சீரற்ற காலநிலை 3,058 பேர் பாதிப்பு: 254 வீடுகள் சேதம்!
நாட்டில் 12 மாவட்டங்களில் நிலவும் சீரற்ற காலநிலையால் 877 குடும்பங்களைச் சேர்ந்த 3 ஆயிரத்து 58 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
அத்துடன், 10 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் எழுவர் காயமடைந்துள்ளனர்.
மண்சரிவு , மரம் முறிவு மற்றும் வெள்ளம் உள்ளிட்ட அனர்த்தங்களாலேயே உயிரிழப்புகள் பதிவாகியுள்ளன.
4 வீடுகள் முழுமையாகவும், 250 வீடுகள் பகுதியளவும் சேதமடைந்துள்ளன.
சீரற்ற காலநிலையால் 33 குடும்பங்களைச் சேர்ந்த 104 பேர் மூன்று தற்காலிக முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.
அதேவேளை, அடுத்து சில நாட்களுக்கு சீரற்ற காலநிலை தொடரும் என வளிமண்டளவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
வாழைச்சேனை தவிசாளர் உள்ளிட்ட ஐவரும் இன்று பிணையில் விடுவிப்பு!
தொல்பொருள் இடங்களுக்குரிய பெயர்ப்பலகைகளை அகற்றியது தொடர்பான வழக்கில் வாழைச்சேனை தவிசாளர், பிரதி தவிசாளர் மற்றும் உறுப்பினர்கள் உட்பட ஐந்து பேருக்கும் வாழைச்சேனை நீதிவான் நீதிமன்றத்தால் பிணை வழங்கப்பட்டுள்ளது.
தொல்பொருள் இடங்களுக்குரிய பெயர்ப்பலகைகளை அகற்றியது தொடர்பில் முன்னெடுக்கப்படும் விசாரணைகளின் அடிப்படையில் வாழைச்சேனை பொலிஸாரினால் தேடப்பட்டு வந்த வாழைச்சேனை பிரதே சபையின் தவிசாளர் சுதாகரன், பிரதி தவிசாளர், இரண்டு உறுப்பினர்கள் உள்ளிட்ட 4 பேர் இன்று வாழைச்சேனை நீதிவான் நீதிமன்றத்தில் ஆஜராகியிருந்தனர்.
கடந்த 22ஆம் திகதி வாழைச்சேனை பிரதேச செயலகப் பிரிவுகளில் தொல்பொருள் திணைக்களத்தால் தொல்பொருள் இடங்கள் என அடையாளப்படுத்தப்பட்ட இடங்களுக்குப் பெயர்ப்பலகைகள் பொருத்தப்பட்டிருந்தன.
வாழைச்சேனை பிரதேச சபைக்குட்பட்ட வீதிகளில் தங்களது அனுமதிகள் பெறப்படாமல் குறித்த பெயர்ப்பலகைகள் இடப்பட்டன என்று தெரிவித்து வாழைச்சேனை பிரதேச சபை தவிசாளரினால் அந்தப் பெயர்ப்பலகைகள் அகற்றப்பட்டன.
இது தொடர்பில் தொல்பொருள் திணைக்களத்தால் வாழைச்சேனை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டிருந்த நிலையிலும், பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் வழங்கிய உத்தரவுக்கு அமைவாகவும் விசாரணைகளை வாழைச்சேனை பொலிஸார் முன்னெடுத்து வந்தனர்.
இதன் கீழ் வாழைச்சேனை பிரதேசபைக்குள் இருந்த தொல்பொருள் இடங்களைக் குறிக்கும் பெயர்ப்பலகைகளை நேற்று வாழைச்சேனை பொலிஸார் கைப்பற்றியதுடன் அது தொடர்பில் ஒருவரைக் கைது செய்திருந்தனர்.
இது தொடர்பில் வாழைச்சேனை பிரதேச சபையின் தவிசாளர், பிரதி தவிசாளர் மற்றும் இரண்டு உறுப்பினர்களைக் கைது செய்கின்றமைக்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டிருந்த போதிலும் இன்று வாழைச்சேனை நீதிவான் நீதிமன்றத்தில் நால்வரும் ஆஜராகியிருந்தனர்.
