Home Blog Page 195

எனக்கு கொலை மிரட்டல்: ஆளுங்கட்சி எம்.பி.மீது அர்ச்சுனா குற்றச்சாட்டு!

தேசிய மக்கள் சக்தியின் புத்தளம் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் பைசல், தனக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா, சபாநாயகரிடம் இன்று முறையிட்டார்.

நாடாளுமன்றத்தில் இன்று ஒழுங்கு பிரச்சினையொன்றை எழுப்பியே இவ்விடயத்தை அர்ச்சுனா சுட்டிக்காட்டி இருந்தார்.

“ சபாநாயகரே, புத்தளம் மாவட்ட வைத்தியசாலை தொடர்பில் இன்று காலை சபையில் கேள்வி எழுப்பி இருந்தேன்.

எனது கேள்விகள் முடிவடைந்த பின்னர் சிற்றுண்டிச்சாலைக்கு சென்றேன். அங்கு வைத்து புத்தளம் மாவட்ட எம்.பி. பைசல் என்னை கொலை செய்வதாக அச்சுறுத்தல் விடுத்தார். கமரா இருந்தது. அதில் இது பதிவாகி இருக்கும். எனவே, உரிய நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக்கொள்கின்றேன்.” என்றார் அர்ச்சுனா எம்.பி.

“ எனக்கு சாவதற்கு பயணம் இல்லை. ஆனால் மிரட்டல்களுக்கு அடிபணிய முடியாது.” எனவும் அவர் குறிப்பிட்டார்.

எனினும், தான் எவரையும் மிரட்டவில்லை எனவும், உறுப்பினர் பொய்யுரைக்கின்றார் எனவும் ஆளுங்கட்சி எம்.பியான பைசல் தெரிவித்தார்.

விபத்தில் ஒருவர் பலி: நால்வர் காயம்!

 

ரிகில்கஸ்கட, கட்டுகஸ்ஹின்ன பகுதியில் இன்று காலை இடம்பெற்ற விபத்தில் பெண்ணொருவர் பலியாகியுள்ளார். மேலும் நால்வர் காயமடைந்துள்ளனர்.

பஸ்ஸொன்றும், ஆட்டோவொன்றும் மோதுண்டதிலேயே இவ்விபத்து இடம்பெற்றுள்ளது.

காயமடைந்தவர்கள் ரிகில்கஸ்கட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் கண்டி வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர். ஆட்டோவில் பயணித்தவர்களே இவ்வாறு காயமடைந்துள்ளனர்.

விபத்து தொடர்பில் பொலிஸ் விசாரணை இடம்பெற்றுவருகின்றது.

க.யோகா

இந்திய துணை ஜனாதிபதிக்கும் செந்தில் தொண்டமானுக்குமிடையில் சந்திப்பு!

 

இந்திய துணை ஜனாதிபதி சி.பி. ராதாகிருஷ்ணனை இ.தொ.கா தலைவர் செந்தில் தொண்டமான் புதுடில்லியில் உள்ள துணை ஜனாதிபதி மாளிகையில் மரியாதை நிமித்தமாக சந்தித்தார்.

இந்த சந்திப்பில் இலங்கையில் ஏற்பட்ட கடுமையான பொருளாதர நெருக்கடியின் போது இந்தியா இலங்கைக்கு முழு ஆதரவு வழங்கியதை செந்தில் தொண்டமான் நினைவூட்டினார்.

ஜி – 20 மாநாடு ஆரம்பம்: ட்ரம்ப் புறக்கணிப்பு!

தென் ஆப்ரிக்காவில் நடக்கும் ஜி 20 மாநாட்டில் அமெரிக்கா பங்கேற்கவில்லை என வெள்ளை மாளிகை அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.

தென் ஆப்ரிக்காவின் ஜோகன்னஸ்பர்க்கில் இன்று முதல் நவம்பர் 23 ஆம் திகதிவரை ஜி 20 நாட்டு தலைவர்கள் பங்கேற்கும் உச்சி மாநாடு நடைபெறுகிறது.

