Home Blog Page 173

மரக்கறி விலைப்பட்டியல் (15.12.2025)

நுவரெலியா பொருளாதார மத்திய நிலையத்தால் இன்று (15) வெளியிடப்பட்டுள்ள மரக்கறி வகைகளின் (ஒரு கிலோ) விலை பட்டியல்…

பேரிடர் சவால்கள் தொடர்பில் நேரில் சந்தித்துப் பேச அனுமதி கோரி ஜனாதிபதிக்கு மனோ அவசர கடிதம்!

மலையகச் சமூகம் எதிர்கொள்ளும் அனர்த்த சவால்கள் குறித்து நேரில் சந்தித்துக் கலந்துரையாடுவதற்கு அனுமதியளிக்குமாறு கோரி ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவுக்கு தமிழ் முற்போக்குக் கூட்டணியின் தலைவர் மனோ கணேசன் எம்.பி. கடிதம் அனுப்பியுள்ளார்.

தனது கடிதத்தின் ஆரம்பத்தில், “இந்த விதிவிலக்கான சவாலான தேசிய நெருக்கடி காலத்தில் உங்களின் தீர்க்கமான தலைமைத்துவத்தை நாங்கள் ஏற்றுப் பாராட்டுகிறோம்.” – என்று மனோ எம்.பி. குறிப்பிட்டுள்ளார்.

“அண்மையில் ‘டித்வா’ அனர்த்தத்தால் கண்டி, நுவரெலியா, பதுளை, மாத்தளை மற்றும் அதனைச் சூழவுள்ள பகுதிகளில் உள்ளவர்கள் மிக மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ளனர்.

குறிப்பாக, காணி உரிமை, வீட்டு வசதி, கல்வி, சுகாதாரம் மற்றும் வறுமை ஒழிப்பு ஆகியவற்றில் ஒப்பீட்டளவில் குறைந்த மற்றும் சில துறைகளில் எதிர்மறையான மனித அபிவிருத்தி சுட்டெண்களை மலையகச் சமூகம் தொடர்ந்து பதிவு செய்து வருகின்றது.

இந்தச் சமூகத்துக்கான மீட்பு மற்றும் விரைவான புனர்நிர்மாணக் கட்டத்தில் வேறுபட்ட மற்றும் இலக்கு வைக்கப்பட்ட அணுகுமுறை தேவைப்படுகின்றது.

எனவே, இந்தச் சூழலில், தனித்துவமான இந்தச் சவால்களை எதிர்கொள்வதற்கான ஒருங்கிணைந்த மற்றும் நிலையான கட்டமைப்பைப் பற்றி ஆலோசிக்க, மலையகச் சமூகத்தின் அரசியல் மற்றும் சிவில் பிரதிநிதிகளை உள்ளடக்கிய அவசர சந்திப்புக்கு நேரமொன்றை ஒதுக்கித்தர வேண்டும்.” – என்றும் மனோ எம்.பி. தனது கடிதத்தில் மேலும் தெரிவித்துள்ளார்.

மலையாள நடிகர் அகில் விஸ்வநாதன் சடலமாக மீட்பு

மலையாள நடிகர் அகில் விஸ்வநாதன் (வயது 30) உயிரிழந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

மலையாளத்தில் வெளியான ‘சோழா’, ‘ஆபரேஷன் ஜாவா’ உள்பட சில படங்களில் நடித்திருந்தவர், அகில் விஸ்வநாதன். இதில் ‘சோழா’ படத்தில் சிறப்பாக நடித்தற்காக கேரள மாநில அரசின் விருதை கடந்த 2019-ம் ஆண்டு பெற்றார்.

மாணவராக இருந்தபோது தனது சகோதரர் அருணுடன் நடித்த ‘மங்காண்டி’ என்ற தொலைக்காட்சி படத்துக்காக சிறந்த குழந்தை நட்சத்திரத்துக்கான மாநில அரசின் விருதையும் அவர் பெற்றுள்ளார்.

