Home Blog Page 23

கபரகலை வீட்டுத்திட்டத்திற்கு பிரதியமைச்சர் பிரதீப் கண்காணிப்பு விஜயம்!

பண்டாரவளை பூணாகலை கபரகலையில் நிர்மாணிக்கப்படுகின்ற வீட்டுத் திட்டத்தின் நிர்மாணப் பணிகளை பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு வசதிகள் பிரதி அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப் நேற்றைய தினம்(17) நேரில் சென்று பார்வையிட்டார்.

வீட்டுத்திட்ட நிர்மாணப் பணிகளை பார்வையிட்ட பிரதி அமைச்சர் பிரதீப்,இது குறித்து கருத்து தெரிவிக்கையில்,

இவ்வீட்டுத் திட்டத்தில் நிர்மாணிக்கப்பட்டு வருகின்ற 50 வீடுகளை பயனாளிகளுக்குக் கையளிக்க உள்ளோம். இதனை வருடத்தின் ஆரம்பத்திலேயே பயனாளிகளுக்கு வழங்குவதற்கு உத்தேசித்திருந்த போதிலும் நாட்டில் ஏற்பட்ட தித்வா பேரிடர் காரணமாக தாமதம் ஏற்பட்டது எனக் குறிப்பிட்டார்.

அரசாங்கத்தின் முழுமையான நிதி ஒதுக்கீட்டில் நிர்மாணிக்கப்படுகின்ற இவ்வீட்டுத் திட்டத்தின் சுற்றுப்புறச் சூழலை அழகுப்படுத்துவதற்குஇலங்கையில் உள்ள சிவில் அமைப்புகள், சமூக நல அமைப்புகள், தன்னார்வ தொண்டு நிறுவனங்கள், அரச சார்பற்ற நிறுவனங்கள் முன்வந்துள்ளதோடு அது தொடர்பாக விசேட கலந்துரையாடல் ஒன்று கடந்த 4ஆம் திகதி அமைச்சின் கேட்போர் கூடத்தில் இடம்பெற்றிருந்தது. இந்நிலையில் அவ் சிவில் அமைப்புகளின் பிரதிநிதிகளும் நேற்றைய தினம் பூணாகலை கபரகலைக்கு விஜயத்தினை மேற்கொண்டிருந்தனர்.

இதன்போது பிரதியமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப், சிவில் சமூக அமைப்புகளுடனும் பயனாளிகளுடனும் விசேட கலந்துரையாடல் ஒன்றினை மேற்கொண்டார்.

வீடுகளை கையளிக்கும் முன் அதன் சுற்றுப்புறச் சூழலை அழகுபடுத்தி சகல வசதிகளுடன் கூடிய ஓர் அழகிய சூழலில் அம்மக்களைக் குடியமர்த்துவதற்கு தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள் முன்வந்திருந்தன. அதனடிப்படையில் பூந்தோட்டங்கள், நூலகம், வீடுகளுக்கான முகவரி பெயர் பலகைகள் என்பன சிவில் சமூக அமைப்புகளால் மேற்கொள்ள இருப்பதாக பிரதி அமைச்சர் தெரிவித்தார்.

பதுளை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ரவீந்திர பண்டாரவின்
கள ஆய்வு உத்தியோகஸ்தர் மகேந்திரன், பூணாகலை தொகுதியின் தேசிய மக்கள் சக்தியின் அமைப்பாளர்கள், கட்டுமான பணியினை மேற்கொள்கின்ற இராணுவத்தின் கேர்னல் உட்பட இராணுவ அதிகாரிகள் பிரதி அமைச்சரின் ஒருங்கிணைப்பு செயலாளர் வசந்தமூர்த்தி ஆகியோரும் நிகழ்வில் கலந்து கொண்டிருந்தனர்.

விபத்தில் நால்வர் பலி: வீரவில பகுதியில் சோகம்!

அம்பலாங்கொடை, கதிர்காமம் பிரதான வீதியில் வீரவில பகுதியில் இன்று (17) இடம்பெற்ற விபத்தில் நால்வர் பலியாகியுள்ளனர். 30 இற்கு மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.

இரு இ.போ.ச. SLTB பஸ்கள் நேருக்கு நேர் மோதுண்டதிலேயே இவ்விபத்து இடம்பெற்றுள்ளது.

காயமடைந்தவர்கள் அம்பாந்தோட்டை மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

காயமடைந்தவர்களில் ஐவரின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்தன.

