Home Blog Page 188

போரை முடிவுக்கு கொண்டுவர புடின் விருப்பம்: ட்ரம்ப் தகவல்!

உக்ரைனுக்கு எதிரான போரை முடிவுக்குக் கொண்டுவர ரஷ்ய ஜனாதிபதி புடின் விரும்புவதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

வெள்ளை மாளிகை ஓவல் அலுவலகத்தில் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியின்போது ட்ரம்ப் இவ்வாறு தெரிவித்தார்.

முன்னதாக புதன்கிழமையன்று ஸ்டீவ் விட்காஃப் மற்றும் டர்ம்ப்பின் மருமகன் உள்ளிட்டோர் அடங்கிய அமெரிக்க தூதுக்குழு சுமார் 5 மணி நேரம் ரஷ்ய ஜனாதிபதி புதினுடன் பேச்சுவார்த்தை நடத்தியது.

மாஸ்கோவில் இந்தப் பேச்சுவார்த்தை நடந்தது. இந்தப் பேச்சுவார்த்தை முழுக்க முழுக்க உக்ரைன் போர் நிறுத்தம் தொடர்பாக மட்டுமே மேற்கொள்ளப்பட்டது.

இந்த சந்திப்பு குறித்து ஓவல் அலுவலகத்தில் பேட்டியளித்த ட்ரம்ப்,

“ஸ்டீவ் விட்காஃப் மற்றும் ஜாரட் க்ரூஷ்னருடன் புதின் நல்லதொரு சந்திப்பை மேற்கொண்டார். அந்த பேச்சுவார்த்தையின் முடிவு என்னவென்பதை நான் இங்கே வெளிப்படையாகச் சொல்ல முடியாது. ஆனால் புடின்போரை முடிவுக்குக் கொண்டு வர விரும்புகிறார் என்று ஸ்டீவ், க்ரூஷ்னர் தெரிவித்தனர். இதுவே அச்சந்திப்பின் சாராம்சம்” என்றார்.

ஆனால், கிரெம்ளின் மாளிகையின் மூத்த ஆலோசகர் யுரி கருத்து வெளியிடுகையில் , “உக்ரைன் போர் தொடங்கிய பின்னர் அமெரிக்கா – ரஷ்யா இடையேயான மிக விரிவான பேச்சுவார்த்தை இது. ஆனால் எல்லைப் பிரச்சினை தொடர்பாக எந்தவொரு சமரசமும் எட்டப்படவில்லை. இருப்பினும், இரு தரப்புமே பிரச்சினையை முடிவுக்குக் கொண்டுவருவது தொடர்பான சாத்தியக் கூறுகளை ஆராய்ந்தது.

உக்ரைன் போரை முடிவுக்குக் கொண்டுவருவதன் பின்னணியில் இன்னும் ஏராளமான விஷயங்கள் செய்ய வேண்டியுள்ளன. இந்த சந்திப்பு குறித்த தகவல்களின் ரகசியம் காப்பாற்றப்பட விரும்புகிறோம். என்ன மாதிரியான சமரசங்கள் பேசப்பட்டன என்பன குறித்த தகவல்களை வெளியிடப்போவதில்லை. இந்த சந்திப்பு குறித்து ட்ரம்ப்பிடம் அமெரிக்க தரப்பு பேசும். பின்னர் அவர்கள் எங்களை தொடர்பு கொள்வார்கள்” என்று குறிப்பிட்டார்.

பாதிக்கப்படக்கூடிய பகுதிகளில் வாழும் மக்களுக்கு நிரந்தர தீர்வு தேவை

 

 

சீரற்ற காலநிலை காரணமாக முழுமையாகவும் பகுதியளவிலும் சேதமடைந்த வீடுகளை உரிய முறைமையின்படி அடையாளம் காணுமாறும், இழப்பீடு வழங்குவதற்குத் தேவையான துல்லியமான தரவுகளை திறம்படப் பெறுவதற்கான விசேட பொறிமுறையை உருவாக்கவும் வீடமைப்பு அபிவிருத்தி அதிகாரசபை அதிகாரிகளுக்கு ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க பணிப்புரை விடுத்தார்.

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க மற்றும் வீடமைப்பு அபிவிருத்தி அதிகாரசபை அதிகாரிகளுக்கும், நிதி அமைச்சின் அதிகாரிகளுக்கும் இடையிலான சந்திப்பு இன்று (04) முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்றபோதே, ஜனாதிபதி இந்த அறிவுறுத்தல்களை வழங்கினார்.

