Home Blog Page 170

சர்வதேச நன்கொடையாளர் மாநாடு ஜனவரியில்!

சர்வதேச நன்கொடையாளர்கள் மாநாட்டை எதிர்வரும் ஜனவரி மாதம் நடத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது என்று வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்தார்.

தனியார் தொலைக்காட்சியொன்றுக்கு வழங்கிய நேர்காணலின்போதே வெளிவிவகார அமைச்சர் இந்த தகவலை வெளியிட்டார்.

“ பேரிடரால் இலங்கைக்கு ஏற்பட்ட முழமையான இழப்பு தொடர்பான சரியான மதிப்பீடு இல்லை.

உலக வங்கி மதிப்பீட்டு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளது. அதன் ஆரம்பக்கட்ட அறிக்கை கிடைத்த பின்னர் மாநாடு நடத்தப்படும்.

எனினும், முழமையான இழப்பு தொடர்பான துல்லியமான தரவுகளைப் பெறுவதற்கு சிறிது காலம் எடுக்கும்.

சர்வதேச கொடையாளர் மாநாடு தொடர்பில் பல நாடுகள் ஆதரவு தெரிவித்துள்ளன. எமக்கு கடன் தவணை சலுகையை வழங்குவதற்கு சில நாடுகள் வாய்மூல உத்தரவாதத்தை வழங்கியுள்ளன.

எனவே, குறுகிய காலப்பகுதிக்குள் இலங்கையால் மீண்டெழ முடியும் என்ற உறுதியான நம்பிக்கை உள்ளது.” எனவும் வெளிவிவகார அமைச்சர் குறிப்பிட்டார்.

பேரிடர் முகாமைத்துவத்துக்கு தனி அமைச்சு கோருகிறார் சஜித்!

அனர்த்த முகாமைத்துவத் துறைக்கென பிரத்தியேகமான அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சொன்றை தாப்பித்து, அதனை வலுப்படுத்த வேண்டும் என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச வலியுறுத்தியுள்ளார்.

நாட்டில் துல்லியமான, திட்டவட்டமான, வினைத்திறனாக அனர்த்த முகாமைத்துவ திட்டமொன்று முன்னெடுக்கப்பட்டு வருவதாக தெரியவில்லை. அவ்வாறு அமைந்து காணப்படவுமில்லை.

அனர்த்தமுகாமைத்துவ பிரிவும் இன்று சுனாமிக்கு அகப்பட்டுபோயுள்ளது. அனர்த்தமுகாமைத்துவதற்கு குறிப்பிட்ட நிறுவனமோ, வழிகாட்டுதல் தத்துவங்களோ, செயற்பாடுகளோ அல்லது செயற்றிட்ட வரைபடமோ எதுவும் இல்லை.

நாட்டில், NBRO, GSMB போலவே சுற்றுச்சூழல் பாதுகாப்பு, கட்டிடங்கள், மண் சரிவுகள், வெள்ளம், சூறாவளி போன்றவற்றுடன் தொடர்புடைய நிறுவனங்கள், முறையான திட்டமிடலுடன் ஒருங்கிணைந்த முறையில் செயற்பட வேண்டும். ஒ

ருங்கிணைந்த அனர்த்த முகாமைத்துவ திட்டம் வகுக்கப்பட்டு தேசிய, மாகாண, மாவட்ட மற்றும் கிராம சேவகர் பிரிவுகள் மட்டங்களிலும் இதன் பணிகளை முன்னெடுக்க வேண்டும். இதனை தனி அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சாக தாபிக்க வேண்டும் என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.

குருநாகல் மாவட்டம், இப்பாகமுவ பகுதியில் மண்சரிவால் பாதிக்கப்பட்ட கிராமங்களுக்கு எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச று (16) கண்காணிப்பு விஜயத்தை மேற்கொண்டார். இச்சமயம் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

தோல்வி கண்ட அனர்த்த முகாமைத்து திட்டமே முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. பெரும் சேதங்களையும் இழப்புக்களையும் சந்தித்துள்ள மக்களுக்கு குறிப்பிட்ட மற்றும் மக்கள் நிரந்தரமாக மீள்வதற்குத் தேவையான ஏற்பாடுகளுடன் அமைந்த நிவாரண பொறிமுறை அமைந்து காணப்பட வேண்டும்.