விபத்துக்கான காரணம் இன்னும் தெரியவரவில்லை. விசாரணைகள் இடம்பெற்றுவருகின்றன.

நாளை முதல் வாகன இலக்கத்தகடு அடிப்படையில் எரிபொருள் விநியோகம்!

இலங்கையில் Q குறியீட்டு முறைமையின்கீழ் வாகனங்களுக்கு எரிபொருள் விநியோகிப்பதற்கு நாளை (19) முதல் புதிய நடைமுறை அமுலுக்கு வரவுள்ளது.

வாகன இலக்கத் தகட்டின் இறுதி இலக்கத்தை அடிப்படையாகக் கொண்டு எரிபொருள் வழங்கப்படவுள்ளது.

இதற்கமைய வாகன இலக்கத் தகட்டின் இறுதி இலக்கம் இரட்டை எண்ணாகவோ அல்லது ‘0’ ஆகவோ இருந்தால் (0, 2, 4, 6, 8) இரட்டை இலக்க திகதிகளில் எரிபொருளைப் பெறலாம். (உ+ம் 20,22 )

இறுதி இலக்கம் ஒற்றை எண்ணாக இருந்தால் ஒற்றை எண்கள் (1, 3, 5, 7, 9) ஒற்றை இலக்க திகதிகளில் எரிபொருளைப் பெற்றுக்கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. (உ+ம் 21,23 )

எரிபொருள் நிலையங்களுக்கு முன்னால் நீண்ட வரிசைகள் தோற்றம்பெற்றுள்ளன. இவற்றை கட்டுப்படுத்துவதற்காகவே புதிய நடைமுறை அமுல்படுத்தப்படுகின்றது.

ஈரான் தாக்குதலில் UAE இல் உள்ள ஆஸ்திரேலிய படை தளமும் சேதம்!

ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள அல் மின்ஹாத் விமான தளத்தின் மீது ஈரான் தாக்குதல் நடத்தியுள்ளது.

இத்தாக்குதலை அடுத்து ஏற்பட்ட தீ விபத்தில் ஆஸ்திரேலிய ராணுவத்தின் மருத்துவ மற்றும் தங்கும் வசதிகள் பகுதியளவு சேதமடைந்துள்ளன.

ஆஸ்திரேலிய பிரதமர் அந்தோனி அல்பானிஸ் இந்த தகவலை உறுதிப்படுத்தியுள்ளார்.

எனினும்,அ முகாமிட்டிருந்த நூற்றுக்கும் மேற்பட்ட ஆஸ்திரேலிய படையினருக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை எனவும் அவர் கூறினார்.

இந்தத் தளம் ஆஸ்திரேலியாவின் முக்கியப் பயிற்சி மற்றும் தளவாட மையமாகச் செயல்பட்டு வரும் நிலையில், தற்போதைய போரின் போது இது இரண்டாவது முறையாக இலக்கு வைக்கப்பட்டுள்ளது.

ஆஸ்திரேலியாவின் முக்கியமான கண்காணிப்பு விமானங்கள் சம்பவத்தின் போது அங்கு இருக்கவில்லை எனக் கூறப்படுகின்றது.
இத்தாக்குதல் ஏவுகணை அல்லது ட்ரோன் மூலம் நடத்தப்பட்டதா என்பது குறித்து அதிகாரிகள் தீவிரமாக ஆராய்ந்து வருகின்றனர்.

நம்பிக்கையில்லாப் பிரேரணையில் கையொப்பமிட தமிழரசுக் கட்சியினர் மறுப்பு!

வலுசக்தி அமைச்சர் குமார ஜயக்கொடிக்கு எதிராக பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி கொண்டுவரவுள்ள நம்பிக்கையில்லாப் பிரேரணையில் கையொப்பமிடாமலிருக்க இலங்கைத் தமிழரசுக் கட்சி தீர்மானித்துள்ளது.

மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்றக் குழுத் தலைவருமான இரா. சாணக்கியன் தலைமையில் நேற்று செவ்வாய்க்கிழமை நடைபெற்ற கட்சியின் நாடாளுமன்றக் குழுக் கூட்டத்திலேயே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

மூன்று பிரதான காரணங்களை அடிப்படையாகக் கொண்டு இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

அமைச்சர் மீதான நிலக்கரி மோசடிக் குற்றச்சாட்டுக்கள் தொடர்பாக இதுவரை போதுமான அல்லது வலுவான ஆதாரங்கள் முன்வைக்கப்படாமை.