இன்று வாழைச்சேனை பிரதேச சபையின் தவிசாளர் மற்றும் பிரதி தவிசாளர் சார்பில் ஜனாதிபதி சட்டத்தரணியும் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பொதுச்செயலாளருமான எம்.ஏ.சுமந்திரன் ஆஜராகியிருந்தார்.
பெயர்ப்பலகைகளைத் திருடியது, அரச உத்தியோகத்தர் ஒரு விடயத்தை அதாவது ஒரு பெயர்ப்பலகையை நட்டால் அது அப்புறப்படுத்துவது குற்றம் போன்ற குற்றச்சாட்டுகளின் கீழ் பொலிஸாரால் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டிருந்தது.
இந்தக் குற்றச்சாட்டுகள் பொருத்தமற்ற குற்றச்சாட்டுகள் என்று நீதிமன்றத்தின் கவனத்துக்கு ஜனாதிபதி சட்டத்தரணி சுமந்திரன் கொண்டு வந்தார். அத்துடன் 1987ஆம் ஆண்டு 15ஆம் இலக்க பிரதேச சபை சட்டத்தின் கீழ் பொதுவழிகள் சட்டம் தொடர்பில் சொல்லப்பட்டுள்ளது வீதிகள் தொடர்பான அதிகாரங்கள் பிரதேச சபைகளுக்கு வழங்கப்பட்டுள்ளது.
பிரதேச சபை தவிசாளர் அந்தச் சட்டத்தின் கீழ் அதிகாரமுடையவர். அந்த அதிகாரத்தின் கீழ் செய்யப்பட்ட விடயத்தை அகற்றினார் என்று எக்காலத்திலும் குற்றச்சாட்டை முன்வைக்க முடியாது. அவருக்குக் கொடுக்கப்பட்ட அதிகாரத்தின் கீழ் அதனை அவர் செய்துள்ளார் என்பதையும் நீதிமன்றத்தின் கவனத்துக்கு ஜனாதிபதி சட்டத்தரணி சுமந்திரன் கொண்டு வந்தார்.
அத்துடன் உள்ளூராட்சி மன்றங்களின் அனுமதியைப் பெற்றே பெயர்ப்பலகை இடப்பட வேண்டும் என்பதை நீதிமன்றத்தின் கவனத்துக்கு ஜனாதிபதி சட்டத்தரணியால் கொண்டு வரப்பட்டபோது அதனைத் தொல்லியல் திணைக்கள அதிகாரிகள் ஏற்றுக்கொண்டதுடன் எதிர்காலத்தில் முறையான அனுமதியைப் பெற்றுக்கொள்வதாகவும், எதிர்காலத்தில் முறையாக அனுமதி கோரும்போது அதனைச் சபையில் சமர்ப்பித்து சபையால் முறையான அனுமதியை வழங்க முடியும் என்றும் கூறியதன் அடிப்படையில் வழக்கு சுமுகமாக தீர்க்கலாம் என்ற காரணத்தாலும், பொலிஸார் முன்வைத்த குற்றச்சாட்டுக்கள் பிணை வழங்கக்கூடிய காரணங்களைக் கொண்டிருப்பதனாலும் ஐந்து பேரையும் பிணையில் செல்ல நீதிமன்றம் அனுமதித்தது.
எதிர்வரும் 15ஆம் திகதிக்குள் பிரதேச சபையின் முறையான அனுமதி பெறப்பட்டு பெயர்ப்பலகையிடும் பணிகள் நடைபெற்று இது தொடர்பான பிரச்சினை முடிவுறுத்தப்படுமானால் எதிர்வரும் 15ஆம் திகதி இந்த வழக்கு முடிவுக்கு வரும் என ஜனாதிபதி சட்டத்தரணி சுமந்திரன் தெரிவித்தார்.
இதன்போது வாழைச்சேனை பிரதேச சபையின் தவிசாளர், பிரதி தவிசாளர், இரண்டு உறுப்பினர்கள் உட்பட ஐந்து பேரும் தலா ஐந்து இலட்சம் ரூபா சரீரப் பிணையில் செல்ல நீதிமன்றம் அனுதியளித்தது.
