Home Blog Page 21

அமெரிக்காவின் போர் விமானங்களுக்கு அனுமதி மறுத்த இலங்கை: நடந்தது என்ன?

 

இலங்கை, அம்பாந்தோட்டை மத்தல விமான நிலையத்தில் தமது போர் விமானங்களை தரையிறக்குவதற்கு அமெரிக்கா அனுமதி கோரி இருந்தாலும் அதற்கு இடமளிக்கப்படவில்லை என்று ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்தார்.

அதற்குரிய நியாயப்பூர்வமான காரணங்களையும் ஜனாதிபதி நாடாளுமன்றத்தில் இன்று (20) எடுத்துரைத்தார்.

ஈரான் கப்பல் விவகாரம் தொடர்பில் எதிரணியால் பொறுப்பற்ற விதத்தில் முன்வைக்கப்பட்டுவரும் குற்றச்சாட்டுகளையும் ஜனாதிபதி நிராகரித்தார்.

ஜனாதிபதி தமதுரையில் கூறிய முக்கிய சில விடயங்கள் வருமாறு,
நடுநிலைக் கொள்கை

“மத்திய கிழக்கில் ஏற்பட்டுள்ள போர்ச்சூழல் தொடர்பில் இலங்கை மத்தியஸ்தக் கொள்கையையே பின்பற்றி வருகின்றது. இந்த கொள்கையில் இருந்து நாம் விலகப்போவதில்லை.

எனினும், நாம் ஒரு தரப்புக்கு சார்பாக செயல்படுகின்றோம் எனவும், முடிவுகள் முறையாக எடுக்கப்படுவதில்லை எனவும் சிலர் குற்றஞ்சாட்டுகின்றனர். இது அடிப்படையற்ற குற்றச்சாட்டாகும்.

ஈரான் கப்பல்

2026 மார்ச் 9 மற்றும் 13 ஆம் திகதிகளில் இலங்கைக்கு நல்லெண்ண அடிப்படையிலான விஜயத்தை மேற்கொள்வதற்கு ஈரானின் கப்பல்களுக்கு அனுமதி வழங்குமாறு 2026 பெப்ரவரி 26 ஆம் திகதி அனுமதி கோரிக்கை விடுக்கப்பட்டிருந்தது. இந்த விடயம் தொடர்பில் அரசாங்கம் பரிசீலித்துவந்தது.

அன்று மாலையே தமது கடற்படைக்குரிய இரண்டு போர் விமானங்களை இலங்கை மத்தள விமான நிலையத்தில் தரையிறக்குவதற்கு அமெரிக்கா அனுமதி கோரியது.

இவ்வாறு இரு தரப்புகளும் எம்மிடம் கோரிக்கை விடுத்திருந்தன. அக்காலப்பகுதியில் போர்;ச்சூழல் ஏற்படும் அபாயமும் இருந்தது. நாம் மத்தியஸ்தக் கொள்கையை பின்பற்றுவதால் அனுமதி வழங்கவில்லை.

சிறந்த முடிவு

ஈரான் கப்பலுக்கு ஏன் அனுமதி வழங்கவில்லை என சிலர் கேட்கின்றனர். அவ்வாறு வழங்கி இருந்தால் அமெரிக்க போர் விமானங்களுக்கும் அனுமதி வழங்கி இருக்க வேண்டும்.

அவ்வாறு செய்திருந்தால் இலங்கைக்கு தொலைவில் நடக்கும் போர் மத்தல துறைமுகம் மற்றும் கொழும்பு துறைமுகம்வரை நெருங்கி இருக்கக்கூடும். நாம் அதற்கு இடமளிக்கவில்லை. நெருக்கடியான சூழ்நிலையிலும் நாம் மத்தியஸ்தக் கொள்கையை பாதுகாத்தோம்.

ஈரான் கப்பலில் இருந்த மாலுமியொருவருக்கு காயம் ஏற்பட்டுள்ளது. அவருக்கு சிகிச்சையளிப்பதற்கு உதவி கோரப்பட்டிருந்தது.

அவ்வாறான சந்தர்ப்பங்களில் உதவ வேண்டும் என்பது சர்வதேச சட்டத்திலுள்ள ஏற்பாடு. அதற்கமைய இடமளிக்கப்பட்டது.

