Home Blog Page 22

பயணிகள் இடைநடுவில் இறக்கம்: பேருந்து சேவையில் ஈடுபட தடை!

பயணிகளை இடைநடுவில் இறக்கிவிட்டு, தனியார் நிறுவனப் பணியாளர்களை ஏற்றிச்சென்ற தனியார் பேருந்துக்கு 3 நாட்கள் சேவையிலீடுபடத் தடை விதிக்கப்பட்டுள்ளதுடன், குறித்த பேருந்தின் நடத்துனருக்கு 5 நாட்கள் சேவைத் தடையும் விதிக்கப்பட்டுள்ளதாக வடக்கு மாகாண வீதிப் பயணிகள் போக்குவரத்து அதிகார சபையின் தலைவர், பொறியியலாளர் சூ.விமலேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

பயணி ஒருவரால் முன்வைக்கப்பட்ட முறைப்பாட்டின் அடிப்படையில் இந்த அதிரடி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

கடந்த 14.03.2026 அன்று தனியார் பேருந்தில் பயணித்த பயணிகளை, பேருந்து பழுதடைந்துவிட்டதாகக் கூறி நடத்துனர் இடைநடுவில் இறக்கிவிட்டுள்ளார். எனினும், சிறிது நேரத்தின் பின்னர் அதே பேருந்து வேறொரு தனியார் நிறுவனத்தின் (ஆடைத் தொழிற்சாலை) பணியாளர்களை ஏற்றிச் சென்றமை அவதானிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பில் பாதிக்கப்பட்ட பயணியால் வீதிப் பயணிகள் போக்குவரத்து அதிகார சபைக்கு ஆதாரங்களுடன் முறைப்பாடளிக்கப்பட்டிருந்தது.

இந்த முறைப்பாடு தொடர்பில் வடக்கு மாகாண வீதிப் பயணிகள் போக்குவரத்து அதிகார சபையால் தனியார் பேருந்தின் வழியனுமதிப்பத்திர உரிமையாளர் நேரில் அழைக்கப்பட்டு விசாரணை முன்னெடுக்கப்பட்டது. விசாரணையின் போது, பேருந்து திருத்த வேலைக்குச் சென்றதும், அதன் பின்னர் ஆடைத்தொழிற்சாலை பயணிகளை ஏற்றச் சென்றதும் உறுதிப்படுத்தப்பட்டது.

எனினும், பயணிகளை அசௌகரியத்துக்குள்ளாக்கி, அவர்களைப் பொறுப்பற்ற விதத்தில் இடைநடுவில் இறக்கிவிட்ட தவறான செயற்பாட்டுக்காக, தனியார் பேருந்து 3 நாட்களுக்குச் சேவையில் ஈடுபடுவதற்கு இடைநிறுத்தப்பட்டுள்ளது. அத்துடன், இடைநடுவில் இறக்கி விடப்பட்டமை தொடர்பில் கேள்வி எழுப்பிய பயணிகளுக்கு உரிய பதிலளிக்காது முரண்பட்டமை உள்ளிட்ட காரணங்களுக்காக நடத்துனர் 5 நாட்களுக்குச் சேவையிலிருந்து நிறுத்தப்பட்டுள்ளார். மேலும், இனிவரும் காலங்களில் இவ்வாறான தவறுகளில் அவர் ஈடுபடமாட்டார் என்பதற்கான உறுதியுரையும் அதிகார சபையால் பெறப்பட்டுள்ளது.

பாதுகாப்பானதும், தரமானதுமான போக்குவரத்துச் சேவையை உறுதிப்படுத்துவதற்காகவே வீதிப் பயணிகள் போக்குவரத்து அதிகார சபை நிறுவப்பட்டுள்ளது. எனவே, பொதுப் போக்குவரத்தின் போது இவ்வாறான அசௌகரியங்கள், விதிமீறல்கள் அல்லது முறைகேடுகள் இடம்பெற்றால், பொதுமக்கள் தயங்காது ஆதாரங்களுடன் (ஒளிப்படம் அல்லது காணொலி) 071 9090900 என்ற வட்ஸ்அப் முறைப்பாட்டு இலக்கத்துக்கு அனுப்பி வைக்குமாறு அதிகார சபையின் தலைவர் பொதுமக்களைக் கேட்டுக்கொண்டுள்ளார்.

ஜனாதிபதி அநுர, அமெரிக்காவின் விசேட பிரதிநிதிக்கிடையில் சந்திப்ப

இலங்கைக்கு பயணம் மேற்கொண்டுள்ள தெற்கு மற்றும் மத்திய ஆசியாவிற்கான அமெரிக்க விசேட பிரதிநிதியும், இந்தியாவிற்கான அமெரிக்கத் தூதுவருமான Sergio Gor மற்றும் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவிற்கும் இடையிலான சந்திப்பு இன்று முற்பகல் (19) ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்றது.

