Home Blog Page 192

ரணில் – சஜித் சங்கம்: முற்போக்கு கூட்டணி குதூகலம்!

 

ஐக்கிய தேசியக் கட்சி மற்றும் ஐக்கிய மக்கள் சக்தி என்பன ஒன்றிணைவதற்குரிய சாதக சூழ்நிலை உருவாகியுள்ளது என்று ஐக்கிய மக்கள் சக்தி உறுப்பினர்கள் தெரிவித்தனர்.

ஐக்கிய மக்கள் சக்தியின் அமைப்பாளர்களுடனான விசேட சந்திப்பொன்று நடைபெற்றது.

இதன்போதே ஐக்கிய தேசியக் கட்சியுடன் ஒன்றிணைவது தொடர்பான பொறுப்பை ஏற்பதற்கு தான் தயாராக இருப்பதாக சஜித் பிரேமதாச குறிப்பிட்டார் என்று அக்கட்சியின் செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார தெரிவித்தார்.

இதற்கமைய இரு தரப்பு இணைவு விரைவில் சாத்தியமாகும் என்று ஐக்கிய மக்கள் சக்தி உறுப்பினர்கள் நம்பிக்கை வெளியிட்டுள்ளனர்.
இரு தரப்பு இணைவு பற்றி ஆராய்வதற்காக இரு கட்சிகளும் ஏற்கனவே குழுக்களை அமைத்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

அதேவேளை, ரணில், சஜித் இணைவுக்கு தமிழ் முற்போக்கு கூட்டணி ஏற்கனவே ஆதரவு வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

எம்மை குறைகூறுவதை விடுத்து மக்களுக்கு சேவையாற்றுங்கள்!

மலையகத்தில் இருக்கும் ஆளும் தரப்பு பாராளுமன்ற உறுப்பினர்கள் எம்மை குறை கூறிக்கொண்டிருக்காமல், நாங்கள் எமது காலத்தில் மலையகத்தில் மேற்கொண்ட வேலைத்திட்டங்களை முன்னெடுத்துச் செல்ல வேண்டும் என தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் மனோகணேசன் தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் திங்கட்கிழமை (24) இடம்பெற்ற 2026 ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத் திட்டத்தில் போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் அமைச்சு மற்றும் நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சுகளுக்கான நிதி ஒதுக்கீடுகள் மீதான குழு நிலை விவாதத்தில் உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.

அவர் அங்கு மேலும் உரையாற்றுகையில்,

மலையக மக்களின் வீடுகள்தொடர்பான விடயங்களை வேறு ஒரு அமைச்சுக்கு வழங்கப்பட்டிருக்கிறது. அவ்வாறு இல்லாமல் வீடமைப்பு தொடர்பில் தேசிய கொள்கை ஒன்றை அமைத்து, அதனை ஒரு அமைச்சுக்கு கீழ் கொண்டுவந்து, நாட்டின் அனைத்து பகுதிகளுக்குமான வீடமைப்பு நடவடிக்கைகளை ஒரு அமைச்சுக்கு கீழ் கொண்டுவர வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்.

எமது அரசாங்கத்தில் மலையக மக்களின் வீடமைப்பு பிரச்சினை தொடர்பில் கவனம் செலுத்தி, இந்திய பிரதமர் நரேந்திர மோடியுடன் நாங்கள் கலந்துரையாடி, 14ஆயிரம் வீடுகளை அமைக்க தேவையான உதவிகளை பெற்றுத்தருவதான உத்தரவாதத்தை பெற்றுக்கொண்டோம். ஒரு வீட்டுக்கு 28 இலட்சம் ரூபா வழங்குவதாக தெரிவித்திருக்கிறது. அதனால் இந்த பணத்தை பெற்றுக்கொண்டு, பொறுப்புடன் செயற்படவேண்டும் என எதிர்பார்க்கிறோம்.

அத்துடன் வீட்டுத்திட்டங்களை மேற்கொள்ளும்போது பிரதான வீதிக்கு அருக்கில் அமைப்பதை காெள்கையாக கொள்ள வேண்டும். ஏனெனில் அவிசாவளை புவக்பிட்டி பென்டிக் தோட்டத்துக்கு மேலால் கருங்காலி என்ற ஒரு பிரிவு காணப்படுகிறது. அண்மையில் அங்கு ஏற்பட்ட தீ அனர்த்தம் ஏற்பட்டபோது நான் அங்கு சென்றேன்.

