Home Blog Page 193

ஒற்றையாட்சியை ஏற்கவில்லை: சமஷ்டி தீர்வை கைவிடவும் இல்லை: தமிழரசுக் கட்சி விளக்கம்

” பிரிக்கப்படாத நாட்டுக்குள் மீளப் பெற முடியாத அதிகாரப் பகிர்வில் சமஷ்டிக் கட்டமைப்பைக் கொண்ட எந்தப் பெயரைக் கொண்ட தீர்வையும் நாம் ஏற்கத் தயார். நாம் ஒற்றையாட்சியை ஏற்கவுமில்லை. சமஷ்டியைக் கைவிடவுமில்லை.”

– இவ்வாறு இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவர் சி.வி.கே.சிவஞானம் தெரிவித்தார்.

“கடந்த காலத்தில் தமிழ்த் தேசியக் கட்சிகளுடன் கூட்டாகச் செயற்பட எல்லாக் கட்சிகளுடன் பேசினோம். எல்லோரின் வீடுகளுக்கும் தேடிப் போனேன். ஒருவரும் ஒத்துழைக்கவில்லை.

பிரிக்கப்படாத நாட்டுக்குள் மீளப் பெற முடியாத அதிகாரப் பகிர்வில் சமஷ்டிக் கட்டமைப்பைக் கொண்ட எந்தப் பெயரைக் கொண்ட தீர்வையும் நாம் ஏற்கத் தயார். ஒற்றையாட்சியை ஏற்கவுமில்லை. சமஷ்டியைக் கைவிடவுமில்லை. கஜேந்திரகுமார் பொன்னம்பலமும் செல்வராசா கஜேந்திரனும் சொல்வது போல் தமிழரசுக் கட்சி, தமிழ் மக்களுக்குத் துரோகம் செய்யவில்லை. கடல் வத்தும் கடல் வத்தும் எனப் பார்த்துக் கொக்கு மாதிரி குடல் வத்திப் போக முடியாது.

கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தங்களுடன் பேசியிருக்கலாமே என்கின்றார். மாகாண சபையை வேண்டாம் எனச் சொல்பவரை எவ்வாறு அழைத்துச் செல்ல முடியும். அரசியல் தீர்வை அடைந்த பின்னர் ஏனைய பிரச்சினையைப் பார்க்கலாம் என்கிறார். அரசியல் தீர்வு வருவதற்குள் எல்லாம் முடிந்து விடும்.” எனவும் சிவிகே சிவஞானம் குறிப்பிட்டுள்ளார்.

இணைந்து செயற்படுவது தொடர்பில் ஜனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டணிக்கு அழைப்பு விடுத்தோம். அடுத்த மாத முற்பகுதியில் ஜனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டணியுடன் பேசப் போகின்றோம். அதை ஒத்துழைப்பை தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமாருக்கும் வழங்கினோம்.

பொது விடயத்தில் அரசமைப்பும் வரும் மாகாண சபையும் வரும். கொச்சைப்படுத்தும் கருத்துக்களைச் சொல்ல வேண்டாம். மேட்டுக்குடியில் இருந்து நாங்கள் வரவில்லை என்பதால், நீங்கள் நாம் சொல்வதைக் கேட்கமாட்டீர்களே.

ஜனாதிபதியுடனான சந்திப்புக்குப் பின்னர் ஜனாதிபதி ஊடகப் பிரிவு வெளியிட்ட அறிக்கையில், மாகாண சபைத் தேர்தல் மற்றும் புதிய அரசமைப்பொன்றின் அவசியம் குறித்து இதன்போது ஆராயப்பட்டதோடு, வடக்கு மற்றும் கிழக்கு மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்குத் தொடர்ந்தும் பழைய அரசியல் தீர்வு பொருத்தமற்றது என்பதால் அதற்காகப் புதிய அரசியல் தீர்வை நோக்கிச் செல்ல வேண்டுமென அரசு எதிர்பார்ப்பதாக ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க இங்கு குறிப்பிட்டார் என்று தெளிவாகக் கூறப்பட்டுள்ளது.