திருச்சூரில் உள்ள மத்தத்தூரில் வசித்து வந்த அகில் விஸ்வநாதன், நேற்று காலை வீட்டில் சடலமாக கிடந்தார். அவருடைய தாயார் கீதா வேலைக்குச் செல்வதற்காக புறப்பட்டபோது, அகில் உயிரற்றுக் கிடந்ததைக் கண்டு போலீஸாருக்கு தகவல் தெரிவித்தார். அவர்கள் விசாரணை நடத்தி வருகின்றனர். மறைந்த அகிலின் தந்தை விஸ்வநாதன், பைக் விபத்தில் காயமடைந்து சிகிச்சை பெற்று வருகிறார்.

ஆஸ்திரேலியாவில் யூத சமூகத்தை இலக்கு வைத்து தாக்குதல்: இஸ்ரேல் பிரதமர் கடும் சீற்றம்!

யூத எதிர்ப்பு தாக்குதலை ஊக்குவிக்கும் வகையில் ஆஸ்திரேலியா அரசாங்கம் செயல்பட்டுள்ளது என்று இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு குற்றஞ்சாட்டியுள்ளார்.

பாலஸ்தீன அரசை அங்கீகரித்ததன்மூலம் ஆஸ்திரேலிய தலைமைத்துவம் இதனை செய்தது எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

அத்துடன், ஆஸ்திரேலிய பிரதமர் அந்தோனி அல்பானீஸை பலவீனமான தலைமைத்துவம் எனவும் அவர் விமர்சித்துள்ளார்.

யூத எதிர்ப்பு புற்றுநோய் போன்றது. தலைவர்கள் அமைதியாக இருக்கும்பட்சத்தில் அது வேகமாக பரவுகின்றது.

புற்றுநோய் பரவ ஆஸ்திரேலிய தலைமைத்துவம் இடமளித்தது. அதனால்தான் யூதர்கள்மீது கொடூர தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது எனவும் இஸ்ரேல் பிரதமர் குறிப்பிட்டார்.

இலங்கையின் விவசாயத் துறையின் மீட்சிக்கு உதவ கனடா உறுதி

பேரிடரால் பாதிக்கப்பட்ட இலங்கையின் விவசாயத் துறையின் மீட்சிக்கு உதவி வழங்கத் தயாராக இருப்பதாகவும் கனடா உறுதியளித்துள்ளது.

நிதியமைச்சில் நிதி மற்றும் திட்டமிடல் பிரதி அமைச்சர் அனில் ஜெயந்த பெர்னாண்டோவுடன் நடத்திய சந்திப்பின் போது இலங்கைக்கான கனடிய தூதுவர் இசபெல் மார்ட்டின் இந்த உறுதிமொழியை வழங்கியுள்ளார்.

இலங்கை அரசாங்கத்தின் கட்டமைக்கப்பட்ட மீட்புத் திட்டத்தை கனடா பாராட்டுகிறது என்றும், இலங்கை அதன் முறையான சேதம் மற்றும் தேவை மதிப்பீட்டை முடித்தவுடன் ஒட்டாவா ஆதரவை வழங்கத் தயாராக உள்ளது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

பேரழிவுக்குப் பிந்தைய மதிப்பீட்டை இறுதி செய்தவுடன், சூறாவளி மற்றும் அதனுடன் தொடர்புடைய வெள்ளத்தால் கடுமையாக பாதிக்கப்பட்ட விவசாய வாழ்வாதாரங்களை மீட்டெடுப்பதில் குறிப்பாக கவனம் செலுத்தி, முன்னுரிமைப் பகுதிகளில் அதிகபட்ச உதவியை வழங்க கனடா தயாராக உள்ளது என்றும் கனடியத் தூதுவர் தெரிவித்துள்ளார்.

பேரிடர் முகாமைத்துவத்திற்கான சிறப்பு தேசிய சபைக் கூட்டம் நாளை நடைபெறவுள்ளது.