வெள்ளவத்தையில் இருந்து எனது ப்ராடோ வாகனத்தில் பென்டிக் தோட்டத்துக்கு ஒரு மணித்தியாலயத்துக்கும் குறைவான நேரத்தில் சென்றேன். ஆனால் பென்டிக் தோட்டத்தில் இருந்து குறித்த இடத்துக்கு செல்ல எனக்கு இரண்டு மணி நேரம் சென்றது.

அதாவது, அந்த மக்கள் அங்கு தனிமைப்படுத்தப்பட்டிருக்கிறார்கள். பிரதேச செயலாளர், கிராம உத்தியோகத்தர் தபால் காரர் யாரும் அந்த பிரதேசத்துக்கு செல்வதில்லை, அவர்களுக்கு செல்ல முடியாது. அதனால் அந்த மக்களை கீழ் பகுதிக்கு கொண்டுவந்து, பிரதான வீதிக்கருகில் வீடுகள் நிர்மாணித்து கொடுக்க வேண்டும். மக்களுக்கு வீடுகளை அமைத்துக்கொடுப்பது மாத்திரமல்ல, அந்த மக்களை தேசிய நீராேட்டத்துக்குள் கொண்டுவர வேண்டும்.

மலையக மக்களுக்கு இரண்டு இலட்சம் வீடுகள் தேவைப்படுகின்றன. அந்த மக்கள் இந்த நாட்டுக்காக 200 வருடங்கள் உழைத்தவர்கள். அதனால் அந்த மக்களுக்கு தேவையான வீட்டு வசதிகளை செய்துகொடுப்பது அரசாங்கத்தின் கடமையாகும். மாறாக அந்த மக்களுக்கு அனுபாதப்பட்டு செய்த்தேவையில்லை.

கடந்த மார்ச் மாதம் தோட்ட உட்கட்டமைப்பு வசதிகள் தொடர்பான அமைச்சின் மாவட்ட குழு கூட்டம் இடம்பெற்றபோது, அமைச்சர் சமன்த வித்தியாரத்னவிடம், எத்தனை வீடுகளை கட்டப்போகிறீர்கள் என கேட்டபோது, ரணில் விக்ரமசிங்க அமைத்த 1300 வீடுகள் கட்டி முடியாமல் இருக்கிறது. மொத்தமாக 6ஆயிரம் வீடுகளை டிசம்பர் 31ஆம் திகதிக்கு முன்னர் கட்டி முடிப்பதாக தெரிவித்தார்.

ஆனால் டிசம்பர் 31க்கு முன்னர் 6ஆயிரம் வீீடுகளை கட்டி முடிக்க முடியாது. ஆனால் இதனை வைத்து, நாங்கள் அரசியல் செய்ய முயற்சிக்கவில்லை. அமைச்சர் முயற்சித்திருப்பார். என்றாலும் அது சாத்தியமாகவில்லை. என்றாலும் மக்களுக்கு அளித்த வாக்குறுதி மீறப்பட்டிருக்கிறது. அதனால் அரசாங்கத்தில் இருக்கும் மலையக பிரதிநிதிகள் எங்களை குறை கூறிக்கொண்டிருக்காமல், மலையக மக்களுக்கு நாங்கள் எமது காலத்தில் பல்வேறு வேலைத்திட்டங்களை மேற்கொண்டிருக்கிறோம். அந்த வேலைத்திட்டங்களை முன்னெடுத்துச்செல்ல வேண்டும் என்றார்.

 

 

பிரதமர் ஹரிணியுடன் அமெரிக்கத் தூதுவர் சந்திப்பு!

 

இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் ஜூலி சங் மற்றும் பிரதமர் ஹரிணி அமரசூரிய ஆகியோருக்கு இடையில் உத்தியோகபூர்வ சந்திப்பு இடம்பெற்றது.

நாடாளுமன்ற வளாகத்தில் இந்தச் சந்திப்பு நேற்று நடைபெற்றது.