இலங்கையின் பொருளாதார மண்டலத்துக்கு அப்பால் உள்ள பகுதியில் ஈரான் கப்பலொன்று தாக்குதலுக்கு இலக்கானது.அப்போதும் சர்வதேச சட்டம் மற்றும் மனிதாபிமான அடிப்படையில் நாம் உதவினோம்.

பாதுகாப்பு ஒப்பந்தம்

அமெரிக்காவுடனான பாதுகாப்பு ஒப்பந்தம் பற்றியும் பலகோணங்களில் கருத்துகள் முன்வைக்கப்பட்டன. போரில் ஈடுபடுவது தொடர்பில் எதுவும் இல்லை. இராணுவ பயிற்சி, ஒத்துழைப்பு உள்ளிட்ட விடயங்களே எம்மிடையில் உள்ளன. எதிரணி கூறுவதுபோல ஒப்பந்தம் இருந்தால் அமெரிக்க விமானங்கள் தரைஇறங்க அனுமதி வழங்கி இருக்க வேண்டும் அல்லவா? எனவே, சர்வதேச விவகாரங்களின்போது பொறுப்புடன் எதிரணி கருத்துகளை முன்வைக்க வேண்டும்.

 

சிதைக்கப்படுகிறது ஈரான்: போர் விரைவில் முடிவுக்கு வரும்!

“ஈரானால் இனி யுரேனியத்தை செறிவூட்டவோ அல்லது பாலிஸ்டிக் ஏவுகணைகளை தயாரிக்கவோ முடியாது. போரில் நாம் வெற்றி பெறுகிறோம், ஈரான் சிதைக்கப்படுகிறது” என இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு கூறினார்.

இதுகுறித்து ஊடகங்களிடம் பேசிய நெதன்யாகு, “முதலில், நான் உயிருடன் இருக்கிறேன் என்று சொல்ல விரும்புகிறேன்.

பாலிஸ்டிக் ஏவுகணைகளை தயாரிப்பதற்கான பாகங்களையும், அணு ஆயுதங்களை தயாரிக்க முயற்சிக்கும் அவர்களின் தொழிற்சாலைகளையும்தான் நாம் இப்போது அழித்துக் கொண்டிருக்கிறோம்.

ஈரானின் ஏவுகணை மற்றும் ட்ரோன் ஆயுதக் கிடங்கு மிகப் பெரிய அளவில் சிதைக்கப்பட்டு அழிக்கப்படும்.

இஸ்ரேல் தான் அமெரிக்காவை இந்த போருக்குள் இழுத்துவிட்டது என்பது உண்மையில்லை. ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்புக்கு என்ன செய்ய வேண்டும் என்று யாராவது சொல்ல முடியும் என உண்மையிலேயே நீங்கள் நினைக்கிறார்களா?.

அமெரிக்காவுக்கு எது நல்லது என்று அவர் நினைக்கிறாரோ, அதன் அடிப்படையிலேயே எப்போதும் அவர் தனது முடிவுகளை எடுக்கிறார்.

ட்ரம்ப்புடன் நெருங்கிய ஒருங்கிணைப்பிலும், அமெரிக்கா மற்றும் இஸ்ரேலுக்கு இடையேயான நெருங்கிய ஒருங்கிணைப்பிலும், எங்கள் ராணுவங்கள், உளவுத்துறை ஆகியவற்றின் ஒருங்கிணைப்பின் மூலம், நாங்கள் மின்னல் வேகத்தில் இலக்குகளை அடைந்து வருகிறோம்.

இந்தப் போரில் அமெரிக்க – இஸ்ரேல் கூட்டாண்மை மிகவும் முக்கியமானது. நாங்கள் முழு மத்திய கிழக்கையும் பாதுகாக்கிறோம். மேலும், முழு உலகத்தையும் பாதுகாக்கிறோம் என்று நான் துணிந்து கூறுவேன். ஈரான் விஷயத்தில் நானும் ட்ரம்ப்பும் ஒரே நிலைப்பாட்டில் இருக்கிறோம் உலகம் ட்ரம்ப்புக்கு மிகவும் நன்றிக்கடன் பட்டுள்ளது.

