களை பாதுகாப்பான இடங்களில் தங்க வைத்து உணவு மற்றும் சுகாதாரம் போன்ற அடிப்படை வசதிகளை வழங்குவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்ததாகவும் ஜனாதிபதி தெரிவித்தார். அவர்களின் இயல்பு வாழ்க்கையை வழமை நிலைக்குக் கொண்டுவருவதற்காக திட்டமிடப்பட்ட வகையில் பணியாற்றி வருவதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

சீன தேசிய மக்கள் காங்கிரஸின் சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் வள பாதுகாப்பு குழுவின் தலைவரான LU XINSHE, வெளிநாட்டலுவல்கள் குழுவின் உப தலைவரும் தேசிய மக்கள் காங்கிரஸின் சீன-இலங்கை நட்புறவுக் குழுவின் உப தலைவருமான WANG KE, சமூக அபிவிருத்திக் குழுவின் உப தலைவரான TAN TIANXING, நிலைக்குழுவின் பொதுச் செயலகத்தின் வெளியுறவுக் குழுவின் உப பணிப்பாளர் TANG JIAN,வெளிநாட்டலுவல்கள் அமைச்சின் ஆசிய விவகாரத் திணைக்கள ஆலோசகர் YANG YIN , வெளிநாட்டலுவல்கள் அமைச்சின் ஆசிய விவகாரத் திணைக்கள மூன்றாவது செயலாளர் SHA LONG மற்றும் இலங்கைக்கான சீனத் தூதுவர் QI ZHENHONG ஆகியோர் இந்த சந்திப்பில் கலந்து கொண்டனர்.

இலங்கை அரசாங்கத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தி, தொழில் அமைச்சரும் நிதி மற்றும் திட்டமிடல் பிரதி அமைச்சருமான கலாநிதி அனில் ஜயந்த பெர்னாண்டோ, ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்க மற்றும் ஜனாதிபதியின் சிரேஸ்ட மேலதிகச் செயலாளர் ரோஷன் கமகே உள்ளிட்டோர் இதில் பங்கேற்றனர்.

பிரதமர் மோடிக்கு கார் ஓட்டிய ஜோர்தான் பட்டத்து இளவரசர்: குவியும் பாராட்டு!

பிரதமர் நரேந்திர மோடி சென்ற காரை ஜோர்தான் நாட்​டின் பட்​டத்து இளவரசர் அல்​-ஹுசைன் பின் அப்​துல்​லா ஓட்​டியது பரவலாக பாராட்​டுகளைப் பெற்று வரு​கிறது.

ஜோர்தான் நாட்​டுக்கு 2 நாள் அரசு​முறை பயணமாக பிரதமர் மோடி நேற்று முன்​தினம் சென்​றடைந்​தார். அவருக்கு அங்கு உற்​சாக வரவேற்​பளிக்​கப்​பட்​டது.

அங்​குள்ள ஒரு ஓட்​டலில் இந்​திய வம்​சாவளி​யினரை பிரதமர் மோடி சந்​தித்​துப் பேசி​னார். இரு நாடு​கள் இடையே ராஜீய உறவு​கள் ஏற்​பட்டு 75 ஆண்​டு​கள் நிறைவடைவதை முன்​னிட்டு பிரதமர் மோடி இந்த சுற்றுப்பயணத்தை மேற்​கொண்​டார்.

முதல் நாளான நேற்று முன்​தினம்,ஜோர்தான் மன்​னர் அப்​துல்லா பின் அல் ஹுசைனை சந்​தித்​து, இரு நாட்டு உறவு​கள் குறித்து ஆலோ​சனை நடத்​தி​னார் பிரதமர் மோடி.

இந்​நிலையில், 2-ம் நாளான நேற்​று, ஜோர்தான் நாட்​டுப்​பட்டத்து இளவரசர் அல்​-ஹுசைன் பின் அப்​துல்​லா -வுடன் வரலாற்​றுச் சிறப்​புமிக்க பெட்ரோ நகரைப் பிரதமர் மோடி பார்​வை​யிட்​டார்.

இந்த இளவரசர், முஸ்​லிம்​களின் இறை தூத​ராகப் போற்​றப்​படும் முகம்​மது நபி​யின் 42-வது தலை​முறை நேரடி வம்​சாவளியைச் சேர்ந்​தவர் ஆவார்.