ஜனாதிபதியுடைய வரைபு வந்த பின்னர் பேசலாம் என்றே சொன்னோம். நாங்கள் அரசமைப்பு வரையோனும் எனக் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் சொல்கின்றார். அது பிழையான அணுகுமுறை. தமிழரசுக் கட்சி இறுமாப்புடன் கதைக்கவில்லை.

கஜேந்திரகுமாருக்கும் கடிதம் எழுதியிருக்கின்றோம். அடக்கமாகப் பேசக் காரணம் ஒற்றுமையாகப் பயணிக்க விரும்புகின்றோம்.

கஜேந்திரகுமார் பொன்னம்பலம் எம்மைத் தொடர்ச்சியாக விமர்சிக்க முடியாது. நியாயமான விமர்சனத்தை ஏற்கலாம். துரோகம், காட்டிக்கொடுப்பு, இனத்துரோகி என்ற வசனங்களே இவர்களுக்குத் தெரியும். மக்களுக்குப் பதில் சொல்ல நாம் தயார். சொல்லில் தொங்கிக் கொண்டு மக்களை ஏமாற்ற வேண்டாம்.

கஜேந்திரகுமார் பொன்னம்பலம் மாகாண சபை வேண்டாம் என்று சொன்னால் நாம் ஒத்துப்போக முடியாது. கஜேந்திரகுமாருடன் சுமுகமான உறவைப் பேணவே விரும்புகின்றோம்.

நீங்கள் அடிக்க வெளிக்கிட்டால் நாம் மென்மையாகத் திருப்பி அடிப்போம். எங்களுடைய வாக்கு வங்கி குறைந்து விட்டதுதான். ஏன் உங்கள் வாக்கு வங்கி குறையவில்லையா? எங்களை நீங்கள் தாக்கியதால்தான் தேசிய மக்கள் சக்தி வளர்ந்தது.

சமஷ்டியைக் கைவிடமாட்டோம் என ஜனாதிபதிக்கு முன்னாலேயே சொல்லி இருக்கின்றோம். நான் இனித் தேர்தல் கேட்கப் போவதில்லை. ஆனால் எமது கட்சியில் கைவைத்தால் எந்தத் தரத்தில் பதில் வருகின்றதோ அதே தரத்தில் பதில் கொடுக்கப்படும்.

ஒற்றுமையாக இனம் சார்ந்து ஒவ்வொருவரும் தங்கள் தளத்தில் இருந்து கொண்டு பொது விடயங்களில் ஒன்றாகப் பொது மையத்தில் இருந்து செயற்பட அழைப்பு விடுக்கின்றேன். இதற்குச் சாதகமாகப் பதிலளியுங்கள். ஜனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டணி சாதகமாகப் பதிலளித்துள்ளது. கஜேந்திரகுமாரும் கடிதம் கிடைத்துள்ளது என்று பேட்டியளித்துள்ளார்.

கூட்டுத் தலைமையாகப் பொது விடயங்களில் ஒன்றாகுவோம்.
மக்கள் உண்மையைப் புரிந்துகொள்ள வேண்டும். இனியாவது தமிழ்த் தேசியக் கட்சிகள் பொது விடயத்தில் இணைந்து பேச வேண்டும்.” – ன எசிவிகே சிவஞானம் மேலும் கூறியுள்ளார்.

ரணில், ராஜபக்சக்கள் மீண்டும் ஆட்சிபீடமேற மக்கள் இடமளிக்கமாட்டார்கள்!

“கடந்த காலங்களில் நாட்டை எப்படி ரணில், ராஜபக்ஷக்கள் சூறையாடினார்கள் என்பது எமது மக்களுக்கு நன்கு தெரியும். எனவே, ரணில், ராஜபக்ஷக்கள் மீண்டும் ஆட்சியமைக்க எமது மக்கள் இடமளிக்கமாட்டார்கள்.”

– இவ்வாறு அமைச்சரும் யாழ்ப்பாணம் மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழுத் தலைவருமான இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்தார்.