பாதிக்கப்பட்ட மக்களுக்காக பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சி குரல் கொடுக்கும். இந்தப் பேரழிவால் பில்லியன் கணக்கான டொலர்கள் சேதம் ஏற்பட்டுள்ளன. சேதத்திற்கு ஏற்ற இழப்பீடுகள் அரச தரப்பில் இல்லாமையால், சர்வதேச நன்கொடையாளர் மாநாட்டை அவசரமாக நடத்த வேண்டும்.

இந்த விடயத்தை பாராளுமன்றத்திலும் அதற்கு வெளியேயும் முன்வைத்துள்ளேன். தாமதமின்றி சர்வதேச நன்கொடையாளர் மாநாட்டை நடத்த வேண்டும். எதிர்க்கட்சி என்ற வகையில், ஐக்கிய மக்கள் சக்தி கட்சி போதம் காட்டாது இதற்குப் பூரண ஆதரவைத் தரும்.

இச்சமயம், அரசியல் ஆதாயம் தேடாமல், பாதிக்கப்பட்ட மக்களுக்கு உடனடி நிவாரணம் வழங்கி, மக்களின் வாழ்க்கையை வலுப்படுத்துவது அவசியமாகும்.

அவர்களை இயல்பு வாழ்க்கைக்கு மீட்டெடுப்பது முன்னுரிமையான விடயமாக அமைந்து காணப்படுகின்றது. இந்த அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களை அரசியல் பந்தயமாக பயன்படுத்துவதற்குப் பதிலாக, சர்வதேச நன்கொடையாளர் மாநாட்டை அவசரமாக கூட்டி, வலுவான அனர்த்த முகாமைத்துவ பொறிமுறையை முன்னெடுக்க வேண்டும் என்றும் எதிர்க்கட்சித் தலைவர் சுட்டிக்காட்டினார்.

இந்தத் தவறுகளையும் குறைபாடுகளையும் சரிசெய்து கொண்டு புதிய பயணத்தை முன்னெடுக்க வேண்டும். அழிவைச் சந்தித்துள்ள நமது நாட்டு மக்களுக்காக இதனைச் செய்தே ஆக வேண்டும். இதற்கான ஆதரவை நாம் தருவோம். அவ்வாறே நாட்டுக்காக துன்பப்பட்ட மக்களுக்காக எதிர்க்கட்சி இயலுமான உதவிகளைச் செய்யும் என்றும் எதிர்க்கட்சித் தலைவர் இங்கு மேலும் தெரிவித்தார்.

பேரிடரால் வீதி அபிவிருத்தி அதிகார சபைக்கு 75 பில்லியன் ரூபாவும், மின்சார சபைக்கு 20 பில்லியன் ரூபாவும் நஷ்டம்

நாடளாவிய ரீதியில் ஏற்பட்ட அவசர அனர்த்த நிலைமையினால் வீதிகள் மற்றும் பாலங்களுக்கு ஏற்பட்ட சேதம் காரணமாக தற்போது அண்ணளவாக மதிப்பிடப்பட்டதன் அடிப்படையில் வீதி அபிவிருத்தி அதிகாரசபைக்கு சுமார் 75 பில்லியன் ரூபா நட்டம் ஏற்பட்டுள்ளதாக போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சின் அதிகாரிகள் தெரிவித்தனர்.

அத்துடன், சேதமடைந்த வீதிகள் மற்றும் பாலங்களை முழுமையாகச் சீரமைக்கும் போது மேற்கொள்ளப்பட வேண்டிய ஏனைய புனரமைப்புப் பணிகளுடன் சேர்த்து, அதற்காக சுமார் 190 பில்லியன் ரூபா தேவைப்படும் எனவும் அந்த அதிகாரிகள் மேலும் தெரிவித்தனர்.

நாட்டில் நிலவும் அனர்த்தத்தின் தன்மையை ஆய்வு செய்வதற்கும், அதனால் ஏற்படும் சமூக, பொருளாதார மற்றும் சுற்றுச்சூழல் பாதிப்புகளை மதிப்பிடுவதற்கு எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்துக் கலந்துரையாடுவதற்காக உட்கட்டமைப்பு வசதிகள் மற்றும் மூலோபாய அபிவிருத்தி பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழு அண்மையில் (11) கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் எஸ். எம். மரிக்கார் அவர்களின் தலைமையில் பாராளுமன்றத்தில் கூடியபோதே இந்த விடயங்கள் வெளிப்படுத்தப்பட்டன.