வலுசக்தி அமைச்சருக்கு எதிராக ஏற்கனவே நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளதால், அது தொடர்பான சட்ட நடவடிக்கைகள் ஒருபுறம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை.

நாட்டில் தற்போது பாரிய எரிபொருள் நெருக்கடி நிலவும் சூழலில், இவ்வாறானதொரு நம்பிக்கையில்லாப் பிரேரணை அரசியல் ரீதியான குழப்பங்களை ஏற்படுத்தி, பொதுமக்களை மேலும் அசௌகரியங்களுக்கு உள்ளாக்கக்கூடும் என்ற அச்சம்.

இந்தக் காரணிகளின் அடிப்படையில், எதிர்க்கட்சியினால் முன்மொழியப்பட்டுள்ள இந்தப் பிரேரணைக்குத் தமது ஆதரவை வழங்கப் போவதில்லை எனத் தமிழரசுக் கட்சி உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது.

நேட்டோ நாடுகள்மீது ட்ரம்ப் கடும் அதிருப்தி!

ஈரான் மீதான ராணுவ நடவடிக்கையில் ஒத்துழைக்க மறுத்ததற்காக ஆஸ்திரேலியா மற்றும் நேட்டோ நாடுகளை அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் கடுமையாக விமர்சித்துள்ளார்.

வளைகுடா பகுதியில் எண்ணெய் விநியோகப் பாதைகளைப் பாதுகாக்க உதவி கோரிய சில நாட்களிலேயே, தங்களுக்கு யாருடைய உதவியும் தேவையில்லை என அவர் ஆவேசமாகத் தெரிவித்துள்ளார்.

இதற்குப் பதிலளித்த ஆஸ்திரேலிய அமைச்சர்கள், அமெரிக்காவிடம் இருந்து முறையான கோரிக்கை எதுவும் வரவில்லை என்றும், நாட்டின் சுயாதிபத்திய முடிவுகளுக்கே முன்னுரிமை அளிக்கப்படும் என்றும் கூறியுள்ளனர்.

டிரம்ப்பின் இந்த சமூக ஊடகப் பதிவு கூட்டணிக் நாடுகளிடையே பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளதுடன், ஆஸ்திரேலியாவின் சுயாதீனமான தற்காப்புத் திறனின் அவசியத்தை வலியுறுத்துவதாக அந்நாட்டுத் தலைவர்கள் கருதுகின்றனர்.

மரக்கறி விலைப்பட்டியல் (18.03.2026)

நுவரெலியா பொருளாதார மத்திய நிலையத்தால் இன்று (18) வெளியிடப்பட்டுள்ள மரக்கறி வகைகளின் (ஒரு கிலோ) விலை பட்டியல்…

பதிலடி கடுமையாக இருக்கும்: ஈரான் எச்சரிக்கை!

இஸ்ரேலிய வான்வழித் தாக்குதலில் பாதுகாப்பு பிரதானி அலி லாரிஜானி கொல்லப்பட்டதற்கு ஈரானிய ராணுவத் தளபதி அமீர் ஹதாமி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இந்தச் செயலுக்குப் பழிவாங்கும் விதமாக, அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் மீது நிச்சயமான மற்றும் கடுமையான தாக்குதல் நடத்தப்படும் என்று அவர் எச்சரித்துள்ளார்.

ஈரானின் புரட்சிகர காவல்படை ஏற்கனவே இஸ்ரேலின் மையப்பகுதிகளை நோக்கி ஏவுகணைகளை ஏவித் தாக்குதலைத் தொடங்கியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

உயிரிழந்த வீரர்களின் மரணத்திற்கு நீதி வழங்கப்படும் என்று ராணுவம் உறுதியளித்துள்ளதால், இப்பகுதியில் போர் பதற்றம் அதிகரித்துள்ளது.

ஈரான் பாதுகாப்புத் துறை தலைவர் அலி லாரிஜானி கொல்லப்பட்டதாக இஸ்ரேல் தகவல்

 

ஈரான் தேசிய பாதுகாப்புக் குழுவின் செயலாளர் அலி லாரிஜானி கொல்லப்பட்டதாக இஸ்ரேலின் பாதுகாப்புத் துறை அமைச்சர் இஸ்ரேல் காட்ஸ் தெரிவித்துள்ளார்.

இஸ்ரேல் நேற்றிரவு நடத்திய தாக்குதலில் ஈரான் பாதுகாப்பு செயலாளர் லாரிஜானி உயிரிழந்தது குறித்த தகவல் தனக்கு கிடைத்துள்ளதாக காட்ஸ் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.
ஆனால், இந்த தகவலை ஈரான் தரப்பு இன்னும் உறுதிப்படுத்தவில்லை.

