Home Blog Page 177

இந்திய நிதி அமைச்சருடன் செந்தில் தொண்டமான் சந்திப்பு!

இந்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கும், இ.தொ.கா தலைவர் செந்தில் தொண்டமானுக்குமிடையில் அண்மையில் சந்திப்பு இடம்பெற்றது.

இச்சந்திப்பின் போது, இந்திய பிரதமர் நரேந்திரமோடியிடம் முன்வைக்கப்பட்ட கோரிக்கைகளை முன்னெடுப்பது தொடர்பாக கலந்துரையாடப்பட்டது.

இந்தியாவின் பிரதான் மந்திரி ஜன் ஆரோக்கிய யோஜனா திட்டத்தின் கீழ் வருடாந்தம் இலங்கை மதிப்பில் 18 இலட்சம் ரூபா மருத்துவ காப்பீடு வழங்குவதை போல், LIC Lanka நிறுவனத்தின் ஊடாக இந்த திட்டத்தை அறிமுகப்படுத்தி பெருந்தோட்ட சமூகத்தை அதில் உள்ளடக்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டது.

OCI அட்டையை பெருந்தோட்ட சமூகத்தினர் பெற்றுக் கொள்வதில் கடினமான நடைமுறைகள் இருப்பதால் அதை இலகுப்படுத்துவதுதற்கு பிறப்பு சான்றிதழில் இந்திய வம்சாவளி தமிழர் எனவும், அல்லது கண்டியில் உள்ள இந்திய உயர்ஸ்தானிகர் அலுவலகத்தில் இந்தியாவில் இருந்து வந்தமைக்கான ஆதாரங்கள் உள்ளமையால் அவற்றை ஆய்வு செய்து OCI அட்டை வழங்குவதற்கான நடவடிக்கை மேற்கொள்ளுமாறும், இந்திய அரசாங்கத்தால் வழங்கப்படும் மாணவர்களுக்கான 2500 ரூபாய் புலமை பரிசீலை அதிகரிக்குமாறும் கோரிக்கை விடுக்கப்பட்டது.

நாட்டை மீண்டும் கட்டியெழுப்புவதற்காக அரசாங்கம் முன்னெடுக்கும் வேலைத்திட்டத்திற்கு பாராட்டு

நாட்டை மீண்டும் கட்டியெழுப்புவதற்காக அரசாங்கம் முன்னெடுக்கும் வேலைத்திட்டத்திற்கு பாராட்டு

அனர்த்தத்திற்குப் பிறகு மக்களின் வாழ்க்கையையும், நாட்டையும் மீண்டும் கட்டியெழுப்ப ஜனாதிபதி தலைமையிலான அரசாங்கம் மேற்கொண்டு வரும் வேலைத்திட்டம் பாராட்டுக்குரியது என்றும், அதற்காக தங்கள் ஆசிகளைத் தெரிவித்துக் கொள்வதாகவும் மல்வத்து மற்றும் அஸ்கிரி பிரதிப் பதிவாளர்களான இரு தேரர்களும் தெரிவித்தனர்.

சியாமோபாலி மகா நிகாயவின் மல்வத்து மகா விகாரை தரப்பின் பிரதிப் பதிவாளர் ராஜகீய பன்டித வண, மஹவெல ரதனபால நாயக தேரர், சியாமோபாலி மகா நிகாயவின் அஸ்கிரி மகா விகாரை தரப்பின் பிரதிப் பதிவாளர் வரலாற்று சிறப்புமிக்க பதுளு முதியங்கன ரஜமகா விகாரையின் பொறுப்பாளர் கலாநிதி வண, முருத்தெனியே ஸ்ரீ தம்மரதன நாயக தேரர் மற்றும் வரலாற்று சிறப்புமிக்க கண்டி ஸ்ரீ தலதா மாளிகையின் தியவடன நிலமே நிலங்க தேல ஆகியோர் இன்று (11) முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவை சந்தித்த போதே இவ்வாறு தெரிவிக்கப்பட்டது.

கண்டி மாவட்டத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கான நிவாரணம் மற்றும் மீள்குடியமர்த்தல் நடவடிக்கைகள் குறித்து இங்கு கலந்துரையாடப்பட்டன.

மக்களை மீள்குடியமர்த்தும் பணிகளில் தலதா மாளிகை வழங்கக்கூடிய பங்களிப்புகள் குறித்து இதன்போது தியவடன நிலமே ஜனாதிபதியின் கவனத்திற்கு கொண்டுவந்தார்.