இங்கு கருத்துத் தெரிவித்த போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சின் அதிகாரிகள், இந்த அனர்த்த நிலைமையினால் வீதி அபிவிருத்தி அதிகாரசபையின் கீழ் உள்ள 316 வீதிகளுக்கும் 40 பாலங்களுக்கும் சேதம் ஏற்பட்டுள்ளதாகச் சுட்டிக்காட்டினர். இருப்பினும், இங்கு கருத்துத் தெரிவித்த குழுவின் தலைவர் குறிப்பிடுகையில், புகையிரதப் பாதைகள் மற்றும் நாடு முழுவதும் உள்ள பிரதேச வீதிகளுக்கு ஏற்பட்ட சேதம் இன்னும் மதிப்பிடப்படவில்லை என்று சுட்டிக்காட்டினார். பிரதேச வீதிகளை மீண்டும் சீரமைக்கும் போது அதற்கான நிதியைப் பெறுவதற்கு அமைச்சின் தலைமையில் ஒரு வேலைத்திட்டத்தைத் தயாரிப்பதன் முக்கியத்துவத்தையும் குழுவின் தலைவர் இங்கு வலியுறுத்தினார்.

அதற்கமைய, தற்போது உலக வங்கி மூலம் 2 பில்லியன் ரூபா கடனாகப் பெறுவதற்கு எதிர்பார்க்கப்படுவதாகவும், மேலும் பல நிறுவனங்களிடமிருந்து இந்த புனரமைப்புகளை மேற்கொள்ளத் தேவையான நிதியைப் பெற எதிர்பார்க்கப்படுவதாகவும் அந்த அதிகாரிகள் குழுவில் தெரிவித்தனர்.

அத்துடன், இந்த அனர்த்த நிலைமையினால் இலங்கை மின்சார சபைக்குச் சுமார் 20 பில்லியன் ரூபா நட்டம் ஏற்பட்டுள்ளதாக அதன் அதிகாரிகள் குழுவில் தெரிவித்தனர். உலக வங்கியிடமிருந்து இதற்காக ஒரு கடன் தொகையைப் பெறுவது குறித்து கலந்துரையாடல்கள் நடைபெற்று வருவதாகவும் அந்த அதிகாரிகள் தெரிவித்தனர்.

இங்கு கருத்துத் தெரிவித்த குழுவின் தலைவர், அந்தத் தொகையை கடனாகப் பெறாமல், ஒரு மானியமாகப் பெற முயற்சிக்க வேண்டும் என்று இலங்கை மின்சார சபையின் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார். கடன் தொகையாக அந்த நிதியைப் பெறுவதன் மூலம் பாவனையாளர்களின் மின்சாரக் கட்டணத்தில் ஒரு அதிகரிப்பு ஏற்படக்கூடும் என்பதால், அந்தத் தொகையை மானியமாகப் பெறுவதன் முக்கியத்துவத்தை அவர் வலியுறுத்தினார்.
அத்துடன், வரையறுக்கப்பட்ட லங்கா மின்சார (தனியார்) நிறுவனத்துக்கும் இந்த அவசர அனர்த்த நிலைமை காரணமாக தற்போது மதிப்பிடப்பட்டதன் அடிப்படையில் சுமார் 252 மில்லியன் ரூபா நட்டம் ஏற்பட்டுள்ளதாக அதன் அதிகாரிகள் குழுவில் தெரிவித்தனர். அந்தத் திருத்தப் பணிகளுக்குச் செலவிடப்படும் தொகையை அவர்களுக்காக வரவுசெலவுத்திட்டத்தில் ஒதுக்கப்பட்ட நிதியின் மூலம் மீட்டெடுக்க முடியும் என்பதால், மேலதிக கடன் அல்லது மானியம் எதுவும் தேவையில்லை என்று வரையறுக்கப்பட்ட லங்கா மின்சார (தனியார்) நிறுவனத்தின் அதிகாரிகள் குழுவில் மேலும் தெரிவித்தனர்.