அமெரிக்காவிற்கும் இலங்கைக்கும் இடையிலான இருதரப்பு உறவுகளை மேலும் வலுப்படுத்துவது குறித்து இச்சந்திப்பில் கலந்துரையாடப்பட்டது.

மேலும், மத்திய கிழக்கின் போர்ச் சூழல் குறித்த இலங்கையின் நிலைப்பாடு மற்றும் போர்ச் சூழல் காரணமாக இலங்கை எதிர்கொள்ளும் சவால்கள் குறித்தும் ஜனாதிபதி இதன்போது தூதுக்குழுவினருக்கு விளக்கமளித்தார்.

ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்க, நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் செயலாளர் கலாநிதி ஹர்ஷன சூரியப்பெரும, ஜனாதிபதியின் சிரேஷ்ட பொருளாதார ஆலோசகர் துமிந்த ஹுலங்கமுவ, ஜனாதிபதியின் சிரேஷ்ட மேலதிக செயலாளர் ரோஷன் கமகே ஆகியோருடன் Sergio Gor வுடன் வருகை தந்துள்ள தூதுக்குழுவினர் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.

இலங்கையர்களின் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்படும்: கத்தார் அமீர் உறுதி!

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் தொடரும் அமைதியின்மை மற்றும் அதன் பாதிப்புகள் குறித்து, ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க மற்றும் கத்தார் நாட்டின் அமீர் ஷேக் தமீம் பின் ஹமத் அல் தானி (Sheikh Tamim bin Hamad Al Thani) ஆகியோருக்கு இடையில் நேற்று இரவு (18) விசேட தொலைபேசி உரையாடல் இடம்பெற்றது.

இதன்போது ஜனாதிபதி, கத்தார் நாட்டின் தற்போதைய நிலைமை குறித்து கேட்டறிந்ததுடன், குறிப்பாக அந்நாட்டில் வசிக்கும் 150,000 இற்கும் அதிகமான இலங்கையர்களின் நலன் தொடர்பிலும் கவனம் செலுத்தினார்.

தற்போதைய பிராந்திய நிலைமைகளைக் கருத்தில் கொண்டு, கத்தார் நாட்டுக்கு இலங்கையின் ஆதரவு கிடைக்கும் என்றும் ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.

தற்போதைய நிலைமையை விளக்கிய கத்தார் அமீர், இலங்கையர்கள் உட்பட அந்நாட்டில் வசிக்கும் அனைத்து வெளிநாட்டினரின் பாதுகாப்பையும் நலனையும் உறுதி செய்வதாக ஜனாதிபதிக்கு உறுதியளித்தார்.

ஹோர்முஸ் சமுத்திர சந்தி போன்ற முக்கிய கடல்வழிப் பாதைகளுக்கு ஏற்பட்டுள்ள அபாயங்கள் குறித்து இரு தலைவர்களும் கவனம் செலுத்தியதுடன், அதன் மூலம் உலகளாவிய விநியோகச் சங்கிலிகள் மற்றும் வலுசக்தி சந்தைகளில் ஏற்படக்கூடிய தடைகள் குறித்தும் கலந்துரையாடினர்.

அதிகரித்து வரும் வலுசக்தி செலவுகளால் இலங்கை போன்ற அபிவிருத்தி அடைந்து வரும் நாடுகள் மீது ஏற்படும் பொருளாதாரத் தாக்கத்தைக் குறைப்பதற்கு, சர்வதேச உறவுகளை வலுப்படுத்த வேண்டியதன் அவசியத்தை ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க இதன்போது வலியுறுத்தினார்.

உலகளாவிய வலுசக்தித் துறையில் கத்தார் நாடு எப்போதும் நம்பகமான பங்காளியாக செயற்படும் என்றும், சவால்கள் இருந்தபோதிலும் தொடர்ச்சியான வலுசக்தி விநியோகத்தைப் பேணுவதில் உறுதியாக உள்ளது என்றும் கத்தார் அமீர் மேலும் தெரிவித்தார்.

பிராந்திய ஸ்திரத்தன்மைக்காக, பதற்றமான சூழ்நிலையை விரைவாகத் தணிக்க வேண்டும் என்றும், போர் நடவடிக்கைகளுக்குப் பதிலாக பிராந்தியப் பேச்சுவார்த்தைகள் மூலம் இராஜதந்திரத் தீர்வுகள் எட்டப்பட வேண்டும் என்றும் இரு தலைவர்களும் மேலும் வலியுறுத்தினர்.

ஈரான் தாக்குதலை நிறுத்த வேண்டும்: சவுதி கடும் எச்சரிக்கை!