வரலாற்றுச் சிறப்புமிக்க ஸ்ரீ தலதா மாளிகையினால் ‘Rebuilding Sri Lanka’ நிதியத்திற்கு நிதி நன்கொடையும் வழங்கப்பட்டது.

இந்நிகழ்வில் ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்கவும் கலந்துகொண்டார்.

 

இலங்கை வந்தார் அமெரிக்காவின் உதவி இராஜாங்கச் செயலர்

அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் அரசியல் விவகாரங்களுக்கான உதவிச் செயலர் அலிசன் ஹூக்கர் இலங்கை வந்தடைந்தார்.

கட்டுநாயக்க விமான நிலையத்தில் அமெரிக்க தூதுவர் ஜூலி சங் அவரை வரவேற்றார்.

அதையடுத்து அவர்கள் இருவரும் கட்டுநாயக்கவில் உள்ள இலங்கை விமானப்படைத் தளத்திற்குச் சென்றனர்.

பேரிடரால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான உதவிப் பொருட்களை விநியோகிக்கும் பணியில் ஈடுபட்டுள்ள அமெரிக்க விமானப்படையின் சி-130 விமானத்தைப் பார்வையிட்டதுடன், அங்கு பணியில் ஈடுபட்டுள்ள அமெரிக்க படையினருடன் கலந்துரையாடியுள்ளனர்.

இதையடுத்து அமெரிக்காவின் உதவி இராஜாங்கச் செயலர் அலிசன் ஹூக்கர் அரசாங்க பிரதிநிதிகளைச் சந்தித்துப் பேச்சுக்களை நடத்தவுள்ளார்.

அமெரிக்காவின் உதவி இராஜாங்க செயலர் இலங்கை விஜயம்!

அரசியல் விவகாரங்களுக்கான அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் உதவிச் செயலர் அலிசன் ஹூக்கர் இன்று இலங்கை வருகின்றார்.

கொழும்பிலுள்ள அமெரிக்க தூதரகத்தால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் இவ்விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொழும்பு வரும் உதவி இராஜாங்க செயலர் ஹூக்கர் பொருளாதார மற்றும் வணிக உறவுகளை வலுப்படுத்துவது தொடர்பில் முக்கிய சந்திப்புகளில் ஈடுபடவுள்ளார்.

பாதுகாப்பு ஒத்துழைப்பை வலுப்படுத்துதல் மற்றும் இலங்கையின் பொருளாதார மற்றும் கடல்சார் இறையாண்மையை ஆதரித்தல் உள்ளிட்ட பல்வேறு இருதரப்பு விவகாரங்கள் குறித்து கலந்துரையாடுவார்.

பாதுகாப்பு, வர்த்தகம் மற்றும் கடல்சார் பாதுகாப்பு ஆகியவற்றில் நெருக்கமான ஒத்துழைப்பு தொடர்கின்றது.

இதன்மூலம் சுதந்திரமான, திறந்த மற்றும் மீள்தன்மை கொண்ட இந்தோ-பசுபிக் பிராந்தியத்தை முன்னேற்ற நாங்கள் ஒன்றிணைந்து செயற்படுகிறோம் என்றும் அமெரிக்க தூதரகம் குறிப்பிட்டுள்ளது.

எட்டயபுரத்தில் மகாகவி பாரதியார் பிறந்தநாள் விழா கோலாகலம்

முண்டாசு கவி பாரதியாரின் 144-வது பிறந்தநாள் விழா இன்று எட்டயபுரத்தில் நடந்தது.

தனது பாட்டுக்கள் மூலம் சுதந்திர தாகத்தை ஏற்படுத்திய முண்டாசு கவி பாரதியாரின் 144-வது பிறந்தநாள் விழா இன்று அவர் பிறந்த மண்ணான எட்டயபுரத்தில் நடந்தது.

தமிழக அரசு சார்பில் பாரதியார் மணிமண்டபத்தில் நடந்த விழாவில் தமிழக சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் பி.கீதாஜீவன் தலைமையில் சட்டப்பேரவை உறுப்பினர் ஜீ.வி.மார்க்கண்டேயன், பேரூராட்சி மன்ற தலைவி ராமலட்சுமி சங்கரநாராயணன் உள்ளிட்டோர் பாரதியாரின் முழு உருவ வெண்கல சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

விழாவில் மாவட்ட ஆட்சியர் க.இளம்பகவத், சார் ஆட்சியர் ஹூமான்சூ மங்கள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

மூடப்பட்ட தேயிலை தொழிற்சாலை மீள திறப்பு: ஜீவன் நடவடிக்கை!

