Home Blog Page 176

மனோ பதவி விலக வேண்டும்: சிவநேசன் வலியுறுத்து!

“மலையக மக்களுக்கு நில உரிமையை பெற்றுக்கொடுக்க முடியவில்லை என்றால் எம்.பி. பதவியை துறந்துவிட்டு வீட்டுக்கு செல்லுங்கள்.”

இவ்வாறு தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் மனோ கணேசனுக்கு சவால் விடுத்துள்ளார் உரிமை மீட்போம் தலைமுறை காப்போம் அமைப்பின் தலைவர் பா. சிவநேசன்.

இது தொடர்பில் அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளவை வருமாறு,

“ நிலத்தை வாங்கி கொடுக்க முடியவில்லை என்றால் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை விட்டுவிட்டு வீட்டுக்கு போகவேண்டும் மனோ கணேசன்.

மலையகத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அரசாங்கம் இடம் கொடுக்கவில்லை என்றால் வட கிழக்குக்கு போக சொல்வது மனோகனேசனின் கையாலாகாத தன்மையை காட்டுகின்றது .

மலையகத்தில் எத்தனையோ ஏக்கர் கணக்கில் இடங்கள் உள்ளது .

அதை அரசாங்கத்திடம் கேட்டு பெற்றுகொடுக்க முடியாத நீங்கள் (உங்கள் மொழியில்) தற்குறி மாதிரி அறிக்கை விட வேண்டாம் .

வடகிழக்கு இயற்கை அனர்த்தத்தில் பாதிக்கப்படாத பிரதேசமா ?

மலையக மக்கள் வடகிழக்குக்கு சென்று அங்கு அனர்த்தம் ஏற்பட்டால் அவர்களை நீங்க எமலோகத்துக்கு போக சொல்வீர்கள் போல …

மலையக மக்களை வைத்து நீங்கள் ஆடிய ; நாடகம் போதும் சாமி.

மலையகத்தில் இருக்கின்ற நாங்கள் எப்படி இடத்தை பெறவேண்டும் என்பதை நாங்கள் பார்த்துகொள்கின்றோம்

உங்களுக்காக 14 ஆயிரம் வாக்களித்த கொழும்பு மக்களை தயவு செய்து கவனியுங்கள்.

மலையக மக்களை வைத்து அரசியல் செய்ய முனையவேண்டாம் அமைதியாக கொழும்பை சுத்தம் செய்யுங்கள்” என்று அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

போர் பதற்றத்துக்கு மத்தியில் தாய்லாந்து நாடாளுமன்றம் கலைப்பு?

கம்போடியாவுடனான எல்லை பதற்றங்களுக்கு மத்தியில் தாய்லாந்து நாடாளுமன்றத்தை முன்கூட்டியே கலைப்பதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.

இது தொடர்பான கோரிக்கையை மன்னரிடம், தாய்லாந்து பிரதமர் முன்வைத்துள்ளார் என தெரியவருகின்றது.

இக்கோரிக்கையை மன்னர் ஏற்கும்பட்சத்தில் முன்கூட்டியே அந்நாட்டில் பொதுத்தேர்தல் நடத்தப்படக்கூடும்.

அதாவது 46 முதல் 60 நாட்களுக்குள் தேர்தல் நடத்தப்பட வேண்டும். இதற்கமைய மார்ச் மாதத்துக்குள் தேர்தல் நடத்தப்படலாம் என தெரியவருகின்றது.

கம்போடியா மற்றும் தாய்லாந்துக்கிடையில் ஏற்பட்ட போர் அமெரிக்கா மற்றும் மலேசியா உள்ளிட்ட நாடுகளின் முயற்சியால் நிறுத்தப்பட்டது.

எனினும், அமைதி ஒப்பந்தத்தைமீறி இரு நாடுகளுக்கும் இடையில் தற்போது போர் மூண்டுள்ளது. இதனால் பலர் பாதிக்கப்பட்டுள்ளனர். லட்சக்கணக்கானோர் இடம்பெயர்ந்துள்ளனர்.

