Home Blog Page 20

‘மத்திய கிழக்கு நாடுகளின் இஸ்லாமிய பேரவை’ ஈரான் ஜனாதிபதி அழைப்பு

“நாங்கள் பிற இஸ்லாமிய நாடுகளுடன் மோதலை விரும்பவில்லை. மத்திய கிழக்கின் இஸ்லாமியப் பேரவை ஒன்று அமைக்கப்பட வேண்டும். இந்தப் பிராந்திய நாடுகள் நமது எதிரிகள் அமைக்கும் கண்ணிகளில் சிக்கிக்கொள்ளக் கூடாது” என ஈரான் அதிபர் மசூத் பெசெஷ்கியன் தெரிவித்தார்.

நவ்ரூஸ் மற்றும் ரம்ஜான் பண்டிகைகளை முன்னிட்டு, ஈரான் அதிபர் மசூத் பெசெஷ்கியன் சனிக்கிழமையன்று வெளியிட்ட தனது செய்தியில், “இந்தப் பகுதியில் அமைதியின்மையை நாங்கள் விரும்பவில்லை என்பதை உலகுக்கு அறிவிக்கிறோம்.

எந்தவொரு நாடும் தன்னைத் தற்காத்துக் கொள்வதற்காகவே ஆயுதங்களையும் வெடிமருந்துகளையும் குவித்து வைக்க வேண்டிய கட்டாயத்துக்கு ஆளாகி, தங்கள் எல்லைகள் தாக்கப்படுமோ, இல்லையோ என்று எப்போதும் அச்சத்துடன் காத்திருக்கும் நிலையை நாங்கள் விரும்பவில்லை.

பிற நாடுகளின் உள்விவகாரங்களில் தலையிடுவது குறித்து நாங்கள் எந்த வகையிலும் சிந்திக்கவில்லை. இந்தப் பிராந்தியத்தின் பாதுகாப்பு மற்றும் ஸ்திரத்தன்மை சீர்குலைவதை நாங்கள் துளியும் விரும்பவில்லை.

இது நாம் அனைவரும் ஒன்றிணைந்து, கைகோத்துச் செயல்படுவதன் மூலம் நாமே தீர்த்துக்கொள்ளக் கூடிய ஒரு விஷயமாகும். இந்தப் பிராந்திய நாடுகளுக்கான செய்தி இது:

இந்தப் பகுதியில் நிலவும் உறுதியற்ற தன்மைக்கு ஈரானே காரணம் என்ற ஒரு கதையை உங்கள் சொந்த மக்களிடம் பரப்ப ஊடகங்களைப் பயன்படுத்துவதற்கு பதிலாக, இந்தப் பகுதியில் நிலவும் அமைதியின்மை, உறுதியற்ற தன்மை, இனப்படுகொலைச் செயல்கள், பயங்கரவாதம் மற்றும் நாசவேலைகளுக்கு இஸ்ரேலே பொறுப்பு என்பதை நீங்கள் உணர்ந்து புரிந்துகொள்ள வேண்டும்.

முதலில், நமது நாட்டின் உன்னத மக்களுக்கு, நமது உன்னத தலைவரின் வீரமரணத்துக்காகவும், இந்த தேசத்தின் அர்ப்பணிப்புள்ள சேவகர்களுக்காகவும் எனது இரங்கலைத் தெரிவிப்பது அவசியமாகக் கருதுகிறேன்.

நாங்கள் அண்டை முஸ்லிம் நாடுகளுடன் மோதலை நாடுவதில்லை. நாங்கள் இஸ்லாமிய நாடுகளுடன் போரைத் விரும்பவில்லை; அவர்கள் எங்கள் சகோதரர்கள். நமக்குள் உருவாகியுள்ள பிளவுகள், முஸ்லிம்களிடையே பிளவை ஏற்படுத்த முயலும் ஒரு துரோக எதிரியின் செயல்.