மறைந்த உச்ச தலைவர் அயத்துல்லா காமேனியின் நம்பிக்கைக்குரிய நபரான லாரிஜானி, தற்போது உச்ச தேசியப் பாதுகாப்புக் குழுவின் செயலாளராக உள்ளார். அமெரிக்கா மற்றும் இஸ்ரேலுக்கு எதிரான போரில் ஈரானை வழிநடத்துவதில் முக்கியத் தலைவராக அலி லாரிஜானி செயல்பட்டு வருகிறார். இதனால், அவர் தொடர்ந்து குறிவைக்கப்பட்டு வந்தார்.

மேலும், இந்தத் தாக்குதலில் ஈரான் புரட்சிகரப் படையின் முழுத் தன்னார்வப் பிரிவான ‘பசிஜ்’ (Basij) படையின் தலைவர் குலாம் ரெஸா சுலைமானியும் கொல்லப்பட்டதாக இஸ்ரேலிய ராணுவம் தெரிவித்துள்ளது.

சினிமா

இந்​தி​யில் மீண்​டும் நயன்தாரா

0
கார்த்​தி, நாகார்​ஜுனா நடித்த ‘தோழா’, விஜய் நடித்த ‘வாரிசு’ படங்​களை இயக்​கிய​வர் தெலுங்கு இயக்​குநர் வம்சி பைடிபள்​ளி. இவர் அடுத்து இயக்​கும் இந்தி படத்​தில் சல்​மான் கான் நடிக்கிறார். இந்​தப் படத்தை ஸ்ரீ வெங்​கடேஸ்​வரா...

ரூ.50 கோடி வசூலை கடந்த ‘யூத்’

0
உலகளவில் ரூ.50 கோடி வசூலை கடந்து பெரும் சாதனையை படைத்திருக்கிறது ‘யூத்’ திரைப்படம். கென் கருணாஸ் இயக்கி நாயகனாக நடித்துள்ள படம் ‘யூத்’. மார்ச் 19-ம் திகதி வெளியான இப்படம் மக்களிடையே பெரும் வரவேற்பை...

ஜூலையில் ரிலீஸ் ஆகிறது ‘ஜனநாயகன்’?

0
தவெக தலை​வரும், நடிகரு​மான விஜய்​யின் ‘ஜன​நாயகன்’ படத்தில் மத நல்​லிணக்​கத்​துக்கு ஊறு விளைவிக்​கும் காட்​சிகள் இருப்​ப​தாகக் ​கூறி, படத்தை மறு ஆய்​வுக்கு அனுப்பி மத்​திய தணிக்கை வாரி​யம் உத்​தர​விட்​டது. இதை எதிர்த்து படக்​குழு...

செய்தி

ஈரான் வான்வெளியில் அமெரிக்க ஆதிக்கம்!

0
அமெரிக்க போர் விமானம் ஈரானால் சுட்டு வீழ்த்தப்பட்டபோது காணாமல் போயிருந்த விமானி, பரபரப்பான துப்பாக்கிச் சண்டைக்குப் பிறகு பாதுகாப்பாக மீட்கப்பட்டதாக டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்தார். ஈரான் வான் பரப்​பில் பறந்த அமெரிக்க விமானப் படை​யின்...

‘’தேசிய QR கொடுப்பனவு ஊக்குவிப்புத் திட்டம்” நாளை ஆரம்பம்!

0
- நாளை முதல் நடைமுறைக்கு வரும் வகையில், 5,000 ரூபாய் வரையிலான அனைத்து LankaQR கொடுக்கல் வாங்கல்களுக்காகவும் வர்த்தகர்களிடமிருந்து அறவிடப்படும் சேவைக்கட்டணம் முழுமையாக நீக்கம். இலங்கையின் டிஜிட்டல் பொருளாதாரத்தில் ஒரு புதிய மைல்கல்லைக் குறிக்கும்...

முதல் வெற்றியை பதிவு செய்யுமா சி.எஸ்.கே?

0
மாலை 3.30 இற்கு ஆரம்பமாகும் 10 ஆவது லீக் ஆட்டத்தில் ஐதராபாத் , லக்னோ ஆகிய அணிகள் மோத உள்ளன. இன்றிரவு இரவு 7.30 மணிக்கு நடைபெறும் நடைபெறும் 11வது லீக் ஆட்டத்தில் சென்னை...