இந்நிலையில் அமெரிக்க ஜனாதிபதி போர் நிறுத்தத்தை மீண்டும் வலியுறுத்தியுள்ளார்.

கொழும்பு துறைமுகத்தில் அலிசன் ஹூக்கர்

இலங்கை வந்துள்ள, அரசியல் விவகாரங்களுக்கான அமெரிக்காவின் உதவி இராஜாங்கச் செயலர் அலிசன் ஹூக்கர் கொழும்பு துறைமுகத்திற்குச் சென்று பார்வையிட்டுள்ளார்.

இதன் போது அவர், இலங்கை துறைமுக அதிகார சபைத் தலைவர் அட்மிரல் சிறிமேவன் ரணசிங்கவை சந்தித்துக் கலந்துரையாடினார்.

அவருடன் அமெரிக்க தூதுவர் ஜூலி சங்கும் இந்த சந்திப்பில் கலந்து கொண்டார்.

வர்த்தகம் மற்றும் துறைமுக மீள்தன்மையில் அமெரிக்க-சிறிலங்கா கூட்டாண்மை குறித்து இரு தரப்பினரும் கலந்துரையாடியுள்ளனர்.

பொருளாதாரங்களுக்கு உயிர்நாடியாகவும், உலகளாவிய பாதுகாப்பிற்கான முன்னணியாகவும் இந்தியப் பெருங்கடல் மூலோபாய முக்கியத்துவத்தை வாய்ந்ததாக உள்ளது என இருதரப்பினரும் வலியுறுத்தினர்.

வணிகத்தை நகர்த்துவதற்கு வலுவான துறைமுகங்கள் அவசியம் என்று இந்தச் சந்திப்புக்குப் பின்னர் அமெரிக்க தூதுவர் ஜூலி சங் எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.

மரக்கறி விலைப்பட்டியல் (12.12.2025)

நுவரெலியா பொருளாதார மத்திய நிலையத்தால் இன்று (12) வெளியிடப்பட்டுள்ள மரக்கறி வகைகளின் (ஒரு கிலோ) விலை பட்டியல்…

பேரிடர் இழப்பு: 20 ஆம் திகதிக்குள் மதிப்பீட்டு அறிக்கை!

“ டித்வா புயலால் இலங்கையில் ஏற்பட்ட பேரிடரால் நிகழ்ந்த இழப்புகள் தொடர்பான ஆரம்பக்கட்ட மதிப்பீடுகளை எதிர்வரும் 20 ஆம் திகதிக்குள் வெளியிடக்கூடியதாக இருக்கும்.”

இவ்வாறு அமைச்சரவைப் பேச்சாளரும், அமைச்சருமான நளிந்த ஜயதிஸ்ஸ  நம்பிக்கை வெளியிட்டார்.

அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் வாராந்த ஊடகவியலாளர் சந்திப்பு அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று நடைபெற்றது.

இதன்போது பேரிடரால் ஏற்பட்ட இழப்புகள் தொடர்பில் மதிப்பீடு செய்யப்பட்டுள்ளதா என அமைச்சரிடம் வினவப்பட்டது.

இதற்கு பதிலளித்த அவர் கூறியவை வருமாறு,

“ சில நிறுவனங்களால் உத்தேச இழப்பீடு விபரம் வெளியிடப்பட்டுள்ளது எனினும், முழுமையான விபரங்களே மிக முக்கியம். இதற்காக சில இடங்களில் உலக வங்கியின் உதவிகள் கோரப்பட்டுள்ளன.

அந்தவகையில் டிசம்பர் 15 முதல் 20 ஆம் திகதிக்குள் இழப்பு பற்றிய மதிப்பீட்டை வெளியிட முடியும் என நம்புகின்றோம்.” என்றார்.

ஊழல் அற்ற என்பிபி ஆட்சிமீது சர்வதேசத்துக்கு நம்பிக்கை!