நாம் அனைத்து மனக்கசப்புகளையும், வேறுபாடுகளையும் ஒதுக்கி வைத்து பாடுபட வேண்டும். ஈரானைச் சூழ்ந்துள்ள எங்கள் அன்பான அண்டை நாடுகளே, நீங்கள் எங்கள் சகோதரர்கள். நமது உறவுகளில் ஏற்பட்டிருக்கக்கூடிய எந்தவொரு தவறான புரிதல்களுக்கும் அல்லது பாதிப்புகளுக்கும், இந்த வேறுபாடுகளை நீக்க இறைவன் உதவ வேண்டும் என்று நாங்கள் பிரார்த்திக்கிறோம்.

அன்பானவர்களே, உங்களுடன் அனைத்துப் பிரச்சினைகளையும் பேசித் தீர்க்க நாங்கள் தயாராக இருக்கிறோம். பிராந்திய அமைதி மற்றும் ஸ்திரத்தன்மையை உறுதி செய்வதற்காக, மத்திய கிழக்கு நாடுகளிடையே ஓர் இஸ்லாமியப் பாதுகாப்பு கட்டமைப்பு நிறுவப்பட வேண்டும். அது பிராந்தியத்தின் அமைதி, பாதுகாப்பு மற்றும் ஸ்திரத்தன்மைக்கு உத்தரவாதம் அளிக்கும்.

பிராந்தியத்தில் வெளிநாட்டு தலையீடு தேவையில்லை. நம் பாதுகாப்பு, பொருளாதாரம், கலாச்சாரம் மற்றும் அரசியல் உறவுகளை ஒருங்கிணைக்க, நாம் ஒன்றிணைந்து ‘மத்திய கிழக்கின் இஸ்லாமியப் பேரவை’ ஒன்றை உருவாக்கலாம்.

ஒருவருக்கொருவர் சண்டையிட நமக்கு உரிமை இல்லை. எந்தவொரு காரணத்தைக் கொண்டும், நமது எதிரிகள் நமக்காக அமைத்துள்ள கண்ணிகளில் நாம் சிக்கிக்கொள்ளக் கூடாது” என்று அவர் கூறினார்.

யாழ். பல்கலை விரிவுரையாளர் கொ*லை!

யாழ். பல்கலைக்கழகச் சித்த மருத்துவபீட விரிவுரையாளர் தயாளினி திலீபன், தனது மகளின் காதலனால் படுகொ*லை செய்யப்பட்டுள்ளார்.

கொ*லை செய்யப்பட்டு வீசப்பட்ட விரிவுரையாளரின் சடலம் தனங்களப்பு காற்றாலைப் பகுதியில் இருந்து இன்று (21) மீட்கப்பட்டுள்ளது.

சினிமா பாணியில் அரங்கேற்றியுள்ள இக்கொ*லைச் சம்பவம் தொடர்பில் விரிவுரையாளரின் 19 வயது மகளும், 21 வயது காதலன் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இச்சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது,

யாழ்ப்பாணம், பாண்டியன்தாழ்வுப் பகுதியில் உள்ள விரிவுரையாளரின் வீட்டிலிருந்து, அவரும் அவரது மகளும் கடந்த வியாழக்கிழமை கடத்தப்பட்டனர் என்று விரிவுரையாளரின் மகனால் பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டது.

மகளின் காதலனால் மேற்படி இருவரும் கடத்தப்பட்டனர் என்றும் அந்த முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டது.

சம்பவ இடத்துக்கு விரைந்த பொலிஸார் நடத்திய ஆய்வில், வீட்டின் ஓடுகள் கழற்றப்பட்டிருந்ததுடன், கயிறு மூலம் எவரோ தப்பிச் சென்றதற்கான தடயங்களும், அறுந்து கிடந்த தலைமுடிகளும் கண்டெடுக்கப்பட்டன.

இது திட்டமிடப்பட்ட ஒரு குற்றச்செயல் என்பதை உறுதிப்படுத்திய பொலிஸார் விசாரணைகளை முடுக்கிவிட்டனர்.

சந்தேகநபரைப் பிடிக்க நவீன தொழில்நுட்பத்தைப் பயன்படுத்திய பொலிஸார், பரந்தன் பகுதியில் உள்ள ஏ.ரி.எம். இயந்திரத்தில் சந்தேகநபர் பணம் எடுத்தமையை உறுதி செய்தனர்.