ட்ரம்ப்பின் கோரிக்கையைத் தொடர்ந்து, ஈரானின் முக்கிய எரிவாயு வயல்கள் மீதான தாக்குதல்களை இஸ்ரேல் நிறுத்தி வைக்கும். முதல் உண்மை, தெற்கு பார்ஸ் எரிவாயு வளாகத்துக்கு எதிராக இஸ்ரேல் தனியாகவே செயல்பட்டது. இரண்டாவது உண்மை, எதிர்காலத் தாக்குதல்களைத் தள்ளிப்போடுமாறு ட்ரம்ப் எங்களிடம் கேட்டுக்கொண்டார், நாங்கள் தள்ளிப்போட்டுக் கொண்டிருக்கிறோம்.

ஈரானின் ராணுவ உள்கட்டமைப்பு கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. போரில் நாம் வெற்றி பெறுகிறோம், ஈரான் சிதைக்கப்படுகிறது. தற்போது ஈரானை யார் நடத்துகிறார்கள் என்று எனக்கு உறுதியாகத் தெரியவில்லை. ஈரான் உயர் அதிகாரிகளிடையே மிகுந்த பதற்றம் நிலவுகிறது. போர் நாம் எதிர்பார்ப்பதை விட விரைவாக முடிவுக்கு வரும். ” என்று அவர் கூறினார்.

 

உலகின் முதன்மை போர் விமானத்தை தாக்கியதா ஈரான்?

ஈரான்மீதான தாக்குதலில் பங்கேற்றிருந்த அமெரிக்காவின் F-35 போர் விமானம் அவசர நிலையைச் சந்தித்து, மத்திய கிழக்கிலுள்ள தளமொன்றில் அவசரமாக தரையிறக்கப்பட்டுள்ளது.

இந்த அதிநவீன விமானம் ஈரானிய படைகளால் தாக்கப்பட்டிருக்கலாம் என தகவல் வெளியாகியுள்ளது.

இது தொடர்பில் ஈரான் தரப்பில் அறிவிப்பு வெளியானாலும், அமெரிக்க ராணுவம் இதன் காரணத்தை இன்னும் உறுதிப்படுத்தவில்லை.

ஈரானுக்கு எதிரான போரில் அமெரிக்கா தனது பல ட்ரோன்களையும், எரிபொருள் நிரப்பும் விமானங்களையும் இழந்துள்ளன.

இந்நிலையில் மேற்படி தாக்குதலானது அமெரிக்காவுக்கு பலத்த அடியாக பார்க்கப்படுகின்றது.

உலகில் முதன்மை போர் விமானமாக F-35 விமானம் கருதப்படுகின்றது. எதிரிகளால் தாக்க முடியாதளவுக்கு மின்னல் வேகத்தில் பயனிக்க கூடியது.

இந்த விமானத்தை தாக்கிய முதல் நாடு தாங்கள்தான் என ஈரான் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மத்திய கிழக்கில் போர் பதற்றத்தை தணிக்க பிரதமர் மோடி முயற்சி!

மத்திய கிழக்கில் ஏற்பட்டுள்ள போர் பதற்றத்தை தணிப்பதற்குரிய முயற்சியில் இந்தியா களமிறங்கியுள்ளது.

இதற்கமைய அமைதி முயற்சி குறித்து பிரான்ஸ், மலேசியா, ஓமான் மற்றும் ஜோர்தான் ஆகிய நாடுகளின் தலைவர்களுடன் பிரதமர் மோடி தொலைபேசி ஊடாக பேச்சு நடத்தியுள்ளார்.

முதலில் பிரான்ஸ் ஜனாதிபதியுடன் ஆலோசனை நடத்தப்பட்டது.
“ மத்திய கிழக்கு நிலவரம் குறித்து பிரான்ஸ் ஜனாதிபதியுடன் கலந்து பேசினேன். அங்கு பதற்றத்தை தணிக்க வேண்டும்.

போரை நிறுத்த அமைதிப் பேச்சு , இராஜதந்திர ரீதியிலான நடவடிக்கைகளை தொடங்க வேண்டும் என்று வலியுறுத்தினேன்.

அங்கு அமைதியை ஏற்படுத்த நானும், பிரான்ஸ் ஜனாதிபதியும் ஒன்றிணைந்து செயல்படுவோம்’ என்று பிரதமர் மோடி தனது எக்ஸ் தள பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

மலேசிய பிரதமர் அன்வர் இப்ராகிம் உடன் பிரதமர் மோடி நேற்று தொலைபேசியில் ஆலோசனை நடத்தினார்.

