Home Blog Page 187

ஆயிரத்துக்கு மேற்பட்ட குளங்கள் சேதம்!

அனர்த்த நிலைமையால் விவசாய அபிவிருத்தி திணைக்களத்திற்கு சொந்தமான 1160 சிறு குளங்கள் சேதமடைந்துள்ளன.

இவற்றில் 125 சிறு குளங்களுக்கு பாரிய சேதம் ஏற்பட்டுள்ளதாக விவசாய அபிவிருத்தி திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் தம்மிக்க ரணதுங்க தெரிவித்துள்ளார்.

747 சிறு குளங்களுக்கு பகுதியளவில் சேதமேற்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

அனுராதபுரம், வவுனியா மற்றும் குருணாகல் ஆகிய மாவட்டங்களிலுள்ள சிறு குளங்களே அதிகளவில் சேதமடைந்துள்ளன.

இந்த குளங்களுக்கு முன்னுரிமையளித்து அவற்றை புனர்நிர்மாணம் செய்வதற்கான விரைவான வேலைத்திட்டங்களை ஆரம்பித்துள்ளதாக விவசாய அபிவிருத்தி திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் தம்மிக்க ரணதுங்க தெரிவித்துள்ளார்.

இதற்கான நிதி ஒதுக்கீடும் தற்போது மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார்.

விவசாய அபிவிருத்தி திணைக்களத்தின் கீழ் 15,958 குளங்கள் தற்போது பராமரிக்கப்படுகின்றன.

நிவாரணம் வழங்க சென்ற கார் பள்ளத்தில் வீழ்ந்து விபத்து!

நுவரெலியா, ஹட்டன் பிரதான வீதியில் 50 அடி பள்ளத்தில் வீழ்ந்து காரொன்று விபத்துக்குள்ளானது. இந்த விபத்து நேற்று வியாழக்கிழமை (22) மலை 6.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது.

சாரதியின் கட்டுப்பாட்டை இழந்த கார், நானுஓயா சாமர்செட் பகுதியில் வீதியை விட்டு விலகி சுமார் 50 அடி பள்ளத்தில் வீழ்ந்ததில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

நோர்வூட்டில் இருந்து நுவரெலியா ராகலை பகுதிக்கு இயற்கை அனர்த்ததில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் வழங்கிவிட்டு மீண்டும் நோர்வூட் நோக்கிப் பயணித்த கார் ஒன்றே விபத்துக்குள்ளாகியுள்ளது.

காரில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு காரணமாக இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

மரக்கறி விலைப்பட்டியல் (5.12.2025)

மரக்கறி விலைப்பட்டியல் (5.12.2025)

நுவரெலியா பொருளாதார மத்திய நிலையத்தால் இன்று (5) வெளியிடப்பட்டுள்ள மரக்கறி வகைகளின் (ஒரு கிலோ) விலை பட்டியல்…

புதிய பாதீட்டை முன்வைக்குமாறு சஜித் அணி வலியுறுத்து!

2026 ஆம் ஆண்டுக்காக புதிய வரவு- செலவுத் திட்டமொன்றே முன்வைக்கப்பட வேண்டும் என்று பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி வலியுறுத்தியுள்ளது.

நாட்டில் ஏற்பட்ட அனர்த்தத்தால் வீடுகள் சேதமடைந்துள்ளன, பெரும் அழிவுகள் ஏற்பட்டுள்ளன. எனவே, மீள் கட்டமைப்புகளை மேற்கொள்வதற்கு புதிய திட்டங்களுடன் வரவு- செலவுத் திட்டம் வர வேண்டும் என்று ஐக்கிய மக்கள் சக்தியின் செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார தெரிவித்தார்.

புதிய வரவு- செலவுத் திட்டம் முன்வைக்கப்படும்வரை செலவுகளை ஈடுசெய்வதற்கு இடைக்கால கணக்கறிக்கையொன்றை நாடாளுமன்றத்தில் நிறைவேற்றலாம் எனவும் அவர் ஆலோசனை வழங்கியுள்ளார்.

2026 பாதீடு: இன்று இறுதி வாக்கெடுப்பு!