அதனைத் தொடர்ந்து, திருகோணமலைப் பகுதியில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்தில் கியூ.ஆர். குறியீட்டைப் பயன்படுத்தி வாகனத்துக்கு எரிபொருள் நிரப்பியமையும் கண்டறியப்பட்டது.

அங்கிருந்த சி.சி.ரி.வி. காட்சிகளின் உதவியுடன் விரட்டிச் சென்ற பொலிஸார், நேற்று வெள்ளிக்கிழமை திருகோணமலையில் வைத்து விரிவுரையாளரின் மகளையும் அவரது காதலனையும் அதிரடியாகக் கைது செய்தனர்.

யாழ்ப்பாணத்துக்கு அழைத்து வரப்பட்ட இருவரிடமும் நடத்தப்பட்ட தீவிர விசாரணையில், விரிவுரையாளர் தயாளினி கொ*லை செய்யப்பட்டமை உறுதியானது.

மகளின் திருமணத்துக்கு அவரது தாயார் கடும் எதிர்ப்புத் தெரிவித்தமையால் ஏற்பட்ட ஆத்திரத்தில், அவரை தாக்கிப் படு*கொ*லை செய்துள்ளமை அம்பலமானது.

( இருவரும் விரிவுரையாளருக்கு தெரியாமல் இரகசியாக பதிவு திருமணம் செய்துள்ளனர். எனவே, திருமண நிகழ்வை நடத்துவதற்கு அவர் (தாயார்) எதிர்ப்பை வெளியிட்டுள்ளார். விவாகரத்து பெறுமாறும் வலியுறுத்து வந்துள்ளார் எனக் கூறப்படுகின்றது.)

கொ*லையை மறைப்பதற்காக மகளும் அவரது காதலனும் இணைந்து கடத்தல் நாடகமாடியுள்ளனர். பின்னர் சடலத்தைத் தனங்களப்பு காற்றாலைப் பகுதிக்குக் கொண்டு சென்று வீசிவிட்டுத் தப்பியோடியமையை அவர்கள் ஒப்புக்கொண்டுள்ளனர்.

அவர்களின் வாக்குமூலத்தின் அடிப்படையில் இன்று சடலம் குறித்த பகுதியிலிருந்து மீட்கப்பட்டது.

கைவிரித்தது ஈரான்: கடுப்பில் அமெரிக்கா!

“சர்வதேச சந்தைகளுக்கு விற்பனை செய்வதற்காக கப்பல்களில் ஏற்றப்பட்டுள்ள கச்சா எண்ணெயோ அல்லது உபரி எண்ணெய் கையிருப்போ இல்லை’ என ஈரான் தெரிவித்துள்ளது.

கப்பல்களில் ஏற்றப்பட்டுள்ள ஈரான் கச்சா எண்ணெய் மீதான தடைகளை அமெரிக்கா தளர்த்தியுள்ள நிலையிலேயே ஈரான் தரப்பில் இருந்து மேற்படி அறிவிப்பு வெளியாகியுள்ளது.

இதனை உறுதிப்படுத்தும் வகையில் இந்தியாவில் உள்ள ஈரான் தூதரகம் அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது.

“தற்போதைய நிலையில், சர்வதேச சந்தைகளுக்கு விற்பனை செய்யக்கூடிய வகையில், கப்பலில் ஏற்றப்பட்ட நிலையில் உள்ள கச்சா எண்ணெய் அல்லது உபரி கையிருப்பு ஏதும் ஈரானிடம் இல்லை.

தடைகளை தளர்த்தும் அமெரிக்காவின் கருத்துக்கள், எண்ணெய் வாங்குவோருக்கு நம்பிக்கையூட்டுவதையும், சந்தையின் மனநிலையைச் சீர்படுத்துவதையும் நோக்கமாகக் கொண்டிருப்பதாகத் தெரிகிறது” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

மேற்கு ஆசியப் பிராந்தியத்தில் நிலவும் மோதல் நான்காவது வாரத்தில் அடியெடுத்து வைக்கும் நிலையில், கச்சா எண்ணெய் விலை கடுமையாக அதிகரித்துள்ளது.