இந்த மாநாட்டில் ஆஸ்திரேலிய பிரதமர் அந்தோனி அல்பானீஸி கலந்து கொள்கிறார், அதற்காக அவர் ஜோகன்னஸ்பர்க் செல்கிறார். மாநாட்டில் அவர் உலக நாட்டு தலைவர்களை சந்தித்து பேச்சு நடத்த உள்ளார்.
2013 ஆம் ஆண்டுக்கு பிறகு தென்னாபிரிக்கா செல்லும் முதல் ஆஸ்திரேலிய பிரதமர் இவராவார்.

இந்த கூட்டத்தை புறக்கணிப்பதாக அமெரிக்கா அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. இது குறித்து வெள்ளை மாளிகையின் பத்திரிகை செயலாளர் கரோலின் லீவிட் கூறியதாவது: தென் ஆப்ரிக்காவில் நடக்கும் ஜி 20 மாநாட்டில் அமெரிக்கா பங்கேற்காது.

தென் ஆப்ரிக்கா ஜனாதிபதி சிரில் ராமபோசா
அமெரிக்காவை பற்றி எதிர்மறையாக பேசுகிறார். இதனை அமெரிக்க ஜனாதிபதி உள்ளிட்ட எங்களது குழுவினர் ஏற்கவில்லை.

தென் ஆப்ரிக்காவுக்கான அமெரிக்க தூதர் மட்டும் கூட்டத்தில் பங்கேற்பார். தென் ஆப்ரிக்காவின் ஜனாதிபதி என்ன பொய்களை கூறினாலும், அதிகாரபூர்வ கூட்டங்களில் அமெரிக்கா பங்கேற்காது. இவ்வாறு கரோலின் லீவிட் தெரிவித்தார்.
ஆபிரிக்காவில் ஜி – 20 மாநாடு நடைபெறுவது இதுவே முதன்முறையாகும்.

1000 கூட்டங்களை நடத்த ஏற்பாடு!

தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்துக்கு எதிரான அரசியல் சமரின் ஆரம்பமே இன்று நடைபெறும் நுகேகொடை கூட்டம் என்று ஐக்கிய தேசியக் கட்சி உறுப்பினர், முன்னாள் அமைச்சர் ஹரின் பெர்ணான்டோ தெரிவித்தார்.

“ தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் மக்களுக்கு வழங்கிய வாக்குறுதியை மீறிவிட்டது. அதேபோல நாட்டு மக்கள் பரிதவிக்கும்போது எம்.பிக்களுக்கு வாகனம் கொள்வனவு செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்படுகின்றது. இதனை நாம் தடுத்து நிறுத்த வேண்டும்.” எனவும் அவர் கூறினார்.

“ எத்தடை வரினும் கூட்டத்தை வெற்றிகரமாக நடத்துவோம். இது ஆரம்பம் மட்டும்தான், நாடு முழுவதும் ஆயிரம் கூட்டங்கள் நடத்தப்படும்.” எனவும் ஹரின் பெர்ணான்டோ குறிப்பிட்டார்.

“ மொட்டு கட்சியுடன் மேடையேறுவதற்கு ஐக்கிய தேசியக் கட்சி வெட்கப்படவில்லை. ஏனெனில் இது அரசாங்கத்துக்கு எதிரான நடவடிக்கையாகும்.” எனவும் அவர் மேலும் கூறினார்.

இன்று நடப்பது ஆட்சி கவிழ்ப்பு போராட்டம் அல்ல: மொட்டு கட்சி விளக்கம்!

நுகேகொடை கூட்டம் தொடர்பில் அரசாங்கம் அஞ்சுகின்றது. எதிர்பார்த்ததைவிடம் அதிகளவானோர் இதில் பங்கேற்பார்கள் என்று ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் உறுப்பினர், முன்னாள் அமைச்சர் இந்திக்க அனுருத்த தெரிவித்தார்.

