Home Blog Page 194

‘மிஸ் யுனிவர்ஸ் 2025’ போட்டி: பட்டம் வென்றார் மெக்சிகோ அழகி!

தாய்லாந்தில் நடந்த ‘மிஸ் யுனிவர்ஸ்’ எனப்படும், பிரபஞ்ச அழகிப் போட்டியில் வட அமெரிக்க நாடான மெக்சிகோவை சேர்ந்த பாத்திமா போஷ் பட்டம் வென்றார்.

இந்த ஆண்டுக்கான, ‘மிஸ் யுனிவர்ஸ்’ போட்டி தென்கிழக்கு ஆசிய நாடான தாய்லாந்தில் நடந்தது. இதில், இந்தியா, மலேஷியா, மெக்சிகோ, ஜமைக்கா, அமெரிக்கா என பல்வேறு நாடுகளைச் சேர்ந்த அழகிகள் பங்கேற்றனர்.

இம்மாத முதல் வாரத்தில் இருந்து பல்வேறு சுற்றுகளாக போட்டிகள் நடத்தப்பட்டன. மெக்சிகோ, தாய்லாந்து, பிலிப்பைன்ஸ், சீனா, வெனிசுலா ஆகிய நாடுகள், முதல் 12 இடங்களை பிடித்தன. அதற்கு முன்னதாக நீச்சலுடை சுற்றில் இந்தியாவின் மனிகா விஸ்வகர்மா வெளியேறினார்.

இந்நிலையில், தாய்லாந்தில் உள்ள, ‘இம்பாக்ட் சேலஞ்சர்’ அரங்கில் இறுதிப்போட்டி நடந்தது. போட்டியின் நடுவர்களில் ஒருவராக நம் நாட்டு பேட்மின்டன் வீராங்கனை சாய்னா நேவால் இடம்பெற்றார்.

முடிவில், மெக்சிகோ நாட்டை சேர்ந்த பாத்திமா போஷ் வெற்றி பெற்று, 2025ம் ஆண்டுக்கான, ‘மிஸ் யுனிவர்ஸ்’ பட்டத்தை தட்டி சென்றார். இரண்டாம் இடத்தை தாய்லாந்து அழகியும், மூன்றாவது இடத்தை வெனிசுலா அழகியும் பெற்றனர்.

‘மிஸ் யுனிவர்ஸ்’ பட்டம் வென்ற பாத்திமா, அமெரிக்கா மற்றும் இத்தாலியில் பேஷன் டிசைனிங் படித்தவர். அவருக்கு 2 கோடி ரூபாய் பரிசுத்தொகை, சொகுசு பங்களா உள்ளிட்டவை வழங்கப்பட்டன. அவருக்கு வழங்கப்பட்டிருக்கும் கிரீடம், 44 கோடி ரூபாய் மதிப்புடையது.

‘மிஸ் யுனிவர்ஸ்’ பட்டம் வென்ற பாத்திமா போஷ்க்கும், போட்டியின் அமைப்பாளராக இருந்த தொழிலதிபர் நவாட் இட்சராகிரிசில் என்பவருக்கும் போட்டியின் போது மோதல் வெடித்தது.

‘ஸ்பான்சர்ஷிப்’ விஷயத்தில் எழுந்த பிரச்னையால் இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டு பாத்திமாவை முட்டாள் என நவாட் திட்டினார். இது தொடர்பான வீடியோ வெளியானது. இரண்டு நடுவர்கள் இந்த போட்டியில் இருந்து வெளிநடப்பு செய்தனர். இந்த சர்ச்சைக்கு மத்தியிலும் பாத்திமா போஷ் பட்டம் வென்று பிரபஞ்ச அழகியாக மகுடம் சூடியுள்ளார்.

இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகரை சந்தித்தார் இலங்கை பாதுகாப்பு செயலர்!

இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் டோவலுக்கும், இலங்கை பாதுகாப்பு செயலாளர் எயர் வைஸ் மார்ஷல் சம்பத் துயகொந்தவுக்கும் இடையில் விசேட சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.