தேசிய மக்கள் சக்தி ஆட்சியின்கீழ் ஊழல், மோசடி இடம்பெறாது என சர்வதேச சமூகம் நம்புகின்றது. அதனால்தான் சர்வதேச உதவிகள் அதிகளவு கிடைக்கப்பெறுகின்றன என்று ஜே.வி.பியின் செயலாளர் ரில்வின் சில்வா தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,

“இலங்கை அரசாங்கம்மீது சர்வதேசம் நம்பிக்கை வைத்துள்ளது. இந்த ஆட்சியின்கீழ் ஊழல், மோசடிகள் இடம்பெறாது என்பதாலேயே அதிகளவு சர்வதேச உதவிகள் கிடைக்கப்பெறுகின்றன.

இந்த ஆட்சியின்கீழ் சர்வதேச உதவிகள் கிடைக்கப்பெறமாட்டாது என சிலர் கூறிவந்தாலும் அது பொய்யென்பது உறுதியாகியுள்ளது.

புலம்பெயர்ந்து வாழும் இலங்கையர்களும் உதவிகளை வழங்கிவருகின்றனர். நாட்டு மக்களும் தம்மால் முடிந்த பங்களிப்பை செய்துள்ளனர். இவர்களுக்கு நன்றிகளை கூறிக்கொள்கின்றேன்.

பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்க்கையை இயல்பு நிலைக்கு கொண்டுவருவதற்கு அரசாங்கம் உதவிகளை வழங்கும்.

மக்களுக்கு அரசாங்கத்தால் வழங்கப்பட்ட அனைத்து நிவாரண உறுதிமொழிகளும் நிச்சயம் நிறைவேற்றப்படும்.” – என்றார்.

ஜனாதிபதி அநுர தலைமையில் இலங்கை மீண்டெழும்: அமெரிக்கா நம்பிக்கை!

ஜனாதிபதியின் தலைமையின் கீழ் இலங்கையை மீண்டும் கட்டியெழுப்ப முடியும் என்று நாம் நம்புகிறோம்.

– வழங்கக் கூடிய எத்தகைய உதவியையும் பெற்றுக் கொடுக்கத்தயார்

அமெரிக்க அரசியல் விவகாரங்கள் தொடர்பான உப இராஜாங்க செயலாளர் Allison Hooker தெரிவிப்பு

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவின் தலைமையில் இலங்கை மீண்டும் கட்டியெழுப்பப்படும் என்றும், அதற்குத் தேவையான எந்த உதவியையும் வழங்க அமெரிக்கா தயாராக உள்ளது என்றும் அமெரிக்க அரசியல் விவகாரங்கள் தொடர்பான உப இராஜாங்க செயலாளர் Allison Hooker தெரிவித்தார்.

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவிற்கும் அமெரிக்க அரசியல் விவகாரங்கள் தொடர்பான உப இராஜாங்க செயலாளர் Allison Hooker ற்கும் இடையிலான சந்திப்பு இன்று (11) காலை ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்றது. இதன் போது உப இராஜாங்கச் செயலாளர் இதனைத் தெரிவித்தார்.

இலங்கை எதிர்கொள்ளும் அனர்த்தங்களுக்கு முகங்கொடுக்க உதவி வழங்க முடிந்ததில் மகிழ்ச்சி அடைவதாகத் தெரிவித்த அலிசன் ஹூக்கர், அனர்த்தத்தினால் இறந்த அனைவரின் குடும்பங்களுக்கும் தனது இரங்கலைத் தெரிவித்தார்.

இந்த நெருக்கடியான நேரத்தில் பல்வேறு நிவாரண மற்றும் நிவாரணக் குழுக்களை நாட்டிற்கு அனுப்புவதில் அமெரிக்க ஜனாதிபதியும் அரசாங்கமும் அளித்த ஆதரவிற்கு ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க நன்றி தெரிவித்தார்.

அமெரிக்கா உட்பட உலகெங்கிலும் உள்ள அனைத்து நட்பு நாடுகளும் இலங்கைக்கு அளித்த மனப்பூர்வமான ஆதரவை ஜனாதிபதி பாராட்டினார்.

