Home Blog Page 190

கல்வி அமைச்சின் விசேட அறிவித்தல்!

நாட்டில் நிலவிய பாதகமான வானிலையுடன் நடத்த இயலாத கல்விப் பொதுத் தாதர பத்திர உயர்தரப் பரீட்சையின் மீதமுள்ள பாடங்கள் 2026 ஜனவரி மாத தொடக்கத்தில் நடத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சின் செயலாளர் நாலக கலுவெவ இன்று ஊடக சந்திப்பொன்றை ஏற்பாடு செய்து அறிவித்தார்.

அத்துடன் பாடசாலைகளை மீண்டும் தொடங்குவது தொடர்பாக மாகாண மற்றும் மாவட்ட அளவில் மதிப்பாய்வு செய்து போக்குவரத்து அமைப்பில் ஏற்படும் இடையூறுகள் தொடர்பாடல் சிக்கல்கள் மற்றும் மின் இழப்புகள் போன்ற் பேரிடர்களுக்கு ஆளாகாத மாகாணங்கள் மற்றும் மாவட்டங்களின் பாடசாலைகள் டிசம்பர் 16 ஆம் திகதி தொடங்கப்படும் என்பதுடன், ஏனைய பாடசாலைகள் தொடங்கப்படுவது தொடர்பாக மாகாண மற்றும் மனவட்ட அளவில் உரிய அதிகாரிகளை தொடர்பு கொண்டு எதிர்வரும் தினங்களில் விலைவான தீர்மானங்கள் எடுக்கப்படும் என்றார்.

மேலும், பேரிடரால் பாதிக்கப்படாத பல்கலைக்கழகங்கள், தேசிய கல்வியியற்கல்லூரிகள் மற்றும் தொழிற்கல்வி நிறுவனங்கள் டிசம்பர் 08 ஆம் திகதி மீண்டும் தொடங்கப்படும் என்றும், ஏதேனும் நடைமுறை சிக்கல்களை எதிர்நோக்கும் நிறுவனங்கள் இருப்பின், உரிய நிறுவனத்தின் தலைவருக்கு மீண்டும் தொடங்கப்படும் திகதி குறித்து முடிவெடுக்கலாம் எனவும் அவர் கூறினார்.

இக்கட்டான நேரத்தில் இந்தியா பெற்றுத் தரும் ஆதரவுகளுக்கு நன்றி!

 

இந்தியாவிற்கும் இலங்கைக்கும் இடையிலான நீண்டகால நட்புறவை மேலும் வலுப்படுத்தி, இந்த இக்கட்டான நேரத்தில் இலங்கையின் நெருங்கிய நண்பராக எம்மோடு சேர்ந்து உயிர்களைக் காப்பாற்றும் நடவடிக்கைகளில் மகத்தான பங்களிப்பை ஆற்றியமைக்காக எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜாவை (Santhosh Jha) இன்று (02) சந்தித்த வேளை, ​​எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, இந்திய அரசாங்கத்திற்கும் இந்திய மக்களுக்கும் தனது மரியாதையையும் நன்றியையும் தெரிவித்தார்.

டித்வா சூறாவளி புயலால் பாதிக்கப்பட்ட மக்களை மீட்பதற்கும், இடம்பெயர்ந்த மக்களுக்கு நிவாரணம் வழங்குவதற்கும் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் நேரடித் தலையீட்டின் பிரகாரம் இந்திய அரசுக்குச் சொந்தமான சாகர் பந்து திட்டத்தின் கீழ் கப்பல்கள், நிவாரணக் குழுக்கள் மற்றும் இந்திய விமானப்படையின் விசேட பங்களிப்பு என்பவற்றை இலங்கைக்குப் பெற்றுத் தந்ததன் மூலம் பேரழிவால் பாதிக்கப்பட்ட ஏராளமான மக்களை மீட்க முடிந்தது என்றும், பேரிடர் நிவாரணக் குழுக்கள், அத்தியாவசிய மருந்துப் பொருட்கள், கூடாரங்கள் மற்றும் விசேட மீட்புக் குழுக்கள், மருத்துவர்கள், இராணுவ வீரர்கள் மற்றும் ஹெலிகாப்டர்கள், நடமாடும் வைத்தியசாலை சேவை மற்றும் அத்தியாவசியப் பொருட்கள் உள்ளிட்ட பாதிக்கப்பட்ட மக்களுக்கு தேவையான பல உதவிகள் சகிதம் இந்திய அரசாங்கம் பெற்றுத் தந்துகொண்டிருக்கும் ஆதரவை வார்த்தைகளில் சொல்லி முடிக்க முடியாது என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இங்கு தெரிவித்தார்.

மனிதாபிமான உதவிகளை நிரப்பிக்கொண்டு பாகிஸ்தான் விமானங்கள் இலங்கைக்கு வரும்போது, இந்திய வான் பரப்பை பயன்படுத்துவதற்கு அனுமதி வழங்கி, இந்திய அரசாங்கம் எடுத்த இந்த முக்கிய தீர்மானத்துக்கு எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச பாராட்டுக்களை வெளிப்படுத்தி இந்திய அரசாங்கத்திற்கு தனது நன்றியையும் மரியாதையையும் தெரிவித்துக் கொண்டார்.