ஈரானின் கச்சா எண்ணெய் மற்றும் பெட்ரோலியப் பொருட்கள் மீதான தடைகளை, எதிர்வரும் ஏப்ரல் 19 வரை தற்காலிகமாகத் தளர்த்துவதாக அமெரிக்கா வெள்ளிக்கிழமை அறிவித்தது.

இந்தத் தளர்வின் கீழ், ஈரான் கச்சா எண்ணெய் மற்றும் சுத்திகரிக்கப்பட்ட பெட்ரோலியப் பொருட்களை அமெரிக்காவிற்குள் விற்பனை செய்யவும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

நாட்டின் நலனுக்காக ஐ.தே.க., ஐ.ம.ச. ஒன்றிணையும்!

வலதுசாரி அல்லது இடதுசாரி என கருதாமல் பொது மக்கள் முகாமை வலுப்படுத்த வேண்டிய தேவை காணப்படுகின்றன. இதில் காமினி திசாநாயக்க எதிர்பார்த்தது போல் நாட்டின் வயல்வெளிகளை செழுமைப்படுத்தி உணவு பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும். காணியற்ற மக்களுக்கு காணிகளை வழங்கி வலுப்படுத்தும் பொது மக்கள் முகாமை கட்டியெழுப்ப வேண்டும். அதற்கான காலமே இதுவாகும். அத்தகைய ஒன்றிணைவிற்கு ஐக்கிய மக்கள் சக்தியும் ஐக்கிய தேசிய கட்சி இணைந்து அடித்தளம் இடும் என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.

கொழும்பில் நேற்று (20) மாலை இடம்பெற்ற இந்நாட்டின் அரசியல் ஆளுமைகளில் ஒருவராக திகழ்ந்த மறைந்த முன்னாள் அமைச்சர் காமினி திசாநாயக்க அவர்களினது 84 ஆவது ஜனன தின நிகழ்வில் கலந்து கொண்டு சிறப்புரையாற்றும் போதே எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இவ்வாறு தெரிவித்தார்.

சமூகம் இப்போது கட்சி தாவும் அரசியலையும், டொலர் கட்டுகளுக்கு நிலைமாறும் அரசியலையும் ஏற்றுக்கொள்வதில்லை. அத்தகைய கூட்டணிக்கும் ஒன்றிணைவுகளுக்கும் மக்கள் தயாராக இல்லை. மக்களின் ஆணையால் பெற்ற வெற்றியில் இறுதியில் வெற்றி பெற வேண்டியது பொது மக்களே ஆகும்.

மக்கள் நம்பிக்கையை, பொது மக்களின் உரிமைகளை காசுக்கு விற்ற காலம் முடிந்து விட்டது. நடுத்தர பாதை, பொது மக்கள் பாதை, மூன்றாவது பாதையை தோற்று விக்க சீரழிந்த முதலாளித்துவத்தையும், தீவிர தாராளவாத கோட்பாடுகளையும் புறக்கணித்து, தீவிர கம்யூனிசவாதம் மற்றும் சமூகவாதத்தையும் புறக்கணித்து, மனிதநேய முதலாளித்துவம் மற்றும் சமூக நீதியை நோக்கி, ஐக்கியத்தையும், தேசிய ஒருமைப்பாட்டையும் பேணி, சம்புத்த சாசனத்திற்கு முதன்மை ஸ்தானம் வழங்கி அதனைப் பாதுகாத்து, ஏனைய மதங்கள் மற்றும் இனங்களை வலுப்படுத்தி, ஒன்றிணைந்து, சகோதரத்துவத்துடனும், நல்லிணக்கத்துடனும் செயல்படும் நாட்டை கட்டியெழுப்ப ஒன்றிணையுமாறு அழைப்பு விடுக்கிறேன் என்று எதிர்க்கட்சித் தலைவர் மேலும் தெரிவித்தார்.