மொட்டு கட்சி தலைமையகத்தில் நடைபெற்ற ஊடக சந்திப்பின்போதே அவர் இவ்வாறு கூறினார்.

“ தேசிய மக்கள் சக்தியால் நாட்டு மக்களுக்கு பல உறுதிமொழிகள் வழங்கப்பட்டன. அவை இன்னும் நிறைவேற்றப்படவில்லை. எனவே, அவற்றை நிறைவேற்றுமாறு வலியுறுத்தியே நாளை நுகேகொடை கூட்டம் நடக்கின்றது.

எனினும் இந்த நடவடிக்கை தொடர்பில் அரசாங்கம் அஞ்சியுள்ளது. அதனால்தான் விமர்சனங்கள் முன்வைக்கப்படுகின்றன. இதன்மூலம் எமக்கு சிறந்த பிரச்சாரம் கிடைக்கப்பெற்றுள்ளது. எதிர்பார்த்த அளவைவிடவும் கூடுதல் மக்கள் இதில் பங்கேற்பார்கள்.

இது அரசாங்கத்தை கவிழ்ப்பதற்கான நடவடிக்கை அல்ல. மாறாக வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றகோரும் பேரணியாகும். ஐக்கிய மக்கள் சக்தி ஆதரவாளர்கள் பங்கேற்பார்கள் என நம்புகின்றோம்.” எனவும் இந்திக்க அனுருத்த தெரிவித்தார்.

மரக்கறி விலைப்பட்டியல் (21.11.2025)

நுவரெலியா பொருளாதார மத்திய நிலையத்தால் இன்று (21) வெளியிடப்பட்டுள்ள மரக்கறி வகைகளின் (ஒரு கிலோ) விலை பட்டியல்…

அநுர பாஸ்: என்.பி.பி. எம்.பிக்கள் பெயில்!

ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க பாஸ்: தேசிய மக்கள் சக்தியின் 159 நாடாளுமன்ற உறுப்பினர்களும் பெயில் என்றுதான் கூற வேண்டும். ஜனாதிபதிமீதுதான் மக்களுக்கு நம்பிக்கை உள்ளது. ஏனையோர்மீது அல்ல என்று முன்னாள் அமைச்சர் ஹரின் பெர்ணான்டோ தெரிவித்தார்.

அத்துடன், நுகேகொடை கூட்டமென்பது நாமலை ஜனாதிபதியாக்குவதற்கான நடவடிக்கை அல்ல எனவும், ஜனநாயகத்துக்கானது எனவும் அவர் கூறினார்.

“ நுகேகொடை கூட்டத்தில் ஐக்கிய மக்கள் சக்தி பங்கேற்காவிட்டாலும் அக்கட்சியின் உறுப்பினர்கள் ஆதரவாளர்களை கூட்டத்தில் பங்கேற்க வைப்பார்கள்.” எனவும் ஹரின் பெர்ணான்டோ குறிப்பிட்டார்.

குளவிகளின் தாக்குதலில் இருந்து மகனைக் காத்த தந்தை மரணம்!

குளவிக் கொட்டுக்கு இலக்காகி குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

அனுராதபுரம், மிஹிந்தலை, இலுப்புகன்னிய பகுதியில் நேற்று இடம்பெற்ற இந்தச் சம்பவத்தில் அதே பகுதியைச் சேர்ந்த 51 வயதுடைய நபரே உயிரிழந்துள்ளார்.

இந்தச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

மேற்படி நபரின் 11 வயது மகன் வீட்டுக்கு அருகில் விளையாடிக் கொண்டிருந்துள்ளார்.

சிறுதி நேரத்தில் மகன் அலறும் சத்தம் கேட்டதால், தந்தை வீட்டுக்கு வெளியில் சென்று பார்த்துள்ளார்.

இதன்போது மகனைச் சுற்றிக் குளவிக் கூட்டம் இருந்துள்ள நிலையில், மகனைக் காப்பாற்றுவதற்காகத் தந்தை தனது சட்டையைக் கழற்றி மகனைச் சுற்றிக் கட்டியுள்ளார்.