இந்திய-பாகிஸ்தான் மோதல்கள் காணப்பட்ட போதிலும், இதுபோன்ற ஒரு மனிதாபிமான பிரச்சினை எழுந்த நேரத்தில், இந்திய அரசாங்கம் எடுத்த இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்மானத்தை மிகவும் பாராட்டுகிறேன் என்றும், நெருங்கிய நண்பராக இந்தியா இந்நேரத்தில் இலங்கையுடன் இருப்பது ஒரு நாடாக எமக்கு பெரும் பக்கபலமாகும் என்றும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இங்கு மேலும் தெரிவித்தார்.

நுவரெலியா மாவட்டத்தில் 77 பேர் உயிரிழப்பு: 73 பேர் மாயம்!

சீரற்ற காலநிலையால் நுவரெலியா மாவட்டத்தில் பலியானோரின் எண்ணிக்கை 77 ஆக அதிகரித்துள்ளது. அத்துடன், 73 பேர் காணாமல் போயுள்ளனர் என்று நுவரெலியா மாவட்ட செயலாளர் துசாரி தென்னகோன் தெரிவித்தார்.

நுவரெலியா மாவட்டத்தில் இன்று 02.12.2025 காலை 10 மணிவரையிலான அனர்த்தம் தொடர்பான அறிக்கையை நுவரெலியா மாவட்ட செயலாளர் துசாரி தென்னகோன் ஊடகங்களுக்கு வழங்கினார்.அதன்படி நுவரெலியாவில் உயிரிழந்தோரின் தொகை 77 ஆகவும் காணாமல் போரின் தொகை 73 பேர் காணாமல்போயுள்ளனர்.

இந்த அறிக்கையின்படி நாள்தோறும் உயிரிழந்தவர்களின் தொகையும் காணாமல் போனோரின் தொகையும் அதிகரித்த வண்ணமே உள்ளது. இது எதிர்வரும் நாட்களில் இன்னும் அதிகரிக்கலாம் எனவும் மாவட்ட செயலாளர் குறிப்பிடுகின்றார்.

அதே நேரம் தமக்கு தகவல்களை சேகரிப்பதில் பெரும் சிரமம் ஏற்பட்டுள்ளதாகவும் ஒரு சில பகுதிகளில் தொடர்புகளை ஏற்படுத்தி கிராம உத்தியோகஸ்தர்கள் பிரதேச செயலாளர்களிடம் தகவல்களை பெற்றுக் கொள்ள முடியாத நிலையும் இருப்பதாகவும் பாதைகள் முற்றாக சேதமடைந்துள்ளதால் அங்கு செல்வதற்கான வாய்ப்புகள் இல்லாமல் இருப்பதாகவும் குறிப்பிடுகின்றார்.

அதே நேரம் தரை வழியாக செல்ல முடியாத கொத்மலை மதுரட்ட ஹங்குரன்கெத்த போன்ற பகுதிகளுக்கு உழங்கு வானூர்தி மூலமாக உணவுப் பொருட்களையும் ஏனைய பொருட்களையும் கொண்டு செல்வதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் அதற்காக விமானப்படையினர் இராணுவத்தினர் பொலிசார் அரசசார்பற்ற நிறுவனங்கள் தொண்டு நிறுவனங்களின் உதவிகள் பெற்றுக் கொள்ளப்படுவதாகவும் குறிப்பிடுகின்றார்.

மேலும் அரசாங்கத்தின் உதவிகள் தனியார் துறையினரின் உதவிகள் என்பன நிவாரணங்களை வழங்குவதற்காக கிடைத்துவருவதாகவும் தொடர்ந்தும் உதவி செய்யக்கூடியவர்கள் எங்களுடன் தொடர்பு கொண்டால் நாம் சரியானவர்களுக்கு அந்த உதவிகளை கொண்டு சேர்ப்பதற்கு வழிகாட்ட முடியும் அதே நேரத்தில் நுவரெலியா மாவட்டத்தில் பாதிக்கப்பட்டுள்ள பாதைகளை திருத்தும் பணிகளை பாதை அபிவிருத்தி அதிகாரசபை உள்ளுராட்சி மன்றங்கள் அனைத்தும் இணைந்து இராணுவத்தினரின் உதவியுடன் முன்னெடுப்பதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

31 வருடங்களுக்கு பிறகு நீரில் மூழ்கியது நுவரெலியா நகரம்! நால்வர் உயிரிழப்பு!!

31 வருடங்களுக்கு பிறகு நீரில் மூழ்கியது நுவரெலியா நகரம்! நால்வர் உயிரிழப்பு!!

நுவரெலியா மாவட்டத்தில் சீரற்ற காலநிலை காரணமாக 4 பேர் உயிரிழந்துள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

சீரற்ற காலநிலையால் நுவரெலியா மாவட்டத்தில் 9 பேர் வரை உயிரிழந்துள்ளமை தொடர்பாக தகவல்கள் கிடைக்கப்பெற்றபோதும் அந்த தகவல் உறுதிப்படுத்தப்படவில்லை.