புதுடெல்லியில் நடைபெற்ற கொழும்பு பாதுகாப்பு மாநாட்டின் 7வது தேசிய பாதுகாப்பு ஆலோசகர்கள் மட்டக் கூட்டத்தின் ஒரு பகுதியாக மேற்படி சந்திப்பு இடம்பெற்றுள்ளது. இரு தரப்பு அதிகாரிகளும் பங்கேற்றிருந்தனர்.

இந்தச் சந்திப்பின் போது, இரு தரப்பினரும் பரஸ்பர நலன் சார்ந்த பல்வேறு பாதுகாப்பு தொடர்பான விடயங்கள் தொடர்பில் ஆக்கபூர்வமான உரையாடலில் ஈடுபட்டனர் என்று பாதுகாப்பு அமைச்சின் இணையதள செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொழும்புப் பாதுகாப்பு மாநாட்டின் ஐந்து தூண்களான கடல்சார் பாதுகாப்பு மற்றும் பாதுகாப்பு, பயங்கரவாதம் மற்றும் தீவிரமயமாக்கலை எதிர்த்தல், கடத்தல் மற்றும் நாடுகடந்த ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்களை எதிர்த்துப் போராடுதல், சைபர் பாதுகாப்பு, மனிதாபிமான உதவி மற்றும் பேரிடர் நிவாரணம் ஆகியவற்றுடன் இணைந்த பகுதிகளில் ஒத்துழைப்பை மேலும் மேம்படுத்துவது குறித்து இந்தக் கலந்துரையாடலில் கவனம் செலுத்தப்பட்டது.

பஹல கடுகண்ணாவ மண்சரிவு: ஒருவர் பலி: தற்காலிகமாக மூடப்பட்டது வீதி!

கண்டி – கொழும்பு பிரதான வீதியில் கண்டி, பஹல கடுகண்ணாவ பகுதியில் பிரதான வீதிக்கு அருகில் அமைந்திருந்த நிலையம் மற்றும் வீடொன்றின்மீது மண்மேடு சரிந்து விழுந்ததில் ஒருவர் பலியாகியுள்ளார்.

பாரிய கற்களும் சரிந்து விழுந்துள்ளன. மண்சரிவில் சிக்கியவர்களில் மூவர் மாவனல்லை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். குறித்த பகுதியில் மேலும் ஐவர் சிக்கி இருக்கலாம் என அஞ்சப்படுகின்றது.

கடும் மழை காரணமாக மண்சரிவு இன்று காலை மண்சரிவு ஏற்பட்டுள்ளது.

இதனால் கண்டி – கொழும்பு பிரதான வீதி மாவனல்லை பகுதியில் மூடப்பட்டுள்ளது. மாற்று வீதியை பயன்படுத்துமாறு மக்களிடம் கோரப்பட்டுள்ளது.

மண்மேடு சரிவு!

கண்டி – கொழும்பு வீதியில் கண்டி, பஹால கடுகண்ணாவ பகுதியில் பிரதான வீதிக்கு அருகில் மண்மேடு சரிந்து விழுந்துள்ளது.

கடும் மழை காரணமாக மண்சரிவு இன்று காலை மண்சரிவு ஏற்பட்டுள்ளது. வீதியோரத்தில் இருந்த வியாபார நிலையமொன்றின்மீது மண்மேடு விழுந்துள்ளது.

இதனால் குறித்த பகுதியில் போக்குவரத்து நெரிசலும் ஏற்பட்டுள்ளது. ஒரு வழி போக்குவரத்து பயன்படுத்தப்பட்டு வருகின்றது.

வியாபார நிலையத்தில் இருந்த சிலர மண்மேட்டில் சிக்குண்டு இருக்கலாம் என அஞ்சப்படுகின்றது. மீட்பு பணி தற்போது இடம்பெற்றுவருகின்றது.

வியாபார நிலையத்தில் எத்தனை பேர் இருந்தனர் உள்ளிட்ட தகவல்கள் இன்னும் வெளிவரவில்லை.