“போரில் மரணித்த மாவீரர்களைத் தமிழ் மக்கள் நினைவேந்த எமது அரசு எந்தத் தடையும் ஏற்படுத்தவில்லை. வடக்கில் பாதுகாப்புத் தரப்பினரின் கட்டுப்பாட்டுக்குள் காணப்படுகின்ற சில மாவீரர் துயிலும் இல்லங்களை இந்த மாத இறுதிக்குள் விடுவிப்பதற்கான சாத்தியக்கூறுகள் தென்படுகின்றன.” – என்றும் அவர் குறிப்பிட்டார்.

இது தொடர்பில் ஊடகங்களிடம் அவர் மேலும் தெரிவிக்கையில்,

“நாட்டைக் குட்டிச் சுவராக்கிய வங்குரோத்து அரசியல்வாதிகள் இணைந்து ஆட்சியைக் கலைக்கப் போவதாகக் கூக்குரல் இட்டு வருகின்றனர்.

நாட்டை 70 வருட காலத்துக்கு மேலாக சீரழித்த வரலாற்றை எமது தேசிய மக்கள் சக்தி அரசு மாற்றி அனைத்து இன மத மக்களும் ஒற்றுமையாக வாழக்கூடிய ஒரு தாய் நாட்டைக் கட்டியெழுப்பி வருகின்றோம்.

கடந்த காலங்களில் குடும்பமாக நாட்டைச் சூறையாடியவர்கள் துரத்தப்பட்ட நிலையில் நேர்மையான ஓர் அரசியல் கலாசாரத்தை எமது அரசு முன்னெடுத்து வருவதைச் சகித்துக்கொள்ள முடியாத கூட்டம் இனவாதத்தைத் தூண்ட முனைகின்றது.

போரில் மரணித்த மாவீரர்களைத் தமிழ் மக்கள் நினைவேந்த எமது அரசு எந்தத் தடையும் ஏற்படுத்தவில்லை.

கடந்த காலங்களில் நினைவிடங்கள் உடைக்கப்பட்ட, கொடிகள் அறுத்தெறியப்பட்ட வரலாறுகளையும் மாற்றி பூரணமாக நினைவேந்தல் உரிமையை வழங்கியது எமது அரசே.

நாட்டின் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க பாதுகாப்புத் தரப்பிடம் இருக்கின்ற மாவீரர் துயிலும் இல்லங்களை விடுவிப்பதற்கான அறிவுறுத்தல்களைப் பாதுகாப்பு அமைச்சுக்கு ஏற்கனவே வழங்கியுள்ளார். அதன் அடிப்படையில் இந்த மாத இறுதிக்குள் சில துயிலும் இல்லங்கள் விடுவிக்கப்படலாம் என்ற நம்பிக்கை இருக்கின்றது.

அதேபோல் வடக்கில் காணி விடுவிப்புகள் திட்டமிட்டபடி படிப்படியாக இடம்பெறும். அதில் எந்தவிதமான தயக்கமும் இல்லை.

அண்மையில் வன்னி நிலப்பரப்பில் இராணுவத்திடம் இருந்த ஒரு பகுதி காணி விக்கப்பட்ட நிலையில் அதனை உரியவர்களுக்கு வழங்குவதில் சிக்கல் நிலை ஏற்பட்டுள்ளதாக அறிகிறேன்.

எமது அரசு நாட்டில் புரையோடிப்போயுள்ள இனப் பிரச்சினைக்கான தீர்வைக் காaண்பதற்காகப் புதிய அரசமைப்பு தொடர்பில் கவனம் செலுத்தி வருகின்றது.

அதைப் பொறுக்க முடியாத சிலர் தெற்கிலும் வடக்கிலும் இருக்கின்ற நிலையில் அவர்கள் ஏதாவது குழப்பத்தை ஏற்படுத்த வேண்டும் என்ற நினைப்பில் இருக்கின்றார்கள்.

அண்மையில் திருகோணமலையில் ஏற்படுத்தப்பட்ட குழப்பங்களுக்குப் பின்னால் இனவாத சக்திகளின் செயற்பாடுகள் இருக்கின்றன எனத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இவர்களின் நோக்கம் மக்களை வாழவைப்பது அல்ல. தமது அரசியல் இருப்புக்களை தக்கவைத்துக் கொண்டு நாட்டைச் சூறையாடுவதே இவர்களின் நோக்கம்.