போக்குவரத்து பாதிப்பு தகவல் பரிமாற்றத்தில் ஏற்பட்டுள்ள பாதிப்பு மின்சார தடை போன்ற காரணங்களால் தகவல்களை உறுதிப்படுடுத்துவதில் பல்வேறு சிரமங்கள் ஏற்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவிக்கின்றார்கள்.

நுவரெலியா மாவட்டத்தில் நுவரெலியா வலப்பனை கொத்மலை மதுரட்ட ஹங்குரன்கெத்த ஆகிய பகுதிகளுக்கு அனர்த்த முகாமைத்துவம நிலையத்தால் மண்சரிவிற்கான சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் அறிவித்துள்ளது.

நுவரெலியாவில் அமைந்துள்ள மாவட்ட வைத்தியசாலைக்கு பிரவேசிக்கும் பிரதான பாதை முற்றாக நீரிழ் மூழிகியுள்ளமை காரணமாக வைத்தியசாலைக்கு நோயாளிகளை கொண்டு செல்வதிலும் வைத்தியர்கள் தமது கடமைக்கு திரும்புவதிலும் பெரும் சிரமம் ஏற்பட்டுள்ளதாக வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன.இருந்த போதிலும் வைத்திசாலையின் சேவைகள் பாதிப்பு ஏற்படாத வகையில் நடவடிக்கை முன்னெடுக்கப்படுவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

தற்போது நிலவி வருகின்ற சீரற்ற காலநிலை காரணமாக நுவரெலியா மாவட்டத்தில் பல நகரங்கள் முற்றாக பாதிக்கப்பட்டுள்ளன.

குறிப்பாக நுவரெலயிh நகரம் 1994 ஆம் ஆண்டு நுவரெலியா நகரின் பிரதான வீதி பஸ்தரிப்பிடம் என்பன நீரிழ் மூழ்கியது.

அதனைத் தொடர்ந்து இன்று 27.11.2025 நுவரெலியா நகரின் பிரதான வீதி பஸ்தரிப்பு நிலையம் உட்பட நுவரெலியா நகரம் முற்றாக செயல் இழந்துள்ளதுடன் அனைத்து வர்த்தக நிலையங்களும் மூடப்பட்டுள்ளன.இது தவிர ஆவெலியா வைத்தியசாலை பகுதி மகிந்த மாவத்தையின் ஒரு பகுதி எதிரிசிங்க மாவத்தையின் ஒரு பகுதி குதிரைப்பந்தய திடல் அமைந்துள்ள பகுதியில் அமைந்துள்ள வீடுகள் மாகாஸ்தோட்ட மூன்பிலேன் நேஸ்பி பம்பரகலை போன்ற பகுதிகளிலும் பாரிய அளவில் வெள்ள நீர் புகுந்துள்ளதுடன் குறித்த பகுதியில் அமைந்துள்ள வீடுகள் விவசாய நிலங்கள் விவசாய பயிர்கள் என்பன முற்றாக சேதமடைந்துள்ளது.

பிரதான பாதைகள் போக்குவரத்து செய்ய முடியாத நிலை நுவரெலியா கண்டி பிரதான பாதையில் கெரன்டி எல்ல பகுதியில் முன்னெச்சரிக்கை காரணமாக பாதை மூடப்பட்டுள்ளதுடன் ஒரு சில இடங்களில் மண்சிரிவுகள் ஏற்பட்டுள்ளன.இதன் காரணமாக நேற்று நுவரெலியா கொழும்பு நுவரெலியா கண்டி பகுதிகளுக்கான பேருந்துகள் மிக குறைந்த அளவிலேயே சேவையில் ஈடுபட்டன.
குறிப்பாக தனியார் சொகுசு பேருந்துகள் முற்றாக சேவையில் இடுபடவில்லை.அதே நேரம் இரயில் போக்குவரத்தும் மட்டுப்படுத்தப்பட்டுள்ளது.கொழும்பு பதுளை இரயில் போக்குவரத்து நானுஒயா வரை மட்டுப்படுத்தப்பட்டுள்ளது.

மேலும் வலப்பனை ஹங்குரன்கெத்த உடபுஸ்ஸல்லாவ இராகலை கந்தப்பளை ஹபொரஸ்ட் போன்ற பகுதிகளிலும் பாதைகள் சேதமடைந்துள்ளமை காரணமாக போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.

பாதிக்கப்பட்டவர்கள் தொடர்பாக நுவரெலியா அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தேவையான ஏற்பாடுகளை செய்துவருவதுடன் அரசசார்பற்ற நிறுவனங்களும் மனிதாபிமான உதவிகளை மேற்கொண்டு வருகின்றது.அதே நெரும் சேத விபரம் தொடர்பாக முழுமையான அறிக்கை ஒன்றை தற்பொழுது ஏற்பட்டுள்ள நிலையில் வழங்க முடியாது எனவும் தகவல்கள் தற்பொழுது திரட்டப்பட்டு வருவதாகவும் அதிகாரிகள் தெரிவிக்கின்றார்கள்.