ஓமான் நாட்டின் சுல்தான் ஹைதம் பின் தாரிக் உடனும் மோடி தொலைபேசியில் பேச்சுவார்த்தை நடத்தினார்.

இது குறித்து அவர் வெளியிட்ட வலைதளப் பதிவில், ‘ஓமன் மீது நடத்தப்பட்ட தாக்குதல்களை இந்தியா வன்மையாகக் கண்டிக்கிறது.

ஓமானில் வசிக்கும் இந்தியர்களின் பாதுகாப்பை உறுதி செய்ததற்காக சகோதரர் ஹைதம் பின் தாரிக்குக்கு நன்றி தெரிவித்தேன்.

மத்திய கிழக்கில் அமைதியை ஏற்படுத்துவது குறித்து இருவரும் ஆலோசனை நடத்தினோம். ஹார்முஸ் ஜலசந்தியில் தடையற்ற கப்பல் போக்குவரத்தை உறுதி செய்ய இந்தியாவுடன் ஓமனும் உறுதுணையாக செயல்படும்’ என்று தெரிவித்துள்ளார்.

ஜோர்தான் மன்னர் இரண்டாம் அப்துல்லாவுடன் மோடி நேற்று தொலைபேசியில் பேசினார். மத்திய கிழக்கில் பதற்றத்தை தணிப்பது தொடர்பாக அவர்கள் ஆலோசனை நடத்தினர்.

பிரதமர் மோடியின் சமரச முயற்சி அமெரிக்கா, இஸ்ரேல், ஈரான் நாடுகளுடன் இந்தியா நல்லுறவை பேணி வருகிறது.

இதன்படி இரு தரப்பிலும் பிரதமர் மோடியால் மட்டுமே இராஜதந்திர பேச்சு நடத்த முடியும் என்று சர்வதேச அரசியல் நோக்கர்கள் தெரிவித்துள்ளனர்.

இஸ்ரேலின் மிகப்பெரிய எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் மீது ஈரான் தாக்குதல்

மத்திய கிழக்கில் போர் 21ஆவது நாளை எட்டியுள்ள நிலையில், இஸ்ரேலின் முக்கியத் துறைமுக நகரான ஹைஃபாவில் உள்ள எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்கள் மீது ஈரான் ஏவுகணைத் தாக்குதல் நடத்தியுள்ளது.

நேற்று இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் ஈரானின் தெற்கு பார்ஸ் எரிவாயு வயல் சேதமடைந்ததற்குப் பழிவாங்கும் நடவடிக்கையாக இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டதாக கூறப்படுகிறது.

உலகின் மிகப்பெரிய எரிவாயு வயலான தெற்கு பார்ஸ் ஈரானின் உள்நாட்டுத் தேவைகளுக்கு மிக முக்கியமானதாக பார்க்கப்படுகிறது.

இதன் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தியதைத் தொடர்ந்து, இஸ்ரேலின் எரிசக்தித் தேவையில் முக்கியப் பங்கு வகிக்கும் ஹைஃபா எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தை ஈரான் தாக்கியுள்ளது.

வியாழக்கிழமை (மார்ச் 19) நடத்தப்பட்ட இந்தத் தாக்குதலில், பாலிஸ்டிக் ஏவுகணைகள் பயன்படுத்தப்பட்டதாகத் தெரிகிறது. தாக்குதலைத் தொடர்ந்து அந்தப் பகுதியில் கரும்புகை சூழ்ந்ததோடு, மின் இணைப்புகளும் தற்காலிகமாகத் துண்டிக்கப்பட்டன.

தாக்குதல் குறித்து கருத்து தெரிவித்துள்ள இஸ்ரேல் எரிசக்தித் துறை அமைச்சர் ஏலி கோஹன், சுத்திகரிப்பு நிலையத்திற்குப் பெரும் பாதிப்பு எதுவும் ஏற்படவில்லை என்றும், ஏவுகணைகள் இடைமறிக்கப்பட்டதால் அதன் சிதறல்களே விழுந்ததாகவும் தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி அநுர நாடாளுமன்றில் இன்று உரை!

ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க நாடாளுமன்றத்தில் இன்று (20) உரையாற்றவுள்ளார்.

மத்திய கிழக்கில் ஏற்பட்டுள்ள போர்ச்சுழலால் இலங்கைக்கு ஏற்படக்கூடிய தாக்கங்கள் மற்றும் அதனை எதிர்கொள்வதற்குரிய திட்டங்கள் தொடர்பில் தமதுரையில் ஜனாதிபதி தெளிவுபடுத்தவுள்ளார்.

இதுவரையிலும் அரசாங்கத்தால் எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் மற்றும் எதிர்காலத்தில் முன்னெடுக்கப்படவுள்ள திட்டங்கள் தொடர்பிலும் சபையில் ஜனாதிபதி விவரிக்கவுள்ளார்.

நாடாளுமன்றம் இன்று முற்பகல் 9.30 மணிக்கு சபாநாயகர் தலைமையில் கூடுகின்றது.

உலக முடிவில் செல்பி எடுக்கும் போது தவறி விழுந்த மாணவி பாதுகாப்பாக மீட்பு!

நுவரெலியா ஹோட்டன் சமவெளி தேசிய பூங்காவில் அமைந்துள்ள புகழ்பெற்ற உலக முடிவு (World’s End) பகுதியில் நேற்று பரபரப்பான சம்பவம் ஒன்று இடம்பெற்றது.

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த 23 வயதுடைய மாணவி ஒருவர் நண்பர்களுடன் சுற்றுலா சென்றிருந்தார். அப்போது உலக முடிவு எனப்படும் உயரமான பாறை விளிம்பில் நின்று ‘செல்பி’ எடுக்க முயன்றபோது, திடீரென கால் தடுமாறி சுமார் 40 மீற்றருக்கும் அதிகமான ஆழமுள்ள பள்ளத்தில் சரிந்து விழுந்தார்.

இச்சம்பவத்தை கண்டு அதிர்ச்சியடைந்த அவரது நண்பர்கள் மற்றும் அங்கு இருந்த சுற்றுலாப் பயணிகள் உடனடியாக பாதுகாப்பு அதிகாரிகளுக்கு தகவல் அளித்தனர்.

தகவல் கிடைத்ததும் இராணுவத்தினரும் வனவிலங்கு துறையினரும் விரைவாக சம்பவ இடத்துக்கு விரைந்தனர். சுமார் 4,000 அடி ஆழம் கொண்ட செங்குத்தான மலைச்சரிவில் கடும் பனிமூட்டத்திற்கிடையில் மீட்பு நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டன.

மாணவிகளை அந்த இடத்துக்கு கொண்டு சென்ற வாகன ஓட்டுனர் முதலில் துணிச்சலுடன் களமிறங்கி, கயிறுகளின் உதவியுடன் மரங்களுக்கிடையில் சிக்கியிருந்த மாணவியை உயிருடன் மீட்டார். பின்னர் சுமார் ஒரு மணி நேரத்திற்குப் பின் கீழிறங்கிய இராணுவத்தினர் அவரை மேலே தூக்கி கொண்டு வந்தனர்.

காயங்களுடன் உயிர் தப்பிய அந்த மாணவி தற்போது நுவரெலியா பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். அவர் ஆபத்தான நிலையிலிருந்து மீண்டுள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

“ஒரு நிமிட கவனக்குறைவு, ஒரு வாழ்நாளின் முடிவாகிவிடலாம்” என அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். உலக முடிவு பகுதியில் பலத்த காற்றும் வழுக்கும் தன்மையும் காணப்படுவதால், பாறை விளிம்புகளில் நின்று புகைப்படம் எடுப்பதைத் தவிர்க்குமாறு மீண்டும் வலியுறுத்தப்பட்டுள்ளது.

— கஜரூபன் திவ்யா, நுவரெலியா

பொலிஸ் விசாரணைக்கு எதிர்ப்பு! மாணவர்கள் பெரும் போராட்டம்!!