டித்வா சூறாவளியினால் சேதமடைந்த வீடுகளுக்கு இழப்பீடு வழங்கும் செயல்முறையை ஆராயும் நோக்கத்துடன் இந்தக் கலந்துரையாடல் இடம்பெற்றது.

பாதிக்கப்படக்கூடிய பகுதிகளில் வாழும் மக்கள் மீண்டும் இதுபோன்ற அனர்த்தத்தினால் பாதிக்கப்படாமல் இருக்க நீண்டகால தீர்வை வழங்க வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்திய ஜனாதிபதி, அதற்கான துல்லியமான தரவுகளை அடையாளம் காணுமாறு அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.

இதுவரை நடத்தப்பட்ட கணக்கெடுப்புகளின் படி மண்சரிவுகளினால் 1289 வீடுகள் முழுமையாக சேதமடைந்துள்ளதாகவும், 44,574 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளதாகவும் வீடமைப்பு அபிவிருத்தி அதிகாரசபையின் அதிகாரிகள் சுட்டிக்காட்டினர்.

வீடமைப்பு, நிர்மாணிப்பு மற்றும் நீர் வழங்கல் அமைச்சர் சுசில் ரணசிங்க, நிதி அமைச்சின் செயலாளர் கலாநிதி ஹர்ஷன சூரியப்பெரும, தேசிய வரவு செலவுத் திட்டத் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் ஜூட் நிலுக்ஷான், தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகாரசபையின் தலைவர் அரவிந்த சிறிநாத ஆகியோர் உட்பட அதிகாரிகள் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.

16 லட்சத்து 14 ஆயிரத்து 827 பேர் பாதிப்பு!

🛑சீரற்ற காலநிலையால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 479 ஆக அதிகரிப்பு

🛑350 பேரை காணவில்லை

🛑1,289 வீடுகள் முழமையாகவும், 44 ஆயிரத்து 574 வீடுகள் பகுதியளவும் சேதம்

🛑51 ஆயிரத்து 765 குடும்பங்கள் பாதுகாப்பான இடங்களில் தங்கவைப்பு

🛑16 லட்சத்து 14 ஆயிரத்து 827 பேர் பாதிப்பு

புதிய பாதீட்டை முன்வைக்குமாறு யோசனை!

நாட்டில் பேரனர்த்தம் ஏற்பட்டதால் தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் 2026 ஆம் நிதியாண்டுக்கான வரவு- செலவுத் திட்டம் மாற்றியமைக்கப்பட வேண்டும் என்று ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ச வலியுறுத்தினார்.

மொட்டு கட்சி தலைமையகத்தில் நேற்று நடைபெற்ற நிகழ்வொன்றின் பின்னர் ஊடகங்களிடம் கருத்து வெளியிடுகையிலேயே அவர் இவ்வாறு வலியுறுத்தினார்.

“ 2026 ஆம் நிதியாண்டுக்கான வரவு- செலவுத்திட்டம் மாற்றியமைக்கப்பட வேண்டும். வாகன இறக்குமதி தொடர்பில் எடுக்கப்பட்ட முடிவு மீள்பரிசீலனை செய்யப்பட வேண்டும். இது தொடர்பில் நாடாளுமன்றத்தில் கருத்து வெளியிடுவோம்.

கடந்த வரவு- செலவுத் திட்டத்திலும் 50 சதவீதமான முன்மொழிவுகள் நிறைவேற்றப்படவில்லை. தற்போது அவ்வாறு செய்ய முடியாது. பாதிக்கப்பட்டுள்ள உட்கட்டமைப்பு வசதிகள் கட்டியெழுப்படவேண்டும். மக்களின்; வாழ்க்கையை இயல்பு நிலைக்கு கொண்டுவருவதற்கு துரிதமாக செயல்பட வேண்டும்.

அரசாங்க அதிகாரிகள்மீது அரசாங்கம் நம்பிக்கை வைக்க வேண்டும். அவர்களுக்கு அதிகாரம் மற்றும் சுதந்திரம் வழங்க வேண்டும். அப்போதுதான் பொறிமுறை கிராம மட்டங்களுக்கு செல்லும்.” எனவும் நாமல் ராஜபக்ச குறிப்பிட்டார்.