நாட்டின் பொருளாதாரத்தை ஸ்திரப்படுத்தி பொருளாதார குறிகாட்டிகளை உயர்த்தி வரும் நிலையிலே இலங்கைக்கு இந்த அனர்த்தத்திற்கு முகங்கொடுக்க நேரிட்டதாகச் சுட்டிக்காட்டிய ஜனாதிபதி, பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்வாதார அபிவிருத்தி மற்றும் நீண்டகால அடிப்படையில் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதில் எதிர்காலத்தில் விசேட கவனம் செலுத்தப்பட வேண்டும் என்று குறிப்பிட்டார்.

வெள்ளம் மற்றும் மண்சரிவுகளால் சேதமடைந்த நெடுஞ்சாலைகள், புகையிரதப் பாதைகள் போன்ற உட்கட்டமைப்பு வசதிகளையும், விவசாயம், கால்நடைகள், சிறிய மற்றும் மத்திய தர கைத்தொழில்கள் உள்ளிட்ட முக்கிய வருமான வழிகளையும் மீட்டெடுக்க சிறிது காலம் எடுக்கும் என்றும், இது தொடர்பாக அனைத்து நட்பு நாடுகளின் உதவிகளையும் எதிர்பார்ப்பதாக ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்தார்.

தீர்வை வரிகள் தொடர்பான பேச்சுவார்த்தைகளை மீண்டும் தொடங்குவது குறித்து அமெரிக்கா கவனம் செலுத்துவதாகவும், அமெரிக்காவிற்கும் இலங்கைக்கும் இடையிலான சுற்றுலாத் துறையை மேம்படுத்துவதற்கும், இரு நாடுகளுக்கும் இடையிலான வர்த்தகம் மற்றும் கடல்சார் நடவடிக்கைகளை விரிவுபடுத்துவதற்கு ஆதரவளிப்பதாகவும் துணை வெளியுறவுச் செயலாளர் இதன்போது குறிப்பிட்டார். போதைப்பொருள் அச்சுறுத்தலை ஒழிப்பதற்கான இலங்கை அரசாங்கத்தின் முயற்சிகளுக்கு ஆதரவளிப்பதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.

கடந்த காலங்களில் அதிக எண்ணிக்கையிலான அமெரிக்க சுற்றுலாப் பயணிகள் இந்நாட்டிற்கு வருகை தந்துள்ளதாகவும், தொடர்ந்தும் இதுபோன்ற வருகைகளை எதிர்பார்ப்பதாகவும் இதன்போது தெரிவித்த ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க, தற்போதைய அனர்த்த நிலைமையிலிருந்து மீண்டு இலங்கை மக்கள் உயர்ந்த வாழ்க்கைத் தரத்தை அடைய அமெரிக்க அரசாங்கம் வழங்கும் பங்களிப்பைப் பாராட்டினார்.

தொழில் அமைச்சர் மற்றும் நிதி, திட்டமிடல் பிரதி அமைச்சர் கலாநிதி அனில் ஜயந்த பெர்னாண்டோ, நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் செயலாளர் கலாநிதி ஹர்ஷன சூரியப்பெரும ஆகியோருடன் இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் ஜூலி சங் உள்ளிட்ட குழுவினர் இந்த நிகழ்வில் கலந்து கொண்டனர்.

அமெரிக்க குடியுரிமை பெறுவதற்கான கோல்ட் கார்ட் திட்டம் ஆரம்பம்!

அமெரிக்க குடியுரிமை பெறுவதற்கான கோல்ட் கார்ட் திட்டம் ஆரம்பம்!

குறைந்தபட்சம் 10 லட்சம் அமெரிக்க டாலர் கட்டணம் செலுத்தி விரைவாக விசா பெருவதற்கான கோல்டு கார்டு திட்டத்தை அதிபர் டொனால்ட் ட்ரம்ப் தொடங்கிவைத்தார்.