இந்த வழக்கானது மீண்டும் டிசம்பர் 15ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
கைப்பற்றப்படும் போதைப்பொருட்களை குறுகிய காலத்திற்குள் அழிக்க புதிய சட்டம்
போதைப்பொருட்களை கைப்பற்றுவதைப் போன்றே போதைக்கு அடிமையானவர்களின் புனர்வாழ்வு குறித்தும் அதிக கவனம் செலுத்தப்பட வேண்டும் என்று ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்தார்.
போதைப்பொருள் அச்சுறுத்தலை ஒழிப்பதற்காக நிறுவப்பட்ட முழு நாடுமே ஒன்றாக தேசிய செயற்பாட்டு சபையின் இரண்டாவது அமர்வு இன்று (25) காலை ஜனாதிபதி அலுவலகத்தில் கூடியபோது ஜனாதிபதி மேற்கண்டவாறு தெரிவித்தார்.
போதைக்கு அடிமையானவர்களின் புனர்வாழ்வு தொடர்பாக சமூகத்தில் பல்வேறு கருத்துக்கள் இருப்பதாகவும், அவை சில நேரங்களில் ஒன்றுக்கொன்று முரணானவை என்றும், அந்த யோசனைகள் அனைத்தையும் உள்ளடக்கி அனைவரும் ஏற்றுக்கொள்ளக்கூடிய வகையில் புதிய திட்டத்தைத் தயாரிக்க வேண்டும் என்றும் ஜனாதிபதி குறிப்பிட்டார்.
அந்தத் தகவல்களைக் கருத்தில் கொண்டு, அரச மற்றும் அரச சார்பற்ற நிறுவனங்கள் உட்பட அனைத்து நிறுவனங்களையும் ஒன்றிணைக்கும் அறிவியல் ரீதியான வழிமுறையொன்றை உருவாக்க வேண்டும் என்று ஜனாதிபதி வலியுறுத்தினார்.
புனர்வாழ்வு நடவடிக்கைகளுக்காக பயிற்சி பெற்ற மனித வளத்தை உருவாக்குவது குறித்தும் இங்கு கவனம் செலுத்தப்பட்டது. கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்களை குறுகிய காலத்திற்குள் அழிக்கும் வகையில் அடுத்த மார்ச் மாதத்திற்குள் புதிய சட்ட வரைவைத் தயாரிக்குமாறு நீதி அமைச்சிற்கு ஜனாதிபதி அறிவுறுத்தினார்.
இதற்கு முன்னர் வழங்கப்பட்ட அறிவுறுத்தல்களின்படி பணிகள் ஏற்கனவே தொடங்கப்பட்டுள்ளதாகவும், இன்று ஆராயப்பட்ட பிரச்சினைகளைக் கருத்தில் கொண்டு அவற்றை துரிதமாக நிறைவு செய்ய வேண்டும் என்றும் ஜனாதிபதி அறிவுறுத்தினார்.
போதைப்பொருட்கள் கைப்பற்றப்படும் போது , அந்த இடத்திற்கு நீதவானை அழைத்து விசாரணை நடத்தவும், பகுப்பாய்வு அதிகாரி ஒருவரை அழைத்து மாதிரியைப் பெறவும், பின்னர் கைப்பற்றப்பட்ட போதைப் பொருட்களை அழிப்பதற்கும் ஏற்ற வகையில் இந்த சட்டங்கள் தயாரிக்கப்பட வேண்டும் என்றும் ஜனாதிபதி தெரிவித்தார். தற்பொழுது திட்டமிட்டுள்ளவாறு பகுப்பாய்வு அதிகாரி வெற்றிடங்களை நிரப்ப நிரந்தர மற்றும் தற்காலிக நியமனங்களுக்குத் தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என்றும் ஜனாதிபதி அறிவுறுத்தினார்.
டிசம்பர் 06 மற்றும் 07 ஆகிய திகதிகளில் அனைத்து மாவட்ட மற்றும் பிரதேச செயலகங்களையும் இணைத்து போதைப்பொருள் அச்சுறுத்தலை ஒழிப்பதற்கான ” அகன்று செல்” திட்டம் குறித்த பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்கும் திட்டமிடப்பட்டுள்ளது.
அனைத்து அரச நிறுவனங்களும் போதைப்பொருட்களற்ற நிறுவனங்கள் என்பதை உறுதி செய்வதற்கு அந்த நிர்வாகத்தினால் முடியுமாக இருக்க வேண்டும் .அதற்குத் தேவையான நடவடிக்கைகளைத் திட்டமிடுமாறும் ஜனாதிபதி அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.