அதேவேளை, நாட்டில் பல இழப்புகள் ஏற்பட்டுவிட்டதால் புதிய வரவு- செலவுத்திட்டமே முன்வைக்கப்பட வேண்டும். இதுவரையில் இடைக்கால நிதி அறிக்கையை முன்வைத்துஅனுமதியை பெற்றுக்கொள்ளலாம் என ஐக்கிய தேசியக் கட்சி ஆலோசனை வழங்கியுள்ளது.

பேரிடர் குறித்து முன்னெச்சரிக்கை விடுக்கப்படாதது ஏன்? தெரிவுக்குழு அமைக்குமாறு வலியுறுத்து!

இலங்கையில் ஏற்பட்ட பேரிடர் தொடர்பில் ஆராய்வதற்கு நாடாளுமன்றத் தெரிவுக்குழுவொன்றை அமைக்குமாறு பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி வலியுறுத்தியுள்ளது.

நாடாளுமன்றத்தில் நேற்று உரையாற்றுகையிலேயே முஜிபூர் ரஹ்மான் எம்.பி. மேற்படி வலியுறுத்தலை விடுத்தார்.

“ இலங்கையில் சீரற்ற காலநிலை நிலவும் என வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருந்தன. எனவே, குறித்த அனர்த்தம் பற்றி அரசாங்கம் முன்கூட்டியே அறிந்திருந்ததா? இது பற்றி வளிமண்டளவியல் திணைக்களம் அரசாங்கத்துக்கு அறிக்கை வழங்கப்பட்டதா? இந்த கேள்விகளுக்கு அரசாங்கம் இன்னும் அதிகாரப்பூர்வமாக பதிலளிக்கவில்லை. மௌன போக்கு தொடர்கின்றது.”
எனவும் முஜிபூர் ரஹ்மான் குறிப்பிட்டார்.

அத்துடன், இயற்கை அனர்த்தத்தை தடுக்க முடியாது என்றாலும் அனர்த்தங்களால் ஏற்படும் இழப்புகளை தடுக்க முடியும். எனவே, முன்னாயத்த நடவடிக்கை எடுக்கப்படாதது ஏன்? எங்கு தவறிழைக்கப்பட்டது, அதிகாரிகள் அறிவுறுத்தல்களை அரசாங்கத்துக்கு வழங்கவில்லையா அல்லது அரசாங்கம் கவனயீனமாக செயற்பட்டதா, எங்கு தவறு நடந்தது என்பது தெரிய வேண்டும்.

எனவே, நாடாளுமன்றத் தெரிவுக்குழுவொன்றை அமைத்து இது பற்றி ஆராயுமாறு கோருகின்றேன். எதிர்காலத்தில் இப்படியான நிலைமை ஏற்படாமல் தடுப்பதற்கு இது உதவும்.” எனவும் நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபூர் ரஹ்மான் கூறினார்.

மரக்கறி விலைப்பட்டியல் (4.12.2025)

மரக்கறி விலைப்பட்டியல் (4.12.2025)

நுவரெலியா பொருளாதார மத்திய நிலையத்தால் இன்று (4) வெளியிடப்பட்டுள்ள மரக்கறி வகைகளின் (ஒரு கிலோ) விலை பட்டியல்…

இலங்கையை மீள கட்டியெழுப்பும் வேலைத்திட்டத்துடனும் சர்வதேச பங்காளிகள் கைகோர்ப்பு!

டித்வா சூறாவளிக்குப் பின்னர் நிலைமையை மதிப்பிடுவதற்கும் நிவாரணம், மீட்புப் பணிகள் மற்றும் புனர்நிர்மாண செயற்பாடுகளுக்கான உதவிகளை ஒருங்கிணைப்பதற்கு இராஜதந்திர தூதுக் குழு, இருதரப்பு மற்றும் பலதரப்பு அபிவிருத்திப் பங்காளிகள் மற்றும் சர்வதேச கடன் வழங்கும் நிறுவனங்களை ஒன்றுசேர்த்து, நிதி அமைச்சு நேற்று (03) உயர்மட்ட நன்கொடையாளர் கூட்டத்தை ஏற்பாடு செய்தது.