அமெரிக்காவில் வெளிநாட்டவர்கள் குடியேறுவதைக் கட்டுப்படுத்தவும், குடியுரிமை பெறுவதைக் கட்டுப்படுத்தவும் பல்வேறு நடவடிக்கைகளை அதிபர் ட்ரம்ப் எடுத்து வருகிறார்.

இதனால், அமெரிக்காவில் வசித்து வந்த இந்தியர்கள் உட்பட பல வெளிநாட்டினர் நாடு கடத்தப்பட்டனர். பல அமெரிக்க நிறுவனங்களில் முக்கிய பொறுப்புகளில் இருப்பவர்களும் வெளியேற வேண்டிய கட்டாயத்துக்கு தள்ளப்பட்டனர்.

இந்நிலையில், இதற்கு தீர்வு காண வேண்டும் என பல்வேறு நிறுவனங்கள் அமெரிக்க அரசுக்கு தொடர்ந்து அழுத்தம் கொடுத்து வந்தன. இதையடுத்து, இத்தகையவர்களுக்காக கோல்டு கார்டு திட்டம் விரைவில் அறிமுகப்படுத்தப்படும் என ட்ரம்ப் கூறி இருந்தார்.

அதன்படி, கோல்ட் கார்ட் திட்டத்தை புதன் கிழமை ட்ரம்ப் தொடங்கிவைத்தார். இத்திட்டத்தின் கீழ் விசா பெற விரும்புபவர்கள் அதற்கான இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

இரண்டு வகையான விசா கட்டணங்கள் நிர்ணயிக்கப்பட்டுள்ளன. இந்த கட்டணங்கள் மிக மிக அதிகம் என்பதால் இதற்கு விண்ணபிப்பவர்கள் மிகவும் குறைவாகவே இருப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

தனி நபர்கள் விசாவுக்காக விண்ணப்பிப்பதாக இருந்தால் அவர்கள் சேவைக் கட்டணமாக 15,000 டாலர் (இந்திய மதிப்பில் சுமார் ரூ. 13 லட்சம்) செலுத்தி விண்ணப்பிக்க வேண்டும். இதையடுத்து, விண்ணப்பிக்கும் நபர் குறித்து விசாரணை மேற்கொள்ளப்படும். மேலும், விண்ணப்பதாரரிடம் நேர்காணலும் நடத்தப்படும்.

விண்ணப்பம் ஏற்கப்படுமானால் அதன் பின்னர் விண்ணப்பதாரர் 10 லட்சம் டாலர் கட்டணம் (இந்திய மதிப்பில் சுமார் ரூ. 9 கோடி) செலுத்த வேண்டும். கட்டணம் செலுத்தப்பட்ட பிறகு சில வாரங்களில் EB-1 அல்லது EB-2 விசா வழங்கப்படும். இந்த விசாவைப் பெறவதன் மூலம் ஒருவர் சட்டப்பூர்வ நிரந்தர குடியுரிமையைப் பெற முடியும்.

தாங்கள் விரும்பும் பணியாளர்கள் அமெரிக்காவில் நிரந்தரமாக குடியேற நிறுவனங்களும் விண்ணப்பிக்க முடியும். நிறுவனங்கள் எனில் அதற்கான விசா கட்டணம் 20 லட்சம் டாலராகும்.

கோல்டு கார்டு திட்டத்தை தொடங்கிவைத்துப் பேசிய அதிபர் ட்ரம்ப், எனக்கும் நாட்டுக்கும் மிகவும் உற்சாகமான விஷயம் இது. ட்ரம்ப் கோல்ட் கார்ட் திட்டத்தை தொடங்கி உள்ளோம் என தெரிவித்துள்ளார்.

இந்திய நிதி அமைச்சருடன் செந்தில் தொண்டமான் சந்திப்பு!

இந்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கும், இ.தொ.கா தலைவர் செந்தில் தொண்டமானுக்குமிடையில் அண்மையில் சந்திப்பு இடம்பெற்றது.