குப்பியாவத்தே போதானந்த மகாநாயக்க தேரர் உட்பட இந்து, கத்தோலிக்க மற்றும் இஸ்லாம் மதத் தலைவர்கள், பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற அலுவல்கள் அமைச்சர் ஆனந்த விஜேபால, பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ரவி செனவிரத்ன, பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ஓய்வுபெற்ற எயார் வைஸ் மார்ஷல் சம்பத் துய்யகொந்தா, நீதி மற்றும் ஒருமைப்பாட்டு அமைச்சின் செயலாளர் அயேஷா ஜினசேன, புத்த சாசன , சமய மற்றும் கலாச்சார அலுவல்கள் அமைச்சின் செயலாளர் டபிள்யூ.பி. சேனாதீர, பதில் பொலிஸ் மா அதிபர் சஞ்சீவ தர்மரத்ன, ‘முழு நாடுமே ஒன்றாக’ தேசிய செயற்பாட்டு சபையை பிரதிநிதித்துவப்படுத்தும் அரச அதிகாரிகள், கலைஞர்கள் மற்றும் சிவில் சமூக அமைப்புகளின் பிரதிநிதிகள் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.
சீரற்ற காலநிலையால் 10 பேர்உயிரிழப்பு
நாட்டில் 12 மாவட்டங்களில் நிலவும் சீரற்ற காலநிலையால் 10 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் எழுவர் காயமடைந்துள்ளனர்.
மண்சரிவு , மரம் முறிவு மற்றும் வெள்ளம் உள்ளிட்ட அனர்த்தங்களாலேயே உயிரிழப்புகள் பதிவாகியுள்ளன.
மூன்று வீடுகள் முழுமையாகவும், 242 வீடுகள் பகுதியளவும் சேதமடைந்துள்ளன.
சீரற்ற காலநிலையால் 19 குடும்பங்களைச் சேர்ந்த 67 பேர் மூன்று தற்காலிக முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.
அதேவேளை, அடுத்து சில நாட்களுக்கு சீரற்ற காலநிலை தொடரும் என வளிமண்டளவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
மக்கள் யார் பக்கம்? மாகாணசபைத் தேர்தலை நடத்துமாறு வலியுறுத்து!
மாகாணசபைத் தேர்தலை விரைவில் நடத்துவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தை ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் பொதுச்செயலாளர் சாகர காரியவசம் வலியுறுத்தியுள்ளார்.
என்.பி.பி. அரசாங்கத்துக்கான மக்கள் ஆதரவு சரிந்துவிட்டது என்பதை நுகேகொடைக் கூட்டம் வெளிப்படுத்தியது என்பதை சுட்டிக்காட்டியே அவர் இந்த வலியுறுத்தலை விடுத்தார்.
“ நுகேகொடை கூட்டம் வெற்றியளித்துள்ளது. பொய்கள்மூலம் இனியும் நாட்டை ஆளமுடியாது என்பதை இனியாவது ஆட்சியாளர்கள் உணர வேண்டும்.
அரசாங்கத்துக்கான மக்கள் ஆதரவு சரிந்துவிட்டது.
அவ்வாறு இல்லை, மக்கள் ஆதரவு தமக்கு இருக்கின்றது என அரசாங்கம் கூறுமானால், அதன் உண்மை தன்மை என்னவென்பதை அறிய மாகாணசபைத் தேர்தல் நடத்தப்பட வேண்டும்.” எனவும் சாகர காரியவசம் குறிப்பிட்டார்.
12,000 ஆண்டுகளுக்குப் பிறகு வெடித்த எரிமலை
எத்தியோப்பியாவில் உள்ள எரிமலை குழம்பு வெடித்து சிதறியதை அடுத்து, பல விமான சேவைகள் இரத்து செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
வடக்கு எத்தியோப்பியாவில் நீண்ட காலமாக உறங்கும் நிலையில் இருந்த ஹெய்லி குப்பி எரிமலை 12,000 ஆண்டுகளுக்கு பின்னர் வெடித்துள்ளது.
புவியியல் பதிவுகளின் படி இந்த எரிமலை கடந்த 10 ஆயிரம் ஆண்டுகளாக வெடிக்கவில்லை.