என்னுடைய அரசியலுக்கு ஆரம்பத்தை வழங்கியவர்கள் பற்றி பலரும் பல விளக்கங்கள் கூறினாலும், குடும்ப அரசியலை புறக்கணித்தவராக ரணசிங்க பிரேமதாசவின் மறைவிற்குப் பின்னர் நான் அரசியலில் நுழைந்தேன். என்னுடைய அரசியல் மற்றும் சமூக சேவை பயணத்திற்கு காமினி திசாநாயக்கதான் ஆரம்பத்தைப் பெற்றுத் தந்தார். ஹம்பந்தோட்டை மாவட்ட அமைப்பாளர் பதவியையையும் அவர் தான் பெற்றுத் தந்தார் என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.

வார்த்தையின் உண்மையான அர்த்தத்தில் பொது மக்களின் தலைவராக திகழ்ந்த காமினி திசாநாயக்க அவர்கள், 30 ஆண்டுகளில் நிறைவு செய்ய வேண்டிய மகாவலி திட்டத்தை ஆறு வருடங்களில் முடிக்கும் சவாலை ஏற்று அதனை வெற்றிகரமாக நிறைவேற்றினார். ஸ்வர்ணபூமி ஒப்பு திட்டத்தை உருவாக்கியதும் அவர்தான் என்று தெரிவித்தார்.

இடதுசாரியும் வலதுசாரியும் இரண்டுமே தோல்வி கண்டு விட்டன என்பது தான் தற்போதைய கள யதார்த்தமாகும். இந்த இடதுசாரி மற்றும் வலதுசாரி கோட்பாடுகள் வெளிநாட்டிலிருந்து நமது நாட்டிற்கு தறிவிக்கப்பட்ட அன்னியக் கோட்பாடுகள் ஆகும். மக்களாட்சிய கோட்பாடே இன்று நமது நாட்டிற்கு தேவையான ஒன்றாக அமைந்து காணப்படுகின்றன. பொது மக்களை பாதுகாத்து, பொது மக்களின் நலனுக்காக செயல்படும் கோட்பாடே தற்சமயம் அவசியாக காணப்படுகின்றது என்று எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

ஜப்பான் பாதுகாப்பு அமைச்சருடன், இலங்கை பாதுகாப்பு பிரதி அமைச்சர் சந்திப்பு!

ஜப்பானுக்கு பயணம் மேற்கொண்டுள்ள இலங்கை பாதுகாப்பு பிரதி அமைச்சர் Aruna Jayasekara , அந்நாட்டு பாதுகாப்பு அமைச்சருடன் Shinjirō Koizumi பேச்சு நடத்தியுள்ளார்.

டோக்கியோவிலுள்ள ஜப்பான் பாதுகாப்பு அமைச்சில் மேற்படி சந்திப்பு இடம்பெற்றுள்ளது.

இந்த சந்திப்பின் முக்கிய அம்சமாக இருதரப்பு பாதுகாப்பு ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்துதல் அமைந்தது.

இதன்போது குறிப்பாக கடல்சார் பாதுகாப்பு, அனர்த்த முகாமைத்துவ திறன் மேம்பாடு மற்றும் இந்து -பசுபிக் பிராந்தியத்தின் நிலைத்தன்மை ஆகியவை கவனத்திற்கு எடுத்துக்கொள்ளப்பட்டன.

சந்திப்பின் போது, இந்து-பசுபிக் பிராந்தியத்தில் “Free and Open Indo-Pacific” என்ற கண்ணோட்டத்தின் கீழ் நிலைத்தன்மை மற்றும் பாதுகாப்பை உறுதிப்படுத்த ஜப்பான் மற்றும் இலங்கை இடையிலான ஒத்துழைப்பை மேம்படுத்துவது முக்கியமென ஜப்பான் பாதுகாப்பு அமைச்சர் வலியுறுத்தினார்.

இதற்கு பதிலளித்த பாதுகாப்பு பிரதி அமைச்சர் ஜயசேகர, இந்து சமுத்திரத்தில் இலங்கையின் முக்கிய புவியியல் அமைப்பையும், பிராந்திய கடல்சார் பாதுகாப்பை பாதுகாப்பதில் அதன் முக்கிய பங்கையும் வலியுறுத்தினார்.