இந்த பாரிய அனர்த்தம் காரணமாக நுவரெலியா மாவட்டத்தில் அனைத்து பகுதிகளிலும் விவசாய நிலங்களும் விவசாய பயிர்களும் முற்றாக நீரிழ் மூழ்கியுள்ள நிலையில் எதிர்வரும் வாரங்களில் மரக்கறிகளின் விலைகள் பாரிய அளவில் அதிகரிக்கலாம் அல்லது மரக்கறிகளுக்கான தட்டுப்பாடுகள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் இருப்பதாக விவசாய திணைக்களம் தெரிவிக்கின்றது.
பாதிக்கப்பட்ட விவசாயிகள் தொடர்பாக அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் பாதிப்பு தொடர்பாக உரிய முறையில மதிப்பீடு செய்யப்பட்டு அதற்கான இழப்பீட்டு தொகையை வழங்குவதற்கு அரசாங்கம் முன்வர வேண்டும் என மக்கள் கோரிக்கை ஒன்றையும் முன்வைக்கின்றார்கள்.

நுவரெலியா  நிருபர்  எஸ்.தியாகு

சீரற்ற காலநிலை: ஜனாதிபதி விடுத்துள்ள அவசர பணிப்பு!

அடுத்த இரண்டு நாட்களில் அதிக மழையுடன் மோசமான வானிலை உருவாகும் என எதிர்பார்க்கப்படுவதால், உயிரிழப்புகளைத் தடுக்கவும், அனர்த்தங்களால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்கவும் உடனடியாக தலையிடுமாறு அனர்த்தங்களால் பாதித்த மற்றும் பாதிக்கப்படக்கூடிய மாவட்டங்களில் உள்ள மக்கள் பிரதிநிதிகளுக்கு ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க அறிவுறுத்தினார்.

மோசமான வானிலை காரணமாக நாட்டில் ஏற்பட்டுள்ள அவசரகால அனர்த்த நிலைமை மற்றும் நிவாரண சேவைகள் குறித்து ஆராய, இன்று (27) முற்பகல் பாராளுமன்ற வளாகத்தில் நடைபெற்ற விசேட கலந்துரையாடலில் கலந்து கொண்டபோதே ஜனாதிபதி இந்த அறிவுறுத்தல்களை வழங்கினார்.

தமது மாவட்டங்களுக்குச் சென்று பாதிக்கப்பட்ட மக்கள் தொடர்பில் கேட்டறியுமாறும் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு அறிவுறுத்திய ஜனாதிபதி, மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக்கள் மற்றும் பிரதேச அபிவிருத்திக் குழுக்களைக் கூட்டி, ஒவ்வொரு மாவட்டத்திலும், பிரதேசங்களிலும் நிலவும் ஆபத்தான நிலைமை மற்றும் எதிர்காலத்தில் ஏற்படக்கூடிய அனர்த்தங்களை அடையாளம் கண்டு, மக்களுக்குத் தேவையான பாதுகாப்பு மற்றும் நிவாரணங்களை வழங்க உடனடியாக தலையிடுமாறு ஆளுங்கட்சி மற்றும் எதிர்க்கட்சி உறுப்பினர்களுக்கு அறிவுறுத்தினார்.

அதன்போது, பாராளுமன்ற உறுப்பினர்கள் தங்கள் மாவட்டங்களுக்குச் சென்று மக்களுக்கு நிவாரணம் வழங்க தலையிடுவதற்கு, வரவுசெலவுத்திட்ட விவாதங்களும் பாராளுமன்ற செயற்பாடுகளும் தடையாக இருப்பதால், இன்று பிற்பகல் 2.00 மணிக்கு நடைபெறவிருக்கும் கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் இது குறித்து மேலும் கலந்துரையாட தீர்மானிக்கப்பட்டது.

பிரதானமாக மக்களின் பாதுகாப்பு, மீட்புப் பணிகள் மற்றும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு சுகாதாரம் உள்ளிட்ட நிவாரண சேவைகளை தொடர்ந்து வழங்குவது குறித்து இங்கு விரிவாக கலந்துரையாடப்பட்டன.

மேலும், உயர்தரப் பரீட்சையை நடத்துவது மற்றும் தொடர்ச்சியான கல்வி நடவடிக்கைகள் குறித்தும் இதன்போது விசேட கவனம் செலுத்தப்பட்டது.

அனர்த்த நிலைமை காரணமாக நிவாரண முகாம்களில் உள்ள மக்கள், வீடுகளில் சிக்கியிருப்பவர்கள் மற்றும் உறவினர்களின் வீடுகளில் தங்கியுள்ளவர்களுக்கு சமைத்த உணவு மற்றும் உலர் உணவுப் பொருட்களை தொடர்ந்து வழங்குமாறும் இங்கு அறிவுறுத்திய ஜனாதிபதி, சேதமடைந்த வீடுகள் மற்றும் விவசாய நிலங்களுக்கு இழப்பீடு வழங்கும் பொறிமுறை குறித்தும் கவனம் செலுத்தினார். அத்தோடு, நீர்ப்பாசன கட்டமைப்பு மற்றும் அதன் பாதுகாப்பு தொடர்பிலும் மண்சரிவு அபாயம் உள்ள பகுதிகளில் நெடுஞ்சாலை கட்டமைப்பின் பாதுகாப்பு குறித்தும் விசேட கவனம் செலுத்தப்பட்டது.