இச்சந்திப்பின் போது, இந்திய பிரதமர் நரேந்திரமோடியிடம் முன்வைக்கப்பட்ட கோரிக்கைகளை முன்னெடுப்பது தொடர்பாக கலந்துரையாடப்பட்டது.

இந்தியாவின் பிரதான் மந்திரி ஜன் ஆரோக்கிய யோஜனா திட்டத்தின் கீழ் வருடாந்தம் இலங்கை மதிப்பில் 18 இலட்சம் ரூபா மருத்துவ காப்பீடு வழங்குவதை போல், LIC Lanka நிறுவனத்தின் ஊடாக இந்த திட்டத்தை அறிமுகப்படுத்தி பெருந்தோட்ட சமூகத்தை அதில் உள்ளடக்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டது.

OCI அட்டையை பெருந்தோட்ட சமூகத்தினர் பெற்றுக் கொள்வதில் கடினமான நடைமுறைகள் இருப்பதால் அதை இலகுப்படுத்துவதுதற்கு பிறப்பு சான்றிதழில் இந்திய வம்சாவளி தமிழர் எனவும், அல்லது கண்டியில் உள்ள இந்திய உயர்ஸ்தானிகர் அலுவலகத்தில் இந்தியாவில் இருந்து வந்தமைக்கான ஆதாரங்கள் உள்ளமையால் அவற்றை ஆய்வு செய்து OCI அட்டை வழங்குவதற்கான நடவடிக்கை மேற்கொள்ளுமாறும், இந்திய அரசாங்கத்தால் வழங்கப்படும் மாணவர்களுக்கான 2500 ரூபாய் புலமை பரிசீலை அதிகரிக்குமாறும் கோரிக்கை விடுக்கப்பட்டது.

நாட்டை மீண்டும் கட்டியெழுப்புவதற்காக அரசாங்கம் முன்னெடுக்கும் வேலைத்திட்டத்திற்கு பாராட்டு

நாட்டை மீண்டும் கட்டியெழுப்புவதற்காக அரசாங்கம் முன்னெடுக்கும் வேலைத்திட்டத்திற்கு பாராட்டு

அனர்த்தத்திற்குப் பிறகு மக்களின் வாழ்க்கையையும், நாட்டையும் மீண்டும் கட்டியெழுப்ப ஜனாதிபதி தலைமையிலான அரசாங்கம் மேற்கொண்டு வரும் வேலைத்திட்டம் பாராட்டுக்குரியது என்றும், அதற்காக தங்கள் ஆசிகளைத் தெரிவித்துக் கொள்வதாகவும் மல்வத்து மற்றும் அஸ்கிரி பிரதிப் பதிவாளர்களான இரு தேரர்களும் தெரிவித்தனர்.

சியாமோபாலி மகா நிகாயவின் மல்வத்து மகா விகாரை தரப்பின் பிரதிப் பதிவாளர் ராஜகீய பன்டித வண, மஹவெல ரதனபால நாயக தேரர், சியாமோபாலி மகா நிகாயவின் அஸ்கிரி மகா விகாரை தரப்பின் பிரதிப் பதிவாளர் வரலாற்று சிறப்புமிக்க பதுளு முதியங்கன ரஜமகா விகாரையின் பொறுப்பாளர் கலாநிதி வண, முருத்தெனியே ஸ்ரீ தம்மரதன நாயக தேரர் மற்றும் வரலாற்று சிறப்புமிக்க கண்டி ஸ்ரீ தலதா மாளிகையின் தியவடன நிலமே நிலங்க தேல ஆகியோர் இன்று (11) முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவை சந்தித்த போதே இவ்வாறு தெரிவிக்கப்பட்டது.

கண்டி மாவட்டத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கான நிவாரணம் மற்றும் மீள்குடியமர்த்தல் நடவடிக்கைகள் குறித்து இங்கு கலந்துரையாடப்பட்டன.