 

2026 ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத் திட்டத்தின் மூன்றாவது வாசிப்புமீதான வாக்கெடுப்பு நாடாளுமன்றத்தில் இன்று நடைபெறவுள்ளது.

இதன்படி மாலை 6 மணிக்கு வாக்கெடுப்பு நடத்தப்படும்.

நிதி அமைச்சர் என்ற வகையில் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க கடந்த மாதம் 7 ஆம் திகதி வரவு- செலவுத் திட்டத்தை முன்வைத்தார்.

2 ஆம் வாசிப்புமீதான விவாதம் 8 ஆம் திகதி ஆரம்பமானது. 14 ஆம் திகதிவரை விவாதம் நடைபெற்றது. 14 ஆம் திகதி மாலை 2 ஆம் வாசிப்புமீதான வாக்கெடுப்பு நடத்தப்பட்டு, நிறைவேற்றப்பட்டது.

அமைச்சுகளுக்கான நிதி ஒதுக்கீடு தொடர்பான குழுநிலை விவாதம் நவம்பர் 15 ஆம் திகதி ஆரம்பமானது. இந்நிலையிலேயே பாதீடு மீதான இறுதி வாக்கெடுப்பு இன்று நடைபெறுகின்றது.

சீரற்ற காலநிலையால் 18 லட்சத்துக்கு மேற்பட்டோர் பாதிப்பு!

சீரற்ற காலநிலையால் 18 லட்சத்துக்கு மேற்பட்டோர் பாதிப்பு!

🛑சீரற்ற காலநிலையால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 486 ஆக அதிகரிப்பு

🛑341பேரை காணவில்லை

🛑2,303 வீடுகள் முழமையாகவும், 52 ஆயிரத்து 489 வீடுகள் பகுதியளவும் சேதம்

🛑51 ஆயிரத்து 23 குடும்பங்கள் பாதுகாப்பான இடங்களில் தங்கவைப்பு

🛑18 லட்சத்து 44 ஆயிரத்து 55 பேர் பாதிப்பு

சூறாவளியால் தடைப்பட்ட மின் இணைப்புகளில் 85 சதவீதம் சீரமைப்பு!

சூறாவளியால் தடைப்பட்ட மின் இணைப்புகளில் 85 சதவீதம் சீரமைப்பு!

அவசர அனர்த்த நிலைமை காரணமாக மின்சாரம் தடைப்பட்ட சுமார் 39 இலட்சம் நுகர்வோரில் சுமார் 85% சதவீதமானோரின் மின் இணைப்புகள் சீர் செய்யப்பட்டுள்ளதாக இலங்கை மின்சார சபையின் பிரதி பொது முகாமையாளர் நொயெல் பிரியந்த தெரிவித்தார்.

அனர்த்த செயற்பாட்டு ஊடக மையத்தில் நேற்று (04) விசேட அறிக்கையொன்றை வெளியிட்டு அவர் இதனைத் தெரிவித்தார்.

நாடு முழுவதும் சுமார் 07 கோடி மின்சார நுகர்வோர் இருப்பதாகவும், அவர்களில் 39 இலட்சம் பேர் மின்சார இணைப்புகளை இழந்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். அவர்களில் சுமார் 85% சதவீதமானோரின் மின் இணைப்புகள் தற்போது சீர் செய்யப்பட்டுள்ளதாக பொது முகாமையாளர் சுட்டிக்காட்டினார்.

அவசர நிலைமையில் 16,771 மின்மாற்றிகள் செயல்படாமல் இருந்ததாகவும், அவற்றில் 14,549 மீளமைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார். தடைப்பட்ட எஞ்சிய மின் இணைப்புகள் விரைவில் மீளமைக்கப்படும் என்றும், இந்தச் செயல்பாட்டில் ஒரு மின் ஊழியர் உயிரிழந்ததாகவும், அது குறித்து அனுதாபம் தெரிவிப்பதாகவும் பொது முகாமையாளர் குறிப்பிட்டார்.