அக்கரத்தனை பெருந்தோட்ட நிறுவனத்திற்கு உட்பட்ட டயகம–அக்கரபத்தனை கிழக்கு பிரிவு தேயிலை தொழிற்சாலை கடந்த மாதம் 12ஆம் திகதி முதல் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது. இதனால் தொழிற்சாலையில் பணிபுரிந்து வந்த தொழிலாளர்கள் தொழிலின்றி பாரிய சிரமங்களை சந்தித்து வந்தனர்.

இந்த பிரச்சினை இ.தொ.கா பொதுச்செயலாளரும், பாராளுமன்ற உறுப்பினருமான ஜீவன் தொண்டமான் அவர்களின் கவனத்திற்கு கொண்டுவரப்பட்டதைத் தொடர்ந்து தொடர்புடைய தரப்புகளுடன் அவசர நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.

கணக்காய்வு குழுவினரின் ஆய்வின்போது தேயிலை நிறைகளில் ஏற்பட்ட மாற்றங்கள் தொடர்பாக முதற்கட்ட விசாரணைகளில் இரண்டு உயர் அதிகாரிகள் முறைகேடு செய்தது கண்டறியப்பட்டதை அடுத்து தொழிற்சாலை விசாரணை முடியும் வரை மூடப்பட்டுள்ளதாக நிறுவனம் அறிவித்தது.

இதனைத் தொடர்ந்து நடைபெற்ற ஆரம்ப பேச்சுவார்த்தையில் தோட்ட நிறுவனத்தின் தலைமை அதிகாரி கலந்து கொள்ளாததால் எந்தத் தீர்வும் எட்டப்படவில்லை. பின்னர் ஹட்டன் உதவி தொழில் ஆனையாளர் காரியாலயத்தில் இ.தொ.கா சிரேஷ்ட்ட இயக்குனர் லோகதாஸ் அவர்களின் கோரிக்கையின்படி இம்மாதம் 09ஆம் திகதி தீர்க்கமான பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது.

ஹட்டன் உதவி தொழில் ஆனையாளர் தலைமையில் இடம்பெற்ற பேச்சுவார்த்தையில், தொழிற்சாலையை மீண்டும் திறப்பதற்கு 3 மாத அவகாசம் கோரிய தோட்ட நிறுவனம் முன்வைத்த வேண்டுகோளை ஜீவன் தொண்டமான்  திடமாக நிராகரித்தார்.

“குற்றம் செய்தது அதிகாரிகள்; தொழிலாளர்களின் வாழ்க்கையில் தண்டனையை திணிக்கக் கூடாது. எமது மக்களுக்கு உடனடி தொழில் வாய்ப்பு வழங்க தொழிற்சாலை விரைவில் திறக்கப்பட வேண்டும்,” என அவர் வலியுறுத்தினார்.

மேலும், விசாரணை நிறைவடையும் வரை வேறு தோட்டங்களில் பணிபுரியும் இரண்டு அதிகாரிகளை மாற்றீடாக நியமித்து தொழிற்சாலையை செயல்படுத்தலாம் எனவும் பரிந்துரைத்தார்.

நீண்டகால பேச்சுவார்த்தையின் முடிவில், எதிர்வரும் ஜனவரி மாதம் 01ஆம் திகதிக்குள் தொழிற்சாலையை மீண்டும் திறப்பதற்கான நடவடிக்கைகளை முன்னெடுக்கத் தயாருள்ளதாக தோட்ட நிர்வாகம் எழுத்து மூலம் ஒப்புதல் வழங்கியது.

புரிந்துணர்வு பத்திரத்தில் தோட்ட நிர்வாகத்துடன் இணைந்து ஹட்டன் உதவி தொழில் ஆனையாளர் மற்றும் இ.தொ.கா பொதுச்செயலாளர் ஜீவன் தொண்டமான் அவர்களும் கையெழுத்திட்டனர்.