அப்​போது, ஜோர்தான் அருங்​காட்​சி​யகத்​துக்கு பிரதமர் மோடி பயணித்த காரை அந்​நாட்​டின் இளவரசர் அல்​-ஹுசைன் பின் அப்​துல்​லா ஓட்​டி​னார். இதுதொடர்​பான புகைப்​படங்​களை பிரதமர் மோடி தனது எக்ஸ் பக்​கத்​தில் வெளி​யிட்​டுள்ளார்.

இரு​நாள் பயணத்தை முடித்​துக்​கொண்டு எத்​தி​யோப்​பியா நாட்​டுக்கு புறப்​பட்ட பிரதமர் மோடியை விமான நிலை​யத்​துக்​குச் சென்று அந்​நாட்டு இளவரசர் வழியனுப்பி வைத்​தார். ஜோர்தான் நாட்டு இளவரசரின் இந்த பண்​புமிக்க செயல் அனை​வரது பா​ராட்​டு​களை​யும்​ பெற்​றுள்​ளது.

பேரிடரால் ஏற்பட்டுள்ள பிரச்சினைகளை தீர்க்க ஐ.நா. உதவ வேண்டும்: சஜித் கோரிக்கை!

பேரிடரால் பாதிக்கப்பட்டுள்ள இலங்கை மீண்டெழுவதற்காக தம்மால் முடிந்த அனைத்து ஒத்துழைப்புகளையும் ஐ.நா. வழங்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவிற்கும் இலங்கைக்கான ஐக்கிய நாடுகள் சபையின் வதிவிட ஒருங்கிணைப்பாளர் மார்க்-ஆண்ட்ரே ஃபிராஞ்சிற்கும் (Mark Andre Franche) இடையிலான விசேட சந்திப்பொன்று இன்று (17) கொழும்பிலுள்ள எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் இடம்பெற்றது.

இந்தச் சந்திப்பில், சமகால இலங்கையின் பல்வேறு சமூக மற்றும் பொருளாதார  விவகாரங்கள் உள்ளிட்ட பல விடயங்கள் தொடர்பில் இரு தரப்பினரும் தமது கருத்துக்களைப் பரிமாறிக் கொண்டனர்.

அனர்த்தம் ஏற்பட்டதைத் தொடர்ந்து ஏற்பட்டுள்ள தற்போதைய பேரிடர் சூழ்நிலையால் நாட்டில் எழுந்துள்ள பன்முக பிரச்சினைகளை எதிர்க்கட்சித் தலைவர் இதன்போது இலங்கைக்கான ஐக்கிய நாடுகள் சபையின் வதிவிட ஒருங்கிணைப்பாளர் மார்க் ஆண்ட்ரே பிராஞ்சிடம் எடுத்துரைத்தார்.

இந்தப் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு ஐக்கிய நாடுகள் சபையால் பெற்றுத் தர முடியுமான கூடிய ஒத்துழைப்புகளையும் உதவிகளையும் பெற்றுத் தருமாறும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச மேலும் குறிப்பிட்டார்.

13,781 வீடுகள் முழுமையாகவும், 101,055 வீடுகள் பகுதியளவும் சேதம்!

டித்வா புயல் தாக்கத்தையடுத்து இலங்கையில் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் மண்சரிவால் 13 ஆயிரத்து 781 வீடுகள் முழுமையாக சேதமடைந்துள்ளன.

அத்துடன், ஒரு லட்சத்துக்கு மேற்பட்ட வீடுகள் (101,055) வீடுகள் பகுதியளவு சேதமடைந்துள்ளன.

அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் இன்று காலை வெளியிட்டுள்ள அறிக்கையில் மேற்படி தகவல் வெளியிடப்பட்டுள்ளது.

பேரிடரால் 643 பேர் உயிரிழந்துள்ளனர். 183 பேர் காணாமல்போயுள்ளனர் என பட்டியலிடப்பட்டுள்ளது.

22 ஆயிரத்து 96 குடும்பங்கள் தொடர்ந்து 723 இடைத்தங்கள் முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளன.

அதேவேளை, கண்டி மாவட்டத்தில் 2 ஆயிரத்து 13 வீடுகள் முழுமையாக சேதமடைந்துள்ளன.

14 ஆயிரத்து 798 வீடுகள் பகுதியளவு சேதமடைந்துள்ளன என்று அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கண்டி மாவட்டத்தில் 237 பேர் உயிரிழந்துள்ளனர். 73 பேர் காணாமல்போயுள்ளனர்.