இதேவேளை, இந்த அவசர அனர்த்த நிலைமை காரணமாக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபைக்கு தற்போது மதிப்பிடப்பட்டதன் அடிப்படையில் சுமார் 5.6 பில்லியன் ரூபா நட்டம் ஏற்பட்டுள்ளதாக அதன் அதிகாரிகள் குழுவுவில் தெரிவித்தனர். தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபையின் 156 நீர் வழங்கல் திட்டங்கள் சேதமடைந்துள்ளதாகவும், அவை அனைத்தும் பராமரிப்பு செய்யப்பட்டு தற்போது சீரமைக்கப்பட்டுள்ளதாகவும் வீடமைப்பு, நிர்மாணிப்பு மற்றும் நீர் வழங்கல் அமைச்சின் செயலாளர் குழுவில் தெரிவித்தார். அத்துடன், புனரமைப்புப் பணிகளை மேற்கொள்ளத் தேவையான நிதியை ஆசிய அபிவிருத்தி வங்கி மூலம் மானியமாகப் பெறுவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் செயலாளர் குழுவில் தெரிவித்தார்.

அதற்கமைய, இங்கு கருத்துத் தெரிவித்த குழுவின் தலைவர், எதிர்காலத்தில் ஏற்படக்கூடிய அனர்த்தங்களை எதிர்கொள்வதற்குத் தேவையான திட்டங்களைத் தயாரிப்பதன் முக்கியத்துவத்தை வலியுறுத்தியதுடன், உட்கட்டமைப்பு வசதிகள் மற்றும் மூலோபாய அபிவிருத்தி பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுவானது அதற்குத் தேவையான ஆதரவை சம்பந்தப்பட்ட அமைச்சுக்கள் மற்றும் அதிகாரிகளுக்கு வழங்குவதற்குத் தயாராக இருப்பதாகவும் தெரிவித்தார்.

இந்தக் கூட்டத்தில் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்களான நலின் பண்டார ஜயமஹ, அஜித் பி. பெரேரா மற்றும் அசித நிரோஷன எகொட விதான ஆகியோரும் அதிகாரிகள் சிலரும் கலந்துகொண்டனர்.

முறையாக கையாளப்படும் சர்வதேச உதவிகள்!

இலங்கைக்கு கிடைக்கப்பெறும் சர்வதேச உதவிகள் வெளிப்படைத்தன்மையுடனேயே கையாளப்பட்டுவருகின்றது என்று வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்தார்.

அரசாங்க நிர்வாகப் பொறிமுறை ஊடாக உரிய வகையில் உதவித் திட்டங்கள் வழங்கப்பட்டுவருகின்றன எனவும் அவர் கூறினார்.

இலங்கைக்கு கிடைக்கப்பெறும் சர்வதேச உதவிகள் தொடர்பில் வெளிப்படைதன்மை இல்லை என முன்வைக்கப்பட்டுவரும் குற்றச்சாட்டு தொடர்பில் வெளிவிவகார அமைச்சரிடம் வினவப்பட்டது.

இதற்கு பதிலளிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

“ பேரிடரின் பின்னர் இலங்கைக்கு சர்வதேச உதவிகள் கிடைக்க ஆரம்பித்தன. முதல் ஆறு மணி நேரத்துக்குள்ளேயே மீட்பு பணிக்குரிய உதவியை இந்தியா வழங்கியது.

பாகிஸ்தான், சீனா, நேபாளம் உட்பட அனைத்து நாடுகளும் உதவி வருகின்றன. இலங்கையிலுள்ள வெளிநாட்டு தூதுவர்கள் தமது பிரத்தியே நிதியைக்கூட வழங்கியுள்ளனர்.

தம்மால் முடிந்த வகையில் எமக்கு உதவி வழங்கிய சர்வதேச சமூகத்துக்கு நன்றிகளைத் தெரிவிக்கின்றோம்.

நெருக்கடினான நேரத்தில் நேசக்கரம் நீட்டிவரும் புலம்பெயர் இலங்கையர்களுக்கும் நன்றிகளைத் தெரிவிக்கின்றோம்.” எனவும் வெளிவிவகார அமைச்சர் குறிப்பிட்டார்.

அதேவேளை, நிவாரண பணியில் ஓரிரு குறைப்பாடுகள் இருக்கலாம். அதனை வைத்துக்கொண்டு ஒட்டுமொத்த கட்டமைப்புமீது விமர்சனங்களை முன்வைப்பத ஏற்புடையது அல்ல.