கத்தார் மற்றும் ஐக்கிய அரபு அமீரகத்தின் எரிசக்தி நிலையங்கள் இலக்கு வைக்கப்பட்டதைத் தொடர்ந்து, ஈரானுக்கு, சவுதி அரேபியா கடும் எச்சரிக்கை விடுத்துள்ளது.

ஈரானின் இத்தகைய ஆக்கிரமிப்பு நடவடிக்கைகளைத் தாங்கள் சகித்துக்கொள்வதற்கு ஓர் எல்லை உண்டு என்று சவுதி அரேபியா வெளிவிவகார அமைச்சர் சுட்டிக்காட்டினார்.

அண்டை நாடுகளின் மீது தாக்குதல் நடத்துவதை ஈரான் உடனடியாக நிறுத்த வேண்டும் எனவும், தங்கள் பாதுகாப்பை உறுதிசெய்யத் தேவையான அனைத்து ராணுவ பலம் தங்களுக்கு இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.

ஈரானின் மிகப்பெரிய எரிசக்தி நிலையம்மீது இஸ்ரேல் தாக்குதலை நடத்திய நிலையிலேயே அதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் மத்திய கிழக்கிலுள்ள முக்கிய ஸ்தலங்களில் ஈரான் தாக்குதல் நடத்திவருகின்றது.

ஜப்பான் பிரதமர் அமெரிக்கா விஜயம்!

 

ஹார்முஸ் நீரிணையை மீண்டும் திறக்க உதவுமாறு அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் விடுத்த கோரிக்கையை ஜப்பான் பிரதமர் நிராகரித்துள்ளதால் இரு நாடுகளுக்கும் இடையே இராஜதந்திர பதற்றம் ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் ஜப்பான் பிரதமர் Sanae Takaichi இன்று (19) அமெரிக்காவுக்கு பயணம் மேற்கொள்கின்றார்.

இவ்விஜயத்தின்போது அவர் அமெரிக்க ஜனாதிபதியை சந்தித்து பேச்சு நடத்தவுள்ளார். இதன்போது ஹார்முஸ் விவகாரம் பற்றியும் கருத்தாடல் இடம்பெறும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

வர்த்தக ஒப்பந்தங்கள் மற்றும் ஆழ்கடல் கனிம வள மேம்பாடு போன்ற திட்டங்கள் மூலம் அமெரிக்காவுடனான உறவைச் சீர்செய்ய ஜப்பான் முயற்சிக்கின்றது.

ஈரானிலுள்ள உலகின் மிகப்பெரிய எரிவாயு வயல்மீது தாக்குதல்!

 

மத்திய கிழக்கு போர் இன்று 20 ஆவது நாளாக தொடரும் நிலையில், இரு தரப்புகளுமே தீவிர தாக்குதல்களை தொடுத்துவருகின்றன.

இந்நிலையில் ஈரானின் எரிசக்தி உற்பத்தி மையமாகக் கருதப்படும் தெற்கு புஷேர் மாகாணத்தின் அசலூயே பகுதியில் அமைந்துள்ள தெற்கு பார்ஸ் எரிவாயு வயல்மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளன.

தாக்குதலைத் தொடர்ந்து அப்பகுதியில் பெரும் தீ விபத்து ஏற்பட்டது. தீயணைப்பு வீரர்கள் நிலைமையைக் கட்டுக்குள் கொண்டுவரப் போராடி வருகின்றனர்.

ஈரானின் முக்கிய எண்ணெய் மற்றும் எரிவாயு உற்பத்தி வசதிகள் தாக்கப்படுவது இதுவே முதல் முறையாகும்.

இதற்கு முன்னர், கார்க் தீவில் உள்ள எண்ணெய் முனையம் குறிவைக்கப்பட்டது. ஆனால் அங்கு ராணுவ கட்டமைப்புகள் மட்டுமே தாக்கப்பட்ட நிலையில் தற்போதைய தாக்குதல் எரிசக்தி கட்டமைப்புகள் மீது நிகழ்ந்துள்ளது.

ஈரான் மற்றும் கத்தார் ஆகிய நாடுகள் பகிர்ந்து கொள்ளும் தெற்கு பார்ஸ் எரிவாயு வயல், உலகின் மிகப்பெரிய எரிவாயு இருப்பாகும். இது சுமார் 9,700 சதுர கி.மீ பரப்பளவைக் கொண்டுள்ளது.

இது ஈரானின் பொருளாதாரத்திற்கு மிகவும் இன்றியமையாதது. 2025 ஆம் ஆண்டில், இது ஒரு நாளைக்குச் சுமார் 730 மில்லியன் கன மீட்டர் எரிவாயுவை உற்பத்தி செய்து, நாட்டின் எரிசக்தித் தேவைகளின் பெரும்பகுதியைப் பூர்த்தி செய்தது.