மரக்கறி விலைப்பட்டியல் (22.11.2025)

மரக்கறி விலைப்பட்டியல் (22.11.2025)

நுவரெலியா பொருளாதார மத்திய நிலையத்தால் இன்று (22) வெளியிடப்பட்டுள்ள மரக்கறி வகைகளின் (ஒரு கிலோ) விலை பட்டியல்…

“சஜித் பலத்தை காட்டும்வரை நாமல்தான் எதிர்க்கட்சி தலைவர்” நுகேகொடை கூட்டம் குறித்து மனோ கருத்து

 

நுகேகொடை கூட்டம் தொடர்பில் தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் மனோ கணேசனின் முகநூல் பதிவு வருமாறு,

நிகழ்வு ஆரம்பிக்க, முன்-பிடித்த, பின்–பிடித்த, படங்களை, போட்டு, ஊடக(ர்) நிறுவனங்களின் விருப்பபடி, கூட்டம் பற்றி, செய்திகள் போடலாம்.
அவரவர் விருப்பம் வேறு. உண்மை வேறு. இதை நாம் பகுத்து அறியனும்.

சில மாசங்களுக்கு முன் சொந்த ஊரிலேயே, 50-பேரை கூட, திரட்ட முடியா நிலையில், இருந்த நாமல் கட்சி, இன்று UNP, SLFP உடன் சேர்ந்து, தம் பலத்தை காட்டி உள்ளது.

என் வீட்டில் இருந்து நடை தூரம், நுகேகொடை சந்தி. நடக்காமல், நேரடி தகவல்.

கூட்ட ஏற்பாட்டாளர் பலமுறை நமது கட்சிக்கு அழைப்பு விடுத்தார்கள். நமக்கு “சரி வராது Bro” என மறுத்து விட்டோம்!

இந்த கூட்டத்தை வைச்சு, அங்க யாரும், அரசை உடனடியா கவிழ்க்க ஏலாது. அது கலர் கனவு!
மேடையிலும், அப்படி சொல்ல பட வில்லை. ஆனால், <தான் கப்பல் கட்டுவது “ஹார்பரில்” தரித்து நிற்க அல்ல, ஆழ்கடலில் ஓடத்தான்> என நாமல் சொன்னார்.

இது, அரசுக்கு சவால் விடும் கூட்டம் என்பதை விட, தேசத்தின் பிரதான எதிர் கட்சி யார் என நிலை நாட்டுவதே அங்கே முதல் கனவு!

இதன் மூலம் இங்கே கூடிய சிங்கள (பெளத்த) மகாஜனம், சில செய்திகளை தந்தது.

(1)2019ல் கோதாவுக்கும், பின் 2024ல் அனுரவுக்கும் வாக்களித்த, அதே 69 இலட்சம், விரும்புனா, தாய் வீடு திரும்பலாம். எந்நேரமும் மாறலாம். மாறாமலும் விடலாம். எப்படியும், இங்கே நாம் தான் எஜமானர்.

எங்கள் “தேசாபிமானம்” தான் இங்கே “பிரைம் சப்ஜெக்ட்”!

(2)சிறுபான்மை சில்லறைகள் மூடி-கொண்டு வேடிக்கை பார்க்கனும்! அல்லது ஓரமா போய் விளையாடனும்!

(3)பாராளுமன்ற, எதிர்கட்சி தலைவரான சஜித், இப்படி ஒரு கூட்டத்தை, வெளியே கூட்டி காட்டும் வரை, நாட்டிலே நாமல் தான் “ஒபொசிசன் லீடர்”!

அறகலயவின்போது நடந்தது என்ன? முன்னாள் சபாநாயகர் பகீர் தகவல்!

அறகலயவின்போது எனக்கு பல்வேறு அழுத்தங்கள் இருந்தாலும் அரசமைப்பைமீறி செயற்படவில்லை. என்னை கொலை செய்தாலும் பரவாயில்லை அரசமைப்பைமீற மாட்டேன் என்பதில் உறுதியாக இருந்தேன். பிரதமர் பதவியை ஏற்குமாறு நானே ரணில் விக்கிரமசிங்கவிடம் கோரிக்கை விடுத்தேன் என்று முன்னாள் சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தெரிவித்தார்.