சர்வதேச சட்டங்கள், உடன்படிக்கைகள் மற்றும் ராஜதந்திர நடைமுறைகளை மதித்து, பிராந்திய அமைதி மற்றும் நிலைத்தன்மைக்கான துறைகளில் ஜப்பானுடன் பாதுகாப்பு உறவுகளை மேலும் வலுப்படுத்த இலங்கை உறுதியாக இருப்பதை அவர் மீண்டும் உறுதிப்படுத்தினார்.

மேலும் இரு தரப்பின்னரும் மத்திய கிழக்கு நிலைமைகள் உள்ளிட்ட பிராந்திய மற்றும் உலகளாவிய விடயங்கள் குறித்து கருத்துகளை பரிமாறிக் கொண்டதுடன், இருதரப்பு பாதுகாப்பு உறவுகளில் ஏற்பட்டுள்ள முன்னேற்றத்தையும் வரவேற்றன.

பாதுகாப்பு பிரதி அமைச்சர், இலங்கையின் அணிசேரா நடுநிலை மற்றும் பக்கச் சார்பற்ற வெளிநாட்டு கொள்கையையும், சர்வதேச நெறிமுறைகள் மற்றும் சட்ட உடன்படிக்கைகளுக்கு உள்ள உறுதிப்பாட்டையும் வலியுறுத்தினார்.

ஜப்பான் கடல்சார் சுயபாதுகாப்புப் படையின்(JMSDF) Destroyer JS Onami கப்பலின் அண்மைய கொழும்பு துறைமுக வருகையும், இலங்கை கடற்படையுடன் நடைபெற்ற கடற்படை பயிற்சி தொடர்பிலும் இதன்போது கலந்துரையாடப்பட்டது.

மத்திய கிழக்கு நிலைவரம் குறித்து கட்சி தலைவர்களுடன் ஜனாதிபதி கலந்துரையாடல்!

ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்கவுக்கும், கட்சி தலைவர்களுக்கும் இடையிலான சந்திப்பொன்று நேற்று (20) முற்பகல் நாடாளுமன்றத்தில் நடைபெற்றது.

மத்திய கிழக்கின் போர்ச் சூழ்நிலை காரணமாக உலக அளவில் எழுந்துள்ள வலுசக்தி நெருக்கடி மற்றும் அது இலங்கையின் வலுசக்தித் துறை மற்றும் பொருளாதாரத்தில் ஏற்படுத்தும் தாக்கம் குறித்து இதன்போது விரிவாகக் கலந்துரையாடப்பட்டது.

இந்நெருக்கடியை எதிர்கொள்வதற்காக தற்போது அரசாங்கம் மேற்கொண்டுள்ள நடவடிக்கைகள் குரித்து கட்சித் தலைவர்களுக்கு ஜனாதிபதி விளக்கமளித்தார்.

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, ரவுப் ஹக்கீம், மனோ கணேசன் உள்ளிட்ட பல கட்சித் தலைவர்கள் இக்கூட்டத்தில் பங்கேற்றிருந்தனர்.

யாழில் கோர விபத்து: தாயும், மகளும் பலி!

யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற வாகன விபத்தில் இரு பெண்கள் உயிரிழந்துள்ளனர்.

கனகம்புளியடி சந்திக்கு அருகாமையில் இன்று (21) சனிக்கிழமை காலை இடம்பெற்ற குறித்த விபத்தில் முச்சக்கர வண்டியில் பயணித்த தாயும் மகளும் சம்பவ இடத்திலையே உயிரிழந்துள்ளனர்.

புத்தூரிலிருந்து மீசாலை நோக்கி பயணித்த டிப்பர் வாகனமும், மீசாலையிலிருந்து மட்டுவில் நோக்கி பயணித்த முச்சக்கர வண்டியும் நேருக்கு நேர் மோதியே இவ்விபத்து இடம்பெற்றுள்ளது.

முச்சக்கரவண்டியில் நால்வர் பயணித்துள்ளனர். அவர்களுள் தாயும் மகளும் சம்பவ இடத்தில் உயிரிழந்துள்ளனர். சாரதியும், பிறிதொரு பெண்ணும் காயமடைந்துள்ளனர்.

டிப்பர் சாரதி கைது செய்யப்பட்டுள்ளார்.