ஐக்கிய நாடுகள் சபையினால் முன்னெடுக்கப்படும் அமைதிப்படையின் கல்வி மற்றும் கலாசாரப் பரிமாற்ற நிகழ்ச்சித்திட்டம் குறித்தும் ஏனைய ஒத்துழைப்பு நிகழ்ச்சித்திட்டங்களின் முன்னேற்றம் குறித்தும் இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் இந்த சந்திப்பின் போது தெளிவுபடுத்தினார்.

அமெரிக்கா தலைமையிலான Fulbright சர்வதேச புலமைப்பரிசில் பரிமாற்ற நிகழ்ச்சித் திட்டத்தின் மூலம் இரு நாடுகளுக்கும் இடையிலான கல்வி உறவுகளை வலுப்படுத்துவது குறித்தும் அவர் விடயங்களை முன்வைத்தார்.

எதிர்வரும் காலங்களில் நடைமுறைப்படுத்தப்படவுள்ள கல்விச் சீர்திருத்தங்களுக்காக கல்வி அமைச்சு, பரீட்சை திணைக்களம், தேசிய கல்வி நிறுவகம் ஆகிய துறைகளில் தொழில்நுட்ப நிபுணத்துவ உதவியை அதிகரிக்க வேண்டியதன் அவசியத்தை பிரதமர் ஹரிணி இந்தச் சந்திப்பின் போது வலியுறுத்தினார்.

நுகேகொடை கூட்டம் செல்லாக் காசு!

நுகேகொடை கூட்டமானது தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்துக்கு எவ்விதத்திலும் சவாலாக அமையவில்லை என்று பிரதி அமைச்சர் நளின் ஹேவகே தெரிவித்தார்.

நுகேகொடையில்  நடந்த கூட்டத்தால் அரசாங்கம் கதிகலங்கி நிற்கின்றது என கூட்டு எதிரணியினர் எனக் கூறிக்கொள்ளும் தரப்பு கூறிவரும் நிலையிலேயே பிரதி அமைச்சர் இவ்வாறு பதிலடி கொடுத்துள்ளார்.

“ நுகேகொடை கூட்டத்தில் பங்கேற்றிருந்த அரசியல்வாதிகளுக்கு எதிராக வழக்குகள் உள்ளன. இதற்கு அஞ்சியே தமது சில சகாக்களை அழைத்துக்கொண்டு அவர்கள் கொழும்பு வந்துள்ளனர். இந்த கூட்டம் அரசுக்கு சவால் அல்ல. அது செல்லாக்காசு போராட்டம்.” எனவும் பிரதி அமைச்சர் குறிப்பிட்டார்.

அமெரிக்காவின் அமைதி திட்டம் குறித்து மேற்கத்திய நாடுகளுடன் உக்ரைன் ஆலோசனை

 

ரஷ்யா – உக்​ரைன் இடையே அமைதி ஏற்பட அமெரிக்கா கூறும் 28 அம்ச திட்​டங்​கள் குறித்​து, ஜெனி​வா​வில் மேற்​கத்​திய கூட்​டணி நாடு​களு​டன் உக்​ரைன் பேச்​சு​ நடத்தி வருகிறது.

ரஷ்யா – உக்​ரைன் இடையே அமை​தியை ஏற்​படுத்​தும் பணி​யில் அமெரிக்கா ஈடு​பட்​டுள்​ளது. இது தொடர்​பாக ரஷ்யா ஜனாதிபதி புதினுடன் அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் ஏற்​கனவே பேச்​சு​ நடத்​தி​னார்.

இந்​நிலை​யில் 28 அம்ச திட்​டம் ஒன்றை அமெரிக்கா கொண்​டு​வந்​துள்​ளது. இது ரஷ்​யா​வுக்கு சாதகமாகவும், உக்​ரைனுக்கு பாதக​மாக​வும் இருக்​கும் என கூறப்படு​கிறது.

இது குறித்து உக்​ரைன் ஜனாதிபதிஜெலன்​ஸ்கி கூறுகை​யில், இறையாண்மை உரிமையா அல்​லது அமெரிக்​கா​வின் ஆதரவா என்ற இரண்டு வாய்ப்​பு​களில் ஏதாவது ஒன்றை தேர்வு செய்ய வேண்​டிய நிலை ஏற்​பட்​டுள்​ள​தாக தெரி​வித்​து உள்​ளார்.