வளிமண்டலவியல் திணைக்களத்தினால் வழங்கப்படும் புதிய தரவுகளின் அடிப்படையில் அனர்த்த சூழ்நிலைகளைத் தடுப்பதற்கான முன்கூட்டிய திட்டங்களைத் தயாரிக்குமாறும் கடும் மழை ஏற்பட்டால் நீர்ப்பாசன கட்டமைப்பை முகாமைத்துவம் செய்வதற்காக அது தொடர்பில் மிக நெருக்கமாக ஆய்வு செய்யுமாறும் ஜனாதிபதி மகாவலி மற்றும் நீர்ப்பாசன பணிப்பாளர் நாயகங்களுக்கு அறிவுறுத்தினார்.

தமது மாவட்டங்களில் ஏற்பட்டுள்ள அவசரகால அனர்த்த நிலைமைகள் குறித்து கூட்டத்தில் கலந்து கொண்ட ஆளும் கட்சி மற்றும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கருத்துக்களை முன்வைத்ததோடு அவற்றின் அடிப்படையில் மேற்கண்ட முடிவுகள் எட்டப்பட்டன.

பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய, எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற அலுவல்கள் அமைச்சர் ஆனந்த விஜேபால, போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சர் பிமல் ரத்நாயக்க உட்பட பாதிக்கப்பட்ட மாவட்டங்களை பிரதிநிதித்துவப்படுத்தும் ஆளும் கட்சி மற்றும் எதிர்க்கட்சி அமைச்சர்கள் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்கள், ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்க, பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ரவி செனவிரத்ன உள்ளிட்ட அரச அதிகாரிகள், முப்படைகளின் தளபதிகள் உள்ளிட்ட பாதுகாப்புப் படை பிரதானிகள், அனர்த்த முகாமைத்துவ நிலையம் மற்றும் தேசிய அனர்த்த நிவாரண சேவை நிலையம் என்பவற்றை பிரதிநிதித்துவப்படுத்தும் தலைவர்கள் மற்றும் பிரதிநிதிகள் இந்த சந்திப்பில் கலந்து கொண்டனர்.

சீரற்ற காலநிலையால் 31 பேர் பலி: 14 பேர் மாயம்!

சீரற்ற காலநிலையால் 31 பேர் பலி: 14 பேர் மாயம்!

நாட்டில் நிலவும் அடை மழையுடன் கூடிய சீரற்ற காலநிலையால் கடந்த 17 ஆம் திகதி முதல் இதுவரையில் 31 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 14 பேர் காணாமல்போயுள்ளனர்.

கடந்த 48 மணிநேரத்துக்குள் உயிரிழப்புகள் அதிகரித்துள்ளன.

இதுவரையில் 200 அனர்த்தங்கள் பதிவாகியுள்ளன. பதுளை மாவட்டத்தில் 16 பேர் பலியாகியுள்ளனர்.
மண்சரிவு , மரம் முறிவு உள்ளிட்ட அனர்த்தங்களாலேயே உயிரிழப்புகள் பதிவாகியுள்ளன.

பதுளை மாவட்டத்தில் பேரனர்த்தம் ஏற்பட்டுள்ளது.
சீரற்ற காலநிலையால் 10 பேர் காயமடைந்துள்ளனர்.

மீனவர்கள் பிரச்சினை தீர்க்கப்படும்: அத்துறை கட்டியெழுப்படும்!

இலங்கை மீனவர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தீர்க்கப்பட்டு வருகின்றன. அவர்களை நாம் நிச்சயம் பாதுகாப்போம். அதேபோல கடல்வளங்களை பாதுகாப்பதற்கும், ஏற்றுமதியை நோக்கி நகர்வதற்குரிய ஏற்பாடுகளும் செய்யப்பட்டு வருகின்றது என்று கடற்றொழில், நீரியல் மற்றும் கடல்வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்தார்.

நாடாளுமன்றத்தில் இன்று (26.11.2025) நடைபெற்ற வரவு- செலவுத்திட்டத்தில் கடற்றொழில், நீரியல் மற்றும் கடல்வளங்கள் அமைச்சுக்கான நிதி ஒதுக்கீடு தொடர்பான குழுநிலை விவாதத்தில் உரையாற்றுகையிலேயே அமைச்சர் இவ்வாறு கூறினார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,

இலங்கையின் கடல்வளம் மற்றும் மீன்பிடித்துறை எவ்வாறு மேம்படுத்தப்படும் என எமது விஞ்ஞாபனத்தில் மிகவும் தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது.

