Home Blog Page 175

18 ஆம் திகதி கூடுகிறது நாடாளுமன்றம்!

விசேட நாடாளுமன்ற அமர்வு எதிர்வரும் 18 ஆம் திகதி நடைபெறவுள்ளது.

பிரதமரின் கோரிக்கைக்கு அமைய நாடாளுமன்ற நிலையியற் கட்டளை 16 இன் பிரகாரமே விசேட அமர்வுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

நாடாளுமன்றத்தின் இந்த விசேட அமர்வானது சபாநாயகரால் 2025.12.12 ஆம் திகதி பிரசுரிக்கப்பட்ட 2466/33ஆம் இலக்க விசேட வர்த்தமானி மூலம் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய 18 ஆம் திகதி 9.30 மணிக்கு கூடவிருப்பதுடன், இதில் கலந்துகொள்ளுமாறு அனைத்து எம்.பிக்களுக்கும் சபாநாயகர் அறிவுறுத்தியுள்ளார்.

பேரிடரால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்குவதற்குரிய நிதியை பெறுவதற்கான குறை நிரப்பு பிரேரணையை நிறைவேற்றிக்கொள்வதற்காகவே விசேட அமர்வு இடம்பெறுகின்றது என தெரியவருகின்றது.

மரக்கறி விலைப்பட்டியல் (13.12.2025)

நுவரெலியா பொருளாதார மத்திய நிலையத்தால் இன்று (13) வெளியிடப்பட்டுள்ள மரக்கறி வகைகளின் (ஒரு கிலோ) விலை பட்டியல்…

பேரிடர்: 211 பேரை தொடர்ந்து காணவில்லை!

 

டித்வா புயல் மற்றும் அதைத் தொடர்ந்து ஏற்பட்ட வெள்ளம் மற்றும் நிலச்சரிவுகளால் இலங்கையில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 640 ஆக அதிகரித்துள்ளது.

அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் இன்று (12 ) மதியம் வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

211 பேரை காணவில்லை என பட்டியலிடப்பட்டுள்ளது.

5 ஆயிரத்து 713 வீடுகள் முழமையாகவும், ஒரு லட்சத்து 4 ஆயிரத்து 805 வீடுகள் பகுதியளவும் சேதம் அடைந்துள்ளன என்று மேற்படி அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

26 ஆயிரத்துக்கு மேற்பட்ட குடும்பங்கள் இடைத்தங்கல் முகாம்களில் தொடர்ந்து தங்கவைக்கப்பட்டுள்ளன.

யாழில் கிணற்றில் தவறி விழுந்து பெண் உயிரிழப்பு!

யாழ்ப்பாணம் – அனலைதீவு பகுதியில் நீர் நிறைந்த கிணற்றில் தவறி வீழ்ந்து 56 வயதுடைய பெண்ணொருவர் பரிதாபகரமாக உயிரிழந்துள்ளார்.

இந்தத் துயரச் சம்பவம் நேற்று இடம்பெற்றுள்ளது என்று தெரிவிக்கப்படுகின்றது.

ஊர்காவற்றுறை பொலிஸ் நிலைய ஆளுகைக்குள் இருக்கும் அனலைதீவு 5 ஆம் வட்டாரத்தில் வசிக்கும் சுப்பையா நளினி என்பவரே இந்தச் சம்பவத்தில் உயிரிழந்துள்ளார்.

நாட்டில் தொடரும் அசாதாரண காலநிலையைத் தொடர்ந்து பெய்து வரும் கனமழை காரணமாக மக்கள் பல்வேறு அவலங்களைச் சந்தித்து வரும் நிலையில் நீர்நிலைகளும் நிரம்பியுள்ளன.

இவ்வாறு நிகழ்ந்த சம்பவம் குறித்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்தச் சம்பவம் குறித்து மேலதிக விசாரணைகளை ஊர்காவற்றுறை பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.

பேரிடரால் ஒரு லட்சத்துக்கு மேற்பட்ட வீடுகள் சேதம்!