கடந்த சுதந்திர தினத்தன்று யாழ்ப்பாணம் பல்கலைக்கழக வளாகத்தில் தேசியக் கொடி இறக்கப்பட்டு, கறுப்புக் கொடி ஏற்றப்பட்ட சம்பவம் தொடர்பில் மாணவர்களிடம் விசாரணைகளை முன்னெடுப்பதற்கு எதிர்ப்புத் தெரிவித்து, இன்று யாழ். பல்கலைக்கழக முன்றலில் மாபெரும் எதிர்ப்புப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

கறுப்புக் கொடி ஏற்றப்பட்ட விவகாரம் தொடர்பாக யாழ். மாவட்ட குற்றத்தடுப்புப் பிரிவினர் தீவிர விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். இதன் ஒரு கட்டமாக, கடந்த 10ஆம் திகதி பொலிஸார் வாகனங்களுடன் பல்கலைக்கழக வளாகத்தினுள் நுழைந்ததோடு, துணைவேந்தர் மற்றும் பதிவாளர் ஆகியோரிடம் சுமார் மூன்று மணித்தியாலங்கள் விசாரணைகளை மேற்கொண்டு வாக்குமூலங்களைப் பதிவு செய்திருந்தனர்.

கல்வி நிறுவனத்தின் சுயாதிப்பைப் பாதிக்கும் வகையில் பொலிஸார் வாகனங்களுடன் வளாகத்தினுள் நுழைந்தமைக்கும், உயர் அதிகாரிகளிடம் நீண்டநேரம் விசாரணை நடத்தியமைக்கும் மாணவர்கள் ஏற்கனவே தமது கடும் கண்டனங்களை வெளியிட்டிருந்தனர்.

இந்நிலையில், இச்சம்பவம் குறித்து மாணவர் ஒன்றியப் பிரதிநிதிகள் மூவரை கடந்த 17ஆம் திகதி விசாரணைக்குச் சமுகமளிக்குமாறு பதிவாளர் ஊடாகபி பொலிஸார் அழைப்பாணை விடுத்திருந்தனர். எனினும், மாணவர்கள் அந்த விசாரணைக்குச் செல்லவில்லை. அவர்கள் இன்றே விசாரணைக்குச் சென்றனர்.

பொலிஸாரின் இத்தகைய நடவடிக்கைகளுக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் முகமாகவே இன்று மாணவர்கள் விரிவுரைகளைப் பகிஷ்கரித்துப் போராட்டத்தில் ஈடுபட்டனர். இவ்வாறான அச்சுறுத்தல் நடவடிக்கைகள் தொடருமாயின், போராட்டங்களைத் தீவிரப்படுத்தப் போவதாகவும் மாணவர் சமூகம் எச்சரித்துள்ளது.

“பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் பணிப்புரைக்கு அமைய, பல்கலைக்கழக மட்டத்தில் ஏற்கனவே உரிய விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. நாம் எமது தரப்பு நியாயங்களை விசாரணைக்குழுவிடம் தெளிவாக முன்வைத்துள்ளோம். இவ்வாறானதொரு சூழலில், பொலிஸார் மீண்டும் விசாரணைகளை முன்னெடுத்து எங்களை அழைப்பது மாணவர்களை அச்சுறுத்தும் ஒரு செயற்பாடாகும்.” – என்று இன்று போராட்டத்தை முன்னெடுத்த மாணவர்கள் தெரிவித்தனர்.

யாழ்.பல்கலைக்கழக மாணவர்களிடம் 5 மணிநேர விசாரணை!

யாழ்ப்பாணம் பல்கலைக்கழக வளாகத்தில் சுதந்திர தினத்தன்று
தேசியக் கொடி இறக்கப்பட்டு, கறுப்புக் கொடி ஏற்றப்பட்ட சம்பவம் தொடர்பாக பல்கலைக்கழக மாணவர்கள் மூவரிடம் யாழ். மாவட்ட குற்றத்தடுப்புப் பிரிவினர் சுமார் 5 மணித்தியாலங்கள் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

இன்று வியாழக்கிழமை காலை 9.30 மணியளவில் வாக்குமூலம் அளிப்பதற்காக யாழ். தலைமைப் பொலிஸ் நிலையத்துக்குச் சென்றிருந்த மாணவர்களிடமே இந்த நீண்டநேர விசாரணை நடத்தப்பட்டுள்ளது.