கடற்றொழில் விடயத்தில் நாம் இன்னமும் பழமையான நிலையிலேயே உள்ளோம் என்பதை ஏற்றாக வேண்டும். ஆழ்கடல் உட்பட மீன்பிடியில் ஈடுபடும் படகுகள் குறைந்தது 10 வருடங்களாவது பழைய நிலையில் உள்ளது. இதனால் ஆழ்கடல் மீன்பிடி தொடர்பில் நம்பிக்கை குறைந்து வருகின்றது. நவீன படகுகள் பற்றியும் கவனம் செலுத்தப்படுவதில்லை. இதனால் மீன்பிடித்துறை வலுவிழந்து வரும் நிலையும் காணப்படுகின்றது.

இந்நிலைமையில் இருந்து நாம் மேம்பட வேண்டும், எமது மீனவர்கள் பாதுகாக்கப்பட வேண்டும் என்பதில் தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் உறுதியாக உள்ளது. 2025 வரவு- செலவுத் திட்டத்தில் எமது அமைச்சுக்கு 11.4 பில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டது. 2026 ஆம் ஆண்டுக்கான வரவு- செலவுத் திட்டத்தில் மூலதனச் செலவுக்கு கூடுதல் ஒதுக்கீடு இடம்பெற்றுள்ளது.

அதேபோல மீன்பிடித்துறைமுகம் அபிவிருத்திக்காக மேலும் 1000 மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது. புதிய தொழில்நுட்பத்தை கையாள்வதற்காக 100 மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது. நன்னீர் மீன்பிடித்துறைக்கும் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இவ்வாறு கடந்தமுறையைவிட இம்முறை எல்லா விடயங்களுக்கும் உரிய வகையில் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

மீனவர்களின் பிரச்சினைகளை இனங்கண்டு, அவற்றை தீர்ப்பதற்கு நடவடிக்கை எடுத்துவருகின்றோம். இதற்குரிய ஒதுக்கீடும் உள்ளது.

மயிலிட்டி உட்பட வடக்கிலுள்ள மீன்பிடி துறைமுகங்கள் மேம்படுத்தப்படும். கடலறிப்பை தடுப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றது.

இலங்கையை சூழ கடல் வளம் உள்ளது. அப்படி இருக்கையில் கடந்த காலங்களில் வெளிநாடுகளில் இருந்தே ரின் மீன் இறக்குமதி செய்யும்நிலை காணப்பட்டது. இதற்கு நாம் கடந்த வருடம் முற்றுப்புள்ளி வைத்தோம். தற்போது இலங்கையிலேயே ரின்மீன் உற்பத்தி செய்யப்படுகின்றது.

கருவாடு மற்றும் மாசி உற்பத்தியில் ஈடுபடுபவர்களுக்கு தேவையான ஏற்பாடுகள் செய்து தரப்படும். கடந்த காலங்களில் இவர்களுக்கு உப்பு பிரச்சினை இருந்தது. அது தற்போது சரிசெய்யப்பட்டுள்ளது.

அதேவேளை, கடற்றொழில் அமைச்சால் இலங்கையில் பிரமாண்ட கண்காட்சி கடந்த வாரம் நடத்தப்பட்டது. எமது நாட்டின் மகத்துவம் இதன்மூலம் எடுத்துரைக்கப்பட்டது. சர்வதேசத்தின் கவனமும் ஈர்க்கப்பட்டது.

மீனவர்களின் பிரச்சினைகள் எமக்கு தெரியும். அவற்றை தீர்ப்பதற்குரிய உரிய தலையீடுகளை நாம் மேற்கொள்வோம். மீனவ கிராமங்களுக்கே நேரில் சென்று நாம் தீர்வுகளை வழங்கி வருகின்றோம் என்றார்.

காசாவின் இருப்பு ஆபத்தில்: ஐ.நா. எச்சரிக்கை

காசா மீதான இஸ்ரேலின் தாக்குதல் பாலஸ்தீன பிரதேசத்தின் பொருளாதாரத்தை அழித்து அதன் இருப்பையே அச்சுறுத்தலுக்கு உள்ளாக்கியுள்ளது என்று ஐக்கிய நாடுகள் சபை எச்சரித்துள்ளது.

போரினால் பாதிக்கப்பட்ட காசா பகுதியை மீண்டும் கட்டியெழுப்ப 70 பில்லியன் டாலர்களுக்கு மேல் செலவாகும் என்றும், அதை முடிக்க பல தசாப்தங்கள் ஆகலாம் என்றும் ஐக்கிய நாடுகள் வர்த்தக மற்றும் மேம்பாட்டு நிறுவனம் வெளியிட்டுள்ள புதிய அறிக்கை தெரிவிக்கிறது.

அந்த அறிக்கையில், காசாவில் நடந்த போரும், அந்தப் பிரதேசத்தின் மீது விதிக்கப்பட்ட தடைகளும் பாலஸ்தீனப் பொருளாதாரத்தை பேரழிவிற்கு உட்படுத்தியுள்ளன.