டித்வா புயல் மற்றும் அதைத் தொடர்ந்து ஏற்பட்ட வெள்ளம் மற்றும் நிலச்சரிவுகளால் இலங்கையில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 640 ஆக அதிகரித்துள்ளது.

அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் இன்று (12 ) மதியம் வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

211 பேரை காணவில்லை என பட்டியலிடப்பட்டுள்ளது.

5 ஆயிரத்து 713 வீடுகள் முழமையாகவும், ஒரு லட்சத்து 4 ஆயிரத்து 805 வீடுகள் பகுதியளவும் சேதம் அடைந்துள்ளன என்று மேற்படி அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

26 ஆயிரத்துக்கு மேற்பட்ட குடும்பங்கள் இடைத்தங்கல் முகாம்களில் தொடர்ந்து தங்கவைக்கப்பட்டுள்ளன.

யாழில் அனர்த்த நிவாரணம்: பெயர்ப்பட்டியல் பார்வைக்கு!

யாழில் அனர்த்த நிவாரணம்:
பெயர்ப்பட்டியல் பார்வைக்கு!

முறைப்பாடுகள் இருப்பின் முறையிடுமாறு
மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு அறிவிப்பு

யாழ்ப்பாணம் மாவட்டத்தில் இடர் நிவாரண உதவிக்குத் தெரிவானோரின் பெயர் விவரங்கள் அடங்கிய பெயர்ப்பட்டியல் தற்போது காட்சிப்படுத்தப்பட்டுள்ள நிலையில், முறைப்பாடுகள் இருப்பின் அது தொடர்பில் முறையிடுமாறு யாழ்ப்பாணம் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு அறிவித்துள்ளது.

யாழ்ப்பாணம் மாவட்டத்தில் டித்வா புயலால் 14 ஆயிரத்து 624 வீடுகள் பாதிக்கப்பட்டதாகக் குறிப்பிட்டு, அவற்றைத் தூய்மைப்படுத்துவதற்காக 36 கோடி ரூபாவுக்கும் மேற்பட்ட நிதி பெறப்பட்டுள்ளது. எனினும், யாழ்ப்பாணத்தில் இவ்வளவுதூரம் பெரும் பாதிப்புக்கள் இல்லை என்றும், மோசடியான முறையில் தரவுகள் வழங்கப்பட்டு இந்த நிதி பெறப்பட்டுள்ளது எனவும் பொதுவான குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளன.

இவ்வாறான நிலையிலேயே, யாழ்ப்பாணம் மாவட்டத்தில் இருந்து தெரிவு செய்யப்பட்ட பயனர்கள் தொடர்பான பெயர்ப்பட்டியல் பிரதேச செயலகங்களில் தற்போது காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.

இந்தப் பட்டியலில் யாருடைய பெயரேனும் தேவையிருந்தும் இணைக்கப்படாதிருப்பின் அல்லது தவறான வழியில் நிவாரணம் கொடுக்க இணைக்கப்பட்டிருப்பின் தகுந்த ஆதாரங்களுடன் அறியத் தருமாறு யாழ்ப்பாணம் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு அறிவித்துள்ளது.

யாழ். மாவட்ட செயலகத்தில் உள்ள மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு அலுவலகத்தில் முறைப்பாடுகளை முன்வைக்க முடியும் என்றும் கூறப்பட்டுள்ளது.

“கர்ப்பிணித் தாய்மார்களுக்கான டிசம்பர் மாத ஊட்டச்சத்து கொடுப்பனவு.”

தற்போது நிலவும் அனர்த்த நிலைமை மற்றும் வரவிருக்கும் பண்டிகைக் காலத்தை முன்னிட்டு, கர்ப்பிணித் தாய்மார்களுக்கு ரூபா 5,000/- பெறுமதியான ஊட்டச்சத்து கொடுப்பனவை வழங்குவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

இந்தக் கொடுப்பனவு ஒரு முறை மாத்திரமே வழங்கப்படும். இது 2025 நவம்பர் 30 ஆம் திகதி அல்லது அதற்கு முன்னர் தாய் சேய் நல நிலையங்களில் (Maternal Clinics) பதிவு செய்த கர்ப்பிணித் தாய்மார்களுக்குக் கொடுக்கப்படும்.