விநியோக பொறிமுறை நீதியாக நடக்கின்றது. வெளிப்படையான அரசாங்க நிர்வாகப் பொறிமுறை உள்ளது என விஜித ஹேரத் மேலும் கூறினார்.

‘Rebuilding Sri Lanka’ நிதியத்திற்கு HNB 100 மில்லியன் ரூபா நன்கொடை

 

டித்வா சூறாவளியால் பாதிக்கப்பட்ட மக்களின் அன்றாட வாழ்க்கையையும், அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட நாட்டையும் மீண்டும் கட்டியெழுப்புவதற்காக தொடங்கப்பட்ட ‘Rebuilding Sri Lanka’ நிதியத்திற்கு உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு அமைப்புகள், வர்த்தகர்கள் மற்றும் பரோபகாரிகளிடமிருந்து தொடர்ந்து நன்கொடைகள் கிடைத்து வருகின்றன.

இந்த நிலையில், Hatton National வங்கி 100 மில்லியன் ரூபா நிதியை நன்கொடையாக வழங்கியதுடன், அதற்கான காசோலையை Hatton National வங்கியின் முகாமைத்துவப் பணிப்பாளரும் பிரதான நிறைவேற்று அதிகாரியுமான தமித் பல்லேவத்த மற்றும் பிரதம செயற்பாட்டு அதிகாரி சஞ்சய விஜேமான்ன ஆகியோர் இன்று (16) ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்கவிடம் கையளித்தனர்.

ஜனாதிபதி ஊடகப் பிரிவு
2025. 12. 16

பேரிடர் தடுப்பு முகாமைத்துவம்: தொழில்நுட்ப ஒத்துழைப்பு வழங்க பிரான்ஸ் இணக்கம்

இலங்கைக்கான பிரான்ஸ் தூதுவர் ரேமி லெம்பெர்ட், பாதுகாப்பு பிரதி அமைச்சர் மேஜர் ஜெனரல் அருண ஜயசேகரவை நேற்று சந்தித்து பேச்சு நடத்தினார்.

இயற்கை அனர்த்தம் மற்றும் அதனை தொடர்ந்து முன்னெடுக்கப்பட்ட மீட்பு, நிவாரண மற்றும் மீளமைப்பு நடவடிக்கைகள் குறித்து இதன்போது கலந்துரையாடப்பட்டன.

அரசாங்கத்தின் ஒருங்கிணைந்த முறையில் மேற்கொள்ளப்பட்ட தேசிய மீட்பு நடவடிக்கைகள் குறித்து பிரான்ஸ் தூதுவருக்கு விளக்கமளிக்கப்பட்டது.

முக்கிய காலகட்டத்தில் இலங்கைக்கு ஆதரவளிப்பதில் பிரான்ஸ் தனது உறுதியான அர்ப்பணிப்பை தொடர்வதாக பிரான்ஸ் தூதுவர் மீண்டும் உறுதிப்படுத்தினார்.

உடனடி மனிதாபிமான உதவியாக, மீள்குடியேற்ற நடவடிக்கைகளுக்கு ஆதரவாக 1,000 அவசர நிவாரணப் பொதிகள் ஏற்கனவே வழங்கப்பட்டுள்ளன என்பதை தூதுவர் சுட்டிக்காட்டினார்.

மேலும், அனர்த்த முகாமைத்துவத்தில் நிபுணத்துவம் பெற்ற பிரான்ஸ் இராணுவ அதிகாரி ஒருவர் இலங்கைக்கு விஜயம் செய்வார்.

நிலைமைகளை மதிப்பீடு செய்யவும், அனர்த்த முகாமைத்துவ நிலையம் மற்றும் தொடர்புடைய நிறுவனங்களுடன் அவர் கலந்துரையாடுவார் எனவும் தூதுவர் கூறினார்.

அனர்த்த முகாமைத்துவ நிலையம் , தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம மற்றும் வானிலைத் ஆராய்ச்சி நிலையம் உள்ளிட்ட முக்கிய தேசிய நிறுவனங்களின் தொழில்நுட்ப மற்றும் செயற்பாட்டு திறன்களை மேம்படுத்துவதற்கு உதவ முனைவதாகவும் தூதுவர் தெரிவித்தார்.