2.5 மில்லியன் டொலரை அவசர கொடையாக வழங்குகிறது ஜப்பான்

பேரிடரால் பாதிக்கப்பட்ட இலங்கைக்கு ஜப்பானிய அரசாங்கம் 2.5 மில்லியன் டொலர் அவசர கொடையை வழங்க முடிவு செய்துள்ளதாக ஜப்பானிய வெளியுறவு அமைச்சர் தோஷிமிட்சு மொடேகி தெரிவித்துள்ளார்.

அனைத்துலக உதவி நிறுவனங்கள் மூலம் , உணவு மற்றும் ஏனைய அன்றாடத் தேவைகளுக்கான மனிதாபிமான உதவிகளை வழங்க வழங்க இந்த அவசர நிதிக் கொடை பயன்படுத்தப்படும்.

பாதிக்கப்பட்ட பகுதிகளை விரைவாக மீட்டெடுப்பதற்கும் மீளக்கட்டியெழுப்பவும் எமது நீண்டகால நண்பரான சிறிலங்காவுக்கு தொடர்ந்து தடையற்ற ஆதரவை வழங்க ஜப்பான் விரும்புவதாக ஜப்பானிய வெளியுறவு அமைச்சர் மொடேகி டோக்கியோவில் நடந்த செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்தார்.

சுமார் இரண்டு வாரங்களில் 1,250 சிகிச்சைகளை மேற்கொண்ட பின்னர், 30 பேர் கொண்ட ஜப்பானிய பேரிடர் நிவாரண மருத்துவக் குழு, நேற்று சிறிலங்காவில் இருந்து திரும்பியுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

அநுரவை அமெரிக்கா பாராட்டுவது ஏன்? கேட்கிறார் விமல்!

“சுனாமி பேரிடரின்போது சுனாமி நிவாரண மண்டலத்தை புலிகளுக்கு வழங்குவதற்கு வெளிநாட்டு முயற்சி இடம்பெற்றது. எனவே, தற்போதைய பேரிடரிலும் வேறு ஆட்டங்கள் இடம்பெறக்கூடும். எனவே, விழிப்பாகவே இருக்க வேண்டும்.”

இவ்வாறு தேசிய சுதந்திர முன்னணியின் தலைவரும், முன்னாள் அமைச்சருமான விமல் வீரவன்ச தெரிவித்தார்.

“ அநுரகுமார திஸாநாயக்கவால்தான் இலங்கையை மீட்டெடுக்க முடியும் என அமெரிக்க இராஜதந்திரிகள் நற்சான்றிதழ் வழங்கிவருகின்றனர்.

புயங்கரவாத அமைப்பான புலிகளை தோற்கடித்து, 6 சதவீத பொருளாதார வளர்ச்சியை ஏற்படுத்திய மஹிந்த ராஜபக்சவுக்குகூட இப்படியான பாராட்டு வழங்கப்படவில்லை. ஆனால் அநுரகுமார திஸாநாயக்கவுக்கு வழங்கப்படுகின்றது. இதன் இரகசியம் – பின்புலம் என்னவென்பதை நாம் புரிந்துகொள்ள வேண்டும்.

இலங்கை மீண்டெழுவதற்கு பில்லியன் கணக்கில் நிதி தேவைப்படும்போது ஓரிரு மில்லியன்களை உதவியாக பெற்று மீள முடியுமா?

சர்வதேச உதவிகள் இலவசமாகக் கிடைக்கப்பெறுவதில்லை. அதன் பின்னணியில் வேறு நிகழ்ச்சி நிரல் இருக்கக்கூடும்.

சுனாமி காலத்தில் புலிகளுக்கு நிவாரண சபையை வழங்க முற்பட . பேரிடருக்கு மத்தியில் வேறு ஆட்டம் ஆடப்படலாம். தற்போதும் அவ்வாறு நடக்கக்கூடும். எனவே, விழிப்பாகவே இருக்க வேண்டும்.எனவும் விமல் வீரவன்ச குறிப்பிட்டுள்ளார்.

மரக்கறி விலைப்பட்டியல் (17.12.2025)

நுவரெலியா பொருளாதார மத்திய நிலையத்தால் இன்று (17) வெளியிடப்பட்டுள்ள மரக்கறி வகைகளின் (ஒரு கிலோ) விலை பட்டியல்…

கட்சி தாவியது இல்லை: விலைபோனதும் கிடையாது: மனோவின் உருக்கமான பிறந்தநாள் பதிவு!

தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் மனோ கணேசனின் முகநூல் பதிவு வருமாறு,

” வயது என்பது இலக்கம்; வாழ்க்கை என்பது இயக்கம். பிறந்தநாள்-தான் வந்து போறது. வயது ஆவதாதான் தெரியல. உடல்-மன, ஒழுக்க நெறிகள், நகைச்சுவை உணர்வு, “அறிவு-ஆன்மா-உடல்” மூன்றையும் சாமாந்திரமா வைக்க முயன்று கொண்டே இருப்பதால், மூன்றுக்கும் ஒரே வயது-இளமை. “கர்மா”வை மட்டும் நம்பறேன்.

கடவுள்-மத நம்பிக்கை இல்லை. கடவுள்-மத எதிர்ப்பாளனும் இல்லை. அவரவர் நம்பிக்கைகளை மதிக்கறேன். இவைதான் ரகசியமில்லா காரணங்கள் என தனிப்பட்ட நண்பர்களுக்கு இந்த பதிலை கூறி கொண்டே இருக்கேன்.

நானே ஒரு நடமாடும் சர்வ கட்சி மாநாடு. ஆளும்-எதிர் என எல்லா கட்சிகார்களும் என் தனிப்பட்ட நண்பர்கள்தான். ஒன்றா, பேசுவோம்-பாடுவோம்-ஆடுவோம். ஆனால், வாழ் நாளில், ஒருபோதும், கட்சி மாறியதே இல்லை. விலை போனதும் இல்லை,

நம்ம வழி-எப்போதும் தனி வழிதான், என பொது வாழ்வு நண்பர்களுக்கு இந்த பதிலை கூறி கொண்டே இருக்கேன்
இன்று நாடு துன்பத்தில்: கொண்டாட்டங்கள் இல்லை. ஒரு பகுதி, துன்புற்ற மக்களுடன் கழிக்கிறேன்!

மறுவெளியீட்டிலும் வசூல் சாதனை படைக்கும் ‘படையப்பா’!

இந்தியாவில் அதிக வசூல் செய்த ரீ-ரிலீஸ் திரைப்படங்களின் பட்டியலில் ‘படையப்பா’ தற்போது ஐந்தாவது இடத்தைப் பிடித்துள்ளது.

ரஜினிகாந்த் நடிப்பில், கே.எஸ்.ரவிகுமார் இயக்கத்தில், 1999-ம் ஆண்டு வெளியான படம் ‘படையப்பா’. ரஜினியுடன் சிவாஜி கணேஷன், ரம்யா கிருஷ்ணன், சவுந்தர்யா உள்ளிட்டோர் நடித்திருந்தனர். ஏ.ஆர்.ரஹ்மான் இசை அமைத்திருந்தார். இன்றும் ரசிகர்களால் ஒரு கமர்ஷியல் கிளாசிக் படமாக ‘படையப்பா’ கொண்டாடப்பட்டு வருகிறது.

ரஜினிகாந்தின் 75-வது பிறந்தநாளை முன்னிட்டு ‘படையப்பா’ திரைப்படத்தின் டிஜிட்டல் முறையில் மெருகூட்டப்பட்ட 4K ரீமாஸ்டர்ட் பதிப்பு கடந்த டிசம்பர் 12-ஆம் தேதி மீண்டும் திரையரங்குகளில் வெளியானது. 25 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் வெளியான இப்படத்துக்கு, ரசிகர்கள் மத்தியில் அபரிமிதமான வரவேற்பு கிடைத்தது.

வெளியான முதல் நாளில், ‘படையப்பா’ திரைப்படம் உலகம் முழுவதும் ரூ.4 கோடி வசூலித்தது. பொதுவாக மறுவெளியீடு செய்யப்படும் தென்னிந்திய திரைப்படங்களின் வசூல் முதல் நாளுக்குப் பிறகு கணிசமாகக் குறையும். ஆனால், ‘படையப்பா’ வார இறுதி நாட்களிலும் நிலையான வேகத்தைத் தக்கவைத்து, வசூலைத் தொடர்ந்து ஈட்டியது.