இக்கலந்துரையாடலில் இ.தொ.கா பொதுச்செயலாளரும், பாராளுமன்ற உறுப்பினருமான ஜீவன் தொண்டமான், அக்கரபத்தனை பெருந்தோட்ட நிறுவன தலைமை அதிகாரி அஜித் பெரேரா, தொடர்புடைய தோட்ட அதிகாரிகள், தொழில் ஆணையாளர் அதிகாரிகள் மற்றும் இ.தொ.கா காரியாலயக பிரதிநிதிகளும் தோட்ட மக்களும் கலந்துக்கொண்டனர்.

பேரிடரிலும் அரசியல் நடத்துபவர்களே இடைக்கால அரசு பற்றி கதைக்கின்றனர்!

பேரிடரால் இலங்கை மீண்டும் வங்குரோத்து நிலைக்கு செல்லும் என முன்வைக்கப்பட்டுவரும் குற்றச்சாட்டுகளை அரசாங்கம் நிராகரித்துள்ளது.

“நாட்டில் பேரிடர் ஏற்படுவதற்கு முன்னரே டிசம்பர் மாதம் அரசாங்கம் விழும் என்றார்கள். இப்படியானவர்களின் கருத்துகள் பற்றி அலட்டிக்கொள்ளத்தேவையில்லை.” என்று அமைச்சரவைப் பேச்சாளரும், அமைச்சருமான நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.

பேரிடர் நிலையால் நாட்டு பொருளாதாரம் மீண்டும் விழும் என வெளியாகும் தகவல் பற்றி அமைச்சரிடம் வினவப்பட்டது. இதற்கு பதிலளித்த அவர் மேலும் கூறியவை வருமாறு.

“ பேரிடரால் மக்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர். இப்படியான நிலையிலும் சில தரப்பினர் அரசியல் நடத்துவதற்கு முற்படுகின்றனர். அதனால்தான் இடைக்கால அரசாங்கம் பற்றி எல்லாம் கதைக்கின்றனர்.

நாட்டில் அரசியல் கலாசாரம் மாறிவிட்டது என்பதை இவர்களுக்கு இன்னும் புரியவில்லை. அதனால்தான் பழைய அரசியல் கலாசார மனோநிலையிலேயே இருக்கின்றனர்.” – என்றார் அமைச்சர்.

ஜப்​பானில் ஒரு வாரத்​துக்​குள் சக்​தி​ வாய்ந்த நிலநடுக்​கம் ஏற்படும் அபாயம்!

ஜப்​பானில் ஒரு வாரத்​துக்​குள் சக்​தி​வாய்ந்த நிலநடுக்​கம் ஏற்​படலாம் என்​றும், சுனாமி ஆபத்​தும் ஏற்​படலாம் என்றும் ஜப்​பான் அரசு எச்​சரிக்கை விடுத்​துள்​ளது.

ஜப்​பான் நாட்​டின் வட கடலோரப் பகு​தி​களான ஹொக்​காய்​டோ, ஹொன்ஷு தீவு​களில் கடந்த திங்​கள்​கிழமை சக்​தி​வாய்ந்த நிலநடுக்​கம் ஏற்​பட்​டது.

ரிக்​டர் அளவு​கோலில் 7.5 புள்​ளி​களாக பதிவானது.

இதைத் தொடர்ந்து சுனாமி எச்​சரிக்​கை​யும் விடுக்​கப்​பட்​டது. ஆனால் எதிர்​பார்த்​தது போல சுனாமி எது​வும் வரவில்​லை. ஆனால், நிலநடுக்​கத்​தால் 34 பேர் காயமடைந்​தனர்.

இந்த சக்​தி​வாய்ந்த நிலநடுக்​கம் ஏற்​பட்டு 2 நாட்​கள் மட்​டுமே​ஆன நிலை​யில் அடுத்த ஒரு வாரத்​துக்​குள் ஜப்​பானில் மீண்​டும் சக்​தி​வாய்ந்த நிலநடுக்​கம் ஏற்​படலாம் என்​றும், பயங்​கர​மான சுனாமி பேரலைத் தாக்​குதல் நிகழலாம் என்​றும் ஜப்​பான் அரசு எச்​சரிக்கை விடுத்​துள்​ளது.

இந்த நிலநடுக்​கம் ஏற்​படும்​போது, 98 அடி உயர சுனாமி அலைகள் ஜப்​பானின் கடலில் எழ வாய்ப்​பிருப்​ப​தாக​வும், இதனால் 2 லட்​சம் பேர் உயி​ரிழக்​கும் அபா​யம் ஏற்​படலாம் என்​றும் ஜப்​பான் அரசு எச்சரிக்கை விடுத்​துள்​ளது.