ஜனாதிபதி தலைமையில் நடைபெறும் இக்கூட்டத்தில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச மற்றும் அனைத்து அரசியல் கட்சி பிரதிநிதிகளும் பங்கேற்கவுள்ளனர்.

பிரதம அமைச்சர் இணைத்தலைமை வகிப்பார்

2004 ஆம் ஆண்டு சுனாமியைத் தொடர்ந்து, 2005 ஆம் ஆண்டு 13 ஆம் இலக்க பேரிடர் முகாமைத்துவ சட்டத்தின் கீழ் இந்த சபை நிறுவப்பட்டது.

எனினும், அச்சபையின் செயல்பாடு இயங்கா நிலையிலேயே இருந்து வந்தது.

எனவே , மேற்படி சட்டத்தில் சில திருத்தங்கள் தேவை என்றும், இது சபைக் கூட்டத்தில் விவாதிக்கப்படும் என்றும் அரசாங்க வட்டாரங்கள் தெரிவித்தன.

அமெரிக்க பல்கலையில் துப்பாக்கிச்சூடு: 2 பேர் பலி: 8 பேர் படுகாயம்!

அமெரிக்காவின் பிரவுன் பல்கலைக்கழகத்தில் நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டில் 2 பேர் உயிரிழந்தனர். மேலும் 8 பேர் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.

அமெரிக்காவின் ரோட் தீவின் தலைநகர் பிராவிடென்சில் உள்ள பிரவுன் பல்கலைக்கழகத்தின் பொறியியல் துறைக் கட்டடம் அருகே மர்மநபர் ஒருவர் சரமாரியாக துப்பாக்கிச்சூடு நடத்தினார். இந்த சம்பவத்தில் 2 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும் 8 பேர் பலத்த காயம் அடைந்தனர்.

இவர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர். இவர்களது நிலைமை கவலைக்கிடமாக உள்ளதால், பலி எண்ணிக்கை அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது.

சந்தேக நபர் தலைமறைவாக உள்ளார். தாக்குதல் நடத்தியவர் கருப்பு நிற உடை அணிந்த ஒரு ஆண் என்றும், அவர் தப்பி ஓடிவிட்டதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

பல்கலையில் தங்கி படிக்கும் மாணவர்கள் பாதுகாப்பான இடத்திற்கு மாற்றப்பட்டனர். துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்ட பிரவுன் பல்கலைக்கழகம் அமெரிக்காவின் பழமையான மற்றும் மிகவும் மதிப்புமிக்க பல்கலைக்கழங்களில் ஒன்று. ஏழு மாடி கட்டடத்தில் பொறியியல் மற்றும் இயற்பியல் துறையில் பாடங்கள் கற்பிக்கப்படுகிறது. 100க்கும் மேற்பட்ட லேப்கள் உள்ளன.

பல்கலையில் நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூடு சம்பவத்திற்கு ஜனாதிபதி டிரம்ப் கண்டனம் தெரிவித்துள்ளார்.

பிரவுன் பல்கலைக்கழகத்தில் நடந்த துப்பாக்கிச் சூடு சம்பவம் குறித்து எனக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எப்.பி.ஐ அதிகாரிகள் சம்பவ இடத்தில் உள்ளனர். சந்தேக நபர் காவலில் எடுக்கப்பட்டுள்ளார் எனவும் ட்ரம்ப் குறிப்பிட்டுள்ளார்.

சுதந்திரக் கட்சியில் மைத்திரி மீண்டும் சங்கமம்?

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி ஒன்றிணைவது மிகவும் நல்லது என்று அக்கட்சியின் முன்னாள் தலைவர் மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

மைத்திரிபால சிறிசேன பக்கம் இருந்த விஜயதாச ராஜபக்ச சுதந்திரக் கட்சியில் இணைந்துள்ளமை தொடர்பில் எழுப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கையிலேயே மைத்திரிபால சிறிசேன இவ்வாறு கூறினார்.

“ கட்சி தொடர்பில் வழக்குகள் நிலுவையில் உள்ளன. அவற்றை மீளப்பெற்று இணைவது நல்லது.