மத்திய வங்கி ஆளுநர் மற்றும் திறைசேரியின் செயலாளர் ஆகியோரின் தலைமையில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில், ஜனாதிபதியின் சிரேஷ்ட பொருளாதார ஆலோசகர் துமிந்த ஹுலங்கமுவ, ஜனாதிபதியின் சிரேஷ்ட மேலதிக செயலாளர் ரஸல் அபோன்சு, உள்நாட்டு அலுவல்கள் அமைச்சின் செயலாளர் ஆலோக பண்டார ஆகியோர் உட்பட அரசாங்கத்தின் சிரேஷ்ட அதிகாரிகள், பிரதமர் அலுவலகம், வெளிநாட்டு அலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலா அமைச்சு, அனர்த்த முகாமைத்துவ நிலையம் மற்றும் திறைசேரித் திணைக்களம் ஆகியவற்றின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.

அனர்த்த நிலைமையின் போது அவசரகால நடவடிக்கை முதல், விரிவான, நீண்டகால மீள்கட்டமைப்புத் திட்டத்தை ஆரம்பிக்கும் அரசாங்கத்தின் நோக்கத்தை வலியுறுத்தி, சூறாவளியால் நாட்டின் அனைத்துத் துறைகளுக்கும் ஏற்பட்ட பாரிய சேதம் குறித்த கண்ணோட்டத்தை திறைசேரிச் செயலாளர் இதன்போது தெளிவு படுத்தினார்.

குறிப்பாக உணவுப் பொருட்கள், நன்கொடைகள், சலுகை நிதி மற்றும் குறுகிய காலம் முதல் மத்திய கால உதவிகள் ஆகியவை போன்ற விரைவான மனிதாபிமான ஆதரவு தொடர்பில் அவர் வலியுறுத்தினார். பொருளாதாரத் துறைகளின் சுருக்கம் மற்றும் உள்நாட்டுக் கடன் பெறுவதற்கான கட்டுப்பாடுகள் காரணமாக ஏற்படும் தடைகளைக் கருத்தில் கொண்டு, மத்திய வங்கி ஆளுநர் வெளிப்புற நிதி ஆதரவின் முக்கியத்துவத்தை வலியுறுத்தினார்.

சுற்றுலாத் துறையை மேம்படுத்தவும், நாட்டிற்கு அதிக சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கவும் சர்வதேச நாடுகளை ஊக்குவிக்குமாறு தூதுவர்கள் மற்றும் உயர் ஸ்தானிகர்களை அரச அதிகாரிகள் கேட்டுக்கொண்டனர். இந்த நெருக்கடியான காலகட்டத்தில் இலங்கைக்கு ஆதரவளிப்பதற்கான தனது உறுதிப்பாட்டை பிரதிநிதிகள் குழு உறுதிப்படுத்தியது. சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதி ஒருவர் இங்கு குறிப்பிடுகையில், நீடிக்கப்பட்ட கடன் வசதியின் ஆறாவது தவணையான சுமார் 350 மில்லியன் அமெரிக்க டொலர்கள், இரண்டு வாரங்களுக்குள் இலங்கைக்கு வழங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுவதாக தெரிவித்தார்.

பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்க்கையை மீட்டெடுப்பது மற்றும் நோய் பரவுவதை தடுப்பதற்கான அனர்த்த நிவாரண நடவடிக்கைகள், அவசர சேவைகள் மற்றும் உணவு, சுத்தமான குடிநீர், சுகாதாரப் பொருட்கள், மருத்துவப் பொருட்கள் மற்றும் அவசர சுகாதார சேவைகள் போன்ற அத்தியாவசிய மனிதாபிமான பொருட்கள் உள்ளிட்ட உடனடி உதவிகளை வழங்க பல நாடுகள் தற்போது முன்வந்துள்ளன. மேலும் சில நாடுகள் ஏற்கனவே நாட்டிற்கு அனர்த்த நிவாரண மற்றும் மனிதாபிமான குழுக்களை அனுப்பியுள்ளன.

பிரதான வீதிகள், பாலங்கள், நீர்ப்பாசன கட்டமைப்புகள் மற்றும் போக்குவரத்து கட்டமைப்பு உள்ளிட்ட சேதமடைந்த உட்கட்டமைப்பு வசதிகளை புனர்நிர்மாணம் செய்வதற்கு ஆதரவாக தற்போதுள்ள கடன் வசதிகளை மறுசீரமைப்பதில் கவனம் செலுத்தப்பட்டது. நீண்டகால அபிவிருத்தித் தேவைகளைப் பூர்த்தி செய்ய புதிய கடன்கள் மற்றும் நன்கொடைகள் குறித்த மாற்று வழிகளும் ஆராயப்பட்டன.