இதை நான் விலாவரியாகக் கூற வேண்டிய தேவையில்லை. கடந்த காலங்களில் நாட்டை எப்படி ரணில், ராஜபக்ஷக்கள் சூறையாடினார்கள் என்பது எமது மக்களுக்கு நன்கு தெரியும். ரணில், ராஜபக்ஷக்கள் மீண்டும் ஆட்சியமைக்க எமது மக்கள் இடமளிக்கமாட்டார்கள். ஆகவே, எமது அரசை வீழ்த்துவதாகக் கூறிக்கொண்டு இனங்களுக்கிடையில் முறுகல் நிலையைத் தோற்றுவிப்பதற்கு வங்குரோத்து அரசியல்வாதிகள் பலவிதமான செயற்பாடுகளைச் செய்வார்கள். மக்கள் விழிப்பாக இருக்க வேண்டும்.” – என்றார்.

இளவரசரின் கனவு ஐஸ்லாந்தில் கலைந்துவிட்டது!

 

நுகேகொடை கூட்டத்துக்கு அரசாங்கம் எவ்வித இடையூறும் செய்யவில்லை என்று தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் தேவானந்த சுரவீர தெரிவித்தார்.

நுகேகொடை கூட்டத்தை குழப்புவதற்கு ஆளுங்கட்சி சதி செய்ததாக கூட்டு எதிரணி குற்றஞ்சாட்டியுள்ள நிலையில், அதற்கு பதிலடி கொடுக்கும் வகையிலேயே ஆளுங்கட்சி எம்.பி. மேற்கண்டவாறு கூறினார்.

“ கனவு இளவரசின் கனவானது ஐஸ்லாந்தில் மீண்டும் கலைந்துள்ளது என்பதையே நுகேகொடை கூட்டம் வெளிப்படுத்தியது.

ரணில், மஹிந்த போன்றவர்களை மக்கள் விரட்டியடித்தனர். எனவே, அரசியல் ரீதியில் வங்குரோத்து அடைந்தவர்களுக்கு மீள உயிர்கொடுக்க முடியாது.” எனவும் தேவானந்த சுரவீர குறிப்பிட்டார்.

நாமலை இளவரசர் என அழைத்தது ஏன்?

 

ஐக்கிய தேசியக் கட்சியும், ஐக்கிய மக்கள் சக்தியும் கட்டாயம் ஒன்றிணைய வேண்டும். அவ்வாறு இல்லையேல் எமது ஆதரவாளர்கள் வேறு அரசியல் முகாமை நோக்கி நகரக்கூடும் என்று ஐக்கிய தேசியக் கட்சி உறுப்பினர் முன்னாள் அமைச்சர் ஹரின் பெர்ணான்டோ தெரிவித்தார்.

கொழும்பில் நேற்று நடைபெற்ற ஊடக சந்திப்பின்போதே அவர் இவ்வாறு கூறினார்.

“ ஐக்கிய மக்கள் சக்தி மற்றும் ஐக்கிய தேசியக் கட்சி என்பன இணைந்து கூட்டங்களை நடத்த வேண்டும். அதற்குரிய இடைவெளியை வழங்கினால் எமது ஆதரவாளர்கள் மாற்று அரசியல் முகாமை நோக்கி நகரக்கூடும். எனவே, அடுத்த கூட்டத்திலாவது இரு தரப்புகளும் இணைய வேண்டும். அவ்வாறு இணைவார்கள் என நம்புகின்றோம்.

நுகேகொடை கூட்டத்தில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் ஆதரவாளர்களே 75 சதவீதம் பேர் பங்கேற்றனர்;. கூட்டத்தை நடத்துவதற்கு அக்கட்சியே முன்னின்றது. அதனால்தான் நாமல் ராஜபக்சவை இளவரசர் என விளித்தேன். இந்த விடயத்தை பெரிதுபடுத்த வேண்டியதில்லை. இந்நாட்டில் இனி இளவரசர்கள் தெரிவாகப்போவதில்லை.” – என்றார்.

பஹல கடுகண்ணாவ மண்சரிவு: நால்வர் உயிரிழப்பு!