முதல் வார இறுதியில், ‘படையப்பா’ திரைப்படம் உலக அளவில் சுமார் 11 கோடி ரூபாய் வரை வசூல் செய்து புதிய சாதனையைப் படைத்துள்ளது. இதன் மூலம், இந்தியாவில் அதிக வசூல் செய்த ரீ-ரிலீஸ் திரைப்படங்களின் பட்டியலில் ‘படையப்பா’ தற்போது ஐந்தாவது இடத்தைப் பிடித்துள்ளது.

ரீ-ரிலீஸ் வசூல் பட்டியலில், ‘பாகுபலி: தி எபிக்’ (ரூ. 72 கோடி+), ‘சனம் தேரி கசம்’, ‘தும்ப்பாட்’ மற்றும் ‘கில்லி’ ஆகிய படங்களுக்குப் பிறகு, ‘படையப்பா’ தற்போது ஐந்தாவது இடத்தில் இணைந்திருப்பது குறிப்பிடத்தக்கது.

சினிமா

பிரபல இந்திய பாடகி ஆஷா போஸ்லே காலமானார்!

0
  பிரபல இந்திய பின்னணி பாடகி ஆஷா போஸ்லே தமது 92ஆவது வயதில் இன்று(12) காலமானார். இந்திய திரையுலகில் 10,000-இற்கும் அதிக பாடல்களை பாடியுள்ள மூத்த பாடகி ஆஷா போஸ்லே நேற்று(11) மாரடைப்பு ஏற்பட்டதையடுத்து மும்பையிலுள்ள...

சின்னத்திரை நடிகை தற்#கொ#லை!

0
  இலங்கையை பூர்வீகமாகக்கொண்ட பிரபல சின்னத்திரை நடிகையான சுபாஷினி (வயது 36) தற்#கொ#லை செய்துகொண்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. "கயல்" சின்னத்திரை தொலைக்காட்சி தொடரில் நடித்து வருபவர் சுபாஷிணி (வயது36). இலங்கையை பூர்வீகமாகக்கொண்ட இவர் கடந்த...

“தனுஷின் நட்பை இழந்தது மிகப்பெரிய அவமானம்” – விக்னேஷ் சிவன் வருத்தம்

0
தனுஷ் உடனான நட்பை இழந்தது மிகப்பெரிய அவமானம் என்று விக்னேஷ் சிவன் பகிர்ந்துள்ளார். விக்னேஷ் சிவன் இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன் நடித்துள்ள ‘எல்.ஐ.கே’ திரைப்படம் ஏப்ரல் 10-ம் திகதி திரைக்கு வரவுள்ளது. நீண்ட பிரச்சினைகளுக்கு...

செய்தி

ஹார்முஸ் நீரிணையில் இரு கப்பல்களை சிறைபிடித்தது ஈரான்!

0
ஹார்முஸ் நீரிணையில் இரண்டு சரக்குக் கப்பல்களைத் தனது கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவந்துள்ளதாக ஈரான் கடற்படை தெரிவித்துள்ளது. முறையான அனுமதியின்றி இயங்கியது மற்றும் கடல்சார் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தியதாகக் கூறி, இந்த அதிரடி நடவடிக்கையை ஈரான் கடற்படை...

காவத்தை சம்பவம் மிலேச்சத்தனம்: திகா கண்டனம்!

0
காவத்தை சம்பவம் மிலேச்சத்தனமானது என தொழிலாளர் தேசிய முன்னணியின் தலைவரும், முன்னாள் அமைச்சருமான பழனி திகாம்பரம் தெரிவித்துள்ளார். மேற்படி சம்பவத்தை வன்மையாகக் கண்டிப்பதுடன், பாதிக்கப்பட்டவர்களுக்கான நியாயம் கிடைக்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும்...

டித்வா சூறாவளி: இழப்பீட்டுத் தொகையை மே மாத இறுதிக்குள் வழங்கி முடிக்குமாறு ஜனாதிபதி பணிப்பு!

0
டித்வா சூறாவளியால் பகுதியளவில் சேதமடைந்த வீடுகளுக்காக அரசினால் அங்கீகரிக்கப்பட்ட 05 இலட்சம் ரூபா இழப்பீட்டுத் தொகையை, மிக சிக்கலான சந்தர்ப்பங்களைத் தவிர ஏனைய அனைத்துப் பயனாளிகளுக்கும் மே மாத இறுதிக்குள் வழங்கி முடிக்குமாறு...