இந்த சக்​தி ​வாய்ந்த நிலநடுக்​கம் ரிக்​டர் அளவு​கோலில் 8 புள்​ளி​களாக இருக்​கலாம் என்​றும் எதிர்​பார்க்​கப்​படு​கிறது.

கடந்த 2011-ல் ஜப்​பானில் ஏற்​பட்ட நிலநடுக்​கத்​தைத் தொடர்ந்து சுனாமி ஏற்​பட்டு 20 ஆயிரம் பேர் உயி​ரிழந்​தனர் என்​பது குறிப்​பிடத்​தக்​கது. இந்த சுனாமி பேரலை காரண​மாக புகுஷிமா டாய்ச்சி அணுமின் நிலை​ய​மும் வெகு​வாகப் பாதிக்​கப்​பட்​டது.

நுவரெலியா மாவட்ட மக்களுக்கு அமைச்சர் வழங்கியுள்ள உறுதிமொழி!

நுவரெலியா மாவட்டத்தில் ஏற்பட்ட கடும் மழை, வெள்ளம் மற்றும் மண்சரிவு காரணமாக பல குடும்பங்கள் தங்களது வீடுகளை விட்டு வெளியேறி பாதுகாப்பு மையங்களில் தங்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

இந்த கடுமையான அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை கடற்றொழில் மற்றும் நீரியல் வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் நேரில் சென்று பார்வையிட்டார்.

அங்கு தற்காலிக தங்குமிடங்களில் தங்கவைக்கப்பட்டிருந்த குடும்பங்களையும் குழந்தைகளையும் நேரில் சந்தித்து, அவர்கள் எதிர்கொள்ளும் சிரமங்களையும் கவலைகளையும் கேட்டறிந்தார்.

பாதிக்கப்பட்ட குடும்பங்களுடன் நடந்த உரையாடல்களின் போது, அனர்த்தத்தின் தாக்கத்தையும், மக்களின் மனநிலையையும் மிகத் தீவிரமாக வெளிப்படுத்தின.

பாதுகாப்பு மையத்தில் இருந்த ஒரு தாய், தன் குழந்தையை அணைத்தபடி பகிர்ந்த கவலையும், சிறுவர்கள் கண்களில் தெரிந்த பயமும், நிலைமையின் ஆழமான பாதிப்பை வெளிப்படுத்தின.

“நாங்கள் மீண்டும் எப்போது வீட்டிற்குத் திரும்ப முடியும்?” என்ற ஒரு எளிய, ஆனால் வலிமையான கேள்வி, அங்கிருந்த அனைவரின் மனதையும் நெகிழச் செய்ததாக அமைச்சர் தெரிவித்தார்.

அந்த ஒரு கேள்வியிலேயே மக்கள் எதிர்கொள்ளும் துயரமும் அச்சமும் ஒட்டுமொத்தமாக பிரதிபலித்தது.

அமைச்சர் சந்திரசேகர், மக்களின் இந்த வேதனையை உடனடி நடவடிக்கைகள் மூலம் குறைப்பது அரசாங்கத்தின் மிக முக்கியமான பொறுப்பாகும் என்று வலியுறுத்தினார். பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கான நிவாரண உதவிகள் தாமதம் இன்றி கிடைக்கச் செய்வதற்காக மாவட்டச் செயலாளர், கிராமஅதிகாரிகள் மற்றும் பிற சம்பந்தப்பட்ட துறைகளுடன் கூடி ஆலோசனைகள் நடத்தப்பட்டதாகவும், உணவு, மருந்து, உலர் உணவு, உடைகள் போன்ற அவசியமான பொருட்கள் அனைத்தும் கிடைப்பதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

அதே நேரத்தில், சேதமடைந்த வீடுகள், ஆபத்தான மலைச்சரிவுகள், தாழ்வான நிலப்பகுதிகள் போன்றவை பற்றிய தொழில்நுட்ப மதிப்பீடுகள் மேற்கொள்ளப்பட்டு, மக்கள் மீண்டும் தங்கள் வீடுகளுக்கு பாதுகாப்பாகத் திரும்பக்கூடிய நிலை ஏற்படுத்துவதற்கான மறுசீரமைப்பு திட்டங்கள் உருவாக்கப்பட்டு வருகின்றன. பாதிக்கப்பட்ட பகுதிகளில் உளவியல் ஆதரவு, குழந்தைகள் பாதுகாப்பு, மருத்துவ பராமரிப்பு ஆகியவை கூடுதல் கவனத்துடன் முன்னெடுக்கப்படுகின்றன.