அமெரிக்​கா​வின் இந்த அமைதி திட்​டம் குறித்து ஜெனி​வா​வில், மேற்​கத்​திய கூட்​டணி நாடு​களு​டன் உக்​ரைன் ஆலோ​சனை நடத்தி வரு​கிறது. இங்​கிலாந்​து, பிரான்ஸ் மற்​றும் ஜெர்​மனி​யின் தேசிய பாது​காப்பு ஆலோ​சகர்​களு​டன் முதல் கட்ட பேச்​சு​வார்த்தை நடத்தியுள்​ள​தாக உக்​ரைன் குழு​வின் தலை​வர் அண்ட்ரி யர்​மாக் தெரி​வித்​துள்​ளார்​.

கடல்சார் பொருளாதாரத்தைக் கட்டியெழுப்ப ஏற்பாடு!

2026 ஆம் நிதியாண்டுக்கான வரவு- செலவுத் திட்டத்தில் ப்ளு எக்கோனமிக் எனப்படுகின்ற நீலப்பொருளாதாரத்துக்குரிய ஆரம்பக்கட்ட நடவடிக்கைக்காக 100 மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது. இதற்குரிய நடவடிக்கை அடுத்த வருடம் ஆரம்பத்தில் ஆரம்பமாகும் என்று கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சின் செயலாளர் பீ.கே.கோலித்த கமல் ஜினதாச தெரிவித்தார்.

அக்வா பிளான்ட் இலங்கை – 2025 சர்வதேச மீன்வள கண்காட்சி நேற்று முன்தினம் (21.11.2025) கொழும்பு தாமரை கோபுரம் வளாகத்தில் ஆரம்பமானது. கண்காட்சியின் 3ஆம் நாள் நிகழ்வான நேற்று (23.11.2025) வர்த்தக, வாணிப, உணவுப் பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சர் வசந்த சமரசிங்க பிரதம அதிதியாக கலந்துகொண்டிருந்தார்.

நிகழ்வின் போது, க்ளீன் ஸ்ரீலங்கா வேலைத்திட்டத்தின் ஊடாக 2025ம் ஆண்டுக்கான படகுகளின் கணக்கெடுப்பு அறிக்கை கடற்றொழில் மற்றும் கடல்வளங்கள் திணைக்களத்தின் பணிப்பாளர் எஸ். ஜே. கஹாவத்தேவினால் அமைச்சரிடம் இன்று கையளிக்கப்பட்டது.

மீன்பிடி கைத்தொழிலின்போது எவ்வித குற்றமும் இழைக்காத, சட்டத்திட்டங்களின்போது செயல்பட்ட மீனவர்களுக்கு நற்சான்றிதழ்களும் வழங்கி வைக்கப்பட்டது.

அத்தோடு, அமைச்சின் கீழ் இயங்கும் நிறுவனங்களில் 25 வருடங்களுக்கு மேலாக பணியாற்றும் அதிகாரிகள் பாராட்டி கௌரவிக்கப்பட்டனர்.

மேற்படி இந்த நிகழ்வில் கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர், பிரதி அமைச்சர் ரத்ன கமகே, வர்த்தக, வாணிப, உணவுப் பாதுகாப்பு பிரதி அமைச்சர் ஆர்.எம்.ஜயவர்தன, புத்தளம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அஜித் கிஹான், மொறட்டுவ நகர சபையின் மேயர், கடற்றொழில் அமைச்சின் செயலாளர் டாக்டர். பீ.கே.கோலித்த கமல் ஜினதாச, கடற்றொழில் மற்றும் கடல்வளங்கள் திணைக்களத்தின் பணிப்பாளர் எஸ். ஜே. கஹாவத்தே, அமைச்சின் அதிகாரிகள், வெளிநாட்டு பிரதிநிதிகள் என பலர் கலந்துகொண்டுள்ளனர்.

மீனவ சமூகத்தின் பண்பாடுகளை பிரதிபலிக்கும் முகமாக யாழ்.குருநகர் இளைஞர் கலை கழகத்தின் ஏற்பாட்டில் கலை நிகழ்ச்சி ஒன்று சிறப்பாக அரங்கேறியது.