எனக்கு எதிராகவும் வழக்குகள் உள்ளன. அவை முடிவடைந்த பின்னரே நான் முடிவொன்றை எடுப்பேன். விஜயதாச ராஜபக்ச எனக்கு அறிவித்துவிட்டே சென்றார்.

தலைமைப் பதவிக்கு வருபவர் பற்றி தெரிந்த பின்னரே கட்சியுடன் இணைந்து செயல்படுவது தொடர்பில் முடிவெடுக்கப்படும்.” எனவும் மைத்திரிபால சிறிசேன குறிப்பிட்டார்.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியே மைத்திரிபால சிறிசேனவின் அரசியல் தாய்வீடு. அக்கட்சியில் பொதுச்செயலாளராக பதவி வகித்தார்.

2015 இல் நடைபெற்ற தேர்தலில் பொதுவேட்பாளராக களமிறங்கினார். வெற்றிபெற்ற பின்பு கட்சியைக் கைப்பற்றி தலைவராகவும் தெரிவானார் என்பது குறிப்பிடத்தக்கது.

மரத்தில் ரஜினி படம்: புதுச்சேரி ஓவியரின் முயற்சியை ரசித்த மக்கள்

புதுச்சேரியில் நடிகர் ரஜினிகாந்தின் 75-வது பிறந்தநாளையொட்டி மரத்தில் அவரது படத்தை வரைந்த ஓவியரின் முயற்சியை மக்கள் ரசித்தனர்.

ரஜினிகாந்த் பிறந்தநாளை பலரும் பலவிதமாக கொண்டாடினார்கள். புதுவை முதலியார்பேட்டையை சேர்ந்த ஓவியர் குமார் வித்தியாசமாக ரஜினியின் பிறந்தநாளை கொண்டாடினார். அவர் தனது ஓவியத் திறமையால் அப்பகுதியில் உள்ள மரத்தில் 20 அடியில் ரஜினிகாந்தின் உருவப்படத்தை வரைந்து, சூப்பர்ஸ்டாருக்கு 75 பிளஸ் 50, வாழ்த்துக்கள் என வரைந்துள்ளார்.

ரஜினிகாந்தின் 75 வயதையும், அவர் 50 ஆண்டு திரைத்துறையில் உள்ளதையும் குறிப்பிடும் வகையில் அதில் குறிப்பிட்டு இருந்தார். மேலும் அதில் மரங்களை பாதுகாப்போம், மழை பெறுவோம் என்ற விழிப்புணர்வு வாசகத்தையும் எழுதி இருந்தார்.

அந்த வழியாக சென்ற பலரும் மரத்தின் அருகே நின்று செல்பி எடுத்தனர். மேலும் பலர் அந்த ஓவியத்தை ரசித்து பார்த்தனர்.

என்.பி.பி. ஆட்சியில் வெளிநாட்டு உதவிகள் முறைகேடாக பயன்படுத்தப்படாது: தேரர் நம்பிக்கை

இலங்கைக்கு கிடைக்கப்பெறும் சர்வதேச உதவிகள் தேசிய மக்கள் சக்தி ஆட்சியின்கீழ் முறைகேடாகப் பயன்படுத்தப்படமாட்டாது என்ற நம்பிக்கை உள்ளது என்று கலாநிதி ஓமல்பே சோபித தேரர் தெரிவித்தார்.

“ சுனாமி அனர்த்தத்தின்போதும் எமக்கு வெளிநாட்டு உதவிகள் கிடைக்கப்பெற்றன. எனினும், அவை மோசடியாகப் பயன்படுத்தப்பட்டன. அரசில்வாதிகள் முறைகேடாக நடந்துகொன்றனர். குறுக்கு வழியில் செயற்பாடுகள் இடம்பெற்றன.

கொரோனா நெருக்கடி காலகட்டத்திலும் மோசடிகள் இடம்பெற்றன. ஊசி விவகாரத்தில்கூட அமைச்சர் மோசடியில் ஈடுபட்டுள்ளார். தமது சொத்துகளை பெருக்கிக்கொண்டுள்ளார்.