காசாவில் தொடர்ந்து, திட்டமிட்டு மேற்கொள்ளப்படும் அழிவு, அந்தப் பகுதி வாழத் தகுதியான இடமாகவும், சமூக ரீதியாக மீண்டும் கட்டியெழுப்பப்படவும் முடியுமா என்பதில் கடுமையான சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

காசாவின் ஒட்டுமொத்த மக்களும் கடுமையான, பல பரிமாண வறுமையை எதிர்கொள்கிறார்கள் என்று அறிக்கை கூறுகிறது.

மேலும், 2023-24 ஆம் ஆண்டில் காசாவின் பொருளாதாரம் 87% சுருங்கியது என்றும், காசாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி வெறும் 161 டாலர் ஆக இருந்தது என்றும், இது உலகளவில் மிகக் குறைவு என்றும் அறிக்கை கூறியுள்ளது.

பாலஸ்தீன சுகாதார அமைச்சக புள்ளிவிவரங்களின்படி கடந்த 2 ஆண்டுகளில் காசாவில் இஸ்ரேல் நடத்திய தாக்குதல்களில் 69,000 க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர். இதற்கிடையே கடந்த மாதம் ஏற்பட்ட போர் நிறுத்தத்தை மீறி இஸ்ரேல் கடந்த 44 நாட்களில் 500 க்கும் அதிகமான முறை தாக்குதல் நடத்தியுள்ளது. இதில் நூற்றுக்கணக்கான மக்கள் கொல்லப்பட்டுள்ளனர்.

எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்தார் செங்கோட்டையன்: விஜய் அணியில் இணையும் சாத்தியம்

 

அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட மூத்த நிர்வாகியும், முன்னாள் அமைச்சருமான செங்கோட்டையன், சட்டமன்ற உறுப்பினர் பதவியில் இருந்து ராஜினாமா செய்வதாக சபாநாயகர் அப்பாவுவிடம் கடிதத்தை வழங்கினார்.

அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கும், முன்னாள் அமைச்சர் செங்கோட்டையனுக்கும் அதிமுகவை ஒன்றிணைப்பது தொடர்பாக கருத்து வேறுபாடு இருந்து வந்தது.

அதிமுக ஒன்றிணைய வேண்டும் என்று செங்கோட்டையன் தொடர்ந்து வலியுறுத்தி வந்தார். இதனைத் தொடர்ந்து கே.ஏ.செங்கோட்டையன், கட்சி விரோத நடவடிக்கையில் ஈடுபட்டதாக அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டார். பின்னர், தமிழக வெற்றிக் கழகத்தில் செங்கோட்டையன் இணைய உள்ளதாக தகவல்கள் வெளியானது.

இந்த நிலையில், முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் சட்டமன்ற உறுப்பினர் பதவியில் இருந்து ராஜினாமா செய்வதாக சபாநாயகர் அப்பாவுவிடம் கடிதத்தை இன்று வழங்கினார்.

முன்னதாக செய்தியாளர்களிடம் பேசிய அவர், “ஐம்பது ஆண்டுகால உழைப்பிற்கு அதிமுகவின் உறுப்பினர் பதவியில் இருந்து நீக்கி பரிசு கொடுத்துள்ளனர்” என வருத்தம் தெரிவித்திருந்தார்.\\

 

காதலனின் வீட்டில் நகை திருடிய காதலி கைது: யாழில் சம்பவம்!

யாழ்ப்பாணம் – சாவகச்சேரி பொலிஸ் பிரிவுக்குபட்ட பழைய பொலிஸ் நிலைய வீதியில் உள்ள காதலனின் வீட்டில் நகை திருடிய குற்றச்சாட்டில் கிளிநொச்சியை சேர்ந்த யுவதி ஒருவர் சாவகச்சேரி குற்றத்தடுப்பு பிரிவு பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

சாவகச்சேரியை சேர்ந்த இளைஞரும் கிளிநொச்சியைச் சேர்ந்த யுவதியும் காதலித்து வந்த நிலையில் இருவருக்கும் திருமணத்திற்கான நாள் நிச்சயிக்கப்படடிருந்த நிலையில் காதலி அண்மைய நாட்களாக காதலனின் வீட்டில் தங்கியுள்ளார்.

இந்த நிலையில் காதலனின் வீட்டில் தாய் வைத்த தாலிக்கொடி உட்பட 8பவுன் தங்க நகைகள் காணாமல் போயுள்ளதாக காதலனின் தாயாரால் சாவகச்சேரி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவுசெய்யப்பட்டிருந்தது.

இந்த நிலையில் விசாரணைகளை முன்னெடுத்த சாவகச்சேரி போதை பொருள் மற்றும் குற்றத்தடுப்பு பிரிவு பொலிஸ் உப பரிசோதகர் மயூரன் தலைமையிலான குழுவினர் மேற்கொண்ட விசாரணையில் கிளிநொச்சியில் இருந்து வந்து காதலன் வீட்டில் தங்கியிருந்த காதலி சாவகச்சேரியில் உள்ள காதலன் வீட்டில் வைத்து நேற்று இரவு கைதுசெய்யப்பட்டுளார்.