இந்நிகழ்வில் உரையாற்றும் போதே செயலாளர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

இந்த கண்காட்சியை வெற்றிகரமாக ஏற்பாடு செய்வதற்கு உதவி வழங்கிய, ஆலோசனை வழங்கிய கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சர் ராமலிங்கம் சந்திரசேகர், பிரதி அமைச்சர் ரத்ன கமகே ஆகியோரை வரவேற்பதில் மகிழ்ச்சியடைகின்றேன். 3 ஆம் நாள் அமர்வில் பிரதம அதிதியாக கலந்துகொண்டுள்ள அமைச்சர் வசந்த சமரசிங்கவையும் வரவேற்கின்றேன்.

மீன்பிடித்தொழில்துறையை மேம்படுத்த வேண்டும். நவீன தொழில்நுட்பங்களை உள்வாங்க வேண்டும். புத்தாக்க சிந்தனைகள் வந்துள்ளன. முதலீட்டு வாய்ப்புகளை உருவாக்கிக்கொள்ள வேண்டும். இதற்குரிய கல்வி வாய்ப்பு, ஆராய்ச்சி போன்ற விடயங்கள் தொடர்பிலும் பரந்தப்பட்ட அறிவை பெற்றுக்கொள்ள வேண்டும்.

நீலப்பொருளாதாரத்தை நோக்கி நாம் முன்னேற வேண்டும். இதற்காக முதல் தடவையாக வரவு- செலவுத் திட்டத்தில் 100 மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது. ஆரம்பக்கட்ட நடவடிக்கைக்காகவே இந்நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. அடுத்த வருடம் ஆரம்பித்தில் இதற்குரிய வேலைத்திட்டம் ஆரம்பமாகும்.

நாட்டை சுற்றி கடல் வளம் உள்ளது. எனினும், ஏற்றுமதி வருமானம் திருப்திகொள்ளக்கூடிய வகையில் இல்லை. எனவே, ஏற்றுமதி வருமானத்தை அதிகரித்துக்கொள்வதற்குரிய நடவடிக்கை எடுக்கப்படும். மக்களின் உணவு தேவையை பூர்த்தி செய்வதற்கும் உரிய பங்களிப்பை வழங்க வேண்டும். உணவு பாதுகாப்பு மற்றும் ஏற்றுமதி என இரண்டும் முக்கியம். டின்மீன் இறக்குமதி மட்டுப்படுத்தப்பட்டுள்ளது.

மீன்பிடி மட்டும் அல்ல அத்துறையில் பல அம்சங்கள் உள்ளன. அவற்றை இக்கண்காட்சியில் காண முடிந்தது. எனவே, நாம் கடல் வளங்களை, நீரியல் வளங்களை பயன் உள்ளதாக பயன்படுத்த வேண்டும் என்றார்.

மரக்கறி விலைப்பட்டியல் (24.11.2025)

நுவரெலியா பொருளாதார மத்திய நிலையத்தால் இன்று (24) வெளியிடப்பட்டுள்ள மரக்கறி வகைகளின் (ஒரு கிலோ) விலை பட்டியல்…

திசைக்காட்டி உறுப்பினர்களை திருப்திப்படுத்தவே பிரஜா சக்தி வேலைத்திட்டம்!

நாட்டில் ஏழ்மையடைந்தோர் எண்ணிக்கை தொடர்பில் முந்தைய அரசாங்கத்திற்கோ அல்லது தற்போதைய அரசாங்கத்திடமோ சரியான தரவுகள் கிடையாது எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.

” இன்று யாரும் பேசாத விடயமாக காணப்படும், கடுமையான பிரச்சினையான அமைந்து காணப்படும் வறுமை நாட்டில் மேலும் அதிகரித்து காணப்படுகின்றன.

Center for poverty analysis எனும் நிறுவனத்தால் நடத்தப்பட்ட ஒரு கணக்கெடுப்பின்படி, நாட்டின் 25% ஆனோர் ஏழ்மை நிலையை அடைந்துள்ளனர்.