இந்த எரிவாயு வயல் ஈரானின் உள்நாட்டுத் தேவையைப் பூர்த்தி செய்வது மட்டுமல்லாமல், துருக்கி மற்றும் ஈராக் போன்ற நாடுகளுக்கும் குழாய்கள் மூலம் விநியோகம் செய்கிறது.

எனவே, இந்த வயல் மீதான தாக்குதல் ஈரானின் எரிசக்தி விநியோகம் மற்றும் வருவாயை நேரடியாக பாதிக்கக்கூடும்.
மேற்படி தாக்குதலுக்கு ஈரான் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

“சினிமா ஓர் அற்​புத​மான தொழில்” – விஜய் சேதுபதி

ஜி.​​வி.பிர​காஷ் குமார் ஹீரோ​வாக நடித்​துள்ள திரைப்​படம், ‘ஹேப்பி ராஜ்’. பியாண்ட் பிக்​சர்ஸ் சார்​பில் ஜெய்​வர்தா தயாரிக்​கும் இப்​படத்தை ஹெய்​காந்த் சுரேஷ் இணை தயாரிப்பு செய்​துள்​ளார். இதில் அப்​பாஸ், கவுரி பிரி​யா, ஜார்ஜ் மரி​யம், ப்ரார்த்​த​னா, அதிர்ச்சி அருண், மதுரை முத்​து, சோஃபா பாய் ரசூல் உள்​ளிட்ட பலர் நடித்​துள்​ளனர்.

மதன் கிறிஸ்​டோபர் ஒளிப்​ப​திவு செய்​துள்ள இப்​படத்​துக்கு ஜஸ்​டின் பிர​பாகரன் இசையமைத்​துள்​ளார். மரியா இளஞ்செழியன் இயக்கியுள்ளார். இதன் டிரெய்​லர் வெளியீட்டு விழா​வில் படக்​குழு​வினருடன் விஜய் சேதுப​தி, கவின் ஆகியோர் கலந்​து​கொண்​டனர்.

விஜய் சேதுபதி பேசும்​போது, “சினிமா அற்​புத​மான தொழில். பியாண்ட் பிக்​சர்ஸ் போன்ற இளம் தயாரிப்​பாளர்​கள் இத்​துறைக்கு வந்​ததை வரவேற்​கிறேன். யார் என்ன சொன்​னாலும் பயப்பட வேண்​டாம். இது அட்​வைஸ் அல்ல, என் அனுபவத்​தில் இருந்து சொல்​கிறேன்.

ஓர் இயக்​குநர் எப்​படி படித்து வளர்​கிறாரோ, ஒரு நடிகர் எப்​படி கற்​றுக்​கொள்​கிறாரோ, அதே​போல் தயாரிப்​பாள​ரும் வியா​பாரம் மற்​றும் ஸ்கிரிப்ட் ஆகிய​வற்றை கற்​றுக்​கொண்​டால் நன்​றாக இருக்​கும். ஜி.​வி.பிர​காஷ் எப்​போதும் பள்ளி மாணவன் போலவே நடிக்க முடி​யும் போல இருக்​கிறது. எந்த கால​கட்​டத்​தி​லும் அவர் அதே இளமையோடு தோன்​றுகிறார்” என்​றார்.

ஜி.​வி.பிர​காஷ்கு​மார் கூறும்​போது, “ஆரம்​பத்​தில், புது தயாரிப்​பாளர்​களு​டன் பணி​யாற்​று​வ​தில் தயக்​கம் காட்டினேன். ஆனால், பியாண்ட் பிக்​சர்ஸ் திட்​ட​மிட்ட காலத்​துக்கு முன்பே படத்தை முடித்து வியா​பார​மும் செய்து​விட்​டனர். இந்​தப் படம் யாரை​யும் ஏமாற்​றாது. என்​னையே பல இடங்​களில் அழ வைத்​தது. உங்​கள் தந்​தையை அல்லது நீங்​கள் ஓர் தந்​தை​யாக இருந்​தால் உங்களை இப்​படம் கொண்​டாட வைக்​கும்” என்​றார்.

இளம் சட்டத்தரணி மாரடைப்பால் காலமானார்!

யாழ். வடமராட்சி, அல்வாய் மனோகரா பகுதியைச் சேர்ந்த இளம் சட்டத்தரணி சிவராசா நிகாஷ் (வயது 40) நேற்று மாரடைப்பால் திடீரெனக் காலமானார்.