அவரிடம் மேற்கொண்ட விசாரணையில் தாலிக்கொடியினை சாவகச்சேரியில் உள்ள தனியார் நிதி நிறுவனத்தில் அடைவு வைத்ததாகவும் மீதி நகைகளை யாழ்ப்பாணத்தில் விற்பனை செய்துள்ளதாகவும் ரிக்ரொக் சமுக வலைத்தளத்தில் உள்ள நண்பர் ஒருவரின் உதவியுடன் இணைய முதலீட்டு வியாபாரத்தில் ஈடுபட்டு வந்துள்ளதாகவும் இதுவரையில் 27 இலட்சம் ரூபா செலுத்தியுள்ளதாகவும் மேலதிக பணம் செலுத்துவதற்காக காதலன் வீட்டில் திருடியதாகவும் தெரிவித்துள்ளார்.

இதே போன்று அண்மைய நாட்களில் வேறு சில சம்பவங்களும் பதிவாகியுள்ளதாகவும் குறிப்பாக இளம் யுவதி ஒருவர் தனது நகையை விற்பனை செய்து இணைய முதலீட்டு வியாபாரத்தில் ஈடுபட்டதுடன் நகை திருட்டு போயுள்ளதாக பொய் முறைப்பாட்டை பதிவுசெய்துள்ளார்.

எனவே பொதுமக்கள் குறிப்பாக இளைஞர் யுவதிகள் இணைய மோசடி தொடர்பில் மிக அவதானமாக இருக்குமாறு சாவகச்சேரி பொலிஸார் அறிவுறுத்தியுள்ளனர்.

சினிமா

பிரபல இந்திய பாடகி ஆஷா போஸ்லே காலமானார்!

0
  பிரபல இந்திய பின்னணி பாடகி ஆஷா போஸ்லே தமது 92ஆவது வயதில் இன்று(12) காலமானார். இந்திய திரையுலகில் 10,000-இற்கும் அதிக பாடல்களை பாடியுள்ள மூத்த பாடகி ஆஷா போஸ்லே நேற்று(11) மாரடைப்பு ஏற்பட்டதையடுத்து மும்பையிலுள்ள...

சின்னத்திரை நடிகை தற்#கொ#லை!

0
  இலங்கையை பூர்வீகமாகக்கொண்ட பிரபல சின்னத்திரை நடிகையான சுபாஷினி (வயது 36) தற்#கொ#லை செய்துகொண்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. "கயல்" சின்னத்திரை தொலைக்காட்சி தொடரில் நடித்து வருபவர் சுபாஷிணி (வயது36). இலங்கையை பூர்வீகமாகக்கொண்ட இவர் கடந்த...

“தனுஷின் நட்பை இழந்தது மிகப்பெரிய அவமானம்” – விக்னேஷ் சிவன் வருத்தம்

0
தனுஷ் உடனான நட்பை இழந்தது மிகப்பெரிய அவமானம் என்று விக்னேஷ் சிவன் பகிர்ந்துள்ளார். விக்னேஷ் சிவன் இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன் நடித்துள்ள ‘எல்.ஐ.கே’ திரைப்படம் ஏப்ரல் 10-ம் திகதி திரைக்கு வரவுள்ளது. நீண்ட பிரச்சினைகளுக்கு...

செய்தி

‘கடல் கடந்த இந்தியக் குடியுரிமை’ – இந்திய அரசுக்கு இதொகா நன்றி!

0
இலங்கையில் வாழும் இந்திய வம்சாவளி மக்கள் கடல் கடந்த இந்தியக் குடியுரிமையை பெற்றுக் கொள்வதற்கான நடைமுறையை இலகுபடுத்தியுள்ள இந்திய அரசாங்கத்துக்கு நன்றியை தெரிவித்துக் கொள்வதாக இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தவிசாளரும், முன்னாள் பாராளுமன்ற...

வரலாறு படைத்த தமிழக தேர்தல்: 84,29 சதவீத வாக்கு பதிவு!

0
2026 தமிழக சட்​டப்​பேர​வைத் தேர்​தலில், மாலை 6 மணி நிலவரப்படி 84.41% சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன. அதிகபட்சமாக கரூரில் 91.97% வாக்குகள் பதிவாகியுள்ளன. குறைந்தபட்சமாக கன்னியாகுமரியில் 75.48% வாக்குகள் பதிவாகியுள்ளன. 6 மணிக்குப் பின் டோக்கன்...

ஹார்முஸ் நீரிணையில் கண்ணிவெடி வைக்கும் படகுகளை அழிக்க ட்ரம்ப் உத்தரவு!

0
ஹார்முஸ் நீரிணையில் கண்ணிவெடிகளை வைக்கும் படகுகளை சுட்டு வீழ்த்துமாறு அமெரிக்க கடற்படைக்கு ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் உத்தரவிட்டுள்ளார். ஈரானுக்கு அருகிலுள்ள முக்கிய கடல் பகுதியில் சிறிய ரக படகுகள் இத்தகைய செயல்களில் ஈடுபட்டால், தயக்கமின்றி...