இந்த சந்திப்பில் பிரான்ஸ் பாதுகாப்பு ஆலோசகர், பிராந்திய சிவில் பாதுகாப்பு இணைப்பாளர் உள்ளிட்ட பிரான்ஸ் தூதரகத்தின் பல அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

ரஷ்யா, உக்ரைன் போர் முடிவுக்கு வரும் சாத்தியம்!

ரஷ்யா மற்றும் உக்ரைனுக்கிடையிலான போரை முடிவுக்கு கொண்டுவருவதற்குரிய முயற்சியில் சிறந்த முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்தார்.

உக்ரைன் ஜனாதிபதி, பிரான்ஸ் ஜனாதிபதி மற்றும் நேட்டோ தலைவர்களுடன் இது தொடர்பில் தான் விரிவான கலந்துரையாடலிலட் ஈடுபட்டதாகவும் அவர் கூறினார்.

ஐரோப்பிய தலைவர்களிடமிருந்து எமக்கு பேராதரவு கிடைக்கின்றது. அவர்களை போரை முடிவுக்கு கொண்டுவர விரும்புகின்றனர் எனவும் ட்ரம்ப் குறிப்பிட்டார்.

மேற்குலக நாடுகள் தமக்குரிய பாதுகாப்பு உத்தரவாதத்தை வழங்கும் பட்சத்தில் நேட்டோ அமைப்பில் இணையும் திட்டத்தை கைவிட தயார் என்ற சமிக்ஞையை உக்ரைன் வெளிப்படுத்தியுள்ளது.

ஐரோப்பாவில் நடைபெறும் அமைதி பேச்சுவார்த்தைக்கு மத்தியிலேயே உக்ரைன் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது என சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

உக்ரைன் மற்றும் ரஷ்யாவுக்கிடையிலான போர் மூன்றாண்டுகளுக்கு மேலாக நீடித்துவருகின்றமை குறிப்பிடத்தக்கது.

அனர்த்த முகாமைத்துவ பொறிமுறை தோல்வி: சஜித் குற்றச்சாட்டு

இலங்கையில் தற்போது முன்னெடுக்கப்பட்டு வரும் அனர்த்த முகாமைத்துவ நடவடிக்கைகள் தோல்வி கண்டுள்ளன என்று எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச சுட்டிக்காட்டியுள்ளார்.

இதனை மாற்றியமைத்து தற்காலத்திற்கேற்றாற் போல் இடர் முகாமைத்துவ திட்டத்தை முன்னெடுக்க வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

“ பேரழிவால் பாதிக்கப்பட்ட இலட்சக்கணக்கான மக்களின் வாழ்வாதாரங்கள் அழிந்துபோயுள்ளன. அதனை மீள கட்டியெழுப்ப நாம் கை கொடுக்க வேண்டும்.

மக்கள் தமது வீடுகளை இழந்திருக்கிறார்கள். பலரின் முழு வாழ்க்கையுமே அழிந்துபோயுள்ளது. களப் பயணங்களை மேற்கொண்டால் இந்த நிலையை புரிந்து கொள்ள முடியும்.

சீரற்ற வானிலை நிலவரங்களை துல்லியமாக அறிவிப்புச் செய்யும் விதமான பயனுள்ள முன்னெடுப்புகளை நாம் ஆரம்பிக்க வேண்டும்.

நமது நாட்டிற்குத் தேவையான நவீன தொழில்நுட்ப டாப்ளர் ரேடார் கருவிகள் இன்னும் இல்லை.

சுனாமியால் பல்லாயிரக்கணக்கான உயிர்கள் பலியாகியுள்ள நிலையில், இடர் முகாமைத்துவ பொறிமுறையானது தோல்வி கண்டுள்ளது.

இரண்டு வார முன்னறிவிப்புகளுக்குப் பிறகும் சரியாக உரிய நடவடிக்கைகளை வகுத்துச் செயற்படுவதில் அரசாங்கம் தோல்வி கண்டுள்ளது.

இதனால் இலட்சக்கணக்கான மக்களின் மனித மற்றும் அடிப்படை உரிமைகள் மீறப்பட்டு, அவர்களின் வாழ்வுரிமை பறிக்கப்பட்டுள்ளது என்றும் எதிர்க்கட்சித் தலைவர் கூறியுள்ளார்.