இரட்டைக் குழந்தைகளின் தந்தையான இவரது மறைவு அப்பிரதேசத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

சம்பவம் குறித்து மேலும் தெரியவருவதாவது,

சட்டத்தரணி நிகாஷ் நேற்று மாலை 5 மணியளவில் தனது பணிகளை முடித்துக்கொண்டு வீடு திரும்பியுள்ளார். இதன்போது, தனக்கு நெஞ்சுப் பகுதியில் ஒருவித அசௌகரியம் இருப்பதாகத் தனது மனைவியிடம் தெரிவித்துள்ளார். அதனைத் தொடர்ந்து அவருக்கு இஞ்சித் தேநீர் வழங்கப்பட்ட நிலையில், இரவு 7 மணியளவில் அவரது உடல்நிலை திடீரென மோசமடைந்துள்ளது.

உடனடியாக அவர் நெல்லியடியில் உள்ள தனியார் வைத்தியசாலை ஒன்றில் அனுமதிக்கப்பட்டார். பின்னர் மேலதிக சிகிச்சைக்காகப் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலைக்கு மாற்றப்பட்ட போதிலும், அங்கு அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

மரணமடைந்த சட்டத்தரணி நிகாஷின் மனைவி, வடமராட்சி இந்து மகளிர் கல்லூரியின் உடற்கல்வி ஆசிரியையாகப் பணியாற்றி வருகின்றார்.

ஒரு திறமையான இளம் சட்டத்தரணியின் இந்தத் திடீர் மறைவு வடமராட்சி மற்றும் யாழ். சட்டத்தரணிகள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

“கைப்பற்றப்படும் போதைப்பொருட்களை விரைவாக அழிப்பதற்கான சட்டத் திருத்தங்களை துரிதப்படுத்துமாறு ஜனாதிபதி பணிப்பு”

 

போதைப்பொருள் மற்றும் அதனுடன் தொடர்புடையவர்கள் கைது செய்யப்படுவதில் ஏற்பட்டுள்ள வளர்ச்சி சாதகமானது என்றும், அவ்வாறு கைப்பற்றப்படும் போதைப்பொருள் கையிருப்புகளை அழிப்பது குறித்து பொதுமக்களுக்கும் இந்த நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ள குழுக்களுக்கும் நம்பிக்கையை ஏற்படுத்துவது முதன்மையான தேவை என்றும் ஜனாதிபதி சுட்டிக்காட்டினார். இதற்கான சட்டத் திருத்தங்களை விரைவுபடுத்துமாறு சம்பந்தப்பட்ட பிரிவினருக்கு ஜனாதிபதி அறிவுறுத்தல் வழங்கினார்.

இந்த நடவடிக்கைகளில் ஏற்பட்டுள்ள தாமதங்களைத் தவிர்ப்பதற்காக, சட்டத் திருத்தத்திற்காக நியமிக்கப்பட்டுள்ள குழுவுடன் கலந்துரையாடி, சட்டவாக்கப் பணிகளை விரைவுபடுத்துமாறும் ஜனாதிபதி பணிப்புரை விடுத்தார்.

போதைப்பொருள் பேரழிவை ஒழிப்பதற்கான ‘ முழு நாடுமே ஒன்றாக’ தேசிய செயற்பாட்டு சபை இன்று (18) முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் கூடிய போதே ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க இதனைத் தெரிவித்தார்.

நாட்டில் அவ்வப்போது பல்வேறு சமூக மற்றும் பொருளாதார நிலைமைகள் உருவான போதிலும், எந்தவொரு சவாலுக்கும் மத்தியில் போதைப்பொருள் அச்சுறுத்தலை ஒழிப்பதற்கான அரசாங்கத்தின் வேலைத்திட்டம் முடங்கக் கூடாது என்று ஜனாதிபதி இங்கு வலியுறுத்தினார்.

போதைப்பொருள் விநியோகம் மற்றும் விநியோக வலையமைப்புகளை முறியடித்தல், புனர்வாழ்வு மற்றும் நீதித்துறை நடவடிக்கைகளை வலுப்படுத்துதல் உள்ளிட்ட தயாரிக்கப்பட்டுள்ள திட்டங்களை வேகமாகவும் கைவிடாமலும் முன்னெடுத்துச் செல்ல வேண்டியதன் அவசியத்தை ஜனாதிபதி சுட்டிக்காட்டினார். இது குறித்து சமூகத்துடன் தொடர்ச்சியான கலந்துரையாடல்களைப் பேணி, இந்த தேசிய வேலைத்திட்டத்தை வெற்றிகரமான முடிவை நோக்கி கொண்டு செல்ல அனைவரும் அர்ப்பணிப்புடன் செயல்பட வேண்டியதன் அவசியத்தையும் ஜனாதிபதி எடுத்துரைத்தார்.