அறகலய தொடர்பில் கருத்து வெளியிடுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார். இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,

“ பங்களாதேசில் போராட்டம் நடந்தது , ஆயிரத்து 400 பேர்வரை கொல்லப்பட்டனர். ஆனால் இலங்கையில் ஆட்சியில் இருந்த கோட்டாபய ராஜபக்ச அவ்வாறு செய்யவில்லை. அவர் ஜனநாயகத்தை ஏற்றார். நாட்டை விட்டு வெளியேறினார்.

அவர் இவ்வாறு சென்று 12 மணிநேரத்துக்கு பின்னரே அது பற்றி எனக்கு தெரியும். அதுவரையில் நாட்டில் ஜனாதிபதியொருவர் இருக்கவில்லை. நிர்வாகம் யாரின் கைகளில் என தெரியவில்லை. யார் எங்கிருக்கின்றனர் என்பது புரியாது இருந்தது. ரணில் விக்கிரமசிங்கவும், ஜீ.எல்.பீரிசும் மட்டுமே என்னை தொலைபேசியில் தொடர்பு கொண்டனர்.

நாடாளுமன்றத்தை கூட்டுவதற்கு தீர்மானித்தேன். 3 எம்.பிக்களை தொடர்புகொண்டேன். அவர்கள் உயிருக்கு உத்தரவாதம் கோரினர். கடைசியில் நாடாளுமன்றத்தை கூட்ட முடியாமல்போனது

இக்காலப்பகுதியில் ஜனாதிபதி இருக்கவில்லை, பிரதமர் இருக்கவில்லை. அமைச்சரவை இருக்கவில்லை. சபாநாயகர் என்ற வகையில் எனக்கு மட்டுமே பதவி இருந்தது. முப்படை தளபதிகள் எனது வீட்டுக்கு வந்தனர். எனக்கு உத்தரவு எதுவும் பிறப்பிக்க முடியாது என கூறினேன்.

இதற்கிடையில் ரணில் விக்கிரமசிங்கவின் வீட்டையும் எரித்து விட்டனர். பிரதமர் பதவியை ஏற்குமாறு நானே அவரிடம் கோரிக்கை விடுத்தேன். திட்டு வாங்கிக்கொண்டாவது அவர் அந்த சவாலை விடுத்தார்.

அறகலயவின்போது சபாநாயகர் வீட்டில் இருந்து என்னை நாடாளுமன்றம் அழைத்து சென்றனர். அங்கிருந்து இராணுவ தலைமையகத்துக்கு அழைத்து சென்றனர். அங்கு ரணில் விக்கிரமசிங்கவும் இருந்தார்.

பல நெருக்கடிகளை அன்று எதிர்கொண்டிருந்தாலும் ஜனநாயகம் பாதுகாக்கப்பட்டது மகிழ்ச்சியளிக்கின்றது. பங்களாதேஸ், லிபியா போன்ற நாடுகளில் என்ன நடந்தது?

ஆட்சியை பொறுப்பேற்குமாறு என்னிடம் கோரினர். நான் நாட்டை பற்றி மட்டுமே சிந்தித்தேன். அறகலய ஆரம்பிக்கப்பட்டதன் நோக்கம் வேறு, இடையில் அது திசைமாறிவிட்டது. ”என்றார்.

ஆட்சி கவிழ்ப்பு குறித்து நாமல் கூறுவது என்ன?

நாட்டு மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றாமல், அடக்குமுறையை கையில் எடுத்துள்ள தேசிய மக்கள் சக்தி அரசாங்கம், கிடைக்கும் முதல் சந்தர்ப்பத்திலேயே கவிழ்க்கப்படும் என்று ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ச தெரிவித்தார்.

மாபெரும் மக்கள் குரல் எனும் தொனிப்பொருளின்கீழ் கூட்டு எதிரணியால் நுகேகொடையில் நேற்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்த கூட்டத்தில் உரையாற்றுகையிலேயே நாமல் ராஜபக்ச இவ்வாறு கூறினார்.

“ நாட்டு மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றாத அரசாங்கம், அடக்குமுறை ஆயுத்தை கையில் எடுத்துள்ளது.