அதே நேரத்தில் வேறு பல நிறுவனங்கள் நடத்திய கணக்கெடுப்புகள் நாட்டில் தற்போது வறுமை நிலையானது 40-50% க்கு இடையில் இருப்பதாகக் குறிப்பிடுகின்றன. நாட்டில் ஏழ்மையடைந்தோர் எண்ணிக்கை யாதென்பதை தற்போதைய அரசாங்கத்திற்கோ அல்லது முந்தைய அரசாங்கத்திற்கோ சரியாகத் தெரியாது. தொகை மதிப்பு மற்றும் புள்ளிவிபரவியல் திணைக்களம் கூட இன்னும் இதை துல்லியமாகக் கணக்கிடவில்லை.”என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.

வீட்டு அலகின் வருமான மற்றும் செலவின கணக்கெடுப்பு தற்போது நடத்தப்பட்டு வருகிறது. 2022 ஆம் ஆண்டில் நாடு வங்குரோத்து நிலையை அடைந்த வேளையே, இதை செய்திருக்க வேண்டும். தொகை மதிப்பு மற்றும் புள்ளிவிபரவியல் திணைக்களமானது, ஒரு வீட்டின் உணவு மற்றும் உணவு அல்லாத செலவுகளைக் கணக்கிட்டு வறுமைக் கோட்டை நிர்ணயம் செய்து, வறுமைக் கோட்டில் இருப்பவர்கள் மற்றும் அதற்குக் கீழே இருப்பவர்களை ஏழ்மையடைந்தோர் என அடையாளப்படுத்துகிறது. இதைக் கணக்கெடுக்காது, அஸ்வெசும வழங்கப்பட்டு வருகின்றது என்று எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

கிராமப்புற, நகர்ப்புற மற்றும் தோட்டப்புற வறுமையை சரியாகக் கணக்கில் எடுத்துக்கொள்ளாமல் அஸ்வெசும வழங்கப்பட்டது. தற்போதும் வழங்கப்பட்டு வருகின்றன.

பலர் அஸ்வெசும கோரி விண்ணப்பித்த போதிலும், அவர்களில் உண்மையான வறியோரைக் கண்டறிய எந்த விஞ்ஞானபூர்வ அளவுகோல்களும் இல்லை. இது இவ்வாறு இருக்கத்தக்க, இப்போது பிரஜா சக்தி என்ற புதிய பெயரில், திட்டமொன்று முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. பிரஜா சக்தி வேலைத்திட்டத்தில் ஜே.வி.பி.யின் ஆதரவாளர்கள் தலைவர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

பொலிஸ் தடையகற்றல் சான்றிதழைப் பெறுவதற்கும் இந்தத் தலைவர்களின் பரிந்துரை தேவையாம். தமது கட்சிக் கட்டமைப்பை கிராமிய மட்டத்தில் பலப்படுத்திக் கொள்வதற்கே பிரஜா சக்தி வேலைத்திட்டம் ஊடாக இந்த அரசாங்கம் முயற்சித்து வருகின்றது. ஊடகங்கள் மூலம் உருவாக்கப்பட்ட போலி பிம்பங்களால் இன்று மக்களே இறுதியில் ஏமாந்தும் உதவியற்றவர்களாகவும் காணப்படுகின்றனர். மறுபுறம் உழைக்கும் வர்க்கத்தை காக்க வந்த ஜே.வி.பி தலைவர்கள் இன்று வசதியான வாழ்க்கையை வாழ்ந்து வருகின்றனர் என்றும் எதிர்க்கட்சித் தலைவர் இங்கு மேலும் தெரிவித்தார்.

 

நுகேகொடை கூட்டம் வெற்றிகரமானது: சஜித் அணி எம்.பி. கருத்து!

நுகேகொடையில் நடைபெற்ற கூட்டத்தில் பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி பங்கேற்காத நிலையில், அக்கூட்டத்தை அக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் பாராட்டியுள்ளார்.

நுகேகொடை கூட்டம் வெற்றிகரமானது எனவும், இதுபோன்ற நடவடிக்கையை தமது கட்சியும் ஆரம்பிக்க வேண்டும் எனவும் ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் கிங்ஸ் நெல்சன் தெரிவித்தார்.