மக்களை மீள்குடியமர்த்தும் பணிகளில் தலதா மாளிகை வழங்கக்கூடிய பங்களிப்புகள் குறித்து இதன்போது தியவடன நிலமே ஜனாதிபதியின் கவனத்திற்கு கொண்டுவந்தார்.

வரலாற்றுச் சிறப்புமிக்க ஸ்ரீ தலதா மாளிகையினால் ‘Rebuilding Sri Lanka’ நிதியத்திற்கு நிதி நன்கொடையும் வழங்கப்பட்டது.

இந்நிகழ்வில் ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்கவும் கலந்துகொண்டார்.

 

சினிமா

பிரபல இந்திய பாடகி ஆஷா போஸ்லே காலமானார்!

0
  பிரபல இந்திய பின்னணி பாடகி ஆஷா போஸ்லே தமது 92ஆவது வயதில் இன்று(12) காலமானார். இந்திய திரையுலகில் 10,000-இற்கும் அதிக பாடல்களை பாடியுள்ள மூத்த பாடகி ஆஷா போஸ்லே நேற்று(11) மாரடைப்பு ஏற்பட்டதையடுத்து மும்பையிலுள்ள...

சின்னத்திரை நடிகை தற்#கொ#லை!

0
  இலங்கையை பூர்வீகமாகக்கொண்ட பிரபல சின்னத்திரை நடிகையான சுபாஷினி (வயது 36) தற்#கொ#லை செய்துகொண்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. "கயல்" சின்னத்திரை தொலைக்காட்சி தொடரில் நடித்து வருபவர் சுபாஷிணி (வயது36). இலங்கையை பூர்வீகமாகக்கொண்ட இவர் கடந்த...

“தனுஷின் நட்பை இழந்தது மிகப்பெரிய அவமானம்” – விக்னேஷ் சிவன் வருத்தம்

0
தனுஷ் உடனான நட்பை இழந்தது மிகப்பெரிய அவமானம் என்று விக்னேஷ் சிவன் பகிர்ந்துள்ளார். விக்னேஷ் சிவன் இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன் நடித்துள்ள ‘எல்.ஐ.கே’ திரைப்படம் ஏப்ரல் 10-ம் திகதி திரைக்கு வரவுள்ளது. நீண்ட பிரச்சினைகளுக்கு...

செய்தி

ஹார்முஸ் நீரிணையில் இரு கப்பல்களை சிறைபிடித்தது ஈரான்!

0
ஹார்முஸ் நீரிணையில் இரண்டு சரக்குக் கப்பல்களைத் தனது கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவந்துள்ளதாக ஈரான் கடற்படை தெரிவித்துள்ளது. முறையான அனுமதியின்றி இயங்கியது மற்றும் கடல்சார் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தியதாகக் கூறி, இந்த அதிரடி நடவடிக்கையை ஈரான் கடற்படை...

காவத்தை சம்பவம் மிலேச்சத்தனம்: திகா கண்டனம்!

0
காவத்தை சம்பவம் மிலேச்சத்தனமானது என தொழிலாளர் தேசிய முன்னணியின் தலைவரும், முன்னாள் அமைச்சருமான பழனி திகாம்பரம் தெரிவித்துள்ளார். மேற்படி சம்பவத்தை வன்மையாகக் கண்டிப்பதுடன், பாதிக்கப்பட்டவர்களுக்கான நியாயம் கிடைக்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும்...

டித்வா சூறாவளி: இழப்பீட்டுத் தொகையை மே மாத இறுதிக்குள் வழங்கி முடிக்குமாறு ஜனாதிபதி பணிப்பு!

0
டித்வா சூறாவளியால் பகுதியளவில் சேதமடைந்த வீடுகளுக்காக அரசினால் அங்கீகரிக்கப்பட்ட 05 இலட்சம் ரூபா இழப்பீட்டுத் தொகையை, மிக சிக்கலான சந்தர்ப்பங்களைத் தவிர ஏனைய அனைத்துப் பயனாளிகளுக்கும் மே மாத இறுதிக்குள் வழங்கி முடிக்குமாறு...