போதைப் பொருள் ஒழிப்பு நடவடிக்கையை நாம் எதிர்க்கவில்லை. போதைப்பொருளை பிடிக்கவும், துறைமுகத்தில் இருந்து விடுவிக்கப்பட்ட கொள்கலன்களில் இருந்த போதைப்பொருளையும் கைப்பற்றுமாறு வலியுறுத்துகின்றோம்.

எதிரணி உறுப்பினர்களை அரசாங்கம் விமர்சிக்கின்றது, ஆனால் தமது கட்சி உறுப்பினர்கள் போதைப்பொருள் குற்றச்சாட்டில் கைதாகும்போது அது தொடர்பான செய்தியை வெளியிட தடை விதிக்கப்படுகின்றது. ஏன் இது? அரசாங்க அனுசரணையில் இயங்கும் குற்றக் குழுவொன்று நாட்டில் உள்ளது.

அரசாங்கத்தின் அனுசரணையுடன் நாட்டில் கலாசாரம் அழிக்கப்படுகின்றது. இதனை சுட்டிக்காட்டும்போது இனவாத முத்திரை குத்தப்படுகின்றது. தவறை சுட்டிக்காட்டும் முதுகெலும்பு எமக்கு உள்ளது என்பதை கூறிவைக்கின்றோம்.

நாட்டு மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளை அரசாங்கம் நிறைவேற்ற வேண்டும். வேலை செய்வதற்கு ஆரம்பிக்க வேண்டும்.
மற்றுமொரு விடயத்தையும் நினைவு படுத்த விரும்புகின்றோம்.

நங்குகூரமிட்டு துறைமுகத்தில் தடுத்து வைப்பதற்காக கப்பல் செய்யப்படுவதில்லை. அது தனது பயணத்தின்போது பல சவால்களை சந்திக்க நேரிடும். நாம் மக்கள் சக்தியை கட்டியெழுப்புவது, கிடைக்கும் முதல் சந்தர்ப்பத்திலேயே இந்த அரசாங்கத்தை கவிழப்பதற்கு என்பதை நினைவுபடுத்த விரும்புகின்றேன்.” – எனவும் நாமல் ராஜபக்ச குறிப்பிட்டுள்ளார்.

நுகேகொடையில் இருந்து சஜித்துக்கு விடுக்கப்பட்ட அழைப்பு!

கூட்டு எதிரணியினரின் அடுத்த கூட்டத்தில் ஐக்கிய மக்கள் சக்தி பங்கேற்க வேண்டும் என்று ஐக்கிய தேசியக் கட்சியின் உறுப்பினர் ஹரின் பெர்ணான்டோ அழைப்பு விடுத்தார்.

நுகேகொடையில் நடைபெற்ற கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இந்த அழைப்பை விடுத்தார்.

அத்துடன், கட்சிகள் பங்கேற்காவிட்டாலும் ஆதரவாளர்கள் ஒன்றிணைந்து விட்டனர். எனவே, ஐக்கிய மக்கள் சக்தியும் இனி வரும் என்று உதய கம்மன்பில தமதுரையின்போது குறிப்பிட்டார்.

இலங்கையின் கடல் வளம் காக்கப்படும்!

 

“ இலங்கையில் கடல்வளம் மற்றும் நீரியல் வளங்களை பாதுகாப்பதற்குரிய அத்தனை நடவடிக்கையும் முன்னெடுக்கப்படும். இதற்காக நவீன தொழில்நுட்பங்களும் பயன்படுத்தப்படும். இத்துறையில் நாம் அடுத்த கட்டத்தை நோக்கி செல்ல வேண்டும்.” என்று கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்தார்.

சர்வதேச மீனவர் தினம் இன்றாகும். இதனை முன்னிட்டு அக்வா பிளான்ட் இலங்கை – 2025 சர்வதேச மீன்வள கண்காட்சி இன்று கொழும்பு தாமரை கோபுரம் வளாகத்தில் ஆரம்பமானது.

கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சர் ராமலிங்கம் சந்திரசேகர் தலைமையில் நடைபெற்ற ஆரம்ப விழாவில் பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரிய பிரதம அதிதியாக கலந்துகொண்டார். கண்காட்சியையும் ஆரம்பித்து வைத்தார்.