இலங்கையை மீண்டும் கட்டியெழுப்ப ஆதரவு: மாலைதீவு ஜனாதிபதி உறுதி

இலங்கையை மீண்டும் கட்டியெழுப்ப முழு ஆதரவு: மாலைதீவு ஜனாதிபதி உறுதி

டித்வா சூறாவளியால் ஏற்பட்ட கடுமையான வெள்ளம் மற்றும் மண்சரிவுகளால் நாட்டு மக்கள் எதிர்கொண்ட அனர்த்த நிலைமைக்கு மாலைதீவு ஜனாதிபதி கலாநிதி முகமது முய்சு (Dr Mohamed Muizzu) தனது கவலையைத் தெரிவித்துள்ளார்.

அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்குவதிலும், இலங்கையை மீளக்கட்டியெழுப்பவும் இயன்றளவு தனது ஆதரவை வழங்குவதாக மாலைதீவு ஜனாதிபதி தெரிவித்தார்.

இன்று (04) பிற்பகல் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவுடன் தொலைபேசியில் தொடர்பு கொண்ட மாலைதீவு ஜனாதிபதி, இந்த கடினமான நேரத்தில் இலங்கை அரசாங்கத்துடனும் மக்களுடனும் மாலைதீவு அரசாங்கமும் மக்களும் கைகோர்த்துள்ளதாகத் தெரிவித்தார்.

தனது சகோதர நாடான இலங்கை, ஒருபோதும் கைவிடப்படாது என்றும் கலாநிதி முகமது முய்சு மேலும் வலியுறுத்தினார்.

ஒவ்வொரு கடினமான சூழ்நிலையிலும் மாலைதீவு, இலங்கைக்கு வழங்கிய ஆதரவைப் பாராட்டிய ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க, இந்த சந்தர்ப்பத்திலும், மாலைதீவு அரசாங்கமும் மக்களும் இலங்கைக்கு வழங்கும் மனமார்ந்த ஆதரவு பாரிய பலமாகும் என்று தெரிவித்தார்.

ஜப்பானின் விசேட மருத்துவக் குழு இலங்கை வருகை!

 

 

அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் நிவாரணப் பணிகளை வலுப்படுத்த மற்றொரு ஜப்பான் விசேட மருத்துவக் குழு இலங்கைக்கு

அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட இலங்கை மக்களுக்கு தமது தொடர்ச்சியான ஆதரவைப் பிரதிபலிக்கம் வகையில், 27 பேருடனான மற்றொரு ஜப்பான் அனர்த்த நிவாரண (JDR) மருத்துவக் குழு நேற்று (03) இரவு இந்நாட்டிற்கு வந்தது.

வைத்தியர்கள், மருத்துவ நிபுணர்கள், நிவாரண அதிகாரிகள் மற்றும் மீட்பு நிபுணர்களைக் கொண்ட இந்தக் குழு, தேசிய நிறுவனங்களுடன் ஒருங்கிணைந்து, தரை மட்டத்தில் அத்தியாவசிய மருத்துவ உதவிகளை வழங்கவும், நிவாரண நடவடிக்கைகளை வலுப்படுத்தவும், அனர்த்த நிலைமையால் சுகாதார சேவைகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளுக்கு தமது நிவாரண உதவிகளையும் வழங்கும்.

குழுவின் தலைவர் கிச்சிரோ இவாஸெ உள்ளிட்ட இந்த ஜப்பான் குழுவை, விஞ்ஞான மற்றும் தொழில்நுட்ப அமைச்சர் பேராசிரியர் கிருஷாந்த அபேசேன, வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சின் கிழக்கு ஆசியா மற்றும் ஓசனியா பிரிவின் பணிப்பாளர் நாயகம் சாவித்ரி பானபோக்கே மற்றும் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் வைத்தியர் அசேல குணவர்தன ஆகியோர் உத்தியோகபூர்வமாக வரவேற்றனர். இலங்கைக்கான ஜப்பான் தூதுவர் இசோமாடா அகியோவும் இந்த நிகழ்வில் பங்கேற்றார்.