போதைப்பொருள் அச்சுறுத்தலை ஒழிக்கும் நோக்கில் 2025 ஒக்டோபர் 30 ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்ட ‘முழுநாடுமே ஒன்றாக’ தேசிய செயற்பாட்டின் இதுவரையிலான முன்னேற்றம் மற்றும் எதிர்காலத் திட்டங்கள் குறித்து இங்கு விரிவாகக் கலந்துரையாடப்பட்டது. போதைப்பொருள் அச்சுறுத்தல் மற்றும் குற்றங்களைக் கட்டுப்படுத்துவதற்காக அரசாங்கம் அமுல்படுத்தியுள்ள இந்த வேலைத்திட்டம் தற்போதைய அரசாங்கம் குறித்து மக்கள் நம்பிக்கை கொள்வதில் முக்கியமானதொரு காரணியாக அமைந்துள்ளதாக இங்கு தெரிவிக்கப்பட்டது.

போதைப்பொருள் மற்றும் அதனுடன் தொடர்புடையவர்கள் கைது செய்யப்படும் அளவு பெருமளவில் அதிகரித்துள்ளதாக சம்பந்தப்பட்ட பிரிவினர் புள்ளிவிவரங்களின் அடிப்படையில் இங்கு சுட்டிக்காட்டினர்.

‘முழு நாடுமே ஒன்றாக’ தேசிய செயற்பாடு ஆரம்பிக்கப்பட்ட 2025 ஒக்டோபர் 30 ஆம் திகதி முதல் இன்று வரை 124,412 கைதுகள் இடம்பெற்றுள்ளதாகவும், அவற்றில் 4520 கிலோ கிராம் கஞ்சா, 1066 கிலோ 352 கிராம் ஹெரோயின், 558,300 சட்டவிரோத சிகரெட்டுகள், 1930 கிலோ கிராம் ஐஸ் போதைப்பொருள், 270 கிலோ கிராம் கொக்கைன் மற்றும் 983,143 போதை மாத்திரைகள் கைப்பற்றப்பட்டுள்ளதாகவும் இங்கு சுட்டிக்காட்டப்பட்டது. கைப்பற்றப்பட்ட இந்த கொக்கைன் தொகையானது வரலாற்றில் அதிகூடிய மற்றும் அதிக விலையுடைய கொக்கைன் தொகை என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டதை அடுத்து, போதைப்பொருள் தொடர்பான தகவல்கள் 1818 என்ற தொலைபேசி இலக்கத்தின் ஊடாக பொலிஸாருக்கு அதிகளவில் கிடைத்து வருவதாகவும், அது தொடர்பான நடவடிக்கைகளின் முன்னேற்றம் குறித்து தொடர்ச்சியாக ஆய்வு செய்யப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டது.

கைது செய்யப்பட்டவர்களில் சமூகத்தின் பல்வேறு தரப்பு மக்கள் உள்ளதாகவும், அவர்களில் 1772 சிறுவர்களும் 81 சிறுமிகளும் அடங்குவதாகவும் இங்கு குறிப்பிடப்பட்டது.

கைது செய்யப்பட்டவர்களில் சட்டவிரோத சொத்துக்கள் தொடர்பான சந்தேக நபர்கள் 196 பேரும், தடுப்புக் காவலில் 2268 பேரும் உள்ளதோடு, தற்போது 1840 பேர் புனர்வாழ்வு மையங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

புனர்வாழ்வு அளிப்பதில் நிலவும் சட்ட ரீதியான பலவீனங்களால் அந்தப் பணிகள் தாமதமான போதிலும், அதற்காக நியமிக்கப்பட்டுள்ள குழு இது குறித்து கலந்துரையாடி எதிர்கால நடவடிக்கைகளைத் திட்டமிட்டு வருவதாக அதிகாரிகள் சுட்டிக்காட்டினர்.

அதேபோல், அமுலில் உள்ள புனர்வாழ்வு சட்டத்தில் உள்ள சில கட்டுப்பாடுகள் காரணமாக போதைக்கு அடிமையானவர்களை முறையாக சமூகமயப்படுத்துவதில் உள்ள தடைகள் மற்றும் அந்த மையங்களின் கொள்ளளவு போதுமானதாக இல்லாமை குறித்தும் இங்கு கலந்துரையாடப்பட்டது. புனர்வாழ்வு சட்டத்தை தற்காலத்திற்கு ஏற்றவாறு விரைவாக திருத்தம் செய்வதற்கும், அதற்கான முன்மொழிவுகளை மிக விரைவாகப் பெற்று நிறைவு செய்யுமாறும் ஜனாதிபதி அறிவுறுத்தினார்.