கடந்த காலங்களில் இப்படியான கசப்பான அனுபவங்களே எமக்கு உள்ளன. எனினும், இந்த ஆட்சியின்கீழ் வெளிநாட்டு உதவிகள் குறுக்கு வழியில் பயன்படுத்தப்படமாட்டாது என நம்புகின்றோம்.” – எனவும் சோபித தேரர் குறிப்பிட்டார்..

சினிமா

பிரபல இந்திய பாடகி ஆஷா போஸ்லே காலமானார்!

0
  பிரபல இந்திய பின்னணி பாடகி ஆஷா போஸ்லே தமது 92ஆவது வயதில் இன்று(12) காலமானார். இந்திய திரையுலகில் 10,000-இற்கும் அதிக பாடல்களை பாடியுள்ள மூத்த பாடகி ஆஷா போஸ்லே நேற்று(11) மாரடைப்பு ஏற்பட்டதையடுத்து மும்பையிலுள்ள...

சின்னத்திரை நடிகை தற்#கொ#லை!

0
  இலங்கையை பூர்வீகமாகக்கொண்ட பிரபல சின்னத்திரை நடிகையான சுபாஷினி (வயது 36) தற்#கொ#லை செய்துகொண்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. "கயல்" சின்னத்திரை தொலைக்காட்சி தொடரில் நடித்து வருபவர் சுபாஷிணி (வயது36). இலங்கையை பூர்வீகமாகக்கொண்ட இவர் கடந்த...

“தனுஷின் நட்பை இழந்தது மிகப்பெரிய அவமானம்” – விக்னேஷ் சிவன் வருத்தம்

0
தனுஷ் உடனான நட்பை இழந்தது மிகப்பெரிய அவமானம் என்று விக்னேஷ் சிவன் பகிர்ந்துள்ளார். விக்னேஷ் சிவன் இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன் நடித்துள்ள ‘எல்.ஐ.கே’ திரைப்படம் ஏப்ரல் 10-ம் திகதி திரைக்கு வரவுள்ளது. நீண்ட பிரச்சினைகளுக்கு...

செய்தி

ஹார்முஸ் நீரிணையில் இரு கப்பல்களை சிறைபிடித்தது ஈரான்!

0
ஹார்முஸ் நீரிணையில் இரண்டு சரக்குக் கப்பல்களைத் தனது கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவந்துள்ளதாக ஈரான் கடற்படை தெரிவித்துள்ளது. முறையான அனுமதியின்றி இயங்கியது மற்றும் கடல்சார் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தியதாகக் கூறி, இந்த அதிரடி நடவடிக்கையை ஈரான் கடற்படை...

காவத்தை சம்பவம் மிலேச்சத்தனம்: திகா கண்டனம்!

0
காவத்தை சம்பவம் மிலேச்சத்தனமானது என தொழிலாளர் தேசிய முன்னணியின் தலைவரும், முன்னாள் அமைச்சருமான பழனி திகாம்பரம் தெரிவித்துள்ளார். மேற்படி சம்பவத்தை வன்மையாகக் கண்டிப்பதுடன், பாதிக்கப்பட்டவர்களுக்கான நியாயம் கிடைக்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும்...

டித்வா சூறாவளி: இழப்பீட்டுத் தொகையை மே மாத இறுதிக்குள் வழங்கி முடிக்குமாறு ஜனாதிபதி பணிப்பு!

0
டித்வா சூறாவளியால் பகுதியளவில் சேதமடைந்த வீடுகளுக்காக அரசினால் அங்கீகரிக்கப்பட்ட 05 இலட்சம் ரூபா இழப்பீட்டுத் தொகையை, மிக சிக்கலான சந்தர்ப்பங்களைத் தவிர ஏனைய அனைத்துப் பயனாளிகளுக்கும் மே மாத இறுதிக்குள் வழங்கி முடிக்குமாறு...