“ நுகேகொடை கூட்டத்துக்கு எவரையும் வலுக்கட்டாயமாக அழைத்துவரவில்லை. அவ்வாறு அழைத்து வந்திருந்தால் கொட்டும் மழைக்கு மத்தியில் மக்கள் நின்றிருக்கமாட்டார்கள். கூட்டம் மூலம் வழங்கப்பட்ட செய்தியை அரசாங்கம் உணர வேண்டும்.” எனவும் அவர் கூறினார்.

அதேவேளை, கூட்டு எதிரணி எனக் கூறிக்கொள்ளும் தரப்பினரின் அடுத்தக்கூட்டங்களில் ஐக்கிய மக்கள் சக்தியும் பங்கேற்கும் என ஹரின் பெர்ணான்டோ உள்ளிட்டவர்கள் நம்பிக்கை வெளியிட்டுள்ளனர்.

சினிமா

பிரபல இந்திய பாடகி ஆஷா போஸ்லே காலமானார்!

0
  பிரபல இந்திய பின்னணி பாடகி ஆஷா போஸ்லே தமது 92ஆவது வயதில் இன்று(12) காலமானார். இந்திய திரையுலகில் 10,000-இற்கும் அதிக பாடல்களை பாடியுள்ள மூத்த பாடகி ஆஷா போஸ்லே நேற்று(11) மாரடைப்பு ஏற்பட்டதையடுத்து மும்பையிலுள்ள...

சின்னத்திரை நடிகை தற்#கொ#லை!

0
  இலங்கையை பூர்வீகமாகக்கொண்ட பிரபல சின்னத்திரை நடிகையான சுபாஷினி (வயது 36) தற்#கொ#லை செய்துகொண்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. "கயல்" சின்னத்திரை தொலைக்காட்சி தொடரில் நடித்து வருபவர் சுபாஷிணி (வயது36). இலங்கையை பூர்வீகமாகக்கொண்ட இவர் கடந்த...

“தனுஷின் நட்பை இழந்தது மிகப்பெரிய அவமானம்” – விக்னேஷ் சிவன் வருத்தம்

0
தனுஷ் உடனான நட்பை இழந்தது மிகப்பெரிய அவமானம் என்று விக்னேஷ் சிவன் பகிர்ந்துள்ளார். விக்னேஷ் சிவன் இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன் நடித்துள்ள ‘எல்.ஐ.கே’ திரைப்படம் ஏப்ரல் 10-ம் திகதி திரைக்கு வரவுள்ளது. நீண்ட பிரச்சினைகளுக்கு...

செய்தி

‘கடல் கடந்த இந்தியக் குடியுரிமை’ – இந்திய அரசுக்கு இதொகா நன்றி!

0
இலங்கையில் வாழும் இந்திய வம்சாவளி மக்கள் கடல் கடந்த இந்தியக் குடியுரிமையை பெற்றுக் கொள்வதற்கான நடைமுறையை இலகுபடுத்தியுள்ள இந்திய அரசாங்கத்துக்கு நன்றியை தெரிவித்துக் கொள்வதாக இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தவிசாளரும், முன்னாள் பாராளுமன்ற...

வரலாறு படைத்த தமிழக தேர்தல்: 84,29 சதவீத வாக்கு பதிவு!

0
2026 தமிழக சட்​டப்​பேர​வைத் தேர்​தலில், மாலை 6 மணி நிலவரப்படி 84.41% சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன. அதிகபட்சமாக கரூரில் 91.97% வாக்குகள் பதிவாகியுள்ளன. குறைந்தபட்சமாக கன்னியாகுமரியில் 75.48% வாக்குகள் பதிவாகியுள்ளன. 6 மணிக்குப் பின் டோக்கன்...

ஹார்முஸ் நீரிணையில் கண்ணிவெடி வைக்கும் படகுகளை அழிக்க ட்ரம்ப் உத்தரவு!

0
ஹார்முஸ் நீரிணையில் கண்ணிவெடிகளை வைக்கும் படகுகளை சுட்டு வீழ்த்துமாறு அமெரிக்க கடற்படைக்கு ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் உத்தரவிட்டுள்ளார். ஈரானுக்கு அருகிலுள்ள முக்கிய கடல் பகுதியில் சிறிய ரக படகுகள் இத்தகைய செயல்களில் ஈடுபட்டால், தயக்கமின்றி...