தற்போது கைப்பற்றப்படும் போதைப்பொருள் மாதிரிகளைப் பரிசோதித்து அறிக்கை பெறுவதற்கு நீண்ட காலம் எடுப்பதால் வழக்கு நடவடிக்கைகள் தாமதமாவது குறித்தும், அது தொடர்பாக முன்வைக்கப்பட்ட ஆலோசனைகள் குறித்தும் இங்கு கவனம் செலுத்தப்பட்டது.

மேலும், அது தொடர்பான நீதித்துறை செயல்பாடுகளை வலுப்படுத்துவது குறித்தும் கலந்துரையாடப்பட்டது. போதைப்பொருள் குற்றங்களுக்காக தனி நீதிமன்றம் மற்றும் நீதித்துறை நடைமுறையை நிறுவுதல், மாகாண மட்டத்தில் போதைப்பொருள் தொடர்பான தனி நீதிமன்றங்களை நிறுவுதல், போதைப்பொருள் குற்றங்களுக்காக பொலிஸ் சட்டப் பிரிவுகளை வலுப்படுத்துதல் போன்ற ஆலோசனைகள் குறித்தும் இதன் போது கவனம் செலுத்தப்பட்டது.

போதைக்கு அடிமையானவர்களுக்கு புனர்வாழ்வு மற்றும் சிகிச்சை அளிப்பது தொடர்பாக சுகாதார அமைச்சு அனைத்து தரப்பினரையும் இணைத்துக் கொண்டு பல வேலைத்திட்டங்களைத் திட்டமிட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் செயலாளர் இங்கு சுட்டிக்காட்டினார்.

போதைக்கு அடிமையானவர்களுக்கு வெளிநோயாளர் பிரிவில் அடிப்படை சிகிச்சைகளைப் பெறுவதற்கான சூழலை உருவாக்குதல், மனநல மருத்துவ சிகிச்சைகளுக்காக வருபவர்களின் எண்ணிக்கையை அதிகரித்தல், தங்குமிட சிகிச்சை அளித்தல் மற்றும் சமூக அடிப்படையிலான புனர்வாழ்வு, மீளாய்வு போன்ற 06 பிரதான உத்திகளின் ஊடாக அந்த வேலைத்திட்டங்கள் செயல்படுத்தப்படுவதாகச் செயலாளர் இதன்போது தெரிவித்தார்.

அதேபோல், போதைக்கு அடிமையான இளைஞர்கள், சிறுவர்கள் மற்றும் கர்ப்பிணிப் பெண்களுக்காகத் தனித்தனியான வேலைத்திட்டங்கள் திட்டமிடப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். இந்த முழுமையான செயல்பாட்டைக் கண்காணிப்பதற்கான வேலைத்திட்டம் ஒன்று செயல்படுத்தப்படுவதாகவும், ‘சமூக சக்தி’ வேலைத்திட்டத்தின் பங்களிப்பையும் இதற்காகப் பெற்றுக்கொள்ளத் திட்டமிட்டுள்ளதாகவும் இங்கு தெரிவிக்கப்பட்டது.

அதேபோல், பாடசாலை மாணவர்களைப் போதைப்பொருள் அச்சுறுத்தலில் இருந்து காப்பாற்றுவதற்காகப் பாடசாலை மட்டத்தில் செயல்படுத்தப்படும் வேலைத்திட்டங்கள் மற்றும் பாடசாலைகளை அண்டியதாக மேற்கொள்ளப்படும் சோதனைகள் மற்றும் அதன் புதிய போக்குகள் குறித்தும் இங்கு கலந்துரையாடப்பட்டது. மேலும், அரச நிறுவனங்களுக்குள் செயல்படுத்தப்படும் விழிப்புணர்வு வேலைத்திட்டங்கள் மற்றும் அதன் முன்னேற்றம் குறித்தும் மீளாய்வு செய்யப்பட்டது.

மேலும், இந்தப் போதைப்பொருள் ஒழிப்பு தேசிய வேலைத்திட்டத்திற்காகவே ஒதுக்கப்பட்ட மத ரீதியான நிகழ்ச்சிகளை வழிபாட்டுத் தலங்களை மையமாகக் கொண்டு ஆரம்பிப்பதன் முக்கியத்துவத்தையும் ஜனாதிபதி இதன் போது சுட்டிக்காட்டினார்.

போதைப்பொருள் சார்ந்த கைதுகள் தொடர்பாக ஊடகங்களில் வழங்கப்படும் பிரசாரத்தைப் போன்றே அந்தப் போதைப்பொருள் கையிருப்புகளை அழிப்பது மற்றும் போதைக்கு அடிமையானவர்களைப் புனர்வாழ்வளிப்பதற்காகச் செயல்படுத்தப்படும் வேலைத்திட்டங்களுக்கும் பிரசாரம் வழங்கப்பட வேண்டியதன் அவசியம் இங்கு வலியுறுத்தப்பட்டது.