மரக்கறி விலைப்பட்டியல் (21.03.2026)

நுவரெலியா பொருளாதார மத்திய நிலையத்தால் இன்று (21) வெளியிடப்பட்டுள்ள மரக்கறி வகைகளின் (ஒரு கிலோ) விலை பட்டியல்…

ஈரானுக்கு எதிரான ராணுவ நடவடிக்கையை மட்டுப்படுத்த ட்ரம்ப் திட்டம்?

ஈரானுக்கு எதிரான ராணுவ நடவடிக்கையை மட்டுப்படுத்துவது குறித்து பரிசீலித்து வருவதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

எனினும், இது போர் நிறுத்தம் சார்ந்து இருக்காது என சூசகமாக அவர் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக தனது ட்ரூத் சோஷியல் சமூக வலைதளத்தில் அவர் கூறியது:

“அமெரிக்க தேசம் தனது நோக்கத்தை எட்டுவதில் கிட்டத்தட்ட நெருங்கிவிட்டது. அதனால் மத்திய கிழக்கு பிராந்தியத்தில் எங்களது ராணுவ நடவடிக்கையை மட்டுப்படுத்துவது குறித்து பரிசீலித்து வருகிறோம்.

எங்கள் தரப்பு போர் நிறுத்தத்தை நாடவில்லை. ஏனெனில், இதில் அமெரிக்கா வெற்றி பெற்றுள்ளதாக கருதுகிறேன். எதிர்தரப்பை முற்றிலுமாக அழிக்கும்போது போர் நிறுத்தம் அவசியமற்றது.

ஹார்முஸ் நீரிணை கப்பல் போக்குவரத்து சார்ந்து பயன்படுத்தும் நாடுகள்தான் அதை கண்காணிக்க வேண்டும். அமெரிக்கா அந்தப் பணியை செய்யாது.

எங்களிடம் அது தொடர்பாக கேட்டுக்கொண்டால் அந்த முயற்சியில் நாங்கள் உதவுவோம். ஈரான் அச்சுறுத்தல் முழுவதுமாக ஒழிக்கப்பட்டால் அதற்கு கூட தேவை இருக்காது.

ஈரான் உடன் பேச்சுவார்த்தை நடத்தை அமெரிக்கா தயார். ஆனால், அவர்கள் பக்கம் அதை முன்னெடுக்க யாரும் இல்லை என்பதை நாம் கவனிக்க வேண்டும்” என்று ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் படைகள் இணைந்து நடத்திய தாக்குதலில் ஈரானின் முன்னாள் உச்ச தலைவர் அலி கமேனி கொல்லப்பட்ட பிறகு அந்த பொறுப்பை ஏற்ற மொஜ்தபா கமேனி பொதுவெளியில் தோன்றவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

கார்க் தீவை அமெரிக்கா கைப்பற்றுவது குறித்து செய்தியாளர்கள் முன்வைத்த கேள்விக்கு பதில் அளித்த ட்ரம்ப், ‘அந்த திட்டம் எங்களுக்கு இருக்கலாம். இல்லாமலும் இருக்கலாம். ஆனால், அந்த தீவில் இருந்த ராணுவ நிலைகளை முற்றிலுமாக அளித்துள்ளோம்’ என்றார்.

அவரது இந்த பேச்சு மூலம் ஈரான் போர் முடிவுக்கு வருகிறதா என்ற கேள்வியை எழுப்பி உள்ளது.

தாக்குதலுக்கு தமது தளங்களை பயன்படுத்த பிரிட்டன் அனுமதி: ஈரான் கடும் எதிர்ப்பு!

ஈரான் மீதான அமெரிக்காவின் தாக்குதல்களுக்கு பிரிட்டன் விமான தளங்களைப் பயன்படுத்துவதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

ஆரம்பத்தில் இதற்கு மறுப்பு தெரிவித்துள்ள பிரிட்டன் தற்போது நிலைப்பாட்டை மாற்றிக்கொண்டுள்ளது.

தற்காப்பு நடவடிக்கைகளுக்கு மட்டுமே ஆதரவு அளித்துவந்த பிரிட்டன், தற்போது ஹார்முஸ் நீரிணையை பாதுகாக்கும் அமெரிக்கத் தாக்குதல்களுக்கு அனுமதி வழங்கியுள்ளது.