கண்டி, பஹல கடுகண்ணாவ பகுதியில் பிரதான வீதியோரத்தில் இருந்த வியாபார நிலையமொன்றுமீது பாரிய கற்பாறையுடன் மண்மேடு சரிந்து விழுந்ததில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 4 ஆக அதிகரித்துள்ளது.

இன்று காலை 8.45 மணியளவிலேயே பாரிய பாறையொன்றுடன் மண் சரிந்துள்ளது. வீடும், உணவகமும் முற்றாக சேதமடைந்துள்ளது.

மண்ணுக்குள் சிக்குண்டவர்களில் ஒருவரின் சடலம் ஆரம்பத்தில் மீட்கப்பட்டது. மேலும் நால்வர் காயமடைந்த நிலையில் மாவனல்லை வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டனர்.

மண்ணுக்குள் ஐவர் புதையுண்டு இருக்கலாம் என சந்தேகிக்கப்பட்ட நிலையில் 8 மணிநேர மீட்பு பணிக்கு பிறகு மேலும் மூவர் சடலங்களாக மீட்கப்பட்டுள்ளனர்.
இராணுவம், தீயணைப்பு படையினர் மற்றும் பிரதேச மக்கள் இணைந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர்.

கடும் மழை பெய்துவந்த நிலையிலேயே இன்று காலை 8.45 மணியளவில் கண்டி – கொழும்பு பிரதான வீதியில் பஹல கடுகண்ணாவ பகுதியில் மண்சரிவு ஏற்பட்டுள்ளது.

சம்பவத்தின்போது உணவகத்துக்குள் 9 பேர்வரை இருந்துள்ளனர்.

உயிரிழந்தவர்களில் பேராதனை பல்கலைக்கழக விரிவுரையாளர் ஒருவரும் உள்ளடங்குகின்றார் என தெரியவருகின்றது. இவர் மாவனல்லை பகுதியை சேர்ந்தவர்.

நுகேகொடை கூட்டத்தில் அலிபாபாவும், 40 திருடர்களும் பங்கேற்பு!

நுகேகொடையில் நேற்று நடைபெற்ற கூட்டமானது அலிபாபாவும், 40 திருடர்களும் பங்கேற்ற கூட்டமாகும். இந்த ஆட்சியைக் கவிழ்க்கலாம் என சிலர் பகல் கனவு காண்கின்றனர். இதனால்தான் டிசம்பர் ஜனாதிபதி கதையெல்லாம் பரப்படுகின்றது என்று பிரதி அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப் தெரிவித்தார்.

நாட்டில் பழைய அரசியல் கலாசாரம் நுகேகொடை கூட்டத்தில் வெளிப்பட்டது எனவும் அவர் குறிப்பிட்டார்.

நாமல் ராஜபக்ச என்பவரை ஹரின் பெர்ணான்னோ இளவரசர் என விளித்துள்ளார். ஆம். அவர் கள்வர்களின் இளவரசர் எனவும் பிரதி அமைச்சர் குறிப்பிட்டார்.

தமிழ், முஸ்லிம் எம்.பிக்களுடன் ஜனாதிபதி அவசர சந்திப்பு!

ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க, தமிழ் மற்றும் முஸ்லிம் எம்.பிக்களுடன் இன்று சந்திப்பு நடத்தியுள்ளார்.

இது தொடர்பில் தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவர் மனோ கணேசனின் முகநூல் பதிவு வருமாறு,

இன்று (22-11-25) பிற்பகல் 1-மணிக்கு ஆரம்பித்து, ஜனாதிபதி செயலகத்தில் இந்த சந்திப்பு இடம் பெற்றது.
இனவாதத்தை ஒழிக்க, “இலங்கையர் தினத்தை” நடத்த, ஜனாதிபதி அனுர, எம்மை அழைத்து, எமது ஒத்துழைப்புகளை கோரினார்.

எனது பதில் உரையில் நான் கூறியதாவது;

“இனவாதத்தை ஒழிக்க, நீங்கள் கோரும் ஒத்தாசைகளை முழுமையாக வழங்குவோம்.”