செயற்கைக்கோள் தரவுகளின் படி, ஞாயிற்றுக்கிழமை காலை சுமார் 8.30 மணியளவில் இந்த வெடிப்பு ஏற்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதனால் செங்கடல் முழுவதும் தெற்காசியாவை நோக்கி ஒரு பாரிய சாம்பல் மேகம் பரவியதால், இந்தியா மற்றும் மேற்கு ஆசியாவில் நேற்று விமானச் சேவைகளுக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளன.
எரிமலை குழம்பிலிருந்து வெளியாகும் சாம்பல் புகை இந்தியாவை நோக்கி நகர்வதன் காரணமாகவே, பல விமானங்கள் இரத்து செய்யப்பட்டன.
இது தொடர்பாக இந்திய விமான நிறுவனங்கள் மற்றும் விமான நிலையங்களுக்குப் பல ஆலோசனைகள் வழங்கப்பட்டுள்ளன.
என்.பி.பி. அரசுக்கு எதிராக இரு முனை தாக்குதல்: எதிரணிகள் வியூகம்!
தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்துக்கு எதிரான போராட்டத்தை தனித்தும், கூட்டாகவும் முன்னெடுப்பதற்கு எதிர்க்கட்சிகள் திட்டமிட்டுள்ளன.
ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி, ஐக்கிய தேசியக் கட்சி என்பன உள்ளிட்ட எதிரணியிலுள்ள சில கட்சிகள் இணைந்து ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி தலைமையில் நுகேகொடையில் கடந்த 21 ஆம் திகதி கூட்டத்தை நடத்தி இருந்தன.
இக்கூட்டத்தில் பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்திப பங்கேற்கவில்லை. எனினும், எதிர்வரும் ஜனவரி மாதமளவில் அரசாங்கத்துக்கு எதிராக பாரிய போராட்டமொன்றை நடத்துவதற்கு அக்கட்சி திட்டமிட்டுள்ளது என அறியமுடிகின்றது.
அதேவேளை, நாடு முழுவதும் ஆயிரம் கூட்டங்களை நடத்துவதற்கு உத்தேசித்துள்ள ஐக்கிய தேசியக் கட்சி அதன் ஆரம்பக்கட்ட நடவடிக்கையாக டிசம்பரில் இரு கூட்டங்களை நடத்துவதற்கு ஏற்பாடு செய்துவருகின்றது. இதற்கு முன்னதாக எதிர்வரும் 8 ஆம் திகதி ஐக்கிய தேசியக் கட்சி தலைமையகமான சிறிகொத்தவில் விசேட நிகழ்வொன்று இடம்பெறவுள்ளது.
அதேபோல எதிரணியிலுள்ள ஏனைய சில கட்சிகளும் சில கூட்டங்களை நடத்துவதற்கு திட்டமிட்டுள்ளன. முக்கிய தருணங்களில் இணைந்து கூட்டங்களை நடத்துவதற்கும் பச்சைக்கொடி காட்டியுள்ளன.
இதற்கிடையில் அரசாங்கத்துக்கு ஆதரவு தெரிவிக்கும் கூட்டமொன்றை நடத்த வேண்டும் என்ற யோசனை ஆளுங்கட்சியிடம் முன்வைக்கப்பட்டுள்ளது. இது பற்றி இன்னும் இறுதி முடிவு எடுக்கப்படவில்லை.
அனர்த்தம்!
கலஹா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நில்லம்பை, யோகலெட்சுமி தோட்டத்தில் லயன் குடியிருப்பு மேல் பாரிய மரமொன்று சரிந்து விழுந்துள்ளது. இதனால் வீட்டு கூரைக்கு சேதம் ஏற்பட்டுள்ளது.
வீடொன்றின் முன் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஆட்டோவும் சேதமடைந்துள்ளது. மின்சார வயர்களும் அறுந்து விழுந்துள்ளன.
க. யோகா
மரக்கறி விலைப்பட்டியல் (25.11.2025)
மரக்கறி விலைப்பட்டியல் (25.11.2025)
நுவரெலியா பொருளாதார மத்திய நிலையத்தால் இன்று (25) வெளியிடப்பட்டுள்ள மரக்கறி வகைகளின் (ஒரு கிலோ) விலை பட்டியல்…