இச்சம்பவம் குறித்து ஏற்கனவே கடந்த 10 ஆம் திகதி பல்கலைக்கழக துணைவேந்தர் மற்றும் பதிவாளர் ஆகியோரிடம் பொலிஸார் வாக்குமூலங்களைப் பதிவு செய்திருந்த நிலையில், இன்று மாணவர் தரப்பு வாக்குமூலங்கள் பெறப்பட்டுள்ளன.

இவ்விசாரணைகளின் அடிப்படையில், அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து சட்டமா அதிபரின் ஆலோசனையைப் பெற்றுக்கொள்ளப்போவதாகப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சுதந்திர தினத்தன்று கறுப்புக் கொடி ஏற்றப்பட்டமை குறித்து விசாரணை நடத்துமாறு பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு விடுத்த பணிப்புரைக்கு அமைய, பல்கலைக்கழக மட்டத்தில் ஏற்கனவே ஒரு விசாரணைக் குழு அமைக்கப்பட்டது.

பேராசிரியர், மாணவர் ஒழுக்காற்று அதிகாரி மற்றும் பாதுகாப்பு அதிகாரி ஆகியோரைக் கொண்ட அக்குழுவின் அறிக்கை ஏற்கனவே சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

அந்த விசாரணையில் 2 மாணவிகள் உள்ளிட்ட 30 பேர் இச்சம்பவத்துடன் தொடர்புடையவர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இதன்போது, “சிறுபான்மைத் தமிழ் மக்களின் அபிலாஷைகளுக்கு உரிய மதிப்பு வழங்கப்படாதவரை, இலங்கையின் சுதந்திர தினம் தமிழர்களுக்கு உகந்த நாளல்ல என்பதை வெளிப்படுத்தவே இச்செயலில் ஈடுபட்டோம்” – என்று மாணவர்கள் தரப்பில் தமது நிலைப்பாட்டைத் தெளிவுபடுத்தியுள்ளனர்.

இதேவேளை, பொலிஸாரின் இந்தத் தலையீடு மற்றும் மாணவர்களை விசாரணைக்கு அழைத்தமைக்கு எதிர்ப்புத் தெரிவித்து, யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் இன்று விரிவுரைகளைப் புறக்கணித்து பல்கலைக்கழக முன்றலில் மாபெரும் எதிர்ப்புப் போராட்டத்தை முன்னெடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

எயார்பஸ் ஊழல் விவகாரத்தில் அதிரடித் திருப்பம்!

எயர் பஸ் விமானக் கொள்வனவில் இலஞ்சமாகப் பெறப்பட்ட 60 மில்லியன் ரூபா, அப்போதைய ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவுக்கு வழங்கப்பட்டதாக, சிறிலங்கன் எயர்லைன்ஸ் நிறுவனத்தின் முன்னாள் நிறைவேற்று அதிகாரி கபில சந்திரசேன தெரிவித்துள்ளார்.

இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழுவினால் கைது செய்யப்பட்டுள்ள அவர், ஆணைக்குழுவிடம் அளித்த வாக்குமூலத்திலேயே இதனைத் தெரிவித்துள்ளதாக, கொழும்பு நீதிவான் நீதிமன்றத்திற்கு இன்று அறிவிக்கப்பட்டுள்ளது.

நீதிமன்றத்தில், இன்று நடந்த வழக்கு விசாரணையில், இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழு சமர்ப்பித்த அறிக்கையில், சந்தேக நபரான கபில சந்திரசேனவின் வாக்குமூலத்தின்படி, அவர் இலஞ்சமாகப் பெற்ற 60 மில்லியன் ரூபா, மகிந்த ராஜபக்சவுக்கு மூன்று தவணைகளில் செலுத்தப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

மேலும் 20 மில்லியன் ரூபா, முன்னாள் சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சர் பிரியங்கர ஜயரத்னவுக்கு வழங்கப்பட்டதாகவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கபில சந்திரசேனவின் மனைவியின் பெயரில் புருணையில் ஒரு போலி நிறுவனம் நிறுவப்பட்டு, அந்த நிறுவனத்தின் பெயரில் சிங்கப்பூரில் ஒரு வங்கிக் கணக்கு திறக்கப்பட்டிருந்ததும் விசாரணையில் தெரியவந்துள்ளது.

இந்த ஏற்பாட்டின் மூலம், ஐரோப்பிய விமான நிறுவனத்திடமிருந்து 1,454,645.54 யூரோ இலஞ்சமாகப் பெறப்பட்டதாகவும் கூறப்பட்டுள்ளது.