ஆனால், தந்தை குளவிக் கொட்டுக்கு இலக்காகி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

அத்துடன் குளவிக் கொட்டுக்கு இலக்காகிய 11 வயதுடைய மகன் மேலதிக சிகிச்சைக்காக அனுராதபுரம் போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

வீட்டில் மகனும் தந்தையும் மட்டுமே வசித்து வந்துள்ளனர் எனவும், தாயார் வெளிநாட்டில் வேலை செய்து வருகின்றார் எனவும் பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.

சினிமா

பிரபல இந்திய பாடகி ஆஷா போஸ்லே காலமானார்!

0
  பிரபல இந்திய பின்னணி பாடகி ஆஷா போஸ்லே தமது 92ஆவது வயதில் இன்று(12) காலமானார். இந்திய திரையுலகில் 10,000-இற்கும் அதிக பாடல்களை பாடியுள்ள மூத்த பாடகி ஆஷா போஸ்லே நேற்று(11) மாரடைப்பு ஏற்பட்டதையடுத்து மும்பையிலுள்ள...

சின்னத்திரை நடிகை தற்#கொ#லை!

0
  இலங்கையை பூர்வீகமாகக்கொண்ட பிரபல சின்னத்திரை நடிகையான சுபாஷினி (வயது 36) தற்#கொ#லை செய்துகொண்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. "கயல்" சின்னத்திரை தொலைக்காட்சி தொடரில் நடித்து வருபவர் சுபாஷிணி (வயது36). இலங்கையை பூர்வீகமாகக்கொண்ட இவர் கடந்த...

“தனுஷின் நட்பை இழந்தது மிகப்பெரிய அவமானம்” – விக்னேஷ் சிவன் வருத்தம்

0
தனுஷ் உடனான நட்பை இழந்தது மிகப்பெரிய அவமானம் என்று விக்னேஷ் சிவன் பகிர்ந்துள்ளார். விக்னேஷ் சிவன் இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன் நடித்துள்ள ‘எல்.ஐ.கே’ திரைப்படம் ஏப்ரல் 10-ம் திகதி திரைக்கு வரவுள்ளது. நீண்ட பிரச்சினைகளுக்கு...

செய்தி

‘கடல் கடந்த இந்தியக் குடியுரிமை’ – இந்திய அரசுக்கு இதொகா நன்றி!

0
இலங்கையில் வாழும் இந்திய வம்சாவளி மக்கள் கடல் கடந்த இந்தியக் குடியுரிமையை பெற்றுக் கொள்வதற்கான நடைமுறையை இலகுபடுத்தியுள்ள இந்திய அரசாங்கத்துக்கு நன்றியை தெரிவித்துக் கொள்வதாக இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தவிசாளரும், முன்னாள் பாராளுமன்ற...

வரலாறு படைத்த தமிழக தேர்தல்: 84,29 சதவீத வாக்கு பதிவு!

0
2026 தமிழக சட்​டப்​பேர​வைத் தேர்​தலில், மாலை 6 மணி நிலவரப்படி 84.41% சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன. அதிகபட்சமாக கரூரில் 91.97% வாக்குகள் பதிவாகியுள்ளன. குறைந்தபட்சமாக கன்னியாகுமரியில் 75.48% வாக்குகள் பதிவாகியுள்ளன. 6 மணிக்குப் பின் டோக்கன்...

ஹார்முஸ் நீரிணையில் கண்ணிவெடி வைக்கும் படகுகளை அழிக்க ட்ரம்ப் உத்தரவு!

0
ஹார்முஸ் நீரிணையில் கண்ணிவெடிகளை வைக்கும் படகுகளை சுட்டு வீழ்த்துமாறு அமெரிக்க கடற்படைக்கு ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் உத்தரவிட்டுள்ளார். ஈரானுக்கு அருகிலுள்ள முக்கிய கடல் பகுதியில் சிறிய ரக படகுகள் இத்தகைய செயல்களில் ஈடுபட்டால், தயக்கமின்றி...