இன்று 21 முதல் 23, 2025 வரை நடைபெறும் குறித்த சர்வதேச கண்காட்சியில் அலங்கார மீன்களின் அதிசயங்கள், கடல்வாழ் உயிரினங்கள், நவீன தொழில்நுட்பம் மற்றும் பரந்த அளவிலான கடல்சார் பயன்பாடுகள் என்பன காட்சிப்படுத்தப்படும்.

இதற்கு கட்டணம் எதுவும் அறிவிடப்படமாட்டாது. எனவே, மாணவர்கள், இளைஞர்கள் உட்பட அனைவரும் பங்கேற்று பயன்பெற முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆரம்ப நிகழ்வின் பின்னர், உலக மீனவர் தினத்தை முன்னிட்டு தபால் திணைக்களத்தினால் வெளியிடப்பட்ட நினைவு முத்திரையும் வெளியீட்டு வைக்கப்பட்டதோடு, மீனவர்களுக்குரிய ஓய்வூதிய திட்டம் அறிமுகப்படுத்தி வைக்கப்பட்டது.

அத்துடன், கடற்றொழிலில் இதுவரை குற்றம் இழைக்காத மீனவர்களுக்கு பாராட்டு சான்றிதழும் வழங்கி வைக்கப்பட்டது.

மேற்படி இந்த நிகழ்வில் கடற்றொழில் பிரதி அமைச்சர் ரத்ன கமகே, பாதுகாப்பு பிரதி அமைச்சர் மேஜர் ஜெனரல் அருண ஜயசேகர, தொழில் பிரதி அமைச்சர் மஹிந்த ஜயசிங்க, டிஜிட்டல் பொருளாதார பிரதி அமைச்சர் எரங்க வீரரத்ன, கடற்றொழில் அமைச்சின் செயலாளர் டாக்டர். பீ.கே.கோலித்த கமல் ஜினதாச, கடற்றொழில் மற்றும் கடல்வளங்கள் திணைக்களத்தின் பணிப்பாளர் எஸ். ஜே. கஹாவத்தே, அமைச்சின் அதிகாரிகள், FAO, BOBP-IGO மற்றும் தெற்காசிய நாடுகளின் சிரேஷ்ட பிரதிநிதிகளும், வெளிநாட்டு இராஜதந்திரிகள் இந்தியா, மாலைத்தீவு, பங்களாதேஷ் ஆகிய நாடுகளை சேர்ந்த பிரதிநிதிகள் என பலர் கலந்துகொண்டுள்ளனர்.

இந்நிகழ்வை தலைமை தாங்கி உரையாற்றும் போதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

இன்று ஆரம்பமான இந்த கண்காட்சி நாளை மற்றும் நாளை மறுதினமும் இடம்பெறுகின்றது. இதனை பார்வையிட வருமாறு மாணவர்கள் உட்பட அனைவரையும் அழைக்கின்றேன்.

இப்பிராந்தியத்தில் நடக்கும் மிகப்பெரிய கண்காட்சி இதுவாகும் என இதில் பங்கேற்றுள்ள ஒருவர் குறிப்பிட்டார். இதனை எமது நாட்டில் நடத்துவதற்கு கிடைத்த வாய்ப்பு பெருமையளிக்கின்றது. இதன்மூலம் உலகின் கவனத்தையும் ஈர்க்கலாம்.

எமது அமைச்சின் அதிகாரிகளின் அர்ப்பணிப்பு காரணமாகவே இவ்வளவு பெரிய கண்காட்சியை எம்மால் சிறப்பாக நடந்த முடிந்துள்ளது. அமைச்சின் பிரதி அமைச்சர் மற்றும் செயலாளர், பணிப்பாளர் உள்ளிட்ட அனைத்து அதிகாரிகளுக்கும் நன்றிகள்.

எமது நாட்டு கடல் மற்றும் நீரியல் வளங்களை பாதுகாப்பதே மாநாட்டின் முதன்மை நோக்கமாகும். இது விடயத்தில் ஜனாதிபதியின், ஏனைய அமைச்சர்களின் அரசாங்கத்தின் முழு ஆதரவும் எமக்கு இருக்கின்றது.