மகளிர் மற்றும் சிறுவர் விவகார அமைச்சின் கீழ் உள்ள முன்பிள்ளைப்பருவ அபிவிருத்திக்கான தேசிய செயலகத்தின் (National Secretariat for Early Childhood Development) ஒரு திட்டமாக, இந்தக் கொடுப்பனவு டிசம்பர் 16 ஆம் திகதி முதல் பிரதேச செயலகங்களூடாக (Divisional Secretariat offices) மேற்கொள்ளப்படும்.

ஜனாதிபதிக்கு எதிராக குற்றப் பிரேரணை கொண்டுவருமாறு மொட்டு கட்சி கோரிக்கை!

ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவுக்கு எதிராக குற்றப் பிரேரணையொன்றை கொண்டுவருமாறு பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தியிடம் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி கோரிக்கை விடுத்துள்ளது.

கொழும்பில் நேற்று நடைபெற்ற ஊடக சந்திப்பின்போதே மொட்டு கட்சி செயலாளர் சட்டத்தரணி சாகர காரியவசம் மேற்படி கோரிக்கையை முன்வைத்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,

“ பேரிடர் குறித்து முன்னெச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தது. இவ்வாறு தகவல் கிடைத்தும் அனர்த்தங்களால் ஏற்பட்ட இழப்புகளை கட்டுப்படுத்த முடியாமல்போயுள்ளது. இது விடயத்தில் தனது இயலாமை மற்றும் கவனயீனத்தை மூடி மறைப்பதற்கு அரசாங்கம் முயற்சித்துவருகின்றது.

அத்துடன், அரசாங்க பலத்தை பயன்படுத்தி தமது தரப்பில் இழைக்கப்பட்ட தவறை மறைப்பதற்குரிய நடவடிக்கையும் முன்னெடுக்கப்படுகின்றது.

எனவே, ஜனாதிபதிக்கு எதிராக குற்றப் பிரேரணையொன்றை முன்வைக்குமாறு பிரதான எதிர்க்கட்சியிடம் கோருகின்றோம். அவ்வாறு கொண்டுவந்தால் எங்கு தவறிழைக்கப்பட்டது என்பது உட்பட அனைத்து தகவல்களும் தெரியவரும்.

தேசிய மக்கள் சக்தியில் மனசாட்சியின் பிரகாரம் செயல்படும் எம்.பிக்களும் அதனை ஆதரிக்கக்கூடும். அப்போது அரசாங்கத்தின் மூன்றிலிரண்டு பெரும்பான்மை பலமும் ஆட்டம் காணும்.” என்றார்.

அவசரகால சட்ட ஏற்பாடுகள் தவறாக பயன்படுத்தப்படவில்லை!

அவசரகால சட்டம் தவறான நோக்கில் பயன்படுத்தப்படவில்லை என்று பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்தார்.

“ பேரிடர் நிலைமையை எதிர்கொள்ளவே அது அமுல்படுத்தப்பட்டது. மாறாக அரசியல் நோக்கங்களுக்காக சட்டம் பயன்படுத்தப்படவில்லை.” எனவும் அவர் கூறினார்.

எனினும், அவசரகால சட்டம் ஒடுக்குமுறை ஆயுதமாக பயன்படுத்தப்படுகின்றது என எதிரணி குற்றஞ்சாட்டிவருகின்றது.

ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க, நாடாளுமன்றத்தில் ஆற்றிய உரையின்போது இக்குற்றச்சாட்டை நிராகரித்திருந்தார்.

அதேவேளை, “அவசரகாலச் சட்டத்தின் கீழ் தங்கள் அடிப்படை உரிமைகள் மீறப்படுவதாக எவரேனும் கருதினால் அது தொடர்பில் முறைப்பாடு செய்யலாம்.”

இவ்வாறு இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.