உலக வங்கி ஏற்கனவே அனர்த்தத்திற்குப் பின்னரான விரைவான மதிப்பீட்டைத் தொடங்கியுள்ளதுடன், வீடுகள், உட்கட்டமைப்பு வசதிகள், விவசாயம் மற்றும் சேவைகளை உள்ளடக்கிய விரிவான சேதம் மற்றும் தேவைகள் மதிப்பீடு குறித்த கலந்துரையாடல்களையும் நடத்தியுள்ளது. அத்தியாவசிய சேவைகளை இயல்பு நிலைக்கு கொண்டு வருதல், பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு உதவி மற்றும் மீள் கட்டமைப்பு வேலைத்திட்டத்திற்கு அனைத்து சர்வதேச நட்பு நாடுகளிலிருந்து தொடர்ச்சியான ஆதரவு குறித்து இலங்கை தனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறது.

இந்திய நிவாரணப் பொருட்களுடனான மற்றொரு விமானமும் வருகை!

 

அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட டு மக்களின் நிவாரணப் பணிகளுக்கு தொடர்ந்து ஆதரவளிக்கும் வகையில், இந்தியாவின் மனிதாபிமான உதவிகளுடனான C-17 விமானம்நேற்று (03) பிற்பகல் இலங்கையை வந்தடைந்தது.

இலங்கைக்கான இந்திய உயர் ஸ்தானிகர் சந்தோஷ் ஜாவினால் இந்த நிவாரணப் பொருட்கள் உத்தியோகபூர்வமாக இலங்கைக்கு ஒப்படைக்கப்பட்டதுடன், அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் முன்னாள் பணிப்பாளர் சுனில் ஜயவீர, அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் பிரதிப் பணிப்பாளர் (அவசர நடவடிக்கை) இந்திக புஷ்பகுமார மற்றும் வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சின் பிரதிப் பணிப்பாளர் டயனா பெரேரா ஆகியோர் அவற்றைப் பெற்றுக்கொண்டனர்.

பாதிக்கப்பட்ட பகுதிகளில் வீதிக் கட்டமைப்பை புனரமைப்பதற்காக 50 டொன் இரும்பு பேலி பாலங்கள், பாதிக்கப்பட்ட பகுதிகளில் உள்ள மக்களுக்கு பாதுகாப்பான குடிநீரை உறுதி செய்வதற்காக ஒரு இயந்திரத்திற்கு 20 லிட்டர் தண்ணீரை சுத்திகரிக்கும் திறன் கொண்ட 500 நீர் சுத்திகரிப்பு இயந்திரங்கள் மற்றும் அத்தியாவசிய மருந்துப் பொருட்கள் ஆகியவை இதில் அடங்குகின்றன.

ஐரோப்பாவுக்கு புடின் எச்சரிக்கை!

” ஐரோப்பா போரை நாடினால் ரஷ்யாவும் தயாராகவே உள்ளது’ என ஜனாதிபதி புடின் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

உக்ரைனில் போரை முடிவுக்குக் கொண்டு வருவதற்கான அமைதித் திட்டம் குறித்து, அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்பின் தூதர்களுடன் புடின் 5 மணி நேரம் பேச்சுவார்த்தை நடத்தினார்.

பின்னர், இது தொடர்பில் கருத்து வெளியிட்ட புடின்,

“ ஐரோப்பா போரை நாடினால் அதற்கு ரஷ்யா தயாராக உள்ளது.

உக்ரைன் மோதலுக்கான அமைதித் திட்டத்தை இறுதி செய்வதற்கான அமெரிக்கா தலைமையிலான முயற்சிகளை ஐரோப்பிய தலைவர்கள் குறைமதிப்பிற்கு உட்படுத்துகின்றனர்.

அவர்களிடம் அமைதியை உருவாக்குவதற்கு எந்த திட்டமும் இல்லை. அவர்கள் போரின் பக்கம் உள்ளனர். இந்திய பயணத்தின் போது நானும், பிரதமர் மோடியும் இந்திய இறக்குமதிகள் குறித்து விவாதிப்போம்.