அதேவேளை, சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைமூலம் எமது நாட்டு கடல்வளத்தை நாசமாக்கும் நடவடிக்கையில் சிறு மீனக்குழுவொன்று ஈடுபட்டுள்ளது. இதனை தடுத்து நிறுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றது.

நாட்டில் கடற்படையினர் முன்னர் போல் அல்ல. தற்போது நாட்டை கட்டியெழுப்புவதற்கு சிறந்த பங்களிப்பை வழங்கி வருகின்றனர் என்றார்.

 

 

 

 

சினிமா

பிரபல இந்திய பாடகி ஆஷா போஸ்லே காலமானார்!

0
  பிரபல இந்திய பின்னணி பாடகி ஆஷா போஸ்லே தமது 92ஆவது வயதில் இன்று(12) காலமானார். இந்திய திரையுலகில் 10,000-இற்கும் அதிக பாடல்களை பாடியுள்ள மூத்த பாடகி ஆஷா போஸ்லே நேற்று(11) மாரடைப்பு ஏற்பட்டதையடுத்து மும்பையிலுள்ள...

சின்னத்திரை நடிகை தற்#கொ#லை!

0
  இலங்கையை பூர்வீகமாகக்கொண்ட பிரபல சின்னத்திரை நடிகையான சுபாஷினி (வயது 36) தற்#கொ#லை செய்துகொண்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. "கயல்" சின்னத்திரை தொலைக்காட்சி தொடரில் நடித்து வருபவர் சுபாஷிணி (வயது36). இலங்கையை பூர்வீகமாகக்கொண்ட இவர் கடந்த...

“தனுஷின் நட்பை இழந்தது மிகப்பெரிய அவமானம்” – விக்னேஷ் சிவன் வருத்தம்

0
தனுஷ் உடனான நட்பை இழந்தது மிகப்பெரிய அவமானம் என்று விக்னேஷ் சிவன் பகிர்ந்துள்ளார். விக்னேஷ் சிவன் இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன் நடித்துள்ள ‘எல்.ஐ.கே’ திரைப்படம் ஏப்ரல் 10-ம் திகதி திரைக்கு வரவுள்ளது. நீண்ட பிரச்சினைகளுக்கு...

செய்தி

‘கடல் கடந்த இந்தியக் குடியுரிமை’ – இந்திய அரசுக்கு இதொகா நன்றி!

0
இலங்கையில் வாழும் இந்திய வம்சாவளி மக்கள் கடல் கடந்த இந்தியக் குடியுரிமையை பெற்றுக் கொள்வதற்கான நடைமுறையை இலகுபடுத்தியுள்ள இந்திய அரசாங்கத்துக்கு நன்றியை தெரிவித்துக் கொள்வதாக இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தவிசாளரும், முன்னாள் பாராளுமன்ற...

வரலாறு படைத்த தமிழக தேர்தல்: 84,29 சதவீத வாக்கு பதிவு!

0
2026 தமிழக சட்​டப்​பேர​வைத் தேர்​தலில், மாலை 6 மணி நிலவரப்படி 84.41% சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன. அதிகபட்சமாக கரூரில் 91.97% வாக்குகள் பதிவாகியுள்ளன. குறைந்தபட்சமாக கன்னியாகுமரியில் 75.48% வாக்குகள் பதிவாகியுள்ளன. 6 மணிக்குப் பின் டோக்கன்...

ஹார்முஸ் நீரிணையில் கண்ணிவெடி வைக்கும் படகுகளை அழிக்க ட்ரம்ப் உத்தரவு!

0
ஹார்முஸ் நீரிணையில் கண்ணிவெடிகளை வைக்கும் படகுகளை சுட்டு வீழ்த்துமாறு அமெரிக்க கடற்படைக்கு ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் உத்தரவிட்டுள்ளார். ஈரானுக்கு அருகிலுள்ள முக்கிய கடல் பகுதியில் சிறிய ரக படகுகள் இத்தகைய செயல்களில் ஈடுபட்டால், தயக்கமின்றி...