ஸ்ரீலங்கா ராமஞ்ஞ மஹா நிகாயவின் அனுநாயக்க வணக்கத்திற்குரிய வலேபொட குணசிறி அனுநாயக்க தேரர், வணக்கத்திற்குரிய குப்பியாவத்தே போடானந்த தேரர் மற்றும் அருட்தந்தை டிலான் பெர்னாண்டோ, அருட்தந்தை ஜூட் பேர்னார்ட் ரொட்ரிகோ, சுரேஷ் சர்மா குருக்கள், முத்துசாமி அழகேசன் குருக்கள் உள்ளிட்ட மதத் தலைவர்களும், ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்க, பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் எயார் வைஸ் மார்ஷல் (ஓய்வுபெற்ற) சம்பத் துய்யகொன்தா, பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ரவி செனவிரத்ன உள்ளிட்ட அமைச்சுக்களின் செயலாளர்கள் மற்றும் சம்பந்தப்பட்ட நிறுவனங்களின் தலைவர்கள், முப்படைத் தளபதிகள், பொலிஸ் மா அதிபர் உள்ளிட்ட பாதுகாப்புப் பிரிவின் பிரதிநிதிகள் உள்ளிட்ட பலர் இந்த நிகழ்வில் கலந்துகொண்டனர்.

ஜனாதிபதி ஊடகப் பிரிவு
2026-03-18

 

சினிமா

இந்​தி​யில் மீண்​டும் நயன்தாரா

0
கார்த்​தி, நாகார்​ஜுனா நடித்த ‘தோழா’, விஜய் நடித்த ‘வாரிசு’ படங்​களை இயக்​கிய​வர் தெலுங்கு இயக்​குநர் வம்சி பைடிபள்​ளி. இவர் அடுத்து இயக்​கும் இந்தி படத்​தில் சல்​மான் கான் நடிக்கிறார். இந்​தப் படத்தை ஸ்ரீ வெங்​கடேஸ்​வரா...

ரூ.50 கோடி வசூலை கடந்த ‘யூத்’

0
உலகளவில் ரூ.50 கோடி வசூலை கடந்து பெரும் சாதனையை படைத்திருக்கிறது ‘யூத்’ திரைப்படம். கென் கருணாஸ் இயக்கி நாயகனாக நடித்துள்ள படம் ‘யூத்’. மார்ச் 19-ம் திகதி வெளியான இப்படம் மக்களிடையே பெரும் வரவேற்பை...

ஜூலையில் ரிலீஸ் ஆகிறது ‘ஜனநாயகன்’?

0
தவெக தலை​வரும், நடிகரு​மான விஜய்​யின் ‘ஜன​நாயகன்’ படத்தில் மத நல்​லிணக்​கத்​துக்கு ஊறு விளைவிக்​கும் காட்​சிகள் இருப்​ப​தாகக் ​கூறி, படத்தை மறு ஆய்​வுக்கு அனுப்பி மத்​திய தணிக்கை வாரி​யம் உத்​தர​விட்​டது. இதை எதிர்த்து படக்​குழு...

செய்தி

ஈரான் வான்வெளியில் அமெரிக்க ஆதிக்கம்!

0
அமெரிக்க போர் விமானம் ஈரானால் சுட்டு வீழ்த்தப்பட்டபோது காணாமல் போயிருந்த விமானி, பரபரப்பான துப்பாக்கிச் சண்டைக்குப் பிறகு பாதுகாப்பாக மீட்கப்பட்டதாக டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்தார். ஈரான் வான் பரப்​பில் பறந்த அமெரிக்க விமானப் படை​யின்...

‘’தேசிய QR கொடுப்பனவு ஊக்குவிப்புத் திட்டம்” நாளை ஆரம்பம்!

0
- நாளை முதல் நடைமுறைக்கு வரும் வகையில், 5,000 ரூபாய் வரையிலான அனைத்து LankaQR கொடுக்கல் வாங்கல்களுக்காகவும் வர்த்தகர்களிடமிருந்து அறவிடப்படும் சேவைக்கட்டணம் முழுமையாக நீக்கம். இலங்கையின் டிஜிட்டல் பொருளாதாரத்தில் ஒரு புதிய மைல்கல்லைக் குறிக்கும்...

முதல் வெற்றியை பதிவு செய்யுமா சி.எஸ்.கே?

0
மாலை 3.30 இற்கு ஆரம்பமாகும் 10 ஆவது லீக் ஆட்டத்தில் ஐதராபாத் , லக்னோ ஆகிய அணிகள் மோத உள்ளன. இன்றிரவு இரவு 7.30 மணிக்கு நடைபெறும் நடைபெறும் 11வது லீக் ஆட்டத்தில் சென்னை...