பாகிஸ்தானில் இருந்து இலங்கைக்கு மனிதாபிமான உதவி

பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்குவதற்காக பாகிஸ்தான் அரசாங்கத்தால் நன்கொடையாக வழங்கப்பட்ட மனிதாபிமான உதவித் தொகை நேற்று (15) கொழும்பு துறைமுக சர்வதேச கொள்கலன் முனையத்தில் இலங்கையிடம் கையளிக்கப்பட்டது.

இலங்கை அரசாங்கத்தின் சார்பாக துறைமுகங்கள் மற்றும் சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சர் அநுர கருணாதிலக மற்றும் துறைமுகங்கள் மற்றும் சிவில் விமானப் போக்குவரத்து பிரதி அமைச்சர் ஜனித ருவன் கொடித்துவக்கு ஆகியோர் இந்த உதவியை உத்தியோகபூர்வமாக பொறுப்பேற்றனர். பாகிஸ்தான் அரசாங்கத்தை பிரதிநிதித்துவப்படுத்தி இலங்கைக்கான பாகிஸ்தான் உயர் ஸ்தானிகர் இந்த மனிதாபிமான உதவித் தொகையை உத்தியோகபூர்வமாக கையளித்தார்.

இலங்கையில் தற்போதைய அனர்த்த சூழ்நிலையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவும் நோக்கில், பாகிஸ்தானின் தேசிய அனர்த்த முகாமைத்துவ அதிகாரசபை மற்றும் பிரதமர் அலுவலகத்துடன் ஒருங்கிணைந்து சுமார் 200 மெட்ரிக் டொன் மனிதாபிமான உதவிகள் இலங்கைக்கு அனுப்பப்பட்டுள்ளன.

இந்த உதவித் தொகையில் இடம்பெயர்ந்த குடும்பங்களுக்கு தங்குமிடம் மற்றும் கூடாரங்கள், போர்வைகள் போன்றவை அடங்கும்.அத்துடன் அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உடனடி நிவாரணம் மற்றும் மீட்புப் பணிகளுக்காக உயிர்காப்பு ஜெக்கெட்டுகள், படகுகள் மற்றும் நீர் அகற்றும் பம்புகள் ஆகியவை அடங்கும். மக்களின் சுகாதாரம் மற்றும் ஊட்டச்சத்து தேவைகளைப் பூர்த்தி செய்ய மருந்துகள், பால்மா, மருத்துவ உணவுகள், நுளம்பு வலைகள் போன்றவையும் இதில் அடங்கும்.

இந்த அனர்த்த சமயத்தில் இலங்கைக்கு ஆதரவாக இருந்து , நிவாரணம் வழங்குவதற்கும், நாட்டின் மீளமைப்பிற்கு உதவுவதற்கும் பாகிஸ்தானின் அர்ப்பணிப்பு, இரு நாடுகளுக்கும் இடையிலான நீண்டகால நட்பு மற்றும் ஒத்துழைப்பை பிரதிபலிக்கிறது.

எதிர்வரும் நாட்களில், அனர்த்த முகாமைத்துவ நிலையம் மற்றும் ஏனைய மனிதாபிமான உதவி நிறுவனங்களுடன் ஒருங்கிணைந்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மற்றும் நிறுவனங்களால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இந்த மனிதாபிமான உதவிகளை விநியோகிக்க திட்டமிடப்பட்டுள்ளது.

 

சர்வதேச கொடையாளர் மாநாட்டை நடத்த ஏற்பாடு!

சர்வதேச கொடையாளர் மாநாட்டை நடத்துவதற்குரிய ஏற்பாடுகளை அரசாங்கம் செய்து வருகின்றது. உலக வங்கியின் ஆரம்பக்கட்ட மதிப்பீட்டு அறிக்கை வெளியான பின்னர் மாநாட்டுக்குரிய திகதி நிர்ணயிக்கப்படும்.

பேரிடரால் ஏற்பட்ட இழப்புகள் மற்றும் அவற்றை மீளமைக்க ஏற்படும் செலவுகள் தொடர்பான மதிப்பீடுகள் தற்போது மேற்கொள்ளப்பட்டுவருகின்றன.