மேலும், 04 பேர் கொண்ட ஜப்பான் மருத்துவக் குழு ஏற்கனவே இலங்கைக்கு அனர்த்த நிவாரண நடவடிக்கைகளுக்காக வந்திருந்ததுடன், அதன்படி, 31 பேர் கொண்ட ஜப்பான் மருத்துவக் குழு தற்போது நாட்டில் மனிதாபிமான நிவாரண நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளது.

இந்தியா வரும் புடினுக்கு 5 அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடு!

இந்​தி​யா​வுக்கு இன்று வரும் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினுக்கு 5 அடுக்கு பாது​காப்பு ஏற்​பாடு செய்​யப்​பட்​டுள்​ளது.
இந்​தியா – ரஷ்​யா​வின் 23-வது உச்சி மாநாடு டெல்​லி​யில் நடைபெறுகிறது. இதில் பங்​கேற்க 2 நாள் பயண​மாக ரஷ்ய அதிபர் புதின் இன்று மாலை டெல்லி வரு​கிறார்.
அவருக்கு குடியரசுத் தலை​வர் மாளி​கை​யில் சிறப்பு வரவேற்பு அளிக்கப்படுகிறது. மேலும், அதிபர் புதினுக்கு குடியரசுத் தலைவர் திர​வுபதி முர்மு சிறப்பு விருந்​துக்கு ஏற்​பாடு செய்துள்ளார்.
அதிபர் புதின் வருகையை ஒட்டி, டெல்லி போலீஸ் உயர​தி​காரி​களு​டன் தேசிய பாது​காப்​புப் படை கமாண்​டோக்​கள், துப்​பாக்​கிச் சுடும் வீரர்​கள், ட்ரோன்​கள், ஜாமர்​கள் உட்பட பல்​வேறு அம்சங்களு​டன் 5 அடுக்கு பாது​காப்​புக்கு ஏற்​பாடு செய்யப்பட்டுள்​ளது.
இதுதவிர, புதினின் பாது​காப்​புக்கு ரஷ்ய கமாண்​டோக்​கள் உட்பட 50-க்​கும் மேற்​பட்​டோர் ஏற்​கெனவே டெல்லி வந்​துள்​ளனர். அவர்கள் ட்ரோன் உதவியுடன் புதின் செல்​லும் பாதைகள், அவர் பங்​கேற்​கும் நிகழ்ச்சி நடக்​கும் இடங்​களை அலசி ஆராய்ந்து வருகின்​றனர். இவை அனைத்​தை​யும் 24 மணி நேர​மும் கண்காணிக்க டெல்​லி​யில் புதி​தாக கட்​டுப்​பாட்டு அறை அமைக்கப்​பட்​டுள்​ளது.
அத்​துடன் செயற்கை நுண்​ணறிவு (ஏஐ) தொழில்​நுட்​ப​மும் அதிபர் புதின் பாது​காப்​புக்கு பயன்​படுத்​தப்பட உள்​ளது. முகத்தை அடை​யாளம் காணும் அதிநவீன கேம​ராக்​கள் பல இடங்​களில் பொருத்தப்​பட்டு கண்​காணிப்​புக்கு ஏற்​பாடு செய்​யப்​பட்​டுள்​ளது.
புதின் இந்​தியா வந்​திறங்​கியதும் டெல்லி போலீ​ஸார் மற்​றும் தேசிய பாது​காப்​புப் படை கமாண்​டோக்​கள் வெளிப்​புற பாதுகாப்புப் பணி​யில் ஈடு​படு​வார்​கள். ரஷ்ய கமாண்​டோக்​கள் புதினை சுற்​றிப் பாது​காப்​பாக இருப்​பார்​கள். பிரதமர் மோடி – அதிபர் புதின் இரு​வரும் சந்​தித்து ஒன்​றாக வரும்​போது, ரஷ்ய மற்றும் இந்​திய கமாண்​டோக்​கள் உள்​புற வளை​யத்​துக்​குள் பாதுகாப்பு பொறுப்பை ஏற்க உள்​ளனர்.
இந்​தியா வரும் அதிபர் புதின், தன்​னுடன் அதிநவீன ‘ஆரஸ் செனட்’ என்ற லிமோ சின் காரை மாஸ்​கோ​வில் இருந்து கொண்டு வரு​கிறார். இந்த கார் மிக பாது​காப்​பானது. இந்த கார் ‘சக்​கரங்​களில் மீதுள்ள கோட்​டை’ என்று புகழப்​படு​கிறது. சீனா​வில் நடை​பெற்ற ஷாங்​காய் ஒத்​துழைப்பு மாநாட்​டின் போது, இந்த லிமோசின் காரில்​தான் பிரதமர் மோடியை அதிபர் புதின் அழைத்து சென்​றார் என்பது குறிப்பிடத்தக்கது.