“நாட்டின் அனைத்து இன, மத, மொழி, தனித்துவங்கள் பேணி பாதுகாக்க பட வேண்டும். அதற்கு சமாந்திரமாக, ‘இலங்கையர் அடையாளம்’ பேணி வளர்க்க பட வேண்டும்.”

“இலங்கையில், அனைத்து பிரிவினருக்கும் இடையில், ‘உரிமைகளின் சமத்துவம்’ இருக்க வேண்டும்.”

“இலங்கை தின கொண்டாட்டங்களின் போது, இலங்கையின் பல்வேறு இனங்களை பிரதிநிதித்துவ படுத்தும், முகமாக கலாச்சார ஊர்வலம் நடத்துங்கள். இலங்கையின் பன்மைத்துவம் பற்றி, முதலில் இலங்கையர் அறிந்து கொள்ள வழி செய்யுங்கள்.”

#தமிழ் #முற்போக்கு #கூட்டணி சார்பில், என்னுடன் பழனி திகாம்பரம் எம்பியும் மற்றும் பல்வேறு கட்சிகளின் தமிழ், முஸ்லிம் எம்பிக்கள் கலந்து கொண்டனர்.

 

ரணில், சஜித் இணைவுக்காக பலி கடா ஆகுவதற்குகூட நான் தயார்!

“ ஐக்கிய தேசியக் கட்சியும், ஐக்கிய மக்கள் சக்தியும் ஒன்றிணைய வேண்டும். இரு தரப்பு இணைவுக்கு நான் தடையாக இருக்கின்றேன் என எவரேனும் கருதினால் பதவி விலகிவிட்டு ஓரமாககூட இருப்பதற்கு நான் தயார். ரணில், சஜித் இணைவுக்காக பலி கடா ஆகுவதற்குகூட நான் தயார்.”

இவ்வாறு ஐக்கிய தேசியக் கட்சி உறுப்பினர் ஹரின் பெர்ணான்டோ இன்று தெரிவித்தார்.

கொழும்பில் நடைபெற்ற ஊடக சந்திப்பின்போதே அவர் இவ்வாறு கூறினார்.

 

மண்சரிவு: நால்வர் காயம்: மீட்பு பணி தீவிரம்!

கண்டி, பஹல கடுகண்ணாவ பகுதியில் பிரதான வீதிக்கு அருகில் உள்ள வியாபார நிலையமொன்றுமீது பாரிய கற்பாறையுடன் மண்மேடு சரிந்து விழுந்ததில் ஒருவர் பலியாகியுள்ளார். மேலும் நால்வர் காயம் அடைந்துள்ளனர். வீடொன்றுடனேயே குறித்த உணவகம் அமைந்திருந்துள்ளது.

காயமடைந்தவர்கள் மானவல்லை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

பாதிக்கப்பட்டுள்ள வியாபார நிலையம் உணவகமொன்று என தெரியவருகின்றது.

சம்பவத்தின்போது குறித்த உணவகத்துக்குள் சிலர் இருந்துள்ளனர். சுமார் ஐந்து பேர்வரை சிக்கி இருக்கலாம் என அஞ்சப்படுகின்றது. அவர்களை மீட்பதற்குரிய மீட்பு பணி தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டுவருகின்றது.

கடும் மழை பெய்துவந்த நிலையிலேயே இன்று காலை 8.45 மணியளவில் கண்டி – கொழும்பு பிரதான வீதியில் பஹல கடுகண்ணாவ பகுதியில் மண்சரிவு ஏற்பட்டுள்ளது. சம்பவத்தின்போது உணவகத்துக்குள் 9 பேர்வரை இருந்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுகின்றது.

30 பேரடங்கிய இராணுவ குழுவொன்று மீட்பு பணியில் ஈடுபட்டுவருகின்றது. குறித்த வீதி தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.

மண்சரிவு இடம்பெற்ற பகுதி மண்சரிவு அபாய வலயமென ஏற்கனவே எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது என தெரியவருகின்றது.