“ஒரு குடும்பமும் தனியாக இந்த துயரத்தைக் கடக்க வேண்டியதில்லை; அவர்கள் மீண்டும் நம்பிக்கையுடன் வாழ்வைத் தொடங்கும் வரை அரசாங்கத்தின் ஆதரவு தொடர்ந்து வழங்கப்படும்,” என அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் உறுதியளித்தார்.

நுவரெலியாவில் ஏற்பட்ட இந்த இயற்கை அனர்த்தம் மக்களின் வாழ்க்கையை பெரிதும் பாதித்துள்ள நிலையிலும், அவர்கள் மீண்டும் நிம்மதியான வாழ்க்கைக்குத் திரும்புவதற்கான அனைத்து நடவடிக்கைகளும் அரசின் பொறுப்புடன் முன்னெடுக்கப்படும் எனவும் அவர் தெரிவித்தார்.

 

சினிமா

பிரபல இந்திய பாடகி ஆஷா போஸ்லே காலமானார்!

0
  பிரபல இந்திய பின்னணி பாடகி ஆஷா போஸ்லே தமது 92ஆவது வயதில் இன்று(12) காலமானார். இந்திய திரையுலகில் 10,000-இற்கும் அதிக பாடல்களை பாடியுள்ள மூத்த பாடகி ஆஷா போஸ்லே நேற்று(11) மாரடைப்பு ஏற்பட்டதையடுத்து மும்பையிலுள்ள...

சின்னத்திரை நடிகை தற்#கொ#லை!

0
  இலங்கையை பூர்வீகமாகக்கொண்ட பிரபல சின்னத்திரை நடிகையான சுபாஷினி (வயது 36) தற்#கொ#லை செய்துகொண்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. "கயல்" சின்னத்திரை தொலைக்காட்சி தொடரில் நடித்து வருபவர் சுபாஷிணி (வயது36). இலங்கையை பூர்வீகமாகக்கொண்ட இவர் கடந்த...

“தனுஷின் நட்பை இழந்தது மிகப்பெரிய அவமானம்” – விக்னேஷ் சிவன் வருத்தம்

0
தனுஷ் உடனான நட்பை இழந்தது மிகப்பெரிய அவமானம் என்று விக்னேஷ் சிவன் பகிர்ந்துள்ளார். விக்னேஷ் சிவன் இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன் நடித்துள்ள ‘எல்.ஐ.கே’ திரைப்படம் ஏப்ரல் 10-ம் திகதி திரைக்கு வரவுள்ளது. நீண்ட பிரச்சினைகளுக்கு...

செய்தி

இன்றைய வானிலை எப்படி?

0
நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் பி.ப. 1.00 மணிக்குப் பின்னர் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. மேல், சப்ரகமுவ, மத்திய, ஊவா மற்றும் தென் மாகாணங்களிலும் அம்பாறை மற்றும்...

தமிழக சட்டசபைத் தேர்தல்: வாக்கு பதிவு ஆரம்பம்!

0
தமிழக சட்​டப்​பேர​வைத் தேர்​தல் வாக்​குப்​ப​திவு இன்று காலை 7 மணிக்கு தொடங்கியது. மக்கள் ஆர்வத்துடன் வரிசையில் நின்று வாக்களித்து வருகின்றனர். பதற்​ற​மான வாக்​குச்​சாவடிகளில் கூடு​தல் பாது​காப்பு ஏற்​பாடு​கள் செய்​யப்​பட்​டுள்​ளன. தமிழக சட்​டப்​பேர​வைத் தேர்​தல் 234...

ஹார்முஸ் நீரிணையில் இரு கப்பல்களை சிறைபிடித்தது ஈரான்!

0
ஹார்முஸ் நீரிணையில் இரண்டு சரக்குக் கப்பல்களைத் தனது கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவந்துள்ளதாக ஈரான் கடற்படை தெரிவித்துள்ளது. முறையான அனுமதியின்றி இயங்கியது மற்றும் கடல்சார் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தியதாகக் கூறி, இந்த அதிரடி நடவடிக்கையை ஈரான் கடற்படை...