சினிமா

பிரபல இந்திய பாடகி ஆஷா போஸ்லே காலமானார்!

0
  பிரபல இந்திய பின்னணி பாடகி ஆஷா போஸ்லே தமது 92ஆவது வயதில் இன்று(12) காலமானார். இந்திய திரையுலகில் 10,000-இற்கும் அதிக பாடல்களை பாடியுள்ள மூத்த பாடகி ஆஷா போஸ்லே நேற்று(11) மாரடைப்பு ஏற்பட்டதையடுத்து மும்பையிலுள்ள...

சின்னத்திரை நடிகை தற்#கொ#லை!

0
  இலங்கையை பூர்வீகமாகக்கொண்ட பிரபல சின்னத்திரை நடிகையான சுபாஷினி (வயது 36) தற்#கொ#லை செய்துகொண்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. "கயல்" சின்னத்திரை தொலைக்காட்சி தொடரில் நடித்து வருபவர் சுபாஷிணி (வயது36). இலங்கையை பூர்வீகமாகக்கொண்ட இவர் கடந்த...

“தனுஷின் நட்பை இழந்தது மிகப்பெரிய அவமானம்” – விக்னேஷ் சிவன் வருத்தம்

0
தனுஷ் உடனான நட்பை இழந்தது மிகப்பெரிய அவமானம் என்று விக்னேஷ் சிவன் பகிர்ந்துள்ளார். விக்னேஷ் சிவன் இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன் நடித்துள்ள ‘எல்.ஐ.கே’ திரைப்படம் ஏப்ரல் 10-ம் திகதி திரைக்கு வரவுள்ளது. நீண்ட பிரச்சினைகளுக்கு...

செய்தி

‘கடல் கடந்த இந்தியக் குடியுரிமை’ – இந்திய அரசுக்கு இதொகா நன்றி!

0
இலங்கையில் வாழும் இந்திய வம்சாவளி மக்கள் கடல் கடந்த இந்தியக் குடியுரிமையை பெற்றுக் கொள்வதற்கான நடைமுறையை இலகுபடுத்தியுள்ள இந்திய அரசாங்கத்துக்கு நன்றியை தெரிவித்துக் கொள்வதாக இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தவிசாளரும், முன்னாள் பாராளுமன்ற...

வரலாறு படைத்த தமிழக தேர்தல்: 84,29 சதவீத வாக்கு பதிவு!

0
2026 தமிழக சட்​டப்​பேர​வைத் தேர்​தலில், மாலை 6 மணி நிலவரப்படி 84.41% சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன. அதிகபட்சமாக கரூரில் 91.97% வாக்குகள் பதிவாகியுள்ளன. குறைந்தபட்சமாக கன்னியாகுமரியில் 75.48% வாக்குகள் பதிவாகியுள்ளன. 6 மணிக்குப் பின் டோக்கன்...

ஹார்முஸ் நீரிணையில் கண்ணிவெடி வைக்கும் படகுகளை அழிக்க ட்ரம்ப் உத்தரவு!

0
ஹார்முஸ் நீரிணையில் கண்ணிவெடிகளை வைக்கும் படகுகளை சுட்டு வீழ்த்துமாறு அமெரிக்க கடற்படைக்கு ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் உத்தரவிட்டுள்ளார். ஈரானுக்கு அருகிலுள்ள முக்கிய கடல் பகுதியில் சிறிய ரக படகுகள் இத்தகைய செயல்களில் ஈடுபட்டால், தயக்கமின்றி...