அந்த நிதி அவுஸ்ரேலியாவில் உள்ள கொமன்வெல்த் வங்கியில் இருக்கும் கபில சந்திரசேனவின் கணக்கிற்கு மாற்றப்பட்டதும், இலஞ்சப் பணத்தின் பகுதிகள் சிறிலங்கன் எயர்லைன்ஸ் நிறுவனத்தின் ஒரு பணிப்பாளர் மற்றும் உயர் பதவியில் உள்ள பல அரசாங்க அதிகாரிகளுக்கு விநியோகிக்கப்பட்டதும் தெரியவந்துள்ளது.

சந்தேக நபரான கபில சந்திரசேனவை கொழும்பு பிரதம நீதிவான் அசங்க எஸ். போதரகம, ஏப்ரல் 2 ஆம் நாள் வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டுள்ளார்.

சினிமா

இந்​தி​யில் மீண்​டும் நயன்தாரா

0
கார்த்​தி, நாகார்​ஜுனா நடித்த ‘தோழா’, விஜய் நடித்த ‘வாரிசு’ படங்​களை இயக்​கிய​வர் தெலுங்கு இயக்​குநர் வம்சி பைடிபள்​ளி. இவர் அடுத்து இயக்​கும் இந்தி படத்​தில் சல்​மான் கான் நடிக்கிறார். இந்​தப் படத்தை ஸ்ரீ வெங்​கடேஸ்​வரா...

ரூ.50 கோடி வசூலை கடந்த ‘யூத்’

0
உலகளவில் ரூ.50 கோடி வசூலை கடந்து பெரும் சாதனையை படைத்திருக்கிறது ‘யூத்’ திரைப்படம். கென் கருணாஸ் இயக்கி நாயகனாக நடித்துள்ள படம் ‘யூத்’. மார்ச் 19-ம் திகதி வெளியான இப்படம் மக்களிடையே பெரும் வரவேற்பை...

ஜூலையில் ரிலீஸ் ஆகிறது ‘ஜனநாயகன்’?

0
தவெக தலை​வரும், நடிகரு​மான விஜய்​யின் ‘ஜன​நாயகன்’ படத்தில் மத நல்​லிணக்​கத்​துக்கு ஊறு விளைவிக்​கும் காட்​சிகள் இருப்​ப​தாகக் ​கூறி, படத்தை மறு ஆய்​வுக்கு அனுப்பி மத்​திய தணிக்கை வாரி​யம் உத்​தர​விட்​டது. இதை எதிர்த்து படக்​குழு...

செய்தி

ஈரான் வான்வெளியில் அமெரிக்க ஆதிக்கம்!

0
அமெரிக்க போர் விமானம் ஈரானால் சுட்டு வீழ்த்தப்பட்டபோது காணாமல் போயிருந்த விமானி, பரபரப்பான துப்பாக்கிச் சண்டைக்குப் பிறகு பாதுகாப்பாக மீட்கப்பட்டதாக டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்தார். ஈரான் வான் பரப்​பில் பறந்த அமெரிக்க விமானப் படை​யின்...

‘’தேசிய QR கொடுப்பனவு ஊக்குவிப்புத் திட்டம்” நாளை ஆரம்பம்!

0
- நாளை முதல் நடைமுறைக்கு வரும் வகையில், 5,000 ரூபாய் வரையிலான அனைத்து LankaQR கொடுக்கல் வாங்கல்களுக்காகவும் வர்த்தகர்களிடமிருந்து அறவிடப்படும் சேவைக்கட்டணம் முழுமையாக நீக்கம். இலங்கையின் டிஜிட்டல் பொருளாதாரத்தில் ஒரு புதிய மைல்கல்லைக் குறிக்கும்...

முதல் வெற்றியை பதிவு செய்யுமா சி.எஸ்.கே?

0
மாலை 3.30 இற்கு ஆரம்பமாகும் 10 ஆவது லீக் ஆட்டத்தில் ஐதராபாத் , லக்னோ ஆகிய அணிகள் மோத உள்ளன. இன்றிரவு இரவு 7.30 மணிக்கு நடைபெறும் நடைபெறும் 11வது லீக் ஆட்டத்தில் சென்னை...