பதில் பிரதம நீதியரசராக உச்ச நீதிமன்ற நீதிபதி அந்தணி லலித் ஷிரான் குணரத்ன நியமனம்

பதில் பிரதம நீதியரசராக உச்ச நீதிமன்ற நீதிபதி அந்தணி லலித் ஷிரான் குணரத்ன நியமனம்

உச்ச நீதிமன்ற நீதிபதி அந்தணி லலித் ஷிரான் குணரத்ன, இன்று (22) முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவின் முன்னிலையில் பதில் பிரதம நீதியரசராக பதவியேற்றார்.

பிரதம நீதியரசர் பிரீத்தி பத்மன் சூரசேன 2025-11-22 முதல் 2025-11-27 வரை வெளிநாடு சென்றுள்ள நிலையில், அவர் நாடு திரும்பும் வரை ஜனாதிபதி இந்த நியமனத்தை வழங்கியுள்ளார்.

சினிமா

பிரபல இந்திய பாடகி ஆஷா போஸ்லே காலமானார்!

0
  பிரபல இந்திய பின்னணி பாடகி ஆஷா போஸ்லே தமது 92ஆவது வயதில் இன்று(12) காலமானார். இந்திய திரையுலகில் 10,000-இற்கும் அதிக பாடல்களை பாடியுள்ள மூத்த பாடகி ஆஷா போஸ்லே நேற்று(11) மாரடைப்பு ஏற்பட்டதையடுத்து மும்பையிலுள்ள...

சின்னத்திரை நடிகை தற்#கொ#லை!

0
  இலங்கையை பூர்வீகமாகக்கொண்ட பிரபல சின்னத்திரை நடிகையான சுபாஷினி (வயது 36) தற்#கொ#லை செய்துகொண்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. "கயல்" சின்னத்திரை தொலைக்காட்சி தொடரில் நடித்து வருபவர் சுபாஷிணி (வயது36). இலங்கையை பூர்வீகமாகக்கொண்ட இவர் கடந்த...

“தனுஷின் நட்பை இழந்தது மிகப்பெரிய அவமானம்” – விக்னேஷ் சிவன் வருத்தம்

0
தனுஷ் உடனான நட்பை இழந்தது மிகப்பெரிய அவமானம் என்று விக்னேஷ் சிவன் பகிர்ந்துள்ளார். விக்னேஷ் சிவன் இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன் நடித்துள்ள ‘எல்.ஐ.கே’ திரைப்படம் ஏப்ரல் 10-ம் திகதி திரைக்கு வரவுள்ளது. நீண்ட பிரச்சினைகளுக்கு...

செய்தி

‘கடல் கடந்த இந்தியக் குடியுரிமை’ – இந்திய அரசுக்கு இதொகா நன்றி!

0
இலங்கையில் வாழும் இந்திய வம்சாவளி மக்கள் கடல் கடந்த இந்தியக் குடியுரிமையை பெற்றுக் கொள்வதற்கான நடைமுறையை இலகுபடுத்தியுள்ள இந்திய அரசாங்கத்துக்கு நன்றியை தெரிவித்துக் கொள்வதாக இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தவிசாளரும், முன்னாள் பாராளுமன்ற...

வரலாறு படைத்த தமிழக தேர்தல்: 84,29 சதவீத வாக்கு பதிவு!

0
2026 தமிழக சட்​டப்​பேர​வைத் தேர்​தலில், மாலை 6 மணி நிலவரப்படி 84.41% சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன. அதிகபட்சமாக கரூரில் 91.97% வாக்குகள் பதிவாகியுள்ளன. குறைந்தபட்சமாக கன்னியாகுமரியில் 75.48% வாக்குகள் பதிவாகியுள்ளன. 6 மணிக்குப் பின் டோக்கன்...

ஹார்முஸ் நீரிணையில் கண்ணிவெடி வைக்கும் படகுகளை அழிக்க ட்ரம்ப் உத்தரவு!

0
ஹார்முஸ் நீரிணையில் கண்ணிவெடிகளை வைக்கும் படகுகளை சுட்டு வீழ்த்துமாறு அமெரிக்க கடற்படைக்கு ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் உத்தரவிட்டுள்ளார். ஈரானுக்கு அருகிலுள்ள முக்கிய கடல் பகுதியில் சிறிய ரக படகுகள் இத்தகைய செயல்களில் ஈடுபட்டால், தயக்கமின்றி...