உலக வங்கி இதற்குரிய ஏற்பாட்டை செய்துவரும் நிலையில், ஆரம்பக்கட்ட மதிப்பீட்டு அறிக்கை ஓரிரு வாரங்களுக்குள் அரசாங்கத்திடம் கையளிக்கப்படவுள்ளது.

இது தொடர்பில் உலக வங்கியிடம் இலங்கை அரசாங்கம் கோரிக்கை விடுத்திருந்தது.

அதேவேளை, சர்வதேச கொடையாளர் மாநாட்டை நடத்துமாறு பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தியும் கோரிக்கை விடுத்திருந்தது.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி, ஐக்கிய தேசியக் கட்சி உள்ளிட்ட எதிரணிகள் சர்வதேச கொடையாளர் மாநாட்டை நடத்துமாறு கோரியுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

சினிமா

பிரபல இந்திய பாடகி ஆஷா போஸ்லே காலமானார்!

0
  பிரபல இந்திய பின்னணி பாடகி ஆஷா போஸ்லே தமது 92ஆவது வயதில் இன்று(12) காலமானார். இந்திய திரையுலகில் 10,000-இற்கும் அதிக பாடல்களை பாடியுள்ள மூத்த பாடகி ஆஷா போஸ்லே நேற்று(11) மாரடைப்பு ஏற்பட்டதையடுத்து மும்பையிலுள்ள...

சின்னத்திரை நடிகை தற்#கொ#லை!

0
  இலங்கையை பூர்வீகமாகக்கொண்ட பிரபல சின்னத்திரை நடிகையான சுபாஷினி (வயது 36) தற்#கொ#லை செய்துகொண்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. "கயல்" சின்னத்திரை தொலைக்காட்சி தொடரில் நடித்து வருபவர் சுபாஷிணி (வயது36). இலங்கையை பூர்வீகமாகக்கொண்ட இவர் கடந்த...

“தனுஷின் நட்பை இழந்தது மிகப்பெரிய அவமானம்” – விக்னேஷ் சிவன் வருத்தம்

0
தனுஷ் உடனான நட்பை இழந்தது மிகப்பெரிய அவமானம் என்று விக்னேஷ் சிவன் பகிர்ந்துள்ளார். விக்னேஷ் சிவன் இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன் நடித்துள்ள ‘எல்.ஐ.கே’ திரைப்படம் ஏப்ரல் 10-ம் திகதி திரைக்கு வரவுள்ளது. நீண்ட பிரச்சினைகளுக்கு...

செய்தி

ஹார்முஸ் நீரிணையில் இரு கப்பல்களை சிறைபிடித்தது ஈரான்!

0
ஹார்முஸ் நீரிணையில் இரண்டு சரக்குக் கப்பல்களைத் தனது கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவந்துள்ளதாக ஈரான் கடற்படை தெரிவித்துள்ளது. முறையான அனுமதியின்றி இயங்கியது மற்றும் கடல்சார் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தியதாகக் கூறி, இந்த அதிரடி நடவடிக்கையை ஈரான் கடற்படை...

காவத்தை சம்பவம் மிலேச்சத்தனம்: திகா கண்டனம்!

0
காவத்தை சம்பவம் மிலேச்சத்தனமானது என தொழிலாளர் தேசிய முன்னணியின் தலைவரும், முன்னாள் அமைச்சருமான பழனி திகாம்பரம் தெரிவித்துள்ளார். மேற்படி சம்பவத்தை வன்மையாகக் கண்டிப்பதுடன், பாதிக்கப்பட்டவர்களுக்கான நியாயம் கிடைக்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும்...

டித்வா சூறாவளி: இழப்பீட்டுத் தொகையை மே மாத இறுதிக்குள் வழங்கி முடிக்குமாறு ஜனாதிபதி பணிப்பு!

0
டித்வா சூறாவளியால் பகுதியளவில் சேதமடைந்த வீடுகளுக்காக அரசினால் அங்கீகரிக்கப்பட்ட 05 இலட்சம் ரூபா இழப்பீட்டுத் தொகையை, மிக சிக்கலான சந்தர்ப்பங்களைத் தவிர ஏனைய அனைத்துப் பயனாளிகளுக்கும் மே மாத இறுதிக்குள் வழங்கி முடிக்குமாறு...