பிரிட்டன் ஆரம்பத்தில் அனுமதி வழங்காதது தொடர்பில் ட்ரம்ப் கடும் அதிருப்தி வெளியிட்டிருந்தார்.

எனினும், பிராந்தியப் பாதுகாப்பையும் நட்பு நாடுகளின் நலன்களையும் கருத்தில் கொண்டே இந்த முடிவு எடுக்கப்பட்டதாக பிரிட்டன் விளக்கம் அளித்துள்ளது.

இது தொடர்பில் ஈரான் கடும் அதிருப்தி வெளியிட்டுள்ளது. பிரிட்டன் பிரதமர் தவறான முடிவை எடுத்துவிட்டார் எனவும் சாடியுள்ளது.

சினிமா

இந்​தி​யில் மீண்​டும் நயன்தாரா

0
கார்த்​தி, நாகார்​ஜுனா நடித்த ‘தோழா’, விஜய் நடித்த ‘வாரிசு’ படங்​களை இயக்​கிய​வர் தெலுங்கு இயக்​குநர் வம்சி பைடிபள்​ளி. இவர் அடுத்து இயக்​கும் இந்தி படத்​தில் சல்​மான் கான் நடிக்கிறார். இந்​தப் படத்தை ஸ்ரீ வெங்​கடேஸ்​வரா...

ரூ.50 கோடி வசூலை கடந்த ‘யூத்’

0
உலகளவில் ரூ.50 கோடி வசூலை கடந்து பெரும் சாதனையை படைத்திருக்கிறது ‘யூத்’ திரைப்படம். கென் கருணாஸ் இயக்கி நாயகனாக நடித்துள்ள படம் ‘யூத்’. மார்ச் 19-ம் திகதி வெளியான இப்படம் மக்களிடையே பெரும் வரவேற்பை...

ஜூலையில் ரிலீஸ் ஆகிறது ‘ஜனநாயகன்’?

0
தவெக தலை​வரும், நடிகரு​மான விஜய்​யின் ‘ஜன​நாயகன்’ படத்தில் மத நல்​லிணக்​கத்​துக்கு ஊறு விளைவிக்​கும் காட்​சிகள் இருப்​ப​தாகக் ​கூறி, படத்தை மறு ஆய்​வுக்கு அனுப்பி மத்​திய தணிக்கை வாரி​யம் உத்​தர​விட்​டது. இதை எதிர்த்து படக்​குழு...

செய்தி

ஈரான் வான்வெளியில் அமெரிக்க ஆதிக்கம்!

0
அமெரிக்க போர் விமானம் ஈரானால் சுட்டு வீழ்த்தப்பட்டபோது காணாமல் போயிருந்த விமானி, பரபரப்பான துப்பாக்கிச் சண்டைக்குப் பிறகு பாதுகாப்பாக மீட்கப்பட்டதாக டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்தார். ஈரான் வான் பரப்​பில் பறந்த அமெரிக்க விமானப் படை​யின்...

‘’தேசிய QR கொடுப்பனவு ஊக்குவிப்புத் திட்டம்” நாளை ஆரம்பம்!

0
- நாளை முதல் நடைமுறைக்கு வரும் வகையில், 5,000 ரூபாய் வரையிலான அனைத்து LankaQR கொடுக்கல் வாங்கல்களுக்காகவும் வர்த்தகர்களிடமிருந்து அறவிடப்படும் சேவைக்கட்டணம் முழுமையாக நீக்கம். இலங்கையின் டிஜிட்டல் பொருளாதாரத்தில் ஒரு புதிய மைல்கல்லைக் குறிக்கும்...

முதல் வெற்றியை பதிவு செய்யுமா சி.எஸ்.கே?

0
மாலை 3.30 இற்கு ஆரம்பமாகும் 10 ஆவது லீக் ஆட்டத்தில் ஐதராபாத் , லக்னோ ஆகிய அணிகள் மோத உள்ளன. இன்றிரவு இரவு 7.30 மணிக்கு நடைபெறும் நடைபெறும் 11வது லீக் ஆட்டத்தில் சென்னை...