அவசரகால விதிமுறைகள் அரசியலமைப்பின் கீழ் உத்தரவாதம் அளிக்கப்பட்ட அடிப்படை உரிமைகளை மீற முடியாது என்று இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் ஆணையாளர் நிமால் புஞ்சிஹேவ சுட்டிக்காட்டினார்.

1996 ஆம் ஆண்டு 21 ஆம் இலக்க இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு சட்டத்தின் கீழ், இதுபோன்ற எந்தவொரு முறைப்பாட்டையும் விசாரிக்க ஆணைக்குழு கடமைப்பட்டுள்ளது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்

சினிமா

பிரபல இந்திய பாடகி ஆஷா போஸ்லே காலமானார்!

0
  பிரபல இந்திய பின்னணி பாடகி ஆஷா போஸ்லே தமது 92ஆவது வயதில் இன்று(12) காலமானார். இந்திய திரையுலகில் 10,000-இற்கும் அதிக பாடல்களை பாடியுள்ள மூத்த பாடகி ஆஷா போஸ்லே நேற்று(11) மாரடைப்பு ஏற்பட்டதையடுத்து மும்பையிலுள்ள...

சின்னத்திரை நடிகை தற்#கொ#லை!

0
  இலங்கையை பூர்வீகமாகக்கொண்ட பிரபல சின்னத்திரை நடிகையான சுபாஷினி (வயது 36) தற்#கொ#லை செய்துகொண்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. "கயல்" சின்னத்திரை தொலைக்காட்சி தொடரில் நடித்து வருபவர் சுபாஷிணி (வயது36). இலங்கையை பூர்வீகமாகக்கொண்ட இவர் கடந்த...

“தனுஷின் நட்பை இழந்தது மிகப்பெரிய அவமானம்” – விக்னேஷ் சிவன் வருத்தம்

0
தனுஷ் உடனான நட்பை இழந்தது மிகப்பெரிய அவமானம் என்று விக்னேஷ் சிவன் பகிர்ந்துள்ளார். விக்னேஷ் சிவன் இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன் நடித்துள்ள ‘எல்.ஐ.கே’ திரைப்படம் ஏப்ரல் 10-ம் திகதி திரைக்கு வரவுள்ளது. நீண்ட பிரச்சினைகளுக்கு...

செய்தி

ஹார்முஸ் நீரிணையில் இரு கப்பல்களை சிறைபிடித்தது ஈரான்!

0
ஹார்முஸ் நீரிணையில் இரண்டு சரக்குக் கப்பல்களைத் தனது கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவந்துள்ளதாக ஈரான் கடற்படை தெரிவித்துள்ளது. முறையான அனுமதியின்றி இயங்கியது மற்றும் கடல்சார் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தியதாகக் கூறி, இந்த அதிரடி நடவடிக்கையை ஈரான் கடற்படை...

காவத்தை சம்பவம் மிலேச்சத்தனம்: திகா கண்டனம்!

0
காவத்தை சம்பவம் மிலேச்சத்தனமானது என தொழிலாளர் தேசிய முன்னணியின் தலைவரும், முன்னாள் அமைச்சருமான பழனி திகாம்பரம் தெரிவித்துள்ளார். மேற்படி சம்பவத்தை வன்மையாகக் கண்டிப்பதுடன், பாதிக்கப்பட்டவர்களுக்கான நியாயம் கிடைக்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும்...

டித்வா சூறாவளி: இழப்பீட்டுத் தொகையை மே மாத இறுதிக்குள் வழங்கி முடிக்குமாறு ஜனாதிபதி பணிப்பு!

0
டித்வா சூறாவளியால் பகுதியளவில் சேதமடைந்த வீடுகளுக்காக அரசினால் அங்கீகரிக்கப்பட்ட 05 இலட்சம் ரூபா இழப்பீட்டுத் தொகையை, மிக சிக்கலான சந்தர்ப்பங்களைத் தவிர ஏனைய அனைத்துப் பயனாளிகளுக்கும் மே மாத இறுதிக்குள் வழங்கி முடிக்குமாறு...