இந்திய இறக்குமதியை விரிவுபடுத்துவது குறித்து ஆலோசனை நடத்துவோம். எங்கள் தேசிய நலன்களைக் கருத்தில் கொண்டு செயல்படும், பொருளாதாரக் கொள்கையை நாங்கள் தொடர்ந்து பின்பற்றுவோம்.” எனவும் புடின் குறிப்பிட்டுள்ளார்.

50 ஆயிரத்துக்கு மேற்பட்ட வீடுகள் சேதம்!

🛑 சீரற்ற காலநிலையால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 474 ஆக அதிகரிப்பு

🛑 356 பேரை காணவில்லை

🛑 971 வீடுகள் முழமையாகவும், 40 ஆயிரத்து 358 வீடுகள் பகுதியளவும் சேதம்

🛑 53 ஆயிரத்து 758 குடும்பங்கள் பாதுகாப்பான இடங்களில் தங்கவைப்பு

🛑 15 லட்சத்து 86 ஆயிரத்து 329 பேர் பாதிப்பு

சினிமா

பிரபல இந்திய பாடகி ஆஷா போஸ்லே காலமானார்!

0
  பிரபல இந்திய பின்னணி பாடகி ஆஷா போஸ்லே தமது 92ஆவது வயதில் இன்று(12) காலமானார். இந்திய திரையுலகில் 10,000-இற்கும் அதிக பாடல்களை பாடியுள்ள மூத்த பாடகி ஆஷா போஸ்லே நேற்று(11) மாரடைப்பு ஏற்பட்டதையடுத்து மும்பையிலுள்ள...

சின்னத்திரை நடிகை தற்#கொ#லை!

0
  இலங்கையை பூர்வீகமாகக்கொண்ட பிரபல சின்னத்திரை நடிகையான சுபாஷினி (வயது 36) தற்#கொ#லை செய்துகொண்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. "கயல்" சின்னத்திரை தொலைக்காட்சி தொடரில் நடித்து வருபவர் சுபாஷிணி (வயது36). இலங்கையை பூர்வீகமாகக்கொண்ட இவர் கடந்த...

“தனுஷின் நட்பை இழந்தது மிகப்பெரிய அவமானம்” – விக்னேஷ் சிவன் வருத்தம்

0
தனுஷ் உடனான நட்பை இழந்தது மிகப்பெரிய அவமானம் என்று விக்னேஷ் சிவன் பகிர்ந்துள்ளார். விக்னேஷ் சிவன் இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன் நடித்துள்ள ‘எல்.ஐ.கே’ திரைப்படம் ஏப்ரல் 10-ம் திகதி திரைக்கு வரவுள்ளது. நீண்ட பிரச்சினைகளுக்கு...

செய்தி

‘கடல் கடந்த இந்தியக் குடியுரிமை’ – இந்திய அரசுக்கு இதொகா நன்றி!

0
இலங்கையில் வாழும் இந்திய வம்சாவளி மக்கள் கடல் கடந்த இந்தியக் குடியுரிமையை பெற்றுக் கொள்வதற்கான நடைமுறையை இலகுபடுத்தியுள்ள இந்திய அரசாங்கத்துக்கு நன்றியை தெரிவித்துக் கொள்வதாக இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தவிசாளரும், முன்னாள் பாராளுமன்ற...

வரலாறு படைத்த தமிழக தேர்தல்: 84,29 சதவீத வாக்கு பதிவு!

0
2026 தமிழக சட்​டப்​பேர​வைத் தேர்​தலில், மாலை 6 மணி நிலவரப்படி 84.41% சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன. அதிகபட்சமாக கரூரில் 91.97% வாக்குகள் பதிவாகியுள்ளன. குறைந்தபட்சமாக கன்னியாகுமரியில் 75.48% வாக்குகள் பதிவாகியுள்ளன. 6 மணிக்குப் பின் டோக்கன்...

ஹார்முஸ் நீரிணையில் கண்ணிவெடி வைக்கும் படகுகளை அழிக்க ட்ரம்ப் உத்தரவு!

0
ஹார்முஸ் நீரிணையில் கண்ணிவெடிகளை வைக்கும் படகுகளை சுட்டு வீழ்த்துமாறு அமெரிக்க கடற்படைக்கு ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் உத்தரவிட்டுள்ளார். ஈரானுக்கு அருகிலுள்ள முக்கிய கடல் பகுதியில் சிறிய ரக படகுகள் இத்தகைய செயல்களில் ஈடுபட்டால், தயக்கமின்றி...